கனவுகள் பலவிதம்

நடிகராகும் கனவில் சிலர் 

டைரக்டர் கனவில் சிலர் 

வரதட்சணை கனவில் சிலர் 

சைக்கிள் கனவில் சிலர் 

சாப்பாட்டு கனவில் சிலர் 

அழகான பெண் கனவில் சிலர் 

அன்பான மனைவியின் கனவில் சிலர் 

பணக்கார கணவன் கிடைத்தால் 

நல்லதே என்ற கனவில் சிலர் 

கடனை அடைக்கும் கனவில் சிலர் 

உடல்நலம் பற்றிய கனவில் சிலர் 

பல கோடி சம்பாதிக்கும் கனவில் சிலர் 

எல்லோரும் கனவில் மிதக்கும் இந்த 

கணிணி யுகத்தில் நானும் கூட 

கனவில் மிதக்கிறேன்..  இயற்கையை 

காப்பாற்றுவதா இறைவனை காப்பாற்றுவதா

சொர்க்கம்

ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு விதமான கவலையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறான்...

ஆனால் இந்த அவனுக்கு தீர்வு சொல்லி தீர்த்தான் ஆட்கள் இல்லை.

பணம் இல்லையா லோன் தருகிறேன்.. என்று தான் சொல்லுறாங்களே தவிர அந்த மனிதனை பொருளாதார ரீதியாக உதவி செய்து கை தூக்கி விட எத்தனை பேர் இருக்காங்க 

இந்த உலகில் எல்லோருமே நல்லவங்க தான் ஆனாலும் தனிப்பட்ட சுயநலத்தோட தான் வாழுவாங்க.. யாரிடமும் எதுவும் எதிர்பார்க்காம வாழ்ந்து பாருங்க..வாழ்கை சந்தோஷமா இருக்கும்...உதாரணமா காலையில் எழுந்தவுடன் உங்க வீட்டில தினமும் சூட சூட பஜ்ஜி போண்டா காபி சகிதம்  இந்தாங்க சாப்பிடுங்க என்று சொன்னா நல்லா தான் இருக்கும்..ஆனா பணக்கார வீட்டில் இருப்பவர்களுக்கு அது சாத்தியம் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வு வேலை போனா தானே சம்பளமே


ஓவ்வொரு நாளும் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் கஷ்டபட்டு சம்பாதிக்கும் பணத்தை தினமும் கொஞ்சமாவது சேமித்து பழகுங்கள்..


ஏன்னா உங்களுக்கு யாரும் ஆபத்து காலத்தில் பணம் கொடுத்து உதவாம இருந்திருக்கலாம்..ஆனா அதே தவறை நீங்க மத்தவங்களுக்கு செய்து வீடாதீங்க..


அவன்கிட்ட நிறைய பணமிருக்கும் ஆனாலும் யாருக்கும் எதுவும் கொடுத்து உதவ மாட்டான் என்று பிறர் சொல்லும் போது ஏற்படும் வலிக்கு மருந்தே இல்லை.


சில ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவனால் தனது செலவு போக மிச்சம் இருக்கும் பணத்தில் ஓர் சிறு தொகை தான் கொடுத்து உதவ முடியும் என்பதை புரிந்து கொண்ட உறவுகளும் நண்பர்களும் கிடைத்தால் அதுவே சொர்க்கம் 

தமிழக முதலமைச்சர் பதவி

 தமிழக முதலமைச்சர் 

பதவியில் அமர நினைத்து 

கஜகர்ணம் செய்து பார்த்த சிலர் 

அந்த பதவியில் கிடைக்காதென்பதை 

தெரிந்து தெளிந்து அவரால் 

எதையும் மாற்ற முடியாது 

என்பதை உணர்ந்த பிறகு

ஆட்சியில் இருப்பவரை 

அண்டிப்பிழைக்க நினைத்து 

உள்ளுக்குள் வேதனை மறைத்து 

வெளியே உதட்டில் சிரிக்கின்றார்.

அந்த பதவிக்கு பக்கத்தில் 

அமர்ந்து கொண்டு வானளாவ 

புகழ்கின்றனர்..இன்றைய

தமிழக முதலமைச்சரை - அவரோ

புன்னகையை தருகிறார்.

