ம்ம்மா.. ம்ம்மா.. அம்மா.. அம்மா

முகம் காணும்

முன்னாலே முகவரியை

தந்தவளே..என்புள்ள

வரமென்று

காத்திருந்த தருணத்தில்

கவலை மறந்து இருந்தாயே..

கண்கள்கலங்காமல் 

கண்ணிமை போல் 

காலமெல்லாம் காத்தவளே...

ஓலை குடிசையிலே வாழ்ந்த காலத்திலும்

நெஞ்சமதில் அன்பு அரண்மனை காட்டினானே.....

அப்பாவின் முகவரி கூட

நீ தந்த காதலென்றோ...

தலைநகரில் தன்னந்தனியாக

சொந்தமின்றி மழையில் தவித்தவளே...

பக்கத்தில் தவித்த ஏழை மக்களுக்கு

பரிவுடன் பாங்காய் பாசமான

வார்த்தையை சொன்னவளே....

மழை வெள்ளம் சூழ்ந்து நின்று

ஊரெல்லாம்  தவித்த போதும்

உள்ளத்தில் நீ சுமந்த 

அன்பு நெஞ்சத்தை

உன்னுள்ளே நானிருந்து

உணர்ந்த தருமெல்லாம்

வாழ்வின் தவக்காலம்..

பனிக்குடம் உடைத்து விட்டு

கதறி அழுதபோதும்

"புள்ள எப்படி இருக்கு"...

சிரித்த படியே கேட்டவளே...

என் சிரிப்பே உன் புன்னகை 

வேண்டித்தானே....

பொன்னகை தவிர்த்து

புன்னகை பூத்தவளே

என்னுயிர் நீ அம்மா...

முகவரியும் நீ அம்மா...

ம்ம்மா ம்ம்மா...

என்னுயிரே நீ அம்மா..


என்னுயிர் நீ அம்மா

ம்ம்மா... ம்ம்மா.....

அம்மா.... அம்மா...

அன்பை தான்

யாசித்தாயே..

அன்பையே 

யோசித்தாயே...

அன்பென்றே  

சொன்னவரெல்லாம்

பரிதவிக்க விட்ட போதும்

சொந்தங்கள் வேண்டுமென்று

சோகங்கள் மறைத்தாயே

 சுகமாக சிரித்தாயே..

சிந்தனையில் அன்பு

கொண்டு உதிரத்தை

கொட்டினாயே...... தாயென்று

சொல்லும்வரை 

பொறுமையாக

நின்றவளே... ஊர் போற்றும்

மனகென்றே பெயரெடுக்க வைத்தவளே

பத்து மாதம் சுமந்த உன்னை

பத்திரமாய் பார்த்திடும்

பாக்கியமே சொர்க்கத்தின்

வாசல் அன்றோ.

உன் தடியில் வீழ்ந்த என்னை

தலைவனென்று சொன்னாயே

தரணி பாடும் கூட்டத்தில்

பரணி பாட வைத்தவளே.

நீ தந்த அன்புதான் 

அமைதியின் பிறப்பிடமே..

உன் பெயரை சொல்லித்தானே

தினமும் வாழ்கிறேனே...

அம்மா.. அம்மா.. என்னுயிர்

நீ அம்மா...என்னுயிரே நீ அம்மா..

மழையின்

 மிகப்பெரிய மனப்போராட்டத்திற்கு பிறகு இந்த விஷயத்தை கடவுளிடம் சென்று முறையிடுவது தான் நல்லது என்று மழை ஆண்டவனிடம் சென்று முறையிட்டது..


கடவுள் தன் முன்னால் வருத்தமான முகத்துடன் வந்த மழையிடம் கேட்டார்.


ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார் என்று .

கடவுளே நான் உங்களின் ஆணைப்படி தான் செயல்படுகிற் ஆனால் மக்கள் என்னை மிகவும் கேவலமாகவும் மோசமாகவும் திட்டுகிறார்கள்...


இனிமேல் நான் வருடத்திற்கு ஓர் இரு முறை மட்டும் தான் பூமிக்கு போக நினைக்கிறேன்.

அப்படியே போனாலும் சில நிமிடங்களுக்கு தூரலாகவே செல்வேன் மழையாக பெய்ய விருப்பமில்லை...


கடவுளின் சபையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டனர்...


சில நொடிகளில் எல்லா தேவ தூதர்களும் இந்த கேள்வி பதில் நாடகம் கூட கடவுள் விருப்பத்தின் படி நடக்கிறது என்பதை உணராமல்.

ஆளாளுக்கு ஓர் கருத்தை முன் வைத்து மழையை குற்றம் சாட்டினர்....


உன்னை யார் விட்டாமல் பெய்ய சொன்னது.... நேத்து இரண்டு நாளில் மட்டும் ஆறுமாதம் பெய்ய வேண்டிய அளவை ஓர் நேரத்தில் பெய்து விட்டாய்..

பல நாட்களாக என்னுள் இருந்த வேதனையை மேக வெடிப்பாக பெய்து விட்டேன் என்று சாக்கு போக்கு சொல்கிறாயே.. இப்படி நீ செய்வதால் தான் மக்கள் உன்னை திட்டுகிறார்கள் ஓர் தேவதூதன் மக்களுக்காக பேசினார்..


நீங்கள் சொல்லுவது மிகவும் சரிதான் கடவுளின் உள்ளப்படி மாதம் ஓர் முறை எல்லா இடத்திலும் அளவாக மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த மழை வர வர ரொம்ப தன் இஷ்டப்படி நடக்கிறது.ஆறு மாதத்திற்கு ஓர் முறை ஓரே நாளில் பெய்து ஊரையே வெள்ளக்காடாக மாற்றி விடுகிறது...

நான் என்ன நண்பரே செய்ய முடியும். வெயில் சூடாக அடித்து கடலில் உள்ள காற்றை மேகத்திற்கு அனுப்புகிறான்.. நானும் அதை மேகமாக மாறி மரங்களை தேடுகிறேன்... ஏனென்றால் மரம்  இருக்கும் இடத்தில் தான் எங்களின் மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்ய முடியும்...

இது கடவுள் ஏற்படுத்திய இயற்கையின் முறை....

நீங்கள் தேவையில்லாமல் பேசாதீங்க... ஏன் இப்படி ஓரே நாளில் இத்தனை வேகத்தை மக்களிடம் காட்டிடீங்க அதுக்கு பதில் சொல்லுங்க....


பதில் எதுவுமே சொல்லாமல் மழை அமைதியாக நின்று கொண்டு இருந்தது...

கடவுள் மழையை நோக்கி கேட்டார்... அவர்களுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்.என்னால் தீர்ப்பு மட்டுமே வழங்க முடியும்....

மழைக்கு அவரின் பேச்சு தைரியமூட்டுவதாகவும் உன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லு என்பது போலவும் இருந்தது...

உலகை படைத்து காத்து வரும் கடவுளே தன் கருத்தை கேட்க விரும்புவதை நினைத்து பெருமையுடன் தைரியூஅதை வரவழைத்து கொண்டு சபையை நோக்கி திரும்பினார்.

அன்பான தேவதூதர்களே, மகான்களே, மனிதனாக பிறந்து உலகில் தான தருமங்களும் புண்ணிய செயல்களும் செய்து தேவ தூதர்களுக்கு இணையாக அமர்ந்திருக்கும் அனைவரையும் மனதார வணங்குகிறேன்...


உங்கள் அனைவருக்கும் நான் கடவுளின் ஆணைப்படி வெப்பக் காற்றை குளிர்ந்த மேகங்களாக மாற்றி மழை தருவிக்கிறேன்....


கால்நடை அபராதம் சற்றே யோசிப்போம்

ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை சொல்ல வழி சொல்வதே ஜனநாயகம்

காலையில் எழுந்தவுடன் காபி..டீ வேணும்.பால் தயிர்.. நெய் எல்லாமே வேணும் ஆனா அதை தரும் மாடுகள் மட்டும் வேண்டாம்..போல...

ஆடு மாடு கோழி போன்றவை இயற்கையின் படைப்பு.. மனிதன் மட்டும் தான் ஊரில் வாழ வேண்டும் என்றால் எப்படி... பலரும் ஏதோ ஆடு மாடு மேய்ப்பர்களை கேவலமாகவும் கேலியாக எழுதியுள்ளனர்...ஆடு மாடுகளால் ஏற்படும் விபத்தை விட Bike , Car Lorry , bus இவற்றில் ஏற்படும் விபத்துகள் அதிகம் அதற்காக அவற்றை தடை செய்ய முடியுமா..... கால்நடை இல்லாமல் விவசாயம் இல்லை...

மிருகங்களும் இயற்கையின் சமன்நிலைக்கு மிகவும் தேவை என்பதை உணருங்கள்...ஆடு மாடு வளர்க்கும் ஏழைகளின் கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

யார் இந்த ரஜினி ?

சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து, தனது கடின உழைப்பாலும், ஸ்டைலான பாவனைகளாலும் ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தவர். ஆனால், யாராவது அவரிடம், "ஐயா, நீங்கள் அசாதாரண உயரங்களை அடைந்துள்ளீர்கள். இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டால்,

 

அவர் புன்னகைத்து, "எல்லாம் கடவுளின் கருணையும் என் பெற்றோரின் ஆசீர்வாதமும்தான்" என்று சொல்வார்

அதற்காக நீங்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே சரியென்று ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உங்களின் சில கருத்துக்களில் மாறுபடுகிறேன்..

ரஜினி என்பவர் மாஸ் ஹீரோ என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ரஜினி மாஸ் ஹீரோவா.அல்லது எல்லோரையும் போல சாதாரண ஓர் நடிகரா......


சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து, தனது கடின உழைப்பாலும், ஸ்டைலான பாவனைகளாலும் ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தவர். ஆனால், யாராவது அவரிடம், "ஐயா, நீங்கள் அசாதாரண உயரங்களை அடைந்துள்ளீர்கள். இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டால்,

 

அவர் புன்னகைத்து, "எல்லாம் கடவுளின் கருணையும் என் பெற்றோரின் ஆசீர்வாதமும்தான்" என்று சொல்வார்

அதற்காக நீங்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே சரியென்று ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உங்களின் சில கருத்துக்களில் மாறுபடுகிறேன்..

ரஜினி என்பவர் மாஸ் ஹீரோ என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ரஜினி மாஸ் ஹீரோவா.அல்லது எல்லோரையும் போல சாதாரண ஓர் நடிகரா......

ரஜினியின் பட வெற்றிகளை முத்து பணத்திற்கு முன்...முத்து வெற்றிக்கு பின் என்று இரண்டு விதமாக பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.

கவிதாலயாவின் அனைத்து படைப்புகளில்கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அதைப்போலவே பாலசந்தர் இயக்கிய படங்கள் எல்லாமே சாதாரண மனிதனின் வெளிப்பாடுகளே.

தனது எல்லா படைப்புகளிலும் புதுமையான கருத்துக்களை சொல்லி படங்களில் வித்தியாசம் காட்டியவர் K.B

எல்லோரும் ஊட்டி குத்தாலம் என்று அவுட்-டோர் போகும் காலத்தில்.

சில சுவர்களுக்குள் படத்திற்கான கதையை எழுதி குறைந்த செலவில் நாகேஷ் அவர்களை அறிமுகபடுத்தி, அவரின் திறமையை உலகறியச் செய்தவர் K.Balachander.

 

ஒரு காலத்தில் ரஜினியின் பெயர் அரசியலில் உச்சத்தில் இருந்தது. அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தனது ஆதரவைக் காட்டினார். அதற்காக அவர்களிடமிருந்து எந்த வெகுமதியையும் அவர் பெற்றதில்லை. மருத்துவக் கல்லூரி நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு அல்லது தனது ஆன்மீக குரு கோவிலைக் கட்டுவதற்கு நிலம் நன்கொடையாக வழங்குமாறு அவர் அரசியல் தலைவரிடம் கேட்டிருக்கலாம், ஆனால் அந்தத் தலைவரிடமிருந்து எந்தப் பணியையும் அவர் பெறவில்லை.

 

ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தன்னை ஒரு முடிசூடா மன்னராகக் காட்டிக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர் அதைப் புறக்கணித்து, "அரசியல் என்னுடையதல்ல. நான் ஒரு தனி நபர் அல்ல என்பதை உணர்ந்தபோதுதான் அரசியலைப் பற்றிப் பேசினேன். எனது செயல்கள் என்னைச் சுற்றியுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்புக் குழுவினர் போன்ற பலரைப் பாதிக்கக்கூடும்" என்று கூறினார்.

 

"எனது சொந்த நலனுக்காக அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கக்கூடாது, எனவே தயவுசெய்து அரசியலைத் தவிர்க்கவும். எனது குருக்களின் ஆன்மீகப் பயிற்சிகள் அல்லது எனது வாழ்க்கை வரலாறு பற்றி நீங்கள் ஏதாவது கேட்க விரும்பினால் அது நன்றாக இருக்கும்."

 

நீண்ட காலமாக அவர் அரசியலைப் பற்றிப் பேசவில்லை, ஆனாலும் அவரது புகழைக் கெடுப்பதற்காக அரசியலில் அவரது பெயர் இன்னும் பரவலாகப் பேசப்படுகிறது.

 

அவர் அரசியலில் நுழைவாரா இல்லையா என்பது அவரது விருப்பம். ஒரு ரசிகனாக, அவர் நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால், அவர் சினிமாவில் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலைஞர்.

இந்த உலகில் மற்றவர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த எல்லா உதவிகளையும் மறந்துவிடும் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். இன்றுவரை திரு. ரஜினி தனக்கு வாய்ப்பளித்த தனது குருவான கே.பி.யை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.

 

ரஜினி தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நிறைய சாதித்துள்ளார் என்று அனைவரும் கூறலாம். ஆனால் என் பார்வையில், அவருடைய பணிவு, அடக்கம் மற்றும் தனது குருவுக்கு அவர் காட்டும் மரியாதை ஆகியவையே அவருடைய வெற்றிக்குத் தூண்களாகும்

 

சித்தப்பா

தாயின் பாசம் 

தந்தையின் நேசம் 

சகோதரனின் அன்பு 

அக்காவின் அக்கறை 

தங்கையின் கேலியாக 

நகைசுவை பேச்சு நல்ல 

நண்பனின் அறிவுரை

இவையனைத்தும் கலந்த 

ஓர் அற்புதமான படைப்பு 

தான் சித்தப்பா 

ரக்க்ஷா பந்தன்

 போடி கிறுக்கி 

அடிக்கடி அவன் 

சொல்லும் வார்த்தை.. 

டியூஷன் க்ளாஸிலும் 

எனக்காக சண்டை செய்து 

கோபக்காரன் என்றே 

பெயரெடுத்த பாசக்கார 

அண்ணன் அவன்... 

ஆசையாக கேட்பதற்காக 

சுவர் ஏறி குதித்து 

பூவை பறித்து நாய் 

விரட்டி உருண்டு எழுந்து 

வந்தவரின் கையில் 

புத்தம் புதிதாக அந்த மலர்ந்த பூ... 

அம்மா கேட்டா சைக்கிள்ல 

இருந்து விழுந்தேன் சொல்லு...வெகுளியாக 

வெள்ளந்தியாக சிரித்தவன்...

கேட்கும் முன்பே 

எல்லாமும் வாங்கி தந்தான்... 

முதல் மாத சம்பளத்தில் 

வாங்கி கொடுத்த வாட்ச் 

அவனின் கைகளில் 

அணிவித்த போது இருவரும் உணர்ச்சியின் பிழம்பாய்

 எரிமலைபோலவே கண்ணில் எட்டிப்பார்த்த பனித்துளி.... 

தெருவில் சென்று 

நின்று கொண்டே 

அனைவரிடமும் காட்டி 

மகிழ்கிறான் அந்த சில 

நூறு ரூபாய் பொருளை 

கோடி ரூபாய் போலவே... 

இவனைப் போலவே 

ஓர் அண்ணன் கிடைப்பது அரிது..

.

.

Raman Sankar Qoutes

அன்பை விதைப்போம்

 அன்பை விதைப்போம்...

.


போர்களும் வேண்டாம்...

போர்களமும் வேண்டாம்...

போர்கள் ஏற்படுத்திய

வலிகளை சரித்திரம்

கண்டுவிட்டது....

மகாபாரதம் தொடங்கி...

கலிங்கம் தொண்டு....

சாம்ராஜ்யங்கள் சரிந்த

போர்க்களம் வேண்டாம்...

இன்று போய் நாளை வா 

என்றே அசுரனின் மனதை

மாற்ற நினைத்த தமிழர்களின்

குறிஞ்சி நில கடவுளாம்

கந்தனைப் போல 

பகையை வெறுப்போம் 

பகைவரை அல்ல....

அசுரனின் குணத்தையும்

மாற்றி சேவலும் 

மயிலுமாக அமர வைத்து

கடற்கரைக்கு அழகு சேர்த்த

குமரனைப் போலவே

அழகு பார்ப்போம்...

புத்தன் இயேசு வழியில்...

அன்பின் வழியில்

அன்பை விதைப்போம்...

Raman Sankar

 Hi to All,

I like to introduced myself a writer. (I think so, only others can confirm this)

It's always a great experience, while trying to capture thoughts through writings.

Sharing writings (hoping so)will provide more happiness to all

The every reason hidden behind indian culture with strong human values.

we invite more relatives and friends at our every functions, so that it will .

spread happines and  make others smile.

I'm not a saint nor moral teacher nor philosopher to changes on others life.

But  if my writings may make a small repercussion on viewer's mind. I'm writing what I felt are visualized.

Yes, in today's corporate work culture we are putting more and more pressure on ourselves and others, by comparing with others social, economic and other parameters.

My blogger aim is to make you realise your day to day acitvity, in very normal manner.

So that you may overcome your unwanted pressure,which was forced by external person or work.

Always be happy and spread happiness.

Thanks and Regards,

Raman Sankar

விஷ்ணு துர்க்கை

வர வேணும்

வர வேணும்

எங்க துர்க்கை அம்மா..

எங்கள் குலம் காத்திடவே

வர வேணும் வர வேணும்

எங்க துர்க்கை அம்மா..

பக்தர்களை காத்திடவே...

பரிவுடனே வர வேணும்

எங்க துர்க்கை அம்மா

விவசாயம் செழித்திடவே

வியாபார பெருகிடவே...

