809-வது படைப்பு ஜனநாயகம் காப்போம்

கட்சியில் சேரும் எல்லாரும் முதல்வர் ஆகணும் நாட்டுக்கு சேவை செய்யணும் என்று நினைப்பது தவறா...ஏன்னா , தலைவா வாழ்க..அண்ணே வாழ்க... தம்பி நீங்க கட்சியில் நல்ல நிலைக்கு வளரணும் என்று உதட்டில் பேசும் எல்லா மனிதருக்கும் உள்ளத்தில் முதல்வர் ஆகணும் என்று ஆசை இருக்கு..எந்த நேரத்தில் எவன் எப்படி ஆட்சியை கவிழ்ப்பான் என்பதை யாராலும் யூகிக்க முடியாது.

ஓர் வேளை முதல்வர் பதவியில் இருப்பவரை இறக்கிவிட்டு இன்னொரு நபர் அதில் அமர நினைத்தால், அதை ஓர் நடுநிலையுடன் செயல்படும் பத்திரிகையாளன் மட்டுமே பேசுவார்.


நடுநிலையுடன் செயல்படும் #அரசியல்விமர்சகரை நீங்கள் சிறையில் அடைத்தால், யாரும் அவரை ஆதரிக்க மாட்டார்கள் தான்.

உங்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும் பேசமாட்டார்கள் தான். ஆனால் அது உங்கள் அரசியல் வாழ்க்கையில் என்றென்றும் ஒரு பெரிய தவறாக இருக்கும்.

 

உங்கள் அரசு வீழ்ச்சியடையும் போது, ​​உங்கள் நண்பர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உங்களது கடந்த கால தவறுகளை மட்டுமே குறை கூறுவார்கள்.

 

தனது மரபை நீண்ட காலத்திற்கு எடுத்துச் செல்ல விருப்பமுள்ள ஒரு தலைவர் ஒருபோதும் அவசரமா முடிவெடுங்க மாட்டார்கள், அரசியல்விமர்சகரை நீங்கள் சிறையில் தள்ளமாட்டார்.

 

அதற்கு பதிலாக அரசு தனது நிர்வாகத்தை மிகச் சிறந்த முறையில் நிர்வகிப்பார்,  மக்களின் ஆதரவைப் பெற

அப்படிச் செய்தால், அவரை விமர்சித்தவர் உங்கள் செயலுக்காக உங்களைப் பாராட்டுவார்.

 

தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் எழுதுபவர்கள் உங்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் உங்கள் சிறந்த நண்பர்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

 

உங்கள் அரசாங்கத்தில் நீங்கள் எந்த அரசியல் பதவியை வழங்கினாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

காரணம், அவர்கள் நாற்காலிகள் மற்றும் அதிகாரத்தைத் தேடி அல்ல, உண்மையை எழுதத் தயாராக இருக்கிறார்கள்

உங்க ஆட்சி சூப்பர்.நீங்க தான் அடுத்த முதல்வர் என்று உண்மையை மறைத்து விட்டு முகத்திற்கு நேராக புகழ்பவர்களை ஆட்சியில் இருப்பவர்கள் நம்புவதும் என்றுமே ஆபத்தானது.


ஓர் சிறந்த ஆட்சியாளன் தனக்கு எதிராக பேசும் தனிமனிதனோ அமைப்போ அவனோ அவளோ எதற்காக அப்படி பேசுகிறார்கள் அவர்களின் நோக்கம் என்ன.

நம்மிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறாரா அல்லது வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் பேசுகிறாரா என்பதை ஆராய்லார்.


ராஜாஜி.காமராஜர்...அண்ணாதுரை....எம்.ஜி.ஆர்...கருணாநிதி..ஜெயலலிதா...

இவர்கள் எல்லாம் தனக்கு எதிராக பேசிய எழுதிய ஊடகங்களை முடக்கவில்லை. மாறாக எதிராக பேசிய ஊடகங்களே அவர்களை புகழும் படி அரசாட்சி செய்தனர்.


இதுவே சரித்திரம். சிறந்த ஆட்சியை தந்த காமராஜர் தோற்றார் என்பதை மட்டுமே இன்றளவும் பேசி மக்கள் சிறந்தவர்களை புறக்கணித்து விட்டதாக எழுதும் ஊடகங்கள்

ஆனால் காமராஜர் பேசிய வார்த்தைகளை சரித்திரம் பாதுகாத்து வைத்தது. மக்கள் என்னை தோற்கடிச்சுட்டாங்கன்னு சொல்லாதீங்கடே.. நாம் இத்தனை வருஷமா எந்த ஜனநாயகத்தை நிலை நிறுத்த போராடினமோ.அந்த ஜனநாயகம் வெற்றி பெற்றது என்றார் 


மேலும் மக்கள் பணியை ஆட்சியில் இல்லாமலும் செய்யலாம் முன்பு அப்படித்தானே வெள்ளைக்காரன் காலத்தில் செய்தோம் என்ற மிக நுண்ணிய அரசியல் தெளிவை காட்டினார்.