 சிலருக்கு மட்டுமே புரிகிறது - - ஏன்னா 

அரசியலில் இதெல்லாம் 

சாதாரணம்மப்பா... மாற்றம் ஓன்றே 

மாற்றமில்லாதது..


கடவுளும் கடனும்

 ஓரே ஓர் நாள் ஓரே ஓர் தடவை கடவுள் தன்னோட பக்தன் கிட்ட பேச நினைச்சு வந்தார்... கடவுளுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு..

ஆனா அங்கே நடந்த கதையே வேற... மேலும் படிங்க விஷயம் ரொம்பவே சுவாரஸ்யமானது...

இங்க பாரூ நான் தான் நீ தேடின வேண்டிய கடவுள் உன்னோட அன்பு என்னை வானத்தில் இருந்து பூமிக்கு வர வைத்து விட்டது என்று அன்போட சொன்னாரூ...

அப்போது பக்தனாக தன்னை காட்டிக் கொண்டு அடிக்கடி கடவுளை வணங்கியவன் சொன்ன வார்த்தை கேட்டு கடவுளே ஆடி போயிட்டார்..

அது சரி என்னோட பெயர் அட்ரஸ் எல்லாம் உனக்கு யார் கொடுத்தது அதை முதலில் சொல்லு..

அட நீ தானப்பா தினமும் என்னை வணங்கினேன்..சில நேரங்களில் ராத்திரி 10 மணி 12 மணி ராத்திரி முழுவதும் கூட என்னை நினைச்சு வணங்கினாயே...


நீ சொல்லுறது எல்லாம் உண்மை தான்... நான் பண்ணியதை நீ ஓளிஞ்சு நின்னு பார்த்திருக்கே போலத் தெரியுதே...

கடவுளுக்கு கொஞ்சம் எரிச்சலா இருந்தாலும் பல வருடங்களாக பிராத்தனை செய்த பக்தன் என்று பொறுமையா பேசுனாரூ 

அடேய் நீ தான்டா நான் வணங்கிய கடவுள்... அப்படின்னா நான் பேங்க்-ல் வாங்கி இருக்கும் கடன் எவ்வளவு அதில் எவ்வளவு வட்டி கட்ட வேண்டி இருக்கு சொல்லு பார்க்கலாம் என கேட்டார்.

கடவுளுக்கு அவனின் நோக்கம் புரிந்தது...நீ கடன் வாங்கும் போது என்கிட்ட சொல்லிகிட்டா வாங்கினே என கோபமாக பேசினார்.

நீ தான் என்னோட கடவுள் என்றால் நேத்து ராத்திரி கூட நான் வாங்கி கடன் இதுவரையில் அதற்கான வட்டி இதையெல்லாம் சொல்லி கடனை சீக்கிரமா அடைக்க ஏற்பாடு பண்ணு என சொன்னேனே அதை ஏன் நீர் இன்னும் செய்யலை

அது சரி மாதம் தோறும் உன் பெயரை சொல்லி என்னோட வருமானத்தில் 10% சமயத்தில் 20% வரைக்கும் கூட வந்து ரூ வாங்கிட்டு போறானே அவன் அந்த பணத்தை வைச்சு என்னவெல்லாம் பண்ணுறான்னு சொல்லு பார்க்கலாம்..

தம்பி நான் உன்னை படைச்ச கடவுள் எனக்கு எதுக்குப்பா பணம்...

யோவ் நீ அதிகமாக பேசாதே நீ தான் உன்னை கூப்பிட சொந்தமா இடம் வாங்கி அதில் உன்னை கூம்பிட்டா தான் சந்தோஷமாக எங்களை ஆசிர்வதிப்பீர் என்று அந்த ஆள் சொன்னானே 

கடவுளுக்கு மிகவும் தர்ம சங்கடமாக போனது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தார்..


நீர் கடவுளாவே இருக்கட்டும் என் முன்னாடி நான் வணங்குற மதம் சார்ந்த கடவுள் பெயரை சொல்லி வந்து நிக்கிற நீர் முந்திய தெருவில் எந்த மத அடையாளத்தோட போனீங்க சொல்லும் என்றான்..