வர வேணும் வர வேணும்

எங்க துர்க்கை அம்மா

வாடியம்மா காக்கின்றே‌ தாயே

ஏழைகளை காத்திடவே

ஏற்றங்களை தந்திடவே

வர வேணும் வர வேணும்

சிரித்தபடி வந்திடம்மா

எங்க துர்க்கை அம்மா

கன்னி பெண்ணாக

எங்களை காத்திடும்

எங்க துர்க்கை அம்மா

ஆசையாக பாசமுடன்

நேசத்தையும் கலந்து 

வைத்து முளைப்பாரி

எடுத்து வந்தோம்

எங்க துர்க்கை அம்மா

எங்க துர்க்கை அம்மா

நல்வாழ்வு மலர்ந்திடவே

கவலைகளும் மறைந்திடவே

சீக்கிரமே நீ வந்திடம்மா

எங்க துர்க்கை அம்மா

சிங்கத்தின் மீதிமேறி 

புவனத்தை காத்திடவே

மகிழ்வுடனே வருபவளாம்

எங்க துர்க்கை அம்மா 

இவள் எங்களின் குலம் காக்கும் நடுக்கல்லூர் அமர்ந்தவளாம் 

எங்க துர்க்கை அம்மா

நம்பிக்கை வளர்த்திடவே

நம்பியின் தங்கையான

எங்க துர்க்கை அம்மா

இவ எங்க துர்க்கை அம்மா

ஆசையுடன் குலவையிட்டோம்

குலம் தழைக்க வைத்திடுவாய்

குற்றம் குறை அத்தனையும்

கனிவுடனே பொறுக்க வேணும்...

கனிஅமுத படைத்திடுவோம்...

அன்புடனே ஏற்றுக் கொண்டு

அருளாசி புரியவேணும்

இன்பங்களை தந்து நீயும்

இன்முகத்தை காட்டவேணும்

கண்ணிமைபோல் இரவு பகல் 

பாராமல் எங்களை காத்திடும்

துர்க்கையளே என் காலடியில்

வீழ்ந்து விட்டோம்.... முளைப்பாரி

எடுத்து விட்டோம்...நீயே சரணம் அம்மா

நடுக்கல்லூரில் வீற்றிருந்து 

அருளாட்சி செய்யும் எங்க 

துர்க்கை அம்மா.

எங்க துர்க்கை அம்மா....

குலவை சத்தம்...

தமிழ் மக்கள்

படவிமர்சனம்

படம் வெளியாகும்
முன்னர் அப்படி
இப்படி என்றனர்..
வெளிவந்தவுடன்
உலகிலேயே
சிறந்த படம் இது
என்றே கோஷமிடுவர்....
முதல் ஷோ வசூல்
பல கோடி என்பர்
சில வாரத்தில்
முதலுக்கு மோசமில்லை
என்றே கதையெழுதுவர்
அடுத்த சில மாதங்களில்
படமெடுத்து கற்றுக்கொண்டேன்
என்ற விரக்தியாக
பேசி காலம் கடத்துவர்
ஆறுமாதம் கழித்து
அந்த படத்தால்
எனக்கு பல கோடி
நஷ்டமென்பார்....
நஷ்டமென்றால்
எதற்காக படத்தொழிலில்
மூதலீடு செய்கிறார்
என்று யாரும் அவரிடம்
கேட்பதில்லை மக்களுக்கு
நன்றாகவே தெரியும்...
திரையின் நடிப்பை
மட்டுமே ரசிக்கும்
சில ரசிகர்கள் எமது
தமிழ் மக்கள்

நான் ஓர் அனாதை

Story writing @ Work-in-progress

 தனக்கு யாருமே இல்லை என்பவன் எப்படி தலைவனாக மாறுகிறான் என்பதே கதை களம்...

பேச்சியம்மா...

 Story writing @ Work-in-progress

ஓர் ஏழை சிறுமி ஆசையுடன் வாங்கும் செம்மறி ஆடு பற்றிய கதை...

I love my RAM

Story writing @ Work-in-progress

பல நாட்களுக்கு குழந்தை இல்லாத ஓர் பெண்ணின் படும் வேதனைகளை சொல்லும் கதை....

மலடி என்று அழைத்தவளை ராம் அம்மா இவங்க தான் என்று உலகம் அழைக்கும் ஓர் அற்புதமான கதை....

குளிக்க போறீயா...

தாயும் தந்தையின் இருவரின் உலகமான ஓர் குழந்தை.....

அவர்களின் அன்பை புரிந்து கொள்ளாமல் தன் செல்ல நாய்க்குட்டி மட்டும் போதும் என்பதே இந்த கதை...

தன்னை பெரிய மனுஷியா நினைக்கும் குழந்தையின் உன்னத உலகம்...


ஓர் சிறு குழந்தை தன் செல்ல நாய்க்குட்டிக்கு தன்னையே ஒர் தாய் என்று நினைக்கும் நினைவு கதை கரு..

இவ்வளவு தான் வாழ்க்கை

 வாழ்க்கை என்பது இரண்டு வகை ஓன்று விஷ்ணு தத்துவம்...

மற்றொன்று சிவ தத்துவம்....

பெண் ஆணை அதிகமாக காதலித்தால் கணவனின் எல்லா செயலையும் ஏற்று கொள்வாள்... ( அவர் சரியான தத்தி நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்)

ஆண் பெண்ணை அதிகமாக காதலித்தால் பெண்ணின் எல்லா செயலையும் ஏற்றுக்கொள்வான்...( என் வீட்டுக்காரி சரியான கோவக்காரி, என்னால மட்டும் தான் அவளை சமாளிக்க முடியும்) 

இவ்வளவு தான் சார் வாழ்க்கை... 


குட்டி தேவதை


வாகனங்கள்

வேகமாக செல்லும்

நாற்கர சாலையில்

வளைந்து நெளிந்த

சாலையின்

மேம்பாலத்தின் கீழே

வேப்பமரத்து நிழலில்

அப்பனுக்கு துணையாக

வியாபாரம் செய்கிறாள்

குட்டி தேவதை...

சின்னஞ்சிறு அரக்கு

பாவாடை மஞ்சள் நிற

ரவிக்கை சட்டை..

மெளனமாய் சிரித்தே

அனைவரின்

முகத்திலும்

அன்பை பரப்புகிறாள்

நெற்றியிலே குங்கும பொட்டு

இந்த குட்டி தேவதை...

மாபெரும் பங்களாவின்

அனைத்து சுகத்தையும்

அனுபவித்து விட்டு...

பால்கனியில் வந்து

நின்று கையசைக்கும்

வேடதாரி போல்

அல்லாமல் இயல்பாய்

பேசுகிறாள்...

பணக்கார தோரணையில்

இருக்கும் மனிதரின்

மனதிலும் பாசத்தை

விதைத்து விடும்...

ஆற்றல் கொண்டவள்

இந்த சின்னஞ்சிறு

குட்டி தேவதை...

கீச்சு குரலில்... கேட்கிறாள்...

தன் குடும்பத்தின் ஏழ்மை

மறந்து வாழ்ந்துவிட துடித்தபடியே

அடிவயிற்றில் இருந்தே

வருகிறது அந்த

அற்புதமான கீச்சு குரல்...

தனக்காக தகப்பன்

ஆசையாய் வாங்கி வந்த

கிரீம் பிஸ்கட்

பாக்கெட் டாமியுடன்

பகிர்ந்து சாப்பிட்டுகிறாள்

உனக்கு ரொம்பவே

பசிக்குதா "டாமி" என்றபடி

ஓற்றை பிஸ்கட்

விழுங்கி விட்டு

மீதியை டாமிக்கு

கொடுத்தபடியே....

தன் தாய்மையை

டாமிக்கும் புரியவைத்தாள்

அருகே வந்த கொகுசு

காரின் கண்ணாடிகள்

இறங்கும் முன்னே... தன்

கீச்சு குரலில் கேட்டாள்...

சார் இளநீர் வேணுமா

இளநீர் வேணுமா....

கீச்சு குரலுக்கு

ஒத்திசைவு தருகிறது

மரத்தின் மீதிருந்தே.

குயில்களும் ஏனென்றால்

பேசுவதே...

குட்டி தேவதை..

நான் ஆதரிக்கிறேன்

 நான் ஆதரிக்கிறேன்.

( அரசு கொண்டு வரும் சட்டத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும், கருத்துக்களை சொல்லுவதும் ஜனநாயகத்தின் உரிமை.உங்களுக்கு என் கருத்தில் மாறுபாடு இருந்தால் சொல்லுங்கள்.)

எந்த ஜாதியில் பிறந்தார் என்பது முக்கியம் அல்ல...

மனதூய்மையும், மன அமைதியும் தேடுவோரும்....

மக்கள் சேவையே மகேசன் சேவையாய் நினைப்போர் அனைவரும் கோவில் அர்ச்சகர் பணி செய்யலாம் பெண்களுக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பெண்களும் வழிபாடு செய்ய வழி வகுத்த மேல்மருவத்தூர்  கோவில்....

பெண்கள் கோவிலில் பூஜை செய்ய கூடாது என்ற விதி எங்கே உள்ளது....

மயிலை கற்பகாம்பாள் சிவபூஜை செய்தார்...

சீதா தேவி தன் கைகளால் செய்த மணல் லிங்கமே இராமேஸ்வரம் கோவில் கற்பக்கிரகத்தில் உள்ளது...

சிவன் அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையார் ஓர் பெண் என்பதை மறக்க வேண்டாம்...

வீட்டில் விளக்கேற்ற மருமகள் வர வேண்டும், அப்போ தான் வீடு செழிக்கும் என்பதே பேச்சு வழக்கு...

பெண்களுக்கு போலீஸ் வேலை சரிவராத என்று முதலில் எதிர்ப்பு வந்தது....

இப்போது அந்த துறையில் அவர்கள் சாதித்து ராணுவத்தில் இடம் பெற்றனர்....

பெண் பூஜை செய்வது பாவம் என்பவர்களே... நம்மை பத்து மாதம் கருவறையில் சுமந்தவள்...

நிச்சயமாக சிறந்தவளே....

சாக்த வழிபாட்டில் எல்லா பெண்களையும் பராசக்தியின் வடிவாக கண்டவர் எழுதியதே அபிராமி அந்தாதி


By ...

