725 - ஆண்ட கட்சி

 தொண்டர்களை மறந்து 

கரண்சியை எண்ணிய 

கட்சி தலைவர் அவர்..

கரண்சியின் கரெண்ட் 

வந்த மயக்கத்தில் 

தொண்டர்களை புறந்தள்ளினார்.

கரண்சியும் கட்சியும் 

கரைந்த பின்னர் 

( மன்னிக்கவும் மேலே இருப்பவன் 

கரைக்க வைத்த பின்னர்)

கரைந்து போன கரண்சி வந்த 

வழியை சொல்ல 

வருமானவரித்துறை வாசலில் 

நிற்கிறார்.. சார்..டீ... சார் டீ...

என்பவன் கூட முறைத்து செல்கின்றான்...

முன்னாள் தலைவர்.. பணமின்றி 

அவர் படும் அவஸ்தையை ...

கரைந்தது கரண்சி மட்டுமல்ல...

ஆறுபது ஆண்டுகளாக 

ஆண்ட கட்சியும் தான்..

724 - பணத்தின் வலி(மை)

பாசத்தை தேடுபவன் 

பரிதவிக்கிறான்..

பணத்தை தேடுபவனோ 

பரிகாசம் செய்கிறான்..

பாசத்திற்கு கட்டுபட்டு 

கடையில் கல்லாவின் 

அமர்ந்தவனை பதம் பார்க்கிறது 

பணமென்னும் வஜ்ராயுதம்..

ஓவ்வொரு நாளும் சொந்த 

உறவுகளிடம் பணத்தின் 

கணக்கை சொல்லும் போதே 

புரிகிறது....பாசத்தை 

அடமானம் வைத்தது

பணத்தின் வலி(மை)


723 - அந்த மனிதர்கள்

பணமும் பாசமும் 

மாறுபட்ட தளங்கள் 

ஆனால் இந்த உண்மை 

புரியாமலே புறந்தள்ளி 

நடக்கின்றனர் பணத்தை 

தேடி ஓடி அலையும் பாசக்கார 

மனிதர்கள்.... அலுத்துக் களைத்து 

அமரும் போதே தேடி கின்றனர் 

தாங்கள் தொலைத்த அன்பான 

நேரங்களை....காசுக்காக பாசத்தின் 

நேரத்தை அடமானம் வைத்த 

அந்த மனிதர்கள்

722 - மன்மோகன்சிங் மறைந்தார்

கூண்டிற்குள் அடைபட்டு கிடந்த இந்திய பொருளாதாரத்தை உலகளாவிய சந்தைக்கு விரிவுபடுத்தி, இந்தியாவின் பொருளாதாரத்தின் தரத்தை உலகமே வியக்கும் வண்ணம் வழிகாட்டிய சிறந்த பொருளாதார நிபுணர்.


லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தங்கம் வாங்கி விட்டு இந்திய பொருளாதாரத்தை தங்கமாக ஜொலிக்க வைத்தவர்

இந்திய வங்கிகளின் தலைமையாக செயல்பட்ட ரிசர்வ் வங்கியின் கவர்னராக  விளங்கியவர்.

இந்திய பொருளாதாரத்தின் கட்டமைப்பை மாற்றியமைத்து மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர்.. இவர் செய்த பொருளாதார மேம்பாட்டிற்கான வரலாற்று நிகழ்வுகளே செயல்களே இவரை பாரத பிரதமராக அரியணையில் அமர வைத்தது.

நமது இந்திய பொருள்கள் உலக நாடுகளில் கிடைக்கவும்..பிற நாட்டு பொருள் இந்தியாவில் கிடைப்பதற்கும், இவர் வகுத்து கொடுத்த மிக உன்னதமான திட்டங்கள் தான்.

படித்தவர் என்பதையும் தாண்டி சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்திய திருநாட்டின் பாரத பிரதமராக இவர் செய்த செயல்கள் காலம் கடந்தும் போற்றுதலுக்குரியதே...

ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭

721 - செல்ல மகள்

அன்பே உருவான எனதருமை மஞ்சள் நிற தேவதையே உனது மனதில் இருந்த காயங்கள் எல்லாம் சரியாகி விட்டதா என்றே வாஞ்சையுடன் அவளின் முன்னால் கெஞ்சலுடன் கேட்டேன்..அவளோ தனது மழலை மொழியில் வார்த்தைகளை தட்டு தடுமாறி தேடிப் பிடித்து யோசித்து யோசித்து சொன்னாள்.   என்மேல் இருந்து பயம் குறைச்சு போச்சுன்னு நினைக்கிறேன்.. உனக்கு ரொம்ப தான் கொழும்பு கூடிப் போச்சு.. ஏய் சமையல்காரி உன் புருஷன் என்கிட்ட என்னமோ சொல்லுறான்.. என்னன்னு கேட்டு சொல்லுடீ.. நான் கேட்டத்தை வாங்கிட்டு வந்தால் தான் இந்த செல்லம் அந்த ஆள்கிட்ட பேசும்..தோசை கரண்டியோடு எரிச்சலுடன் வெளிப்பட்டாள்..அவளை பெற்ற மகராசி..

ஏன்டீ நாலு வயசு கூட முழுசா முடியலை அதுக்குள்ளே என்னையவே அதிகாரம் பண்ணுவீயா... அம்மாவின் அடிக்கு பயந்தே தோளில் வந்து சாய்ந்து கொண்டு சிணுங்கினாள் செல்வமகள்..யப்பா வர வர உன் பொண்டாட்டி ரொம்ப எரிச்சல் படுறா இவளை   நீ எப்படித்தான் சமாளிக்கிறீயோ...அலுத்துக் கொண்டாள் 

கள்ளமில்லாத சின்னஞ்சிறு தேவதையான அன்புமகள்..மனைவியோ கண்களால கவிதை சொன்னாள்..உங்க பொண்ணுக்கு உங்கள மாதிரி வாய் ஜாஸ்தி 

720 - அப்பாவின் அப்பாவி காதல்

 தன் மீது அளவுகடந்த அன்பும் பாசமுமாய் வாழ்ந்த அப்பாவிடம் அவள்தான் அந்த கேள்வியை கேட்டாள்.

அப்பா எத்தனையோ நாள் நான் உன்னிடம் கேட்க நினைத்த கேள்விதான் ஆனால் உன்னோட மனசு கஷ்டப்படுமே என்று கேட்காமலே இருந்து விட்டேன்.. இப்போ நீ நோய் பட்டு படுத்த படுக்கையில் இருப்பதால்... உன் அதிகமாக மரியாதை வைத்து இருக்கும் சொந்த பந்தமும் நட்பும் கூட உன்னை போல் வாழ முடியலையே என்று ஏக்கத்துடன் சொல்வதுண்டு.


உங்க அப்பா தான் எங்களுக்கு எல்லாம் ஓர் வழிகாட்டி என்று அதனால் தான் கேட்கிறேன்..நீ என்கிட்ட உன் மனசுலே தோணும் பதிலை எனக்கு சொல்லுவாயா அப்பா.. தளர்ந்து போன உடல், தள்ளாடிய படி இருக்கும் அவரின் உடல்.. மெதுவாக அவருக்கு வலித்து விடாத படி அப்பாவின் கன்னத்தோடு தனது கன்னத்தை உரசிய படி கேட்டாள்.அப்போது அவளின் கண்ணில் வந்து உஷ்ணமான நீர் அவரின் நெற்றியில் பட்டது.

என் அன்பான மகள் நீ எந்த ஒரு விஷயத்துக்கு அழக்கூடாது என்று தானே உனக்கு சொல்லி வளர்த்தேன்.. ஏன் இன்னிக்கு இப்படி என்றார்.

என்னை மன்னிச்சிடு அப்பா , என்னோட மனசுல இருந்து நம்பிக்கை குறையுது அதனால் தான்..


கவலைபடாதே மகளே எனக்கு இப்போ 72 வயசு தான் ஆகுது.. இன்னும் 21 வருஷத்துக்கு என்னோட ஆயுசு இருக்கு..நீ கவலைபடாதே.

அப்பா அவளின் கண்ணீர் பெருகியது.. இருந்தாலும் நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லியே தீரணும்.

நான் எவ்வளவு நல்லவனா இருந்தாலும் என்னோட சின்ன வயசுல யாருமே என்னை நல்லவனா நினைக்கவும் இல்லை அங்கீகாரம் செய்யவும் இல்லை.

அதனால் நான் உங்க அம்மாவ கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு ஓர் தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன்..உனக்கு தான் தெரியும் முருகன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று.


அதனால் சாகுறதுன்னு முடிவு எடுத்தாச்சு, நமக்கு பிடிச்ச முருகனை கடைசியா ஓர் தடவை கோவிலில் போய் கும்பிட்டு விட்டு சாகலாம் என்று பத்து கிலோமீட்டர் தள்ளி இருந்த அந்த மலை கோவிலுக்கு நடந்தே போனேன் .

கோவில் உள்ளே போகும் வரை எப்படியும் செத்தே போகணும் என்று நினைச்ச எனக்கு .. அங்கே அந்த கோவிலுக்கு போன உடனே மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை உணர்ந்தேன்.

யாரும் அதிகமா இல்லாத அந்த கோவிலில் பூசாரி இருப்பா..சில நேரங்களில் அந்த கோவிலில் ஓர் சாமியார் இருப்பார். 

அவர் குளிச்சே பல வருஷமா இருக்கும், பெரிய தாடி சடாமுடி அழுக்கேறிய உடை இப்படி தான் இருப்பார். நான் கடவுளை தான் கூப்பிடுவேன்.. இவர் சாதாரண மனுஷன் தானே இவனுக்கு எல்லாம் வணக்கம் சொல்லணும் என்ற வாலிப திமிரில் அலைந்த கால கட்டத்தில் அவரை நான் மதிச்சதே கிடையாது.


ஆனால்அந்த மனிதன் எப்போதும் 

719 - நல்லவன் வாழ்வான்

 நல்லவனாக வாழ்ந்து பாருங்க.. பிறகு தெரியும் நல்லவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று ஏன்னா நீங்க நல்லவனா இருக்கலாம் ஆனால் எதிரில் இருக்கும் நபர்கள் உங்களை கெட்டவனா என்று தான் யோசிப்பாங்க ஏன்னா இந்த உலகில் நல்லவனா வாழும் ஓவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரால் ஏமாற்ளத்தை தன்னோட வாழ்க்கையில் அனுபவமாக பெற்று..அதை போன்ற அனுபவம் வேறு யாருக்கும் வந்துட கூடாது என்று வாழ்பவர்கள் தான்.. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களை பெற்றோரிடம் கேட்டு பாருங்கள் அவங்க ஏன் நல்லவராகவே வாழ்ந்த கதையை சொல்லுவாங்க 

718 - மகாகவி பாரதி

 பாவைகளின் வாழ்வில் தனது பாக்களால் பாதை காட்டியவன் மேடையில் ஏறி 

போலியாக 

பெண் விடுதலை பேசி காசு வாங்க தெரியாத அப்பாவி முண்டாசு கவிஞன்..ஆயினும் இந்த அப்பாவி மனிதன் தன்னை விடவும் அப்பாவியாக வாழ்ந்த இந்திய மக்களின் மனதில் ஏற்படுத்திய சுதந்திர தாகம் தான் எவ்வளவு அசாத்தியமது

பரங்கியரின் பீரங்கியும் துப்பாக்கியும் கண்டு கலங்கிடாமல் கர்மத்தின் வழியில் தர்மம் நிலைநாட்ட எழுதிய கட்டுரையை படித்து கோட்டையில் இருந்தவருக்கு 

சிம்ம சொப்பனமாய் இருந்ததுவே... எட்டயபுரத்தில் அவதரித்து இந்திய இலக்கியத்தில் 

இமயம் தொட்ட 

இவனின் உயரத்தை  இதுவரையில் யாராலும் தொட முடியவில்லையே..

ஏனெனில் இவன் காசுக்காக வாழ்ந்தவனில்லை..