அவருக்கு எரிச்சலாக வந்தது..தம்பீ நீ தினமும் வணங்கியதால் தான் நேரில் வந்தேன் நீ இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்னை அசிங்கபடுத்துவே என்று நினைக்கவே இல்லை என்றார்..

கடவுளே நான் உங்களை கேவலமா நடத்தலை..ஆனா கடவுளோட உங்க பெயரை சொல்லி கிட்டு..உங்களோட பவரை உலகெங்கும் பரப்பும் நோக்கத்துடன்தான் ரொம்ப பேர்...பல ஏக்கர் நிலம் பேங்க பேலன்ஸ் என்று வாங்கி குவிக்கிறாங்க..


அது மட்டுமா... நீங்க எல்லாம் நிறைய நிறைய காசு கொடுத்தால் தான் நம்ம கடவுளோட நல்ல செயலை எல்லா இடத்திலும் போய் சொல்ல முடியும் அதனால் நிறைய காசு கொடுங்க என்று ஏழை நடுத்தர மக்களிடம் பணத்தை கடவுள் சேவை என்ற பெயரில் வாங்கி பெரிய பணக்காரனா ஆவுறாங்க அதாவது உமக்கு தெரியுமா என்றான்..


அவனிடம் இருந்து தப்பித்தால் 

Co Ltd..

தலைவர் பதவி


தலைவா வாழ்க...
தலைவரே நீயே
என்னுயிர் உனக்காக
எதையும் தருவேனென்று
அடிக்கடி வாக்குறுதி
தந்து தேர்தலில்
பிறருக்கு சொன்ன அதே
வாக்குறுதிகள்
காதுகளில் உரைத்தான்
கட்சிக்காரன் எதிர்பாராத
விதமாக விதியின்
வசத்தில் அந்த அசைக்கவே
இயலாது என்று ஊர் மக்கள்
பேசிக்கொண்ட கட்சியில்
உட்கட்சி பூசுல்...
பார் போற்றும் தலைவர்
என பாராட்டியவனே அவரை
முதலில் தள்ளி விட்ட
புண்ணியவான்...
தலைவர் பதவியில் இருந்தவர்
தலைகுப்புற விழுந்த போது .
சுற்றி நின்ற தொண்டரெல்லாம்
விரைந்தே ஓடினர்.. அந்த
நாற்காலியில் யார் முதலில்
அமர்வது என்றே தொடங்கியது
அறுபது வருட கட்சியில்
அரை நொடியில் மாறிய
காட்சிகள்... கீழே விழுந்த
தலைவருக்கு மருந்துக்கு கூட
ஆறுதல் சொல்ல ஆளில்லாத ...
மனதிற்குள் பல வலிகளை
சுமந்த படியே உதடுகளில்
முணுமுணுத்தார்..எந்த
கட்சியிலும் கட்சி பதவி மட்டுமல்ல
தொண்டர்களை நீக்கும்
அதிகாரம் பொருந்தியதும்
நிரந்தரமற்றது...
தலைவர் பதவி


கட்சித்தொண்டன்

 தெருவெல்லாம் 

ஆர்ப்பரித்து கொண்டாட்டம் 

வண்ணமயமான வரவேற்பு 

பலகைகள் எங்களின் 

மனதில் நீங்காமல் வாழும் 

நிரந்தர தலைவரே வருக வருக 

சுற்றி நின்று ஆனந்தமான 

அற்புத களிநடனமிட்டு 

கொக்கரிப்பில் தொண்டர்கள் 

.. ஆனாலும் மனதில் 

உள்ளூர பயம் பாம்பை விட 

பயங்கரமாகவே படமெடுத்து 

ஆடுகிறது..தொண்டனாக 

இருக்கும் ஓவ்வொருவரின் மனதிலும் 

தலைவர் நாற்காலியில் 

ஓர் முறையாவது 

அமர்ந்து விட துடிக்கும் 

இதயத்துடிப்பு இதயத்திற்குள்... 

