வாட்ச்மென் கேசவன்

 நான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல மேடை ஏறி முழக்கம் செய்ய.. உங்களைப் போலவே ஓர் சராசரி மனிதன்.... கள்ளச்சாராயம் அருந்தி இறந்த குடும்பத்தை நினைத்து பாருங்கள் .. அவர்களின் இழப்பை யாரால் ஈடு செய்ய முடியும்... மது அருந்தி விட்டு வண்டியில் வேகமாக வந்து..மது என்பதை கனவிலும் தொட்டு பார்க்காத அந்த முதியவர் மீது மோதிவிட்டு போதையில் சாலையோரத்தில் புரள்கிறான்... அந்த வயதானவர் வீட்டில் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க கூடாது என்று இரவு நேர காவலாளி வேலைக்கு சென்று வருபவர்.

மருமகள் மாமியார் இடையே சிறு சண்டை வந்த உடனடியாக தனிக்குடித்தனம் சென்றவர்...

என்னங்க, ஊர் உலகத்துல எல்லாரும் மகனை தான் தனிக்குடித்தனம் அனுப்புவாங்க... உங்களுக்கு என்ன கிறுக்கு புடிச்சு இருக்கா என்ற மனைவி பரிமளா..

உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாதுடீ... என் அனுபவத்தை சொன்னா உனக்கு புரியாது.

சில மாதங்களுக்கு பிறகு தெருவில் சென்று தண்ணீர் எடுக்க சென்ற போது, வயது முதிர்வு காரணமாக விழ இருந்தவளை தாங்கி பிடித்தாள் செல்வி.

அம்மா நீங்க ஏன் இவ்வளவு கஷ்டபடுறீங்க என்கிட்ட சொன்னா நான் தண்ணி எடுத்து கொடுக்கிறேன்..

உரிமையுடன் வீட்டின் அடுப்பங்கரை வந்து உதவி செய்து விட்டு போனவள்.

போகும் போது மறக்காமல் சொல்லி விட்டு போனாள்... உங்கள மாதிரி நல்ல மாமியார் எல்லாருக்கும் கிடைக்க மாட்டாங்க..

ஏன்ம்மா எதுக்காக இப்படி சொல்லுறே..

ஆம்ம்மா, பெத்த மகனை தனி குடித்தனம் போக சொல்லும் இந்த காலத்தில், உங்க புள்ளை சந்தோஷத்துக்காக உழைச்சு  கட்டிய வீட்டை மகன் மருமகள் நல்லா இருந்தா போதும், வயசான காலத்துல அவங்க நல்லா இருக்கிற விஷயத்தை கேட்டாலே போதும் என்று சொல்லுற மனச  யாருக்கு வரும்..

அவள் போன பிறகு பரிமளா யோசித்துப் பார்த்தாள். யாரிடமும் பேசாத அவளின் குணம், இருக்கும் இடத்தை கூட யாருக்கும் சொல்லாமல் அமைதி காக்கும் கணவன்..

ஆம் அவரின் செயலில் உள்ள அர்த்தம் உணர்ந்த போது, மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.

திருமணம் என்பது வெறும் குழந்தை பணம் வீடு என்பதல்ல. தன்னை நம்பி வந்தவளை யாரும் குறையாக பேசிவிடக்கூடாது என்று சமயோசிதமாக யோசித்து செயல்பட்ட கேசவன்.

இன்று கூட வாட்ச்மேன் வேலைக்கு போய்.. வாசலில் மணிஅடிக்கும் சத்தம் கேட்டது..

கதை தொடரும்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...