காதல் மனைவி...

 கடற்கரையில்

கால் நனைக்க

பயந்து ஓடும்

பெரிய மணுஷி..

ஐந்து வயது

தம்பியின் கைகளை

பிடித்துக்கொண்டு

வலுக்கட்டாயமாக அவனை

கடலுக்குள் இழுத்தாள்....

அவனோ பயத்தில் கத்தினான்...

அக்கா இருக்கேன்.....

கவலைபடாதே....

தூரத்தில் இருந்து

சகோதர பாசத்தை

ரசிக்கும் பெற்றவர்கள்....

அனாதையாக உலகை

வெறுத்து சுற்றியவனை

இருந்தவனை

இப்படித்தானேடி கண்களால்

வலைவீசி கவலை துடைத்து

காதலுக்குள் இழுத்தாய்...என்றவனின்

தோள்களில் சாய்ந்தாள்...

அவனின் காதல் மனைவி...

சித்தி

 பத்து மாதம்

சுமந்து பெறவில்லை

குடும்பத்தின் கவலைகள்

புரியாத வயது....

பாவாடை தாவணியில்

ஆனாலும் அக்காவின்

குழந்தையை இடையில்

தூக்கி வைத்துக் கொண்டு

வீதியை சுற்றிக்காட்டுவாள்

 சிறிதாக சிணுங்கினாலும்

 தாய்மையின் வேதனையில்

தவித்து போவாள்...

என் புள்ள கர்வமாக சொல்லுவாள்

ஆசையும் ஆசிர்வாதமும் கலந்தே

ஊட்டிய நிலாச்சோறு...

அம்மாவின் மறுஉருவம்...

அன்பான சித்தி...




பீச்

 சின்ன வயசுல ஓர் தடவை பீச்ல விளையாடிய நினைவு.. என்னை பீச்க்கு கூட்டிக்கிட்டு போவீங்களா.. பரிமளா கேசவ் இடம் கேட்டாள்... உங்க அம்மா அப்பாவிடம் கேட்க வேண்டியது தானே.. அவங்க ஆபிஸ்ல இருந்து 20 நாள் வடஇந்திய  டூர் போய்விட்டாங்க... காலேஜ் படிக்கிற வயசு பொண்ணுகளை வீட்டில் விட்டு விட்டா.. ஆச்சரியமாக கேட்டான்.. ஏன் வயசான காலத்துல Honeymoon போறது தப்பா.. எதையும் வெட்கப்பட்டு பேசும் பரிமளாவா இது விக்கித்து போனான்.... மெளனமாக இருந்தவரிடன் மீண்டும் கேட்டாள்.. ..என்ன பதிலையே காணும்... பதில் சொல்ல முடியாமல் இந்த முறை கேசவ் வெட்கப்பட்டான்..

அப்போ நீ மட்டும் தனியாவா வீட்டில் இருக்க கவலையும் பதட்டமும் இணைந்த குரலில் கேட்டான்..

அம்மா வயித்துல கூட தனியா தானே இருந்தேன்.சில நிமிட கவலை தோய்த்த முகத்தில் புன்னகையை வரவழைக்க கஷ்டப்பட்டான்...

நாளைக்கு மதியம் சாப்பாடு வந்திடுங்க.. உங்களுக்கு பிடிச்ச மோர் குழம்பும்,  கத்திரிக்காய் பொரியலும் செய்து வைக்கிறேன்...

கேசவ் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றான்...

உனக்கு எப்படி இது தெரியும் என்றவனிடம்... அதான் டீக்கடையில் போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையாக சொன்னீங்களே....

ஓண்ணு புரியாமல் விழித்தான்.. நேத்து நீங்க இல்லாத நேரத்தில் உங்களை மோர் குழம்பு அப்படின்னு கேலி பேசிட்டு இருந்தாங்க..புரியுதா

இரவு எல்லாம் தூக்கம் வராமல் தவித்தான்.ச்சே பெத்தவங்க ஊருக்கு போயாச்சு.. தங்கச்சியோ பரீட்சை எழுத சென்னை போயிருக்கா.... பாவம் பரிமளாவின் நிலையை நினைத்த படியே தூங்கி போனான்... சீக்கிரமா, வீட்டிற்கு போனாள் அவளுக்கு ஏதாவது உதவி செய்யலாம்..11.00 மணியளவில் பரிமளா வீட்டிற்கு சென்றான்... வாசலில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினான்... ஏண்டி உன் ஆளூ சீக்கிரமா வந்துட்டான் போல யாரோ கேலி பேசும் சத்தம் கேட்டது...அட அவரு சரியான மெஷின் சரியான மதிய சாப்பாட்டுக்கு தாண்டி வருவாருன்னு பெருசா பீத்திக்கிட்டு இருந்தே.....