Raman Sankar

https://dhenaliraman.blogspot.com

Kiss pannu

இப்போ நான் சொல்லுறதை கேட்க போறீயா இல்லையா... 

கோபத்துடன் அம்மா பேசும் பேச்சிற்கும் தனக்கும் எதுவுமே சம்பந்தம் இல்லை என்பது போல டி.வியில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் ..ஹேமா...

ஏண்டி உன்னை தானே கேட்குறேன்...

காது கேட்குதா இல்லையா....

நான் என்ன உங்க அப்பன் மாதிரி செவிடு போல நடிக்கிறவ இல்லை....

இந்த வார்த்தையை கேட்டவுடன் அவளுக்கு மேலும் கோபம் தலைக்கு ஏறியது.... அருகே இருந்த தண்ணீர் டம்ளரை அவளை நோக்கி வீசினாள்.....

கையில் இருந்த துண்டால் சச்சின் சிக்ஸர் அடிப்பது போல துண்டை சூழற்றினாள்....

ஆனால் ஏனோ ஓப்பனிங் பேட்ஸ்மேன் போல டம்ளரை தடுக்க முடியவில்லை...அது வசமாக அவளின் காலில் பட்டது....

வரவர உனக்கு கொழுப்பு ஜாஸ்தியா போச்சு.... பெத்த பிள்ளே மேலேயே வீசுறீயே...

3 வயது குழந்தைக்கு தன் பேசும் பேச்சில் உள்ள தவறு தெரியாமல்.. தன் அம்மாவிடம் சொல்லி காட்டிய வார்த்தை அனைத்தும் மாமியார் மருமகள் பேசிய பேச்சுக்கள்...

ஹேமா கோபத்தில் மேலும் கத்தினாள்... ஏண்டி எல்லாம் உங்க அப்பா கொடுக்குற செல்லம்..நீ இதுவும் பேசுவே.. இதுக்கு மேலேயும் பேசுவே......

அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு ஆபிஸ் முடிந்து வந்த களைப்பில் சோஃபாவில் அமர்ந்தான்....

அப்பா ஓடிப்போய் அவனின் முதுகில் சாய்ந்தாள்.... இன்னிக்கு எனக்கு என்ன ஸ்பெஷல் என்ற வைஷ்ணவியிடம்....

நீதான் செல்லும் ஸ்பெஷல் அன்று கன்னத்தில் முத்தமிட்டான்....உடனே தன் தாயை நோக்கி கைகளை நீட்டி உனக்கு தைரியம் இருந்தா..இதே மாதிரி செய் பார்ப்போம்..

டி.வியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா நமட்டு சிரிப்பு சிரித்தார்...

கவனிச்சியா..உமா...நீ பேசுற வசனத்தை ஓண்ணு விடாம மனப்பாடம் பண்ணி வைச்சுக்கிட்டு..உன்னை மாதிரியே அவள் கிட்ட சண்டை போடுறா பாரு....என்ன குழந்தைக்குஇ எதை எப்போ பேசணும்னு தெரியலை ஆனா உன்னை போல ...

நீங்க சும்மா இருங்க மாட்டீங்க போலையே.. நாங்க சண்டை போட்டு மூணு நாள் ஆச்சு....




மதம்..ஆ...மதமா...

 உலகின் இருப்பவர்கள் எல்லோரும் ஓரே மதத்தை தான் பின்பற்ற வேண்டும்..ஓரே மொழி தான் பேச வேண்டும் ..ஓரே உருவ அமைப்பில் தான் பிறக்க வேண்டும் .. ஓர் வகையான உணவை தான் சாப்பிட வேண்டும் என்று நடைமுறை படுத்த முடியா...சற்றே சிந்தனை செய்து பாருங்கள்.... நீங்கள் சார்ந்த மதத்தை எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்ஊஉ விட்டால் வறுமை ஓழிந்தகவிடுமா... உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓரே மாதிரி இயங்கி விடுமா...

சற்றே யோசித்து பாருங்கள்....

இது ஓர் குறிப்பிட்ட மதம் சார்ந்த பதிவு அல்ல... கண்ணுக்கு தெரியாத கடவுள் என்பவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியும் அல்ல.... உலகம் தோன்றிய போது மதம் என்பது இல்லை... மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்று இன

சேமியுங்கள்

 ஊருக்கு தண்ணீர் சேமித்து வைக்கும் பெரிய தண்ணீர் தொட்டி... அதில் ஓர் சிறு கசிவு வந்தது... அங்கே வேலை பார்த்தவர் .அட சின்ன கசிவு தானே மெதுவாக சரி செய்யலாம்ன்னு...விட்டு விட்டான்... என் பொண்டாட்டி தப்பியோட கல்யாணுத்துக்கு போகணும் எப்படியும் 

இரண்டு நாள்ல எதுவும் பெரிசா சேதம் ஆகிடாது என்று சொன்னான்...

புதிதாக வேலைக்கு சேர்ந்த பையன் சார் பேசாம நாம இன்னிக்கே இதை சரி பண்ணிடலான்னு சொன்னவுடனே...

பெரிய அதிகாரிக்கு கோபம் வந்திருச்சு...

நீ இப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கே.. இந்த புத்தி சொல்லுற வேலையை என்கிட்ட காட்டுனே ... உன் சீட்டை கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிச்சுறுவேன் .. ஜாக்கிரதை என்றான்...

பெரிய அதிகாரி இரண்டு நாள் கல்யாண வீட்டில் ஜாலி இருந்துட்டு ஊருக்குள் வந்தது தான் தாமதம்... எல்லோரும் அவரை சகட்டு மேனிக்கு திட்டினாங்க...

கூட்டத்தில் இருந்த வேலைக்காரனை கூப்பிட்டார்...

அப்போ தான் அவருக்கே விஷயம் தெரிச்சுது...முந்திய நாள் மழையில் தண்ணீர் தொட்டி உடைந்து விட்டது..அதற்கு காரணம் அந்த சிறு விரிசல் இடியின் வேகத்தை தாங்கமாட்டால் உடைப்பு கண்டது....

கல்யாண ஜாலியில் ஃபோனை சார்ஜ் வேற செய்யாத காரணத்தால் தகவலும் தெரியலை...

கலெக்டர் சில நேரங்களில் வந்தார்..காரணத்தை கேட்டார்... பெரிய அதிகாரி புதிய வேலைக்காரன் மீது பழி போட்டார்.. சார் இவன் தான் சரியான கவனிச்சு சொல்லியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்காது என்று... ஆனால் கலெக்டர் அந்த மேலதிகாரியை வேலை விட்டு நீக்கினார்...

இரண்டு நாளாக அவன் ஊரில் உள்ள பலரிடம் புலம்பியுள்ளான்...சில பெரிய மனிதரையும் பார்த்து பேசியுள்ளான்.. டேங்க் பற்றிய அவன் பேச்சை யாருக்கும் புரியவில்லை.. இப்போ அவன் சொன்னதை நினைத்து ..

கலெக்டர் அவனையே தண்ணீர் டேங்க் மேற்பார்வையாளர் என நியமித்தார்...

நீதி 1 - வேலை சிறிதோ பெரிதோ அந்த வேலையில் ஒருவர் காட்டும் ஆர்வமும் ஊக்கமும் அவசியம்...

நீதி 2 - பணமும் கூட சிறு தொகை தானே போனால் போகட்டும் என்று விடக்கூடாது.. ஏனெனில் நாம் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணம் ஓர் ரூபாயை கூட ஓர் கோடி போல நினைக்க வேண்டும்... ஏனெனில் 500 ரூபாய் ஹோட்டல் பில்லுக்கு 480 கொடுத்தால்... கஸ்டமர் உலகின் பெரும் பணக்காரர் என்பதற்காக யாரும் தள்ளுபடி தர மாட்டார்கள்....

மீதி 20 தந்தால் மட்டுமே மரியாதையாக நடத்துவார்கள்...

ஓர் சிறு துளி என்றாலும் பணத்தை மிகவும் பத்திரமாக சேமியுங்கள்...

.

.

டெய்சியின் காதல்

 விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் அதி அற்புதமான கதை...

வயதான முதியவருக்கும் நாய்க்குட்டிக்கும் நடக்கும் பாச போராட்டமே கதை களம்

டெய்சியின் காதல்...

Story on progress..

என்னங்க இப்போ நீங்க வரப்போறீங்களா இல்லையா...வந்து பாருங்க..வீட்டுல என்ன கூத்து நடக்குதுன்னு பாருங்க...

ஏண்டி படுத்துற... ராத்திரியிலே தான், என்னை  கொஞ்சுங்கன்னு சொல்லி படுத்துற... இப்போ பகல் நேரத்தில் கூடவா....

ராத்திரியிலே ஓரு பேச்சு, பகல்ல ஓரு பேச்சு...என்னை கொஞ்சும் போது ரொம்பவே கசந்துதா... கோபத்தில் பேசிய உமா...

ஓர் நாள் ஞாயிற்றுக்கிழமை லீவு கூட நிம்மதியா இருக்க விட மாட்டே போலையே....

ஆமாம், எப்பவுமே என்னையே மாத்திரமே குறை சொல்லுங்க... சீக்கிரமா எந்திருச்சு வாங்க...

மாமனார் ஆசையாக வாங்கி கொடுத்த கிங் சைஸ் கட்டிலில் படுத்து கிடந்தவன்...அருகே ஏ.சி காத்து இதமாக அடித்தது... சித்திரை வெயிலில் ஏசி போட்டா அந்த சுகமே தனி தான்...

