770 - அப்பாவின் ரகசியம்

 எத்தனையோ பாராட்டுக்கள் 

எவ்வளவோ புகழுரைகள் 

எண்ணிப் பார்க்கவே 

முடியாத ரசிகர்களின் 

வாழ்த்து மடல்கள்..

மேடையில் இருந்து 

இறங்கும் முன்னரே 

அன்பளிப்பாக பணமுடிப்புகள்

ஆயினும் ஏனோ மனம் 

ஊஞ்சலாடுகிறது ...

முதன்முறையாக தோல்வியில் 

துவண்டு இனிமேல் 

உலகமே அவ்வளவுதான் 

என்று கலங்கிப்போய் 

ஓர் நாள் முழுதும் 

உண்ணாமல் கிடந்து 

பசி மயக்கத்தில் 

தூங்கிப்போனது...

நேத்து ஏன்டா சாப்பிடலை 

அப்பாவின் கேள்விக்கு 

கண்ணீர் பெருகி பதில் 

சொல்லிறறு இதுக்கு கூட 

கிடைச்சாலும் கிடைக்கும் 

தோல பெல்டால் விளாசல் 

ஆனால் நடந்ததோ வேறு..

தலையை கோதிவிட்டு...

இதெல்லாம் ஓர் தோல்வியே 

இல்லை... எடிசன் கண்ட 

தோல்விகளை விடவா 

நீ அதிகம் கண்டுவிட்டாய் 

அம்மா அப்பா அண்ணன் தங்கை 

என இயங்கிய உலகில் 

புதிதாக நுழைந்த முதல் மனிதன் 

தாமஸ் ஆல்வாய் எடிசன்..

இன்னும் பல பெயர்களை 

சொல்லி ஆறுதலாக பேசியவரின் 

கண்கள் கலங்கிற்று....

பத்து தடவை கீழே விழுந்து 

கை கால் இரத்தம் பட்டு 

நீ படித்து சைக்கிள் இப்போ 

சுலபம் தானே ‌..புரியாமல் 

விழித்தேன்.... இன்றைய 

தோல்வி தான் நாளைக்கு 

நீ பெறப் போகும் ஆயிரம் 

வெற்றிகளுக்கு அஸ்திவாரம் .

நானும் கூட உன்னை போல அழுது இருக்கேன் ஆனால் இதுவரையில் 

யாருக்கும் தெரியாது... 

இது தான் என்னோட ரகசியம் 

உணர்ச்சிவசப்பட்டு பேசினார்

நீ என்னோட புள்ளடா... நல்லா படி.

படிப்புதான் நம்மை எல்லாம் காப்பாத்தும்..இனி எதுக்கும் 

கலங்கக் கூடாது கண்ணீரை துடை 

துடைத்து விட்டேன் .. புன்னகையுடன் 

சொன்னார் நான் 

சொன்னது 

உன்னோட கண்ணீரை....

வாரியணைத்தார்...அப்பா...


769 - அன்பு மகளுக்கு

தனது அன்பு மகளின்

கண்ணில் சிறு துளி

கண்ணீர் வந்தாலும்

பொறுக்க முடியாமல்

துடிதுடிக்கும் ஓவ்வொரு

தகப்பனின் மனதிலும்

வெளியே சொல்லப்படாத

காதல் வலிகள் ஆயிரம் இருக்கும்..

சந்தர்ப்ப சூழ்நிலையால் தான்

விரும்பிய பெண்ணை மணக்க

இயலாமல் காதலில் தோற்றவனே...

எல்லையற்ற காதலை பரிசாக தருகிறான்

தனது அன்பு மகளுக்கு...

உள்ளத்தின் காதலை...

எனவே தான் ஓவ்வொரு பெண்ணும்

அடிக்கடி புலம்புகின்றனர் எங்க

அப்பாவுக்கு நிகர் எங்க அப்பா தான்

768 - பந்தம்..


