காதலிக்கும் அப்பா

 அவளுக்கு என்மீது

கொள்ளை ஆசை

எனக்கோ அவளின்

மீதான எல்லையற்ற காதல் - 

நல்ல விஷயத்தை கூட 

இழித்தும் திரித்தும் பேசும் 

இயந்திர உலகத்தில் நாங்கள் 

இருவரும் பிறந்து காரணமாக...

பாசத்தை கூட தள்ளி நின்றே தேடுகிறோம்.. இன்றும் கூட 

அவளின் நிழலை கூட 

தொடாமல் தள்ளி நின்றே ரசிக்கிறேன் அவள் பெறும் வெற்றிகளை..

அவளோ நீ என் பக்கத்தில் வந்து நில்லேன் என்றே தவிக்கிறாள்.

பதவியும் பணமும் வந்தவுடன்

ஓடிக்கொள்ளும் உறவா இது..

என்னை அவளும் அவளை

நானும் தாலாட்டிய நாட்கள் தான்

எத்தனை எத்தனையோ.

உன் வலி யாருக்கும்

புரியாதுப்பா..உன் மகளாக

நான் ஜெயிப்பேன்.. அடிக்கடி

அவள் சொன்ன தன்னம்பிக்கை

வார்த்தைகள் எவ்வளவோ 

என்னோட வெற்றிக்கெல்லாம் 

காரணம் நீதானே கலங்கியக கண்களில் வழங்கும் வழியே கண்சாடையில்

பாசமென்னும் சவுக்கடி தந்து சிரிக்கிறாள் நான் பெற்ற பெற்ற காதலி அவளோ சிணுங்குகிறாள் உன்னை பெத்த அம்மா நான் தானே.. நான் பெற்ற 

மகளின் கைகளை

மாத்திரமே தொட்டு வாழ்த்துகிறேன்..

அவளோ முன்னொரு காலத்தில்

மடியில் சிறுகுழந்தையாக

அவள் செய்த சேட்டைகளை

சொல்லி என்னை

சலனப்படுத்துகிறாள்.

தூரத்தில் நிற்கும்

மனைவியோ..அதிகார தோரணையில்

இன்னிக்கு கூடவா கண்ணீர் நாடகமென்றே முறைத்துப் பார்க்கிறாள்..

தந்தை மகளின்

பாசத்தை வார்த்தையில் விவரிப்பது இயலாத விஷயமே...

இப்படி அவளை

அதிகமாகவே

காதலிக்கும் அப்பா

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...