எனவே தான் இன்றும் அவரை மக்கள் புகழ் கின்றனர் 

அரசியல் விமர்சகம் என்பது கூட ஓர் சினிமா விமர்சனம் போன்றதே.

ஓர் நல்ல படத்தை மோசமானது என்று சினிமா விமர்சனம் செய்த பிறகும் வெள்ளி விழா கண்ட திரைப்படங்கள் எத்தனையோ.. சிறந்த படம் இதை எத்தனை தடவை வேண்டுமென்றால் பார்க்கலாம் வரலாற்று பொக்கிஷம் இந்த படம் என்ற விமர்சனம் செய்த படங்கள் கூட பத்தாவது நாளில் பெட்டியில் சுருண்டது.


ஆனால் முதல் தோல்வியில் பாடம் கற்று பிழைத்த பலர் எதிர்காலத்தில் சூப்பர் ஹிட் கொடுத்ததும் வரலாறு


ஓர் சிறந்த அரசியல் விமர்சகனுக்கு, அரசியலை சரியான தரவுகள் மற்றும் துல்லியமான அலசலுடன், அரசியலை விமர்சனம் செய்யவேண்டும் என்ற ஓர் சாதாரண எண்ணம் மட்டுமே உள்ளது...

ஓர் வேளை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், துணிச்சலுடன் அரசை விமர்சனம் செய்யும் ஓர் நடுநிலையான விமர்சனை கைது சிறை தண்டனை என்று முடக்கி போட நினைக்கலாம். 

உலகம் தோன்றியது முதற்கொண்டு அரசு பதவியில் நீண்ட நெடிய காலம் இருக்க வேண்டும் என்றும். எதிரிகள் யாருமே தனக்கு எதிராக எதுவும் பேசி விடக்கூடாது, என்றே எதிர்த்து பேசியவர்களை அடக்கிய நிகழ்வுகள்.

சரித்திரத்தின் ஏடுகளை புரட்டிப் பார்த்தால் அப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லா நாடுகளிலும் எல்லா இடத்திலும் பரவிக் கிடக்கிறது.

பிரெஞ்சு மன்னர் ஆட்சி ஏன் வீழ்ந்தது என்பதை அறிந்த புத்திசாலி வியாபாரிகள் கண்டுபிடித்த யுக்தியே ஜனநாயகம் என்ற அமைப்பு.

ஊடகங்களையோ அல்லது எழுத்தாளர்களையோ கட்டுப்படுத்த உங்கள் படைகளைப் பயன்படுத்த வேண்டாம், அவர்கள் ஒரு சாதாரண மனிதராக தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானது பத்திரிகை துறை 

காங்கிரஸ் என்ற கட்சி எதற்காக உருவாக்கப்பட்டது இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்திய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வரலாற்று சாட்சியங்கள்.

உலகையே அடக்கியாள நினைத்த இங்கிலாந்து அரசாட்சி இந்தியாவில் ஜனநாயகம் தளைக்க ஓருவர் விதையிட்ட போது அதை அழித்து விட நினைக்கவில்லை 

மாறாக ஜனநாயகம் தளைக்க எதிர்கட்சியோ, அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி மக்களின் உணர்வுகளை அரசு செய்வர்களுக்கு எடுத்துரைக்க ஓரே ஓர் மக்கள் பிரதிநிதி மட்டும் போதாது என்றே பல கட்சிகள் தங்களின் கருத்துக்களை ஜனநாயக ரீதியில் சொல்லும் போது அதை ஆதரிக்கவே செய்தனர்.

மக்களுக்காக பேசும் பத்திரிகையாளரோ மக்கள் பிரதிநிதியோ தங்களின் கருத்துகளை சொல்ல இயலாமல் முடக்கப்பட்டால்.

அந்த பத்திரிக்கையாளர் இழப்பது அவரின் வாழ்வாதாரத்தை மட்டும்.. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அவர்களின் பல வருடங்களாக கட்டிக் காப்பாறிய கட்சி கரைத்தால் அதை மீண்டும் எழுப்ப இயலாமல் போய் விடும்.


ஜெயலலிதா அவர்களின் ஆட்சி 1996-ம் மாபெரும் படுதோல்வியை சந்தித்தது உண்மை தான்.ஆனால் அவரை ஆட்சியில் இருந்த இறக்கிய பிறகும் தொடர்ந்து பல பத்திரிகைகளில் அவருக்கு எதிராக எழுதப்பட்டன.

