காந்தி ஜெயந்தி

 அக்டோபர் 2 இன்று ஓர் நாள் மாத்திரம் மதுக்கடைகளை மூடி விடுகிறார்கள்.


இது காந்திக்கு நாம் செய்யும் மரியாதை என்று நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்கிறோம்.

ஆனால் உண்மை வேறாக இருக்கிறதே.

இந்த ஓர் நாள் தவிர வருடத்தின் மற்ற நாட்களில் எல்லாம் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது.


அதனால் கிடைக்கும் வருவாயை எப்படி பெருக்குவது என்றே அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வது அதைவிட கவலையளிக்கிறது


மது அருந்துவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று பலர் கேட்கலாம்.

இதில் உண்மை இருக்கிறது. அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை தான்.

தற்செயலாக அரசு மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல நேரிட்டது.அங்கே விபத்து பிரிவு வழியாக செல்லும் போது மனம் மிகவும் கஷ்டப்பட்டு தான் போனது.

நோய் என்பது எதிர்பாராமல் வருவதை அதை நம்மால் அறிய முடியாது.

சாலை விபத்தால் கை கால் கட்டுப்போட்டு கிடக்கும் ஓருவர் அவரை சுற்றி பலர்.

பக்கத்தில் நின்று விசாரிக்கும் போலீஸார். ஏன்ப்பா நீ எதுவும் குடிச்சுட்டு வந்தீயா..என்பது தான் முதல் கேள்வியாகவே வருகிறது.

அப்படியென்றால் அவர்களின் மனநிலையில் விபத்து ஏற்படவே சாராயம் தான் அதிகளவு காரணம் என்று புரிந்து இருக்கிறது.


அதற்கு அடுத்த படுக்கையில் ஓர் சிறுவன் அவனும் கூட எதிரே குடித்து விட்டு வந்த ஓருவனால் பாதிக்கப்பட்ட இருக்கிறான்.

சார் நானும் கூட தான் குடிச்சுட்டு வண்டி ஓட்டி இருக்கேன் ஆனால் இதுவரைக்கும் யார் மீதும் மோதியது இல்லை என்று அவர் சொல்வதை கேட்டபோது ஏனோ மனம் கனத்துப் போனது.

அதை குடிப்பவர்களின் உடல்நிலையில் வருங்காலத்தில் ஏற்பட்ட போகும் விளைவுகளை புரிய வையுங்கள்.

அதிக அளவு லிக்கர் உடலில் சேர்ந்தால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி பலரும் அறியாதது தான் குடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.

மது என்ற அரக்கனை ஓர் நாள் மட்டும் நிறுத்தினால் போதாது.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...