லாக்-டவுண் கதை...
.
.
காலை டிபன்.....
.
சமையலறையில் நேற்றைய நிகழ்வுகளை நினைத்து பார்த்து எரிச்சலாக வந்தது..
.
நேற்றைய இரவில் கட்டிலில் அவளை கட்டித் தழுவும் போது, கேட்டான்.. ஏண்டி உன் பிளவுஸ் கிழிச்சிருக்கு...வேற நல்ல சட்டை போட்டா என்ன???.
.
.
ஏன் இதுக்கு என்ன குறைச்சல்...
.
.
உனக்கு இந்த கலர் நல்லா இல்லடி....
.
.
.
நீங்க தானே வாங்கி தந்தீங்க...இப்போ நல்லா இல்லை அப்படின்னா, நான் என்ன செய்ய
.
வர வர நீ நல்லா எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டே....
.
ஏங்க, நீங்க கேள்வி கேட்டா, பதில் சொல்லுறது தப்பா....எஜமானுக்கு கோபம் பொத்துகிட்டு ஏன் வருது... உண்மை கசக்குதோ
.
ஏய் லூசு நான் சொல்லுறது புரியுதா...லவ் பண்ணும் போது.நான் பத்து வார்த்தை பேசுனா.நீ ஓரு வார்த்தை பேசுவே... இப்போ உனக்கு திமிர் கூடிப் போச்சு
.
.
நல்லா யோசிச்சு பாருங்க.நான் உங்க பெயரை மட்டும் தானே கேட்டேன்... நீங்க தான் ஒருமணிநேரம் பேசுனீங்க...எப்பா... எவ்வளவு புழுகு.... இன்னும் நீங்க மாறவே இல்லை..
அவனின் மார்ப்பில் சாய்ந்தாள்..
.
ஏண்டி நல்லா கத்து வைச்சிருக்கே....என்னை அடிமைபடுத்துற மாதிரி
.
பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க... நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்டுறேன்...
.
உங்க அம்மா வீட்டுக்கு அடிக்கடி போறதுக்குக்கா....கல்யாணம் பண்ணுன..லூசு...
.
.
நான் எங்கே தாலி கட்டுனேன்...நீங்த தானே என் கழுத்துல கட்டுனீங்க... உங்க ஆத்தாகாரி அஞ்சு பவுன் செயின் செஞ்சு கொடுத்துட்டு என்னை சிறையில் போட்ட மாதிரி இங்கேயே அடைச்சு வைச்சிருங்காங்க.... ஓர் இடத்துக்கு வெளியே போக முடியலை..... இரண்டு தெரு தள்ளி இருக்கிற அம்மா வீட்டுக்கு போறதுக்கு கூட அவங்க துணையில்லாம போக கூடாது...
. ரொம்பவும் கண்டிஷன்...
.
எப்பவுமே, அவங்க பத்தி தான்.பேசுவியா..
.
பிறகு யாரை பத்தி பேசணும். மகராசா..நீங்களேசொல்லுங்க. அவங்களை பத்தி மாத்திரமே பேசுறேன்...
.
நான் என்ன சொல்ல வந்தேனோ.அதுவே மறந்து போச்சு...
.
ம்ம்ம்..சட்டை...
.
.
இந்த கிழிச்சதை போட்டு கிட்டு தான்.வெளியே போனியா....
.
இப்படி தெளிவா.கேட்க வேண்டி தானே.. அதைவிட்டு விட்டு...
.
ஏய் பதில் சொல்லுடி...சிரிக்காதே எனக்கு வயிறு எரியுது...
.
கொஞ்சம் இருங்க ஜஸ் வாட்டர் எடுத்துகிட்டு வர்றேன்.. ஜில்லுன்னு குடிங்க சுடு குறையும்...
.
.
முந்தானையை பிடித்து இழுத்தான்... கொஞ்சம் கூட வெட்கமின்றி. ஜஸ் வாட்டர் எடுத்து வந்தவள்.டம்ளரில் அதை நீட்டினாள்...
.
கொஞ்சமாவது உனக்கு வெட்கமாக இல்லையா...
.
நான் எதுக்கு வெட்கப்படணும்... என் புருஷன் கிட்ட. இருக்கும் போது...என்ன வெட்கம் வேண்டியிருக்கு.....
.
டம்ளரை வாங்கியவன் அதில் இருந்த தண்ணீரை அவளின் முகத்தில் வீசி எறிந்தான்...
.
அவளுக்கு தான் பெரிய தவறு செய்து விட்டோம் என்று தோன்றியது...தன் முந்தானையை சரிசெய்த படி தலையணை எடுத்துக் கொண்டு..பீரோ அருகில் சென்று படுத்துக் கொண்டாள்..
.
.
இப்போ ஏண்டி முரண்டு பிடிக்கிறே...வா வந்து கட்டிலில் படு...
.
.