1996-ம் சட்டசபை தேர்தலை அவர் தனது தோலவியாக கருதவில்லை மாறாக, தன்னை ஏன் மக்களிடம் இருந்து பிரித்தது யார் எதனால் அந்த தோல்வி என்பதை புரிந்து கொண்டார். பத்திரிக்கைகள் தங்கள் ஜனநாயக கடமை செய்வதில் தவறில்லை அதை சரியா கையாண்டு இருக்கலாம் என்பதை உணர்ந்தார் போலும் 

அவரின் பக்குவமும் எளிமையும் மக்களை யோசிக்க வைத்தது.

சரித்திரத்தின் ஏடுகள் மாறியது அவரை இகழ்ந்தவர்களே, மேடையேறி அவரை வானாளாவ புகழ்ந்தனர் 

அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பேசிய நடுநிலையான பேச்சுகளுக்கும், எந்த தவறை யாரை செய்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கி ஏழை எளிய மக்களுக்கு அரணாக இருப்பேன் என்ற மனதில் இருந்து வந்த அவரின் யதார்த்தமும் மக்களை யோசிக்க வைத்தது. அவரின் அணுகுமுறையில் இருந்த மாற்றம் அவரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது.

மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த போதும் சில பத்திரிகைகள் அவருக்கு எதிராக தொடர்ந்து எழுதிய போதும், அதைப்பற்றி எல்லாம் கவலைபடாமல் ஆட்சி அமைப்பில் கவனம் செலுத்தினார்.

எத்தனை விமர்சனம் வந்தாலும் அரசின் மீது குறை இருந்தால் தைரியமாக சொல்லுங்கள், ஏதாவது ஓர் சில இடத்தில் தவறுகள் இருக்கலாம்.

அதை பத்திரிகை துறையில் இருக்கும் நீங்கள் தான் அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய ஜனநாயக கடமை உங்களுக்கும் இருக்கிறது அதை விடுத்து எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

அரசு ஊழியர்கள் கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு அரசு ஊழியர்களுக்கு அதிகமாக செலவு செய்தால் பிற துறைகளுக்கு எப்படி பணத்தை தருவது என்று தடாலடியாக பேசிய போதும் எல்லா பத்திரிகையும் ஓரணியில் நின்று அவரின் கருத்தில் இருந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லியது.


அதே சமயத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் எந்த உரிமைகளும் பறிக்க படாமல் பாதுகாத்தார்.


 அவருக்கு குறைந்த பட்ச ஓட்டு கூட கிடைக்காமல் அவரை படுதோல்வி அடைய வைக்க நினைத்து சில பத்திரிகைகள் அவருக்கு எதிராக எழுதியது 

நேரத்திலும் அவர் மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக கூடாது என்றே சில பத்திரிகைகள் பரப்புரை செய்தன.


அதைப்பற்றி அவரிடமே  கேள்வி எழுப்பிய ஓர் பத்திரிகையாளர்.

நான் கருத்து கணிப்புகளை நம்புவதில்லை, மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறேன் எனது மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்..

எனது சரித்திர வெற்றியை உங்களின் பத்திரிகையே செய்தியாக வெளியிடும் அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைபட வேண்டாம் என்றார்.

அவர் சொன்னது தான் நடந்தது.

இதுவே  ஊடகத்தின் கேள்விகளை அவர் பின்னாளில் எதிர் கொண்டவிதம்.

அதேசமயம் பத்திரிகை துறைக்கும் அரசு செயல்படுத்திய நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, ஏழை எளிய மக்களுக்கு அரசின் உதவிகளை பெற்று தருவதில் பெரும் பங்கு இருக்கிறது 

ஜனநாயகத்தை காப்பதே ஓர் சிறந்த அரசின் கடமை.

வாழ்க ஜனநாயகம் வளர்க பத்திரிகை தர்மம்.

தெனாலிராமன் என்ற புனைப்பெயரில் இலக்கியம் என்பது இக்காலத்தின் கண்ணாடி என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட ஓர் இந்திய பிரஜை 

ராமன் ஷங்கர் 

ஜெய்ஹிந்த் 



808-வது கவிதை படைப்பு சூரசம்ஹாரம்

 

வீட்டில் நடக்கும் 

அம்மா அப்பா

சண்டையை வெளியே 

சொன்னால் வெட்கக்கேடு 

தன்னையே நினைத்து 

உருகும் இருகாதலிகளை 

பற்றி கூட நினைப்பேதுமின்றி 

மனதின் கோபத்தை அடக்கிக் 

அதனையே வீராமாக்கி...