கதவு திறந்தது, மார்டன் டிரஸில் பரிமளா.

வந்து நின்றாள்...

ஏண்டி உன் ஆளூ வந்துட்டாரா....கேட்ட படி வாசல் அருகே வந்த மீனா..

இருவரின் முகத்திலும் வெட்கம் படர்ந்தது...சரி, சரி புது பொண்ணு வெட்கப்பட்டது போது.போய் ட்ரஸ் சேச் பண்ணிட்டு வா... அதுவரை நான் பார்த்துக்கிறேன் என்றவளை பரிமளா முறைத்து பார்த்து...செல்வியோ கண்ணை சிமிட்டி சிரித்தாள்...

கேசவன் நடுஹாலில் சென்று அமர்ந்தான். வீடு சிறிதாக இருந்தாலும் மிகவும் சுத்தமாக இருந்தது...வீட்டை ரொம்ப சுத்தமாக வைச்சீருக்கீங்க...என்ற கேசவ்... எல்லாம் உங்க ஆளூ வேலைதான்.. என்றவள் சுதாரித்து கொண்டு அதாவது உங்க ப்ரெண்ட்.. என்றாள்...பட்டுசேலை உடுத்தி புதுப்பெண் போல வந்த பரிமளா... ஏண்டி அந்த கல் நெக்லஸ் போட்டுக் வேண்டிதானே....

நீ உன் வாயை மூடிக்கிட்டு இரு மெதுவாக மீனா...

கொஞ்ச நேரம் டி.வி பார்த்துகிட்டு இருங்க.. நான் சமையல் பண்ணி முடிச்சிட்டுவேன்... ஒண்ணும் அவசியமில்லை என்றவனின் பேச்சை இடைமறித்து அப்போ ராத்திரி சாப்பாடு தான் கிடைக்கும் பரவாயில்லையா துடுக்காக கேட்ட மீனா..

கேசவ் அசடு வழிந்தான்... நீங்க தனியா இருப்பதா சொன்னதால் தான் நான் சீக்கிரம் வந்தேன்.. நான் வேணும்னா ஏதாவது காய்வாங்கிட்டு வரட்டுமா அக்கறையுடன் விசாரித்தான்...

என்னமோ வஜ்ஜிர மீன் வாங்கு மாதிரி பேசுறீங்க... சாதாரண வெண்டைக்காய், கத்திரிக்காய் தானே.. மீண்டும் சீண்டிய மீனா.. கேசவ் எரிச்சலாக உணர்ந்தான்.. அவனின் முகமாறுதல் கண்டு கவலையுற்ற பரிமளா...

ஏய் நீ மாடியில் போய் துணியெல்லாம் காயப்போடு.. என்றாள் பரிமளா...

ஹலோ சார், நீங்களும் வாங்க... வந்து மாடியில் எங்க அக்காவோட தோட்டத்தை பாருங்க...
கேசவ் பரிமளாவை பார்த்தான்...அவளோ...சரி என்பது போல் கண்சாடை காட்டினாள்.....

மீனாவின் பின்னால் பூனைக்குட்டி போல் கேசவ் போவதை பார்த்து பரிமளாவுக்கு சந்தோஷமாக இருந்தது...
ஏய், மங்குணி உன்னோட ஆளூ உன்னை விட சரியான அமுக்குறா தான்... தன் மனதுக்குள் சொல்லி சிரித்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

