அன்பே சிவமாய்

உடலில் மங்கை 

தலையில் கங்கை 

அணிந்தே காமத்தின் 

சிந்தையின்றி அளவற்ற 

காதலை மனதில் சுமந்தே 

அன்பை பரப்புகின்றான்..

அவனின் அன்பை

உணரமுடியாமல் 

திக்கித்திணறி பக்தர்கள் 

எண்ணற்ற கோடிகள்..

கோடியை சேர்த்த 

மன்னாதி மன்னரும் 

அவனின் கடைக்கண் 

தேடி அலைகின்றனர்.அவனோ

கண்களை மூடி 

எல்லையற்ற காதலை 

சுமந்தபடி தியானத்தில் 

முழ்கி கிடக்கிறான்...

அவனை வணங்கும் 

எண்ணற்ற பக்தரில்

நானும் ஓருவனை

அவனைப் போலவே 

மெளனத்தின் மீதான 

காதலில் முழ்கிடவே 

தேடுகிறேன் அவனை 

அன்பே சிவமாய் 


கருப்பண்ணசாமி காப்பாத்தும்

 கவியின் காதல்...

.
.
பொறுப்பு துறப்பு....
கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.
இதில் வரும் சம்பவங்கள் யாராவது ஒருவரின் வாழ்வில் நடந்திருந்தால்.. அதற்கு கதாசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்....
இது முற்றிலும் ஓர் கற்பனை கதையை ...
.
.
.
.
நீயும் யாரையாவது லவ் பண்ணவேண்டியது தானடா..., அக்கறையுடன்கேட்ட மேனேஜர் கவி...
அட அதுக்கெல்லாம் நம்மாளூக்கு திறமை ஏது.... நக்கலாக சிரித்த T.L. குமார்..
அட, ஏதாவது காதல் கவிதை எழுதி.உனக்கு தெரிஞ்ச பொண்ணு கிட்ட கொடுடா....
அதை படிச்சுட்டு உன்கிட்ட வந்துயாராவது ப்ரபோஸ் பண்ணிணா...
அந்த லவ் லெட்டர் உனக்காகவே தான் எழுதினதுன்னு பொய் சொல்லு.... மேனேஜர் கவியின் ஜடியா நன்றாகவே இருந்தது...
ஆனால் நம்ம ஹீரோ தான் சரியான வெங்காயம் ஆச்சே.... அவனுக்கு புராஜெக்ட் புரியவே இரண்டு மாசம் ஆச்சு...பிறகு ஒவ்வொரு வாரமும் ஸ்டார் அவார்ட் வாங்கினது வேற கதை...
அது எப்படி என்னால் பொய் சொல்ல முடியும்...
யாரோ ஒருத்தியை நினைச்சு எழுதிட்டு...
நீங்க தானே பல தடவை சொன்னீங்க.. உனக்கு பொய்யும் பேச தெரியாது..உண்மை மறைக்கவும் தெரியாது.. நல்லாவே கோபப்பட மட்டும் தெரியுதுன்னு..
கவி பார்த்தீங்களா, பையனுக்கு லவ் பண்ண ஐடியா கொடுத்தா.. இவன் நமக்கே ஐடியா சொல்லுவான் போலயே....
நான் ஏதும் தப்பா பேசலையே....கவி அடிக்கடி சொல்லி என்னை அப்படி தானே கிண்டல் பண்ணுவாரு....
ஓ.அப்போ நாங்க உன்னை கிண்டல் பண்ணுறது தெரிஞ்சும் அமைதியா இருந்தே அப்படித்தானே.... அலெக்ஸ் தன் பங்கிற்கு எண்ணெய் ஊற்றினான்...
டேய், டேய்.. நீங்க எல்லாம் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க... அவனுக்கு நான் சொல்லுறது புரியாம போயிட போகுது...
.
.
டேய் காமு ( காமேஸ்வரன் அவனை அப்படித்தான் எல்லோரும் ஆபிஸ்ல கூப்பிடுவாங்க) என் காதல் கதையை உனக்கு ஓர் உதாரணமா சொல்லுறேன் கேளூ...
அப்போ நான் இரண்டும் கேட்ட வயசுல இருந்தேன்....
டேய் அலெக்ஸ், இப்பவும் அப்படி தானே தான் இவன் இருக்கான்...T.L குமாரின் மெதுவாக பேசிய வார்த்தைகளை கவனித்துவிட்ட காமு...
தொலைச்சு கட்டிருவேன்... விரல்களால் சைகை செய்த குமார்...
இது எதுவுமே புரியாமல் தனது கடந்த கால காதல் கதை சொல்வதில் ஆர்வமாக இருந்த கவி...
நான் நாலு மாசமா ஓரு பொண்ணை விடாம துரத்துன... கடைசில இப்போ இருக்காளே என் அருமை பொண்டாட்டி அவளை கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு....
.
எனக்கு ஒண்ணுமே புரியலையே தலை சொரிந்த காமு...