எனக்கு எதுவும் வேண்டாம்... சத்தம் போடாதீங்க... உங்க அம்மா காதுல விழுந்தா.. ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க.... நம்ம கஷ்டம் நம்மோட... பாதியில் உதடுகளை கடித்து வார்த்தைகளை அணை கட்டினாள்..
.
.
ஏய் புரிகிற மாதிரி பேசுடி.... எரிச்சல் உண்டாக்காதே...
அவள் மெளனமாக இருந்தாள்...
.
.
அவளது முதுகை தடவிவிட்டான்.... நா.....எழுதிக்காட்டினான்.... பிஸ்கட் டேபிள்ல இருக்கு எடுத்து போடுங்க......
உங்க ஜிம்மிக்கு தூக்கம் வருது....பிறகு கோபத்தில் கடிச்சுடும்....
அவன் எதுவுமே அலட்டவில்லை..... அருகே கிழித்த இடத்தை தொட்டான்...
.
.
போர்வை எடுத்து மூடிக்கொண்டாள்... அவளுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியது...
.
அவன் கொஞ்சி கெஞ்ச வேண்டும் என்று ஏங்கினாள்...எதிர்பார்த்தாள்...
.
.
அவனுக்கு கோபம் கோபமாக வந்தது...உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா.எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்...போய்யும் போய் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன் பாரு.. என் புத்தியை....
.
.
அவசரத்தில் வார்த்தைகளை கொட்டினான்..
.
.
அவள் தூங்கிவிட்டது போல இருந்தது...
.
கட்டிலில் வந்து அமர்ந்தான்... இரண்டு அடி தள்ளி இருப்பவளின் இருப்பு ஏதோ வானத்து நட்சத்திரம் போல தோன்றியது...
.
.
அவளோ தூங்கவில்லை.போர்வைக்கு அடியில் தன்னை மறைத்துக் கொண்டாள்... பீரோவில் இருவரும் முதன்முதலாக ஒட்டிய குட்டி பாலமுருகன் படத்தை ரசித்தாள்...இதை பார்த்து கொண்டே இரு.. கூடிய சீக்கிரம். .... வந்து பிறப்பான்.. அவளின் காதில் உதடுகளால் பேசி இரண்டு மாதங்கள் ... சந்தோஷமாக உணர்ந்தவள்.திரும்ப நினைத்தாள்... அப்போது..
.
அவளின் கால்கள் போர்வைக்கு வெளியே தெரிந்தது கண்டு அருகே வந்து போர்வையை விலக்கினான்... அவள் கண்களை நன்கு மூடிக்கொண்டு தூங்குவது போல செய்கை செய்தாள்...
.
.
போர்வை எடுத்து நன்றாக போர்த்தி விட்டு...தூங்கி விட்டாள் என நினைத்து தலைவருடினான்....
.
நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணுறேன் தெரியுமா...புஜ்ஜிம்மா....
தன்னை படாதபாடுபட்டு கட்டுப்பத்தியபடி இருந்தாள்..
.
மீண்டும் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.
.
அவள் திருப்பி பார்த்தாள்.அவனோ சுவரை பார்த்தவாறு படுத்திருந்தான்...
.
சரியாக இன்றுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேதியில் தான் அந்த கருப்பு பிளவுஸ் எடுத்து கொடுத்தான்... இந்த கலர் உனக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும்..... இன்று கூட எல்லாம் நினைவில் இருந்தது அவளுக்கு...
.
ஏனோ கல்யாணத்திற்கு பின் மரியாதை குறைந்து போச்சு...லூசு.. வாயாடி..மக்கு பாப்பா.. இன்னும் எத்தனையோ பட்டங்கள் சூட்டி மகிழ்ந்தான்..
.
.
கோபத்தில் ஏதாவது கேட்டால் அவ்வளவு தான்... காதின் ஓரத்தில் விரல்களால் கோலமிட்டு புதிய உலகத்தை காட்டிவிடுவான்....
.
மறுநாள் காலை சத்தமாக கூப்பிடுவான்.. ஏய் லூசு...மக்கு பொண்டாட்டி...சீக்கிரமா....காப்பி கொண்டு வா... நாய்குட்டி.....புஜ்ஜிம்மா.....
.
.
அவனின் பேச்சில் அன்புடன் கலந்த கேலியை ரசிப்பாள்...
.
.
காப்பி டம்ளரை நீட்டியவளிடம்...வர்ணனை போதுமா..இல்லையென்றால்....கேட்டபவனிடம்.
.
உங்க இஷ்டப்படியே கூப்பிடுங்க...தனது காது ஓரத்து முடியை வருடியவளை அணைக்க நிறைந்தவனை......
.
உங்க மாமனார் வர்றார்...என்று சொல்லி விட்டு சிரிப்பாள்..அவனோ அசடு வழிந்தான்...
