விஜயகாந்த் பாசக்கார தலைவர்

அம்மாவின் பாசம்.. 

அப்பாவின் கோபம் 

தங்கைகளின் வேதனை.

நட்பின் இலக்கியம்.

பொய்யே பேசாமல் தெரியாமல் 

இந்திய வரலாற்றில் எதிர்கட்சி தலைவராக உருவான 

ஓர் உன்னத தலைவன்... 

தன் கட்சியில் இல்லாத 

மனிதருக்கு உதவும் 

ஓர் ஹானஸ்ட் ராஜ்..

கலைஞர் ஜெயலலிதா 

இருவரையும் எதிர்த்து 

அரசியல் ஆட்டத்தை 

தொடங்கிய  வீரமிக்க கேப்டன்.. 

செவாலியே சிவாஜிக்கு பிறகு

நீண்ட நெடிய உணர்ச்சிகரமான 

வசன உச்சரிப்பு..

ஆர்ப்பரிக்கும் கோபம்

உள்ளத்திலோ குழந்தையின் குணம்

அள்ளிக் கொடுப்பதில் 

இன்னொரு வள்ளல் 

கடந்த காலத்தில் 

வெள்ளம் பாதித்த பகுதியில் 

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு

கேமரா வெளிச்சம் காட்டாமல் இவர் செய்த உதவிகள்  ஏராளம் . 

நடிகர் சங்க

கடனை அடைத்து 

முதுபெரும் 

அரசியல்வாதிகளின்

வயிற்றில் புளியை

கரைத்தவர்.

பொய்யே பேசாமல்

உண்மையை தைரியமாக பேசி

எதிர்கட்சி தலைவராக

அரியணை ஏறிய கள்ளழகர்

உங்களின் உடலுக்குத் தான்

மறைவு.. என்றும்

வாழ்வீர்கள் எங்களின் 

நெஞ்சங்களில் அன்பு கேப்டனாக..

ஆழ்ந்த இரங்கல்கள்

யார் முன்னிலை தந்தையா தனஐயனஆ..

அன்பு என்பது ஓர் ஆண் பெண்ணின் உடலில் மீது கொள்ளவதல்ல.

வாலிப்பருவத்தை அடையும் முன்னரே சில ஆபாச படங்களை பார்த்து விட்டு, உடன் பயிலும் மாணவியின் மனதில் ஆபாசத்தை காதல் என்ற போர்வையில் பேசுவதல்ல காதல்.

காதல் என்பதில் உடல் என்ற ஓர் விஷயமே இருப்பதில்லை. காதல் என்பது இரே ஆன்மாக்களின் இணைப்பு.

புரியும் படி சொல்லுவதாக இருந்தால் ஒருவருக்கு வலி ஏற்படும் என்பதை அறிந்து அவருக்கு எந்த விதமான கஷ்டமும் வந்துவிடக்கூடாது என உதவி செய்வது.

எப்படி தந்தை தன் கையில் காசு இல்லாவிட்டாலும் தனது அன்பான செல்ல மகள் ஆசைபட்ட மிட்டாய்க்கு கடன் சொல்லி வாங்கி, அவளின் முகத்தில் சந்தோஷத்தை காண நினைக்கிறாரோ அதைப் போல்.

தன் தந்தையிடம் காசு இல்லை என்பதை அறிந்து எனக்கு இதெல்லாம் வேண்டாம் அப்பா..வா நம்ம வீட்டுக்கு போகலாம் அம்மா காத்துகிட்டு இருப்பா என்பாளே அது போன்றதே காதல்.

ஆனால் இங்கே சிலர் காதல் என்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவே முயல்கின்றனர். சிலர் அதில் வென்றும் விடுகின்றனர்.

அப்படி ஏமாற்றி திருமணம் செய்தவர்கள்,ஊரை ஏமாற்றி விடலாம். தனக்கு பிறந்த குழந்தைகளிடம் அவரின் ஏமாற்று வேலை நடக்காது.

தென்னையின் குருத்தில் தென்னையே விளையும் என்று ஓர் இறைநூலில் சொன்னதை போல். நல்லவனின் குழந்தை நல்லவனாக பிறக்கிறது நல்லவனாக வளர்கிறது.

பொய் பித்தலாட்டம் செய்து உலகை ஏமாற்றி வாழ்பவனின் குழந்தையும் அவனை விட பல மடங்கு வளர்கிறது.


இதில் இறைவன் நடத்தும் வேடிக்கை என்னவென்றால் ஊரை ஏமாற்றி சம்பாதித்தவனின் குழந்தைகள். வெளியே சென்று திருடாமல் தன்னை பெற்றவரிடமே திருடுவது தான்.

ஏனெனில் இறைவன் மிகப் பெரியவன்.

கோபத்தில் பேசும் மனிதர்கள் உண்மையாக வாழ்கிறார்கள்.தந்தை மகனிடம் கோபம் கொள்வதே நீயாவது என்னை மாதிரி வந்திடாம நல்லபடியா பிழைக்க கத்துக்கோடா என்பதால் தான்

ஆனால் இதை புரிந்து கொள்ள இயலாமல் தான் பல வீடுகளில் கருத்து வேறுபாடு வருகிறது.

அவரும்  கூட இன்னொரு இடத்தில் இதே விஷயத்தை தான் சொல்கிறார் என் பையனுக்கு ஏமாத்தவே தெரியலை அவனும் என்னை மாதிரியே ரொம்ப நல்லவனா இருக்கானே.. ஆனாலும் பாழாய் போன ஈகோ, மகனை பலர் முன்னிலையில் திட்டி அவன் ஓண்ணும் என்னை விட பெரியவனில்லை என்பதாக முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.


இந்த இருவரின் இடையே கிடந்து தந்தை தனையன் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யவும் முடியாமல், தீர்வு சொல்லவும் தெரியாமல் தங்குகிறாள் தாய்.

இருவரின் மனதிலும் ஓரே சிந்தைனை தான் இருவரில் யார் முன்னிலை.

அனாதையின் மனநிலை

 அனாதை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தங்களின் சிறு வயதிலேயே ஓர் மாபெரும் மனமுதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.


எத்தனை ஊடகங்கள் அப்படியெல்லாம் இல்லை அவங்களை நாங்க நல்லா பார்த்துகிட்டு தான் இருக்கோம் என்று சொன்னாலும் யதார்த்தமான உண்மை கசகக்கவே செய்கிறது.


அந்த இல்லத்தில் வாழும் குழந்தைகளை தன் வயிற்றில் பிறக்கா விட்டாலும் தன்னுடைய குழந்தைக்கு எவ்வளவு செல்லம் கொடுப்பிர்களோ அப்படித்தான் அவர்களும் வளர்த்தார்கள் இன்றும் வளர்க்கிறார்கள்.


எனவே தான் அந்த இல்லத்திற்கு மென்மேலும் பெற்றோரை இழந்த சில குழந்தைகளை அவர்களின் உறவினர்கள் வந்து சேர்ந்து விட்டு போகின்றனர்.

ஆயினும் அந்த செல்லக் குழந்தைகள் அந்த ஆசிரமத்தில் மட்டும் வாழவில்லையே.வெளி உலகிற்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அப்படி பேருந்தில் செல்லும் போது, தாங்கள் ஆசிரமத்திற்கு வெளியே இருக்கிறோம் என்பதையும் மறந்து அந்த குழந்தைகள் சிரித்து சந்தோஷமாக பேசி சிரித்தனர் 


அப்போது அந்த பேருந்தில் சென்று கொண்டிருந்த இருவர், அந்த குழந்தைகளின் காது படவே பேசினர்.

டேய் இது அந்த ஆசிரமத்து குழந்தைகள், கண்டிச்சு வளர்த்தா தானே பெறுப்பு வரும்..அதை ஆமோதிப்பது போல் ஆமாம் மச்சான் எல்லோருக்கும் நம்மை மாதிரி பொறுப்பு இருக்குமா...என பேசினர் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்குமே அதை ஆமோதிப்பது போல் அந்த குழந்தைகளின் மீது தங்களின் பார்வையால் வெறுப்பை உழிந்தனர்.


தாங்கள் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல், குழந்தைகள் அமைதியாயினர். தங்களின் பள்ளிக்கூடம் வரும் வரை எந்த குழந்தைகளும் பேச முற்பட வில்லை.