அடுத்த தலைவர் போட்டியில்

அமர  நினைக்கும் முன்னாள் 

அரசியலின் சாதாரண 

கட்சித்தொண்டன் 

இந்திய பதக்கம் கனவா...நனவா..‌

 வலிகள் மிகுந்த வாழ்க்கை வாழ்பவர்கள் தான் பிறர் படிக்கும் சரித்திரத்தை உருவாக்கினார்கள்... ஓவ்வொரு மனிதனின் தனி மனித வலியையும் எழுத்துகளில் பெட்டகமாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியமானது.. ஏனெனில் நாளை வெல்லத் துடிக்கும் உங்களின் குழந்தைகளுக்கும் அவர்கள் பட்ட கஷ்டங்களும் வெற்றியை நோக்கி சென்று அதை தவற விட்ட தருணங்களும் தான் சிறந்த பாடங்கள் 

ஆம் கடைசி வரை சென்று இலக்கை அடையும் முன்னர் அடைந்து தோல்வியை உணர்ந்து பார்த்தால் மட்டுமே அவர்களின் வலியை அறிய முடியும்.

பதக்கத்தை வெல்லப் போகிறோம் நமது 

ஓவ்வொரு வரிகளும் மாபெரும் சக்தியை கொடுக்கும் வெல்ல வேண்டும்..வென்றே தீர வேண்டும்..ஏன்னா உலகம் அப்போது தான் மதிக்கும் இல்லையெனில் காலில் போட்டு மதிக்கும்... வாழுங்கள் மனிதர்களே. பார் போற்றும் வண்ணம் உங்களுக்கும் பிறருக்கும் பிறருக்கும் பயன்படும் வகையில் வெற்றியாளராக ..வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

அப்பாவின் திமிர்

 பல லட்சம் 

சம்பளம் வாங்கினாலும் 

இந்த வேலையை 

தக்கவைக்க நினைத்து 

ஆயிரம் யோசனையுடன் 

யாரிடமும் உண்மையாய் 

சிரித்து பேச முடியாமல் 

தவிக்கும் சாதாரண 

அலுவலக தலைவராக நான்..

எப்போதாவது கிடைக்கும் 

சின்ன சின்ன வேலைகள் 

கிடைத்த சிறு வேலையை 

கூட அதுவே தனக்கு கிடைத்த 

முதலும் முடிவுமான வேலையை 

போல் சிரத்தையாக சிரித்த 

முகமாய் செய்த தகப்பன்..

நீ பார்த்த வேலைக்கு இதுவே 

அதிகம் கூலியை குறைத்து 

கொடுத்த அதிகார வர்க்கம்...

ஆனால் அந்த முதலாளிகள் தான் 

அவனை பல இடங்களுக்கு 

அனுப்பி வைத்து இரண்டு மடங்கு 

கூலி வாங்கி கொடுத்தனர்...

இங்க பாரூ ஏதோ கஷ்டபடுறீயே

அதான் சொல்லுறேன் என்னோட 

பெயரை நீதான் காப்பாத்தணும்...

ஓவ்வொரு முதலாளியும் அவனையே 

தேடினர்.... காய்ச்சலில் படுத்த 

படுக்கையாக விழுந்தவனை 

கண்டு கொள்ளாமல் உதாசீனம் 

செய்து எள்ளி நகையாடிய 

உறவுகள்.... அவனை தேடி வந்து 

ஏன்டா உனக்கு அறிவே கிடையாதா...

எனக்கு சொல்லி அனுப்பினா என்ன..

ஆடம்பர காரில் வந்து இறங்கிய 

மாபெரும் முதலாளி சில நொடிகளில் 

சைரன் ஓசை பறக்க அலறியடித்து 

ஓடிவந்த காவல்துறை அதிகாரிகள்.

ஐயா உங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்..