சூரனை அழிக்க கிளம்பிய 

குறிஞ்சி நிலத்தின் அதிபதி

தங்களின் மாயவிளையாட்டை 

அறியாத பாலகனுக்கு...

தாயும் தந்தையும் அன்பாய் 

வழங்கிய சக்திவேல்.... பெற்றவர்களின் 

செல்லச்சண்டையை உண்மையென்றே

நம்பிய கள்ளமில்லாத குழந்தையவன்...

எதிரியின் கண்ணுக்கும் சிறுவனாய் 

தெரிந்தவனின் ஆற்றலை உணர்ந்து 

மரமாகிப் போன சூரனின் அரக்க குணத்தை வேலெறிந்து  மயிலும் சேவலென்ற இரண்டாக்கிய 

திருச்செத்தில் ஆண்டவன்...

பக்கத்தில் துணையாக 

சேவலும் மயிலும் .. விண்ணை பிளக்கிறது மக்களின் ஆரவாரம் 

வெற்றிவேல்.. வீரவேல்...

முடிந்தது சூரசம்ஹாரம் 

807-வது கவிதை படைப்பு கடவுளும் காதலும்

அக்காவும் அம்மாவும் 

தங்கையும் காட்டிய 

எதிர்பார்ப்பே இல்லாத 

அன்பை உணர்ந்தவனுக்கே .. 

எந்த வித எதிர்பார்ப்பும் 

இல்லாமல் கடவுளின் 

மீதான காதல் தொடங்கும் 



806-வது கவிதை படைப்பு காதல் வலையில்


எல்லா வீடுகளிலும் 

தந்தை மகனின் மீது 

அபரிதமான பாசத்தை தருகிறான்.. ஆனால் சில சுயநலம் பிடித்த 

சொந்தங்கள் தங்களின் 

சுய தேவைக்காக மூட்டி 

விடும் சண்டையில்.. 

தந்தைக்கும் மகனுக்கும் இடையே... ஏற்பட்ட பனிப்போர்....அதில் 

குளிர் காய்ந்த சொந்தங்ள்.... 

எனவேதான் பல வீடுகளில் 

பெற்றவரின் பாசத்தை வெறுத்து விழுகின்றனர்.. 

காதல் வலையில் 

805 --வது கவிதை படைப்பு உழைப்பாளியின் திமிர்

அம்மா தாயே 

சாப்பிட்டு நாலு நாளாச்சு 

ஏதாவது இருந்தா குடுதாயீ...

கையில் குழந்தையோடு 

பிச்சையெடுக்கும் பிச்சைகாரி..

சற்று தூரத்தில் தலையை 

சொரிந்தபடி பிச்சை எடுக்கும் 

இன்னொரு பிச்சைக்காரன்...

ஓர் கையில் சிறு துடப்பத்துடன் 

 ஏதோவொரு துணியுடன் 

ஓட்டிய தூசியை கூட துடைக்க 

நேரமின்றி பணப்பந்தயத்தில்

ஓடும் மனிதரின் பல லட்சம் 

 காரை துடைத்து விட்டு செல்லும் 

ஒர் திமிரு பிடித்த சிறுவன் யாரிடமும் பணத்தை கேட்கவே இல்லை...

சில நொடி சிக்னலில் வேகமாக 

விரைந்து  சென்ற அந்த சிறுவன் ..

யாருமே காசு தரவில்லை என்ற போதும் 

சிரித்தபடியே மறுபக்கம் சென்று 

காரை துடைத்தான்.... தூரத்தில் 

இருந்து வந்த ஓர் மனிதர் 

தனது சட்டை பையில் இருந்து 

எடுத்துக் கொடுத்தார்...

2,000 ரூ நோட்டு... சார் 

இது ரொம்ப அதிகம் என்றான்...

அவரோ புன்னகையுடன் 

சொன்னார்..உன் உழைப்பு 

இது சரியான ஊதியம் தான்...

தூரத்தில் பாட்டுச் சத்தம் கேட்டது 

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் 

அவன் அன்பு மனங்களில் வசிக்கிறான்...

804-வது கவிதை படைப்பு - டீச்சர் என்னை தெரியுதா. - வார்த்தைகளின் ஆழம்

வெளியூர் செல்லும் 

விரைவுப் பேருந்தில் 

தட்டுத்தடுமாறி ஏறும் 

அந்த வயதான பாட்டியிடம் 

ஓடிச் சென்று கேட்டான் ஒருவர் 

டீச்சர் என்னை நினைவு இருக்கா..

யாரையோ அழைத்து இவங்க தான் 

எனக்கு அ...ஆவன்னா....A..B..C..D...

