காதல்

இனி வரும் காலங்களில் அனைவரின் மனதிலும்காதல் மிளிரட்டும்... எழுத்துக்களிலும் காதல் மிளிரும், ஏனென்றால் அன்பு தான் காதல்..

காதல் கூட ஓர் வழிபாடு தான்...

காதலிப்பவர்கள் அனைவரும் அன்பை தானே தேடுகிறார்கள்...

அன்பே சிவம்...

அன்பே நாராயணன்...

.

சிவனை தேடி கோவில் அலைபவரும் அன்பைத் தானே நினைக்கிறார்கள்...

எனவேதான் என் எழுத்துக்கள் காதலை மையப்படுத்தி தொடங்குகிறேன்....


https://anmaai.blogspot.com

மிக விரைவில்

 மிக விரைவில்

எதிர்பாருங்கள்

கண்ணன் பற்றிய

காதல் கவிதைகள்...

ஆம் நமது ஆயர் குல

மன்னனை பற்றிய

கவிதை தொடங்குகின்றது...

கண்ணதாசன் போல...

கண்ணணை நினைத்து

தூரிகை தொட்டு

தொடங்குகிறேன்...


உண்மையாக

தாயும்
தகப்பனும்
முதல் தெய்வம்...
அவர்களின்
மனதை 
புரிந்து கொள்ளாமல்
ஆயிரம் சொந்தங்கள் 
அவரகளை பேணுவதால்
என்ன பயன்
போலி கெளரவம்
தவிர்த்து வாழுங்கள்
உண்மையாக

வேலை

அவன்

நல்லவனா..

கெட்டவனா...

பணம் எப்படி

சம்பாதிக்கிறான்...

சந்தோஷமாக வாழ்கிறாரா???

கஷ்டத்தில் உழல்கிறானா???

இன்னும் பல கேள்விகள்...

அடுத்தவரை மாத்திரமே

பார்த்து பழகியவர்கள் அவர்கள்...

தன்னை பற்றி நினைப்பதே இல்லை...

எல்லா நேரங்களிலும்

அடுத்தவனை பார்ப்பதே

அவனுக்கு வேலை...

மகிழ்ச்சி

 ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம், என்றவரும் பேசுகின்றனர்

ரஜினியின் உடல்நிலை பற்றி, அவர் மீது கொண்ட அன்பினால்...

ஆயினும் கொள்கை வேறு தான்..‌

ஏனோ அரசியலுக்கு உள்ளே இழுத்து விட்டவர் எல்லாம், தூரத்திற்கு தள்ளி போய் விட்டனர்....

உண்மை நட்புக்கும் ஆதாய நட்பிற்கும் வித்தியாசம் தெரிந்தால் நல்லது...

ரசிகன் என்றுமே ரசிகனாகவே இருக்கிறான்...

ஏனென்றால் ரசனை மட்டுமே அவனிடம் உண்டு...

அதீதமான கற்பனையில் அவன் பிறரை நம்புவதில்லை...

இப்போதும் ரஜினிகாந்த் அவர்களை நல்ல மனிதராகவே பார்க்கிறேன்.

அவரால் ஆதாயம் பெற முடியாமல் போது ரசிகன் அல்ல, அவரை வைத்து இலாபம் பார்க்க நினைத்த கூட்டம்.

அவரை அவர் போக்கில் இயல்பாக இருக்க விடுங்கள்...

ரஜினி இனி நலமுடன் இருப்பார், என்பதை நினைத்து ஓர் ரசிகனாக மகிழ்ச்சி...

தள்ளி ப் போனவர்கள், தள்ளியே போகட்டும்..

மிக்க மகிழ்ச்சி.



அரசியல் வெற்றிடம்

 அரசியல்

தமிழகத்தில்

பல கட்சிகள்

இருக்கிறது...

அதில் பல 

உறுப்பினர்களும்

இருக்கின்றனர்..

அப்படி இருக்கையில்

எங்க இருந்து

வந்தது புதிய சொல்

"அரசியல் வெற்றிடம்"...

எதுவே இல்லாமல்

இருந்தால் மட்டுமே 

அது வெற்றிடம்...

எல்லா தொண்டர்களும்

தலைவராகும்

தகுதி பெற்றவரே...

எனவேதான் இன்னும்

தொண்டனாகவே

இருக்கின்றனர்...

எல்லா கட்சியிலும்

லட்சக்கணக்கில்

கட்சி உறுப்பினர்

இருக்கின்றனர்...

