ராவணன்....சீதை... ராமன் அனுமன் என்பது கற்பனையா...

ராமாயணத்தை நன்றாக புரிந்து படித்தவர்கள் எல்லாம் அமைதியாகவே இருந்தனர்.

ஏனெனில் ராமனை பற்றி மீண்டும் மீண்டும் படித்து, அன்பு, பொறுமை, நிதானம், வாழ்விமல் அரசியல் அதிகாரம், பதவி, பட்டம், எல்லாம் நிலையற்றதே என்பதை நன்கு புரிந்து கொண்டு.ஆர்பாட்டமில்லாத அமைதியான வாழ்வை கடைபிடிக்க தொடங்கினர்.

எந்தவொரு மனிதனும் உதவிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று அமைதியின் உருவகமாக வாழ்ந்த ராமன்.

தன்னிடம் உதவி கேட்டு வந்த குரங்குகளுக்கு நன்மை செய்தான்.

தனது கூட்டத்தின் அறியாமையை நினைத்து, அவர்களும் நல்ல நிலைய அடைய வழி காட்டுமாறு அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வன், குரங்கு கூட்டத்தின் சார்பாக ராமனின் திருவடி பணிந்தான்.

கருணையே வடிவான தசரத மைந்தன்,  தனக்கென எதுவுமே கேட்காமல் தனது கூட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட உயரிய சிந்தனையில் வாழ்ந்த அனுமனின் கோரிக்கையை ஏற்றான்.

ஐந்து அறிவு கொண்ட அற்ப மிருகங்கள், என்றே எல்லாரும் நள்ளி நகையாடிய வானர கூட்டத்தை வழி நடத்தினான்.

வானரக்கூட்டமாகவே இருந்தாலும் சரியான வழிகாட்டி அமைந்தால் கடற்பரப்பில் மீதே அணையை கட்டும் வல்லமை, வானரங்களுக்கும் உண்டு என உலகறிய செய்தான்.

ராமனை நினைத்தாலும் துதித்தாலும், அப்படி என்ன நன்மை கிடைத்து விடும் என்ற நினைக்கும் நண்பர்களே.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய ஓர் அரசியல் கட்சி, பல மேடைகளில் ராமாயணத்தை விமர்சனம் செய்து தான் அரசு கட்டில் ஏறியது என்பதே வரலாறு.

அவர்களுக்கு ராமாயணத்தை முழுவதும் படிக்க நேரமும் இல்லை, மனமும் இல்லை.

மேடைதோறும் ராமனை இகழ்ந்து பேசியே, தங்களை முன்னிலையில்படுத்தினர்...

ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றான். சீதையோ ராமனின் நினைவாகவே இருந்தாள், அப்படிப்பட்ட உத்தமியான சீதையை ராமன் தீ குளிக்க சொன்னது நியாயமா என்றே மேடை தோறும் வீர வசனம் பேசி தங்கள் கட்சியை வளர்க்க அந்த ராமாயணதை பற்றி தான்  பேசினார்கள்

ராமாயணத்தை முழுவதும் படிக்காதது, அவர்களின் குற்றமா.. அல்லது அவர்கள் தாங்கள் தெய்வமாக வணங்கும் ராமனை இகழ்ந்து பேசுவதை கேட்டு வாய் மூடி இருந்த மக்களின் குற்றமா தெரியவில்லை...

ராவணன் சீதையை கடத்தவேவில்லை,  சீதையின் உருவத்தில் இருந்த இன்னொருவளே இலங்கையின் அசோக வனத்தில் இருந்தாள்.

வடமொழியின் மீது கொண்ட வெறுப்பு உணர்வால், அவர்கள் எல்லாம் வால்மீகி ராமாயணத்தை படிக்க மாட்டோம் என்றனர்.

இவர்கள் தான் தமிழ் மீது தணியாத காதல் கொண்ட தமிழ் காவலர்கள் ஆயிற்றே. குறைந்த பட்சம் கம்பராமாயணத்தை படித்து இருந்தால் கூட இந்த உண்மை தெரிந்திருக்கும்

ராமனை எதிர்த்து எத்தனை கோஷம் வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படியாவது உங்களின் வாயில் இருந்து ராம்..ராம்..என்று வருகிறதே..

