அரியணையின் அழகு

 

தூரத்தில்

இருந்து பார்த்தால்

பஞ்சணை ஓத்த அரியணை

சிம்மாசனம்

அரிமா அமர்ந்த

அதில் அமர்ந்திட

வேண்டித்தான்

புள்ளிமான்களுக்குள்

போட்டி.....

காடும் நாடும்

வேறு வேறு ஆயினும்

சூத்திரம் ஒன்றே....

புள்ளிமான் ஆனாலும்

அரியணை ஏறிய பின்னர்

ஓநாய்களும் நரிகளும் கூட

இடைஞ்சல் ஆயிரம் செய்யும்...

இடைஞ்சலும் இன்னலும்

ஈகை தாண்டிய அதிகாரமும்...

சூழ்ச்சிகள் கண்டு கலங்காத

இரும்பு போன்ற நெஞ்சுரமும்..

சில நேரங்களில் சொந்தங்களை

கூட பகைவராக மாற்றி விடும்

அது பஞ்சணை அல்ல....

எல்லோரின் கண்ணுக்கும்

அழகாய் மிடுக்காய்

காட்சி தரும் - அதில்

அமர்ந்து பார்த்தவனுக்கே

உண்மை புரியும்....

யாருக்கும் தெரியாமல்

அமர்ந்தவரை மாத்திரமே

முள்ளாய் குத்துவதே

அரியணையின் அழகு

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...