ஆனால் இவர்களை விமர்சனம் செய்த இருவர் தங்களின் உற்றார் உறவினர் மற்றும் ஜாதி.. மத...அரசியல் வெறியில் பேசினர்.அவை பேருந்தில் இருந்த அனைழருமே உற்று கவனிதத்து.ச்சே என்ன ஓர் அறிவாளி வாழந்தா இவங்களை மாதிரி வாழணும்.எவ்வளவு சமூக பொறுப்பு என பெருமிதப்பட்டனர்.

பள்ளிக்கூட பேருந்து நிலையம் வந்தவுடன் எல்லா குழந்தைகளும் ஏனோ பாவத்தின் கூடத்திற்கு செல்வது போல் கண்ணில் வந்த கண்ணீரையும் மனதில் ஏற்பட்ட அபரிமிதமான உணர்ச்சி பெருக்கோடும் இறங்கி சென்றனர்.

தங்களின் மனதை இன்னொரு காயப்படுத்திவிட்டார் என்பதை கூட யாரிடமும் சொல்லாமல் சென்ற அப்பாவி குழந்தைகள்.


அதில் ஓர் ஓர் குழந்தை பஸ் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் இரு கரம் கூப்பி, தங்களை கேலி செய்த மனிதரை நோக்கி கைகூப்பி வணங்கியது.


தயவுசெய்து இனிமேலாவது எங்களை காயப்படுத்தாதீங்க. எங்களால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரமா பார்த்துக்கிறேன் என்பது போல் அந்த பார்வை இருந்தது.

அந்த மனிதனோ ஏளனமாக ஓர் புழுவை போல் அந்த குழந்தையை கேவலமாக பார்த்தான்.


மழை வெள்ளம்

 முந்தி எல்லாம் உங்க அக்கா அதான் என் அருமை பொண்டாட்டி  மீன் குழம்பு வைக்கணும்ன்னு சொல்லி என்னோட சம்பளத்தை பாதியா காலி பண்ணுவா..ஆனா இப்போ பிரச்சினையே இல்லை.


என்னாச்சு மச்சான் மீன் சாப்பிடுறதை நிறுத்திட்டீங்களா..


அட நீ வேற மச்சான்.இப்போ எல்லாம் அவளே  போயி இறா..சுறா நெத்திலி எல்லாம் பிடிச்சுட்டு வந்துடுவா..


ஏது மச்சான், நீ நினைச்ச மாதிரியே E.C.R-ல பங்களா வாங்கிட்டீங்களா.


என்ன..நீ வேற மச்சான்  இப்போ எங்க வீடு கடலுக்குள்ள இருக்கிற மாதிரி தான் இருக்கு 😭😭😭😭




நெல்லை மழை

 நேற்று நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து.

வழக்கத்திற்கு அதிகமான மழை பதிவு 62 செ.மீ என பதிவாகியுள்ளது 

தவளையும் கடவுளும்

 ஓர் காலத்தில் கடவுள் மட்டும் தான் இருந்த  உலகத்தில் இருந்தார் அப்போது எல்லாம் கரெண்ட் வசதி கிடையாது ஏன் செல்போன் வாட்ஸ்அப் இமெயில் இப்படி எதுவுமே இல்லாது இருந்துச்சு. இது காணாதுன்னு உலகமே இருட்டாக தான் இருந்துச்சு.


ரொம்ப நாளா தனிமையில் அமைதியா வாழ்ந்த கடவுள் மனசுல ஓர் எண்ணம் ஏற்பட்டது.நாம ஏன் இப்படி தனியாவே இருக்கோம் என்று யோசிச்ச கடவுளுக்கு ஓவ்வொரு நிமிஷமும் ஓவ்வொரு யோசனை தோணுச்சு


தனிமையிலேயே வாழ்ந்த கடவுளுக்கு வாழ்க்கை அலுப்பாக மாறியது..ஏன்னடா இது வாழ்க்கை நமக்கு என்று யாருமே இல்லையே என யோசித்த கடவுள் கடைசியில் ஏதாவது புதுசா பண்ண ஆசைபட்டு உலகத்தை படைக்க தொடங்கினாரூ.

தனிமையிலேயே பல யுகங்களாக கஷ்டபட்டவரு, பிரபஞ்சத்தை படைக்கும் போது ஓவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சாரூ.


எப்படின்னா பல ஆண்டுகள் சொந்த வீடே இல்லாமல் வாடகை வீட்டில் இருந்தவன் எப்படி சிரத்தையா வீடு கட்டுவானோ அப்படி. 


அட பிரபஞ்சத்தை படைக்கிறதுக்கு முன்னாடி அவர் எங்கே இருந்தாரூன்னு உங்களுக்கு வரும் அதே சந்தேகம் எனக்கும் வந்துசசு..ஆனா இந்த கேள்விக்கு இதுவரைக்கும் எந்த விடையும் தெரியவில்லை.. கோழி முட்டை இதில் எது முதலில் வந்ததது என்பது போலவே...நீங்க மேற்கொண்டு கதையை படிங்க


பிரபஞ்சத்தில் ஓவ்வொரு கோள்கள் நட்சத்திரம் சூரியன் இப்படி படைச்ச இறைவன் தான் வசிப்பதற்க்காக ஓர் உலகத்தை படைசசாரூ.


அட அந்த உலகம் தான் நாம இப்போ வாழுற பூமி. ஓர் நாள் மண்ணை படைச்ச கடவுள் அதில் கூட தன்னுடைய கலை நயத்தை காடடினாரூ. செம்மண், களிமண் ஆற்றுமணல் கற்கள் பாறை கற்கள் படிம கற்கள்.கடினமான பாறைகள் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

பிறகு மிருகங்கள் பறவை மனுஷன் என்று எல்லாத்தையும் ஜோடி ஜோடியா படைச்சாரூ.


இப்படி எல்லா உயிர்களையும் படைச்ச கடவுளுக்கு தன்னால் படைக்க பட்ட உயிர்கள் எல்லாம் ஜோடி ஜோடியா சந்தோஷமா இருப்பதை பார்த்து மனசு கஷ்டம் வந்துடுச்சு.. அந்த நேரத்தில் தன்னோட கையில் ஓர் உயிரை படைக்கிறோம் என்பதையும் மறந்து விரக்தியா மன கஷ்டத்தோட வேண்டா வெறுப்பா எரிச்சலா படைத்தார்.

திடீரென அவருக்கு மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுது.. அடக்கடவுளே என்ன காரியம் செஞ்சுட்டேன் என்று தன் கையில் இருந்த அந்த பொருளை அப்படியே தரையில் விட்டார். 


அது தவளையாக உருமாறி இருந்துச்சு. உலகத்துலேயே மிகவும் அவலட்சணமான ஓர் பொருளை தான் படைத்து விட்டோமே என்ற மனக்கவலை கடவுளுக்கு வந்துச்சு.



எல்லா உயிரை படைக்கும் போது தைரியமா இருந்த கடவுள் தவளையை படைக்கும் போது மனக்கஷ்டமும் பயத்துடனும் படைச்சதால் தவளையும் மிகவும் பயந்த சுபாவத்துடன்  இருந்தது.



புதிதாக படைக்க பட்ட தவளைக்கு தான் தான் அசிங்கமான உருவத்துடன் படைக்க பட்டு இருக்கிறோம் என்பது கூட தெரியாது.

 அது  கடவுள் நம்மை தன்னுடைய கரத்தால் அல்லவா நம்மை படைச்சு  இருக்கிறார்.


நீங்க படைச்ச இந்த அழகான திறமைகள் நிறைந்த இந்த உலகத்தில் என்னையும் படைச்சதுக்கு ரொம்ப நன்றி.. ரொம்ப நன்றி.. என்று ஓவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லி ரொம்பவே சந்தோஷமா வாழ்ந்துச்சு 


தான் எவ்வளவு பெரிய தவறு பண்ணிட்டோம் ஆனால் அது இந்த தவளைக்கு தெரியவும் இல்லை புரியவும் இல்லையே என்று யோசித்து பார்த்து பிறகு தான் அவருக்கு ஓர் விஷயம் புரிஞ்சுது. நாம படைச்ச உயிர்கள் எல்லாம் ஜோடி ஜோடியா மகிழ்ச்சியா வாழுதே என்று காமத்தின் வயப்பட்டதால் நமக்கு அறிவு மழுங்கிப் போனது. அதனால் தவளைக்கு புத்தி என்ற ஓன்றை வைக்க மறந்துட்டோம் என்பதை உணர்ந்தார்.



