( இந்தக் கதை தன் அப்பாவின் காதல் கதையைப் பற்றி கேட்கும் பெண் சம்பந்தப்பட்டது )
எனக்கு இந்த கல்யாண வீட்டுக்கு வர இஷ்டமே இல்லை ஆனால் இந்த
அப்பா தான் என்னை கட்டாயப்படுதி அழைச்சிட்டு வந்து...அம்மா அப்பாவை எங்கே என்ற விஷ்ணு துர்க்கா. .
அட உங்க அப்பாவுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு தன்னோட சொந்தங்களை பார்த்த சந்தோஷம், அதனால் தனக்கு பொண்டாட்டி பொண்ணு இருப்பது கூட மறந்து போய் உங்க அப்பன் எப்படி பல்லை காட்டி பேசிக்கிட்டு இருக்காரூ பாரு..
அது தான் டீ உங்க அப்பாவோட முறை பொண்ணு, எல்லாம் என் நேரம்... எங்க அப்பனை சொல்லணும்.. வீட்டு திண்ணையில் உட்கார்ந்து ஊருக்கே உபதேசம் பண்ணிட்டு. கவர்மென்ட் மாப்பிள்ளை என்றவுடன் என்னை உங்க அப்பனுக்கு கட்டி வைச்சாரே..
இப்போ உனக்கு என்னம்மா குறைஞ்சல், உன்னை ராணி மாதிரி தானே வைச்சிருக்கார். உன் அக்கா தங்கச்சி வீட்டில் கூட அவங்க தான் இன்னும் பத்து பாத்திரம் கழுவுறாங்க.
உனக்கு நான் பிறந்த அப்போ இருந்து வீட்டு வேலை செய்ய வேலைகாரி.இன்னிக்கு வரைக்கும் நீ ஏதாவது பாத்திரம் கழுவி.வீடு சுத்தம் பண்ணி நான் பார்த்தே இல்ல.
யம்மா தாயே உன் திருவாயை மூடு..உங்க அப்பனை விட சிறந்தவன் ஒருத்தனுமே இல்லை போதுமாடீ..
நீ கோபத்தில் சொன்னாலும் அது தான் உண்மை..வேக வேகமாக வந்த கேசவன் சொன்னான்.. ஏய் விஜயா நான் சொல்லுவேனே என்னோட அத்தை பொண்ணு ஆஸ்திரேலியாவில் இருக்கான்னு..
வந்திருக்காங்க ஓர் நிமிஷம் வாயேன் அவங்க குடும்பத்தோட நிக்கிறாங்க என்றே சந்தோஷமாக சொன்னான்..
ஏதோ கல்யாண மண்டபத்தில் சேர் இல்லாத மாதிரி பேசுறீங்க... அவங்க நின்னா எனக்கு என்னவாம்... என்னால் நடக்க முடியலை.வேணுன்னா அவங்களை வந்து என்னை பார்க்க சொல்லுங்க.அந்த சீமை மகாராணியை பார்க்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா.
அம்மா நீ வாயை வைச்சுகிட்டு சும்மா இரு.. இன்னிக்கு சண்டை இழுக்காதே.
இதே அப்படியே உங்க அப்பனுக்கு மண்டையில் உறைக்கிற மாதிரி சொல்லுடீ... இதுக்கு தான் நான் உங்க சொந்தகாரங்க வீட்டுக்கே வருவதில்லை
உங்க குடும்பமே பிச்சைகார குடும்பம் தானே ஏதோ உங்க குடும்பத்துக்கு அதிர்ஷ்டம் நிறையவே இருக்கு போலே அதான் எல்லாருக்கும் கவர்மென்ட் வேவை கிடைச்சது.
தள்ளி நின்றவர்களிடம் நீங்க கிளம்புங்க என்றே சைகை செய்தான்.
பாருடி உங்க அப்பனை தன் ex-lover -க்கு சிக்னல் கொடுக்கிறாரூ..
ஏன்டீ இப்படி படுத்துறே.நான் அவளை காதலிக்கவே இல்லை.. எனக்கு உன் மேல தான் லவ் போதுமா..