சொல்லிக் கொண்டுத்த 
எல்.கே.ஜி டீச்சர்.. சில நொடிகள் 

அவருடன் சிரித்த படியே புகைப்படம் 

எடுத்துக்கொண்டனர்... பேருந்தில் 

இருந்தவரெல்லாம் மகிழ்சியாக இருந்தனர்.. 

ஆனால் அந்த பாட்டியோ 

ஜன்னலோரமாக அமர்ந்து

வேடிக்கை பார்க்கிறாள்... எல்லோரும் 

அவளிடம் டீச்சர் நீங்க எப்படி இருக்கீங்க 

என்றே விசாரித்தனர்.. ஆனால் 

ஒருவருக்கு கூட உங்க பசங்க 

எங்கே இருக்காங்க உங்களை நல்லா 

பார்த்துகிறாங்களா..டீச்சர் நீங்க 

எங்கே இருக்கீங்க என கேட்க தோன்றவில்லை...

வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் 

வசிக்கும் அவளுக்கு மட்டுமே தெரியும் 

அவளின் வலிகள்...மனதிற்குள் அசைபோடுகிறாள்...

எப்படி இருக்கீங்க...எங்கே இருக்கீங்க..

சில வார்த்தைகள் தான் வித்தியாசம் 

ஆனால் அதில் இருக்கும் 

வார்த்தைகளின் ஆழம் 

803-வது கவிதை படைப்பு - அழகானவரும்.. அறிவானவரும்

 அழகானவர்களும் 

அறிவானவர்களும் 

ஆபத்து காலத்தில் உதவாமல் தள்ளிபோவர் 

ஆனால் அன்பாவனரும் இரக்கமுள்ளவரும் மட்டுமே 

உதவி செய்வர்... இந்த வார்த்தைகள் நிச்சயமாக 

எல்லோருக்கும் புரியாது.. 

ஓர் வேளை உங்களுக்கு 

புரிந்து விட்டால் அந்த 

அன்பானவரும் இரக்கமானவரும் 

நீங்களே என்பதை உணர்வீர்கள் 

802-வது கவிதை படைப்பு - கல்யாணம் ஆனவன் Vs கல்யாணம் ஆகாதவன்



 கல்யாணமானவர்கள் எல்லாம் எப்பவும் சந்தோஷமாக இருக்கிற மாதிரியே நடிக்கிறாங்க.. கல்யாணம் ஆகாதவன் எல்லாம் எப்பவும் கஷ்டத்துலையே இருக்கிற மாதிரி நடிக்கிறானுங்க...

அட தெரியும் தலைவரே.. நான் ஏதாவது சொன்னா நீ உடனே நம்பமாட்டே அதுக்கு நான் விளக்கம் கொடுத்த பிறகு....ஹே... ராம்... உனக்கு மட்டும் மண்டை எப்படி இப்படி எல்லாம் யோசிக்கதுன்னு கேட்பீங்க ... உங்க வீட்டுல இருக்கிற சின்ன குழந்தைகிட்ட பக்கத்தில் இருக்கிற டி.வி ரிமோட் எடுக்க சொல்லுங்க....அதே மாதிரி உங்க வீட்டுகார்கிட்ட பொங்கலுக்கு பத்து பவுன் நகை வாங்கணும்ன்னு  சொல்லுங்க...பிறகு தெரியும் யார் எப்படி ரியாக்ஷன் கொடுக்காறாங்கன்னு.... தலைவா இனிமே நீ யோசிப்பே 🤣😂🤣😂😂

801-வது கவிதை படைப்பு டீக்கடை வாசல்

 கடவுளே இல்லை 

என்பவரும் கடவுளே 

எல்லாமும் என்பவர்களும் 

ஓரே டீக்கடையில்  தான் 

மசால் வடையும் இஞ்சி 

டீயும் குடித்தனர்.. ஆனால் 

அவர்களுக்கு செலவு 

செய்தது என்னவோ 

உண்மையை மட்டுமே 

தேடும் இரு வேறு 

சிந்தனை கொண்ட 

நல்ல இரு மனிதர்கள்..

கடவுள் இருக்கிறார் என்றவனோ 

சில்லறை காசுகளையே கேட்டான்.. கடவுளின் பெயரால் உணவு படைத்து 

ஏழைக்கு கொடுக்க வேண்டுமென்று..

ஆனால் கடவுளே இல்லை என்றவனோ 

தனது எடைக்கு எடையாக ரூபாய் 

நோட்டுகளை கேட்கிறான்...

கடவுளை இல்லை என்னும் 

பலரும் கடவுளை நம்ப தொடங்கினர்...

எங்கோ இருக்கும் கடவுள் சேவகன் 

சில்லறை காசே போதுமென்கிறானே..