எல்லோரின்

கனவும் 

நாற்காலி மீதே...

தமிழகத்தில் 

இல்லவே இல்லை

அரசியல் வெற்றிடம்...

ஆயிரம் கவலைகள்

செல்ல மகளின் 

அன்பு முத்தங்களில் 

மறந்து தான் போகிறது 

அலுவலகத்தின் 

ஆயிரம் கவலைகள்

பெற்றவர்கள்

 பெற்றவர்கள்...

.

.

தனது ஆசை

குழந்தையை

வாரியணைத்து

முத்தமிட்டு

தலை கோதிவிட்டு

அவர்களின்

சின்னஞ்சிறு

மழலையில் தனது

கவலைகளையும்

போராட்டங்களையும்

மறந்து வாய் நிறைய

புன்னகை புரிகின்றனர்

பெற்றவர்கள்...

ஆன்மீகமா... அரசியலா....

 மனித வாழ்க்கையே சந்தேகமும் சஞ்சலமும் கொண்டது தான்.

ஆண்டியானாலும் அரசனாக இருந்தாலும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதே சராசரி மனித இயல்பு.

ஆன்மீகம் என்பது தன்னை அறிவது அல்லது அது பிறருக்காகவே சேவையால் இறைவனை அடைவது...

அரசியல் என்பது யார் எப்படி இருந்தாலும் எனது கொள்கை என்பதற்காகவே வாழ்வது.

கட்டிய மனைவியும் பிள்ளைகளும் புத்தரின் பின்னால் செல்லவில்லை.

மாறாக அரச போகத்தில் தான் இருந்தனர்.

யாருமே என்னை பேச்சை கேட்கவில்லை என்பவரும், தன்னை யாரும் மதிக்கவில்லை என்பவரும், எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகளால் சனிஸ்வர பகவான் மீது பழி போட்ட பின்னரே.

மகான் கூட இறைவனை தேடி அலைந்தான்.அப்படி அடைந்தவர் கண்டு பிடித்த வார்த்தைகள் தான் " கர்மா"...

அரியணையின் உச்சத்தில் இருந்த போதிலும், அரசமரத்தின் அடியில் பிச்சைகாரனாய் இருப்பவரையும் இணைத்து வைத்து வேடிக்கை பார்ப்பததே..கர்மா என்னும் 'விதி'

இதற்கு ஈசனும் உடன்பட்டவனே....

தான் விதித்த சட்டத்தின் படி, அதனை அனுசரித்து தான் வேதனை பட்டதாக மக்களுக்கு உணர்த்தினான்...


அரசியல்வாதியால் தன் நிழலை கூட நம்ப முடியாது.

ஏனென்றால் அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் அரியணை ஆசை உண்டு.

அரியணையில் அமர்ந்து விட துடிப்பவரும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை...

சாணக்கியர் புத்தியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சந்திர குப்த மெளரிய மன்னரும், பிற்காலத்தில் அவரின் ஆலோசனை கேட்க வில்லை என்பது வரலாறு..

இரண்டும் வேறு வேறு பாதைகள்.

ஆன்மீகத்தில் 

மிகவும் கடினம்

 தலைவனோ...

தொண்டனோ....

வியாபாரியோ....

சமூக சேவகனோ....

குழந்தையோ...

வாலிபனோ...

சிறுமியோ....

பெரியவளோ....

யாராக இருந்தாலும்

பெற்றவர்களின் கவலை

ஒன்றே கண்ணா...

நேரத்துக்கு சாப்பிடு...

நேரத்துக்கு தூங்கு....

இதை தாண்டி எந்த

பெற்றவரும் சிந்திப்பது

மிகவும் கடினம்

கடவுளின் அரசியல்

 ஓவ்வொரு நாளும் இரவு தூங்குவதற்கு முன்னால், தன்னை மெய்வருத்தி கடவுளை பிராத்தனை செய்தாள் கவிதா....

கவிதாவின் பக்தியை மிகவும் பெரிதாக நினைத்த கடவுளுக்கு தீடீரென ஓர் ஆசை உதயமானது.

தன் கவலைகளை மறக்கவ அவள் பிராத்தனை செய்தாலும், அவள் தனக்காக எதுவுமே கேட்கவில்லை...

ஓவ்வொரு நாளும் பிராத்தனை முடிவில் அவள் சொல்லும் வார்த்தைகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்தது..