அண்ணே, அந்த வென்னீர் தண்ணியை எடுங்க... ஆபிஸ்ல தான் முந்திரி கொட்டை மாதிரி கேள்வி கேட்குறே.... டீக்கடையில் கூடவா....கதை சொல்லி முடிப்பதற்குள் இவனுக்கு அவசரத்தை பார்த்தீயா....குமாரு....
நக்கலாக தன்னை முன்னிலைபடுத்திய மேனேஜர்....
அவனை பத்தி உங்களுக்கு தான் கவி நல்லா தெரியும்.. எங்களுக்கு எல்லாம் அவனை புரிஞ்சுக்கவே முடியாது... நேரம் பார்த்து கவியின் வார்த்தைகளை வைத்தே அவரை மடக்கிய...T.L...
தல கலக்கிட்ட, அலெக்ஸ் குமாரின் காதை கடித்தான்....
இப்போ பாரு, அலெக்ஸ்...நம்ம காமுவை கவி வைச்சு செய்வான்...காதை போத்திக்கோ.. இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு கவி அட்வைஸ் மழை பொழியுவான் பாரு...
இது வரை சென்னையிலே கூட அப்படி ஒரு மழை பெய்து இருக்காது... இருவரும் மிகவும் மெலிதாகவே பேசினாலும் காமு வின் பாம்பு காதில் இவர் பேசியது அனைத்தும் விழுந்தன..
எப்படி இவர்களால் முகத்தில் ஓரு மாதிரியும் முதுகிற்கு பின்னால் வேறு மாதிரியாகவும் பேச முடிகிறது என்ற படி யோசித்த காமேஸ்வரன்...
பாருங்க கவி, நீங்க அவன் மேல் எவ்வளவு அக்கறை பட்டு பேசுறீங்க அவன் ஏதாவது சட்டை பண்ணுறானா.... குமார்...
ப்ளீஸ்டா டீ கடையிலே கூட என்னை ஏண்டா கடுப்படிக்க வைக்கீங்க....
அட, அது இல்லை கவி உங்க பேச்சுக்கு காமு, மதிப்பு குடுக்கலை அதைத் தான் குமார் சொல்லுறாரு.... அலெக்ஸ் உதவி செய்தான்....
.
.
அலெக்ஸ்....காமு, என் கூடப் பிறக்காத தம்பிடா...
அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், கொஞ்ச நேரம் சும்மா இருங்க... நான் சொன்னதை அவன் யோசிக்கிறான்..... அப்படித்தானே காமு....
.
என்ன பேசுகிறோம்.. என்பது தெரியாமல் பேசிய கவியின் பேச்சுக்கு தலையாட்டிய காமு....
.
.
என்ன குமாரு.. இது கொஞ்சம் ஓவரா இல்ல.. ஓர் வார்த்தை கூட இந்த பரதேசி பய சொல்லலை.அதுக்குள்ளேயே அவனும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுறான்.....
இப்போ புரியுதா அலெக்ஸ்,எதுக்கு கவி எப்போ பார்த்தாலும் காமு..காமு... புகழ்ந்து பேசுறான்னு.... நான் தான் தலையாட்டி பொம்மைன்னு நினைச்சேன்.இவன் என்னையவே தூக்கி சாப்பிட்டு விட்டான்டா....
கேட்டா என்ன சொல்லுவான்... எனக்கு ப்ரமோஷன் வேணும், அதுக்கு தான் நான் இப்படி எது சொன்னாலும் சரி சொல்லுறேன்... ஆனால் கடைசியிலே, என் வேலையை நான் நினைச்ச மாதிரி தான் பண்ணுவேன் அப்படின்னு சொன்னான் தெரியுமா....
வாயடைத்து போன அலெக்ஸ்...
இது நம்ம கவிக்கு தெரியுமா...
அட சொல்லியாச்சு..ஆனாலும் என்ன பிரயோஜனம்....
அவன் என் பேச்சை கேட்காமல் வேலை செய்து வேலையை முடிச்சிட்டான்....அதை மீறி ஏதாவது தப்பு வந்தா... என் சொல்படி கேட்கவில்லை அதான் இப்படி வந்திருச்சு சொல்லிவிடுவேன்... என் மேனேஜர் வேலையை நான் செஞ்சுருவேன் அப்படின்னு இந்த அரை மெண்டல் சொல்லுது.இவனுங்க பேச்சை கேட்டா.. நமக்கு தான் பைத்தியம் பிடிக்கும்...
ஆனால் இரண்டு பேருமே கெட்டிக்கானுங்க தான்.தன் வேலையை திறமையா செஞ்சிருவாணுங்க... யாருமே உதவி செய்யாட்டி கூட எப்படி இவனுங்க மட்டும் தனியாகவே சாதிக்கிறானுங்க..
அது தான்டா அலெக்ஸ் எனக்கு நினைச்சாலே பிரமிப்பா இருக்கு...
பாரு, நாம வாரா வாரம் கோவிலில் போய் விழுந்து விழுந்து கூம்பிட்டு என்ன பிரயோஜனம்... கோவிலுக்கே போகாம வேலையை மாத்திரமே பார்க்கிற அவனுக்கு தான் .....கடவுள் அவன் பக்கம் தான் இருப்பாரோ
