762 -தன்னம்பிக்கை

 பணத்தை விட 

பாசமே பெரியதென்று 

அடிக்கடி பேசிச் சிரிக்கும் 

மச்சான் கூட தெரு வீதியில் 

முகத்துக்கு நேராக பார்த்த 

பிறகும் விலகியே 

செல்கிறான் .. எதிர்பாராத 

விதமாக வேலையை 

இழந்த அத்தானை ஏதோ 

சாக்கடையில் விழந்த 

புழுவை போல் பார்த்தபோதே 

புரிந்தது.. என்னோட தம்பியின் 

பாசமெல்லாம் வெளி வேஷம் 

உங்களுக்கு பட்டால் தானே 

புத்தி வரும்.. மனைவியின் 

கோபத்தில் உண்மை இருந்தது 

மச்சானின் மயக்கும் மொழியெல்லாம் 

காசைத்தான் தேடியது போலும்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு 

வீடு தேடி வந்த அதே மச்சான்..

அத்தான் உங்களுக்கு பெரிய 

இடத்தில் வேலை கிடைச்சதா 

கேள்விப்பட்டேன்..காசு வந்ததும் 

இந்த ஏழை மச்சானை மறந்துடாதீங்க 

பணத்தை விட பாசம் தான் பெருசு..

சமையலறையில் இருந்தபடி 

ஏதோ சொல்ல வந்தவளை 

கண்சாடையில் சொன்னேன்...

உலகத்தை நல்லா புரிஞ்சு கிட்டேன் 

நீ பேசாம பொறுமையா இரு ..

மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் 

பணத்தை விரும்பியவன் 

பாசத்தை இழக்கிறான்.. ஆனால் 

பாசத்தை நினைத்தவன் 

பணத்தை இழந்தாலும் 

இழக்கவில்லை தன்னம்பிக்கை 

761 - செல்லமகள்

 தனது ஓவ்வொரு 

செயலிலும் ஏதோவொரு 

எதிர்பார்ப்பை 

ஓளித்து வைத்தே

பழகும் மனிதர்களின் 

மத்தியில் பிறந்தாலும் 

எந்த விதமான 

எதிர்பார்ப்பும் இல்லாமல் 

உன்னதமான அன்பை 

தருகிறாள் செல்லமகள்

760 - அரசியல் சூதாட்டமா சூழ்நிலை கைதியா

பொறுப்பு துறப்பு -கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே யாராவது ஒருவரின் வாழ்க்கையில் இதே போன்ற சம்பவம் நடந்திருந்தால் அது தற்செயலானதே 

 மன்னன்...அமைச்சரே எனது அரண்மனைக்கு வெளியே என்ன அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார் இவ்வளவு சத்தம் ஏதாவது எதிரி நாட்டு அரசர் படையெடுத்து வந்துவிட்டாரா.


அமைச்சர் -.. நம் மீது படையெடுக்கும் துணிச்சல் எந்த மன்னருக்கும் கிடையாதே..

மன்னன் - ஆமாம்.. ஆமாம் எனது பெயரை சொன்னாலே எதிரி நாட்டு வீரர்கள் ஓடி விடுவார்களே..


அமைச்சர் -- மன்னா என்னை மன்னிக்கவும் நம் நாட்டின் மீது யாருமே படையெடுத்து வர முடியாது அதற்கு நமது எல்லை காவல் இரவு பகலாக காவல் காக்கும் வீரர்களின் தைரியமே போதும்.


மன்னன் -  அமைச்சரே என்னை குழப்பாதீர்கள்...எதிரி நாட்டு வீரன் படையெடுப்பு செய்யவில்லை..பிறகு எதற்காக கோட்டைக்கு வெளியே இவ்வளவு சத்தம் 


அமைச்சர் - மீண்டும் என்னை மன்னிக்கவும் மன்னா..இது அரண்மனைக்கு வெளியே இருந்து கேட்கும் சத்தமல்ல 

மன்னன் - பிறகு எங்கிருந்து வருகிறது ஏதாவது உள்நாட்டு குழப்பமா..

அமைச்சர். -மன்னா  உள்நாட்டு கலகம் எதுவும் இல்லை..இது உங்களின் உள் குடும்பத்து குழப்பம்... நீங்கள் உயிரோடு இருக்கும் போதே உங்களுக்கு பிறகு யார் நாற்காலியில் அமர்வது என்ற போட்டியில் ஓருவரை ஓர் சிக்கலில் மாட்டி விட்டு குடும்பத்திற்குள் சண்டை செய்கின்றனர்.



மன்னன் - என்ன செய்வது அமைச்சரே உலகில் பல சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னராட்சிகள் தங்கள் வாரிசு சண்டையில் தான் ஆட்சியை இழந்திருக்கின்றனர்.



அமைச்சர் -  ஆமாம் மன்னா எல்லாருக்கும் உங்களை போல் விட்டுக் கொடுக்கும் மனநிலை இல்லை... நானே தலைவன் நானே தலைவன் என்று அடித்து கொள்கின்றனர்..

759 அனுபவம் சிறந்தது...



கஷ்டங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல.. அதையும் மீறி வாழ்வில் என்றாவது ஓர் நாளில் சந்தோஷம் என்பது உண்டு..

சில நிமிடங்கள் தான் என்றாலும் அதனை நினைத்து மனம் சந்தோஷம் கொள்கிறது...