உங்களுக்கு இன்னிக்கு தான் பெரிய பரீட்சை இருக்கு. இதில் பாஸ் ஆயிட்டா.. நீங்க தான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலி...பொடி வைத்து பேசியவளின் பேச்சு, அவனுக்குள்ளே எதோ ஓர் வித பயத்தை உண்டாக்கியது....
.
எங்க அம்மாவும் அப்பாவும் பாட்டி வீட்டிற்கு போயிருகாங்க.... கிராமத்தில் திருவிழா நடக்குது.... எனக்கு கூட போக ஆசைதான்.. ஆனால் இவளுக்கு துணையாக இருக்க வேண்டியதா போச்சு...
பத்து நாள் கழிச்சு வேலைக்கு சேர சொன்ன அப்பாவிடம் எப்படி கோபப்பட்டா தெரியுமா... இந்த கம்பெனி தான் அருமையான இடம் என்று பேசி அப்பாவை சம்மதிக்க வைத்தாள்....
.
இதுல பெரிய காமெடி என்ன தெரியுமா..
நான் எதுக்கு வேலைக்கு போகணும் அப்படி சொன்னவள், மதினியோட வற்புறுத்தல் காரணமாக தான் இண்டர்வீயூவுக்கே போனா....
.

கணையாழி

குட்டி கருவாச்சி....

குட்டி கருவாச்சி......

விழியாலே மொழி பேசும் குட்டி கருவாச்சி..

வீதியில் நீ நடக்கும் போது

விண்ணில் தான் பறக்கின்றேனே...

உதட்டின் மொழியாலே...

உண்மையை சொல்வாரோ...

கல்லூரி போகும்  முன்னே

கருவிழியில் உன்னைக் கண்டேனே

நேரம் போகாமல் வீதியில் திரிந்தேனே

நேரம் போதாமல் விழிமொழியை தந்தாயே

நொடிப்பொழுதில் நீ வந்து கடற்காற்று

வீசியதென்ன....

விழிகளின் மொழியாலே தவிக்க விடுவதென்ன ..

ஓர் நொடியில் பார்த்துவிட்டு

மனதினுள் பூகம்பம் கொடுத்து ஏனோ...

சொல்லடி கருவாச்சி...

நெஞ்சில் உன்நினைப்பே இருப்பாச்சு..‌

அங்கே பூச்செடியாய் உன்னை வைத்தேன்...

பூச்சோலையாக நீ மாறியது எப்படியோ கண்மணி

இன்னும் ஏணடி இந்த மெளனம் ...

விழியசைத்து ஓராயிரம் கதை சொன்னாயே.....

வீதியில் உனக்காக வீற்றிருக்கும் வேளையிலே...

ஊருக்கு முன்னால் நீ சிறுபெண்ணாய் தெரிகின்றாய்...

என் கண்ணில் ஏனோ அழகியாய் மாறியதென்ன...

மர்ம புன்னகை மத்தாப்பாய் கொடுத்தாயா...

விரல்களை தொட்டு முத்தவிட துடிக்கின்றேன் கண்மணி...

கல்லூரி முடிந்த பின்பே கல்யாணம் செய்து கொள்வோம்..

பக்கத்தில் நீவாடி என்தருமை கருவாச்சி...

உயிருக்கு உரமூட்டி எத்தனை நாளாச்சு...

ஓர் முத்தம் தந்துவிட்டு... தவிக்க விட்டதென்ன...‌‌

விழியாலே மொழி பேசி தவிக்கவிடாதே...

தள்ளியே நிற்கின்றேன்...

மொழி போதும் கண்மணியே...

மொழியால் வழி காட்டு வாழ்க்கைக்கு வரம் கொடு...

குட்டி கருவாச்சி..இந்த சின்ன கருப்பனுக்கு...

வாழ வழிசொல்லு....

வயற்காட்டில் மாடுமேய்க்கும் இந்த கண்ணணை தேடிவருவோயோ...

ராதையோ ...கோதையோ...

உன் பெயரை சொல்லி விடு...

முன்னாலே வந்து நின்று தந்துவிடு கணையாழி

வயற்காட்டில் வேலை செய்யும் ஓர் விவசாயி தன் காதலியை நினைத்து பாடுவது போல் அமைந்த பாடல்... அவன் தான் வணங்கும் கண்ணாக தன்னை நினைத்து பாடும் கற்பனை பாடல்...


மகாலட்சுமி பிறந்திருக்கா..


நேற்று வரை

குடிகாரனாக

தெருவில்

அலைந்தவன்..

பொண்டாட்டி

ஆபிஸ்பத்திரியில்

சேர்ந்தது கூட

நினைவுயின்றி....