எப்போ பாரு.. சுகம் சுகமுன்னு..... உங்களை கல்யாணம் பண்ணிண நாளில் இருந்தே என் உடம்பும் மனசும் வம்பா போச்சு....

சீக்கிரம் வந்து உங்க அப்பா சொல்லுற கதையை கேளூங்க....

"அப்பா ". என்ற வார்த்தை கேட்டவுடன் முருகனின் முகத்தில் எரிச்சல் வந்தது.... இன்னிக்கும் உன்னை அந்த ஆளூ நிம்மதியா இருக்க விட மாட்டாறா....

எழுந்திருந்து பல்லு கூட தேய்காமல் ஹாலுக்கு வந்தான்....

அங்கே ஓர் மஞ்சள் பையை எடுத்து மடியில் வைத்து கொண்டு சோபாவில் ஓர் ஓரமாக அமரந்திருந்தார்...

இப்போ உனக்கு என்ன பிரச்சினை... நேத்து தானே... ரேஷன் கடைக்கு போக ஜம்பது ரூபாய் கொடுத்தேன்.... அதுக்குள்ளே அது தீர்ந்து போச்சா....

என்னது ஜம்பது ரூபாயா.... அதுவும் ரேஷன் கடைக்கு...

அது வந்து ஏதோ சொல்ல வாயெடுத்தவரை வேண்டாம் என்று கையின் அசைவில் உத்தரவு போட்டான்...

ஏங்க டெய்லி சுவீட் கேட்க தெரியுதே . இந்த மூணு மாசத்துல எத்தனை தடவை... உங்களுக்கு நான் சம்பளமில்லாத......அலுப்புடன் தனது கழுத்தில் கிடந்த சக்கிலியை காட்டினாள்....

ஏண்டி இது இருபது பவுணு...என்றவனை...ஏதோ ஐம்பது மாதிரி பேசுறீங்க.. அவனுக்குள் உஷ்ணத்தை ஏற்றிவிட்டாள்...அவரை இன்னிக்கு வெளியே அனுப்புங்க...கண் சாடையில் அவனுக்கு வெறியை ஏற்றினாள்...

இன்பமான பகலுக்காக... வெயிலின் வேதனையில் பல நாட்களுக்கு தந்தையை அலைய விட்டவன்..  இன்றும் கூட அவரை வெளியே போக சொல்ல நினைத்தான்...

அதற்குள் அவரே பேச தொடங்கினார்...

அது வந்து முருகா... நான் ஓர் இரண்டு நாளூ தங்கச்சி வீட்டுலே போயி தங்கலாம்ன்னு நினைக்கிறேன்.. உங்க அம்மா போனதில் இருந்தே எனக்கு அவ நினைப்பாவே இருக்கு...அவ உங்க அம்மா சாயல். கனவில் மிதந்தவரை...

உங்களை ஒரு நாள் கடைக்கு போக சொன்னா...மறுநாள் இப்படி கதை சொல்லுறதே பொழப்பா போச்சு...

ஏன் மருமகளுக்கு வேலை செஞ்சா உங்க கெளரவம் குறைச்சு போகுமா???

அது எல்லாம் எங்கேயும் போக வேண்டாம்.. நாளைக்கு என் பைக் சர்வீஸ் விடணும்.. நீங்க வீட்டிலேயே தண்டச்சோறு தானே தின்னுறீங்க.... பொறுப்பா அந்த வேலையை பாருங்க....வர வர தோட்டத்து வேற சரியா தண்ணீர் பாச்சுறது இல்லையாம்....ஏதோ போனா போகுதுன்னு விட்டா.. ரொம்பவே படுத்துறீங்களே.... போங்க..போயி நேத்து நான் வாங்கிட்டு வந்ந தென்னங்கன்றை நட்டு வைங்க... எழுந்து பல் நேரம் கிளம்பினான்..

கடிகார மணி பத்தரை என்று காட்டியது...வேறு வழியின்றி தோட்டத்தில் சென்று மரத்தை நட்டினார்....

குளித்து விட்டு வந்தவன்... சமையலறையில் தனியாக இருந்த பொண்டாட்டியை கட்டிப்பிடித்து அவளின் கழுத்தில் முத்தமிட்டான்....

ஆமாம், இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை....

ஏன்டி காலையிலேயே புலம்புறே...

என்னது மணி 11.20 சாருக்கு நேத்து நைட்டு டூட்டி அதான் எல்லாமமறந்து போச்சு... அவனின் ஆசைகளை தனது அடித்தளமாக்கி வீட்டில் மகாராணியாக தன்னை நிலைநிறுத்தியவள்.... 

முத்தமிட்டு கொண்டிருந்தவன் முகத்தை ஜன்னல் வழியாக பார்க்க வைத்தாள்... பாருங்க.. நான் உங்களுக்கு பிடிக்குமேன்னு புடலங்காய் கூட்டு, பீட்ரூட் பொரியல், கார குழம்பு எல்லாம் கஷ்டப்பட்டு வைக்குறேன்....

உங்க அப்பா அழுது அழது நம்மை ......அவரு தான் உங்க தங்கச்சி வீட்டுக்கு போறேன்னு சொன்னாறே அவரை அனுப்பி தொலைக்க வேண்டி தானே... மதியம் அம்மா வருவதாக சொல்லி இருக்காங்க... உங்க பத்து நாள் லீவுக்கு நான் எப்படி எல்லாம் ப்ளான் போட்டு வைச்சேன்...

இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கிழத்தை நாம சுமக்கணும்.. பேசாம அவரை அங்கே அனுப்புங்க... பிறகு தினமும் பகலில் கூட உங்களுக்கு... சேலையை சரி சய்வது. போல தனது உள்ளாடையின் நிறத்தை காட்டினான்...

சொன்னா புரியணும். ...சிவ பூசை பண்ணும் போது கரடி மாதிரி எதுக்கு....

சிற்றின்ப ஆசையை அவனுக்குள் விதைத்தாள்.... துணிக்கடையில் ஆறாயிரம் சம்பள வேலையில் கிடைத்த முப்பது வருட வருமானத்தில் தீபாவளிக்கு எடுக்கும் இரண்டு செட் வேட்டி சட்டை தவிர பெரிதாக எதுவுமே செய்து கொள்ளாத தகப்பனின் பாசத்தை.. பொண்டாட்டியின் உள்ளாடை பின்னுக்கு தள்ளியது..... பத்து மணிக்கு மேல் வீட்டு வந்தவருக்கு பாதி நாள் கிடைத்தது பழைய சோறும் பொரிகடலை துவையலும்....

ஏன் செண்பகம், குழத்தைங்க இதையா சாப்பிட்டாங்க....

இல்லைங்க, அவங்களுக்கு ரவை தோசையும் பாசிப்பருப்பு சாம்பாரும் வைச்சு கொடுத்தேன்...இது நம்ம இரண்டு பேருக்கு மட்டும் தான்..ஓரே ஒரு தோசை இருக்கு தரட்டுமா...

தட்டில் ஆறிப்போன தோசை .. அதில் பாதியை எடுத்து மனைவி செண்பகத்தின் தட்டில் வைத்தார்...

நீயும் நல்லா சாப்பிடுன்னு சொன்னா.கேட்டா தானே... பெரிய குந்தி தேவின்னு நினைப்பு...

அறுபது வயது கிழவிக்கு வெட்கம் வந்தது...சும்மா பேசாம சாப்பிடுங்க‌..

மாப்பிள்ளைக்கு நம்ம பழையது சாப்பிடுறது தெரிச்சா மனசு கஷ்டப்படும்...

காலையிலேயே இட்லி தான் நம்ம எல்லாருக்கும் .. உங்களுக்கு பிடிச்ச புதினா சட்னி....வாசல்ல ஒருத்தன் கொண்டு வந்தான்.. இரண்டு கட்டு பத்து ரூபாய்... அவளின் பேச்சில் குடும்பத்தின் பொருளாதாரமே அடங்கிப்போனது....

மரத்தை நட்டியவரின் கண்களில் நீர் தழுப்பியது... படிச்சு முடிச்சிட்டு நாலு வருஷமா கவர்மெண்ட் வேலைக்கு தான் போவேன் அடம் பிடித்தவனை செண்பகம் கேள்வி கேட்டாள்...

ஏன்டா, முதல்ல ஏதாவது ஓரு வேலைக்கு போ... கவர்மெண்ட் வேலை கிடைக்கும் போது கிடைக்கட்டும்....

செண்பகம் நமக்கு இருக்கிறது ஓரே பையன்... பொண்ணை நல்ல படியா கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... பொறுமையா இரு.. நம்ம பையன் கவர்மெண்ட் வேலைக்கு போனா நமக்கு தானே பெருமை.... ஏன் பையன் எதுக்காகவும் கஷ்டப்படக் கூடாது....

ரொம்பவே செல்லம் கொடுக்காதீங்க.. ஓர் நாள் அவன் உங்களை தண்டச்சோறுன்னு சொன்னாலும் சொல்வான்.... நினைத்து பார்த்தவருக்கு உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை....

செண்பகம்.. செண்பகம்... வார்த்தைகள் கண்ணீருடன் போரிட்டன...

கதை தொடரும்....


கருவாச்சி...

கரியும் கூட

வெட்கத்தில் 

சிவந்து விடும்..

இந்த கருவாச்சியின்

முகத்தை கண்டால்...

ஆனால் கண்ணின் நிறமோ

வெள்ளை மீன் நடுவில்

துள்ளி விளையாடும்

மாநிற கோலிக்குண்டு...