.விஷ்ணுவின் பாதங்களின்
அருகே மகாலட்சுமி....
மகாலட்சுமியை மனதில்
வைத்து கொண்டாடும்
பக்தர்களை மிகவும் விரும்பும்.
எங்களின் மாசற்ற மாதவன்
மாயங்களை செய்து
விளையாடும் கேசவனின்...
உலக விளையாட்டில்
காதலின் பெருமையை
உணர்த்த பிறப்பெடுத்த
இரு ஆன்மாக்கள்...
தனது ஓர் பகுதியை
ராதையாக படைத்தான்...
படைத்தவன் சும்மா இருக்கவில்லை.
அவனின் செயல்கள்
இன்றுவரை
கொண்டாடப்படுகிறது
உற்சவமாக ஆட்டம்
பாட்டுகளில் நடுவே..
மந்தகாச புன்னகையில்..
சிரித்தபடி தன்னை
வணங்க வந்த
உண்மை பத்தரையும்
மாயையின் கயிற்றால்
கட்டிவிட்டு சந்தோஷங்களை
அள்ளி அள்ளிக் கொடுத்தான்....
அலைமகளின் காதுக்கு
கேட்கும்படி மெல்ல சொன்னான்...
பார்த்தாயா, பேதை பெண்ணே..
கஷ்டத்தில் என்னை வேண்டி
விரும்பி அழைத்தான் பக்தன்....
இப்போது என்னை சுத்தமாக
மறந்தே போனான்....
மயிலிறகை சூடியவனின்
மெல்லிய வரிகளை கேட்டு
வெட்கத்தில் மேலும்
சிவந்தன முகம்...உனது
மாயை வெல்ல வேண்டியே
கால்களை பிடிக்கின்றேன்...
சரணாகதி ஆனபின்னும்
சோதிப்பது அழகா...
உனது பக்தர்கள் மூலம்
தாயார் என பட்டம் கட்டி
என்னை பரிதவிக்க
வைத்த பரந்தாமா
பக்தர்களின் துயர் நினைத்து
நித்தமும் உனதடி
பணிகின்றேன்.....
குழந்தைகளின்
இஷ்டங்களை
நிறைவேற்று அது
போதும் நாராயணனா...
எட்டெழுத்தை மந்திரம் தினமும்
பக்தியுடன் தொழுபவரின்
வீட்டில் தொடங்கிவை...
நீ ஏற்படுத்திய மாயையின்
அன்பெனும் பந்தம் 
பந்தம் 

767 - கர்ணன்



ராதை இருக்குமிடத்தை
கண்ணன் தேடி வருகிறான்...
கண்ன் தவிப்பு
ராதைக்கு தெரியாது...
மாயத்தை படைத்தவன்...
ஆசைகள் ஏதுமின்றி
வாழ்வது போன்ற பாவனையில்...
நித்தமும் அவன் நடத்தும்
உலகநாடகம் யாருக்கும் தெரியாதே...
வாழ்க்கை வெறுத்த முனிவரையும்...
ஆசை கடலில் மூழ்கவைத்து
சிரிக்கும் திரிவிக்ரமன்.
அவனை நினையாத நாளில்லை...
ஆசைகளை வெறுத்து அர்ஜுனனுக்கு
கடமையை காப்பாற்ற சொன்ன
மாதவனுக்கும் கூட
ராதை கண்டுவிட ஆசைதான்.
புல்லாங்குழல் ஊதுகிறான்
வேணுகானம் கேட்பதிலே
அவளுக்கு ப்ரீதி .....
பக்தருக்கு பிடித்தமான
விஷயங்களை சரியான
தருணத்தில் கொடுப்பதில்
கேசவனும் ஓர்
கர்ணன்

766 - கிளி ஜோசியர்.

 ஒருவனின் பல நாள் கனவு வெளிநாடு போக வேண்டும் என்று... நல்லா படிச்சா போகலாம் என்று படித்து முடித்தான்...பல வருட போராட்டம் ஆனால் வெளிநாடு வாய்ப்பு கிடைக்க வில்லை....


நம் நாட்டில் உடனே எங்கே போய் நம்ம சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்துவோம்
.
. சரியாக நினைச்சீங்க....
அதே இடம் தான்.பல பேர் வாழ்க்கையை சுற்றில் விட்டு..
மரத்தடியில் அமர்ந்த கிளி ஜோசியர்...
கிளி வந்து .... எடுத்து தந்த படம்...
ஆதிசேஷன் மேல் படுத்துக் கொண்டு இருந்த பகவான் விஷ்ணு படத்தை எடுத்து கொடுத்தது.. அருகில் மகாலட்சுமி அவரின் காலை பிடித்த படி....
சார் நான் சொன்னா நம்ப மாட்டீங்க... இங்கே பாருங்கள்‌‌..
படத்தை காட்டினான்..
உங்களுக்கு கல்யாண ராசி.. அதுக்கு பிறகுதான் வெளிநாட்டு வாய்ப்புகள் வரும் என்றான்...
அதை நம்பி பெற்றவர்களிடம் சொல்ல.. நல்ல வசதியான வீட்டு பெண்ணை பேசி முடித்தனர்...
இப்போது போய் கேட்டான்...
இப்போது விநாயகர் படம் வந்தது.. சார் உங்களுக்கு பிள்ளை பிறந்த ராசியில் தான் வெளிநாட்டு வாய்ப்பு வரும் அதைத்தான் நான் அப்படி சொன்னேன் என்றான்...
ஒருவகையில் யோசித்து பார்த்தால் பணக்கார வீட்டு பொண்ணு நம்ம பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை.. சரியென்று சென்றான்....
சில வருடங்களுக்கு பிறகு போனான் ...