கண்ணனின் மொழியில் கர்மயோகியாக 

வாழ்ந்த முண்டாசு கவிஞன் எங்களின் 

மகாகவி பாரதி

717 - கடவுளும் குழந்தையும்


பொறுப்பு துறப்பு - 
கீழ் கண்ட கதை முழுக்க முழுக்க கற்பனையே..யாராவது ஒருவர் இது எனது வாழ்வில் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அது தற்செயலானதே.. அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல 

 ஓர் நாள் உலகில் இருக்கும் மக்கள் எல்லோரும் நம்மை எவ்வளவு அன்பா கூப்பிடுறாங்க.. ஆராதனை பஜனை எல்லாம் பண்ணுறாங்க என்று சந்தோஷமா பூமிக்கு வந்து தன்னை வணங்கிய வழிபட்ட ஓவ்வொரு மனிதரோட வீட்டுக்கும் போய் வாசலில் நின்று கொண்டு.. நீங்க தினமும் வழிபடும் கடவுள் நான் தான் என்றார்..இதே மாதிரி எல்லா வீடுகளிலும் போய் சொன்னார்.. பாவம் அந்த கடவுளோட நிலைமை யாருக்கும் வந்துட கூடாது.. என்னவென்று கேட்குறீங்க..எல்லா மதங்களை சேர்ந்த எல்லா மனிதர்களும் நாட்டுகாரங்களும்... அந்த.ஓரே ஓர் கேள்வியை தான் மீண்டும் மீண்டும் கேட்டார்களாம்..

ஏன்ப்பா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சு வந்தேன்னு சொல்லு????

கடவுளை நம்புறவங்க தான்..கடவுளை பைத்தியக்காரங்க என்று நினைக்குறாங்க..இது வரைக்கும் கடவுளே இல்லை என்று சொல்லி இருப்பவன் முன்னாடி நின்னு நான் தான் இந்த உலகை படைச்ச கடவுள் என்றவுடன்..

நீதான் கடவுள் என்பதை நான் எப்படி நம்புறது மூணு மணி நேரம் உனக்கு தருகிறேன் நீ தான் கடவுள் என்றால் உலகத்தை எப்படி படைச்சே உலகம் உண்டானது முதல் இதுவரை உலகில் என்னவெல்லாம் நடந்து இருக்கு சொல்லு பார்க்கலாம் என்றான் கடவுளே இல்லை என சொல்லி வாழ்ந்தவன்.

அட நம்மை தினமும் பல்வேறு மதங்களின் பெயரால் வணங்கிய மனிதர்கள் தான் நம்மை நம்பாமல் இருக்காங்க.. இவன் கடவுளை நேரில் பார்க்கவில்லை என்பதால் தான் இவ்வளவு நாள் இப்படி இருந்திருக்காம்.. நான் பேசி முடித்த பிறகு.. இவன் கேட்ட வரமெல்லாம் கொடுத்து இவனை உலகில் உலக புகழ் பெற்ற பெரிய மனிதனாக மாற்றணும் என நினைத்து கொண்டே மூணு மணிநேரம் மூச்சு விடாம பேசினார் கடவுள்.


எல்லாத்தையும் நல்லா விலாவாரியா கேட்டு கொண்டிருந்த அந்த கடவுள் இல்லை என்றவர்..

கடவுள் பேசி முடித்தவுடன்...சரிப்பா இனிமே நீ கிளம்பலாம் என்றார்.

தன்னை இவனாவது நம்புவான் என்று நினைச்சா .. இப்படி தலையும் காலும் புரியாம பேசுறானே என குழப்பி போனார்.


என்னப்பா நான் தான் கடவுள் என்று மூணு மணிநேரம் பேசிய பிறகும் நம்பா இருக்கீயே..இது எந்த விதத்தில் நியாயம்...


யோவ் இந்த உலகம் என்னையும் பல நாள் பைத்தியக்காரன் என்று தான் கேலி பண்ணுச்சு.. நம்மை மதிக்காத மக்களை எப்படி முட்டாளாக்குவது என்று நானே யோசித்து யோசித்து கண்டுபிடிச்ச விஷயம் தான் கடவுளே இல்லை என்று...


ஓர் ஜாதியை இல்லை என்றால் இன்னொ ஜாதிகாரன் சண்டைக்கு வருவான்..ஊரை பத்தி பேசினா ஊர்க்காரன் சண்டைக்கு வருவான்.

மதம் பற்றி பேசினா 

சண்டைக்கு வருவான்.

சட்டத்தை பத்தி பேசினா நம்மை பிடிச்சு ஜெயில் அடைச்சாலும் அடைப்பான்..

கடவுளை பத்தி என்ன பேசினாலும் கடவுள் நேரில் வரவே மாட்டான்.. அதான் கடவுள் எதிர்ப்பை பேசி பேசியே சில வருஷத்தில் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைச்சுட்டேன்..


பிறகு எதுக்கு என்னை இப்படி மூணு மணிநேரம் பேச வைச்சு கேட்டேன்.


எல்லோரும் சொல்லுற மாதிரி நீ பைத்தியக்காரன் தானா.


ஏய் என்னப்பா நீயும் என்னை பைத்தியக்காரன் என்று சொல்லுறே.

இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ..


பேசவே தெரியாத நன்கு படித்த கூமூட்டைகளையும்...

இன்னிக்கு இதை பேசினா நாளைக்கு நம்ம பதவிக்கு ஆபத்து வருமே என்று கூட தெரியாம மனசில் பட்டதை பேசும் வெள்ளந்தினா மனுஷனையும் கண்டா உடனே எங்களோட அடுத்த மீட்டிங்கில் அவரை சிறப்பு விருந்தினரா அழைத்து...அவரோட அறியாமையை பயன்படுத்தி எங்க கடவுள் மறுப்பு விஷயத்தை நல்லா பேசி சிரிப்போம்... அப்போ தான் அடுத்த மீட்டிங் போடும் போது காசு வசூல் சுலபமா இருக்கும்..


அப்போ நான் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா..


நீ உண்மையிலேயே கடவுளா இருந்தா நான் உன்னை எவ்வளவோ எதிர்த்து பேசி இருக்கேன் அதுக்கு நீ என்னை தண்டிச்சு அல்லவா இருக்கணும்.


நான் மனுஷன் கிடையாது கூட இருந்து சிரித்து சிரித்து பேசி விட்டு முதுகில் குத்துவதோ.. பிறருக்கு துன்பம் தருவது போல செயல் செய்வதோ எனது வேலை கிடையாது.

என்னை வணங்கும் எல்லா மக்களுக்கும் நல்லது செய்வது தான் என் வேலை 

அது வரை அமைதியாக பேசிக்கொண்டு இருந்தவனுக்கு கோபம் வந்தது..

யோவ் இப்போ நீயா போறீயா இல்லாட்டி..சில வார்த்தைகள் பேசவும் மிகுந்த மனவருத்தம் கொண்டு கடவுள் அங்கிருந்து கிளம்பினார்.. அப்போது மனதிற்குள் நினைத்தார்... என்னை வணங்குபவர்கள் எல்லோருமே நல்லங்க அவங்ககிட்ட காசு பணம் இல்லாமல் இருந்தாலும் என்னை பைத்தியக்காரன் என்று தான் சொன்னாங்க... ஆனால் நீயோ என்னை இவ்வளவு நேரம் பேச வைத்து மனசும் கஷ்டபட வைத்து அனுப்பியதால்... உனக்கு நீ விரும்பிய படியே நிறைய காசு பங்களா தருகிறேன்..அதே மாதிரி உன்னை தன்னோட நண்பனா காட்டிக்கொண்டு வாழும் அரசியல்வாதிகளுக்கும் பதவி பட்டம் அந்தஸ்து எல்லாமே தருகிறது.. ஆனால்.. உன்கிட்ட எல்லாமே இருக்கும்... இருந்தாலும் உன் மனசுல நிம்மதியே இல்லாம தான் இருக்கணும்..அது போக உன்கிட்ட இருக்கிற எந்த பொருளாக இருந்தாலும் நீ உன் கூட இருக்கும் நல்லவனை கூட நம்பாமல் சந்தேக புத்தியோட தான் எப்போது இருப்பேன்...எப்போ பதவி போகுமோ எப்போ பணம் நம்மை கையை விட்டு போகும்போது..நம்மை விட இன்னொருத்தர் முன்னேறி விடுவானே என்று சந்தேகம் இது எல்லாமே இருக்கும் என சபித்து விட்டு போனார்.

தன்னை பைத்தியக்காரன் என்று கேலி பேசி எல்லா மதம் சார்ந்த மக்களும் தன்னை மிகவும் இரக்கமாக பார்த்த படி செல்வதையும் அதில் சிலர் சில காசுகளை கடவுள் கையில் கொடுத்து... உனக்கு பசிச்சா போய் சாப்பிடு என்ற சிலர்.இன்னும் சிலர்.. நான் சொல்லுற வேலை மட்டும் செஞ்சா போதும் மூணு வேளை சாப்பாடு தங்கும் இடம் இலவசமாக தருகிறேன் என்றனர்.

சிலர் யார் பெத்த பிள்ளையோ... தானம் செய்து விட்டு நகர்ந்து சென்றனர்.

கடைசியில் யாருக்குமே நான் கடவுள் என்பதை அறிந்து கொள்ளாமல் மீண்டும் வானுலகம் செல்ல தயங்கிய படி கடவுள் நின்று கொண்டு இருந்தார்..


இந்த நிகழ்வை யெல்லாம் பார்த்து கொண்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்த சில சிறு குழந்தைகள், அவரை நோக்கி வேகமாக ஓடிச் சென்றனர்.


கடவுளே....கடவுளே... நீங்கள் யார் எந்த வரம் கேட்டாலும் கொடுப்பதாக எங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி சொல்லி இருக்காங்க.. நீங்க எங்க எல்லோரும் ஓர் வரம் கொடுக்க முடியுமா என்றனர்.


ச்சே என்ன ஓர் பெரிய முட்டாள்தனம் செய்து விட்டேன்.. எதையோ பேரிடம் நான் தான் கடவுள் என்ற போது ஒருத்தனும் நம்பாமல் பைத்தியக்காரன் என்று கேலி பேசி சிரித்தனர். கடவுளே இல்லை என்றவன் என்னை பகடை போல் உருட்டி விளையாடினான்.. இந்த குழந்தையிடம் நான் தான் கடவுள் என்று சொல்லாமலே என்னை புரிந்து கொண்டு வரம் கேட்கிறதே மிகவும் சந்தோஷ பட்டார்.


குழந்தைகளே என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். படிப்பு வேணுமா செல்வம் வேண்டுமா...தனி தீவு வேண்டுமா.. அல்லது இன்னொரு உலகம் குழந்தைகள் மட்டும் வாழும் படி உருவாக்கி தரவா மகிழ்ச்சியா கேட்டார்.


எல்லா குழந்தைகளும் ஓர் சேர கேட்டனர்.. கடவுள் நீங்கள் எங்களுக்கு எதுவுமே நேரடியாக தர வேண்டாம்.


குழந்தைகளே நான் கடவுள் நீங்க எது கேட்டாலும் என்னால் கொடுக்க முடியும் என மீண்டும் தான் கடவுள் என்பதை சொன்னார்..



அதில் ஒருவன் சொன்னான், நீங்க எது கொடுத்தாலும் எப்படியும் எங்க அம்மாவும் அப்பாவும் கண்டுபிடிச்சு அதை எங்கிட்ட இருந்து புடுங்கி விடுவாங்க 

நீங்க என்ன சொல்லுறீங்க எனக்கு எதுவுமே புரிரலையே என்ற கடவுள்..

கடவுளே, நீங்க எங்களுக்கு எதுவும் தரவேண்டாம்.. ஆனால் நாங்க எது கேட்டாலும் எங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி வாங்கி தரும் படியான வரத்தை கொடுங்க என்றார்.முக்கியமா .. நாங்க கேட்கும் ஐஸ்கிரீம் சாக்லேட் சாப்பாடு மற்றும் விளையாட்டு பொருட்கள் இதை நாங்க கேட்டவுடனே வாங்கி தரும் படி செய்யுங்கள் என்றனர் 

தன்னிடம் இருக்கும் புத்திசாலித்தனம் தனது குழந்தைகளில் இருப்பதை நினைத்து சந்தோஷமாக அப்படியே ஆகட்டும் என்றார்.

பணம் என்பதை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் நீங்க எதை கேட்டாலும் உங்களின் பெற்றவர் வாங்கி தரும் படியான வரத்தை தருகிறேன் என்றார்.

அதனால் தான் எல்லோரின் வீட்டிலும் ஐஸ்கிரீம் சாக்லேட் சாப்பாடு விளையாட்டு பொருட்கள் கேட்டால் அவர்களுக்கு அவை கிடைக்கும் படியாக கடவுள் செய்கிறார்..