நண்பர்களே இந்த கவிதை விரைவில் சிறு கதையாக எழுதப்படும் ஏன்னா ரொம்ப நிறைய விஷயம் இருக்கு இது பற்றி எழுத 


போலியான இறை ஊழியர்

 கடவுளை ஏதோ 

தனக்கு மட்டும் 

சொந்தமானவர் போலவும் 

எதிரில் இருப்பவருக்கு 

அவரின் அருமையை 

காண்பித்து கொடுக்க வேண்டி

துடிக்கும் அந்த போலி 

இறைவன் காட்டும் சாமியார் 

அல்ல அல்ல கடவுளை 

காட்டுவதாக சொல்லி 

அப்பாவி மக்களிடம் 

காசு வாங்கலாம் என்பதை 

அறிந்த கடவுளின் போலி 

ஊழியர்...சில ஆபாச 

சஞ்சிகைகள் கூடவே 

மிகவும் உன்னதமான அந்த 

புத்தகம்...ஏனோ மனசு மிகவும் 

வலிக்கிறது... ஆனால் அந்த 

மனிதரின் பளிச் ஆடை..

ஏழைகளை தன்பக்கம் ஈர்க்க 

துடிக்கிறது.....புதிய கட்டிடம் 

திறந்து வைத்தார்..தனது 

தகுதிக்கு மீறி கடவுளின் 

நாடக தூதுவனுக்கு 

முட்டையும் மசாலாவும் 

கலந்து செய்த பிரியாணியை 

பரிமாறி விட்டு அவரிடம் 

கைகட்டி நிற்கிறான் 

ஏழை சகோதரன்...என்னப்பா 

""பிரியாணி சமைக்க தெரியாத" "

ஆள் கையில் மாட்டிகிச்சு போலையே...

வானத்தில் இருந்த கடவுள் 

நினைத்தான் இந்த அப்பாவி 

ஏழையை காப்பது கடமையென்று.. 

ஓவ்வொரு நாளும் அந்த அப்பாவி 

ஏழையின் குடும்பத்தில் அனைவரும் 

நோய்நொடியின்றி 

நிம்மதியாக தூங்குகின்றனர்

கடவுள் இன்று எனக்கு தந்த வாழ்க்கை 

என் தகுதிக்கும் மீறி சொர்க்கம்..

இறைவனே உனக்கு நன்றியென்று..

நேற்றைய ""ஏழை சகோதரன்""  

இன்றைய ""பணக்காரன்"" - ஆனால்

போலியான இறை ஊழியர் அடுத்த வாரம் 

கலெக்ஷன் எவ்வளவு கிடைக்குமென்ற

பயத்தில் பழைய வரவு கணக்கை 

தூக்கம் தொலைத்து 

கண்கொட்டாமல் பார்த்து 

பரிதவிக்கிறான்.... அவனுக்கு 

பின்னால் மகந்தகாச புன்னகையில் 

சிரிக்கும் இறைவனை நினைக்க 

மனமின்றி எண்ணுகிறான்.... பணத்தை..

பிறருக்கு தனக்கு செய்யும் 

பசப்பு வார்த்தைகளையும் 

அறியாத கள்ளமில்லாத 

கடவுளின் பக்தனோ. வேறு உலகில் 

.சஞ்சரிக்கிறான்...அவனின் 

தூய்மையான இதயத்தில் 

துயில் கொள்கிறார்... இறைவன் 

மண்சரிவு

 காவேரியில் இருந்து 

லாரி லாரியாக 

அள்ளிச் சென்றனர் 

மணலை...கேள்வி கேட்ட

சில சமூக ஆர்வலர்களை

அடக்கி துடித்தனர் சிலர் ‌.

மணலை அள்ளுனா 

உன் அப்பன் வீட்டு 

சொத்தா போகுது...

தொலைச்சு போடுவேன்...

எதிர்க்க திராணியின்றி 

ஓதுங்கி நின்றனர்...

இயற்கையை சுரண்டியதை 

வேடிக்கை பார்த்த மழை மேகம் 

கண்ணீர் விட்டு அழுதது...

காவேரியின் மணல் 

மழையில் சரிந்தது ...

காவேரி ஆறு போல் ஓடியது...

முன்னணி பத்திரிகைகளில் 

தலைப்பு செய்திகளில் 

மண்சரிவு .. 

