Small boy emotional story
பொறுப்பு துறப்பு
(கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே
யாராவது ஒருவரின் வாழ்வில் இதை போன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால் அது தற்செயலானதே..
அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்)
உங்க பையன் டீச்சர் பாத்ரூம்
போகும் போது பின்னாடியே போய்
எட்டிப் பார்த்து இருக்கான்..இனிமே இவனை எங்க
ஸ்கூலில் படிக்க வைச்சா எங்களுக்கு
தான் கெட்ட பேரு என்ற
நிர்வாகம்..
சொற்களை
கேட்ட மாத்திரமே.நாலு பேர் சுற்றி
இருக்கிறார்களே என்று கூட பாராமல்
அந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை
அடித்து நொறுக்கினாள் அவனை பத்து மாதம்
சுமந்தவள்..
Aunty - மாதவனை
அடிக்காதீங்க அவன் எந்த தப்புமே
செய்யலை.. அவனுக்கு எதையுமே ஓழுங்கா படிக்கவும்
தெரியலை பேசவும் தெரியலை..ஆனா
நாம எதையாவது மனசுல நினைச்சா அதை
அப்படியே பேசி நீ இதை
தானே இப்போ நினைச்சே என்கிறான்...
மேடம் பாருங்க முளைச்சு மூணு
இலை விடலை அதுக்குள்ளே இவனுக்கு
லவ்வு கேட்குது..
அவன் கிளாஸ்ல நான் பாடம்
நடத்தும் போதும் கூட அவன்
அந்த பொண்ணையே தான் பார்த்துவிட்டு இருப்பான்
மேடம்..
குறை சொன்ன கிளாஸ் டீச்சர்.
ஏய் நீ தூர போயிடு
என்னோட மகனை கண்டிகிற அதிகாரம்
எனக்கு இருக்கு..உன்னை உங்க அப்பாகிட்ட
சொல்லவா...
நீங்க எங்க வீட்டுக்கே வந்து
கூட சொல்லுங்க.ஆனா எங்க அப்பா
நம்ப மாட்டாரூ..ஏன்னா அவருக்கு என்மேல்
அவ்வளவு பாசம் நான் தப்பே
பன்னியிருக்க மாட்டேன் என்று அவருக்கு தெரியும்..
அவனே
பக்கத்து கிளாஸ் வாத்தியார் நாதன் தர தரவென்று இழுத்து
ன்றார்.. மேடம் எனக்கு எல்லோரும்
ஓழுக்கமா இருக்கணும் அது தான் முக்கியம்..
டேய் இன்னும் என்னடா அமைதியா
இருக்கே..வாயில கொழுகட்டையா இருக்கு..
மேடம் அவன் டவுசர் பாக்கெட்டை
தேடிப் பாருங்க.. அவனுக்கு திருடன் பட்டமும் சேர்த்து
கொடுங்க.. இளிச்சவாய் பய எல்லாத்தையும் தாங்குவான்..ஏன்னா நேத்து சண்டே
வீட்டில சண்டைன்னு பக்கத்துல சர்ச்-ல இயேசுநாதர்
கதை கேட்டு மதிய கேக்
வாங்கி சாப்பிட்டான்.. பாருங்க அதான் அவரை
மாதிரியே எல்லா கஷடத்தை தாங்குவான்..
Aunty - இன்னிக்கு இவனை அடிக்கிற உங்களால
உங்க புருஷன் கிட்ட வீரத்தை
காட்ட வேண்டி தானே.. வயசுக்கு
மீறிய பேச்சை பேசியவளை அனைவருமே
அதிரச்சியாக பார்த்தனர்..
இப்போது
ராதாவை விட்டு விலகி அனைவருமே
அவனை சூழ்ந்து நின்று முறைந்தனர்
அவனோ என் பக்கத்தில் யாரும்
வராதீங்க என மேஜை மீது
இருந்த பிரம்பை எடுத்த அனைவரையும்
அடித்து விடுவது போல சுற்றினான்..
டேய் லூசூ புயலே மாதவா இந்த பைத்தியங்களுக்கு உன்னோட அன்பு புரியாதுடா...உன் மீது பழி
சுமத்துவங்க செஞ்ச தப்பை கூட
யாருக்கு சொல்லிட கூடாதுன்னு நினைக்கிற
நல்ல மனசு இங்கே இருக்கிற
எவனுக்குமே புரியாது...
மாதவன்
அருகே சென்றால் அடித்து விடுவான் என்று
பயந்த படி அனைவரும் இருக்க.
சின்னஞ்சிறு
தேவதையோ எந்த விதமான பதட்டமோ
படபடப்போ இல்லாமல் அவன் கையில் இருந்த
பிரம்பை வாங்கி தூக்கி வீசினாள்..
அது தெருவில் சென்று விழுந்தது..
ப்ளீஸ்
வேண்டாம் யாரையும் காட்டிக் கொடுக்காதே..அவங்க ரொம்ப பாவம்..என்னடா பாவம் அவனின்
டவுசர் பாக்கெட்டில் இருந்து தூக்கி ஏறிந்தாள்..