இவனை விட நல்லவனை உலகில் 

காண்பதரிது என்றே புத்தனாக 

பலருக்கு ஞானம் பிறக்கும் இடமே 

டீக்கடை வாசல்..

800-வது கவிதை படைப்பு - குழந்தைகள்

 ஏழைகளின் வீட்டில் 

குழந்தைகள் 

மகாராஜாக்களைப் போல 

நடத்தப்படுகிறார்கள், 

பணக்காரர்களின் வீடுகளில் 

குழந்தைகள் 

அடிமைபோலவே  

வளர்க்கப்படுகிறர்கள்


799-வது கவிதை படைப்பு - ஏழையாக பிறப்பது தவறல்ல.

ஓருவன் ஏழையாக  

பிறப்பது தவறல்ல.. 

ஆனால் ஏழையாக 

பிறந்த ஒருவன் பணம் 

வசதி வந்த பிறகு 

பிறரை ஏழையாக 

நடத்துவது தான் தவறு...

798-வது கவிதை படைப்பு - அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு

 இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு அதுக்கு பிறகு நானும் உன்னை முன்மாதிரியே வீட்டில் தான் உட்காரணும்.



நமக்குள்ளே சில வித்தியாசம் தான்டா இருக்கு, மத்தபடி நீயும் நானும் ஓண்ணு தான் என்ற அப்பா காலையில் சாப்பிட உட்கார்ந்த மெல்ல பேச்சை தொடங்கினார்..






அப்பாவுக்கு சொன்னா புரியாது என்றே மகனும்.. மகனிடம் எப்படி சொன்னா புரியும் என்றும்

எத்தனையோ முறை மனதிற்குள் ஓத்திகை பார்த்து விட்டு பேசிய பிறகு வார்த்தைகள் மழை மேகமாய் முட்டிக் கொண்டு தாய் கண்ணில் மழையாக பொழிகிறது... அண்ணன் கோபத்தில் போறான் அவன்கிட்ட பேசுங்க என்னும் தங்கை ...வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகனிடம் யாருமே பேசவில்லை அவனும் கூட முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு  திண்ணையிலேயே படுத்து தூங்கி விட்டான்

ஏன்டீ புள்ள ராத்திரி பூரா பனியில் படுத்து இருக்கான்.

நான் தான் அவன் மேல கோபத்துல இருக்கேன் நீயாவது என்னவாச்சு பார்க்க வேண்டாம்.. அவனருகில் வந்து போர்வை கூட இல்லாமல் தூங்கி கொண்டிருந்தவனுக்கு போர்வை போர்த்தி விட்டார்.




தூக்க கலக்கத்திலும் அவன் முணங்குவது கேட்டதும் அம்மா, நேத்து ராத்திரி அப்பா சாப்பிடாரா.. இல்ல வழக்கம் போல என்னை திட்டிக் கிட்டே அந்த மனுஷன் தூங்கிட்டாரா. எனக்கு எப்போ நல்ல வேலை கிடைக்க போகுதோ அதுவரைக்கும் அந்த மனுஷன் என்னை கரிச்சு கொட்டிக்கிட்டேத தான் இருப்பாரூ..



அம்மாவிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசிய அவனின் வார்த்தைகளை கேட்டவருக்கு ஏதோ ஓர் குற்ற உணர்ச்சி மேலிட்டது.



ச்சே தூக்கத்தில் கூட என்னைப் பத்தியும் என்னோட வார்த்தையும் இவனை இவ்வளவு தூரம் காயப்படுத் இருக்கா என்றவாறே பல்துலக்கி விட்டு வந்தவர்.



சமையல்யறையில வந்த மனைவி தந்த காபியை கையில் வாங்கினார்.

ஏன்டீ நான் என்ன நம்ம புள்ளைய ரொம்பவே திட்டிவிட்டேனா என உறுத்தலான மனதோடு கேட்டார்.



நீங்க எம் புள்ளை கரிச்சு கொட்டாம இருந்தா தான் உலகமே இடிச்சு விழுந்திடுமே அலுத்துக் கொண்டு சமையலறைக்கு உணவு தயாரிக்க சென்றாள்.



அப்பா நீங்க இங்கே இருக்கீங்களா, உங்களை நான் வீடு பூரா தேடிக்கிட்டு இருந்தேன். காலையில் எழுந்து வந்த மகள் வாசலில் உட்கார்ந்து இருந்த அவனின் அருகில் அமர்ந்தாள்.



நேத்து காலேஜில் ரொம்ப நேரம் கிளாஸ் எடுத்தாங்கப்பா.. முதல் நாள் முதல் வருஷமே இவ்வளவு கஷ்டமா இருக்கே இன்னும் நாலு வருஷம் எப்படி தான் படிச்சு முடிக்க போறேனோ தெரியலை..