ஆமாம் நம்பிட்டேன்.. போகும் போது அந்த நகை கடைக்கு போகணும் ஓர் புது டிசைன் வந்திருக்கு என்று மேனேஜர் போன் போட்டாரூ.. நான் கெஞ்சி கேட்டதால் அதை யாருக்கும் கொடுக்காம எனக்காகவே விற்பனை பண்ணாம இருக்காரூ தெரியுமா.
சரிம்மா என்றான்..
யம்மா நீ என்ன லூசா.. ஓவ்வொரு மாசமும் இப்படியா பைத்தியம் மாதிரி ஓவ்வொரு நகையா வாங்குவே..உனங்கென்னடீ என் புருஷனே வாயை மூடிக்கிட்டு கிடக்காரூ நீ என்னமோ துள்ளுறே.. என்னங்க உங்க பொண்ணை கொஞ்சம் அடக்கி வையுங்க ரொம்ப பேசுறா என்னும் போதே அவர்கள் பக்கத்தில் வந்து இருந்தனர்
சிரமப்பட்டு எழுந்திருக்க சிரம்படுவது போல் பாவலா செய்த விஜயா..அக்கா நீங்க கஷ்டப்பட வேண்டாம் நீங்க உட்கார்ந்தே இருங்க..
நான் தான் உங்க வீட்டுக்காரோட அத்தை பொண்ணு என்ற வித்யா...
நான் தான் உங்க முறைபையனோட பொண்டாட்டி என்று பதிலுக்கு சூடாக பதில் சொன்ன விஜயா..
ஆமா நீங்க தானே நாலு வருஷமா இப்போ ஆஸ்திரேலியாவில் இருக்கீங்க..
ஆமாம் ஓரே பையன் அவனுக்கு அங்கே வேலை கிடைச்சதும் அங்கேயே போயிட்டோம்..
ஆமாம் உங்களோட தென்னந்தோப்பு பங்களா எல்லாம் ஊரில் இருந்துச்சே அதை வித்தாச்சா என அக்கறையா கேட்ட விஜயா.
ஓ..அதுவா பையன் அதெல்லாம் இனி நமக்கு எதுக்குன்னு தங்கச்சி பெயருக்கே எழுதி வைச்சுட்டான்..
ஓரே பையன்னு சொன்னீங்க.. ஆமாம் ஓர் பொண்ணு ஓர் பையன் .
நீங்க சென்னையில் எங்க வேலை பார்த்தீங்க..
தலைமை செயலகத்தில் வேலை பார்த்தேன்... அப்படின்னா நீங்க கலெக்டரா என்ற கேள்வியில் அவளுக்கு வீட்டை தவிர எதுவுமே தெரியாது என்ற வெகுளித்தனத்தை உணர்ந்தவன்.
நான் சேரும் போதே கலெக்டரா தான் சேர்த்தேன்.
பிறகு எதுக்கு அதை விட்டு விட்டு சென்னை போனீங்களாம்.
பக்கத்தில் இருந்த கேசவன் கண் சாடை செய்தான் இவளுக்கு அவ்வளவா படிப்பு கிடையாது வெறும் 8-ம் கிளாஸ்..
புரிந்து கொண்டவள்.. நான் உங்க பக்கத்தில் உட்காரலாம என்றதும்..
கொஞ்சம் தள்ளியே உட்காருங்க நீங்க பக்கத்தில் உட்கார்ந்தா எனக்கு மூச்சை மூட்டும் என்றது அவளின் மனதில் இருந்த அழுக்கும்.. எப்படித்தான் இந்த ராட்சசியை இவன் சமாளிக்கிறானோ என்று கேள்வியும் மனதில் வந்தது.
நீங்க தான் ரிடையர் ஆயிட்டீங்களே உங்களுக்கும் கவர்மென்ட் பென்ஷன் வரும் தானே.. ஆமாம் மாசம் எவ்வளவு வரும் என்றே ஆசை பொங்க கேட்டாள்.
எல்லாம் போக ஓன்றை லட்சம் வருது..