மனமும் புத்தியும் எதிர் எதிராக வேலை செய்தாலும்...
அன்பும் அமைதியும் தேடி அலையும் தருணங்களில் கிடைத்த அனுபவம் சிறந்தது..

758 - தாய் அவள்..


தேசிய கொடியை
கைகளில் பிடித்து
பிறருக்கு உற்சாகம்
கொடுக்கும் செல்லமான
சின்னஞ்சிறு
குழந்தை அவள்..
தன்னையே
பாவித்து கொண்டாள்
பாரதத்தின்
தாய் அவள்
என்று...

757 - நண்பனைத் தேடி...


நண்பர்கள் இருவருக்கும்
இடையே தொடங்கிய
போட்டி..நட்பை தேடி..
நண்பனின் நினைவு
மட்டுமே இருக்கிறது...
கோவிலில் இருக்கும்
சாமிக்குத்தான்
தானே தெரியும்...
தொலைந்து போனது
அந்தபோன்..ஆனால்
பிறகே புரிந்தது...
நம்பர் எழுதி வைக்காது
எத்தனை பெரிய தவறு..
அது அவனுக்கு
தெரியுமா???
நல்ல நினைவுகள்
நண்பனை நினைத்து
நம்பிக்கையுடன்
சுற்றுகிறேன்
கோவில்
பிரகாரத்தை
நண்பனைத் தேடி

756 - Silence...


It's always used by people to avoid problems.
Any how following and observing needs more strength.. Normally one cannot practice silence very quickly.
Silence is a great way to discipline mind thought.
Proper breathing take care of it.
Thought became words, words became actions.
So eradicating thought from beginning itself will work out.
But nature have created human brain as, which he like to forget will always pop-up in mind.

Puranas says Lord Narayan resides in heart along with his wife Lakshmi.
He always give good things to his disciples.

Sitting alone in undisturbed manner and watching your mind may bring prosperous in life.

Mind shows your desire to yourself.
Peace start from inner and it's easy to control thought.
Let peace and silence may fill in your heart and soul.

755 -பிடிக்கும்...



உடைந்த
கண்ணாடி
சரிசெய்ய
தெரிந்த மனிதன்
ஏனோ மனதை
மட்டும் சரிசெய்யும்
வித்தை கற்ற
விரும்புவதில்லை...
ஏனேனில் அதற்கு
அமைதி தேவை
இங்கே இவர்களுக்கு
ஆர்பாட்டம் தான்
எப்போதும்
பிடிக்கும்..

754 - SREE is not merely a word...



Word make wonders. Yogi Ram Surat Kumar always use tell his followers to chant this word. His words are very simple.
This is not mantra, but name of all our Indian traditional hero.

'My father with bless you from heaven', is normaly always said by him.
Apart from that, if anybody ask for mantra intiation. He used to chant Ram...Ram...

There is an another wounder full word associate with it..

'SREE' is an auspicious word. Pronouncing this may make feel good and happy.

That's the reason behind "SREE" was always pronounced with the great mantra as "JAI SREE RAM".

753 - அவனைப்போல ஒருவன் அரிது.. .



அது ஓர் அந்தி மாலை பொழுது..
கோவிலின் நடை சாத்தப்படுவதற்கு முன்பாக செய்யப்படும் வழிபாடு அது.

சில நிமிடங்களில் பேசி பழகியவன், யார் என்று கூட விசாரணை செய்யாமல்.. என் பின்னே ஏதொவொரு நம்பிக்கையில் உடன் வந்த நண்பன்...

என்றும் தனியாகவே, கூட்டத்தில் ஒருவனாய் நான்.ஏனோ அந்த நாள் மிகவும் சிறப்பானது..
ஏனென்றால் ஓர் நல்ல நண்பன் என்னுடன் நின்றான்..

அவன் தன் மீது கொண்ட அதீத நம்பிக்கை தான்.அவனால் பிறரை எளிதில் நம்ப முடிகிறது. சிலர் அல்ல பலர் அவனது அன்பை தவறாக புரிந்து கொண்டது உண்டு.ஆனாலும் அவன் தனது இயல்பை மாற்றவில்லை..

சின்னஞ்சிறுவர்கள் தாரை தப்பட்டை வாத்திய கருவிகள் முழங்க தயாராயினர்.. எனக்கு இந்த சத்தம் என்பது ... அவன் சொன்ன ஓவ்வொரு சொல்லும் நினைவில் உண்டு..
ஏனோ மனம் கனமானது.அப்படியெனில் எத்தனை ஆழமாக தேடுதல் ரணம் அவனுக்குள்...

அவனுக்குள் இருந்த ரணங்கள் எத்தனையோ தெரியாது.ஆனாலும் தேவை எதுவும் இன்றி இருந்த எனக்கு, சில விஷயங்கள் வாழ்வில் தேவை என்பதை நினைவுபடுத்தியவன்.

பணத்தை பற்றி பேசவில்லை.அதை கேட்கவும் இல்லை.

வழிப்போக்கன் போல வந்து நட்பை விதைத்து விட்டான்.
என்றாவது ஓர் நாள், அந்த இசை கேட்கும் தருணங்களில்.. அல்லது ..இன்றும் அந்த இடத்தை கடக்கும் போது நினைவு வரும்..."...... அவசியம் தான் புரியுது.. ஆனால்" அவன் சொன்ன வார்த்தைகள்.. நெஞ்சில் நினைப்பதுண்டு...

அவனைப்போல ஒருவன் அரிது..

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...