இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கசப்பான உண்மை இன்று கிறித்துஸ் என்றாலும் இரவு வரை புத்தாடைகளுக்கும் இனிப்புகளுக்கும் காத்திருக்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள்.

முதலாளியிடம் கடன் வாங்கி வந்து தன் குழந்தையின் கண்ணிலும் முகத்திலும்

மின்னல் கீற்றை ரசிக்கிறான்...ஆலயம் சென்று தசம பாகம் கூட கொடுக்க இயலாத குடும்ப சூழ்நிலை...

குறைந்த பணத்தை கொடுப்பது தெரிந்தால் மகளின் மனம் வேதனை படுமே என்று ஆலயத்தை தூற்றுவது போல் நடித்தான்..

பிதாவே எமது பாவத்தை மன்னியும் என்று மனதிற்குள் ஜெபித்தான்...

இரவில் எல்லோரும் ஜெபித்தனர்  எங்களுக்காக துன்பத்தை தாங்கிய பிதா... அப்போது தன்னையே பிதா போல் உணர்ந்து கண்கள் கலங்கினான்...

பிறரின் காதுகளுக்கு கேட்காத படி முறைய்யிட்டான்...

மண்ணுலகத்தின்  என்னை காப்பாற்ற பிறவி எடுத்து என் அன்பு தந்தையே உன்னை மனதார நேசிக்கிறேன்...


வயதான கிழவன்

 வயதான கிழவன்


அந்த பேருந்து நெரிசலில் அந்த கல்லூரி பெண்ணை இடித்து விட்டதாக பலருக்கு சேர்த்து ஓர் வயதான முதியவரை அடித்து துவைத்தனர்.


கூட்டத்தில் ஓருவன் சத்தமாக சொன்னான், வயசான காலத்தில் காலேஜ் பொண்ணுகளை இடிப்பதற்கே கருப்பு கண்ணாடி போட்டு கிட்டு வருதுங்க.. இந்த

கிழட்டு ஜென்மங்கள்.

ஏனோ ஒருவரும் கூட அவரை தவறாக பேசாதீங்க என்று சொல்லவில்லை.

தங்களின் வீட்டுகளில் இருக்கும் பெரியவர்களின் கோபத்தை அவரின் மீது காட்டி பழிதீர்க்க நினைத்த சிலர் அந்த கூட்டத்தில் இருந்தனர் போல.... வயதானவர் மட்டுமே தவறு செய்வது போல தாளம் போட்டனர்..

அந்த வயதான கிழவர் ஏதோ தட்டு தடுமாறிக் கொண்டு இருப்பவர் போல உணரந்த காரணத்தால் அருகில் சென்று அவருக்கு உதவி செய்ய நினைத்து தூக்கி விட்டேன்.

ஏன் சார், இந்த மாதிரி கிழட்டு பயலுக்கு உதவி செய்யுறீங்க....

வீட்டில் தன் பெத்த பிள்ளைகளை மதிச்சு நடக்க தெரியாத ஜென்மங்கள்.

தன் வீட்டு கவலையை பகிரங்கமாக சொல்லி தனது மனவேதனையை குறைத்து கொண்ட ஓர் நடுத்தர வயது மனிதன்


நன்றி அண்ணே, உங்களுக்காவது இவருக்கு உதவி செய்ய மனசு வந்துச்சே...

அத்தனை அடியிலும் தன் கருப்பு கண்ணாடியை கழன்று விடாமல் இருக்க பிடித்து படி இருந்தார்..

பாட்டி இறந்த துக்கம் தாளாமல் விஷத்தை குடிச்சுட்டாரூ... எப்படியோ கஷ்டப்பட்டு கதாப்பாத்திட்டோம்...

ஆனாலும் விஷத்தின் தீவிரமான காரணமாக  கண்பார்வையை போயிருச்சு.

.