அப்போது நீங்களும் மாதாமாதம் வந்து பென்ஷன் எடுத்திட்டு போவீங்களா..
நாங்க இரண்டு வருஷத்துக்கு ஓர் தடவை தான் இந்தியா வருவோம்..எல்லோமே பேங்க் அக்கவுண்ட்-ல் இருக்கும்
அப்போது அதை ஆஸ்திரேலியாவில் எடுக்க முடியாதா..
இப்போ தான் online banking வந்துடுச்சே.. அங்கேயே எடுக்கலாம் ஆனால் பையன் உங்க பென்ஷன் பணத்தை எல்லாம் தங்கச்சிக்கும் உங்க செலவுக்கும் வைச்சுக்கோங்க என்று சொல்லிட்டான்
வாசலில் யாரோ ஒர் வயதான பெண்மணியும் வயதான வரும் மெதுவாக அந்த பெண்மணி கழுத்தில் நிறையவே நகை அணிந்தபடி வந்து கொண்டிருந்தாள்..
உடனே விஜயா என்னங்க எங்க சித்தி வாறாங்க பாருங்க என்றே சிறு குழந்தை போல் எழுந்து ஓடினாள்.
அதை கண்டவள் அவனிடம் ஏதோ கேட்க முயலும் போது.. நான் போய் அவங்களை பார்த்திட்டு வருகிறேன் நீங்க பேசிக்கிட்டு இருங்க என்றேன் வேகமாக தப்பித்து சென்றான்.
ஆமாம் பாப்பா உன் பெயர் தானே.. விஷ்ணு துர்க்கா.
ஆமாம் அன்ட்டி என்றாள்.
அவளோ ஆன்டி இல்லம்மா உனக்கு நான் சித்தி என்றே தனது பாசத்தை விதைத்தாள்..
நீ தானே ஜர்னலிசம்ஸ படிச்சது.. உன் மனசுல இருப்பதை யாருக்கும் பயப்படாம எழுது புவனா.. ஏதாவது பொலிடிகல் பிரஸர் வந்தா என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன் என்ற புவனேஸ்வரி.
ஆமாம் உங்க அம்மாவுக்கு ஏதோ நடக்க முடியாதுன்னு கேசவன் சொன்னாரூ ஆனா உங்க அம்மா இவ்வளவு நல்ல நடக்குறாக்களே பிறகு ஏன் அப்படி சொன்னாரூ
ஏன்னா எங்க அம்மாவுக்கு எங்க அப்பா வழி ஆளுங்க என்றாலே ஆகாது
இதுவே உங்க கழுத்தில் ஐம்பது பவுன் கிடந்தா.. உங்க பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவாங்க சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க. சரியா பணப்பேய்... நகை பைத்தியம்.
என்ன விஷ்ணு துர்க்கா உங்க அம்மாவையே இப்படி பேசுறே தப்பில்லையா.
இதுல என்ன தப்பு இருக்கு, இருக்கறதை தானே சொல்லுறேன்.
நீயும் உங்க அப்பா மாதிரியே தான் போல மனசுல இருப்பதை அப்படியே பேசுறே
ஆமாம் நான் ஓண்ணு கேட்டா நீங்க மறைக்காம எனக்கும் பதில் சொல்லுவீங்களா...
நீ எதை வேணாலும் கேளூ ..
எங்க அப்பா இதுவரையில் என்கிட்ட எதையும் மறைச்சது இல்லை தான் ஆனாலும் எல்லா மனிதனின் மனதலும் ஏதோ ஒரு சொல்லைப்படாத ரகசியம் இருக்கும் என்று சைக்காலஜி படிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன்
உங்க அப்பா பத்திய ஏதாவது ஓர் ரகசியத்தை நீ தெரிஞ்சுக்கணும் அப்படித்தானே...
நீங்க ரொம்ப புத்திசாலி உடனே உங்களால் இப்படி பேச முடியுது..