716 - அக்கா

 தன் கவலைகளை 

எல்லாம் மறந்து விட்டு தனது பாசத்துக்குரிய 

தம்பியின் பிரச்சினைகளுக்கு 

தீர்வு சொல்கிறார் 

அன்பான அக்கா..

தன்னை விட தம்பியை யாராலும்

சிறப்பாக பார்க்கவில்லையோ 

என்ற கவல எப்போதும் அவள் மனதில்.. 

ஏனெனில் பத்து மாதங்களையும் தாண்டி 

ஓவ்வொரு நிமிடமும் தம்பியின் நேசத்தை 

மனதில் சுமக்கும் அன்பாக அக்கா 

714 அவன் ஓர் பிரம்மா

 தன்னுள் இருக்கும் 

எத்தனையோ சோகம் 

கவலை வருத்தம் அத்தனையும் 

மறந்து மறைத்து விட்டு 

படிப்பவர்களின் மனதில் 

எண்ணங்களில் வண்ணமும் 

 வாழும் நம்பிக்கை ஒளியையும் 

பிரகாசிக்கும் படியாக செய்து முகமறியாத யாரோ சிலரின் 

மனதில் நம்பிக்கை விதைக்கவே 

எழுதும் படைப்பாளி... அவன் 

கூலிக்காக எழுதவில்லை...கூலியாக 

இருப்பவரின் நிலைமையை உயரே..  எழுத்துக்களால் பிறரின் தலையெழுத்தை மாற்றும் அவன் ஓர் பிரம்மா 

713 - வேலனின் வள்ளி

யாரிடம் எப்படி 
பேசணும்...யாரை 
எங்கே எப்படி 
புகழ்ந்து பேசணும்..
என்பதை துளியும் 
அறியாத தத்தி அவன்...
போலியாக கூட 
ஓருவரை புகழ்ந்து 
பேச தெரியாமல் 
பலர் முன்னிலையில் 
உண்மையான கருத்தை 
சொல்லி விட்டு...
எதை பற்றியும் யாரை பற்றியும்
புரிதலின்றி புரியாத புதிராகவே 
கவலையின்றி செல்பவன்..
காதலும் அன்புமாய் காமத்தின் 
வசப்பட்டு உணர்ச்சி பெருக்கில் 
அவனருகில் வந்து கற்கண்டாக 
நின்றபடி அவனிடம் 
பேச துடித்தே பேச்சின்றி 
இளமையின் வடிவில் தவித்தாள்.. அந்த 
வடிவான அழகியிடம் 
கூட நீ எதுக்கு என்பக்கத்துல 
வந்து உரசுறே தள்ளிப்போ
என குழந்தை போல் 
பேசிய அவன்.. ஏனெனில் 
அவனை வளர்ந்தவள் அழியும் 
அழகை விட அழியாத அறிவும் 
திறமையும் தைரியமான
பேச்சுமே சிறந்த 
செல்வமென்று வாழ்ந்த 
குறிஞ்சி நிலத்தின் தலைவரான
வேலனின் வள்ளி

712 - சூரியகாந்தி

 



ஒவ்வொரு
வருடமும்
புத்தனும்
ஏசுவும்  பிறப்பதில்லை
அதனால்தானோ
என்னவோ
அன்பெனும்
விதையினை
ஒரு பெண்ணால்
மட்டுமே ஊன்ற முடியும்மென
பெண்ணினை படைத்தான்
ஆயிரம் தோல்விகள்
கண்டவனும்
உயிர்வாழ்வதும்
போராடுவதும்
அன்பென்னும்
துணையவள்
வரவுநோக்கியே
அனாதைகளாய்
கிடந்தவர்களுக்கு
மட்டும் தான்
அன்பின் வலிமை
புரியும் ஏனென்றால்
அன்பெனும்
கதிரவனை நினைத்து
காத்திருக்கும்
சூரியகாந்தி அவர்கள் 

711 - patalakaran story

workin progess about new wonderful emotional story of and military man. 
soon will be updating this amazing mindblowing story in our blogger.
Stay tuned until then :)-

710 - அரியணையின் ஆட்டம்

 தமிழ் நாட்டில் 

யாராலும் அசைக்க 

முடியாத சக்தியாக 

தன்னை நினைத்து

மார்தட்டி வாழ்ந்தனர்.

தமிழ் தமிழ் என்றே 

தரணியெங்கும் கூவிய 

காரணத்தால் தரணியாளும் 

வாய்ப்பை வழங்கினாள் 

தமிழகத்தின் அரியணையை 

அரியணை ஏறி பிறகு 

அதிகார மமதையில் 

கவுன்சிலர் பதவிக்கு கூட 

போட்டியிட தைரியமற்ற 

ராசியில்லாத தாடிக்காரனை 

புகழத் தொடங்கிய நேரத்தில் 

இருந்தே சரியத் தொடங்கிவிட்டது 

அரியணையின் ஆட்டம்...



யாதும் ஊரே யார் கேளீர்

எத்தனை ஆண்டுகள் 

ஆனாலென்ன 

எத்தனை ஆட்சியாளர்கள் 

மாறினால் தான் என்னவாம் 

எத்தனை முறை பல மேடைகளில் 

திராவிடமென்றே தீப்பொறி 

பறக்கும் வண்ணம் பிறரை 

உணர்ச்சிவசப்படுத்தினாலும்... 

திராவிடம் என்பது ஒரு கட்டுக்கதை

தமிழும் தமிழ் மொழி ஆர்வலர்களும்  

அமைதியாக வேண்டுகிறது 

ஏனெனில் தமிழ் மொழியை

எப்படி பாதுகாக்க வேண்டுமென்பதும்

எப்படி எங்கே தமிழை 

வளரச்செய்ய வேண்டுமென்றும் 

தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் 

யாதும் ஊரே யார் கேளீர் 

தரணியெங்கும் தரணியாளும் 

தமிழ் மொழியே முதல் மொழி...


சுதந்திர பறவை

ஆகாயத்தில் பறக்கும் 

பறவைகள் எத்தனை எத்தனையோ 

அத்தனையும் என்னை 

நோக்கியே வருகிறதென்றே 

உலகியல் யதார்த்தம் புரியாத 

சிறு குழந்தைகள் சிரித்தபடியே

நினைப்பதுண்டு.. ஆனால் அந்த பறவைகள் 

தங்களின் பாதையில் 

தினமும் நேர்கோட்டில் 

பறந்து செல்கின்றன...

அவைகளுக்கு என்று தனிபட்ட 

ஆசை அபிலாஷைகளை

ஆண்டவன் கொடுக்கவில்லை 

இறைவன் தேடி அவை அலைவதில்லை

ஏனெனில் இரை தேடி அலைந்தே வாழ்நாளில் பாதியை காற்றில் 

கரைத்து விடும் காக்கா 

கூட்டத்தை விட உயரம் பறக்கும் சுதந்திர பறவைகள் அவை...

இரையை இல்லாத நாட்களில் கூட 

இறைவனை மருந்துக்கு கூட 

கூப்பிட தெரியாத இயற்கை 

வாழ்விலை அதற்கு அமைத்தது 

கருணைவடிவான கடவுள் தானே

ஆர்பரிக்கும் அலை கடல் மீதும் 

சில நேரங்களில் பறப்பதுண்டு  

இரையை தேடியே.... ஏனெனில் 

அவைகள் யாருக்கும் கட்டுப்பாடாத

கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கை வாழும் காட்டுப்பறவை 

பிறரின் சுதந்திரத்தையும் அவைகள் 

பறித்ததில்லை...தங்களை 

சுதந்திரத்தை பிறர் 

பறிப்பதையும் அவைகள் விரும்புவதில்லை 

எனவே கண்ணுக்கெட்டாத

உயரத்தில் மனிதரின் கண்ணில் 

குடுகை விட மெல்லிய அளவாக 

பறக்கிறது .. ஏகாந்த தனிமையில் 

சுதந்திர பறவை 




 


கடவுளை நாங்கள் நம்புகிறோம் .. கடவுள் இருக்கிறார்...


தயவுசெய்து அமைச்சர் பெருமக்களே..
பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்பதை பேசும் நீங்கள் ஏன் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை பற்றி பள்ளியில் பேசுறீங்க.
தமிழக அரசின் முத்திரையை நன்றாக பாருங்க அதில் கோவில் கோபுரம் இலச்சினையாக உள்ளது.
ஓர் வேளை உங்களுக்கு பெரியார் தான் எல்லோரையும் விட சிறந்தவர் என்றால் அண்ணா அறிவாலயத்தில் பெரியார் முழு உருவ சிலை அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.. இதுவரைக்கும் பெரியார் சிலை அங்கே இல்லை.. அல்லது தி.கவுடன் உங்களின் கட்சியை ஓருங்கிணைத்து.கி.வீரமணி அவர்களை முதலமைச்சராக முடிசூட்டுங்கள்...
எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை...
எங்களின் கொள்கை படி அண்ணாதுரை ஆரம்பிச்ச கட்சியே பெரியார் கொள்கை பிடிக்காமல் தான்...
அண்ணாவிற்கு பிறகு கலைஞர் ஓவ்வொரு மேடையிலும் நான் அண்ணாவின் தம்பி அண்ணாவின் இளவல்... அண்ணா வழங்கிய மோதிரம் தான் எனது மனதுக்கு பிடித்தமான பொருள் என்று பேசியவர் தான் கலைஞர் அவர்கள்..
எனது தந்தையே தி.மு.கவின் பயங்கரமான அனுதாபி தான், அதற்காக நீங்கள் கடவுளே இல்லை என்று சொன்னவரை பற்றி பள்ளியில் பேசுவது சரி அல்ல. உலகில் இருக்கும் எல்லா நாடுகளுமே கடவுள் இருப்பதை நம்புகிறது...உலக ன் ஒவ்வொரு பகுதியிலும் கூட மதத்தின் பெயரால் நடக்கிறது
தமிழக மக்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டு உள்ளனரே தவிர பெரியாருக்கு அல்ல.. நீங்கள் பள்ளி மேடையில் பேசுவதாக இருந்தால் கலைஞர் அண்ணாதுரை அவர்களை பற்றி பேசுங்கள்.அவர்கள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்..
ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வார்த்தைகள். அண்ணாதுரை அவர்களும் பேசியது தான்.
உங்களுக்காக இன்னொரு முக்கியமான தகவலையும் சொல்கிறேன், அதிகமான விநாயகர் கோவில் கட்ட அனுமதி தந்ததும் உங்களின் அரசு தான்.மேலும் சன்டிவி மற்றும் கலைஞர் டிவியில் பல ஆன்மீக நிகழ்ச்சிகள் தான் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இந்து மத நம்பிக்கை தமிழர்களின் வாழ்வில் ஓன்றிப்போனது, அதை யாராலும் அசைக்க இயலாது.
இன்னும் சொல்லப் போனால் வாபரும் ஐயப்பனும் தோழர்கள் தான். கந்தூரி திருவிழாவில் இந்துக்கள் மற்றும் இசுலாமியர்களும் கலந்து கொள்கின்றனர்.
அன்பே உருவான வீரமான துர்க்கையும்.. தமிழ் கடவுள் முருகனும்... தைமாதம் நாங்கள் வணங்கும் சூரியனும்.. ஸ்ரீரங்கநாதரும்..தமிழரின் பெருமையை கடல் கடந்து பரவ செய்த சோழமன்னன்..ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் சிவனும் எங்களின் தெய்வம் தான்..எங்களின் தெய்வங்கள்..
நாங்கள் நடத்தும் கடை மற்றும் வியாபார நிலையங்களில் நுழைந்து பாருங்கள்.
அங்கே ஓரே புகைப்படத்தில் முருகனும்... அல்லாவும்... இயேசு இருக்கிறார்கள்...பணவசதி கம்மியா இருக்கிறது என்று ஓரே ஒரு மாலையை வாங்கி அந்த படத்திற்கு ஓன்றாக போட்டு வழிபடும் சாதாரண மக்கள் நாங்கள்..
நாங்கள் மதங்களை கடந்தும் மனித நேயத்துடன் சகோதரர்களாகவே வாழ்கிறோம்..
எங்களுக்கு எல்லா மதமும் சம்மதமே.. ஆனால் கடவுள் இல்லை என்பதை மாத்திரம் எங்களால் ஏற்க இயலாது..