கிராமத்துகாரன் நினைச்சேன் இவன் உண்மையிலேயே பெரிய ஆளூதான்....
கவி நீங்க உங்க கதை சொல்லுங்க....காமு ஏதோ கட்டளையிட்டது போல பேசினான்....
ஆங்.எதுல விட்டேன்...லவ் லெட்டர்.... தானே...
ஆமாம் கவி....
அலெக்ஸ், குமார் மற்றும் இன்னொருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்...
அப்போ எங்க வீடு பெசன்ட் நகர் பக்கத்தில் இருந்தது...
நான் ஒருத்திக்கு லவ் லெட்டர் குடுத்து விட்டு ஒரு வாரம் காத்திருந்தேன்... லெட்டரை வாங்கும் போதே அவள் சொன்னா.. பத்து நாள் அலைய விடுவேன்.. அதுக்கு அப்புறம் உனக்கு நீயே எதிர்பார்க்காத அளவுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கு அப்படின்னு சொன்னா....
டேய் அலெக்ஸ் இப்போ...செமி கதையை நிப்பாட்டி விட்டு பூரிச்சுதா அப்படின்னு கேட்பான் அதுக்கு காமு நல்லா புரிஞ்சதுன்னு தலையாட்டுவான் பாரு என்றான் குமார்...
அதை போல நடக்கவும் ஆச்சரியமாக பார்த்த அலெக்ஸிடம்...
டேய் இதை பார்த்து பார்த்து எனக்கு வயித்தெரிச்சல் தாங்கலைடா....
போன வாரம் டீம் லீடர் Feedback reviewல இந்த காமு பய கூட என் compareபண்ணி பேசுறான்டா....
கவி, என்ன சொன்னான் தெரியுமா...நீ இப்பவே வேலையை ராஜினாமா பண்ணினா, நாளை சாயங்காலத்துல இருந்து காமுவைT.L. ஆக்கி உன்னை திறமை இல்லாதவன் போல காட்டி விடுவேன்... என் திறமை பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுமேன்னு சவால் விடுறான்டா.... குமாரின் கண்கலங்கியது....
கவலைபடாதீங்க குமார் இந்த காமு பயலே ஆபிஸ் விட்டு துரத்தினா தான் நமக்கு நிம்மதி...
ஏறிட்டு பார்த்த குமாரிடம் same blood, same story என்று சிரித்தான்.. சரி சரி கதையை கேளூ தீடீரென நம்மகிட்ட கிராஸ் கேள்வி கேட்டு உசுரை எடுத்திடப் போறான்.. இப்படித்தான் போன வாரம் மூணு மணிநேரம் சின்ன வயசுல கிரிக்கெட் பந்து வாங்க காசில்லாத கதை சொன்னான்.... கடைசியில் அதுல கூட கேள்வி கேட்டு பல்லை நரநரவென்று கடித்த குமார்..
லூசு செஞ்சாலும் செய்யும்....
இவர்களின் பேச்சை புரியாமல் புரிந்து கொள்ள முயன்றபடியே நின்ற புது T.L...
குமாரு..‌நாம பேசுறது இந்த கிருஷ்ணாவுக்கு புரிஞ்சு ஓரு வேளை கவிகிட்ட சொல்லிட்டா...
அட நீ வேற, வந்த மறுநாளே சொல்லிட்டான்
.
சீக்கிரமா நானும் காமு மாதிரி பத்து தடவை காப்பி குடிச்சா தான் தலைவலி போகும் அப்படின்னு..
அப்போ அவனுக்கும் எல்லோமே தெரிஞ்ச போச்சா....
அட ஆமாண்டா..நம்ம சுட்டி பேப்பர் போட்டு விட்டானா அப்படின்னு கேட்டான்... இல்லையே அப்படின்னு சொன்னா ...
பிறகு எதுக்கு அவனை பிளேடு மீட்டிங் கூட்டிக்கிட்டு போகுதுன்னு கேட்குறான்டா....
அங்கே இருந்த நாலு பேரின் கண்களிலும் ஆனந்தம் தாண்டவமாடியது...இது எதுவுமே கவனிக்காமல் தன் காதல் கதையை மெகா சீரியல் போல் சொல்லிக் கொண்டே... அண்ணே உளுந்து வடை அஞ்சு பிளேட் என்று ஆர்டர் செய்த கவி...
னாலும்
ஓரு வாரம் கழிச்சு பார்த்தா.....விஜிலா வந்தா.... எனக்கு ஒண்ணுமே புரியலை....
எப்பவுமே அவங்க கூட்டமா போனது எனக்கு வசதியா போச்சு... இவளும் என்னை லவ் பண்ணுறதா சொன்னா...பிறகு என்ன அடிக்கடி பீச்ல சந்திச்சு லவ் வளர்ந்து. இப்போ ...கதை முடித்தான்...
அப்போ நீங்க உங்க மனைவிக்கு லவ் லெட்டர் கொடுக்கலையா....