பல கோடிக்கணக்கான சொத்து சேர்த்து வைச்சிருந்தாரூ.... இவர் இப்படி பண்ணியதால புத்தி சுவாதீனம் இல்லை என்று பெத்த பிள்ளைகளே சொத்தை அவங்க பெயருக்கு மாத்திட்டாங்க... இவரும் பாட்டி போன பிறகு சொத்து எதுக்கு என்று அவங்க காட்டிய எல்லா பத்திரத்திலும் கைநாட்டு வைச்சுட்டாரூ


பேச்சு கூட திக்கி திக்கி தான் பேசமுடியும் இவரால் என்றே பேசி முடித்தவளின்...

தோளில் கையை வைப்பதாக நினைத்து... அவள் பெண்மையின் மென்மையான பாகத்தில் பட்ட கையை , தாத்தா இப்படி பிடிங்க என்று தன் தோள் கொடுத்தாள் வயதான தாத்தாவின் தோழியாகவே மாறிவிட்ட அன்பு பேத்தி...


நீ தான் பக்கதில் இருக்கேன் நினைச்சு என்றவருக்கு தொண்டை அடைத்தது.... விம்மி விம்மி அழுதார்.சிறு குழந்தையை போல்..ஆறு வருஷத்தில் நான் வாங்குற மூணாவது தர்ம அடி இது...

என் உசுரை காப்பாத்துறா நினைச்சு எல்லாரும் என்னை ஏன் இப்படி தண்டனை கொடுத்தீங்களோ...

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்ற கேட்ட அடுத்த நிமிடமே தாமதிக்காமல் சொன்னார்..

இதை தான் தம்பி நானும் சொல்லுறேன்...இவ எதுக்குமே பிடி கொடுக்காம இருக்கிறா....


என்னை ஏதாவது ஓர் அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டா அவங்க என்னை நல்லா பார்த்துப்பாங்க என்று சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறா....


எனக்கு கல்யாணம் ஆயிட்டா தாத்தா-வ யார் பாரத்துப்பாங்க...


நீ யாரையாவது காதலிக்கிறதா இருந்தா சொல்லு பாப்பா, நான் வேணா போயி பேசுறேன் என்றே அதீதமாக உரிமை எடுத்து பேசிவிட்டோமோ என்றே பயந்தேன்..

இல்ல அண்ணே, உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் என்றாள்...

இந்தா பாரு பாப்பா.. தாத்தா காலத்துக்கு அப்புறம் உனக்கு துணை வேணும் தானே....

துணை என்பது உதவி செய்வதற்காக.... என் உதவியை வாங்குவதற்கா தைரியமா நச்சு தெறித்தது போல கேட்டவளின் கேள்விக்கு பதில் தெரியாமல் தவித்தேன்.

மேலும் அவளே தொடர்ந்தாள், கல்யாணம் என்பது வெறும் சடங்கு அல்ல..அது ஓர் புரிதல், பிறருக்காக வாழ்வது...

ஏனோ திருமணமான பலரில் சிலர் மட்டுமே ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்காங்க..பாதிக்கு மேல் அடுத்தவரின் உழைப்பை உறிஞ்சி தன் சுயநலத்திற்காக குடும்பஸ்தன் போல காட்டி கொள்ளுறாங்க 

(தொடரும்)

தாத்தா பயங்கர குசும்பன் போலையே

என்னடா உங்க வீட்டுல நேத்து பெரிய பிரச்சினையாமே... வீட்டுல யாருமே தூங்கலையாமே..

அட அதை விடுறா....அதை கேட்டு என் மனசை கஷ்டப்படுத்தாதே

ஏன்டா...எப்பவும் சந்தோஷமா பேசுற நீ கூட விரக்கியா பேசுற..ஏதாவது பணம் தேவைன்னா தயங்காம கேளூடா...

அடேய் இது பணத்தேவை இல்ல பாசத்தேவையா......

புரியிற மாதிரி சொல்லுடா...

அடுத்த வாரம் எங்க தாத்தாவுக்கு அறுபதாம் கல்யாணம் வருது....

அதனால் என்ன??? சிறப்பா செஞ்சுற வேண்டிதானே...
அதுல தான்டா பிரச்சினையே.... ஓர் தடவை Arrange Marriage, பண்ணி நான் பட்ட கஷ்டம் போதும்.. சொல்லி எல்லாரையும் 

என்னடா புது கதையா இருக்கு...