போலி போராளிகள்


பெண் விடுதலை பற்றி மேடையில் பேச காசு வாங்கி விட்டு..நல்ல ஹோட்டலில் சாப்பாடு சொல்லுங்க.போகும் போது ஸ்வீட் இரண்டு கிலோ வாங்கி கொடுங்கள் என்றே முடிந்தவரை வசூல் செய்தவன்.. மேடையில் சொன்னான் பெண்களை ஆண்கள் வீட்டில் அடிமையா நடத்தும் நிலை மாற வேண்டும்.. பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது இதை கேட்டவள்.வீட்டில் வந்து அனைவரிடமும் கோபத்தை காட்டுகிறாள்.."நீங்க எல்லோரும் பெண்களை அடிமையாக நடத்துறீங்க"..என்றே எதுவுமே புரியாமல் கத்துகிறாள்..
எப்படி புரியவைப்பது..கஷ்டபட்டு வேலைக்கு போய் வயதான அம்மா அப்பா மனைவி குழந்தைகள் சொந்தகாரர் இவங்களை பற்றி அவனுக்கு என்ன தெரியும்.
பெண் விடுதலை பெண் விடுதலை என்ற பேசினா காசு தருவாங்க என்பதற்காக அவன் பேசுறான்..அவனை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் அந்த இயக்கம்.
அந்த இயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை வருமான வரித்துறை ஆய்வு செய்தால் நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்திருக்கும் போலி ஊழல் தெரியவரும்..
கற்று எழுத்தறிவித்தாலும் பெண் புத்தி பின் புத்தி தான் என்ற ஔவையாரின் வரிகளை நினைத்து பார்க்கிறேன்... மேடையில் பெண் விடுதலை பேசும் அவனின் மனைவியும் மகளும் சமையலறையில் அடிமையாக வாழ்கின்றனர்... ஆனால் தன்னை முற்போக்கு வாதியாக காட்டிக் கொண்டு நன்றாகவே கல்லா கட்டுகிறான்...
பெண்ணை தனது வீட்டில் மகாராணியாகவே நடத்தும் அப்பா கணவன் மகன்.. இவர்களை விட காசு வாங்கி விட்டு மேடையில் பெண் விடுதலை பேசுபவன் எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை... இங்கே பெண்கள் யாரும் அடிமையாக இல்லை.ஆண்கள் தான் பெண்களின் அடிமையாக கணவன் மகன் என்ற பெயரில் வாழ்கின்றனர்..
இனியோர் விதி செய்வோம்... பெண் விடுதலை என்ற யாராவது பேசினால் தைரியமாக சொல்லுங்கள்... எங்களின் அப்பனும் கணவனும் மகன் உண்மையானவர். என்றே காசு வாங்கி பேசும் மனிதரை புறந்தள்ளுங்கள்

ஆயிரம் கெடு பிடி

கருவறையில் இருக்கும் சிலையை கல் என்றனர்.. ஆனால் கூரையே இல்லாத சிலையை ரோட்டின் நடுவே நிறுவி ஓவ்வொரு ஆண்டும் அந்த சிலைக்கு மாலை போட்டு போட்டோ எடுக்க மாபெரும் போட்டி..பகுத்தறிவை சற்று நேரம் தலையில் இருந்து கழற்றி வைத்தனர் போலும்...என்றோ இறந்த போன மனிதனின் பெயரால் போக்குவரத்து நெரிசல்...பிரசவ வலியில் ஆம்புலன்ஸ் உள்ளே துடிக்கும் பெண்.... நேரத்துக்கு அலுவலகம் செல்ல இயலாமல் தவிக்கும் பலர்.. ஏற்கனவே ஊர்ந்து செல்லும் சாலையில் எதற்காக யாரை திருப்தி படுத்த இந்த போலியான நாடகம் என்றே தெரியவில்லை...ஏனோ அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் சிலையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இதுவரையில் வந்ததில்லை... ஓரே ஓர் நாள் வீதியில் வலம் விநாயகருக்கு ஆயிரம் கெடு பிடி...

உட்கட்சி பூசல்


மாபெரும் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலை பூசி மொழுகின்றனர்...கட்சியை விட்டே விலகி போக நினைத்து விலகி நின்றவரை அழைத்து மாலை மரியாதை செய்கின்றனர்.
ஏனோ அவர்களும் கூட ஒப்புக்கு சிரித்து...சித்தனையின்றி சிதறி விட்டு செல்கின்றனர் மேடையில் சில வார்த்தைகளை.... முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அதீத கற்பனையில் கனவு கண்டவர் கூட கட்சியில் பல வருடங்களாக இருப்பவனுக்கு அறிவரை என்ற பெயரில் பேசுவதை கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது.. அடுத்த மாதம் தானே தேர்தல்... இரண்டு நாளைக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்சா சரியாக இருக்கும் தேர்தலில் போட்டியிட..அப்படியே சி.எம் ஆயிடலாம் என்றே பகல் கனவு கண்ட சிலர்.. இன்றும் கூட கட்சிக்கு உதவுவது போல் இருக்கும் பலரால் கட்சியின் கோட்பாடுகள் சிதைந்து கொண்டு இருக்கிறது..உங்களை இந்த பதவிக்கு வரவிடாமல் செய்வதற்கு பிரயத்தனங்கள் செய்தவரே உங்களுக்கு அருகில் அமர்ந்து பல ஆண்டுகளாக விசுவாசமாக இருக்கும் உண்மை தொண்டனுக்கு குட்டி கதையில் பாடம் நடத்துகிறார்.. ஓர் வேளை அவர் கட்சி ஆரம்பித்திருந்தால என்னவாக இருந்திருக்கும் நினைக்கும் போதே உள்ளூர சிரிப்பு வருகிறது.. அந்த
தன்னையும் தனது பணத்தையும் பாதுகாத்து கொள்ள நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது மட்டும் வந்து ஓட்டிக் கொள்ளும் கூட்டத்தை நம்பும் தலைவரும் அவரோடு சேர்ந்து ஜால்ரா தட்டும் சிலரும்
அதிக கூட்டத்தில் அனைவருமே நன்றாக நடித்த படி சிரிக்கும் போது.மனசாட்சியை அடக்கமுடியாத உண்மை தொண்டன்.பக்கத்தில் இருப்பவரிடம் சொல்கிறான்.... அடுத்த மாசம் வரைக்கும் இவனுங்க கட்சியில் இருந்தாலே அதிசயம் தான்...ஏனோ தலைவரின் காதுகளில் விழ இயலாத வகையில் முழங்கிறது மேளதாளம் மேடையில்.... உண்மை தொண்டன் வலியில் துடிக்கிறான்.... உண்மை தொண்டனை போல் நடிப்பவனை நம்பினால் கட்சி கரையான் புற்று மழையில் கரைவது போல் கரைந்து போகும் என்பதை கூட கேட்கவும் நினைக்காத சில தலைவர்களால்... தொண்டர்கள் விலகி செல்கின்றனர் கட்சியை விட்டே.... இப்படிக்கு கட்சியின் அனுதாபியாக இருந்து விமர்சகனாக மாறிப்போன பல தொண்டர்களில் யாரோ ஒருவன் மனசாட்சியை அடமானம் வைக்க இயலவில்லையே

களிமண்ணா...கடவுளா...


களிமண்ணால் செய்த கடவுளின் உருவத்தை கடலில் கரைத்து விட்டோம் என்பதற்காக நாங்கள் அவரை மறந்து விட்டோம் என்று அர்த்தமில்லை.
கணபதி என்பது களிமண் பொம்மை அல்ல அது எங்களின் உணர்வில் கலந்ந ஓர் உன்னத கடவுள்.
நீங்கள் எத்தனை முறை ஊரெல்லாம் கூவி கூவி சொன்னாலும் நாங்கள் கடவுள் இருக்கிறார் என்பதை முழுவதுமாக நம்புகிறோம்..கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களால் நோய்களே இல்லை என்றோ மனிதனுக்கு மரணம் இல்லை என்றோ சொல்ல இயலுமா..
மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலை என்னவென்பதை சொல்வதே மதம்.
எல்லா மதங்களும் மக்களை நல்வழிபடுத்தவே தோன்றியது.
காசு வாங்காமல் சொல்வதோ செய்வதோ தான் பக்தி.
நீ எவ்வளவு நெல் விதைக்கிறாயோ அவ்வளவு நெல்மணி தான் கடவுள் தருவார்.. நீங்க எவ்வளவு காணிக்கை கொடுக்குறீங்களோ... அதற்கு தகுந்த மாதிரி தான் கடவுள் உங்களை ஆசிர்வதிக்க முடியும் என சொல்லும் கார்ப்பரேட் கடவுளின் தூதர் அல்ல எங்களின் விநாயகர்.
வினை தீர்த்து வல்வினே போக்கும் விநாயகன்... எங்களிடம் கோடி கோடியாக பணத்தை லாங்கி விட்டு கடவுளின் பெயரால் நாடகம் நடத்தும் நபர் அல்ல இந்த விநாயகர்.
சின்னஞ்சிறு அருகம் புல் போதும் என்றே எங்களின் உண்மையான எளிமையான வழிபாட்டை ஏற்று ஏற்றம் தரும் வாழ்வை எங்களுக்கு வழங்கும் வள்ளல் இந்த வல்வினை போக்கும் விநாயகர்.

மனித வாழ்வை

 நதிகள் நேராக செல்வதில்லை..

மேடு பள்ளம் இல்லாத பாதைகள் 

உலகில் இல்லை 

மலைகளில் கூட ஏற்ற தாழ்வுகள் 

அரிசியில் கூட எத்தனையோ வகைகள்..

இப்படி காணும் இடத்தில் எல்லாம் 

பேதங்கள் இருக்கும் போது.. 

வீட்டில் இருப்பவர்கள் மட்டும் 

என்னை போலவே இருக்க வேண்டும்.. 

நான் சொல்வதை தான் கேட்க வேண்டுமென்று

நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்.. 

மாறுபட்ட கருத்துகளும் 

மாறுபட்ட சிந்தனைகளும் தான் 

 வளமாக்குகிறது..

மனித வாழ்வை 

ழ்வை..

தீபாவளி

 தீபாவளி தமிழர்கள் பண்டிகையா என்றே விவாதம் செய்வது சிலர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் தீபாவளி பண்டிகை வந்ததாகவும் இந்துக் மத நம்பிக்கையை குலைக்கும் வகையிலும் பேசும் சிலர்.. தீபாவளி பண்டிகை வியாபாரம் மதிப்பு 7,000 கோடி என பத்திரிகை செய்தி சொல்கிறது.. ஓர் மாதமாக நடந்த வியாபார மதிப்பு... கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள், தங்களின் கவலைகளை எல்லாம் மறந்து சந்தோஷமாக கொண்டாடும் பண்டிகையே தீபாவளி.. பட்டாசு வெடிப்பதும் இனிப்புகள் வழங்கி சுற்றம் சூழலுடன் சந்தோஷமாக வாழவே பண்டிகைகள்.

ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும் உன்னதமான நாளே இனிய தீபாவளி

ஆப்பிள் கேட்டது குற்றமா..

 ஏன்டா மகனே நல்ல நாளும் அதுவா உன் பொண்டாட்டி முகம் வாடின மாதிரி இருக்கா..நீ எதாவது திட்டினீயா 

அதை உன் மருமகள்கிட்டையே கேளூ.

என்னம்மா ஆச்சு..நீயாவது சொல்லேன் 

அத்தை உங்களுக்கே நல்லா தெரியும்.. இரண்டு நாளா தீபாவளிக்காக தனியா ஆளா.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு..உங்களை கூட நான் உதவிக்கு கூப்பிடல தானே..

ஆமாம்..நீ தனியா எவ்வளவு கஷ்டப்பட்டே அதுக்கு நீ எது கேட்டாலும் வாங்கி தரலாமே..

அதான் அத்தை உங்க மகன் கிட்ட ஓரே ஓர் ஆப்பிள் கேட்டேன் அதுக்கு போய் நல்லா திட்டிவிட்டாரூ..

ஏன்டா.. .மாசம் 30,000 சம்பளம் வாங்குறே.. அவள் ஆசையா ஓர் ஆப்பிள் தானே கேட்டா..வாங்கி கொடுத்தா நீ என்ன குறைச்சா போவே...

யம்மா நீயும் அவள் கூட சேர்ந்துகிட்டு லூசு தனமா பேசாதே.. உன் மருமகள் ஓர் ஆப்பிள்-ன்னு கேட்டது பழம் இல்லை..