சரி உங்க அப்பாவுக்கு நான் முறைப்பொண்ணு தான். ஆனால் உங்க அப்பா என்னை எப்போதும் எந்த தவறான எண்ணத்துடனோ தவறாக கூட பேசவில்லை.. இன்னும் சொல்லப்போனால் என்னை தன்னோட உடன் பிறந்த தங்கச்சி போலவே தான் பாரத்தாரூ.. ஆனால் என் கூட படிச்ச ஓர் பொண்ணை அவர் ரொம்பவே காதலிச்சார்.. அந்த பொண்ணும் கூட உங்க அப்பாவை ரொம்பவே விரும்பினா.. பக்கத்தில் அவளின் அப்பாவும் அம்மாவும் வருவதை கண்டதும்.. பேச்சை நிறுத்தினர்.
கல்யாண வீட்டிற்கு போய் விட்டு வீட்டுக்கு வரும் போது இரவு ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அனைவருமே களைப்பில் உறங்கிப் போயினர்
மறுநாள் காலையில் வராண்டாவில் அமர்ந்தது பேப்பர் படித்து கொண்டு இருந்த அப்பாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தவள்.
அப்பா நீங்க சின்ன வயசுல யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா என்றதும்..
தன்னையும் அறியாமல் தூரத்தில் உள்ள எதையோ பாரப்பதை போல் பாவனை செய்தவரின் கண்கள் கலங்கியது.
சில நொடிகளில் தன்னை மீறி வந்த பழைய நினைவுகளை சற்றே புறந்தள்ளி விட்டு . பாப்பா அப்படியெல்லாம் ஒண்ணுமே கிடையாது நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு கவலைபடாதே என்றார் கேசவன்.
நீங்க யாரையுமே காதலிக்கலைன்னா எதுக்குப்பா உங்க கண் கலங்குச்சு
கண்ணில் சிறு தூசி விழுந்ததுட்டு என்றே கண்களை துடைந்தார்..
அப்பா நான் உங்க பொண்ணு உங்களைமுகபாவனை நல்லாவே தெரியும் என்கிட்ட பொய் சொல்லாதீங்கப்பா...
தனது மகளை தோளில் சாய்ந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டார்.
பாப்பா இந்த உலகில் எல்லா ஆண் மனதில் ஏதோவொரு முதல் காதல் இருக்கும்.
சிலருக்கு இரண்டு மூன்று காதல் கூட இருக்கலாம்.ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் வாழ்க்கை பற்றி பயத்தின் காரணமா. ஏதோ ஓர் பொண்ணை கட்டிகிட்டு வாழுறாங்க.
இன்னும் உண்மையை சொல்லப் போனால். இங்கே பல பேர் தன்னோட சொந்தக்காரங்க நண்பர்கள் கூட வேலை பார்த்தவங்க வீட்டில் நடக்கும் கல்யாண வீட்டிற்கு போலவே தன்னோட பழைய காதலி அந்த கல்யாவீட்டுக்கு வந்தா நேரில் பார்த்து இரண்டு வார்த்தையாவது பேசலாமே என்ற எண்ணத்தில் தான். ஆனால் அந்த இருவருக்குமான அன்பு... நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கும் என்று நினைக்கும் ஓர் வயதான மனிதரின் அன்பை போன்றதே.
அப்பா உங்க காதலியை நீங்க பார்த்து இருக்கீங்களா.. என்றதும்
அந்த பொண்ணு இப்போ பேரன் பேத்தி கூட இருக்காங்க சிரித்தபடியே சொன்னார்.
அப்பா நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலையே.
அவ்வளவு ஏன் நேத்து நடந்த கல்யாண வீட்டிற்கு கூட அவள் வந்திருந்தா.
நானும் அவளும் பேசிக்கிட்டோம் போதுமா என்ற போதும் அவரின் முகத்தில் வெட்கமும் காதலும் தெரிந்தது.
அப்பா இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியுமா என்றதும். அந்த நகை பைத்தியத்துக்கு நகை வாங்கணும் நல்லா ஹோட்டலில் போய் சாப்பிடணும் ஊர் சுத்தணும் இதை தவிர வேற எதுவுமே தெரியாது.