இயற்கையின் விளையாட்டு . .

 

.
தெருவோரமாக
யாருமற்ற
அனாதை போல்
உண்மை பாசம் தேடி
வீதியில் வருவோர்
போவோர் அனைவரையும்
தனக்கு இவராவது
சொந்தமாவாரா அல்லது
அன்புடன் நாலு வார்த்தையாவது
பேசும் நட்பாக வருவாரா
என்று ஏங்கித் தவிக்கும்
பிச்சைக்காரனே....
வாழ்வில் அசுரவேகத்தில்
வளர்ந்த பல மனிதர்கள்
பல நாட்களுக்கு
பட்டினியுடன்
உன்னைப்போலவே
ஓர் காலத்தில்
சொந்தமும் பந்தமும்
காட்டிய உன்னதமான
போலிப்புன்னகையில்
வீதியில் பித்து பிடித்து அலைந்தவர்கள் தான்
உண்மை அன்பும் பாசமும்
தேடி தம்மை தொலைத்தனர்
தொலைத்த பிறகுதான்
தெரிந்தது உலகிற்கே
அள்ளிக்கொடுக்கும்
பிரபுக்களும் கூட
ஓர் காலத்தில் இப்படித்தானாம்
இன்றோ கைநிறைய பணம்
இன்றும் கூட சுற்றி நின்று
போலிப் புன்னகை காட்டும்
மனிதரை இன்முகத்துடன்
கடந்து செல்கின்றனர்..
வாழ்வில் எதுவுமே
வேண்டாமென்றே
உலகியலை வெறுத்து
போனவருக்கும்
மகுடம் சூட்டி
அழகு பார்ப்பதே
இயற்கையின்
விளையாட்டு

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...