இனிமேலும் நான் கல்யாணம் பண்ணிணா.. அடுத்த வாரம் பண்ணுற கல்யாணம் கண்டிப்பாக.. Love Marriage மட்டும் தான்னு அடம் பிடிக்கிறாரூ தாத்தா

அதனால் தான் வீட்டில் யாருமே ராத்திரி சரியா தூங்கலை.நல்லா சாப்பிட்டு நாலு நாளாச்சு 

😳😳😳🤣😳😳😳🥳😳😳

Whatsapp Leave Request

 From,

Raman Sankar,

Freelancing writer

(Just imagination only, don't think him as a great writer)


To,

My whatsapp friends,

Respected sir/Madam,

     I kindly request you to grant me leave for only one for my whatsapp account.

Reason being I have some personal work, so consider my whatsapp leave application form.

My humble request to you. Please don't show it to anyone.

Because someone may say in jealous.

This leave letter belongs to them and i have stolen it..


Your truly,

Raman Sankar

Freelancing writer 

பக்தா வேண்டும் வரங்களை கேளூ..

ஒருவன் செய்த கடும் தவத்தை மெச்சி கடவுள் அவன் முன்னால் தோன்றினார்...
பக்தா உன் கடும் தவத்தை மெச்சுகிறேன்...
நீ சாகா வரத்தை தவிர உனக்கு விரும்பிய வரத்தை கேள் தருகிறேன்..
ஆண்டவா எனக்கு இரண்டு பொண்டாட்டி கட்டி, அவங்களோட சந்தோஷமா வாழ்ந்து பத்து பிள்ளைங்க பெத்து அவங்களை நல்ல மாதிரி படிக்க வைச்சு நோய் நோடியில்லாம வாழும் வரம் கொடு...
பக்தா, உனக்கு M.L.A., M.P..பதவி வேணாலும் தருகிறேன்... உனக்கு எதுக்கு இரண்டு பொண்டாட்டி ஆசை...

ஆண்டவா...நீ சொல்லுற மாதிரி M.L.A. M.P... பதவி கிடைச்சாலும் அது கொஞ்ச நாளைக்கு தான்...பதவி போயிட்டா.அடுத்து ஆட்சிக்கு வருபவன்...
I.T..Raid..அது... இதுன்னு கேஸை போட்டு சொந்தமா இருந்த பூர்வீக சொத்தையும் புடுங்கிடுவான்....
இவன் செய்வதை அடுத்த வருபவரும் செய்வான்...
பக்தா உன் பயம் புரிகிறது... இருந்தாலும் இரண்டு பொண்டாட்டி பத்து புள்ளைங்க கொஞ்சம் அதிகமா தெரியலையா....
ஆண்டவா உனக்கு உலக நடப்பு தெரியலை போல...
பக்தா என் சொல்லுறே எனக்கு உலக நடப்பு தெரியலையா

ஓரே ஒரு பொண்டாட்டி கட்டி அவங்களை கஷ்டப்பட்டு காப்பாத்தினாலும்.. கடைசி காலத்தில் நீங்க எங்களுக்காக என்னத்த செஞ்சு கிழிச்சிங்க என்று திட்ட தான் செய்வாங்க...
நீ என்னப்பா, சொல்லுறே...

அதே சமயம் இரண்டு பொண்டாட்டி பத்து புள்ளைங்க இருந்தா... ஒருத்தர் ஏசினாலும் இன்னொருத்தி நல்லவிதமாக பார்த்துப்பா.. அதையும் மீறி இரண்டு பேரும் ஏசினாலும்...பத்து பிள்ளைகளில் ஏதாவது ஒன்று நமக்கு கடைசி காலத்தில் நல்லவிதமா பார்த்துகிட்டு கஞ்சி ஊத்தும்... இதே இது ஓரே ஓர் பொண்டாட்டியா இருந்தா 
வயசான காலத்துல கஷ்டப்பட்டு சொத்து எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்தாலும் எனக்கு ஏதாவது மருத்துவ செலவு என்றால் முகம் சுழித்து கொண்டு தான் காசு தருவாங்க.
நான் வயசான காலத்துல சந்தோஷமா இருக்கணும் என்று நினைப்பதால் இந்த வரங்களை கேட்டேன்...
ஆண்டவன் ---(மனசுக்குள் இப்படி ஓவ்வொரு மனுஷனும் நினைச்சா பிறகு நம்மை எல்லோரும் மறந்திடுவாங்களே..இப்போ என்ன செய்வது, இவன் கேட்ட மாதிரியே வரத்தை கொடுப்பதா வேண்டாமா)