அரசன் ஆண்டியாவதும், ஆண்டிகள் அரசனாக மாறி அரசாள்வதும்  தான் சானாதனத்தை அடிப்டையாக கொண்ட பல கதைகளின் சாராம்சம்.

பல்லாண்டுகளாக உலகளவில் நடக்கும் அரசியலை வால்மீகி கதையாக சொல்லி மக்களுக்கு புரிய வைத்தார் 

எனவே அரசனாக இருக்கும் போது ஆடுவதும், அரசபதவியை இழந்து விட்டால் கூப்பாடு போட்டு அழுவதும் அல்ல இந்த சனாதன கதைகள்.

உண்மையை சொன்னால் சனாதனம் என்பது மதம் அல்ல.அது ஓர் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியல்.

அரசனாகவே இருந்தாலும் அரச  சுகபோக வாழ்வு நிலையற்றது.

அரியணையில் அமர்ந்து அரசனாக முடி சூட்டிக் கொண்டால் மட்டுமே தான் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று நினைப்பது அல்ல சனாதன வாழ்வியல்.

ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், பணம் பதவி பட்டம் புகழ் என எந்த நிலையில் உச்சத்தை அடைந்தாலும் என்னை விடவும் திறமையான பலர் இருக்கின்றனர் என்றே மனிதன் தன் வாழ்நாளில் அமைதியாக வாழ வழி காட்டுவதே சனாதனம்.

இந்தியா என்ற சொல்லாடல் வருவதற்கு முன்னரே பரத கண்டத்தில் தொடங்கிய இலக்கியங்கள் ஆயிரம். அவையெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்வது ஓன்றே ஓன்று தான் அரசனாக இருப்பவனை, அவன் கூட இருக்கும் புல்லுருவிகள் தான் கீழே விழ வைப்பார்கள். அவனின் எதிராளிகள் அல்ல..

பல ஆண்டுகள் அரசனாக வாழ்ந்த பலரை ஓரே நாள் ஆண்டியாக மாறும் போதும், அந்த அரசர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுப்பதே .

 நீங்கள் எள்ளி நகையாடும் சானாதன ராமாயணமும் மகாபாரதமும் தரும் தன்னம்பிக்கை அளப்பரியது

ராமாயணத்தை முழுவதுமாக உணர்வு பூர்வமாக படித்து பாருங்கள்.

ராவணன் சீதை ராமன் அனுமன் என்பது எல்லாம் வெறும் கற்பனையா அல்லது அரச நிலையில் இருந்தவர்.எதுமற்ற ஆண்டியாகும் நிலை வந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் தைரியத்துடன் வாழ வழி சொல்லும் வாழ்வியலா என்பதை அறிவீர்கள் 

அவர் பெரிய பக்திமான்

பணத்தை தேடி 

இயந்திரமாக ஓடும் 

இயந்திர மனிதர்களின் 

வெற்றுகூச்சல்களை 

புறந்தள்ளி விட்டு யாரை பற்றியும் 

புறங்கூறவும் நினையாமல் 

கடவுள் படைத்த அன்பே உருவான 

இதயத்தை தன்னுள்ளே தாங்கி

அன்பு கருணை இரக்கம்..

ஈகை என்றபடி நல்ல மனிதர்களையே

தனது தேடலாக தேடி உலகில் 

உண்மையான பாசத்தை 

தேடும் முதல் மனிதன் போன்றே 

கடவுள் இருப்பதாக சொல்லப்படும் 

இடங்களில் எல்லாம் ஓர் நல்ல 

மனிதனை தேடும் அவன் ...

எல்லையற்ற அன்பை காதலாக மனதில் 

சுமந்து கொண்டு கோவில் வாசலில் 

உலகம் அவனை கேலி செய்கிறது ..