ஆனால் தவளையோ அந்த வித கவலையும் இல்லாமல் துள்ளி துள்ளி குதிச்சு விளையாடிக்கிட்டு இந்த உலகத்துலேயே தான் ஒருத்தர் தான் மிகவும் சிறந்த படைப்பு என்று குதூகலமாக சென்றது.


கடவுள் நினைச்சாரூ...சரி ஆனது ஆகிப்போச்சு.தவளைக்கு தான் புத்தியே இல்லையே அதுவோ சரியான தத்தி. நாம இதுக்கிட்ட எதுவுமே சொல்லாம போய்விடுவோம் என்று போயிட்டாரூ ( இதனால் தான் மரமண்டை என்பது போன்ற வார்த்தை தத்தி. விஷயமே தெரியாதவனை தவளையின் பட்ட பெயரான தத்தி என்று அழைப்பது மக்களின் வழக்கமாச்சு)


தவளையும் கடவுளை சில நிமிஷத்துலையே மறந்து போயி வாழந்து வந்துச்சு.


முதல் நாளில் தவளை கடவுளால் படைக்க பட்ட நாய் கிட்ட போய். என்னையும் உங்க கூட சேர்த்துக்கோங்க நானும் உங்க கூட சேர்ந்து மகிழ்ச்சியா வாழணும் என்றது.


ச் சனியனே நீ தூரப்போ. உன் உடம்பும் நீயும் உன் உடம்பும், உன்னை பார்த்தாலே கண்றாவியா இருக்கு. நாங்க உங்க கூட எல்லாம் விளையாட முடியாது. போ..போ.. என்று அடித்து விரட்டியது.


தினமும் நிலத்துல வாழும் ஓவ்வொரு உயிர்களிடமும் போய் கேட்டுச்சு. ஆனா எந்த உயிர்களும் அதை தன்னோட சேரூஅதுக்கவே இல்லை.


பாரு நாங்க எவ்வளவு அழகாக மினுக்கா இருக்கிறோம் நீயும் தான் இருக்கியே..

பானை வயிறு.மூஞ்சிய பாரு சப்பையா.கண் வேற கோழி முட்டை மாதிரி. 


முதல்ல உன் மூஞ்சி எப்படி இருக்குன்னு போய் பாரூ என கேலி செய்தது.


நிலத்துல தான் நம்மை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. நீரில் வாழும் உயிர்களிடம் சென்று கேட்டுப் பார்ப்போம்.


கடவுள் நம்மை ஏரிக்கரையில் இருக்கும் போது தானே படைச்சாரூ.ஓரு வேளை அந்த இடம் தான் நமக்கானது போல என்று நீர் நிலைக்கு சென்றது.


அங்கே இருந்த மீன் நண்டு பாம்பு முதலை இப்படி எல்லா உயிர்களிடமும் கேட்டுப் பார்த்துச்சு. ஆனா யாருமே அதை தன்னோட சேர்த்துக்காம ஒதுங்கியே வைச்சாங்க.


என்னடா இது நம்மை யாருமே சேர்த்துக் மாட்டேன் என்று சொல்லுறாங்களே என நினைச்சு வருத்தப்பட்டுச்ச..

கடவுளால் படைக்கப்பட்ட ஓவ்வொரு மிருகமும் எப்படியெல்லாம் வாழுறாங்க.ஏன் எதற்காக தன்னை யாரும் அவங்க கூட சேர்த்துக்கொள்ள வில்லை என்று இப்படி எல்லோரும் வெறுத்து ஓதுக்குறாங்க என யோசிக்க ஆரம்பிச்சுது.


தவளை தனக்கு அறிவு இல்லை என்பதை கூட சிந்திக்க தெரியாம யோசிக்க ஆரம்பிச்சுது. 



காட்டிற்கு ராஜாவாக வாழும் சிங்கம் மாசத்துல ஓர் நாள் தான் வேட்டையாடி சாப்பிடுது. மத்த நாள் எல்லாம் உயரமான இடத்துல ஏறி உட்கார்ந்து தான் நான் காட்டுக்கு ராஜா என்று கர்ஜனை பண்ணுது.


 ஆனால் பத்து நாட்கள் பசி தாங்குற மாதிரி ஓரே நாளில் சாப்பிடுது புலி, சிறுத்தை கரடி கூட இப்படித்தான்.



நரி ஓநாய் மாதிரி விலங்குகளுக்கு வேட்டையாட தெரியாத காரணமா..புலி சிங்கம் சிறுத்தை போன்ற மிருகம் வேட்டையாடிய உணவை கூட்டமா போய் பிடுங்கி தின்று விட்டு ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் இருந்தன.


பசு ஆடு மாடு போன்ற விலங்குகளோ தினமும் இரை தேடி தின்றது. பல நாட்கள் பட்டினி கிடந்து ஓரே ஓர் நாள் சாப்பிடும் விலங்குகள் சாப்பிட்டு முடிக்கும் வரையாவது ஓற்றுமையா இருந்துச்சு.ஆனா இவர்களுக்கோ நிறைய புல் இருந்தாலும் தன் பக்கத்தில் வந்து தன் இனத்தை சார்ந்த இன்னொரு விலங்கு வந்தவுடன் முட்டி தள்ளி நீ தூரப்போ என சண்டையிட்டது.

  

தவளையோ எந்த முடிவும் எடுக்க இயலாமல் தவிச்சது


இப்படி யோசித்து கொண்டே இருந்தாலும்.கடவுள் தனக்கு ஓரவஞ்சனை செய்து விட்டார் என்பது கூட புரியவில்லை.



ஓர் நாள் தவளையின் இடைஞ்சல் பிடிக்காத ஓர் உயிர் கோபத்தில் கத்தியது ச்சீ தூரப்போ.போயி ஆறு குளத்துல விழுந்து சாவு அப்போது தான் உனக்கு நல்ல புத்தி வரும் என்று நல்லா திட்டி விட்டது.


யார் எது சொன்னாலும் கேட்டு அது படியே செய்யுற தவளை.

நம்ம தவளைக்கு தான் அறிவே கிடையாதே அதுவும் அதே போல் போய் குளத்துல விழுந்துச்சு.. ஆனால் அதனால் தண்ணீரில் முழ்க முடியலை பல நாட்களாக அது தண்ணீரில் கிடந்தாலும் பசி தாகம் இல்லாம உயிரோட இருந்துச்சு.


குளத்துல தண்ணீர் குடிக்க வந்த பசு தண்ணீரில் விழந்து உயிருக்கு போராடுச்சு. உடனே தவளை கடவுளுக்கு நன்றி சொல்லிய படி அது பக்கமா போனவுடனே பசுமாடு ச்சே இந்த அருவருப்பு பிடிச்ச தவளை நம்ம பக்கம் வருது என்று விலகி போக முயற்சி செய்தது. இப்படி செய்த முயற்சி அதை பிழைக்க வைத்து கரையேறியது 


அட கடவுளே, நிறைய உயிர்கள் நீச்சல் தெரியாம தண்ணீரில் முழ்குது.நமக்கு நீச்சல் தெரியாம தண்ணீரில் விழுந்தாலும் சாக விடாம காப்பாதுற அளவுக்கு இறைவன் நம்மை படைச்சு இருக்காரே என்று மீண்டும் அதற்கு சந்தோஷம் வந்துடுச்சு.



மீண்டும் தன்னை யாரும் அவங்க கூட சேர்த்து கொள்ளவில்லை என்றாலும் தவளை சந்தோஷமா குதிச்சு குதிச்சு விளையாடிக் கொண்டு தான் இருந்துச்சு.


இதை கண்ட எல்லா மிருகமும் தங்களுக்குள் பேசிக்கொண்டன. ச்சே இருந்தாலும் கடவுள் ரொம்ப மோசமான ஆளு தான்.  இவ்வளவு அழகா அறிவா படைச்ச கடவுள் நம்மை படைச்ச கடவுள் நம்மை என்றைக்காவது ஓரு நாளாவது நிம்மதியா வாழ விட்டானா சொல்லு ஓவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழுறோம்.

ஆனா அந்த தத்திக்கு எதுவுமே தெரியாத கூமுட்டை எவ்வளவு சந்தோஷமா வாழுது..என்றாவது ஓர் நாள் கடவுள் நம்ம கண்முன்னாடி வராமலா போயிடுவாரூ. அப்போ மனுஷனை நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும் என்று முடி செய்து கொண்டன. மனிதர்கள் கூட கடவுளை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க. கடவுள் என்பவர் கொசு மாதிரி அவரை ஓழிக்கணும் என்று பேச ஆரம்பிச்சாங்க.