ஆண்டவனே, சிறுவயதில் இருந்தே அப்பாவின் தூண்டுதலால் தினமும் உன்னை வணங்கினால் மட்டுமே இரவில் சாப்பாடு என்னும் புதிய நடைமுறை இடையே வந்தது..வேறு வழியின்றி நானும் தொடங்கிய வழிபாடு, இன்று நடைமுறை பழக்கமானது.

"உன்னை உண்மையாக பிராத்தனை செய்தால், நீ வருவாய், என்று ஓருவர் சொன்னார்.நீ ஏன் இன்னும் வரவில்லை.ஓருவேளை எனக்குத்தான் ஓழுஙஞ பிராத்தனை செய்ய தெரியவிங போல... ஆனால் பெரிய சாமியார் உன்னே வேண்டிய போது எல்லாம் நீ நேரில் பேசுவதாக சொல்கிறாரே, அது உண்மை தானா????"


இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்காக கட்டாயம், அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவளின் தாய் தந்தை எப்போதாவது பிராத்தனை செய்தாலும் அதில் அவ்வளவு உண்மை இல்லை, ஏதோ கடனுக்கு செய்கிறார்கள்...

சரி நாளைக்கு காலையில் அவளை சந்தித்து, இந்த கேள்விக்கான பதில் சொல்ல வேண்டும் நினைத்து கொண்டார்.

மறுநாள் காலை பொழுது புலர்ந்தது..

கடவுளுக்கு எந்த கலர் டிரஸ் போடுவது சந்தேகம் வந்தது...


கதை தொடரும்...


புத்திர பாசம்


வரத்தை 

கொடுத்து விட்டு

மனைவியின்

காலடியில் விழுந்து

புரண்டார் தசரதன்

அரசியல் காரணம் 

புத்திர பாசம்....

சபையின் நடுவே

பாஞ்சாலியின்

சேலை உருவப்பட்டது

பேசாமல் மெளனமாய்

இருந்து விட்ட மன்னன்

திருதராஷ்டிரன் அதுவும்

அரசியல் காரணம்

புத்திர பாசம்...

இன்றும் கூட

தொடருகிறது 

விளையாட்டு 

மாய விளையாட்டு

புத்திர பாசம்....

பேசாமல் இருக்கிறார்கள்

கலியுக பீஷ்மரின்

புத்திர பாசம்

இரவு கொள்ளை

 கணவனும்

மனைவியும்

ஆசையாய்

பேசிக்கொள்ள கூட

நேரமின்றி

பறந்து பறந்து

சம்பாதித்த பணம்

நகையாய் பணமாய்

வீட்டின் பீரோவில்

வைக்கப்பட்டது..

வயதான இரண்டு ஜீவன்

அப்பாவும் அம்மாவும்

முதியோர் இல்லத்தில்...

தன் வீட்டிற்கு எதிரே நின்று

திருடன் 

பத்துநாள் நோட்டமிட்ட 

தகவல் கூட 

போலீஸ் சொல்லித்தான்

தெரிந்து கொண்டாராம்...

கேட்டால் கவனிக்கவில்லை

என பதில் சொல்கிறார்

பல ஆயிரம் சம்பளம்

வாங்கும் அந்த அதிகாரி...

பல வருட உழைப்பு 

கொண்டு சென்றான்

ஓர் நாள் இரவு கொள்ளை




அரியணையின் அழகு

 

தூரத்தில்

இருந்து பார்த்தால்

பஞ்சணை ஓத்த அரியணை

சிம்மாசனம்

அரிமா அமர்ந்த

அதில் அமர்ந்திட

வேண்டித்தான்

புள்ளிமான்களுக்குள்

போட்டி.....

காடும் நாடும்

வேறு வேறு ஆயினும்

சூத்திரம் ஒன்றே....

புள்ளிமான் ஆனாலும்

அரியணை ஏறிய பின்னர்

ஓநாய்களும் நரிகளும் கூட

இடைஞ்சல் ஆயிரம் செய்யும்...

இடைஞ்சலும் இன்னலும்

ஈகை தாண்டிய அதிகாரமும்...

சூழ்ச்சிகள் கண்டு கலங்காத

இரும்பு போன்ற நெஞ்சுரமும்..

சில நேரங்களில் சொந்தங்களை

கூட பகைவராக மாற்றி விடும்

அது பஞ்சணை அல்ல....