அதில் இரண்டு தங்க வளையலும்..நாதன். அடிக்கடி
பேசி பெருமைபடும் "அவரின் 50,000 மதிப்புள்ள கல்யாண
வாட்ச் சிதறி உடைந்தது..
இப்போவாச்சு சொல்லி தொலையேன்டா...இதை மறந்து வைச்சுட்டு போனதை கொடுக்கத்தான் பின்னாடியே போனேன்..ஆனா....
மாதவனின் அம்மா அவனை என்னை மன்னிச்சிடு என்ற கேட்டாள்.. அனைவரின் முன்பும் சற்று நேரத்துக்கு முன்பு அனைவரும் பார்த்த நோக்கம் முற்றிலும் மாறியிருந்தது...
டேய் வாடா நாம போகலாம்...... ஹீரோவின் கையை பிடித்து இழுத்து கொண்டு போனாள் அந்த ஹீரோயின்...
இருவரும் தள்ளி சென்று தனிமையில் அமர்ந்தனர்...
அவனோ அந்த வேப்ப மரத்தை வெறித்த படி பார்த்துக் கொண்டே இருந்தான்...
டேய் நீ என்னதுடா பார்க்கிறே எனக்கும் காட்டேன்.... இங்கே வா அவன் காட்டிய திசையில் கன்னத்தோடு கன்னம் உரசிய படி பார்த்தாள் அங்கே ஓர் சிறு அணில் அருகில் புறா அமர்ந்திருந்தது....
ஆம் அவர்களுள் எந்ந பேதமும் இல்லை...
வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டு அணில் பதறி ஓடியது..
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த காவேரியின் அப்பா ஓர் தலைமை ஆசிரியர் அறை வாசலில் கூட்டமாக இருக்கிறது என புரியாமல் யோசித்தார்..
அனைவரும் அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு சங்கோஜமாக தெளிந்தனர்
ஏன்ம்மா எதுவும் பிரச்சினையா ...அது வந்து சார்....தலைமை ஆசிரியர் பேச தொடங்க இருந்த நேரத்தில்.. காவேரி சொன்னாள்...
அப்பா உனக்கு சுத்தமான அறிவே இல்லை... உன்னோட கார் ஹாரன் சத்தம் கேட்டு அந்த அணில் எப்படி பதறிப்போச்சு தெரியுமா...
காவேரியும் மாதவனின் கையை பிடித்து கொண்டு ஏதோ தேவலோகத்தில் தேவதை போல் நடந்து வந்தவள்...
அந்த இருவரையும் பார்த்து உத்தரவு போல் சொன்னாள்.. சார் மேடம் ஸ்கூல் விட்டாச்சு நீங்க வீட்டுக்கு போகலாம் .. நாளைக்கு பெரிய கிளாஸ் பரீட்சை இருக்கு... சீக்கிரமா வந்திடுங்க...
ஆன்ட்டி நாளைக்கு எங்களுக்கு லீவு தான் மாதவனை எங்க வீட்டுக்கு விளையாட அனுப்புவீங்களா....கெஞ்சுவது போல் கேட்டாள்...
மாதவனின் அம்மா தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாள்...
சரிடா நாம நாளைக்கு பார்க்கலாம்.. உனக்கு பிடிச்ச பெங்களூர் கத்திரிக்காய் பச்சடியும் மோர் குழம்பும் சரிதானா அப்பா..
அவளின் கன்னத்தை கிள்ளி அவனுக்கு டாட்டா சொல்லு நாம போகலாம் என்றார்...
எல்லோரும் ஓருவருயோருவர் வியப்பாக பார்த்தபடி இருந்தனர்..
தூரத்தில் காவேரி தன் அப்பாவிடம் பேசும் சத்தம் அனைவரின் காதுகளிலும் விழுந்தது... அப்பா நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே தப்பு பண்ணியவனை மன்னிசுட்டா அதை விட பெரிய தண்டனையை யாராலும் அவனுக்கு கொடுக்கவே முடியாது அப்படின்னு அதை தான் நானும் இன்னிக்கு செஞ்சேன் தெரியுமா என்றாள்...
நீ தான் டீ என்னோட வாரிசு எனக்கு பிறகு இந்த ஸ்கூலுக்கு நீ தான் correspondence..நீ என்ன செஞ்சாலும் அது நம்ம ஸ்கூல் நல்ல பெயரோடு இருக்கு என்று தான் செய்வே எனக்கு நல்லா தெரியும்...என்ற படி அவளை கொஞ்சினாள்...
போதும் போதும் இப்பவே எல்லா பாப்பாவுக்கு கொடுக்காதே... வீட்டுக்கு போன பிறகும் இந்தா பாப்பாவுக்கு கொடுக்க கொஞ்சம் மிச்சம் வை...கேலி பேசிய காவேரியை....எங்க அம்மாவே தான் நீ என்ற அவளை பாராட்டினார்... இன்றைய correspondence...
*******முற்றும்*****