டேய் குமார், இவன் இப்பவும் சந்தேகம் கேட்டு கொல்லுறானேடா...
கவி, கொஞ்சம் இருங்க அவனுக்கு நான் புரிய வைக்கிறேன்....
அடேய் காமு, உங்க அண்ணன்.. லவ் பண்ணின அண்ணி வேற, இப்போ கல்யாணம் பண்ணிருக்கிற அண்ணி வேற..... இப்போ புரியுதா...
இந்த விஷயம் உங்க மனைவிக்கு தெரியுமா...
லூசு மாங்கான்.... நான் இதுவரை நாலு பேர்கிட்ட லவ் லெட்டர் கொடுத்து இருக்கேன்....
இப்போ கட்டியிருக்கிற பொண்டாட்டி என்னோட அஞ்சாவது லவ்வர் போதுமா......
கவி ஓரு சந்தேகங.. ஓரு வேளை இவங்க உங்க லவ் ஏதுக்காம இருந்தா என்ன செஞ்சு இரூப்பீங்க....
ஆறாவதாக இன்னொருத்திகிட்ட லெட்டர் கொடுத்து இருப்பேன்... இயல்பாக சொன்ன கவி....
இது மனசாட்சி படி தப்பு, நீங்க உங்க மனைவிகிட்ட உண்மையை சொல்லியே ஆகணும் இல்லாட்டி....
மேனேஜர் கண்கள் சிவந்தது.இது வரை நீ இந்த பத்து வருஷத்தில் எத்தனை கம்பெனிகளில் வேலை பார்த்த இருப்பே...
யோசித்து பார்த்த காமு சொன்னான், மூன்று கம்பெனி ஒவ்வொரு இடத்திலும் இரண்டு வருடங்கள் கணக்கு....
இதை மாதிரி தான்டா நானும்.நம்பிக்கையோட தான் லெட்டர் கொடுத்தேன்... பெரிசா பேச வந்துட்டான்....
இவனுக்கு எல்லாம் நல்லது பண்ணவேண்டும் என்று நினைச்சேன் பாரு என் புத்தியை..........
நிலைமை மோசமாவதை உணர்ந்த குமார் , டேய் காமு நீ கிளம்பு என்றார்
.
.
அவன் அவரின் பேச்சை அப்போது அப்படியே கேட்டு நகர்ந்தான்.....
காமு, போன சில நிமிடங்களுக்கு பிறகு கவி சொன்னார்.... குமார் நாளை வந்தவுடனே இவன் மேலே சில டேட்டாவை அடுத்த கம்பெனிக்கு அனுப்புறதா..நீ ஓர் கேஸ் H.R கிட்ட மெயில் அனுப்பு.........
மெளனமாக இருந்த குமார்... ஏன் நீ அனுப்பமாட்டே அப்படிதானே...
இல்ல, அது வந்து இந்த சின்ன விஷயத்துக்கு போயி அவன் கேரியரை வம்பாக்குறது சரியில்லை....
எது சாதாரண விஷயம்.அடுத்த மாசம் நம்ம ஆபிஸ்ல ஃபேமிலி பக்தன் இருக்கு... அப்போ இவன் மட்டும் இப்போ நடந்த விஷயத்தை என் பொண்டாட்டிகிட்ட சொல்லி விட்டால் என் ஃபேமிலி லைஃப் யோசித்து பாரு....
காமு, இந்த விஷயத்தில் அப்படி எல்லாம் செய்ய மாட்டான்... எனக்கு அவனை நல்லா தெரியும் என்று அவனுக்காக பரிந்துரை செய்த குமார்....
அலெக்ஸ் கண்களில் வியப்பு மேலிட்டது... உண்மையில் குமார்க்கு காமு மேல பாசம் அதான் இப்படி நடந்துகிறாரு.... இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் .....
நீங்க சொல்லுவதை நான் செய்றேன்...கவி....
எதுவும் பேசமுடியாமல் தவித்தT.L...
கூட்டம் கலைந்து வீட்டிற்கு சென்றனர்....
மனதில் பாரத்தை வைத்து கொண்டு தூங்க முடியாமல் தவித்த குமார்... எப்படியாவது அந்த அப்பாவியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து போன் செய்தார்...
ஆண்டவா.. இந்த லூசு போனை எடுத்து பேசணுமே....
காமு எடுத்தான்.... நான் சொன்னா, நீ கேப்பீயா...
சொல்லுங்க குமார்... உங்க நல்ல மனசு எனக்கு புரியும்..உங்க பெயரை சொல்லி எல்லோரையும் கஷ்டப்படுத்துறாங்க அதைதான் என்னால் தாங்க முடியலை ராம்.....
அவனின் வீட்டில் கூப்பிடும் செல்ல பெயரை சொன்னவுடன் குமாரின் கண்கலங்கியது.. இவ்வளவு நல்லவனுக்கு எதுக்கு ஆண்டவா இப்படி ஓர் கஷ்டம்....
சில நிமிட மெளனம்....