அரியர்ஸ் எதுவுமே இல்லாத பாஸூ பண்ணுறது கஷ்டமான விஷயம் என்று என்னோட சீனியர்ஸ் சொன்னாங்கப்பா.




உங்க காலத்தில் எல்லாம் படிப்பை இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இருக்க மாட்டீங்க தானே என்ற போது ம்ம்ம் என்பது போல் தலையாட்டினார்.




அப்பா எனக்கு இன்னும் தூங்கமாவே தான் இருக்கு.

இந்த சனி ஞாயிறு இரண்டு நாளு தான் இனிமே லீவு மத்த நாள் எல்லாம் படிப்பு புஸ்தகம் தான் என்ற படி அவரின் மடியில் படுத்தாள்.




காபி எடுத்து வந்த மனைவியோ திட்டினாள்..என்னங்கநீங்க வீட்டில் இருக்கும் போது இந்த கழுதை ஓர் வேலை செய்யுது இல்லை..எதாவது சொன்ன உங்க முன்னாடி வந்து கண்ணை கசக்குறா நீங்களும் கழுதை மாதிரி வளர்ந்த பொண்ணை மடியில் போட்டு கொஞ்சி கிட்டு இருக்கீங்க.



உங்க இரண்டு பேருக்கும் விவஸ்தையே. கிடையாது. ஏய் என்டீ பிள்ளையை கரிச்சு கொட்டுறே இன்னும் நாலு வருஷமோ அஞ்சு வருஷமோ தானே நம்ம கூட இருக்க போறா அதுக்கு பிறகு புகுந்த வீட்டுக்கு போனா அவளுக்கும் உன்னை மாதிரியே பொறுப்பு வந்திட போகுது.



உன்னை மாதிரியே தான் உன் பொண்ணு 




நான் எதாவது சொன்னா, ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிடுங்க.

பொண்ணுக்கு இவ்வளவு செல்லம் ஆகாது... இந்தாங்க காபி பிடிங்க.



இப்போ தானடீ குடிச்சே..இது உங்க மகாராணிக்கு. அவங்களுக்கு தூங்க களைப்பு போன பிறகு எழுந்திருப்பாங்க அப்போ அவளுக்கு ஊட்டி விடுங்க சரியான தறுதலை லீவு நாளில் பெத்தவளுக்கு ஏதாவது உதவி செய்யணும் என்று தோணுதோ சிடுசிடுப்புடன் சென்றாள்..



அப்பா உன் பொண்டாட்டிக்கு என்னாச்சு காலையிலேயே உன்னை திட்டிவிட்டு போறாளா..



ஏய் திருடி அப்போ இவ்வளவு நேரம் நீ நாங்க பேசுறதையெல்லாம் கேட்டு கிட்டு தான் இருந்தீயா.



பிறகென்னப்பா இரண்டு நாள் லீவுல கூட பாத்திரம் கழுவு வீடு துடை துணியை துவைச்சு போடுன்னு இம்சை பண்ணுறா.




சரி அதை இப்படி கொடு என்றாள்.



ஏய் குட்டி கழுதை பல்தேச்சுட்டு தான் காபி குடிக்கும் என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...



அப்பா நான் உன் பொண்ணுப்பா நீ சொன்ன எதையும் மறக்க மாட்டேன் நீ சொல்லி கொடுத்த படி தான் செய்வேன்.அப்போவே பல்துலக்கிட்டேன்.. அரக்கி கிட்ட இருந்து தப்பிக்கத்தான் இந்த நாடகம்.என்றவள்.



அப்பா நான் ஒண்ணு சொன்னா நீங்க கோபிச்சுக்க மாட்டீங்கன்னா நான் சொல்லுவேன்.



சொல்லு தங்கம் நீ சொல்லி நான் எதையாவது மறுத்து இருக்கேனா.. உனக்கு என்ன வேணும் சொல்லு.



எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா, ஆனா நீங்க அண்ணனை வேலை போகலை என்று தினமும் திட்டிக்கொண்டே இருப்பதை என்னால் பொறுத்துக் முடியலை நேத்து என்னை காலேஜில் இருந்து கூட்டிக்கிட்டு வரும் போது அண்ணன் முகம் எப்படி வாடிப் போய் இருந்துச்சு தெரியுமா.



ஏன்ம்மா உன்கிட்ட ஏதாவது சொன்னானா.



இல்லைப்பா, நீங்க அவனை கஷ்டப்பட்டு படிக்க வைச்சீங்க அவனும் நம்ம குடும்பத்தோட நிலைமை தெரிஞ்சு யாரிடம் பேச கூட மாட்டான் தெரியுமா.. ஏன்டா அமைதியா இருக்கேன் கேட்டேன்.