செவ்வாயும் வெள்ளியும்

பட்டுச் சேலைகட்டி தங்கதாலியில்

மின்னுகிறாள்  முகத்திலே

எந்தவொரு சலனமுமில்லை

ஆயினும் சஞ்சலத்துடன்

வந்தவரை வாரியணைத்து

அருளென்னும் முத்தமிட்டு

அனுப்புகிறாள்... இந்த பாசக்கார

கருவாச்சி... ஊருக்கு எப்போதும்

இவளே தான் காவல் தெய்வம்...

பக்கத்தில் புருஷன் இருக்கும்

பெருமிதத்துடனே வந்தவருக்கு

எல்லாம் வாரி வழங்குகிறார்

அந்த புன்னகை சிரிப்புடன்

கற்சிலை மேனி கண்டே

மதிமயங்கி கண்ணீர் பெருகி...

தாயே நீயே துணை என்னும்

சரண கோஷம் கோவில் சுவரில்

பட்டு எதிரொலித்தது... ஆயினும்

அவளோ சிங்கப்பல் காட்டி

சினத்தையும் சீற்றத்தையும்

சிரித்தே அடக்குகிறாள்...

சிம்மத்தின் மீதே அமர்ந்து

சிறப்புடன் வாழுந்திடவே வழியை

மொழியாக தந்து விட்டாள்...

மன்னாதி மன்னவரின்....

வியாபாரத்தின் பெரு முதலைகளும்

பூனைக்குட்டி போல கைகட்டி

வாயை பொத்தி கரம் குவித்து

பக்தனாய் நடுங்குகின்றான்...

தாயே காப்பாத்து நீ துணையென்று.. 

லஞ்சத்திற்கு மயங்குவாளா????

லட்சியத்திற்கு துணைபுரியும்

லட்சுமியின் மறுவடிவம்..

இந்த பரமனின் வீட்டுக்காரி

என்றுமே பாசத்திற்கு மாத்திரமே மயங்கிடும் பரமனின் வீட்டுக்காரி... தூரத்தில் நடந்து வரும் ஏழை பக்தனின்

வரவிற்காக காத்திருந்து அவனையும் குபேரானாக மாற்றியே 

ஏழைக்கு உதவ வைத்தாள் 

இந்த பரமனின் பாசக்கார வீட்டுக்காரி

தேவியை கண்ணார கண்டு

வணங்கிடவே கூட்டத்தின் வரிசையில் நின்று கொண்டு புலம்புகிறான் 

அந்த ஏழை பக்தன்...

கையிலே காசுமில்லை...

நெஞ்சிலே சூதுவாது ஏதுமில்லை

படிப்பும் மண்டையில் இல்லை...

நடிப்போ வாழ்க்கையில் இல்லை...

உன்னை தானே நம்பி வாறேன்...

காசு பணம் கேட்கலையே...நீ

காட்டும் பாசம் போதும்...

வேஷக்கார உலகத்திலே...

நானும் கூட இப்போ பட்டினி விரதமிருந்து 

பக்தியின்னு சொல்லிகிட்டு

மடிப்பிச்சை ஏந்திய அந்த

காசுல தானே

வேஷத்தை கட்டி வாறேன்...

உன்மீது பாரம் போட்டு

நல்வாக்கு சொல்லிப்புட்டேன்

அத்தனையும் நடத்திவை 

எனது உயிரே மகமாயி...

எல்லாரையும் வாழவை...

நீ பேசும் பேச்சை எப்படித்தான்

புரிய வைப்பேன்...

சன்யாசி வேஷத்தை கலைச்சு

போட்டு பெரிய குடும்பியாக...

மாத்தி போட்டாயே...

வழிப்பாதை காட்டுவாயோ....

கடைக்கண் காட்டுவாயோ...

கண்ணீர் பெருக்குடனே....

பக்கத்தில் புதுபொண்டாட்டி

மஞ்சளுக்கு போட்டி போட்டு அவ

கழுத்திலே மஞ்சளில் தாலி.... 

தலைக்கு மேலே கைகூப்பி

விம்மி விம்மி அழுதுகொண்டே

உன்னை தானே நம்பி வந்தேன்...

சத்தமாய் கோஷமிட்டான்....

தாயே நீயே துணை...

கருவாச்சி ...தாயே...

கருவாகி வாயேன்...

வம்சம் வளர்ந்திடவே...

மங்களமும் பெருகிடவே...

விரைந்து நீ வந்திடம்மா...

பிறக்கும் போகும் குழந்தைக்கும்

ஏழு ஏழு தலைமுறைக்கும்

காவலாய் வந்திடம்மா....

ஏழைகளை காத்திடும்...

இனியவளே.... எங்க குல மகமாயி

காளி நீ தானே...

கனியமுதும் நீ தானே 

குலசை முத்தாரம்மா...

தூரத்தில் பாட்டு சத்தம்

ஓங்கியே ஓலித்தது...

சிவாஜியின் படப்பாடல்...

அம்பிகையே ஈஸ்வரியே 

எம்மை ஆளவந்து கோவில்

கொண்ட குங்குமகாரி...

காதல்

தந்தையும் தாயும் 
காட்டிய காதலை 
யாராலும் தரமுடியாது 
என்பதால் தான் 
உருவானது பழமொழி 
அன்னையும் பிதாவும் 
முன்னேறி தெய்வம் 

வேலைக்கு போகணும்...

 


ஏண்டா நீ வேலைக்கு போக மாட்ங்குறேன்னு...

எல்லோரும் என்னை கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க.

எனக்கு பயங்கரமா கோபம் வந்திருச்சு..

அதனால அம்மா ஆசையா தந்த மொறு மொறு நெய் தோசை திங்க மாட்டேன்னு அடம் பிடிச்சேன்...( முரட்டு சிங்கம். அதான் எங்க நயினா...முதுகு தோலை உரிச்சுட்டாரு)..

அக்கா கூட நம்ம தம்பியை அடிக்காதீங்கன்னு சொல்லவரலை....

இரு இரு..‌அக்கா பிசாசு நாளை நீ ஐஸ்கிரீம் கேளூ.. அப்போ காட்டுறேன் என் வீரத்தை..

மச்சான் விளையாட வர்றீயாடா...

டேய் இன்னிக்கு நான் விளையாட வரலைடா...

நான் ரொம்ப சோகமா இருக்கேன்...

மச்சான் உன் பிரென்ட் பம்புளிபாஸ் உன்னை கூப்பிடுறா...

அவளுக்கு சைக்கிள் தள்ளி விட ஆள் இல்லையாம்..

அந்த லூசை கூப்பிடு..நல்லாவே பல்லை காட்டிக்கிட்டே வந்து உதவி செய்வான், அப்படின்னு சொன்னாடா...

.. சீக்கிரம் போடா.. எப்படியும் ம்ம் ம்ம்... அந்த பொண்ணு உனக்கு தான்...


டேய் இருக்குடா இந்த கதை சொல்லி முடிச்சுட்டு விளையாட வாரேன்...

அட டென்ஷன் ஆகாதீங்க நண்பா...

நம்மளை ஓர் கதை கூட நிம்மதியா சொல்ல விடுறாங்கங்களா... எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் தான்..என்னைய மாதிரியே தான்..

ஆங்.. எங்க விட்டேன்.. ஆங்....

அப்புறம் அம்மா நாலு முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணீனாங்க..அதனால வீட்டை விட்டு போற முடிவை மாத்திக்கிட்டேன்....

இப்போ சொல்லு தங்கம் உனக்கு என்ன பிரச்சினை...

அட என்னை விட சின்ன பசங்க எல்லாம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறான்னுங்க....

நான் இன்னும் எத்தனை நாளைக்கு தான் அப்பா சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறது....

எனக்கு வெளியே தலை காட்ட முடியலை. ..

ஓரே shyயா இருக்கு...

அட இது தான் செல்லம் உன் கோபமா....

உன்னை யாராவது வேலைக்கு சேர்த்து கிட்டா அவங்களை போலீஸ் பிடிச்சு போயிரும்....

ஏம்மா அப்படி...

அட மக்கு பயலே.... குழந்தையை வேலை செய்ய சொல்லகூடாதுடா.....

உனக்கு சந்தேகமா இருந்தா போய் கண்ணாடியில் போய் உன் முகத்தை பாரு...அப்படின்னு.  சொன்னாங்க....

நானும் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன்...ரொம்பவே சின்ன பையன் மாதிரியே தான் இருக்கேன்..


அட நீங்க ஏன் இப்போ இவ்வளவு சீரியஸ்யா முறைக்குறீங்க...

இது ஓர் கற்பனை கதை தானே..இதுக்கே இப்படின்னா... இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ....பாக்கி இருக்கு....

வாழ்க்கையில் இருக்கிற கவலையை சிரித்து மாற்றுங்க..

அப்புறம் பாருங்க..வாழ்க்கை சும்மா சூப்பரா இருக்கும்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நண்பா..

கவியின் காதல்

 பொறுப்பு துறப்பு....

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

இதில் வரும் சம்பவங்கள் யாராவது ஒருவரின் வாழ்வில் நடந்திருந்தால்.. அதற்கு கதாசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்....

இது முற்றிலும் ஓர் கற்பனை கதையை ...

.

.

கவியின் காதல்...

.

.

.

நீயும் யாரையாவது லவ் பண்ணவேண்டியது தானடா..., அக்கறையுடன்கேட்ட மேனேஜர் கவி...

அட அதுக்கெல்லாம் நம்மாளூக்கு திறமை ஏது.... நக்கலாக சிரித்த T.L. குமார்..

அட, ஏதாவது காதல் கவிதை எழுதி.உனக்கு தெரிஞ்ச பொண்ணு கிட்ட கொடுடா....