என்னடீ வேணும்

 பல நாட்களாக அவளுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது போதும் என்று முடிவு பண்ணி, ஓர் வழியா கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு. அவளின் முகத்திற்கு நேராக, அதுவும் அதிகாலையிலேயே கேட்டு விட்டேன்..

ஏன் டீ என்னை இப்படி இம்சை பண்ணுற, வாயைத் திறந்து சொல்வேன்.. உனக்கு

என்னடீ வேணும் என்று..

அதுக்கு அவ என்ன மச்சான் சொன்னா...

டீ தூள் எல்லாம் வீட்டில் நிறையவே இருக்கு...

எனக்கு பத்து பவுன் சங்கிலி கேட்டு பத்து நாளாச்சு வரும் போது மறக்காம வாங்கிட்டு வாங்க என்று...


மழை வரமா...சாபமா...

மனைவி -  என்னங்க.. அவர் உங்க நண்பர் தானே. அவரை போய் ஏன் நீங்க இப்படி திட்டி அனுப்புனீங்க...


கணவன் - நான் எங்கடீ அவனை திட்டினேன்.... அவன் தான் டீ என்னை காயபடுத்துற மாதிரி பேசினான்.. நான் பதிலுக்கு பேசினேனா அவனுக்கு பொறுக்கல..கோபிச்சுகிட்டு போறான்....

மனைவி - அவரை வருங்கால டைரக்டர் அப்படின்னு புகழுவீங்க.. இப்போ என்னாச்சு..

கணவன் - பிறகு என்னடீ...நானே படாத பாடுபடுறேன்..நீ அந்த படத்தை பாரூ இந்த படத்தை பாரூ 1,000 கோடி செலவழிப்பது எடுத்திருக்காங்க...இரண்டே நாளில் 4,500 கோடி உலகளவில் சம்பாதித்திருச்சு.. நீதான் பத்தாயிரம் சம்பளத்துக்கு இவ்வளவு கஷ்டபடுறே என்றான்...

மனைவி - அதுக்கு நீங்க என்னதான் சொன்னீங்க..

கணவன் - நீங்க பல கோடி செலவழிச்சு படம் எடுக்கிறதை விட சில லட்சத்தில் நாங்க மழை நேரத்தில் வேலைக்கு போக... பெண்கள் துணி சமையல் செய்யவும்.. குழந்தைங்க மழையில் விளையாட போறேன்னு அப்படின்னு அடம் பிடிக்கிறது... வயசான காலத்துல இந்த மழையில் இன்னிக்கே நான் என் பழைய பிரெண்ட்ஸ் பார்க்கணும் அப்படின்னு அடம் பிடிக்கும் அந்த குழந்தை பத்த  படம் எடுத்தா வருஷம் பூராவும்  பல ஆயிரம் கோடி கிடைக்கும் நீ அசிஸ்டன்ட் டைரக்டர் தானே..இதை அவர்கிட்ட சொல்லு என்றேன்...

இதுக்கு போய் கோபமா போறான்...

மனைவி -. இப்போ தாங்க தெரியுது நீங்க இன்னும் அதே ஆபிஸ்ல இருக்கீங்கன்னு

கணவன் -.  😳😳😳 (மனதுக்குள் இவகிட்ட போய் சொன்னே பாரூ...இதை சொல்லியே இன்னும் இரண்டு வருஷத்துக்கு சண்டை இழுப்பாயே...கடவுளே காப்பாத்து டா....)


அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

அப்பா -  அடேய் உன் பிரெண்ட், உன்னை விட பெரிய ஆளூ இருக்கானே

மகன் - ஏன்ப்பா, அவன்கிட்டையும் நீங்க சண்டை இழுத்துட்டீங்களா...