பாப்பா நீ அப்பாகிட்ட சொல்லு ஓர் வேளை இந்த மாசத்துக்குள்ள வேலை கிடைக்காம போன என்று கண்கலங்கினான்..



வேற எதுவும் சொன்னா..



இல்ல அப்பா.. நான் எங்கேயாவது போனா என்னை தேடாம உன்னால்  பார்க்காம இருக்க முடியுமா பாப்பான்னு கேட்டான்..



ஏன்டா இப்படி கேட்குமே ன்னு சொன்னதுக்கு நான் படிச்ச படிப்பு... இந்த கம்பெனி வேலைக்கு தான் சென்னை பெங்களூர் போனா தான் வேலை கிடைக்கும் ஆனால் என்னால் உங்களை பார்க்காம ஓர் நாள் கூட இருக்க முடியாதேன்னு வருத்தமா சொன்னான்...

சரிம்மா இனிமே அவனை அதிகமா திட்ட மாட்டேன் என்றது சரி நான் போய் அரக்கிக்கு உதவி பண்ணுறேன் இல்லாட்டி வேண்ணும்னே காலை சமையலை லேட் பண்ணுவா என்றாள் வாயாடி மகள்.




தகவலை மிக எளிதாக சொல்லி விட்டு போன மகள்..இதோ மாதிரி தானே எனக்கும் வேலை கிடைக்காம கஷ்டப்பட்ட போது, அப்போது அவர் மனதில் தோன்றிய விஷயங்களை நினைக்க நினைக்க மிகவும் பயமா இருந்தது.



தூங்கி கொண்டிருந்த மகனின் முகத்தை பார்த்தார்.கல்லூரி முடித்தவன் என்பதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் அவ்வளவு அப்பாவியான முகம்..



சிந்தனைகள் பலவிதமாக மனதில் அலையடித்தது, மெல்ல எழுத்தவர் தட்டுத்தடுமாறி நடந்தவர் ஏதோ ஓர் சிந்தனையில் வாசலில் தடுமாறி விழுந்தார்



அவர் விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே சமையல் வேலை பார்க்கும் போது ரேடியோவை அலற விட்டபடி இருந்தவர்களுக்கு கேட்டு இருக்க நியாயமில்லை.



ஆனால் நொடியில் அப்பா என்னப்பா ஆச்சு உனக்கு நேத்து மாத்ததிரை நேரத்துக்கு சாப்பிட்டீயா.. இல்லை என் நினைப்புலையே.. அன்பும் அக்கறையுமாக கேட்டவனின் வார்த்தைகளில் தனது இளமை காலத்தை நினைத்து சிரித்தார்.



சாப்பிட்டேன் தம்பி, அப்பா இனிமேல் உன்னை ரொம்ப திட்ட மாட்டேன்டா..நீ எதுவும் தப்பான முடிவு எடுத்திடாதே அதற்கு மேல் பேச இயலாதபடி அவனின் கண்கள் கலங்கி இருந்தது..



நான் எந்த தப்பான முடிவு எடுக்கலைப்பா... நேத்துநண்பனோட அப்பா ஓர் கம்பெனி தொடங்குறாரூ.அவருக்கு ஓர் சூப்பர்வைச்சர் தேவைன்னு கேள்வி பட்டேன் அதான் போய் பார்த்து பேசிட்டு வந்தேன் அடுத்த வாரத்தில் இருந்து வரச்சொல்லி இருக்காங்க.

என்ன கம்பெனி என்றார், புதுசா தொடங்குறாங்கப்பா..




வீடுகளுக்கு தேவையான சோலார் பேனல் தயாரிச்சு விற்பனை செய்ய போறாங்களாம்.. அதான் 




கைத்தாங்கலாக பிடித்த படி அவரை திண்ணையில் அமர வைத்தார்.. ஏன்ப்பா நீங்க எதுவும் கனவு கண்டீங்களா.என்றது 



அவனின் கன்னத்தை அன்பாக தடவினார். நான் உதட்டில் தான் உன்னை திட்டினேனே தவிர நீ வெளியூர் வேலைக்கு போனா உன்னை பார்க்காம எங்களால் இருக்க முடியாதுடா தம்ப என்றபடி அவனின் மார்பில் சாய்ந்தார்.



எனக்கு பிறகு இந்த வீட்டிற்கு நீ தான்டா பொறுப்பா பார்த்துகிடணும் என்றவரை எப்போதும் எதிர்த்து பேசும் அவன் சரியென்றான்.




தூரத்தில் முருகன் கோவிலில் ஸீபீக்கரில் பாடல் ஒலித்தது.




“”””””””” ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு

தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு””””””””

 

 

 


100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...