டேய் காமு.. திங்கட்கிழமை நீ வந்தவுடனே வேலையை ராஜினாமா பண்ணு.... இதுக்கு மேலே எதுவும் கேட்காதே... எல்லாம் உன் நன்மைக்கு தான்...
சாரி , என்னை மன்னிச்சுடுங்க... என்னால் இந்த கம்பெனி வேலை விட்டு போக விருப்பமில்லை..ஏன்னா பத்து வருஷ போராட்டமான வாழ்க்கைக்கு பிறகு கிடைச்ச வேலை இது...... மேலும் உங்களை மாதிரி என்னை புரிஞ்சுகிட்ட டீம் இனிமேல் கிடைக்குமா தெரியாது...உங்களை கூட நான் திட்டி இருக்கேன்.. ஆனால் நீங்க T.L அப்படின்னு ஈகோ பார்க்கவே இல்லை...
உண்மையா சொன்ன கவி என்னை நம்பி, தம்பின்னு எல்லோருக்கும் முன்னால் சொல்லியே ஏமாத்துறான்.... ஆனால் நீங்களும் கிருஷ்ணாவும் அப்படி நடிக்க தெரியா நல்ல மனசோட பழகுறீங்க.எனக்கு இது போதும் ராம்....
டேய் காமு நீ ரொம்பவே புத்திசால, ஆனால் உன் கேரியரை பாழக்குற மாதிரி யாராவது எதுவும் பண்ணிட்டா.. பிறகு நீ எங்கேயும் ஆன்லைன் வேலைக்கு போகவே முடியாது... உன் கனவு அது தானேடா.....
நான் கிளம்பின பிறகு என் மேல கேஸ் கொடுக்க சொன்னதை நினைச்சு பீல் பண்ணாதீங்க குமார்... எனக்கு எல்லாம் தெரியும்....
குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.. நம்முடன் இருந்தது நாலு பேர் இதில் இதில் எப்படி....
எனக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்காதீங்க....
.
.
அடுத்த வாரம் என்னை under performer அப்படின்னு முத்திரை குத்த சில வேலை தொடங்கியாச்சு.... ஆனால் நான் கூப்பிடுற கருப்பண்ணசாமி எனக்கு துணை செஞ்சு காப்பாத்தும் நீங்க கவலையே படாம தூங்குங்க....
.
.
போனை வைத்தான்... குமாருக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது... இவன் கிளம்பி போன பிறகு பேசிய விஷயங்களை எப்படி நேரில் பார்த்தது மாதிரியே சொல்லுறான்....
.
.
திங்கட்கிழமை வேலைக்கு வந்த காமு முகத்தில் ஓர் சந்தோஷம் தெரிந்தது... டேய் உனக்கு எப்படி எல்லாம் தெரிஞ்சது...டீகுடிக்க அழைத்து சென்று கேட்டான்....
உங்க ஆள என்மேல் பொய் கேஸீ போடுவான்னு எங்க கருப்பண்ணசாமி இரண்டு மாசம் முன்னாடியே சொல்லிருச்சு....
பிறகு எதுக்குடா.நீ வேலை பார்குறே.வேற இடத்திற்கு போக வேண்டி தானே... இல்லை கருப்பு என்னை பிரமோஷன் பேப்பர் கைக்கு வந்து பிறகு தான் போக சொல்லி இருக்காரு....
உனக்கு எதுவும் ஆகவிட்டால்...
பிரச்சினை சமாளிக்க என்னால முடியாதுன்னு தான்.எனக்கு துணைக்கு சாமி ஆளூ அனுப்புறதா சொல்லச்சு.....
சரியான கிராமத்துகாரன் போல பேசிய காமேஸ்வரன் முகத்தின் ஒளியும் பேச்சின் கம்பீரமும் தான் .பேசுவது வேறு ஓர் நபரிடம் என்ற உணர்வை கொடுத்தது....
தோரணையாக பேசினான், நான் சீக்கிரம் வேலையை விட்டு விட்டு போய்விடுவேன்.ஆனால் அதுக்கு பிறகு அவனால் உனக்கு எந்த இடைஞ்சலும் வராது....
உன் வீட்டு சாஸ்தா உனக்கு துணையா இருப்பாரு.......
இன்னும் ஓர் விஷயம் தெரிஞ்சுக்கோ.....கவி உண்மையில் காதலிச்ச பொண்ணு வேற...பெயரை சொன்னவுடன் ஆடித்தான் போனார்....
ஸ்டார் ஹோட்டலில் தன்னிடம் மட்டுமே சொன்ன ரகசிய பெயர்....இது எனக்கு மூணு மாசம் முன்னாடி தான் தெரியும்....
குமாரின் வாய் முணுமுணுப்பு செய்தது.... கவியின் காதல்... உண்மையா...போலியானதா....
இவனை மாதிரி நம்பியவர்களை கஷ்டப்படுத்தி தான் மட்டும் சந்தோஷமாக இருக்கிற ஓருத்தனை என் வாழ்நாளில் முதன் முறையாக இப்போ தான் பார்க்கிறேன்