அப்பா - எப்பவுமே என்னை குறை சொல்வதை நிறுத்தி விட்டு நடந்ததை கேளூ

மகன் - அப்பா, எதை சொல்லுவதா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு 

அப்பா -  அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னதுக்கு.... அட்வான்ஸ் பத்தாயிரமா, இருபதாயிரமான்னு கேட்குறான்....

😳😳😳😳😳

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

டாஸ்மாக்

 சும்மா குடிச்சு பழகு மச்சான் ஓண்ணும் செய்யாது என்பவர்களிடம் இதுவரைக்கும் குடிச்சதில்லல.. ஏன்னா நான் குடிக்கிறேன் என்பது தெரிச்சா அப்பா அம்மா மனசு கஷ்டபடும் என்பவர் சிலர்

நான் குடிச்சிட்டு வீட்டுக்கு போனா பொண்டாட்டி பெரிய சண்டையே போடுவா என்பவர் சிலர் 

நான் குடிப்பது தெரிஞ்சா குழந்தைங்க மனசு வேதனை படும் என்பவர் சிலர்
 
எங்க அப்பா குடிச்சதால தானே நாங்க இந்த நிலையில் இருக்கோம் என்ற அதை சிந்தனையும் தொட நினைக்காத சிலர்
 
யார் மனசும் வேதனை படக்கூடாது என்று சாராயத்தை பற்றிய நினைவே இன்றி வாழ்பவர் சிலர் 

அறுபதாம் கல்யாணம் 🤣🤣🤣

 ஏம்ப்பா... உங்க வீட்டுக்கு சந்தோஷமா வந்த தாத்தா பயங்கர கோபமா போறாரே...

அப்படி என்னதான் நடந்துச்சு...

அது வேற ஒண்ணுமில்லை.. அறுபதாம் கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தவர்கிட்ட..இது அரேன்ஜ்ட் மேரேஜா...லவ் மேரேஜா அப்படின்னு கேட்டதுக்கு கோபிச்சுட்டு போறாரூ...

??!?!!!!!🤪😜😝😛😜🤪

தங்கத்தின் தரம்

பல வீடுகளில் 

பெண்கள் தனது 

கணவனிடம் 

ஆயிரம் கேள்விகளை

கேட்பதே தனது 

கணவன் தகரமல்ல 

தங்கமென்பதை 

உலகுக்கு உணர்த்தவே 

ஏனெனில் தகரத்தை 

யாரும் உரசிப்பார்ப்தில்லை 

தங்கத்தை தான் 

மீண்டும் மீண்டும் 

உரசிப் பார்த்து 

ஊர்ஜிதம் செய்கின்றனர் 

தங்கத்தின் தரத்தை 

அடிக்கடி   . ஏனெனில் 

மிகவும் முக்கியமானது 

தங்கத்தின் தரம் 

தேடல்

 பொய்களை மாத்திரமே பேசி தன்னை உண்மையானவன் போலவே காட்டி வாழும் பல மனிதர்கள் இந்த உலகில்.


எத்தனை எத்தனையோ நல்லவர்களை அவர்கள் சந்தர்ப்பங்களில் ஏமாற்றி வாழ்ந்த பிறகும் கூட தேடுகிறன்றனர், உண்மையான மனிதரை இந்த உலகில்

ஏனோ அவர்களுக்கு ஓர் உண்மை புலப்படாமலே போகிறது.

நாம் உண்மையாக வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம் மனதில் நிலைகொண்டு தூக்கம் வராமல் தவிக்கும் மனநிலையை

நெல்லை கண்ணன்

 இரங்கற்பா 


நெல்லை

கண்ணணே

தமிழ் சொற்பொழிவின்

மன்னனே.....

எதுகை மோனையில்

எதிர் அணியினரும் உனது

பேச்சை ரசிக்க வைப்பாயே

மேடைகளில் நீ செய்த 

வார்த்தை ஜாலத்தால் அனைவரின்

மனதிலும் அரியாசனம்

அமைத்து அமர்ந்தாயே...