அதை படிச்சுட்டு உன்கிட்ட வந்துயாராவது ப்ரமோஷன் பண்ணிணா...

அந்த லவ் லெட்டர் உனக்காகவே தான் எழுதினதுன்னு பொய் சொல்லு.... மேனேஜர் கவியின் ஜடியா நன்றாகவே இருந்தது...

ஆனால் நம்ம ஹீரோ தான் சரியான வெங்காயம் ஆச்சே.... அவனுக்கு புராஜெக்ட் புரியவே இரண்டு மாசம் ஆச்சு...பிறகு ஒவ்வொரு வாரமும் ஸ்டார் அவார்ட் வாங்கினது வேற கதை...

அது எப்படி என்னால் பொய் சொல்ல முடியும்...

நீங்க தானே பல தடவை சொன்னீங்க.. உனக்கு பொய்யும் பேச தெரியாது..உண்மை மறைக்கவும் தெரியாது.. நல்லாவே கோபப்பட மட்டும் தெரியுதுன்னு..

கவி பார்த்தீங்களா, பையனுக்கு லவ் பண்ண ஐடியா கொடுத்தா.. இவன் நமக்கே ஐடியா சொல்லுவான் போலயே....

நான் ஏதும் தப்பா பேசலையே....கவி அடிக்கடி சொல்லி என்னை அப்படி தானே கிண்டல் பண்ணுவாரு....

ஓ.அப்போ நாங்க உன்னை கிண்டல் பண்ணுறது தெரிஞ்சும் அமைதியா இருந்தே அப்படித்தானே.... அலெக்ஸ் தன் பங்கிற்கு எண்ணெய் ஊற்றினான்...

டேய், டேய்.. நீங்க எல்லாம் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க... அவனுக்கு நான் சொல்லுறது புரியாம போயிட போகுது...

.

.

டேய் காமு ( காமேஸ்வரன் அவனை அப்படித்தான் எல்லோரும் ஆபிஸ்ல கூப்பிடுவாங்க)  என் காதல் கதையை உனக்கு ஓர் உதாரணமா சொல்லுறேன் கேளூ...

அப்போ நான் இரண்டும் கேட்ட வயசுல இருந்தேன்....

டேய் அலெக்ஸ், இப்பவும் அப்படி தானே தான் இவன் இருக்கான்...T.L குமாரின் மெதுவாக பேசிய வார்த்தைகளை கவனித்துவிட்ட காமு...

தொலைச்சு கட்டிருவேன்... விரல்களால் சைகை செய்த குமார்...

இது எதுவுமே புரியாமல் தனது கடந்த கால காதல் கதை சொல்வதில் ஆர்வமாக இருந்த கவி...

நான் நாலு மாசமா ஓரு பொண்ணை விடாம துரத்துன... கடைசில இப்போ இருக்காளே என் அருமை பொண்டாட்டி அவளை கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு....

.

எனக்கு ஒண்ணுமே புரியலையே தலை சொரிந்த காமு...

அண்ணே, அந்த வென்னீர் தண்ணியை எடுங்க... ஆபிஸ்ல தான் முந்திரி கொட்டை மாதிரி கேள்வி கேட்குறே.... டீக்கடையில் கூடவா....கதை சொல்லி முடிப்பதற்குள் இவனுக்கு அவசரத்தை பார்த்தீயா....குமாரு....

நக்கலாக தன்னை முன்னிலைபடுத்திய மேனேஜர்....

அவனை பத்தி உங்களுக்கு தான் கவி நல்லா தெரியும்.. எங்களுக்கு எல்லாம் அவனை புரிஞ்சுக்கவே முடியாது... நேரம் பார்த்து கவியின் வார்த்தைகளை வைத்தே அவரை மடக்கிய...T.L...

தல கலக்கிட்ட, அலெக்ஸ் குமாரின் காதை கடித்தான்....

இப்போ பாரு, அலெக்ஸ்...நம்ம காமுவை கவி வைச்சு செய்வான்...காதை போத்திக்கோ.. இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு கவி அட்வைஸ் மழை பொழியுவான் பாரு...

இது வரை சென்னையிலே கூட அப்படி ஒரு மழை பெய்து இருக்காது... இருவரும் மிகவும் மெலிதாகவே பேசினாலும் காமு வின் பாம்பு காதில் இவர் பேசியது அனைத்தும் விழுந்தன..

எப்படி இவர்களால் முகத்தில் ஓரு மாதிரியும் முதுகிற்கு பின்னால் வேறு மாதிரியாகவும் பேச முடிகிறது என்ற படி யோசித்த காமேஸ்வரன்...

பாருங்க கவி, நீங்க அவன் மேல் எவ்வளவு அக்கறை பட்டு பேசுறீங்க அவன் ஏதாவது சட்டை பண்ணுறானா.... குமார்...

ப்ளீஸ்டா டீ கடையிலே கூட என்னை ஏண்டா கடுப்படிக்க வைக்கீங்க....

அட, அது இல்லை கவி உங்க பேச்சுக்கு காமு, மதிப்பு குடுக்கலை அதைத் தான் குமார் சொல்லுறாரு.... அலெக்ஸ் உதவி செய்தான்....

.

.

அலெக்ஸ் காமு என் கூடப் பிறக்காத தம்பி அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், கொஞ்ச சும்மா இருங்க... நான் சொன்னதை அவன் யோசிக்கிறான்..... அப்படித்தானே காமு....

.

என்ன பேசுகிறோம்.. என்பது தெரியாமல் பேசிய கவியின் பேச்சுக்கு தலையாட்டிய காமு....

.

.

குமாரு.. இது கொஞ்சம் ஓவரா இல்ல.. ஓர் வார்த்தை கூட இந்த பரதேசி பய சொல்லலை.அதுக்குள்ளேயே அவனும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுறான்.....

இப்போ புரியுதா அலெக்ஸ் எதுக்கு கவி எப்போ பார்த்தாலும் காமு..காமு... புகழ்ந்து பேசுறான்னு.... நான் தான் தலையாட்டி பொம்மைன்னு நினைச்சேன்.இவன் என்னையவே தூக்கி சாப்பிட்டு விட்டான்டா....

கேட்டா என்ன சொல்லுவான்... எனக்கு ப்ரமோஷன் வேணும், அதுக்கு தான் நான் இப்படி எது சொன்னாலும் சரி சொல்லுறேன்... ஆனால் நான் நினைச்ச மாதிரி தான் எந்த வேலையும் பண்ணுவேன் அப்படின்னு சொன்னான் தெரியுமா....

வாயடைத்து போன அலெக்ஸ்... கிராமத்துகாரன் நினைச்சேன் இவன் உண்மையிலேயே பெரிய ஆளூதான்....

கவி நீங்க உங்க கதை சொல்லுங்க....காமு ஏதோ கட்டளையிட்டது போல பேசினான்....


ஆங்.எதுல விட்டேன்...லவ் லெட்டர்.... தானே...

ஆமாம் கவி....

அலெக்ஸ், குமார் மற்றும் இன்னொருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்...

அப்போ எங்க வீடு பெசன்ட் நகர் பக்கத்தில் இருந்தது...

நான் ஒருத்திக்கு லவ் லெட்டர் குடுத்து விட்டு ஒரு வாரம் காத்திருந்தேன்... லெட்டரை வாங்கும் போதே அவள் சொன்னா.. பத்து நாள் அலைய விடுவேன்.. அதுக்கு அப்புறம் உனக்கு நீயே எதிர்பார்க்காத அளவுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கு அப்படின்னு சொன்னா....

டேய் அலெக்ஸ் இப்போ...செமி கதையை நிப்பாட்டி விட்டு பூரிச்சுதா அப்படின்னு கேட்பான் அதுக்கு காமு நல்லா புரிஞ்சதுன்னு தலையாட்டுவான் பாரு என்றான் குமார்...

அதை போல நடக்கவும் ஆச்சரியமாக பார்த்த அலெக்ஸிடம்...

டேய் இதை பார்த்து பார்த்து எனக்கு வயித்தெரிச்சல் தாங்கலைடா....

போன வாரம் டீம் லீடர் Feedback reviewல இந்த காமு பய கூட என் compareபண்ணி பேசுறான்டா....

கவி, என்ன சொன்னான் தெரியுமா...நீ இப்பவே வேலையை ராஜினாமா பண்ணினா, நாளை சாயங்காலத்துல இருந்து காமுவைT.L. ஆக்கி உன்னை திறமை இல்லாதவன் போல காட்டி விடுவேன்... என் திறமை பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுமேன்னு சவால் விடுறான்டா.... குமாரின் கண்கலங்கியது....

கவலைபடாதீங்க குமார் இந்த காமு பயலே ஆபிஸ் விட்டு துரத்தினா தான் நமக்கு நிம்மதி...

ஏறிட்டு பார்த்த குமாரிடம் same blooy, same story என்று சிரித்தான்.. சரி சரி கதையை கேளூ தீடீரென நம்மகிட்ட கிராஸ் கேள்வி கேட்டுட போனான்...

லூசு செஞ்சாலும் செய்யும்....

ஓரு வாரம் கழிச்சு பார்த்தா.....விஜிலா வந்தா.... எனக்கு ஒண்ணுமே புரியலை....

எப்பவுமே அவங்க கூட்டமா போனது எனக்கு வசதியா போச்சு... இவளும் என்னை லவ் பண்ணுறதா சொன்னா...பிறகு என்ன அடிக்கடி பீச்ல சந்திச்சு லவ் வளர்ந்து. இப்போ ...கதை முடித்தான்...

அப்போ நீங்க உங்க மனைவிக்கு லவ் லெட்டர் கொடுக்கலையா....

