யானையா...பூனையா...


யானையை வாங்கி

வீட்டில் கட்டி வளரக்கவே

ஆயிரம் ஆசை ஆயினும்

மனதில் ஆனந்த சஞ்சலம்..

சின்னஞ்சிறு வயதில் என்னை அள்ளி கொஞ்சிய நினைவுகளையே

சொல்லிச் சொல்லி

பூனையாக மாற்றி

வைத்திருக்கும் பெற்றவரும்

சொந்தமும் என்ன

செய்வது.. யோசித்தே

உறங்கிப்போனேன்

கனவில் வந்தது 

என்னை காதலித்த யானை

அல்ல அல்ல நான் காதலித்த

எனது கோபத்தை பாசமாக

மாற்றி மனிதனாக

வாழ வைத்த அன்பே உருவான 

ஆசை யானை அதிக உரிமையில் 

அருகேசென்றே வாரியணைத்து

முத்தமிட்டேன்.. மகிழ்ச்சியில்

காடே அதிரும் படி

ஆரவாரித்து பிளிறியது.

சுற்றி இருந்த பறவைகளும்

பட்சிகளும் விலங்குகளும்

பரிதவித்தது அலறி ஓடியது

ஆனால் நாங்கள் இருவரும்

அன்பில் ஒன்றுபட்டு கிடந்தோம்

விலங்கு மனிதனாகவும் மனிதன் 

மிருகமாவதும் மாறிய தருணமது.. என்னுடனே இருந்து விட

ஆசைபடுவது போல்

ஓலித்தது ஓசை...

கனவு கலைந்து எழுந்தேன்..

வீட்டின் முற்றத்தின்

வாசலில் இருந்த

வேப்ப மரத்தில் 

சுதந்திரமாக துள்ளி

ஓடி விளையாடிய அணிலை

லாவகமாக கவ்விப்பிடித்த

பக்கத்து வீட்டின் பூனை..ஏனோ

யானையை வளர்க்கும்

ஆசையை அசைபோடுகிறேன்..

நான்...யானையா..பூனையா..

இதில் எதன் வாழ்க்கை சிறந்தது

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...