இப்படி தன்னால் ஆசையாகவும் அன்பாகவும் பார்த்து பார்த்து உருவாக்கிய உயிர்கள் தனக்கு நன்றி சொல்லா விட்டாலும் பரவாயில்லை இப்படி எல்லோரும் நம்மை குறை சொல்லுறாங்களே என வருத்தப்படார்.

அப்படி வருத்தப்பட்டு சிந்திய கண்ணீர் மழையா வெள்ளமா பெருக்கெடுத்து ஓடி ஊரே வெளத்துல முழ்கியது. 


ஊரெல்லாம் தண்ணீரில் முழ்கியதால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டது. ஆனால் தவளையாலீ தண்ணீரில் முழுவதும் முழ்க முடியாத காரணமாக தண்ணீரில் மிதந்தது.


அப்போது கூட தவளை சந்தோஷமாக கடவுளை நன்றி சொல்லி இரவெல்லாம் கததியது. எல்லா உயிர்களும் தவளைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.. இந்த மழை வெள்ளத்துலேயும் எப்படியெல்லாம் கத்துது பாரூ.. இவையெல்லாம் நாம இனி பக்கத்துல சேர்த்துக்கவே கூடாது என முடிவெடுத்தது.


ச்சே நாம அவலட்சணமான படைச்ச உயிர் நம்மை நினைச்சு இவ்வளவு நன்றியா இருக்கே என்று கடவுள்.   அதன் முன்னால் தோன்றி ஏய் தவளையே நான் ஏதோ ஓர் தவறான சிந்தையில் உன்னை படைச்சுட்டேன். 



அதான்  கடவுள் தவளைக்கு அறிவை வைக்க மறந்துட்டாரே.

விஷ்ணு துர்க்கையே

எல்லாவற்றையும்

உதறி விட்டு

உண்மை பாசம் தேடி

உன்மத்தனாய்

ஊமையாய் ஊர் 

சுற்றிய அனைவருக்கும் 

சுதந்திர காற்றை

சுவாசிக்க வைத்து

தலைநிமிர்ந்து

நிற்கும் திராணியை

தேவைக்கு மீறி

வாரி வழங்கிட்டு

கற்சிலையென்றே

காட்சி கொடுக்கும்

வீரத்தின் விளைநிலமான

விஷ்ணு துர்க்கையே

தூரத்தில் நானிருந்தாலும்

துளி தண்ணீர் கண்ணில்

துளிர்க்கும் முன்னே

துடியாய் வந்தென்னை

காக்கும் தேவதையே.

வீழாமல் வாழும் வசதிதந்தவளே

பொருளை வெறுத்தவனின்

கைகளில் பொருளாளூம்

சக்தியை தந்தவளே

உன்னை தொழுகின்ற

தொழுகின்றேன் தாயே.

கண்ணிமை போல்

காத்திடும் பாளைநகரத்தில்

பாங்குடனே வீற்றிருக்கும்

விஷ்ணு துர்க்கையே

நீ தந்த இன்பத்திற்கு

ஈடு இணை ஏதுமுண்டோ.



Financial relief # Save chennai financially soon

Financial Awarness Article

Hi to all,


We are all speaking about 4,000 crore. There is also one more very critical situation, which most of the chennai peoples are going to face in future.

Due to rain Chennai was flooded and rain level was increased upto 1st floor in some areas.

In so many places rain has shown its bad face to town, still process are going on to get normal life. Each and everyone are facing same level of emotional turmoil and health issues.

Peoples who were affected in rain are not millionaires. They belongs to normal financial background.

Everyone in chennai has purchased household things. Everymonth loan has to be paid in proper time otherwise penal charges will be deducted from their respective accounts.


 All house hold products lost are valuale to min 2 lakhs and above. How Rs6,000 will be sufficient as relif. Products are bought in credit, eventhough they are lost. Financial instituations will be consider this natural calamaties. All financial MNC are using system generated report only. Once loan date occures, system will automatically levy penal charges, for nonpayment of loans.

All Chennai people are not govt employees, they are paid only for working days.

Most of the peoples are going to get their upcoming months salary less than previous month.

But their living cost for this month has shoot up more than 2 months of expenses. 

Central Govt, State Govt & RBI has to take proper actions for recovery of financial burden. 

Yes once again all credit bill dues has to be postponed for atlest 6 months. We are not asking any financial instituations to forgo their loans. Just asking them to consider and provide financial relief for a time being.

We humbly request all financial instituations to consider their customers personal and financial issues.

This has to be takes as very serious issues and policy has to be ruled out. Because overall Chennai has to recovery to normal as soon as possible.  

Their personal emotions, health 7 financial needs has to be taken care very carefully. 

If govt has not taken this issue very serious them, these emotions will be reflected in upcoming elections as vote.



சாமி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா குழந்தைகள் எத்தனை

இந்த உலகத்துல நீங்க ஆண் /பெண் எவ்வளவு தான் பெரிய புத்திசாலியா இருந்தாலும் மத்தவங்க கவலை.. ஏன் அந்த பையனுக்கு பெண்ணுக்கு கல்யாணம் ஆகலை.

வேற ஏதாவது ஓர் சங்கதியா இருக்குமோ.. இருக்கும் இருக்கு, இந்த உலகத்துல நல்லவனா நடிக்கிற முக்கால்வாசி பேர் அயோக்கிய பயலுக தான் என்று சால்ஜாப்பு வேறு.

உலகம் நீங்க நல்லவராக வாழும் ஓவ்வொரு நாளும் உங்களை உரசிப் பார்க்கும்.

ஆனால் எல்லா அயோக்கியதனமும் செய்தவனை..அட அவரை மாதிரி ஆளு உண்டா என்று வானளாவ புகழும்.

உலகம் இப்படித்தான்.


ஓர் வேளை கல்யாணம் செய்யாமல் உலக நன்மைக்காக பிறவியெடுத்த மக்களுடன் மக்களாக வாழ்ந்த அந்த அந்த கடவுளே இன்றைய தினம்.உயிர்பெற்று வந்தால் கூட.

கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்‌ அவருக்கு உலகம் கேட்கும் முதல் கேள்வி.

சாமி உங்க காலத்துல தான் ஓருத்தன் பத்து பொண்டாட்டி கட்டினாலும் தவறு இல்லையே.பிறகு ஏன் நீங்க கல்யாணமே பண்ணாம இருந்துட்டீங்க. அதுசரி இனியாவது காலாகாலத்துல கல்யாணம் பண்ணுங்க. எங்க சொந்தகார பொண்ணு ஓண்ணு இருக்கு . அவங்க அப்பன் பெரிய குடிகாரன் காசு எதுவும் பெருசா சேர்த்து வைக்கலை.. நீங்க சம்மதம் சொன்னா நான் வேணா போய் உங்களுக்காக பேசட்டுமா என்று கூட கேட்கும்.

ஏதோ கல்யாணம் ஆனவர்கள் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருப்பது போலவும். கல்யாணம் ஆகாதவன் கஷ்டப்படுவது போலவும் உலகம் பூச்சாண்டி வேலை காட்டுகிறது.

இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் கோவிலுக்கு போனால் படிப்பு வந்துடும் வேலை கிடைச்சுடும் கல்யாணம் ஆகிவிடும் என்று தான் சொல்லி கேட்டு இருப்போம்.


சென்ற வாரம் ஓர் கோவிலுக்கு போன இடத்தில் அந்த மனிதர் சொன்னார்.உங்க வீட்டில் வயதானவங்க படுத்த படுக்கையில் இல்லாம நிம்மதியா போய் சேர இங்கே பரிகாரம் பண்ணுறோம்  என்று.

இதை கேட்ட பிறகு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் இது கிராமத்து கோவில் உங்களைப் வருபவர்கள் எதாவது செய்தால் தான் உண்டு என உண்மையை சொல்லுங்கள்.

அதை விடுத்து, கடவுளை ஏதோ கமிஷன் வாங்கி விட்டு வேலையை முடித்து கொடுக்கும் வியாபாரி போல் சித்தரிக்க வேண்டாம்.

இந்த நடைமுறை எல்லா மதங்களிலும் இருக்கிறது என்பது பிற மதத்தை தழுவ நினைத்து அங்கே சென்று அங்கேயும் இதே கூத்து நடப்பதை பார்த்தால் புரிகிறது.

கடவுளின் அருகில் இருந்தும் அவருக்கு காசு ஆசை விடவில்லை என்பது 




கடவுள் என்பவர் என்ன  கமிஷன் கடை ஏஜெண்ட் போல் பேசிய அந்த மனிதர்.



உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா குழந்தைகள் எத்தனை என்பதை பற்றி தான் 

கத்தி என்னும் ஆயுதம்

 கசாப்பு கடைக்காரர்.. மருத்துவர். கோபக்காரன்.சிறு குழந்தை.விளையாட்டு வீரன்.. இவர் எல்லோரின் கையிலும் சில நேரங்களில் கத்தி என்ற ஆயுதம் இருக்கும். ஆனால் அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது.

இதைப் போலவே தான் சில இடங்களில் சில நேரங்களில் திறமையான மனிதர்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே மதிப்பு மரியாதை கிடைக்கும்.

உன் மண்டையில் களிமண் தான் இருக்கு எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு மண்டையில் எதுவுமே ஏறாது என கேலி செய்து பிறரை மட்டம் தட்டுவது எல்லா இடத்திலும் நடக்கும் ஓர் சாதாரண நிகழ்வு தான்.

ஆனால் ஓர் செயலை தன்னால் இயன்றவரை முயற்சி செய்து சிறப்பாக செய்து முடித்த பிறகும் திட்டுவதும் ஏளனம் பேசுவதும் இங்கே பலரின் இயல்பு.


திறமையான மனிதர்களே சக மனிதரை திறமையானவராக மதிப்பார்கள்.

ஏன்னெனில் அவர்களுக்கு தெரியும் நம்மை போலவே தான் இவரும் ஓர் திறமைசாலி.ஏனோ என் நண்பராக இருப்பதால் காலம் அவரையும் சோதித்து பார்க்கிறது. அவனும் கூட என்னை போல் வெற்றி பெறவே முயல்கிறான் என்பதை உணர்ந்த மனிதர்கள் அவர்கள் 

வாழ்க்கை

 


இந்த உலகில் பிறந்த ஓவ்வொரு மனிதனும் ஏதோ ஓர் நாளில் அமைதியை தேடுகிறான்.

கஷ்டமே இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை.அந்த கஷ்டத்தை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதை ஆராய்ச்சி செய்து , அந்த மனிதனின் முகத்திற்கு பின்னால் கேலி பேசி சிரிக்கும் உலகமிது..

என் மீது அன்பு செலுத்தியவர் களையும் ஆபத்தான காலத்தில் உதவி செய்தவர்களையும். எந்தவித அடையாளமும் இன்றி, நான் வாழ்ந்த போது என்னையும் சக மனிதராக மதித்து நடத்தியவரின் கண்கள் கலங்கும் முன்னே அவர்களுக்கு உதவ முயல்கிறேன்.

நிலையற்ற உலகில் என்னால் முடிந்த உதவியை செய்யும் சிறு துரும்பு நான் 

உலகத்தின் சுபாவத்தை நம்மால் மாற்ற இயலாது.ஆனால் என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியும்.

அதனால் சுற்றி இருப்பவருக்கு ஏதாவது ஓர் நல்லது நடக்கட்டுமே 

மனிதன் தான் வாழும் நாளில் எப்படி தனது கஷ்டங்களையும் தாண்டி பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து விட்டு தனது கவலைகளை பிறருக்கு சொல்லாமல் தைரியமாக வாழ்கிறான் என்பதே வாழ்க்கை 

சஞ்சனாவும் சாமியாரும்

 வணக்கம் நண்பர்களே.

இந்த சஞ்சனாவும் சாமியாரும் என்ற கதை கரு என்னை மிகவும் பாதித்த ஓர் விஷயமே

இதையெல்லாம் ஓர் கதையா எழுதினா மக்கள் எற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன் 

கதை தலைப்பை பார்த்தவுடன் மனிதர்கள் எப்போதுமே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் கற்பனை செய்து பார்ப்பது தவறாக நினைப்பது இயல்பே.

ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறானது.

தன்னம்பிக்கையாக வாழந்த ஓர் பெண் தன் படித்த படிப்பு ஏற்ற வேலை கிடைகாத ஓருத்தி.

தனது சுயசம்பாத்தியத்தில் வியாபார தொடங்குகிறாள் . அதில் ஏற்படும் நஷ்டம், உடல் உபாதைகள், குடும்ப பிரச்சினை இவற்றின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதத்தில் ஓர் கோவிலுக்கு செல்கிறாள்..அங்கே என்ன நடந்தது 

கதையின் களம்.. காத்திருங்கள் விரைவில் முழு கதையும் பதிவேற்றம் செய்யப்படும் 

அதிர்ஷடசாலியா...கோடீஸ்வரீயா...

 

பொண்டாட்டிக்கு 

தலை வலிக்குதுன்னா.. 

தைலம் போட்டு ஆறுதல் 

சொல்லும் கணவனும்

அம்மா நான் வேணா 

உனக்கு சமையல் பண்ண 

உதவி செய்யவா 

என்று மழலை மாறாமல் 

கேட்கும் குழந்தையும் 

கிடைத்த பெண் 

அதிர்ஷ்டசாலியா...

கோடீஸ்வரீயா...

அல்சேஷனா பொமரேனியனா

என்னால அது பண்ணவே முடியாது டீ நாயே..


கல்யாணம் ஆகி சில வாரங்களுக்கே ஆன மனைவியை ஏசிக்கொண்டே கையில் இருந்த நாளேட்டை தூக்கி அவளின் முகத்தில் வீசி எறிந்தான் 

என்னால முடியாது

அதையெல்லாம் இதுவரையில் நான் செஞ்சே கிடையாது

இனியும் நான் வாழ்நாளில் பண்ணாத ஓர் விஷயத்தை நீ என் பொண்டாட்டியா வந்த ஓரே காரணத்தால் பண்ணவே முடியாதுடீ நாயே..

என்ன வாய் ரொம்ப நீளுது.....தேவைன்னா கொஞ்சுறது இல்லாட்டி கெட்ட கெட்ட வார்த்தையில பேசுறது..

ஏன்டீ நாயீ கூப்பிடுறது ஓர் குத்தமா...உங்க அப்பாவே உன்னை என் செல்ல நாய்க்குட்டின்னு தான் கூப்பிடுறாரூன்னு நீ தானே சொல்லுவே.


இப்போ எதுக்கு எங்க அப்பா பேச்சை பத்தி பேசுறீங்க..உடனே நான் அமைதியா ஆகும்ன்னு தானே 

அம்மா தாயே..நீ வேணா கோபிச்சுக்கிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போகணும்ன்னா போ...சட்டை பையில் ஐந்நூறு ருபாய் இருக்கு எடுத்துட்டு போ..


போகும் போது அந்த பஸ்ஸாப்பு கடையில் உங்க அப்பாவுக்கு பிடிச்ச ரவா லட்டு ஓர் பாக்கெட் வாங்கிட்டு போய்.. என் மாமனார்கிட்ட குடு. போன வாரம் வந்தவரு அதை ரொம்ப விரும்பி சாப்பிட்டாரூ 

அப்பாவுக்கு பிடித்ததை வாங்கி போக சொன்னது.அவளுக்கு கோபம் மிகவும் வெகுவாக குறைந்தது.

என்னங்க ஓரு வாரத்துலையே, எங்க வீட்டுல யார் யாருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று தெளிவா தெரிச்சு வைச்சிருக்கிற உங்களுக்கு ஏன் நான் சொல்லுற விஷயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது

ஏன்னா நீ சொல்லுற விஷயம் ரொம்ப ஆபத்தானது மேலும் அது ரொம்ப பெரிய பாவ காரியம்.


ஆமா உலகத்துல எல்லாரும் பாவபுண்ணியம் பார்த்துட்டா வாழுறாங்க 

உங்க அப்பன் ஆத்தா யார் வந்து பேசினாலும் இது தான் என்னோட முடிவு.

நான் அதை பண்ணவே மாட்டேன் 

ஏன் எல்லாமே  பழகினா தான் பண்ணீவீங்களா.

எனக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி, வேற ஓருத்தி கழுத்துல தாலி கட்டி பழகிய பிறகா தான் கட்டுனீங்களா.

அதை மாதிரியே தான் இதுவும். பொண்டாட்டி சொன்னா கேட்டு தொலைய வேண்டியது தானே.

அவன் அவன் பொண்டாட்டிக்காக கடன் வாங்கி செலவு செய்யுறான்.

நான் அப்படி என்னத்தை புதுசா சொல்லிட்டேன். ஊர் உலகத்தில் எல்லோரும் பண்ணுற விஷயம் தானே.