காதலும் காக்காவும்

 காதல் காக்கா 

இரண்டுக்கும் 

சில பல ஒற்றுமைகள் 

ஏனோ இதை புரியாத 

பலரின் வாழ்வு சிக்கலை 

சந்திக்கிறது.. காகம் என்று 

யாருக்கும் அடிமையாக 

இருப்பதில்லை.....உணவு 

கிடைக்கும் இடத்தை தேடி 

அலைகிறது... மனிதனும் கூட 

காதலை தேடி அலைகிறான்..

பல காதல் கவிதையில் 

முடிகிறது..சில காதல்

திருமணத்தில் முடிந்த

பொருளாதார சூழலில் 

சிக்கி தவித்து...காதலை விட 

பணமே தேவையென்ற 

உன்னத தத்துவத்தை

அறிந்து காகம் உணவு 

தேடுவது போல் தேடுகிறது

காசை தனது காதலை 

தக்கவைக்க ... வெயில் 

மழை பாராமல்...

கடவுளா...காதலா...

 கடவுள்... காதல்...

இரண்டுமே 

இலக்கியத்தில் 

படிக்கும் போது 

மிகவும் சுவாரசியமாகவும் 

வியப்பூட்டுவதாகவும் 

இருக்கும்.. ஆனால் 

நடைமுறையில் 

இரண்டுமே இனிமையான 

இருப்பது மிகவும் சிலருக்கே 

காதல் திருமணம் கேட்க 

இனிமையானது வாழ்ந்து 

பார்பவனுக்கே அதன் 

வலிகள் புரியும்.. 

கடவுளும் கூட அப்படித்தான் 

தியானம் செய்பவனை 

பார்த்தால் ஆசை வரும்..

தினமும் அவன்படும் 

அமானுஷ்ய அவஸ்தை 

யாரிடமும் பகிர முடியாத 

உண்மைகள்.. வெளியில் 

சொன்னால் பலரின் 

மனதை அது சுட்டுவிடும்..

பத்து வருடங்களுக்கு 

பிறகு நடக்கபோவதை 

கூட பத்து இமைதுளியில் 

சொல்லி விட்டு போங்கடா 

நீங்களும் உங்க போலியான 

உலகமும் என்று கடந்து செல்வான் 

அந்த பரதேசி தேடுவது பணத்தையும் 

தாண்டிய உண்மையான 

பாசத்தையும் நிலையான 

பேரமைதியென்னும் 

பிரபஞ்சத்தையும்...

எதுவுமே தெரியாமல் 

ஜோசியம் என்ற பெயரில் 

காசு பிடுங்கும் பலரையும் 

புறந்தள்ளி ஆன்மீகத்தில்

முன்னேறுகிறான்...

போலிகள் தான் 

ஆண்டவனை அடைய 

துடிப்பவனுக்கு  வண்ணமயமான  

திசைகாட்டி பலகைகள்..

எனவே தான் பல 

சன்னியாசிகள் 

மெளனமாய் கிடக்கின்றனர் ..

அறிந்தவன் பிதற்றுவதில்லை 

பிதற்றுபவன் அறிவதில்லை

அலுவலக தோழி

எதிர்த்து நின்ற 

எல்லோரையும் 

அடக்கி விட்டேன் 

அமைதியாக அனைவரும் 

சொன்னபடி யெல்லாம் 

செய்தனர்...வீட்டை பார்க்க 

வந்த அலுவலக நண்பர்கள் 

முன்னால் அன்பெனும் 

அதிகார தோரணையில் 

என்னை அடக்கியாளும் 

அன்பு மகன்... சிரித்தபடியே 

சொன்னாள் அலுவலக தோழி..

வீட்டில் இவர் தான் முதலாளியா 

நானோ மெலிதாக புன்னகைத்தேன் 

இங்கே எல்லாமே அவன் வசம் 

நாத்திக வேடதாரி

கடவுள் இல்லையென்று

மீண்டும் மீண்டும்
சொல்கிறான் -நாத்திகன்
ஆத்திகனோ என்றாவது ஓர் நாள்

மட்டுமே கோவிலுக்கு

போகிறான் கடவுள் மீதான
முழு நம்பிக்கையுடன்.. ஆனால்

நாத்திகனின் நினைவுகள்

எப்போதும் கோவிலை பற்றியே

ஆனாலும் அடிக்கடி உதட்டில்

சொல்கிறான் கடவுள் இல்லையென்று...