பிறகு என்னடா அது..

அட்வான்ஸ் ஆப்பிள் ஐபோன் கேட்குறா அதோட விலையே மூணு லட்சம்.

🤣🤣🤣🤣

கவலை மறந்து சிரிங்க.. சந்தோஷமாக தீபாவளி கொண்டாடுங்க 


தீபாவளி துப்பாக்கி

 


நிஜமான துப்பாக்கியோ 

அதன் தோட்டோ கண்டு 

சற்றும் அஞ்சியதில்லை..

தினமும் தொட்டு விளையாடிய

 ராணுவகாரனுக்கு அதன் மீது பயமல்ல

பாசமே அதிகம்.ஆனால் அன்பு மகளின் 

தீபாவளி துப்பாக்கியை கண்டே 

அஞ்சுவது போன்றே நடிக்கிறேன்... 

ஒழுங்கா இருந்தா இல்லாட்டி 

இந்த துப்பாக்கி பேசும் என்பவளின் 

மழலை மொழியில் மயங்குகிறேன்.. 

சுவற்றில் இருக்கும் ராணுவ உடையில் 

துப்பாக்கி எந்திய போட்டோவ 

மறைத்தே சிரிக்கிறேன்.. 

இனிமேல் இந்த வீட்டில் பாப்பாவுக்கு தான்

எல்லோரும் பயப்படணும் 

என்றே சிங்கமாக கர்ஜிக்கிறாள்.. 

செல்வத்தில் பிறந்த செல்வமகள் 

எல்லோருமே அஞ்சுவது போலவே 

நடுங்குகிறோம் ஏனெனில் பஞ்சு விரல்களில் 

தீபாவளி துப்பாக்கி 

For more writings visit https://dhenaliraman.blogspot.com

கிழவியின் காதல்

 மலரே நீ வாடாதே.. நீ வாடினால் இந்த தோட்டக்காரனுக்கு மனது வலிக்கிறது.. என்னை மன்னித்து விடு இரண்டு நாளில் கனமழை வரும் என்றே நன்கு படித்தவர்களின் பேச்சை நம்பி..அதிகமாக தண்ணீர் பட்டு மலர் உனது வேர் அழுகி விடுவோமோ என்ற தண்ணீர் விடவில்லை..என்றே வெயில் தாக்கத்தில் வாடிய மலர் செடிகளின் மீது வயதான அந்த முதியவர் தண்ணீர் தெளிக்கிறார்.தோட்டத்தில் இருக்கும் எல்லா செடிஇகளுக்கும்..என்னங்க இங்க வாங்க போட்ட டீ ஆறுது சீக்கிரமா வந்து குடிச்சிட்டு போய் உங்க அருமை புள்ளகளை தீர ஆசை கொஞ்சுங்க.. நான் ஓண்ணும் தடுக்க மாட்டேன். தள்ளாத வயதிலும் தனக்காக மலர்செடி தோட்டம் போட்டு வாழ்க்கை நடத்தும் அவரை கேலி செய்கிறாள் செவ்வந்தி என்ற பெயர் கொண்ட அந்த கிழவி.

அவரோ அவளின் காதுகளுக்கு கேட்காதவாறு தனது மலர் செடிகளிடம் வாஞ்சையுடன் பேசுகிறார்..பத்து நிமிஷம் கழிச்சு ஆறின டீ குடிச்சா நான் என்ன குறைச்சா போயிடுவேன்..வர..வர..இந்த கிழவிக்கு ஏனோ நேத்து தான்  கல்யாணமான மாதிரி ரொம்ப கேலி பண்ணுறாரூ...ஏதாவது ஓர் வார்த்தை சொன்ன கண்ணுல குற்றால அருவியே வந்திடும் சரியான சிடுமூஞ்சி கிழவிகழுத்தில் மீண்டும் தளிர்க்க இன்றோ நாளையோ என்றே


still work in progress 

தாயுமானவள்

 பத்து மாதம் 

நான் அவனை சுமக்கவில்லை

அந்த குறையை போக்கவே 

ஓவ்வொரு நொடியும்

தனது மனதிற்குள் சுமக்கிறாள் அவள்...

தாயின் அன்பிற்கு போட்டி போட்டு 

பாசம் காட்டுபவள் வேஷமில்லாமல் 

சிலநேரத்தில் ரோஷத்துடன்   

வார்த்தை உஷ்ணத்தை கலந்தே 

அக்கறையை அதிகமாக 

அன்பில் கலந்த கருணைமிக்க 

பாசக்கார அக்கா 

எங்களின் வீட்டில் 

எல்லோருக்கும் இவளே 

தாயுமானவள்

ஏழைகள் படிப்பது தவறா....

ஏழை வீட்டில் பிறந்த குழந்தைகளால் மூணு மொழிகளை படிக்க முடியாது கஷ்டபடுவாங்க என்று சொல்வது  எதனால்... ஏன் இத்தனை வலியை ஏழைகள் குழந்தைகளுக்கு தருவது ஏன்.

பாமர மக்களுக்கு தரமான கல்வியை அரசு வழங்குவதில் ஏன் இத்தனை முரண்பாடுகள்.

தனியார் பள்ளிகளின் வருமானம் குறைந்தது போகும் என்ற அச்சத்தால் ஏற்பட்ட பதட்டமா.. அல்லது இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததால் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையா.

கல்வியின் தரம் நாடு முழுவதும் ஓரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பல கல்வியாளர்களால் குழு அமைக்கப்பட்டு, கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளனர்.

அதாவது எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஓரே மாதிரியான கல்வியும் கிடைக்க செய்யணும் என்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.

1970 -ம் ஆண்டுக்கு முன்னர் எத்தனை தனியார் பள்ளிகள் இருந்தன, இப்போது எத்தனை இருக்கின்றது என்று கணக்கெடுத்து பாருங்கள்.

இங்கே இருக்கும் எல்லா தனியார் பள்ளியிலும் தேசிய மொழியான ஹிந்தி மட்டுமல்ல உலகநாடுகளின் பல மொழிகள் சொல்லி கொடுக்கப்படுகின்றது

ஆங்கிலம் தவிர பிரெஞ்சு லத்தின் போன்ற மொழிகளும் சொல்லி தரப்படுகின்றது.

அப்படி இருக்கையில் மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழி கொள்கையில் மட்டும் முரண்பாடு இருப்பதாக முரண்டு பிடிப்பது ஏன்..

ஆம் ஹிந்தி மொழி அந்த பாட திட்டத்தில் ஓர் சிறு பகுதி தான்.அதை மட்டும் வைத்து கொண்டு நீங்கள் எதிர்ப்பது ஏன். 

காமராஜர் ஆட்சியில் கூட தனியார் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டன ஆனால் அவையனைத்தும் தமிழ் வழி பள்ளிகள்.

ஆனால் ஹிந்தியை எதிர்ப்பதாக சொல்லி இருமொழி கொள்கை அடிப்படையில், நீங்கள் தொடங்கிய எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் ஹிந்தி சொல்லி தரப்படுகிறது என்பதை நீங்கள் மறந்து வீட்டீர்களா அல்லது மறைத்து விடுவீர்களா.


இன்னும் சேரியில் வாழும் பல குழந்தைகள் ஹிந்தி மொழியை படிக்க இயலாமல் இருக்கிறது. ஆனால் பணமிருப்பவரின் குழந்தைகள் ஹிந்தி மொழி படித்து மத்திய அரசு வேலையில் அமர்கிறது.


ஏன் இந்த பாரபட்சம், எங்களின் ஏழை குழந்தைகளுக்கு மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை கிடைத்தால் நல்லது தானே.

எங்களால் மாதம் தோறும் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வைக்க இயலுமா.. அதனால் புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுத்து அதை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்ககள்


அப்படி செய்தால் அதில் ஓர் பாதகமும் இருக்கிறது, ஆனால் அந்த பாதகம் மக்களுக்கு அல்ல..செலவே இல்லாமல் நல்ல தரமான கல்வி கிடைக்கும் போது நாம் ஏன் நம்ம பிள்ளைக்கு பல ஆயிரம் செலவு செய்யணும்.. நாமும் நம்ம குழந்தைகளை மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை உள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று முன்வருவர்.

இதனால் தனியார் பள்ளிகளுக்கு தான் நஷ்டமே தவிர மக்களுக்கு அல்லவே.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே, உங்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்கள் தான்.

எனவே சிறப்பாக தான் பாடம் சொல்லி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


அதை போலவே புதிய கல்வி கொள்கை நடைமுறை செய்யப்பட்டால்,‌நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால் மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.


தயவுசெய்து ஏழை மக்களுக்கும் புதிய கல்வி கொள்கை கிடைக்க வழி செய்யுங்கள் அல்லது எல்லா தனியார் பள்ளியிலும் 50 ஏழை மக்களின் குழந்தைகளை காசு வாங்காமல் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள்.


ஏனெனில் அதுவே சமூக நீதியாக அமையும் 


அரசு பள்ளியில் மட்டும் தான் இருமொழி கொள்கை உள்ளது.. ஆனால் மற்ற மேட்ரிகுலேஷன் CBSE.. எல்லாம் மும்மொழி சொல்லி தருகிறார்கள் பல ஆயிரம் பீஸ் வாங்கிட்டு நிறைய ஆட்டோ ஓடுவதற்கு காரணமும் ஆங்கில பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வருவதால் ஆட்டோக்காரர்களுக்கு வருமானம் கிடைக்கிறது .அத்தையை ஆட்டோ ஓட்டுனர்களின் பிள்ளைகளுக்கு மும்மொழி கிடைத்தால் என்ன தவறு இருக்கிறது.. ஏழைகள் மட்டும் மூணு மொழி படிக்க கூடாதா.....அவ்வளவு ஏன் முதல் பாடமா அயல்நாட்டு மொழி.ஆங்கிலம்..ஹிந்தி படிக்கிறாங்க.. ஆனால் அரசு பள்ளியில் ஏழை குழந்தைகளுக்கு ஹிந்தி படிக்க சொன்னா மட்டும் மொழி போர் என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்.. நாம் இந்திய நாட்டின் ஓர் அங்கம்..

லாட்டரி சீட்டு பத்து கோடி

 ஏன் அந்த குடிசை வீட்டின் முன்னாடி இவ்வளவு கூட்டம்..ஏதாவது சாவு வீடா..அட நீங்க வேற நேற்று வரை பிச்சைக்காரனாக இருந்தவனுக்கு  லாட்டரி பத்து கோடி ரூபாய் பரிசு விழந்து இருக்கு.அது அவனுக்கு தெரியுமா..அட அவன்கிட்ட செல்போன் வாங்கவே காசில்லாத ஏழை...இன்னும் தெரியாதை.. அதை அவங்க கிட்ட சொல்லுவதற்கு தான் அவனோட சொந்தமும் நண்பர் என்று பலர் வந்திருக்காங்க..அட நேத்து வரை அனாதை மாதிரி இருந்தானே..அட நீ வேற பணம் வந்தா பலபேர் பறந்து வருவான் இந்த விஷயம் கூட உனக்கு தெரியாதா. அது சரி இரண்டு பெரிய காரில் ஏதாவது அரசு அதிகாரி மாதிரி இருக்காங்களே அவங்க யாரூ..அட அவங்க தான்ப்பா இந்த ஊரில் இருக்கும் பெரிய வங்கியின் தமிழகஸவிற்பரை பிரிவு பிரதிநிதிகள்..அவங்க எதுக்கு இவனை பார்க்க வந்திருக்காங்க..அது வேற ஓட்ணுமில்லை..சார் எங்க பேங்கில் நிறைய வட்டி தருகிறோம்.அதை எங்க கிட்ட இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க ஏன்னா பணம் தண்ணி மாதிரி நிறையவே வந்த மாதிரி இருக்கும் அதை சேர்த்து வைக்காவிட்டால் அது காணாமல் போய்விடும் மேலும் நிறைய காசு இருப்பதால் உங்களை தேடி பலரும் வருவாங்க இந்த காசு எல்லாம் காலியா போனால் பிறகு யாரும் உங்களை தேடி வர மாட்டாங்க..அதனால் பணத்தை பத்திரமா பார்த்துக்கோங்க என்று சொல்லிட்டு போக வந்திருக்காங்க...