மதுபோதையில்

அந்த அரசமர

விநாயகரிடமும்

புலம்பித் தள்ளினான்

என்னை யாருமே

புரிஞ்சுக்கலை

அதனால தானே

குடிக்கிறேன்....

அருகில் ஓடிவந்த

அக்காவின் மொழி

காதில் விழுந்தது

ஏறிட்டு பார்த்தான்

ஏலே உனக்கு

பொம்பள பிள்ளை

பிறந்திருக்கு....

தட்டுத்தடுமாறி

தள்ளாடியபடி

நடந்து சென்ற

குடிகார இளைஞன்...

கட்டிலில் மனைவி

வெட்கப் புன்னகையுடன்

இங்க வாய்யா....

உன் புள்ளயும்

உன்னை போலவே

கைநடுக்கத்துடன்

அருகே சென்றவனை

பார்த்து சிரித்தாள் அந்த

சின்னச்சிறு தேவதை....

இனிமேல் சத்தியமா

குடிக்க மாட்டேன் 

"பாப்பா" கண்கலங்கி

இருகரம் கூப்பி

குழந்தையை 

வணங்கினான்....

பக்கத்து வார்டில்

கிழவி பேச்சு

சுத்தமாக கேட்டது

அந்த குடிகாரப்பயலுக்கு

மகாலட்சுமி பிறந்திருக்கு...

தேவை

எல்லோருக்கும் 

அவர்கள் 

எதிர்பார்த்த அன்பு 

கிடைத்தால் 

உலகமே ஓர் 

சொர்க்கம் தான்... 

சிலருக்கு பணம் தேவை... 

ஆனால் ஏழை மனிதருக்கு 

தனது  குழந்தைகளின் 

பாச மொழியே தேவை

அன்புக்காதலன்

கண்ணுடன் 

கண் சேர்த்து

தன் காதலை 

ஆணுக்குள் 

செலுத்திய 

பெண்மை... 

அவளின் 

கண்ணுக்குள் 

தன்னை தேடி...

அவளுக்குள் 

கரைந்து போனான் 

அவளின் தன்னிகரற்ற

அன்புக்காதலன்

கண் பாராயோ தாயே

கடைக்கண் பாராயோ..

கவலைகள் தீராயோ...

கனியமுது தந்திடவே

விரைந்து நீ வாராயோ...

வெற்றியை தந்திடவே

கவலைகள் அத்தனையும்

சிரித்து மாற்றிய சிங்காரியே

மாயக்கூத்தனையும்

மயக்கிடும் மோகினியே

உனதழகு மாயைகளை காட்டி

மர்மமாய் சிரிப்பதென்ன

சிற்றின்ப வெள்ளத்தில்

திளைக்க விடுவதென்ன....

உன்னை மட்டுமே சதமாய்

நினைத்தவனுக்கு...

சொந்தமும் பந்தமும்

சொகுசு வசதியும் 

தந்து விட்டு அமைதியாய்

இருப்பதென்ன...

விரைந்து நீ வா தாயே...

உன் அருளாலே கனிவுடனே

கனியமுது தந்திடவே

விரைந்து நீ வா தாயே..

என்னை கண் பாராயோ....

குறிப்பு -

அம்பாள் கோவிலில் பாடும் படி எழுதப்பட்ட பாடல்

பரிமளா....

 கோபத்தில் அவன் ஆசையாய் வாங்கிய விலையுயர்ந்த பட்டு புடவையுடன் தரையில் படுத்து கொண்டு விம்மி அழுதாள்...

இப்படி ஓர் நிகழ்வு ஏற்படும் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை...

ஏய் புள்ள...

பதில் எதுவும் சொல்லாமல் வலது கையை தலைக்கு வைத்து தரையில் முகம்படும் படியாக இருந்தாள்...

எரிச்சலாக வந்தது.. இந்த பெண்ணை புரிந்து கொள்ளவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுமோ...

இவள் தானே காலையில் கேலி பேச்சை தொடங்கினாள்....

இந்த சட்டை நல்லா இருக்கா என்றபோது.. உங்க அண்ணன் சட்டை மாதிரி இருக்கு என்றாளே....

அப்படித்தானே நானும் சொன்னேன்... எப்படி இது மட்டும் தப்பாகும்...