சார் இன்றிலிருந்து எண்ணி 184வது நாள் நீங்க ஏர்போர்ட்டில் இரூப்பீங்க.... அப்படி மட்டும் நடக்கவில்லை என்றால் நான் எனது கிளி ஜோசியத்தை விட்டு விடுவேன் சபதம் செய்தான்....
.
.
நாள்களை ஓவ்வொரு தினமும் எண்ணிக்கொண்டே வந்தேன்.. என்ன ஆச்சரியம் 184 வந்து நாள் ஏர்போர்ட்டில் வெளிநாடு செல்ல வேண்டி நின்றுகொண்டு இருந்தான்.
என் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு கேட்டனர். காண்பித்தான்....
ஏதோ தீவிரவாதியை பார்ப்பது போல மேலும் கீழும் பார்த்தனர்....
தயவுசெய்து மன்னிக்கவும்....திருப்பி கொடுத்தனர்.....
எடுத்துப் பார்த்தால் அதில் இப்படி இருந்தது ஜோசியக்காரனை தேடிப் பார்த்தான் கையில் சிக்கவில்லை..... நேராக வீட்டுக்கு வந்தவுடன் ...
இதுக்கு மேல எனக்கு சொல்ல சங்கடமாக உள்ளது.
.
.நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 
.................
.
.



765 - விமானநிலையத்தில் விமானங்கள்...

 மனதில் அலையடித்த 

பாசத்தையெல்லாம் மறைத்து விட்டு

பணத்தை தேடியே பாசத்தை துறந்து கடல் கடந்து சென்றேன் ...

சில வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்தேன்.. 

எதிர்பார்ப்புகளுடன் விமானநிலைய வாசலில் 

குடும்பமே..வரவேற்றாலும்.. ஓரமாக நின்ற படி 

கண்களால் சாட்டை சொடுக்கி தண்டிக்கிறாள் அன்பு மகள்... 

இருவரின் கண்ணிலும் பாசத்தின் துளிகள்..

வாரியைத்து மார்புற தழுவினேன்... 

இந்த மாதிரியெல்லாம் பண்ணிணா உன் பொண்டாட்டி வேணா மயங்குவா... நான் உன்னோட பொண்ணு நினைவு இருக்குதா... 

உஷ்ணத்தின் சூட்டை உதட்டில் காட்டினாள்.. 

சுற்றி நின்ற சொந்தங்கள் எல்லாம் நெளிந்தனர்... 

உனக்கு இப்போ என்ன செல்லம் வேணும் என்றவனின் 

தோளில் சாய்ந்து கொண்டாள்..

நீ சம்பாதிசசு கொட்டியதெல்லாம் போதும்.. 

இனிமேல் நீ எங்கேயும் போகாதே 

என்னுடனே இருந்து விடு அதுவே போதும்..

பாசவலை விரித்த மகள்... 

பக்கத்தில் எதுவுமே தெரியாதது போலவே நிற்கிறாள் 

அன்பான சொற்களை எழுதி கொடுத்து விட்டு.... 

அமைதியான புன்னகையுடன் அன்பு பொண்டாட்டி....

ஏனோ மனதில் பணத்தை பற்றிய சிந்தனைகள் 

மறந்து பாசத்தை பற்றிய உணர்வுகளே மேலோங்கியது....

தனது சுமைகளை இறக்கி விட்டு இலகுவாக தூரத்தில் 

பறந்து செல்கிறது விமானநிலையத்தில் 

விமானங்கள்...



764 - வியர்வை துளிகள்

 குடும்பத்தில் அனைவரும் 

உயிர் வாழ்வதற்காக 

இரவும் பகலாக உழைக்கும் 

ஆண்மகன் தனக்கென 

தங்கநகை வாங்க 

நினைத்ததில்லை மாறாக 

தன்னை சுற்றி இருக்கும் 

அனைவரின் கழுத்திலும் 

அணிவித்து மகிழ்கிறான் 

தங்க நகைகளை சொந்தமும் 

பந்தமும் முகத்தில் காட்டும் 

சின்னஞ்சிறு புன்னகைக்காக தானே 

அவன் சிந்தும் வியர்வை துளிகள்

ஓவ்வொரு நாளும் 

763 - பெண் ஏன் நிறைய நகை அணிகின்றனர்

 


கல்யாண வீட்டிற்கு செல்லும் போது மட்டும் தான் பெண்கள் நிறைய நகை அணிவது செல்வர் அதுவும் கூட எங்க வீட்டுக்காரரும் பணக்காரர்  என்பதை இந்த உலகத்திற்கு பறை சாற்றவதற்கும் தன்னோட சொந்தக்களின் முன்பு ஓர் காலத்தில்நாங்க ஏழைகளாக இருந்திருக்கலாம் ஆனால் இப்போ எங்ககிட்டையும் நிறைய வசதி இருக்கிறது என்பதை காட்டத்தான்.. ஆண்களுக்கு நான் படித்த படிப்பு கெளரவம் பெண்ணுக்கு தான் அணியும் தங்க நகை கெளரவம் 



100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...