ஏழை வீட்டின் கதவு திறந்தது.. மன்னிக்கவும் மன்னிக்கவும்...கோடீஸ்வரரின் வீட்டு வாசல் திறந்தது... தனது மகனுக்கு கோடி ரூபாய் விழுந்தது தெரியாத கிழவி வாசலை திறந்தாள்...

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது ஏன் இத்தனை கூட்டம்.. நீங்களெல்லாம் எதுக்கு வந்திருக்கீங்க.

அந்த பாட்டியின் குணத்தை நன்கு அறிந்த சொந்தமும் அவனின் நண்பர்களும் மெளனமாக இருந்த போது பேங்க் மேனேஜர் வாயை திறந்து பேசினார்.. நான் இந்த ஏரியாவுல இருக்கிற HUSGK Bank மேனேஜர், உங்க பையனை பார்க்கத்தான் வந்தேன்.

பதிலுக்கு பாட்டி கேட்ட கேள்வியை கேட்டு அந்த மனிதர் ஆடித்தான் போனார்... இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பேங்க் உண்டா..

சுற்றி நின்ற அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.. இப்போ தெரியுதா நாங்க ஏன் இந்த கிழவிகிட்ட பேசலை என்று..இவ எமகாதகி ஓரு பயலும், இவகிட்ட வாயை கொடுத்து மீள முடியாது. கேள்வி மேலே கேள்வி கேட்டே கொன்னுடுவா 

இந்த பையன் எப்படி தான் சமாளிக்கிறானோ.. கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்.


சுற்றி மாபெரும் கூட்டம் இருக்கிற என்ற பிரமை கூட இல்லாமல், அதை பற்றி சிந்திக்க கூட நினைக்காமல்..ஏலே எருமை மாடு உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..எந்த நாயீ கடன் கொடுத்தாலும் வாங்காதே என்று.. நான் தான் உனக்கு மூக்கு முட்ட மூணு வேளை சாப்பாடு போறேனே இதை விட உனக்கு என்னதான் வேணும்ன்னு போயி கடன் வாங்கி இருக்கே..

மேனேஜர் பதறினார்... கோடீஸ்வரர் மனசு கஷ்டபட்டு நமக்கு பத்து கோடி கிடைக்காம போச்சுன்னா... அம்மா உங்க பையன் யாரிடமும் கடன் வாங்கவே இல்லை.உண்மையை சொன்னா அவருக்கு இதுவரை எந்த வங்கியிலும் அக்கவுண்ட் கூட கிடையாது. தான் பெரிய விஷயத்தை பேசி விட்டது போல், சற்று முன் நமட்டு சிரிப்பு சிரித்த கூட்டத்தை தான் அந்த அம்மாவை எப்படி சமாளித்தேன் பார்த்தீர்களா என்று பெருமையாக ஓர் பார்வை பார்த்தார்.

அந்த பெருமை சில நொடிகள் கூட நிலைக்கவில்லை..யோவ் நான் உங்கிட்டயா கேள்வி கேட்டேன் என் புள்ளகிட்ட நான் கேள்வி கேட்டா அதுக்கு அவன் தானே பதில் சொல்லணும்..நீ எதுக்கு அவனுக்கு பதிலா பேசுறே...

இல்லம்மா அது வந்து... அது வந்து.

.. உங்க ஆபிஸ்லையும் நீ இப்படி தான் இருப்பீயா உன் வேலையை செய்யாம அடுத்தவனுக்காக பேசிக்கிட்டு இருப்பீயா.. ஓர் வேளை நீ பையனோட நண்பனா ஏன்னா அவனும் இப்படித்தான் முந்திகொட்டை மாதிரியே பேசுவான்.

டேய் எருமை மாடு , சீக்கிரமா வாடா..

செந்தில் வேலவன்

தலையில் கங்கை 

உடலில் மங்கை 

துளியும் காமத்தின் சிந்தனை இன்றி

எல்லையற்ற அளவில்லாத 

அன்பான காதலை 

மனதில் சுமந்தபடி 

தியானத்தில் அமர்ந்தான். தான் 

படைத்த உன்னதமான உயிர்கள் ஒருவருக்கு 

ஓருவர் சிறு விஷயங்களுக்காக 

பதவிக்காக 

சண்டையிட்டு 

சச்சரவு செய்த போதும் அமைதியாக 

அன்பாய் இருந்தான்..

இன்றோ பல நாள் போராடத்திற்கு 

பிறகு தரணியாள வருகிறான் தந்தையின் வழியில் 

மக்களின் அரியணையில் அமர வருகிறான்....

நானே துரையென்ற துணிச்சலுடன் முருகன் எங்களின் பாசத்திற்குரிய செந்தில் வேலவன் 

பத்து ரூபாய் கிடைக்குமா

 அண்ணே சாப்பிட்டு நாலு நாளாச்சு... நீங்க ஏதாவது கொடுத்தா நல்லா இருக்கும்...

உங்க தங்கச்சி மாதிரி நினைச்சு ஓர் வேளை சாப்பாட்டுக்கு என்று ஓருத்தி சிக்னலில் கைக்குழந்தையுடன் கண்ணீர் விடும் போது ஏனோ ஜாதிஎன்ற பெயரில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சண்டை இழுத்து விடும் சில சுயநல அரசியல்வாதிகளின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது... அந்த பெண் சார்ந்த ஜாதியோ அல்லது மேடையில் வீர முழக்கம் செய்து விட்டு தனது மகனுக்கும் மகளுக்கும் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைக்க பிரயத்தனபட்டு..எந்த அரசு பதவியிலும் இல்லாமலே.. அந்த கட்சியின் பல கோடி ரூபாய் சொத்துக்களை தனது உடனிருப்பவருக்கே தெரியாமல் களிபரம் செய்து தனது சொந்த மகனுக்கு சொத்துகளை மகன் பெயரில் பட்டாபிஷேகம் செய்து வைத்த,  அந்த சமூகநீதி மனிதர்..

தெருமுனை கூட்டத்தில் பேசினார்... தசரதன் தனது மகன் ராமனுக்கு தானே பட்டாபிஷேகம் செய்து வைத்தார்..

ஊரில் எங்கோ வாழும் ஓர் சிறந்தவரை தேர்ந்தெடுத்து அவரை மன்னராக அமர வைத்தால என்ன குறைந்தா போய்விடுவார்..


சுற்றி இருப்பவர்களோ கைதட்டி ஆரவாரம் செய்து போகின்றனர்.



மேடையை விட்டு இறங்கி வந்தவரிடம் கேட்டார். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் எந்த கட்சியிலும் இணைந்து விடாமல்..தனது விவசாய வேலைகளை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி வேலை பார்த்து விட்டு வரும் போது, 

ஆற்றில் இறங்கி குளித்து விட்டு கூரை கூட இல்லாமலே கரையில் இருந்து வந்து போகும் அனைவருக்கும் அருள் செய்யும் அந்த விநாயகர்.

இதை தவிர அவர் யாரிடமும் கடவுளை பற்றி பேசியதே இல்லை.ஏனென்றால் கடவுளை அறியவோ அறிய முற்படவோ இஷ்டமில்லாத ஓர் மனிதர் அவர்.

அவர் யதார்த்தமாக ஊரில் கேட்டும் கேள்விகளை சமாளிக்க முடியாமல், அவரை கண்டு விலகிப் போகும் பலர்.

டேய் அவர் தான்டா நம்ம இயக்கத்துக்கு சரியான ஆளூ அவரை மட்டும் பிடிச்சு போட்டா இந்த ஊரில் நம்மை ஓர் பயலும் எதிர்த்து பேசாத மாதிரி பண்ணிடலாம் 

எமனாவே இருந்தாலும்...

 


அந்த மாபெரும் 

தலைவரை பார்க்க 

போன ஆசையும் 

அன்புடனும் போனி

ஒவ்வொருவரையும் 

மனிதரையும் 

வரிசையில் நின்றே 

பேசினார்..நீ யாராவேணா 

இரு...தலைவரை 

பார்க்கணும் என்றால் 

முதலில் என்னை 

பார்த்த பிறகு தான் 

பார்க்க முடியுமென்றே

கட்சி தொண்டர்கள் 

பலரை உதாசீனமாக 

பேசியவரின் எதிர்பாராத 

விதமாக மாரடைப்பால் 

மரணமடைந்தார்.. கூட்டத்தில் 

இருவர் சன்னமாக 

பேசிக்கொண்டனர்..

யமன் தலைவரை 

பார்க்கத்தான் போயிருப்பான் 

ஆனா இந்த மூதேவி தான் 

என்னை பார்த்துவிட்டு 

தான் தலைவரை 

பார்க்கணும் என்பானே...

மாலை போட்டுவிட்டு 

சோகமாக நடந்து செல்லும் 

தலைவரை பின்தொடர்ந்தது 

செல்லும் புதியவன் 

ஹலோ இனிமே நீங்க 

தலைவரை பார்க்கணும் 

என்றால் என்னை பார்த்துட்டு 

தான் எல்லாமே புரியதா..

கூட்டத்தில் இருந்து 

அந்த இருவரும் 

மீண்டும் தங்களுக்குள் 

முணுமுணத்துக் கொண்டனர் 

இப்போ தானே புரியது 

பல கட்சித்தலைவர்கள் 

அதிக வயசு வாழுறாங்க 

இது தான் சுட்சுமம் போலே.

எங்கோ உபன்யாசம் 

கேட்ட நியாயம் 

எமன் எதற்கும் பழி ஏற்பதில்லை 

முட்டாள் Vs புத்திசாலி

 

முட்டாளைப் போலவே 

நடிக்கும் புத்திசாலி...

புத்திசாலி போன்ற

நடிக்கும் முட்டாள் ..தனது 

முட்டாள்தனத்தை 

வெளிப்படுத்திய 

புத்திசாலியை 

கட்டம் கட்ட மீண்டும் 

தேவைபடுகிறது..

இன்னும் தன்னை 

முட்டாளாகவே 

காட்டிக் கொண்டிருக்கும் 

புத்திசாலியின் உதவி...

புத்திசாலியோ தன்னை 

முட்டாளாகவே காட்டி 

வாழ்ந்து விட துடிக்கிறான் 

ஆனால் முட்டாள் 

தன்னை புத்திசாலியாக 

காட்டிக் கொண்டதோடு..

மட்டுமல்லாமல் யாரும் 

புத்திசாலி மாதிரி 

நடிக்கவும் கூடாதென்றே 

காய்களை நகர்த்துகிறான்..

முட்டாள் புத்திசாலி 

சண்டை யுகங்கள் 

தோறும் நடப்பது தான் 

முட்டாளாக நடிப்பது 

மிகவும் சுலபமானது 

ஆனால் புத்திசாலியாக 

நடிக்க தொடங்கிய பிறகு 

ஓவ்வொரு நொடியும் 

நிம்மதியின்றியே 

கழிகிறது புத்திசாலி

வேஷத்தை கலைக்கவும் முடியாமல் 

தொடர்ந்து புத்திசாலியாக 

தன்னை நிலைநிறுத்த 

முட்டாளாக நடிப்பவனின் 

ஆலோசனையே 

தேவையாகிறது

முதியோரின் வலிகள்

 அய்யோ அப்பா நீ இப்படி பண்ணுவே என்று நாங்க நினைச்சு கூட பார்க்கலையே..


அடிவயிற்றில் இருந்து வரும் அந்த குரலில் தான் எத்தனை நம்பிக்கை.

ஆறு பிள்ளைகள் இருந்தும் நாங்க உன்னை சரியா கவனிக்கவில்லை தானோ என்று ஏழைகளின் ஏக்கத்தின் வலிகள்.


ஆறு பிள்ளைகளின் வீடுகளில் இருந்தும் சுழற்சி முறையில் சாப்பாடு கொடுத்த போதிலும், வெளியே சொல்ல இயலாமல் தவித்த பாட்டி தாத்தாவின் வலிகள். இன்று செய்தியாக வரும் போது எல்லோரின் மனதையும் கரைக்கிறது 


தனது சொந்த மனைவியை கொலை செய்து விட்டார் என்று சட்டத்தின் முன்னால் அவர் தண்டிக்கபடலாம்..


ஆனால் மகாத்மா காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தில் வலியாய் துடித்த கன்று குட்டியை கொல்ல சொன்னதாக படித்த கதை தான் நினைவு வருகிறது.