நம்பிக்கையை ஏமாற்றாதே

 ஒருவன் உன் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்றாதே.. அப்படி நீ ஏமாற்றினால் ஏமாறப்போவது அவனல்ல நீ தான்...

ஏனென்றால் ஏதொவொரு விதத்தில் அவனின் கடைசி நம்பிக்கை நீயாக இருக்கலாம்...
இதுவரையில் ஏமாந்து விட்டோம்... இவன் நிச்சயமாக நம்மை ஏமாற்ற மாட்டான்...என்று அவன் உன்னை நம்பி விட்டான்...

அவளும் அவனும்....


.
கல்லூரி படிப்பில்
தங்கத்தை வென்றவள்
தந்தையின் மீது
தணியாத பாசம்
அம்மாவின் அக்கறை
சிலநேரங்களில்
எரிச்சல் தந்தது.
கடைசியில்
அவளோ
கடவுளைத்தேடி
கோவிலுக்கு வந்தாள்...
நானோ நிம்மதி தேடி
கோவிலுக்கு போனேன்..
ஆயினும் இறைவனின்
விதி இணைத்து வைத்தது
எங்கள் இருவரையும்
எதிர்பார்ப்பே இல்லாத
நல்ல நண்பர்களாய்....
பணத்தை பற்றி
இருவருமே
நினைக்கவும் இல்லை...
பேசவும் இல்லை..
அதைப் பற்றிய
தேவையும் இல்லை...
சிந்தனையும் துளியுமில்லை...
ஏனெனில் அன்பே
உருவான இறைவன்
ஒருவனை அதீதமாய்..
நம்பிய காரணத்தால்
உருவானது அன்பே
அஸ்வாதிவாரமாய்
எங்களின் நட்பு...

வேலைக்காரியா... சுயநலவாதியா... .


கடற்கரையில்
கட்டிப்பிடித்து
காமத்தை
காதலென்று
நம்ப வைத்த
ஆசை காதலன்...
படகின் மறைவில்
உடலை உரசி
உஷ்ணத்தை
ஏற்றியே நிர்பந்தம்
கொடுத்து
கணவனாக பதவிஉயர்வு
பெற்றவன் ஏனோ
கைப்பிடித்த பின்னர்
நடத்துகிறான்...
வீட்டிற்குள் ஓர்
சம்பளமில்லா
வேலைக்காரி போல....
எப்போதாவது
நினைப்பதுண்டு அந்த
கிழட்டு மாமியாரின்
வேதனை வரிகளை
கடைசி காலத்தில்
படுக்கையில் கிடந்த
அப்பனுக்கு தண்ணீர்
வாளி தூங்கியதை கூட
........... மெளனமானவளின்.
வரிகளை உணர்கிறேன்
கடல் கடந்து அவனுடன்
வாழும் தருணங்களில்...
மாதமொரு முறை...
வெளியே அழைத்து
சென்று இன்பத்தின்
நொடிகளை செல்ஃபி
எடுத்து பலருக்கு
காட்டுகிறான்.தனது
சந்தோஷத்தை...
இப்படித்தான் நடித்தான்
மனதிற்குள் அழுகிறேன்...
காதலை சொன்ன
நேரத்தில் அம்மா
சொன்ன அறிவுரை
மொழிகளை.. ஏண்டி
அவன் ஓரு சரியான
சர்வாதிகாரி...
சொன்னா கேளூ...
பொண்ணும் பையனும்
கூட அவனின் முன்பு
வேதனையுடன்
சிரிக்கிறனர் .. இந்த
பொய்யன் சர்வாதிகாரி
முன்பாக அவரைப்போல
போலியாக அவரின்
வாரிசுகள் கூட அவனைப்போல
சரியான சுயநல
சர்வாதிகாரி...