கம்பனையும் ஷெல்லியும்

உடனிப்பது போல

உணர வைத்து

குற்றால அருவி போல

தமிழ் சொற்களைசாரல்

மழைதனை போலவே 

பொழிந்தாயே

உங்களின் தமிழ்

சொல்லாற்றலை

எங்களின் தலைசாய்த்து வணங்குகிறோம்...

உமது மறைவை

கண்டு வானுலகமே

தன் சாரல் மழையை

நெல்லையின் ரதவீதியில்

மலர் போல் தூவியே

அழுகிறது போலும்...

ஆம் கடைசி யாத்திரை

செல்லும் உம்மை

காண வேண்டியயே

குற்றால சாரல் மழை

மாலை நேரத்தில் நெல்லை 

வந்து கலந்து கொண்டது

யாத்திரைக்கு மரியாதை 

😭😭😭


 .

எது காதல்..

 காதல் என்பது ஓர் மெல்லிய உணர்வு...அது எந்த வயதில் யாருக்கு வரும் என்பதை யாராலும் கூறமுடியாது..

அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது தன்னை கவனித்துக் கொள்ளும் தாதியின் மீது வரும்..


சாலை விபத்தில் சிக்க இருந்தவனை காப்பாற்றிய ஓர் சிறு பெண்ணின் மீதும் வரும்...


காதல் என்பது ஓர் அன்பான உணர்வு...

அந்த அன்பான உணர்வே சகோதர சகோதரி என்ற உணர்வாக மாறுகிறது.


மஞ்சள் நிற தேவதையே

விரல்களை தொடாமல்

விரக தாபம் தராமல்

நட்பும் நம்பிக்கையும் அன்புடனே

அபரிமிதமாக அள்ளித்தந்து

அமைதியின் உறைவிடமாய் 

உடன்வந்த தேவதையே... 

பெயரை கூடகேட்காமல் 

நட்புடன் பேசினோமே

சில நிமிட சந்திப்பை

பல நாட்கள் சிந்தித்து

சிந்தையில் மகிழ்ந்தோமே

சிவன் கோயில் பிரகாரத்தின் 

மாபெரும் விநாயகனை வணங்கியே

விடை பெற மனமின்றி...

என்னை பின்தொடர்ந்து 

வந்த எனதருமை பைங்கிளியே

பலவருட நட்பையும் மறந்துவிடும்

கணிணி யுகத்தில்

கண்ணிமைக்கும் நேரம் போல்

சந்தித்த சந்திப்பை 

சிலாகித்து பேசியவளே...

பணத்தை பற்றி

இருவருமே பேசவில்லை...

பாசத்தை தேடித்தானே

பாங்குடனே பரிதவித்து

நீண்ட நெடிய பயணம் வந்தாயோ

சொல்லடி எனதருமை மஞ்சள்தேவதையே



தங்கம்

 *உலகம் இப்படித்தான்*


லஞ்சம் கொடுக்கும் போது *Discount* கேட்க மாட்டாங்க


சாராயத்தை சோதிக்க மாட்டாங்க


கெட்டவன்/ கோபக்காரன் கிட்ட எதிர்த்து கூட பேச மாட்டாங்க...


ஆனால் நல்ல பொருளையும் நல்ல மனிதரையும் தான் உரசிப் பார்ப்பாங்க.


தங்கத்தை எவ்வளவு உரசினாலும் அதற்கு கோபமோ வெறுப்போ சலிப்போ வருவதில்லை..


தங்கத்தின் மதிப்பு அதற்கு புரிகிறது.அடுத்தவருக்கு அது புரியலை எனவே தான் அடிக்கடி உரசுகிறார்கள்.


நீங்கள் நீங்களாகவே வாழுங்கள். உலகம் உஙக்ளை அங்கீகரிக்க காலம் எடுக்கலாம்...

நம்புங்கள் சிறந்த பொருள் உடனடியாக விற்பதில்லை. ஏனென்றால் அதன் மதிப்பு தெரிந்தவரின் கைகளில் மட்டுமே அவை போய் சேரும்.


தங்கம் தகர்த்துடன்  போட்டி போடுவதில்லை.