என்ன யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக பண்ணி நாம எதுக்கு மாட்டீகிக்க போறோம்.

ஏன்டீ காலையிலேயே சண்டையிழுக்கிறே. 


நமக்கு கல்யாணம் ஆகி ஓரு வாரம் கூட ஆகலை அதுக்குள் நான் சொல்லுறது எதுவுமே கேட்க மாட்டேன்னா என்ன அர்த்தம்.

சரியான களிமண். உங்க அப்பன் உன்னை என் தலையில் கட்டி வைச்சுட்டான்னு அர்த்தம் 

நான் சொல்லுறதை மட்டும் ஓழுங்கு மரியாதையா பண்ணுங்க

இல்லாட்டி என்னடீ பண்ணுவ

நான் எங்க அம்மா வீட்டுக்கே போறேன் 

பிறகு என்ன மயிதுக்கு டீ என்னை கட்டிகிட்டே.

அதான் நான் எது சொன்னாலும் கேட்க மாட்டேன்னே. இப்படி அடம் பிடிச்சா வேற என்ன பண்ணுறதாம்

அப்போ சரி..இதனால் நீ என்னை விட்டு ஓரேடியா போனாலும் பரவாயில்லை.

என்னால இதை செய்யவே முடியாது.


விவாதமே சண்டை போல் நடப்பதை பார்த்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் சுவற்றில் காது வைத்து கேட்காத குறையாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.


ஓர் சிலர் மனதில் ஆனந்தம்.சிலர் மனதில் கஷ்டம்.


ஏன்னா இந்த உலகத்துல சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருந்தா பிடிக்கும். சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரன் நம்மை விட இப்படி இருக்கிறானே என்று நினைக்க பிடிக்கும் 

அதுக்காக நீ நீட்டுற பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போட முடியாது

அரசு வேலைக்கு லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தப்பு. நீ இதை நல்லா புரிச்சுக்கோ

அப்போது தொலைபேசி அழைத்தது 

எதிர்முனையில் குலசாமி கோவில் பூசாரி.. தம்பி நான் பூசாரி அரவிந்த் சர்மா பேசுறேன்


எரிச்சலாக இருந்தாலும் போலியான புன்னகையில் கேட்டான் சொல்லுங்க சாமி என்ன விஷயம்.

அது வந்து தம்பி.நேத்து எனக்கு ஓர் கனவு அதுல ஓருத்தர் உன்னை கிணத்துல பிடிச்சு தள்ளுற மாதிரியும்.. மஞ்சள் பாவாடை சட்டை போட்ட ஓர் சின்ன குழந்தை பிடிச்சு காப்பாத்துற மாதிரியும் இருந்துச்சு.

சீக்கிரமா உனக்கு ஓர் நல்லது நடக்க போகுதுன்னு மட்டும் தெளிவா தெரியுது 

சூழ்நிலையை அறிந்து சொல்கிறாரா.. அல்லது புரியாம பேசுறாரா குழப்பமா இருந்தாலும்..

சரி சாமி எப்படியோ நல்லது நடந்தா சரிதானே 

அடுத்த வாரம் நவராத்திரி மறக்காம தம்பதி சமேதரா வந்திடுங்க.. அம்பாள் விஷ்ணு துர்க்கை நிச்சயமாக காப்பாத்துவா கவலை படாதே. போனை வைத்தான்..

அவர் சொல்லுவது எதுவுமே புரியாத புதிராக இருந்தாலும். மனம் ஏதோ தெளிவானது போல் இருந்தது.

அதுவரையில் அவளுடன் பேசியது எல்லாம் வீண் என்ற முடிவுக்கு வந்தவனாக அவளை கூப்பிட்டான்..

ஏன்டீ நீ சொல்லுற மாதிரியே செய்யுறேன்.. ஆனா இப்பவும் சொல்லுறேன் எனக்கு இதுல இஷ்டமே இல்லை.ஆனாலும் உன் மனசு சந்தோஷத்துக்காக மட்டும் தான்.

என் செல்லம் நீங்க இது சொன்னதே போதும். இப்பவே என்னோட சித்திக்கு இந்த விஷயத்தை சொல்லிடுறேன்.

இருங்க சூடா ஓர் கப் காபி எடுத்துட்டு வர்றேன்.. ஏன்னா நான் இவ்வளவு நேரம் பேசியது உங்களுக்கு தலை வலி வந்திருக்கும் ரொம்பவே பாசமாக பேசுவது போல் சொன்னாள்.

அது சரி இவ்வளவு நேரம் கழிச்சாவது உன் பேச்சால எனக்கு தலை வலின்னு சொன்னீயே

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு என்று தன் சேலை முந்தானையை அவனின் முகத்தில் செல்லமாக தட்டி விட்டு சிரித்தாள்..

கனவுலகில் மிதந்தாள்.. இரண்டு நாளைக்கு முன்னர் வீட்டுக்கு வந்த சித்தி சொன்ன வார்த்தைகள் காதுகளில் ரீங்காரமிட்டது.


இந்த விஷயத்தை மட்டும் நீ பக்குவமா பேசி மாப்பிள்ளையை சம்மதிக்க வைச்சுட்டா... உங்க சித்தப்பாவுக்கு இந்த பிராஜெக்ட் லாபம் மட்டும் 10 கோடி.அவர் கூட அடிக்கடி சொல்கிட்டே இருப்பாரூ.

நீ பிறந்ததுல இருந்து உனக்கு எதுவுமே செய்யலை.. இந்த வேலை முடிச்சா செல்லநாயீக்கு..

நம்மளோட அந்த தென்னந்தோப்பு மாப்பிள்ளை பேரில் எழுதி வைக்கணும் . அப்படின்னு உங்க அண்ணன் கூட சரின்னு சொல்லிட்டான்.

நாங்க அமெரிக்காவில் செட்டில் ஆயிட்டோம்..அதை விட முப்பது மடங்கு பெரிசா இங்கே தோட்டமும் வாங்கியாச்சு..

என்ன நம்ம ஊர் மாதிரி வேலைக்கு ஆள் கிடைச்சா கூலி அதிகமா கொடுக்கணும் அதனால் ஏதோ விமானத்துலையே எல்லாம் விவசாய வேலையும் செய்யுறானாம்...

நம்ம தாத்தா வாரிசுல நமக்கும் அவ தானே ஓர் பெண் வாரிசு அதனால் அவளுக்கே கொடுத்து என்று வேற சொன்னதாக சொன்ன சித்தி.

சித்தப்பாவோ திருதிருவென்று விழித்தார். இவளால் எப்படி ஓர் இடத்திற்கு தகுந்தவாறு பேச முடிகிறது.

நேத்து மகனிடம் பேசும் போது நமக்கு இங்கே இருக்கிற சொத்து பத்தாது. இன்னும் இரண்டு தோப்பு பக்கத்துலையே வருது.

வாங்கி போட்டால் தான் அடுத்த வருஷம் நீங்க அந்த வேலை முடிஞ்சு வந்தால் நாம் அந்த தோப்புல பங்களா கட்டி இருக்கலாம் என்றாளே


ஏன் சித்தி சித்தப்பா இப்படி முழிக்கிறார் என்றவளிடம், அது வேற ஓண்ணும் இல்லை.இந்த விஷயத்தை ஓர் ரகசிய பரிசா கொடுக்க நினைச்சதை நான் இப்படி சொல்லுறதை என்று மழுப்பினாள்

அவரும் ஆமாம் என்பது போல் மண்டையை ஆட்டினார்

தொலைபேசியை எடுத்து. சித்தி அந்த இடத்தை நீங்க சொன்ன மாதிரி பண்ண மனுஷன் சம்மதிச்சுட்டாரூ..அரசு புறம்போக்கு தானே அதை அப்படியே குத்தகைக்கு விடுவது போல் உங்க கம்பெனி பெயருக்கு எழுதி தருவது போல் பண்ணுவாராம்..

மத்த விஷயத்தை சித்தப்பாவிடம் சொல்லுவதா சொன்னாரூ சந்தோஷ பெருமூச்சுடன் பேசி முடித்தாள்..

அந்த இடத்தை பத்தி எல்லாம் இப்போ பேசவே பேசாதே.. நாங்க அப்படி கேட்டோம் என்பதை கூட யாரிடம் ஊறி வைக்காதே.இங்கே பெரிய பிரச்சினை போய்கிட்டு இருக்கு. நான் அப்புறமா பேசுறேன். வேகமாக ரிசீவர் வைக்கபட்டது.