மனித நேயம்..


இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய புராணங்களையும் இதிகாசங்களையும் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது...
சிலருக்கு தான் படித்த கதைகளை பிறருக்கு சொல்ல ஆசை....
ஆம் அந்த பேராசை எனக்குள்ளும் இருந்தது....
ஓர் சாமானிய சராசரி வேலையில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானது...
ஆனால் கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி...
கல்யாணம், குடும்பம் என்பதையும் தாண்டி சில நிகழ்வுகளில் தான் மனம் நிறைவு தருகிறது...
இதை சொல்லுவால் என்னை ஓர் பைத்தியக்காரன் போல நீங்களும் நினைக்கலாம்...
ஆனால் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை இதுவே...
இயற்கை படைத்த மனித உயிரை நல்ல செயல்களுக்கு பயன்படுத்துவதே வேதங்களில் சொல்லப்பட்ட விஷயம்...
எனக்கு ஏற்பட்ட சில கசப்பான விஷயங்களை நினைத்து மனம் வேதனையில் துடித்து காவியை கட்டிக் கொண்டு...
பரதேசியாக அலையும் சாமியார்களையும் அவர்களின் கதைகளையும் கேட்டு சில விஷயங்களை புரிய முயற்சி செய்து கொண்டிருந்த தருணத்தில் புரிந்து கொண்ட வாழ்வியல் விஷயங்களே அதிகம்...
என்னுடன் பேசிக்கொண்டு இருந்த ஊர் பெயர் தெரியாத.. சொல்லவும் விரும்பாத பெரியவர்.. சொன்னார்..
தம்பீ நீங்க எழுதுங்க...
உங்களுக்கு எழுதுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற போதும்.. சாமி எனக்கு பேசவே தெரியலைன்னு சிலர் சொல்லுறாங்க..
நீங்க எழுத சொல்லுறீங்களே என்றேன்...
தம்பீ... சித்திரமும் கை பழக்கம்..
செந்தமிழும் நாப்பழக்கம்...
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்...
என்று சொல்லி விட்டு போனார்...
கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்பதே உண்மை.. ஆயினும் உலகம் என்றுமே விசித்திரங்களின் குவியல்...
புவியீர்ப்பு விசையை ஒருவர் நம்பினாலும் நம்பா விட்டாலும்..
வானத்தை நோக்கி வீசப்பட்ட பந்து பூமியை வந்தடைகிறது...
அதைப் போலவே சில கற்பனை கதைகளை போல வருங்காலத்தில் சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன...
கதை எழுதப்பட்ட 60+ ஆண்டுகளுக்கு பிறகு அந்த கதையில் நடந்த நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் உலகில் நடக்கிறது...
இந்த அதிசயங்களின் விதியை நான் பிரமிப்புடன் பார்க்கிறேன்...
அரசியல், ஆன்மீகம், வியாபாரம், வெற்றுகிரக வாசிகளின் வருகை அல்லது வெற்று கிரத்திற்கு மனித சென்று குடியேறுவது என்பது போன்ற ஜனரஞ்சகமான கதை...
என்னை ஓர் எழுத்தாளனாக அடையாளப்படுத்த நினைக்கும் அதே வேளையில்...
இந்த விதமான ஆராய்ச்சி என்னை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது...
எனவே மிகவும் பார்த்த விஷயங்களையும் உணர்ந்த விஷயங்களையும் மாத்திரமே எழுத முயல்கிறேன்.
கடக்கும் அறிவியலும் எனக்கு அவ்வளவாக தெரியாது... ஆனால் மனித உணர்வுகளையும்.அவர்களின் மன அழுத்தம் ஆகியவற்றை மீறி உலகில் சந்தோஷமாக வாழும் மனிதரையும்...தனது கவலைகளை மறக்க பிறருக்காக வாழும் மனிதரையும் பற்றியே எழுதுகின்றேன்....
எனது கதை மற்றும் கவிதைகள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதப்படவில்லை...
எனது கதைகளில் வரும் சம்பவங்கள் யாராவது ஒருவரின் வாழ்வில் நடந்திருந்தால் அது தற்செயலானதே...
நான் பார்த்த சில யதார்த்தமான விஷயங்களை கற்பனை கலந்து படைப்புகளாக செய்கின்றேன்...
மனிதன் பூமியில் வாழும் காலம் மிகவும் குறைவு.. ஆனாலும் ஏனோ மதம், இனம், மொழி என்ற பேதங்கள் எத்தனை எத்தனை....
உலகில் சக மனிதனை சக மனிதனாக நடத்துவோம்....
நமக்கு மட்டும் தான் கவலை இருக்கிறது என்ற மனநிலை மாற்றங்கள்...
ஓவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஆயிரம் கதைகள் புதைத்து கிடக்கிறது...
அவற்றை மறந்தும் மறைத்தும் பிறருக்கு நல்லது நினைத்து வாழும் மனிதரை பாராட்டுவோம்....
வளரட்டும் மனித நேயம்..