மிகவும் சங்கடமாக உணர்ந்தான்.. திருமணத்திற்கு பிறகு வரும் அவளின் முதல் பிறந்தநாள்..ஆறு மாதமாக போட்ட திட்டம்... ஓர் சிறிய கேலி வார்த்தைகளில் திணறி நின்றது... அவள் தான் முதலில் கேட்டாள்.. இந்த புடவையில் நான் அழகா இருக்கேனா....ம்ம்.என்றவனிடம்...என் தங்கையை விடவா என்ற கேள்வியின் விஷமம் தெரியாமல்.. அவளுக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும் என்ற வார்த்தையின் விளைவு... பேசிய பிறகு தானே தவறு தெரிகிறது...

அவள் இன்று அணிந்திருக்கும் ஒவ்வொன்றும் எத்தனை விலை உயர்ந்த பொருட்கள்.. தன் அரை மாத சம்பளம், அது கூட பரவாயில்லை... எத்தனை கடை ஏறி இறங்கி வாங்கியவை இவை.....

அவளுக்கே தெரியாமல் அவளுக்கு பிடித்த கலர் பிராண்ட்.. மாம்பழ கலர் பட்டு புடவை... வண்ணமயமாக ஸ்டிக்கர் பொட்டு... மல்லிகையும் பிச்சியும் ஓரு சேர கட்டிய பூ சரம்

அவளின் பேச்சு அவனை நிலைகுலைய வைத்தது


அப்போ அவளையே நீ கட்டியிருக்க வேண்டி தானே.. எதுக்கு என் பின்னால் சுத்துனே...

( தொடரும் )

வள்ளி

கல்யாண வீட்டில்

அதிக வேலையை

வலிந்து சென்று

செய்தவனை ஏனோ

நொடிப்பொழுதில் 

சிலருக்காக சிலரின் 

மனதை சந்தோஷப்படுத்த

நினைத்த அற்பமான

சில்லறை சொந்தங்கள்...

அவனை வார்த்தைகளில்

வறுத்தெடுத்து கோபத்தின்

உச்சிக்கு அழைத்த 

உடன்பிறவா உறவுகள்...

பீரங்கி குண்டு போல்

உணர்ச்சியின் வேகத்தில்

வார்த்தைகளை வீசி

தனது எல்லா நல்ல செயல்களையும்

பின்னுக்கு தள்ளிவிடும்...

போலியாய் பாசாங்கு

தெரியாத அப்பாவி ஏழை....

இன்றும் கூட அப்படித்தான்

ஆனால் அருகிலே தேவதை...

கோபத்தில் பேச நினைத்தவனை

தனது மலர் கரத்தால்..

தீண்டினாள்.....

சேலையின் முந்தானை 

மறைவில் விரல்களால்

வருடி கண்களில் பேசினாள்

உன்னை நான் அறிவேன்

ஊரின் கேலி பேச்சுக்கள்

நமக்கு எதற்காக...

உதட்டின் புன்னகையில்...

சண்டையை தவிர்த்து விட்டாள்....

சமாதானத்தை மாத்திரமே

வேண்டுகின்ற யதார்த்தவாதி

சேவலின் சண்டை எதிர்பார்த்த...

உறவுகளுக்கு முன்னால்....

அவனை தலை நிமிரச்செய்து

அவனின் குணத்தை

பலர் புகழ வழிசெய்தாள்....

வேலனின் கரம் பிடித்த

வள்ளி....





தாய் அன்பு

 பெரிய மணுஷியாக

மாறிவிட்ட கல்லூரி

பயிலும் அக்கா...

அவளின் துப்பட்டாவை

எடுத்து முகம் துடைத்து

அதை அவளின் முகத்தில்

வீசி எறிந்தான்...

ஆயினும் அவளின்

முகத்தில் பாசம் ததும்பியது

அருகில் அவனை இழுத்து

அவனின் தோளில் தலைசாய்ந்தவள்

கேள்விகளால் துளைத்தெடுத்தாள்

டேய் பஸ் எப்போடா வரும்

எனக்கு கால் ரொம்ப வலிக்குதுடா

என்கென்ன ஜோசியமா தெரியும்

என்றே அலுத்து கொண்டவன்

மீண்டும் மீண்டும் அவனை

கேள்விகளால் சீண்டினால்.