டேய் குமார், இவன் இப்பவும் சந்தேகம் கேட்டு கொல்லுறானேடா...

கவி, கொஞ்சம் இருங்க அவனுக்கு நான் புரிய வைக்கிறேன்....

அடேய் காமு, உங்க அண்ணன்.. லவ் பண்ணின அண்ணி வேற, இப்போ கல்யாணம் பண்ணிருக்கிற அண்ணி வேற..... இப்போ புரியுதா...

இந்த விஷயம் உங்க மனைவிக்கு தெரியுமா...

லூசு மாங்கான்.... நான் இதுவரை நாலு பேர்கிட்ட லவ் லெட்டர் கொடுத்து இருக்கேன்....

இப்போ கட்டியிருக்கிற பொண்டாட்டி என்னோட அஞ்சாவது லவ்வர் போதுமா......

கவி ஓரு சந்தேகங.. ஓரு வேளை இவங்க உங்க லவ் ஏதுக்காம இருந்தா என்ன செஞ்சு இரூப்பீங்க....

ஆறாவதாக இன்னொருத்திகிட்ட லெட்டர் கொடுத்து இருப்பேன்... இயல்பாக சொன்ன கவி....

இது மனசாட்சி படி தப்பு, நீங்க உங்க மனைவிகிட்ட உண்மையை சொல்லியே ஆகணும் இல்லாட்டி....

மேனேஜர் கண்கள் சிவந்தது.இது வரை நீ இந்த பத்து வருஷத்தில் எத்தனை கம்பெனிகளில் வேலை பார்த்த இருப்பே...

யோசித்து பார்த்த காமு சொன்னான், மூன்று கம்பெனி ஒவ்வொரு இடத்திலும் இரண்டு வருடங்கள் கணக்கு....

இதை மாதிரி தான்டா நானும்.நம்பிக்கையோட தான் லெட்டர் கொடுத்தேன்... பெரிசா பேச வந்துட்டான்....

இவனுக்கு எல்லாம் நல்லது பண்ணவேண்டும் என்று நினைச்சேன் பாரு என் புத்தியை..........

நிலைமை மோசமாவதை உணர்ந்த குமார் , டேய் காமு நீ கிளம்பு என்றார்

.

.

அவன் அவரின் பேச்சை அப்போது அப்படியே கேட்டு நகர்ந்தான்.....

காமு, போன சில நிமிடங்களுக்கு பிறகு கவி சொன்னார்.... குமார் நாளை வந்தவுடனே இவன் மேலே சில டேட்டாவை அடுத்த கம்பெனிக்கு அனுப்புறதா..நீ ஓர் கேஸ் H.R கிட்ட மெயில் அனுப்பு.........

மெளனமாக இருந்த குமார்... ஏன் நீ அனுப்பமாட்டே அப்படிதானே...

இல்ல, அது வந்து இந்த சின்ன விஷயத்துக்கு போயி அவன் கேரியரை வம்பாக்குறது சரியில்லை....

எது சாதாரண விஷயம்.அடுத்த மாசம் நம்ம ஆபிஸ்ல ஃபேமிலி பக்தன் இருக்கு... அப்போ இவன் மட்டும் இப்போ நடந்த விஷயத்தை என் பொண்டாட்டிகிட்ட சொல்லி விட்டால் என் ஃபேமிலி லைஃப் யோசித்து பாரு....

காமு, இந்த விஷயத்தில் அப்படி எல்லாம் செய்ய மாட்டான்... எனக்கு அவனை நல்லா தெரியும் என்று அவனுக்காக பரிந்துரை செய்த குமார்....

அலெக்ஸ் கண்களில் வியப்பு மேலிட்டது... உண்மையில் குமார்க்கு காமு மேல பாசம் அதான் இப்படி நடந்துகிறாரு.... இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் .....

நீங்க சொல்லுவதை நான் செய்றேன்...கவி....

எதுவும் பேசமுடியாமல் தவித்தT.L...

கூட்டம் கலைந்து வீட்டிற்கு சென்றனர்....

மனதில் பாரத்தை வைத்து கொண்டு தூங்க முடியாமல் தவித்த குமார்... எப்படியாவது அந்த அப்பாவியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து போன் செய்தார்...

ஆண்டவா.. இந்த லூசு போனை எடுத்து பேசணுமே....

காமு எடுத்தான்.... நான் சொன்னா, நீ கேப்பீயா...

சொல்லுங்க குமார்... உங்க நல்ல மனசு எனக்கு புரியும்..உங்க பெயரை சொல்லி எல்லோரையும் கஷ்டப்படுத்துறாங்க அதைதான் என்னால் தாங்க முடியலை ராம்.....

அவனின் வீட்டில் கூப்பிடும் செல்ல பெயரை சொன்னவுடன் குமாரின் கண்கலங்கியது.. இவ்வளவு நல்லவனுக்கு எதுக்கு ஆண்டவா இப்படி ஓர் கஷ்டம்....

சில நிமிட மெளனம்....

டேய் காமு.. திங்கட்கிழமை நீ வந்தவுடனே வேலையை ராஜினாமா பண்ணு.... இதுக்கு மேலே எதுவும் கேட்காதே... எல்லாம் உன் நன்மைக்கு தான்...

சாரி , என்னை மன்னிச்சுடுங்க... என்னால் இந்த கம்பெனி வேலை விட்டு போக விருப்பமில்லை..ஏன்னா பத்து வருஷ போராட்டமான வாழ்க்கைக்கு பிறகு கிடைச்ச வேலை இது...... மேலும் உங்களை மாதிரி என்னை புரிஞ்சுகிட்ட டீம் இனிமேல் கிடைக்குமா தெரியாது...உங்களை கூட நான் திட்டி இருக்கேன்.. ஆனால் நீங்க T.L அப்படின்னு ஈகோ பார்க்கவே இல்லை...

உண்மையா சொன்ன கவி என்னை நம்பி, தம்பின்னு எல்லோருக்கும் முன்னால் சொல்லியே ஏமாத்துறான்.... ஆனால் நீங்களும் கிருஷ்ணாவும் அப்படி நடிக்க தெரியா நல்ல மனசோட பழகுறீங்க.எனக்கு இது போதும் ராம்....

டேய் காமு நீ ரொம்பவே புத்திசால, ஆனால் உன் கேரியரை பாழக்குற மாதிரி யாராவது எதுவும் பண்ணிட்டா.. பிறகு நீ எங்கேயும் ஆன்லைன் வேலைக்கு போகவே முடியாது... உன் கனவு அது தானேடா.....

நான் கிளம்பின பிறகு என் மேல கேஸ் கொடுக்க சொன்னதை நினைச்சு பீல் பண்ணாதீங்க குமார்... எனக்கு எல்லாம் தெரியும்....

குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.. நம்முடன் இருந்தது நாலு பேர் இதில் இதில் எப்படி....

எனக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்காதீங்க....

.

.

அடுத்த வாரம் என்னை under performer அப்படின்னு முத்திரை குத்த சில வேலை தொடங்கியாச்சு.... ஆனால் நான் கூப்பிடுற கருப்பண்ணசாமி எனக்கு துணை செஞ்சு காப்பாத்தும் நீங்க கவலையே படாம தூங்குங்க....

.

.

போனை வைத்தான்... குமாருக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது... இவன் கிளம்பி போன பிறகு பேசிய விஷயங்களை எப்படி நேரில் பார்த்தது மாதிரியே சொல்லுறான்....

.

.

திங்கட்கிழமை வேலைக்கு வந்த காமு முகத்தில் ஓர் சந்தோஷம் தெரிந்தது... டேய் உனக்கு எப்படி எல்லாம் தெரிஞ்சது...டீகுடிக்க அழைத்து சென்று கேட்டான்....

உங்க ஆள என்மேல் பொய் கேஸீ போடுவான்னு எங்க கருப்பண்ணசாமி இரண்டு மாசம் முன்னாடியே சொல்லிருச்சு....

பிறகு எதுக்குடா.நீ வேலை பார்குறே.வேற இடத்திற்கு போக வேண்டி தானே... இல்லை கருப்பு என்னை பிரமோஷன் பேப்பர் கைக்கு வந்து பிறகு தான் போக சொல்லி இருக்காரு....

உனக்கு எதுவும் ஆகவிட்டால்...

பிரச்சினை சமாளிக்க என்னால முடியாதுன்னு தான்.எனக்கு துணைக்கு சாமி ஆளூ அனுப்புறதா சொல்லச்சு.....

சரியான கிராமத்துகாரன் போல பேசிய காமேஸ்வரன் முகத்தின் ஒளியும் பேச்சின் கம்பீரமும் தான் .பேசுவது வேறு ஓர் நபரிடம் என்ற உணர்வை கொடுத்தது....

தோரணையாக பேசினான், நான் சீக்கிரம் வேலையை விட்டு விட்டு போய்விடுவேன்.ஆனால் அதுக்கு பிறகு அவனால் உனக்கு எந்த இடைஞ்சலும் வராது....

உன் வீட்டு சாஸ்தா உனக்கு துணையா இருப்பாரு.......

இன்னும் ஓர் விஷயம் தெரிஞ்சுக்கோ.....கவி உண்மையில் காதலிச்ச பொண்ணு வேற...பெயரை சொன்னவுடன் ஆடித்தான் போனார்....

ஸ்டார் ஹோட்டலில் தன்னிடம் மட்டுமே சொன்ன ரகசிய பெயர்....இது எனக்கு மூணு மாசம் முன்னாடி தான் தெரியும்....

குமாரின் வாய் முணுமுணுப்பு செய்தது.... கவியின்  காதல்... உண்மையா...போலியானதா....

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...