அரசியல் தர்மம்..


மேகத்தை
விட வேகமாகவும்
சாமர்த்தியமாகவும்
மாறுகிறது..
அரசியல்
கூட்டணி... ஆனால்
உடைபடுகிறது..
அரசியல் தர்மம்...

மனதின் வலிகள்.


அன்பாய் பேசி
சிரித்து முதுகில்
குத்தி விளையாடிய
அன்பு நண்பர்...
பலர் அறிய தம்பி என்றே
உரிமையாய் அழைத்தவர்...
உடன் பணியாற்றிய
அலுவலகநண்பர்
அவரின் வேதனை
கதையை என் கதைக்கு கூட
கற்பனை செய்ததில்லை
அவர் பலவருடங்களாக
உயிருக்கு உயிராய்
காதலித்து திருமணம்
செய்த காதல்மனைவி
கொரோனாவின்
கோரமுகத்தை காட்டி
பறித்து சென்ற காலன்...
சில மாதங்களுக்கு முன்
லாக் டவுண் பிரச்சினையில்
வேலையும் இழந்து தவித்தவர்
கல்யாணுத்துக்கு வாங்கிய
கடன் பாதியில் அத்துடன்
தனது சக்திக்கு மீறியே
ஆசைகாதலிக்கு அன்புடன்
பார்த்து பார்த்து கட்டிய வீடு...
குழந்தைகளின் எதிர்காலம்
கண்டு கடல்கடந்து சென்றவர்
தனது கவலைகளை அடுத்தவரின்
முன்னால் சொல்லக்கூட
கூச்சப்படும் மனிதர்.. இன்று
அவருக்கு ஏற்பட்டு இருக்கும்
பொருளாதார மற்றும்
உறவுகளின் இழப்பின்
வலிகளை எப்படி
சமாளிக்க போகிறார்..
நினைக்கும் போது
நெஞ்சில் சஞ்சலத்தின் கடல்
மெளனமாய் பேச மொழியின்றி
தவிக்கிறேன் ஆயினும்
எரிமலையாய் குமறுகிறது
மனம் என்னும் குரங்கு..
இன்றும் கூட சில தகவல்கள்
நண்பனின் கஷ்டத்தை கண்டு
அவரின் நண்பனாய் புரிகிறது
அவர்க்கு ஏற்பட்டு இருக்கும்
மனதின் வலிகள்..

மதிப்பு தெரியவில்லை.


தவறுகளை
ஒத்து கொண்டு
மன்னிப்பு கேட்க
பலருக்கு மனதில்லை..
போலியான கெளரவம்
தலையில் தலைகனமாக
மாறிப்போனது.. உலகில்
தவறே செய்யாத
மனிதன் எவனுமே இல்லை...
சிலர் தனது தவறுகளை
கச்சிதமாக மறைத்து விட்டனர்....
சிலர் செய்யாத தவறுகளுக்கு
விதியின் பெயரால் ......
உலகம் விசித்திரமானது...ஏனோ
தவறுகளை கச்சிதமாக
செய்து தப்பிக்கும் போலிகள்..
உண்மையை தேடும் மனிதனை
கைநீட்டி கேட்கிறான் ...
கேள்விகள் ஆயிரம்...
போலியாக வாழ பழகாதவன்...
மெளனமாய் நகரந்தே போனான்...
சில வருடங்களுக்கு பிறகே
புரிந்ததது வாழ்க்கை...
இயற்கையின் விளையாட்டு
எப்போதும் கச்சிதமாய்
நகர்கிறது...இன்றோ
உண்மை தேடியவன்
மனதில் ஆயிரம் ஆயிரம்
சந்தோஷங்கள்.... அந்த
போலி பித்தலாட்டகாரன்.
இப்போது நடிக்கிறான்...
மனதின் ரணங்களை
மறைத்து விட்டு...
போலியாய் பகட்டுடன்...
நிம்மதியான மனிதவாழ்வின்
மதிப்பு தெரியவில்லை... அவனுக்கு

மனக்கசப்பு...


பத்தாயிரம்
சம்பளத்தில்
இயந்திரதனமான
மனிதநேயத்தை
கணிணியில்
அடகு வைத்த
வேலை அதை
தக்கவைத்துக் கொள்ள
ஏனோ வருங்காலத்தை
உணராமல் சிலருக்குள்
மனக்கசப்பு

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...