சாலை விபத்தை காணும் போதும்.

மாபெரும் அரசியல்வாதி

தலைவர் பதவியில் இருந்தே

தலைகுப்புற விழும் போதும்

எதிர்த்து பேசவே இயலாத

அரசியல்வாதிக்கு எதிர்பாராத

புதுவிதமான நோயில்

ஆஸ்பத்திரியில் அவர்

அனுமதிக்கப்பட்டு

உயிருக்கு போராடும் போது

தலைவர் சோலிமுடிச்சுது

இனிமே நானே கட்சி

தலைவன் என்று

அடுத்த கட்ட தலைவர்கள்

ஒருவரையொருவர்

அடித்து கொண்டு பதவியை

பங்கிடும் போதும்

நேற்று வரை உதாசீனமாக

நடத்தப்பட்ட தொண்டன்

அரசியல்வாதியாக தலைவர்

பதவியில் அமரும் போதும்...

உடனிருப்பவரிடம் சொல்கிறான்

அந்த நாத்தின் ககவலையோடு

கீழே இருப்பவனை

மேலே போக வைக்கிறான்

மேலே இருப்பவனை நொடிகளில்

கீழே விழ வைக்கிறான்.. நான்

மட்டும் கடவுளா இருந்தா

இப்படியெல்லாம் பண்ணவே மாட்டேன்..

நாத்திகன் மனதிலும் தொடங்கியது
கடவுள் நம்பிக்கை - ஆயினும்
இப்போதும் அவர்

கடவுள் எதிர்ப்பு நாத்திக வேடதாரி


ஆடி அமாவாசை

தினமும் கடவுளை 

விழுந்து விழந்து 

கூப்பிடும் நானே 

ஆற்றங்கரைக்கு 

ஆடி அமாவாசை 

திதி கொடுக்க வேண்டி..

தாமதமாக போனேன்..

அங்கே எனக்கு முன்பே 

நின்றிருந்த பலர்

அணிந்திருந்த 

சட்டையின் நிறம் கருப்பு...

தூரத்தில் கோவில் 

சுவற்றில் கீதை வாசகம் 

உலகம் ஓர் மாயை...

இயல்பான குணம்

கஷ்டமான நேரத்தில் நமக்கு நன்மை செய்த நபர்களை நினைத்து பார்ப்பதும்.. அன்று அந்த மனுஷனும் நம்மை மாதிரியே தான் தன்னோட கஷ்டத்தை மறைக்கவும் கவலைகளை மறக்கவும் அதிகமாக உழைத்து இருப்பார் போல் நினைப்பது மனிதனின் 

வயநாடு.. மண்சரிவு Wayanadu

 எத்தனை உயிர்கள் மாண்டனர் என்று கணக்கு இன்னும் தெரியவில்லை.இதுவரையில் காணொளியில் பார்த்த காட்சிகளே இன்னும் கண்களை விட்டு அகலவில்லை.

இதற்குள் வடநாட்டிலும் கனமழை என்ற செய்தி மனதை ரணப்படுத்துகிறது.

எல்லோரும் ஓர் நாள் மண்ணுக்குள் தான் போகப் போகிறோம் என்பது புரிகிறது.ஆனால் அமைதியும் ஆனந்தமும் தந்த இயற்கை இப்படி கோரதாண்டவம் ஆடி பலவீடுகளையும் உயிர்களையும் மண்ணுக்குள் அதுவாகவே புதைத்து விட்டதே..

இறந்து போனவர்களுக்கு இறப்பு வலி எப்படி இருந்திருக்கும்...இதை போன்றதொரு பேரழிவு நடக்காமல் இருக்க ஆண்டவனை பிராத்தனை செய்வோம்.

வயநாடு தனது சோகங்களையும் துயரங்களையும் கடந்து மீண்டு வர வேண்டும்.

அங்கே குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் ஓவ்வொரு மனிதனுக்கு நம்பிக்கையும் வாழ்வு தரவேண்டியது நிச்சயம்.


God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...