எல்லோரின் கண்ணுக்கும்

அழகாய் மிடுக்காய்

காட்சி தரும் - அதில்

அமர்ந்து பார்த்தவனுக்கே

உண்மை புரியும்....

யாருக்கும் தெரியாமல்

அமர்ந்தவரை மாத்திரமே

முள்ளாய் குத்துவதே

அரியணையின் அழகு

வாழ்வின் சாதனை

வாழ்க்கையை 
வாழத்தெரிந்தவன்
அயர்ந்து போவதில்லை..
அயர்ச்சிகளுக்கு தனது 
முயற்சிகளை 
காணிக்கையாக்கி 
காண்கிறான் வாழ்வின் 
சாதனை

யோகி ராம் சுரத் குமார்

 எங்கோ இருந்து கொண்டு, எங்கே எல்லாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமோ, அங்கே எல்லாம் தன் கருணையை பொழிந்தவர்.

பல லட்சங்கள் கடன் வாங்கி விட்டு, கட்ட முடியாமல் தவித்தவரும் கூட இன்று பல கோடிகளுக்கு அதிபதி.

அன்று பணத்தை தேடி ஓடியவர், இன்று பரதேசிகளையும் சன்னியாசியாக நாடோடி வாழ்க்கை வாழும் சிவனடியார்களை தேடி அலைகிறார்..

ஆம், யோகி ராம் சூரத் குமார் தனது பக்தரின் மனதில் ஏற்படுத்திய சலனம், மிகவும் ஆழமானது.ஆடம்பரமும் எகத்தாளமும், ஆரவாரமும் கடந்து மனதில் நிலை கொண்டது, அவரின் அமைதி தவழும் முகம்.

இன்றும் கூட அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் ஆயிரம், இதை சொன்னால் பைத்தியம் என்பார்கள்.

பல வருடங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்.இவரை தரிசித்து விட்டு போன பிறகு, அவர்களுக்கு பிறந்தது குழந்தைகள் இரண்டு ( இரட்டை பிறவிகள்).

சிலருக்கு கல்யாணம் ஆனதாம், சிலருக்கு நோயின் தீவிரம் குறைந்து நலம் பெற்றனர்.

தொழில் நொடிப்பு சரியாகிப் போனதால் வருடம் ஓர் முறை ஆசிரமம் வரும் அன்பர் அவர்.

ஓவ்வொரு கதைகள் சொல்லும் பக்தர்கள்.

ஆயினும் எதுவும் பேசாமல், தன் குருவின் புகழை கூட பாடாமல், மாதம் ஓர் முறை திருவண்ணாமலை வந்து மலை சுற்றி விட்டு, அவரின் சிலை எதிராக சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்தார் ஓருவர்.

அப்போது அவரின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம், கண்களில் தான் எத்தனை மினுமினுப்பு.

எதுவுமே என் செயல் இல்லை, அனைத்தும் நீயே என்னும் தைரியம் அவரிடம்.

குருவே உன்னிடம் விதவிதமான கோரிக்கை வைக்கும் மனிதர் போல் அல்லாமல், உன் கண்ணீர் மல்க வேண்டி வணங்குண்கிறேன்.வரம் கொடு.....

சரியாக பேசக்கூட தெரியாமல் தவித்தவன் நான்.ஏதோ ஒருவன் தியானம் கற்றுக் கொடுத்த காரணத்தால், அபரிமிதமான ஆர்வக்கோளாறில் பல கோவில்களில்  தியானம் செய்வதாக நினைத்தே அமர்ந்து கொண்டு சிறு பிள்ளை போல் அலைந்தவனை கை பிடித்து தூங்கிய குருவே.

உன்னை இன்று போல் என்றும் தொழும் பாக்கியம் கொடு.இதை விட உலகில் பெரிய இன்பம் ஏதும் உண்டோ...

அதிசயங்களை நொடியில் நிகழ்த்தி காட்டிய நீ, உன்னை பிச்சைக்காரன் என்று கேலி செய்து கொண்டாய்... 

நீ என்னுள் ஏற்படுத்திய ஓர் சிறு அதிர்வே, எனது எழுத்துக்கள்...

இன்றே உனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.தனது 60-வது வயதில்.12 வயதேயான என் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார்.. திருவண்ணாமலையில் ஓர் சாமியார் இருக்காரூ அவர் கையில் கொட்டங்குச்சியும் விசிறியும் தான் இருக்கும்..உனக்கோ படிப்பு சுட்டுப் போட்டாலும் மண்டையில் ஏறவே மாட்டேங்குது.