எதுவுமே புரியாமல் சமையலறை சென்று காபி கலந்து வந்த அவனுக்கு தந்த படி சோஃபாவில் அமர்ந்தாள்.

உனக்கு என்னடீ ஆச்சு திரும்பவும் டல்லா இருக்கே..


அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து கொட்டியது.

அவனோ ஓர் தகப்பனைப் போல் அருகில் வந்து தான் கட்டியிருந்த வேட்டியில் அவளின் முக வியர்வை துடைத்து விட்டான்.

அது வந்து காலையில் சாப்பிடாமல் இருக்கேனா அதான் சமாளித்தாள்

அப்போது பரதநாட்டிய வகுப்பு போயிட்டு வேகமாக வேகமாக வீட்டுக்கு வந்த அவனின் தங்கை 

டேய் கேசவா நீ முதல்ல டி.விய போடு.எவ்வளவு பெரிய பிரச்சினை நடந்துட்டு இருக்கு நீங்க இரண்டு பேரும் விஷயமே தெரியாத மாதிரி அமைதியா இருக்கீங்க


நான் தான் அப்பவே சொன்னேனே மதினி உங்க சித்தப்பாவ நம்பாதீங்க.அவரை நம்பினா நம்ம எல்லாரையும் கைலாசத்துக்கே கூட்டிட்டு போயிடுவாரூ பெரிய அயோக்கியன்னு..

இருவருமே குழம்பி போயினர்.


அவளோ சமாளித்து கொண்டு பேசினாள் இங்க மாதிரி கலா எங்க வீட்டுக்கு சொந்தகாரங்களை பத்தி மரியாதை குறைவா பேசாதே அது உனக்கு நல்லதில்லை.

நான் எது சொன்னாலும் உங்க களிமண் மண்டையில் ஏறாது.நான் டிவிய போடுறேன்.

அவளோ வெறுப்பாக தன் கணவனை பார்த்தாள்.அந்த பார்வையில் உங்க கண்ணு முன்னாடி என்னை அசிங்கபடுத்துறா. நீங்க பேசாம இருக்கீங்களே என்ற கோபம் தெரிந்தது 

திரையில் மிகவும் சத்தமாகவே ஓலித்தது.காண்டிடாக்டர் சிவஞானம் வீட்டில் அதிகாரிகள் சோதனை.

அரசு நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக சில அதிகாரங்களை போலீஸ் பிடித்து விசாரிப்பதாகவும் செய்தி.


அவளோ பிரமை பிடித்தது போல் இருந்தாள்.

இப்போ புரியுதாடீ நான் ஏன் மாட்டேன் சொன்னேன் என்பது

அண்ணே நீ என்ன சொல்லுற எனக்கு எதுவுமே புரியலை என்றாள் கலா..

அது நீ வேற, இன்னிக்கு அவங்க சித்தப்பா வீட்டுக்கு கூப்பிட்டா.

நானும் நீ சொன்ன மாதிரியே அவர் நல்லவரா தெரியலை அதனால் நான் அவர் வீட்டுக்கு வர மாட்டேன்.நீ வேணா போயிட்டு வான்னு சொன்னே அதானடீ.

மனைவியை சாட்சி சொல்ல சொன்னான்

அவளும் அசடு வழிந்தாள்.


மாறாக கலாவோ அண்ணி எங்க அண்ணன் சின்ன தப்பு பண்ணிணா கூட காட்டு கத்து கத்துவான்...இப்போ நீங்க வந்த பிறகு நிறைய விஷயத்தை சமாளிச்சு பேச கத்துகிட்டான்.

ஆனாலும் உனக்கு பொண்டாட்டி மேல இவ்வளவு கரிசனம் கூடாது கேலியாக சிரித்த படி சொல்லி விட்டு போனாள்

அவனோ அவளை திட்டாமல் அமைதியாக இருந்தான்.

என்னங்க, காலைக்கு என்ன டிபன் பண்ணட்டும்ன்னு.. ஆர்டர் கொடுங்க.

நீ தானே இந்த வீட்டுக்கு எஜமானி, திருப்பதி எங்க அம்மா அப்பா ஊரில் இருந்து வருகிறது வரை உன் ஆட்சி தான் உன் இஷ்டப்படியே பண்ணு பிறகு அதுக்கும் எதாவது குறை சொல்லுவே 

அப்படியெல்லாம் இல்லை..  எப்பவுமே நான் உங்க செல்ல நாயீ தான்.

மாடியில் இருந்து கலா சத்தமாகவே கேட்டாள் அண்ணி.. நீங்க அல்சேஷனா பொமரேனியனா...

உனக்கு என்னை கேலி பேசாம தூக்கமே வராதா...

அப்போது அவன் சொன்னான்..இது சில நேரம் அல்சேஷன் பல நேரத்தில் பொமரேனியன்..

அனைவருமே ஓரு சேர சிரித்தனர்...


வேலைக்கு போறா உங்க தங்கச்சி

 என்னோட சம்பளம் செலவுக்கு போதலை.அதனால என் பொண்டாட்டியும் வேலைக்கு போறா இது என்ன தப்பு என்று சொல்லும் அவளின் கணவன்.அவளின்  அண்ணன் மற்றும் அப்பாவிற்கு தானே அதிகமாக மனசு வலிக்கும். நல்லா சம்பாதிக்க தெரியாதவனுக்கு பொண்ணை கொடுத்து நம்ம புள்ளைய நாமே கஷ்டத்துல தள்ளி விட்டு விட்டோமோ..

இரவு நேரத்தில் தன் தங்கையின் வலியை நினைத்து மனைவியிடம் புலம்பும் பாசக்கார அண்ணன்..

உங்களுக்கு இன்னும் அவ நினைப்பு விடலையா....

இல்லடீ..அவ எந்த வேலையும் செய்ய தெரியாதவ என்று நீ அடிக்கடி சண்டை போடுவீயே..

இன்னிக்கு எல்லா வலியையும் வெளியே சொல்லாம சிரித்த படி வேலைக்கு போறாளே..


அம்மா..அப்பா.. தயவுசெய்து..

வார்த்தை

விளையாட்டில்

தொடங்கி

அமைதியாக


அப்பாவின் வலி

 எங்க அப்பா நிறையவே குடிச்சாரூ அதுக்காக மதம் மாறினோம் என்ற பரிமளா..

கணவன் குடிப்பதை வக்காலத்து வாங்குகிறாள்.. இந்த காலத்தில் யார் தான் குடிக்கலை..

குடிக்கிறதை எல்லாம் ஓர் தப்பாவே  நினைக்க கூடாது..

ஏனோ தள்ளி நின்று அமைதியாக பார்க்கிறார்.தன் மகளின் காதலுக்காக .பத்து லட்சம் கடன் வாங்கி நடுத்தெருவில் நிற்கும் அந்த ஏழை தகப்பன்.. 

டேய் அவ சரிபட்டு வரமாட்டா அவளை ஓரேடியா அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வை என்ற மாமியார்..

தன் கணவனுக்காக பரிந்து பேசியதை விட, அவனுக்கு பிஸினஸ் பண்ண மாமனார் பணம் தரா விட்டால்...ச்சே என்ன மனுஷங்க இவங்க..

ஏனோ நினைவு வந்தது நேத்து கூட காலேஜ் தோழி தொலைப்பேசியில் பேசிய பேச்சு.. உன் வீட்டுக்காரர் இன்னும் உன்னை சந்திக்க காத்திருந்த அதே அடிக்கடி நிக்கிறாரூ.. கொஞ்சம் கவனமா இரு...


பைத்தியகாரியா...நல்ல காதலியா....


கல்வியில் வென்றவன்

கைநிறைய சம்பளத்திற்காக

வெளிநாடு பறக்கிறான் 

கல்வியில் தோற்றவனோ

தன்னை விட அதிகம்

படித்தவளை காதலிக்க

தொடங்குகிறான்

கல்யாண சந்தையில்

படித்தவளை விட பெரிய

பணக்காரி கிடைத்தால்

என் காதல் பொய்யல்ல

ஆனால் எங்க பெத்தவங்க

சம்மதிக்கலை மென்றே

சால்ஜாப்பு சொல்கிறான்

காதலியோ தன் ஏழை

அப்பனிடம் பணத்தை வாங்கி

அவனுடன் வாழ வரதட்சணை

தருகிறாள்... எதிர்பார்த்த 

பணம் கிடைத்த மகிழ்ச்சியில்

மணமேடை ஏறுகிறான்..