ஆம் ஒருவரின் மீது நாம் வைக்கும் அதீதமான காதல் முட்டாள்தனமாக பிறருக்கு தெரியலாம்.ஆனால் தான் காதலித்த, தன்னிடம் அன்பு செலுத்திய மனைவியின் வலியை பார்ப்பது எவ்வளவு பெரிய கொடிதான வலி..


ஓவ்வொரு நாளும் அவள் படும் வேதனை, அய்யா நாம பிள்ளைகளை நல்லாதானே வளர்த்தோம் என்று அவள் கேட்டு இருப்பாள் தானே.. அந்த முதியவரும் தனது பிள்ளைகளுக்காக எவ்வளவு தூரம் மனதில் ரணத்தை சுமந்து உழைத்து இருப்பார்.


நாம் அன்பாக வளர்க்கும் நாய்க்குட்டி இறந்தாலே தாங்க முடியாது.


இந்த செய்தியை ஓர் செய்தியாகவே கடந்து சென்று விடலாம்.  இதை  ஓர் தகவலாக கூட அறியவிரும்பாமல் வேகமாக கடந்து செல்லும் இயந்திர உலகில் தான் நாம் இருக்கிறோம் 


பகவத் கீதை பைபிள் குரான் இன்னும் எத்தனையோ மதநூல்கள் தாய் தந்தையரே தெய்வம் என்கிறது.


இங்கே கடவுளே இல்லை என்று ஆர்பாட்டம் செய்வதால் சிலருக்கு மத நூல்களின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது இயல்பு தான்.



மீண்டும் ஓர் விதி செய்வோம் கடவுள் இருக்கிறார். 

தாய் தந்தை என்று இருவரும் தான் முதல் கடவுள் என்றே நமது அடுத்த தலைமுறைக்கு போதித்து வளர்ப்போம்.


இங்கே ராமாயணம் பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் ராமன் அவதரிக்க காரணமாக இருந்ததே சிரவணணன் என்ற ஓர் பால்கன் 


தனக்கு என்று எந்த தனிப்பட்ட ஆசையும் இன்றி வயதான கண் பார்வையற்ற தாய் தகப்பனை தோளில் சுமந்து சென்றான்.


அது ஓன்றே இது போன்ற நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க ஓரே வழி

இப்போ யாராலும் அப்படி செய்ய இயலாது தான்.பணம் பணம் என்று பேய் போல் அலையும் நிலையை சில நொடிகள் மறந்து நம்மை சுமந்த பெற்றவரிடம் குறைந்த பட்சம் சிலமணிநேரமாவது.சிரித்து பேசுவோம்



சாதாரண மனிதன்

கட்சிகள் மாறிவிட்டது ஆனால் காட்சிகள் மாறவில்லை....

ஐயா உங்களை தோற்கடிக்க பெரிய சதி வேலையே நடக்குது என்ற போது.. யோவ் ஏன்ய்யா என்னோட மக்களை பத்தி என்கிட்டையே தவறா சொல்லுறே.. இன்னொரு தடவை இப்படி சொன்னே பிறகு நான் இதுவரைக்கும் இல்லாத மாதிரி உன்னை திட்டி போடுவேன்..நாம நல்லபடியா மக்கள் பணி செய்யுறோம் அதனால் மக்களுக்கு நம்மை பத்தி புரிஞ்சுப்பாங்க என்ற அந்த ஓர் நல்ல அரசியல்வாதி...

அவர் அரசியலில் தோற்ற போதும்..ஐயா எதிர்கட்சிகாரனுங்க கள்ள ஓட்டு போட்டு தான் இப்படி ஆச்சு என்று அவரிடம் சொன்ன போதும்..யோவ் ஓட்டு ஓண்ணு தான் அதை நல்ல ஓட்டு கள்ள ஓட்டு என்று சொல்லி கொச்சைபடுத்தாதீங்க..மக்களுக்கு ஏதோ மாற்றம் தேவைபடுது போலே...ஓருத்தனே தொடர்ந்து ஆட்சியில் இருக்க இது என்ன மன்னராட்சியா..நாம ஆசைப்பட்டு போராடி வாங்கிய ஜனநாயகம் நல்லா வளர்ந்து இருக்கு என்று சந்தோஷபடுங்கய்யா என்று யதார்த்தமான உண்மையை ஏற்றுக் கொண்ட ஓர் நல்ல தலைவர்.. இப்போதும் சில நல்லவர்கள் இருக்கின்றனர்.. அவர்களைப் போலவே..இது தான் அரசியல் போல.. இன்றும் கூட அரசியல் மேடைகளில் அதிர்வுகள் நடக்கிறது.

 மேடையில் இருக்கும் பலருக்கு புரியாத மாற்றங்கள் கட்சியின் மீது அபரிமிதமான அன்பும் பாசமும் விசுவாசமும் கொண்ட கட்சி தொண்டர்கள் சிலர்..ஏனோ கட்சிகள் தான் மாறியதே தவிர காட்சிகள் மாறவில்லை... அரசியல் என்பதே மாற்றங்களுக்கு உட்பட்டது தான் போல்... இப்படிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஓர் முறை வாக்கு சாவடியில் வரிசையில் நின்று ஜனநாயக கடமை நிறைவேற்றும் ஓர் சாதாரண மனிதன் 

வலிமை வளம் தரும்

 

உனக்கு இறைவன் வலிகளை தந்ததே உனது வலிமையை சோதிக்கத்தான்...

பலருக்கு உடனிருப்பவர்களால் பிரச்சினை வரும்.. உன்னை தனக்கு நிகராக இறைவன் நினைத்த காரணமாகவே இத்தனை வலியை தந்தான் போலும்.


தன்னை நம்பும் பக்தனை இறைவன் சோதிப்பதே...நீ சாதிப்பாய் என்பாய் என்ற நம்பிக்கையில் தான்..


துணிந்து நில் வலியே வலிமையாக்கும் நாள் விரைவில் வரும் 


ஊரும் நாடும் நேரத்திற்கு தகுந்தாற் போல் நாக்குகளை சழற்றி பேசுவது இயல்பான விஷயம் தான்.


நீ யார் என்பதை பிறர் சொல்ல கேளூ.. ஆனால் நீ யார் என்பதை நீ முதலில் உணர்ந்து கொள்...


இது உலகில் எதுவுமே நிரந்தரமில்லை..


விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை நீ அணிந்து செல்லும் போது இந்த உலகம் உன்னை மிகவும் மரியாதையாக பார்க்கும், அந்த மரியாதை என்னும் சகதியில் மாட்டி விடாதே..

அந்த மரியாதை எல்லாமும் உனது பணக்கார தோரணைக்கு தானே தவிர உனக்கானது அல்ல.நீ சென்ற இடத்தில் உன்னை விட சற்று பகட்டுடன் இன்னொருவர் வந்தால் உன்னை மறு நொடியே உதாசீனம் செய்து விட்டு சென்ற விடும் மக்கள் கூட்டம்..


நீ நீயாக வாழு... எந்தவிதமான கனத்தையும் கவனத்தையும் தலைக்குள் ஏற்றிவிடாதே...பதவி புகழ் அழகு அதிகாரம் இவை அனைத்தும் மாறக்கூடியது 

மாறாத ஓன்று உலகில் உண்டு என்றால் அது இறைவனின் அன்பு மாத்திரமே 

எனவே அனைவரும் சொல்கின்றனர் 


தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி.அன்பே சிவம் 


நானே ருத்ரன் நானே கணபதி நானே கார்த்திகேயன் நானே எல்லா ஜீவராசியிலும் வியாபித்து இருக்கும் பரந்தாமன் என போதித்த பகவத் கீதையில் மொழியை உலகறியச் செய்வோம் 


நீ தினமும் அலங்காரம் செய்து கொள்ளும் உடல் கூட உயிர் இருக்கும் வரை தான் மரியாதை..

முதல்வர் நாற்காலி ஓர் மியூசிக்கல் சேர்

நேற்று வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர்.. விதியின் வசத்தில் சில உட்கட்சி பூசலால் பதவியை பறிகொடுத்து விட்டார்... இப்போது முன்னாள் முதல்வர் என்ற அடைமொழி மட்டும் அவருக்கு சொந்தமாக இருக்கிறது... அவரின் அருகில் இருந்த பலர் இன்று அவரோடு இல்லை என்பதை விட அவர் போன் போட்டால் கூட எடுப்பதில்லை... ஆம் அந்த மனிதரின் பெயரை சொல்லி சம்பாதித்த பலர் இன்று மீண்டும் தற்போதையமுதல்வர் அருகில் போய் நின்று கொண்டனர்...

அப்படி நிற்பவர்களுக்கு ஏனோ புரியவில்லை..இந்த முதல்வர் கூட முன்னாள் முதல்வர் ஆகும் போது தான் உண்மையின் வலிமையும்..அது ஏற்படுத்தும் வலியும் தெரியும் என்பது...

அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை..

முதல்வர் நாற்காலி கூட உடனிருப்பவனால் எப்போது வேண்டுமானாலும் பிடுங்கப்படும் ஓர் மியூசிக்கல் சேர் தான் 

அவருக்கு அருகில் நிற்பவர் எப்போதும் நாற்காலியில் அமர தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்கிறார். ஏனெனில் அரசியல் முழுக்க முழுக்க அதிகார விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஏற்கனவே திருவள்ளுவர் இந்த அரசியல் அதிகார விளையாட்டைப் பற்றி உட்பகை என்ற பெயரில் எழுதியுள்ளார்.


காலப்போக்கில் ஒவ்வொரு அமைச்சரும் அடுத்த முதல்வராக முயற்சிப்பார்கள். பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக இதுதான் நடக்கிறது.

மேடையில் அமர்ந்து அதிகார விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார்.

ஆனால் கட்சியை உண்மையிலேயே நேசிப்பவர் எப்போதும் தனது அரசாங்கத்தைப் பற்றி சிந்தித்து கவலைப்படுவார்.



ஆட்டோக்காரன்

 ஏன்ப்பா பத்து ருபாய்க்கு இப்படி பேசுறீயே உனக்கு மனசாட்சியே இல்லையா என்ற போதும்.. சார் எனக்கு இந்த கூலி கிடைச்சா தான் வண்டி வாடகை மற்றும் எல்லா செலவு போக காசு நிக்கும் என்றே காறாராக பேசினான்...மாலை நேரத்தில் அவர்களின் வீடு தேடி அலைந்து போய் வீட்டு வாசலின் கதவை தட்டினான்.. ஏன்ப்பா தெரியாதனமா உன் ஆட்டோவில் ஏறிட்டேன்...அது தப்பு தான் இப்போ எதுக்கு வந்தே இன்னும் வேற காசு வேணும்னா என்றே சலிப்புடன் கேட்டார் பரந்தாமன்.


அவனோ காலையில் காசு கேட்டத்தை மாத்திரமே இன்னும் மறக்காமல் இருக்கும் அந்த மனிதரை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாமல்..என்னை மன்னிச்சிடுங்க சார்.. நான் கொஞ்சம் கோபக்காரன் ஆனா நல்லவன் தான்.


உன்னோட சர்டிபிகேட் எல்லாம் எங்களுக்கு வேண்டாம், வீட்டிற்குள் இருந்து எரிச்சலுடன் வெளிப்பட்ட பரிமளா.


அம்மா, இத்தாங்க அவனின் கையில் இருபது பவுன் தங்க சங்கிலி மின்னியது.. ஏய் இது எப்படி உன் கையில் வந்துச்சு... இன்னிக்கு சாய்ந்திரம் ஆட்டோ கழுவும் போது பின்னாடி பெட்டி வைக்கும் இடத்தில் ஓர் ஓரமாக கிடந்தது, அவனின் வார்த்தையில் உண்மையும் உங்களோட நகை எனக்கு எதுக்கு என்ற திமிரும் வார்த்தைகளில் இருந்தது.


நேற்று கல்யாண வீட்டில் தன் மகளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், அவள் முதன்முதலாக அமெரிக்கா போய் சம்பாதித்த பணத்தில் வாங்கி கொடுத்து அதே இருபது பவுன் சங்கிலி.


நீ பணத்தாசை பிடிச்சவ தானே, அதனால் தான் உன்னோட மகனுக்கு பெரிய பணக்கார இடத்தில் சம்பந்தம் பண்ணினே..என்னை மட்டும் ஏதோ ஓர் நடுத்தர குடும்பத்தில் வாழ்க்கைபட வைச்சே..