நிறைய தகரங்கள், தங்கமூலாம் பூசினால் சில நாட்களில் அதன் உண்மை சொரூபம் வெளிப்படும்.

தங்கம் சிறிய அளவே இருந்தாலும் அதன் மதிப்பு ஓவ்வொரு நாளும் உயர்வே செய்யும்



எது காதல்

 காதல் என்பதே ஓர் அமைதியான உணர்வு சார்ந்த விஷயம்.

சிலருக்கு காதல் உடனே புரிந்து விடுகிறது.பலருக்கு காதல் எது என்பது காலம் கடந்தே தெரிகிறது.

காதலை புரிந்து கொள்ள இயலாத படி இயற்கை காதலை மறைத்தே வைக்கிறது. காதல் என்பது அன்பின் தொடக்கம், அன்பு யாரையும் காயப்படுத்த விருமபாது. அது தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும்.

குழந்தைகள் தன் சொல்லை கேட்க வில்லை, என்ற போதும் அவர்களுக்காகவே வாழும் பெற்றவரின் அன்பு போன்றதே ஒப்பற்ற காதல்.



பொம்மலாட்டம்

 உடலில் மங்கையும் தலையில் கங்கையும்

அணிந்து காமத்தின் சிந்தனை ஏதுமின்றி எல்லையற்ற மாசில்லா

காதலை மனதில்

சுமந்தே தியானத்தில்

அமரந்தவனே.

உன் கோபத்தை

பாசமாக மாற்றி காட்டிய தேவியவள் நித்தமும்

பூஜிக்கிறாள் உன்னையே..

நதியின் வேகத்தை

தலையில் தாங்கி

தரணியை தழைக்க செய்தவனே...

எண்ண முடியாத

கஜானாவை குபேரனிடம்

கொடுத்து விட்டு நிம்மதியாக

வாழ்பவனே.

அபிஷேகப்பிரியனே..

மூலன் உரை மூலப்பரம்பொருளே..

புராணத்தை படித்து

சலித்துப் போனவருக்கும்

பிராணணை படிக்கும்

வித்தை சொல்பவனே..

தில்லையில் நீ ஆடிய

ஆட்டத்தை விட

உச்சம் தொடுகிறது சிலர் பணத்திற்காக போடும் 

குத்தாட்டம் ... நானும் கூட ஆடுகிறேன் பணம்

தேவையென்றே...

என்னை பார்த்து சிரித்த படியே கடக்கிறான் அந்த 

கலந்தலாடைபரதேசி....

 உனக்கும்

புரிஞ்சு போச்சா அவன் நடத்தும் பொம்மலாட்டம்

சித்தனாகிறான்


வாழ்நாளில்

என்றோ ஓர்

சித்தர் சமாதி

என்றே பெயர்

பொறித்த கோவிலை

பார்த்து விட்டு

வந்த ஓரே காரணமாக

வீட்டிற்கு வந்தது முதல்

அடிக்கடி விட்டத்தை

வெறித்து பார்த்து விட்டு

ஆகாயத்தில் சித்தர்

உலவுவுகிறார் என்தாய்

பரிபாஷையில் பிதற்றினான்

உன்மத்தம் பிடித்தவன் போல்

உத்தமாக நடைஉடை பாவனை...

சித்தன் தன்நிலையை

யாரிடமும் வெளிப்படுத்தாமல்

எழுதி வைத்த பரிபாடல்

படிக்க நேரமில்லா மக்கள்...

சென்ற மாதம் சதுரகிரி

சென்று வந்து நேற்று முதல்

ஆன்மீகத்தில் திளைத்த

சித்தரின் மொழியாம்

"உலகமே மாயை" 

யாருக்கும் புரியும்...

சித்தன் தன்னை

யாருக்கும் காட்டுவதில்லை...

உணர வைப்பவனே..

அந்த தில்லை வாழ்

சித்தன்...

உணர்ந்தவன்

தன்னுள்ளே 

பித்தனாகிறான்...

உணராதவன் பிறர்

கண்ணுக்கு மட்டும்

சித்தனாகிறான்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...