810-வது படைப்பு ரிப்போர்ட் மாறிப்போச்சு

ஓர் நாள் அந்த கிராமத்தில் இருந்த கிளினிக் 65 - வயசு தாத்தா. தன் மனைவியை அழைத்து கொண்டு வந்திருந்தார்..டாக்டர் அவங்களை செக் பண்ணி ரிப்போர்ட் எடுத்திட்டு வரச் சொன்னார்.

டெஸ்ட் எல்லாம் எடுத்து முடித்த சில மணி நேரங்களுக்கு பிறகு, நர்ஸ் வந்து சொன்னாங்க... தாத்தா உங்களை மட்டும் டாக்டர் உள்ளே வரச்சொன்னார்.

பாட்டி நீங்க பயப்படாம உட்கார்ந்து இருங்க. டாக்டர் எல்லா விஷயத்தையும் உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிடுவார்.


உங்களுக்கு பயப்படுற மாதிரி எந்த நோயும் இல்லை சரியா..

டாக்டர் அந்த தாத்தாவிடம் சொன்னார்.

என்னை மன்னிச்சிடுங்க தாத்தா.ஆனா இந்த உண்மையை நீங்க எப்படி தாங்கிக் போறீங்கன்னு தான் தெரியலை..


டாக்டர் நீங்க எதுவாக இருந்தாலும் தயங்காம சொல்லுங்க. எனக்கு என்னோட பொண்டாட்டி தான் முக்கியம் பணம் சொத்து காசு எல்லாம் அப்புறம் தான்...

சரி...நீங்களே தைரியமாக இருக்கும் போது எனக்கென்ன. நான் என்ன கதையா சொல்லப் போறேன். வந்ந ரிப்போர்ட்-க்கு ஜோசியர் கட்டத்தை பார்த்து பலன் சொல்லுற மாதிரி.

அதுலே என்ன இருக்கோ அதை தானே சொல்லப்போறேன்...

உங்க மனைவி, அதான் அந்த பாட்டியால். இனிமே ரொம்ப கத்தி பேச முடியாது..‌.. வேகமாக நடக்கவும் முடியாது...கனமான எந்த பொருளையும் தூக்க முடியாது.. அப்புறம் முக்கியமான அவங்க மனசுக்கு அதிர்ச்சி தரும் எந்த விஷயமும் சொல்லக்கூடாது என்று டாக்டர் சொன்னார் .


அப்படி சொன்னா என்னவாகும் டாக்டர்...

அவங்க உடலில் முதுமை காரணமாக பல நோய்கள் இருக்கு.அதனால் நீங்க சொல்லுற விஷயம் அவங்க மனசை ரொம்பவே பாதிக்கும்..பிறகு பிரஸர் சுகர் என்று ஏறும் 

பிறகு... கிளினிக் விட்டு வெளியே வந்தவுடனே தனது மனைவிக்கிட்ட சொன்னாரூ...  நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஓர் விஷயத்தை சொல்லாம மறைச்சிட்டேன் அதை இப்பவே சொல்லியாகணும்...சரி.சொல்லுங்க....உங்க அறிவு கெட்ட சித்தப்பன்.இருக்கானே அந்த கேடு கேட்ட முட்டாள்..


ஓர் நாள் அவன் என்னை சந்தையில் பார்த்து சொன்னான்..போன வாரம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஓருத்தங்க வந்து உன்னை பொண்ணு பார்த்து போயிட்டாங்க..

அதனால் நீங்க தைரியமா உங்க அம்மாவை கூட்டிட்டு வந்து அக்காவை பொண்ணு கேளூங்க.. உடனே நான் பக்கத்தில் இருந்து, நம்ம சொந்தம் விட்டு போககூடாது.  அப்படி இப்படின்னு ஏதாவது நாலு வார்த்தை பேசி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா தான் பேசினான்.

 அதை நம்பி பொண்ணு பார்க்க வந்த பிறகு தானே தெரியுது...... உன் தங்கச்சிய நிச்சயம் பண்ண ரெடியா வாங்கன்னு சொல்லி  பொண்ணு பார்க்க கூட்டிக் கொண்டு வந்தாரூ..அங்கே வந்த பிறகு தான் தெரியும் ... வேகமாக ஓடி வந்த நர்ஸ் சொன்னாங்க... தாத்தா எங்களை மன்னித்து விடுங்க.ரிப்போர்ட் மாறிப்போச்சு என வாங்கிச் சென்றாள்..ச்சே ரிப்போர்ட் கூடவா மாறிப் போச்சு என சொல்லிவிட்டு பக்கத்தில் பார்த்தான

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...