நீ பத்தாம் கிளாஸ் பாஸானா கூட எனக்கு நீ ஏதோ கலெக்டர் ஆன சந்தோஷம் கிடைக்கும் தெரியுமா.. அந்த சாமியாரை பத்தி நீ ஓர் நாள் தெரிஞ்சுக்குவே..

அவர் யாரிடமும் எதுவுமே வாங்க மாட்டார்..

தமிழ் அவ்வளவா பேச தெரியாது.ஹிந்தி இங்கிலிஷ் தான் புரியும் எப்படித்தான் திருவண்ணாமலை வந்தாரோ எனக்கு தெரியாது 

அவரிடம் போயி யாராவது ஏதாவது கேட்டா.. My father will bless you அப்படின்னு வானத்தை கைகாட்டி சொல்லுவாராம்..

ஓர் வேளை நீ நல்ல படியாக படிச்சு காலேஜ் போகும் போது நான் உயிரோடு இல்லாம போனா..இந்த வசனத்தை மட்டும் நினைவு வைச்சுக்கோ..

My father is blessing you from heaven 

ஆணவம் தலைக்கு ஏறும் முன்னரே உனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்...குருவே உனது அருளை விட பெரிய இன்பமும் சுகமும் உலகில் இல்லை.கோடிக்கணக்கான சொத்துகளை சேர்த்து வைத்து விட்டு கோவில் கோவிலா சென்று நிம்மதி தேடுவதை விட உனது காலடியில் இருப்பதே நலம்..

உன்னை அதிகமாக நேசிப்பவரை நீ தள்ளி வைத்து அழகு பார்ப்பாய் என்பதையும்..உனது நாமத்தை சொல்லும் இடத்தில் நீ இருப்பதாகவும் சொல்லும் வார்த்தைகளை முழுவதுமாக நம்புகிறேன்.


பேச தெரியாதவன் என்று பகடி செய்து மனிதர்கள், சிரித்த போது ஓர் காவி வேட்டி கட்டியவர் சொல்லி விட்டு போனார்.தம்பி உனக்கு எழுத்து வசப்படுது நீ அதில் முயற்சி செய் என்று.


ஏதோ நேரம் போகாமல் என்னை பாதித்த விஷயங்களை சிறு சிறு துண்டுகளாக எழுதி வைப்பதை தவிர் எனக்கு எதுவும் பெரிதாக அறிவில்லையே

உன்னை இன்றே சரணடைகிறேன்.. ஓர் வேளை எனது எழுத்துக்கள் வருங்காலத்தில் புகழ்பெற்றாலும்.அது உனது செயலே அன்றி எனது திறமை கிடையாது.

வானில் பறக்கும் பட்டத்தை இயக்கும் கயிறு நீயே யோகி ராம் சுரத் குமார்

.. யோகி ராம் சுரத் குமார்..யோகி ராம் சுரத் குமார்...ஜெய குரு ராயா....

குருவின் அருளே என் வாழ்வு....


ஆன்மீக அரசியல்

அரசியலுக்கு

வந்த பிறகு

நிம்மதி தேடுவதும்....

கடலில் விழுந்த

கடுகு தேடுவதும்........





ஓர் முழம்

 

சிலருக்குச

சந்தோஷம்..

சிலருக்கு

சங்கோஷம்...

சிலருக்கு

சந்தேகம்...

சிலருக்கு

எகத்தாளம்...

சிலருக்கு

வெட்டிப் பேச்சு.....

சாலையோரத்தில்

கீரை விற்கும் பாட்டியிடம்

மைக் நீட்டி 

ஆச்சி ஆட்சி மாற்றம்

சாத்தியமா உங்கள்

கருத்தை சொல்லுங்க....

கூடி நின்ற கூட்டமெல்லாம்

அவளின் பதிலுக்கு

ஆவலாக எதிர்பார்த்து

வேடிக்கை பார்த்தது....

யாரு வந்தாலும்... 

வார்த்தைகள்

தட்டு தடுமாறியது

"மருமக என்னை வீட்டில்

சேர்த்துக்மாட்டா"....

கிழிந்த ரேஷன் கடை

புடவையில் மூக்கு

செருமியது....

யாரு வந்தாலும் ....‌

ஏம்பா வாங்கிறயா...

பத்து ரூபா ஓர் முழம்....



God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...