"அவர் பெரிய பக்திமான்"



(கவிதை முழுக்க முழுக்க கற்பனையே)

கேஸ் விலை ஏற்றம்

லட்ச லட்சமாக 
சம்பளம் வாங்கும் 
மனிதர்கள் கூட 
சங்கடத்தில் 
நெளிகின்றனர்..
சிலிண்டர் விலை 
அறுபது ரூ கூடுதாம்...
பார்த்து பக்குவமா
சமையல் பண்ணு...
ஏனோ நிலையற்ற 
தினக்கூலிக்கு வேலை
செய்யும் அவன் தனருமை 
மனைவியிடம் சொன்னான்..
கேஸ் தட்டுப்பாடு.. ஆஸ்பத்திரி செலவு..
தங்கச்சீட்டு பணம் கட்டுவது...
விலைவாசியை பத்தியெல்லாம் 
நீ கவலையே படாத புள்ள 
காசு பணம் எவ்வளவு ஆனாலும் 
பரவாயில்லை உழைச்சு போட 
நானிருக்கேன்... வயசான 
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் 
எந்த குறையுமில்லாம 
நீ சமைச்சு போடு...

கவிதை தலைப்பு - சமையல் கேஸ்

வயதான காலத்தில் 

தனது வயதுக்கும் 

அதிகமாக பாரத்தை 

தள்ளிய படி நேற்று வரையில் 

சைக்கிள்களில் சென்றவரை 

யாருமே கண்டு கொள்ளவில்லை 

ஆனால் இன்றோ கதையே வேறு...

அந்த சைக்கிள் தாத்தா 

எப்போ வருவார் என்றே 

தெருவில் இருக்கும் அனைவருமே..

சற்று தூரத்தில் தள்ளாடும் வயதிலும் 

உழைக்க தயங்காமல் உரக்க 

சத்தமிட்டவாறே...விறகு வாங்கலையோ விறகு...விறகு...

"என்னங்க என்ன விலை சொன்னாலும் வாங்கிப் போடுங்க"...

சமையல் கேஸ் இல்லைன்னா..

இந்த மாதிரி பண்ணித்தான் 

விலைவாசியை சமாளிக்க முடியும்

 புரிஞ்சுக்கோங்க..

அவனின் காதில் முணுமுணுக்கும் 

குடும்ப தலைவி...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ...

வயதான அந்த நல்ல மனிதர் 

ஆடி ஓடி ஓய்ந்து 

பணத்தையெல்லாம் நகையாக 

பாண்டு பத்திரமாக மூட்டைகட்டி 

பேங்க் லாக்கரில் வைத்து விட்டு 

தனது வயதான காலத்தில் வீட்டின் 

ஓய்வறையில் இருக்கும் போதே 

பணத்தை விட பாசம் தான் 

பெரியதென்ற உண்மையை 

உணர்ந்த படியே யோசிக்கிறார்.......

அவருக்கே அறுபது வயதுக்கு மேல் 

புரிந்த உலகில் நடைமுறை விஷயங்கள் 

தனது குழந்தைகளுக்கு 

எந்த வயதில் புரியும் என்ற  

கவலையில்..... தொலைகாட்சி 

பெட்டியில் கூட அரசியல் விவாதம் 

அனல் பறக்கிறது சரவெடி போலவே 

தமிழகத்தின் அடுத்த முதல்வர்...என்றே..


மகளிர் தின வாழ்த்துக்கள் - மார்ச் 8

திருமணத்திற்கு முன்பு 

அம்மாவே எனது உலகமே என்றான் 

திருமணமான பிறகு மனைவியே 

எனது வாழ்வில் வந்த வசந்தம் என்றான் 

மகள் பிறந்த பிறகு என்னை நன்கு 

அறிந்தவள் தனருமை மகள் மட்டுமே என்றான்.....அம்மா...சகோதரி....மகள்..

என்ற பல பரிமாணங்களில் 

அப்பா மகள் என்ற புரிதல் ஓன்றே 

காலத்தை வென்றது இதையெல்லாம் 

அறிந்தாலும் புரிந்தாலும் எனது வீடு 

எனது குடும்பம் என்றே  தன் அப்பாவை போலவே வாழும் அவரின் அன்புமகள்...பாசத்தை மட்டுமே பெரிதென்று எண்ணி வாழும் தகப்பனின் தங்கமான மனதை மனதில் சுமந்து 

வாழும் அன்பே உருவான செல்லமகள்...

பாசமான தன்னலமற்ற தந்தை அனுப்பினார் மகளிர் தின வாழ்த்துக்கள் 

வாழ்த்து செய்தி....


100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...