தனது பளபளஙஅமெரிக்கா வாழ்க்கை அலுத்து விட்டது என்பதை சொல்ல வந்தவளின் வார்த்தைகள் நாலு வழிச்சாலையில் முக்கிய ஊர் கடந்து செல்வது போல் சென்றனர்.


அன்பான அம்மா மகள் இருவரிடமும் வார்த்தை விளையாட்டில் சண்டை இழுத்து விட்ட வேடிக்கை பார்த்த சொந்தங்கள்.


தள்ளி நின்று மர்ம புன்னகை செய்த அவளின் சித்தியும் அத்தையும்.. அம்மா நீ இப்போ பேச்சை நிறுத்து என்ற போது வார்தைகள் எரிமலையாக வெடித்து அந்த கல்யாண மண்டபத்தில் இவர்களின் வீட்டு சண்டை திருஷ்டி பொட்டாக அமைந்தது.


அந்த வெறுப்பில் இனிமே நீ வாங்கி கொடுத்து சங்கிலியை போட மாட்டேன் என்று சபதம் செய்து அதை பையில் எடுத்து வைத்த நினைவு. ஆட்டோவில் ஏறும் போது, அந்த பையில் ஜிப் திறந்த போதிலும் நகை அதில் இருப்பதை மறந்தே இருந்தாள்.


இப்போ இதை பார்த்த பிறகு எல்லாம் நினைவு வந்தது, நேற்று இரவெல்லாம் மகளுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினை தீர விடிய விடிய அவர்கள் போனில் பேசிய போதும் அவர்களின் ஆணவம் குறைந்து அன்பு பெருகியது.


அதை வாங்கியவள், தம்பி ஓர் நிமிஷம் உள்ளே வா.ஓர் கப் காபி சாப்பிட்டு போகலாம்.உங்க போன் நம்பர் இருந்திருந்தா ஆட்டோ ஸ்டாண்டில் வந்து வாங்கிட்டு போக சொல்லி இருப்பேன்... அதான் வந்தேன்.


தம்பி என் வீட்டுக்காரர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா, நீ நினைக்கிற மாதியெல்லாம் அவரால் உடனே வரமுடியாது.


எனக்கு அதெல்லாம் தெரியாது பர்மா, நீங்க எப்போ வந்தாலும், எனக்கு கவலையில்லை ஏன்னா உங்க நகையை நான் திருடலை தெரியாம என் வண்டியில் விழுந்துவிட்டது..


என்னோட ஆட்டோவில் ஏறும் ஓவ்வொரு மனுஷனோட உயிர் உடமை இரண்டையும் பத்திரமா பார்த்து கொள்வது தான் என்னோட எண்ணம்.


இப்பவே நாலு சவாரி போயிடுச்சு..


தம்பி இவ்வளவு நல்லவனா இருக்கீயே நீ என்ன படிச்சிருக்கே.


M.B.A...படிச்சேன் சரியான வேலையில் கிடைக்கலை.யாரடமும் கை கட்டி நிற்க மனசில்லை..ஏன்னா நேர்மையா வாழும் யாரும் யாருக்கும் கைகட்டி போலியா நடிக்க தெரியாது..எங்க ஸ்டாண்டில் நிறைய பேர் அப்படித்தான்..கோபக்காரங்க தான் ஆனா யாரோட பொருளுக்கும் ஆசைபட்டதில்லை..எதையும் சொந்த காசில் உழைச்சு வாங்கணும் என்று திமிர் எங்க உடம்புல ஓடுது..


அந்த வீட்டில் இருந்த வயதான இருவரும் வாயடைத்து போய் நின்றார்..


போன் சிணுங்கியது, எதிர் முனையில் மாவட்ட S.P பேசினார்.


அங்கிள் உங்களோட நகை காணும் என்று ஓர் கம்ளெண்ட் எழுதி கொடுங்க மத்த விஷயத்தை நாங்க பார்த்துகிளோம்..


அதுக்கு அவசியமே இல்லைப்பா... ரொம்ப தேங்க்ஸ்..மத்த விஷயத்தை நீ நேரில் வா பேசலாம்.


அவனுக்கு ஓர் நிமிஷத்துல வியர்வை கொட்டியது ஓர் வேளை,  போலீஸ் வந்து விசாரிச்சா எவ்வளவு அசிங்கமா போயிருக்கும்.. இதுக்கு மேல இங்கே நிற்க கூடாது என்ற நினைப்பில் கிளம்ப இருந்தான்.


அப்போது அந்த மனிதர் பேசினார்.என்னை மன்னிசிட்டுப்பா, நேற்றிலிருந்து அவளோட கழுத்தில் அந்த சங்கிலி இல்லாத கண்டு நான் தான் அந்த பையன் கிட்ட யாருக்கும் தெரியாம யதார்த்தமா விசாரிக்க சொன்னேன்.. 


காலையிலேயே எனக்கு கிடைச்ச தகவல் படி உன்னை மாதிரி நல்ல பொறுப்பான பையனை பார்ப்பதே கஷ்டமாம்.. கோடி கோடியாக கொள்ளையடிச்சு வாழ மக்கள் மத்தியில் ஓர் புத்தர் மாதிரி இருப்பவன் என்று உன்னோட ஸ்டாண்ட் மற்றும் தெருகமக்கள் பல சொன்னார்களாம்.


கவலைப்படாதே தம்பி உன்னை மாப்பிள்ளை பார்ப்பதா சொல்லி தான் அவங்க விசாரிச்சு இருக்காங்க..

இரண்டு தங்கச்சி அம்மாவுடன் நீ வாழும் அன்பான எளிமையான வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துச்சு.

.

உன்னோட தங்கச்சி இரண்டு பேரும் கூட எங்க அண்ணா தான் எங்க உலகமே என்று சொல்லுவாங்களாமே..நீ நேர்மையா வாழ்வதை நினைச்சு அவங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க தெரியுமா..


சில நொடிகளில் காலுக்கு கீழே பூமி சுழல்வதை உணர்ந்தார்..


சார்.. சார்.. அப்போ நீங்க என்னை தப்பாவே நினைக்கலையா...


ஏன்னா இந்த வயசான காலத்துல எங்களுக்குள் மகன் மற்றும் மகள் என்ற வசதியான வாழ்வு வாழும் குழந்தைகள் காரணமாக புருஷன் பொண்டாட்டி இடையே சண்டை என்பதை யாரிடமும் சொல்ல முடியாம தவிக்கிற நிலைமை யாருக்கும் வரக்கூடாது..


அவரின் கண்கள் குளமாக பெருகியது.. சார் நீங்க என்ற போது.. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஓர் சாதாரண மாவட்ட நீதிபதியாக வேலைக்கு சேர்ந்து ஹைகோர்ட் நீதிபதியாக ஓய்வு பெற்றவன்.

 பல கேஸ் பார்த்தவன் அதனால் யாரையும் உடனே கைநீட்டி தவறு சொல்ல மாட்டேன்...ஏன்னா போலியான குற்றச்சாட்டு அவங்க மனதை எப்படி பாதிக்கும் என்பதை அறிவேன்.


அவனுக்கு அவரை பற்றிய மதிப்பு கூடியது..


Sorry sir, நீங்க யாருன்னு தெரியாம நேத்து...

அடவிடுப்பா நீ பேசியதில் எந்த தவறுமே இல்லை.நீ கோபமா பேசும் போதே நீ ரொம்ப நல்லனா தான் இருப்பே என்று நினைச்சேன் ஆனாலும் பாழாபோன புத்தி நாலு விதத்தில் யோசிக்க தானே செய்யுது..


தம்பி உங்க வீடு எங்கே இருக்கு அப்பா என்ன பண்ணுறார் 


அந்த வார்த்தையை கேட்டவுடன் அவன் தலைகுனிந்து நின்றான்..


ஏன்ப்பா நான் ஏதாவது தவறா கேட்டு விட்டேனா..இல்ல சார் எங்க அப்பா நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துடார்.. ஏதாவது புது விதமான நோய் அப்படித்தான் அம்மா சொல்லுவாங்க..பத்து வயசு வரைக்கும் அவர் காட்டிய பாசத்தை இன்னும் என்னால் மறக்கவே முடியலை சார்..


ஓர் வேளை எங்க அப்பா உயிரோட இருந்தா அவரும் உங்களை மாதிரி இருந்திருப்பார்..


என்னப்பா சொல்லுறே.. ஆமாம் சார் அவர் கூட சட்டம் படிச்சு லாயர் வேலை பார்த்தார்... நீதிபதி தேர்வு கூட எழுதியதா அம்மா சொல்லுவாங்க...


பரீட்சை ரிசல்ட் அவர் பாஸீ என்றது, ஆனா நோய் அவரை பெயில் ஆக்கிடுச்சு...

உன்னோட பெயர் என்னப்பா... எங்க ஊர் சாமி பேரூ சங்கர்..


என்னோட பெயர் தெரியுமா.. உதட்டை பிதுங்கினான்.. 


இசக்கிவேலு...


அவரின் கைகளை பற்றி உணர்ச்சி வசப்பட்டான்... அவருக்கும் ஏதோவொரு உணர்வு தாக்கியது 


எனக்கு எல்லாமே எங்க அப்பாதான் ஆனா சின்னவயசுலையே அவர் இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டேன்... லைசன்ஸ் எடுத்து காட்டினான்.


அதில் சங்கர் இசக்கிவேலு  என எழுதி இருந்தது..


சார் எங்க அப்பா பெயர் அது ஆனால் பலர் அதை ஜாதின்னனு நினைச்சிடுவாங்க.. மத்தபடி நான் யார் வம்புக்கும் போகவே மாட்டேன்..வாங்கின கடனை முழுசா கட்டணும் தங்கச்சி அம்மாவை நல்லா ழார்த்துகிடணும் இதைவிட பெரிய ஆசை எனக்கு எதுவும் கிடையாது சார்..


புரியது நீயும் எனக்கு ஓர் மகன் மாதிரி தான்.


தம்பி உனக்கு கார் நல்லா ஓட்ட தெரியுமா.. 


அவனின் போன் ஓலித்தது டேய் சங்கரூ ஏன்டா இன்னும் ஸ்டாண்டுக்கு வரலை.. உனக்கு ஏதும் உடம்புக்கு மறுமுனையில் பேசியதும் அவனின் அன்பு நண்பன் பேராட்சி... உன்னை தேடி விஜய் வந்திருக்கான்...நீ எப்போ வருவே 


.

.இல்ல அண்ணே.. நேத்து ஆட்டோவில் வந்த ஆளுங்க ஓர் தங்க சங்கிலியை விட்டு விட்டு போயிட்டாங்க அதை கொடுக்கிறதுக்காக வந்தேன்..


சரி சரி அப்போ நீ அதை முடிச்சுட்டு வா 

. இவன் உனக்காக காத்திருப்பானாம்.


அருகில் இருந்த விஜய் சொன்னது போனில் கேட்டது பிரெண்ட்ஸுக்காக காத்திருந்தா தப்பில்லை

.பொறுமையா வரச்சொல்லுங்க..



சரி சார் நான் கிளம்புறேன் என்ற போது ஓர் நிமிஷம் தம்பி எனக்கு ரிடையர் ஆயிட்டேன் ஆனாலும் எப்போதாவது வெளியே போகும் போது வண்டி ஓட்ட ஆள்தேவைபடும்.. நான் கூப்பிட்டா நீ என்னோட கார் ஓட்டுறதுக்கு ஆக்டிங் டிரைவர் வேலைக்கு வருவீயா..நாலு நாள் முன்னாடியே தகவல் சொல்லிடுவேன் நீ ஓண்ணும் கவலைபடாதே ..


என்ன வண்டி சார்...வா நானே காட்டுறேன்..கார்ஷெட்டில் போய் பார்த்தவனுக்கு மகிழ்ச்சியா இருந்தது..


தான் பல நாட்களாக ஓட்ட ஆசைப்பட்ட அதிவிலையுர்ந்த Fortuner... 



தூரத்தில் பாடல் எங்கோ ஒலித்தது இருவரின் காதுகளிலும் கேட்டது..


சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடையுடுத்தி சிவகங்கை குளத்தருகே சீர் துர்க்கை சிரித்திருப்பாள்.


அனைவரையும் காக்கும் விஷ்ணு துர்க்கை சுவர் ஓரத்தில் மல்லிகை மலர் மாலையில் சிரித்தபடி ..

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...