நெல்லையப்பர்

நீண்ட காலத்திற்கு முன்பு  பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமகோனார் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு போகும் வழியில் கல் ஒன்று அவரின் காலை தடுக்கி விட்டு, கையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் சிந்தியது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து  சிலநாட்கள் நடைபெற்றது. இதனை பார்த்து பயந்த ராமகோனார் மன்னரிடம் உடனே இந்த விஷயத்தை கூறினார். மன்னர் வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, கல்லை அகற்ற கோடரியால் வெட்டினார். அந்த சமயம் அந்த கல்லிலிருந்து ரத்தம் கொப்பளித்து வந்தது. அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் திக்குமுக்காடிய சமயத்தில், ஒரு அசரீரி குரல் ஒலித்தது. அந்தக் கல்லின் அடியில் சுயம்புலிங்கம் இருப்பதாகவும், அந்த லிங்கத்தை மூவராக மூலவராக கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அந்த குரல் ஒலித்தது. அந்த லிங்கத்தை கொண்டு மன்னர் நெல்லையப்பர் கோயிலை எழுப்பியதாக கூறுகிறது வரலாறு





நெல்லுக்கு
வேலியிட்டு
காத்தவர்,
வேணு வனநாதர்,
நெல்லையம்பதி,
பலருக்கு
மன அமைதி
வழங்கிடும்
காந்திமதி
உடனுறை
நெல்லையப்பர்

காதல்


பிறர் மனம்
புண்படாமல்
பேசுவது ஓர்
கலை தான்,
உலகில்
அனைவரும்
கலைஞர்கள்
இல்லையே,
அற்ப விஷயத்திற்கு
கோபப்பட்டும்
சாமானிய
மனிதன்,
அவனுக்கும்
தேவைப்படும்
அன்பு மொழி
காதல்



திருச்செந்தூர்


கவலையோடு
வந்தவரும்,
மனநிம்மதி
எங்கேயென்று தேடி
அலைந்த வரையும்
சில நிமிடத்தில்
அனைத்தும்
மறந்து
சந்தோஷம்
கொள்ளச் செய்தது
திருச்செந்தூரின்
கடற்கரை அலை




மதுரை - மீனாட்சி


மீன் தனது
குஞ்சுகளை
காப்பது போல்
நம்பிய பக்தரை
காக்கின்றாள்
அன்னை
மதுரை
மீனாட்சி


இருட்டுகடை அல்வா


திருநெல்வேலி
கோவில் அருகே
அமைந்துள்ளது
இருட்டுகடை அல்வா
மாலை நேரத்தில்
வரிசையில்
மக்கள் ஏனென்றால்
அத்தனை
சுவை..

vinayagar


சுஜித்


ஆழ்துளை
கிணற்றில்
விழுந்த
குழந்தை
என்று கூட
பாராமல்
பேசும் சில
அறியாத
மதியீன கூட்டம்,
மீண்டு வந்து
உலகிற்கு
உறக்கச்சொல்
ஆழ்துளை
அவலம்
இனிமேல்
வேண்டாம்
என்று
சுஜித்


தீபாவளி



தாய் தந்தையின்
ஆசி பெற்று
புத்தாடை
அணிந்து கொண்டு
சுற்றமும் நட்பு என
அனைவரும்
வாழ்த்துக்கள்
பரிமாற்றி
இன்முகத்துடன்
பட்டாசு வெடித்து
இனிப்புகளை
உண்டு கவலை
மறந்து
சந்தோஷமான
 இந்த நாள்
தீபாவளி

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...