சொந்தக்காரங்க யாராவது வந்து
குழந்தை பத்தி பேச ஆரம்பித்தால் அது யாராக இருந்தாலும்..வேற ஏதாவது இருந்தா பேசுங்க.... கடவுள் எப்போ தருவாரோ.. அப்போது தான் கிடைக்கும்... என்பான்..
.
.
இதை பற்றி அவள் கேட்டபோது... இப்படித்தான் எங்க அத்தைக்கு குழந்தை இல்லை என்று சொல்லி மாமாவுக்கு இன்னோர் கல்யாணம் செஞ்சு வைப்பாங்க...அத்தை எவ்வளவு கஷ்டப்பட்டுது தெரியுமாடி உனக்கு...
.
.
அவனின் இந்த பதிலில் அவனின் பயத்தை உணர்ந்தாள்... குழந்தை பிறந்தா ஓர் குழந்தை .. இப்போ இரண்டு குழந்தைகள் என்று கட்டிப்பிடித்து முத்தமிடுவான்...
.
.
நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது..கேவி கேவி அழுதாள்....
.
.
இவளின் சத்தம் கேட்டது... இப்போது பேசாமல் இருப்பதே நல்லது என்று அவனுக்கு தோன்றியது.... நேத்து பெரிய மாமாவும் அத்தையும் வந்தாங்க.அந்த கிழவி...வயசான காலத்தில் சும்மா இருக்க வேண்டியது தானே...
நம்ம இல்லாத போது எதாவது குழந்தை பத்தி கேட்டு இவளை .....நினைக்கும் போது எழுந்து போய் அடிக்கணும் போல இருந்தது.... யோவ் மாமா உன் பொண்ணை கட்டவில்லை என்று தானே இப்படி பண்ணுறே... நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு....பல நினைவுகளுடன் தூங்கி போனான்....
.
காலை எழுந்தவுடன் அருகே பார்த்தான்.. பாய் சுருட்டி அழகாக அதன் இடத்தில் இருந்தது...
.
.
"ஏய் லூசு ஆசையா கூப்பிட வேண்டும்" போல இருந்தது..ஏதோ நம்மகிட்ட மறைக்கிறா...அதை கண்டுபிடிக்கணும்...ஏதோ சொல்ல வந்தா.. "நம்ம கஷ்டம் நம்மோடு" தலைவலியா இருந்தது....
.
அருகே காப்பி டம்ளருடன் வந்தவளிடம்... இன்னும் பல் தேய்க்க வில்லை...
எத்தனை நாளைக்கு இந்த புது பழக்கம்....
.
.
இனிமேல் அப்படித்தான்... எனக்கும் ரோஷம் வரும்...எழுந்து வாசலுக்கு போனான்...
.
.
அந்த கருப்பு கலர் பிளவுஸ் வாசலில் கைப்பிடி துணியாக கிடைத்தது...
.
.
அம்மா... புது துணி எதுக்கு இங்கே கிடக்கு...
.
.
எனக்கு என்னப்பா தெரியும்...உன் பொண்டாட்டி கிட்டே போய் கேளூ.... நேத்து சாயங்காலம் நீ வருவதற்கு கொஞ்சம் நிமிஷம் முன்னாடி குளிச்சுட்டு வந்து அதை எடுத்து உடுத்துனா...ஏதோ கைக்குள் கிழிச்ச மாதிரி இருக்குன்னு சொன்னதை கூட கவனிக்கவில்லை....சரி நான் பெரிய மாமா வீட்டுக்கு போயிட்டு சாயங்காலம் வருகிறேன்... அவன் பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னிக்கு வர்றதா...வந்து சொல்லிட்டு போனான்...
.
.
.
.
அவனின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அதில் இருந்தது...
.
நேராக சமையலறை பக்கம் போனான்..காபி மேஜையில் இருக்கு...ஏதோ ஓர் பாவனையில்..
.
.
அந்த கருப்பு பிளவுஸ்...ஏதோ சொல்ல தொடங்கியவனை..... அதான் உங்களுக்கு பிடிக்கலையே.பிறகு எனக்கு எதுக்கு அது....
.
.
இல்லடி.. அது நான் உனக்கு வாங்கி கொடுத்த முதல் பொருள்....
.
.
அது எனக்கு நல்லாவே நினைவு இருக்கு.. நேத்து தேதி உங்களுக்கு மறந்து போச்சு....
.
.
காலண்டர் பார்த்து விட்டு தலையில் கைவைத்தான்....
.
.
உங்களுக்கு எப்போதும் பொறுமை . கிடையாது...
.
மெதுவாக அவளை பின்புறமிருந்து அணைத்து தாலியை தொட்டு சொன்னான்.. அது உனக்கு இப்போ தான் தெரியுதா...
.
.
அவனின் முகத்தில் முகத்தை சாய்த்தபடி கேட்டாள்.. காலைக்கு .என்ன டிபன் செய்யணும்...