ஏய் லூசூ வாயை மூடிக்கிட்டு கிட

சத்தமான பேச்சு சுற்றுபுறத்தில்

அதிர்வலைகளை உண்டாக்கியது

அவளோ யாரை பற்றியும் கவலை படாமல் அவனின் கன்னத்தில்

ஓப்பனை செய்தாள்.

ஏண்டா இரண்டு வருஷத்துல 

காலேஜ் போகாணும் 

இன்னும் பவுடர் கூட போட தெரியலை 

அங்கலாயத்து கொண்டவள்..

சீப்பை எடுத தலைவாரி விட்டாள்

பேருந்து நிலையத்தில்

சுற்றி இருப்பவர்கள்

பற்றிய கவலைகள் இன்றி

அம்மாவை பற்றியே குறை

சொன்னான்.அதுக்கென்னடா

அதான் உனக்கு நானிருக்கேன்..

கல்யாணத்துக்கு பிறகும் என்மேல பாசமா இருப்பீயா... ஏக்கத்துடன் கேட்ட கேள்விக்கு பதிலுயைத்தாள்

நீ என்னோட 

பாசக்கார அருமை தம்பிடா...

சாலையை கடக்கும்

அனைவரும் வாய்குள்ளே

முணுமுணுத்தனர்....

காதல் படுத்தும் பாடு....

உலகம் எதைத்தான்

சரியாக புரிந்து கொண்டது

சகோதர சகோதரிகளின்

காதலில் என்றுமே

தலையீடு செய்யாத

காமம்....

விரகதாபத்தில்

துடிப்பவர்களுக்கு...

புரிய இயலாது

இந்த தாய் அன்பு

பேருந்து நிறுத்தத்தில்

ஒரமாக இருந்த கிழவி

கண்களை துடைத்து

ஆகாயத்தை பார்த்து

வேண்டிக்கொண்டாள்..

ஆண்டவா இந்த அக்கா தங்கச்சி உறவையாவது கடைசி காலம் வரை

பிரிவில்லாமல் ஓண்ணா வாழ வை

எதிர் சுவற்றில் சிரித்தபடி பாசமலர்

சிவாஜியின் பட விளம்பரம் 




ஆனந்தம்

கைகளை

பிடித்து

நடைபழக்கிய

தந்தையும்...

கன்னத்தை

அடிக்கடி கிள்ளி

முத்தமிட்டு இது

என்னோட தம்பி

பூரித்துப் போன

சகோதரிகள்...

கைகளை பற்றி

காதலை 

உணர்த்திய

காதலன்/லி

என்றுமே 

நினைவில்

சுகமாக தாலாட்டும்

நினைவுகள் 

ஆனந்தம்


காதல் சுகமானது

மறக்க

நினைப்பதை

மறக்க முடியாமல்

தவிக்கும் மனம்...

எத்தனை முறையோ

காதலில் தவித்து

ஊருக்கு பயந்து

போலியாய் வாழுகிறேன்

காதலை வெறுப்பவள் போல

ஆனால் மனமோ காதலை

நினைத்து ஏங்குகிறது...

ஏனெனில் காதல் 

சுகமானது





முதல் காதல்

வயதான

காலத்தில்

மரணத்தின்

தருவாயில்

படுக்கையில்

விழுந்த பிறகும்

ஏனோ முதன்முதலாக

மனதில் பூவாய்

பூத்த காதலை

மறக்க முடியவில்லை...

சுற்றி நின்று அழும்

மனைவி மக்கள்...

ஆயினும் மனமோ

தேடுகிறது அந்த

அத்தை மகளை...

அவளோ தள்ளாடி

 நடக்கமுடியாமல்

பேத்தியின் கைபிடித்து

ஆஸ்பத்திரிக்கு

நடந்து வருகிறாள்...

இருவரின் மனதிலும்

வெளியே சொல்லாமல்

பேணி வளர்த்து 

யாருக்கும் தெரியாமல்

பாதுகாத்த மெலிதான

முதல் காதல்







அச்சாணி

வாழ்க்கை 

வெறுத்து போகும்

சமயத்தில்.. 

எங்கிருந்தோ வரும் 

ஓர் சிறிய வெளிச்சம் தான்

 வாழ்க்கையின் அச்சாணி...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...