வரவேற்பு நிகழ்ச்சி..

எங்க காதலுக்கு பத்தாவது

வருஷமிது.. ஏனோ பத்தொடு

பதினொன்றாக வந்தவளை

அறிமுகம் செய்தான்.. இவங்க

என்னோட பெஸ்ட் பிரண்ட் என்றே

அவளோ பாலைவனத்து

பறவை போல் சிரித்த படி சொன்னாள் 

நீங்க ரொம்பவே அதிர்ஷ்டசாலி..

அவளின் காதுகளுக்கு

மட்டும் கேட்கும் படி

சொன்னான்.. இனி என்னை

தொந்தரவு பண்ணாதே

காதல் சுத்த பைத்தியக்காரத்தனம்

வரதட்சணை இல்லாம

கல்யாணம் பண்ண

எனக்கென்ன பைத்தியமா

அவளோ வெறுமையாக

சிரித்தாள் பணத்தை விட

பெரிய பாசத்தை தேடும் 

இவ பைத்தியகாரியா....

நல்ல காதலியா....

ஷேக்ஸ்பியர் வரிகள் - காதல்

 முதல் காதலில் 

தோற்று வெறுமையாக

தன்னந்தனியாக 

அலையடிக்கும் மெரீனா 

கடற்கரையில் 

நின்ற போது 

தெரிந்து கொண்டேன்

காதலுக்கு மூதலீடு 

பொய்களே..ஏனோ 

நினைத்து பார்த்தேன்

சென்னைக்கு வந்து

ஐந்து வருடங்களுக்கு

பிறகு காதலில்

விழுந்ததாக சொன்ன 

நண்பனின் வரிகளை

நானே நாலைஞ்சு

பேரிடம் சிரித்து சிரித்து

பேசினா தான் ஏதாவது

ஓர் பொண்ணாவது

கிடைக்கும் என்ற

அவனின் பேச்சை..

உலகமே நாடகமேடை

ஷேக்ஸ்பியர் வரிகள்

மனதில் அலையடித்தது


ரஞ்சித்.

 தயவுசெய்து எனக்காக நீ நூல்டுல்ஸ் கூட செஞ்சு தர வேண்டாம்..

ஓரே ஒரு நாள் எனக்காக நாம அன்னிக்கு ஊருக்கு போகும் போது சாப்பிட்டோமே வட்டமா பெருசு இருந்துச்சே அதே மாதிரி செஞ்சு தாயேன்..

நீ அதே மாதிரி செஞ்சு தந்தாலே போதும்..

நீ தினமும் மூணு வேளையும் கூட அதையும் தா..

நான் அடம் பிடிக்காம சமத்தா சாப்பிடுவேன்..காலை வேளையில்

சமையலறையில் நின்று கொண்டிருந்வளிடம் வந்து கேட்டான் ரஞ்சித்

 

பாரூடா இந்த பொடுசு கூட தான் நினைச்ச மாதிரி சாப்பிட ஆசைபடுது நீயும் தான் இருக்கீயே.

பேசாம இந்த சனியனை தலைமுழுகு. போன வாரம் வந்துட்டு போனானே உன் வக்கீல் பிரென்ட் அவன் கிட்ட பேசி சுமூகமாக இவளை அவங்க அப்பன் வீட்டுக்கே அனுப்பி வைச்சுடு.மாசத்துல பத்து நாள் இல்ல பொழுதெல்லாம் அவ அங்கேயே இருக்கட்டும்.

அம்மா நீ வேற பேசி பிரச்சினையை இழுக்காதே என்ற கோபால்

நான் சொல்லுறதுல என்னடா தப்பு இருக்கு..

இவ வீட்டுக்கு வந்த நாளில் இருந்தே ஓரே கண்றாவி தான்.

உன்னை விட அதிகம் படிச்சு இருக்கோம்கிற திமிரூ..

உனக்கு தான் அறிவே இல்லையே.

அந்த விஜயா உன்னை எப்படி எல்லாம் சுத்தி சுத்தி வந்தா அவளை கட்டி இருந்தா வரதட்சணை இன்னும் அதிகமாவே கிடைச்சு இருக்கும் நம்ம பட்ட கடனை எல்லாம் அடைச்சுட்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்..

 

என்னம்மா இப்படி பேசுற.அவளை கட்டிகிட்டா பணக்கார வீட்டில்ல நாய் மாதிரி தான் இருக்க வேண்டி வரும்..

உனக்கு இந்த பொண்ணு தான் சரியா இருப்பா..நீ ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் நம்ம வீட்டு சத்தம் வெளியே தெரியாம போட்டதை தின்னுகிட்டு வீட்டுக்குள்ளேயே கிடப்பா.

அதையும் மீறி ஏதாவது உன்கிட்ட பிரச்சினை பண்ணிணா.. இரண்டு வார்த்தை அன்பா பேசி அவளை அவங்க ஆத்தா வீட்டுக்கு போகாம நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு எல்லாம் சொன்னே..

ஆமா சொன்னே அதுக்கு இப்போ என்னவாம்.. இந்த பிச்சைக்கார நாயீ என்னையவே எதிர்த்து பேசுது..

என்னை எதிர்த்து பேசுற உனக்கு எதுக்குடி என்னோட இருந்து பவுன் செயின் அதை என்கிட்டயே கொடுன்னு சொன்னதுக்கு.. அதையெல்லாம் தர முடியாது..

நான் உங்க வீட்டுக்கு வந்தபோது ஆசையா நீங்க போட்டதுன்னு எதிர்த்து பேசுறா...

நீ தானேம்மா அந்த செயினை அவகிட்ட கொடுத்தே..

இவன் எவன்டா விபரம் தெரியாதவனா இருக்கான்..

அவ அப்பன் நம்மள விட பணக்காரன் ஆனா தன் புள்ளைகளை ஏழை மனநிலையில் வளர்த்து இருந்தான்..நீ கூட அடிக்கடி சொல்லுவீயே அவளுக்கு கழுத்துல பத்து பவுன் நகை போடும் என்பது தான் லட்சியம்.. அந்த ஓரே ஒரு விஷயத்தை வைச்சு தான் அவ என்னை நாய்க்குட்டி மாதிரி சுத்தி வர வைச்சேன்னு..

மெதுவா பேசு அவ காதுல ஏதாவது விழுந்திட போகுது..

நல்லா விழட்டுமே..

இதை கேட்ட அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா..

அது கூட நமக்கு நல்லது தானேடா..அதையே காரணமாக சொல்லி டைவர்ஸ் வாங்கிடு.. அந்த புள்ளையும் ஆத்தா போலவே தான் இருக்கும்

பெத்த கடனுக்கு கடைசி வரை இவ அவங்க அப்பன் ஆத்தாவுக்கு வடிச்சு கொட்டுகிட்டு பிள்ளையார் கோயில்லை தூத்து பெருக்கிட்டு வாழ்க்கையை முடிச்சுட்டு போகட்டும்..

நீ அந்த விஜயாவ இரண்டாம்தாரமா கட்டிக்க.. அவங்க அப்ப

ஓரு வருஷமா இந்த கதை நடந்துக்கிட்டு இருக்கு.. நானும் உனக்காக ஓவ்வொரு வாரமும் அவ வீட்டுக்கு கதையெல்லாம் தெரிஞ்சு கிட்ட இருந்தேன்.

அவனின் முகத்தில் ஆசை வெளிபட்டது.

எப்படியோ பெரிய பணக்கார பெண் அது நிறைய சொத்தோடு...

வேலைக்கே போகாதவனுக்கு இரண்டாவது முறையாகவும் அதிர்ஷ்டம் கதவை தட்டுவது போல் இருந்தது..

 

வாசலில் நன்கு படித்த பெண் பெற்ற அந்த முதியவர் வந்து நின்றார்.

அப்போது இருந்த நாற்காலியை விட்டு எழுவும் மனமின்றி சத்தமாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கேட்க வேண்டும் என்றே ராக்காயி

என்ன விடிஞ்சு விடியாம வாசல்ல கடன்காரன் மாதிரி வந்து நின்னுகிட்டு எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்கும் அறிவில்ல நீங்க பெத்து போட்ட இந்த.. வார்த்தை மிகவும் கேவலமாக வந்து விழுந்தது..

 

அது வந்து சம்பந்தி அம்மா நேத்து என் பொண்டாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா..

நான் மதியம் கடையில் இருந்து

அடுத்த வீட்டில் சண்டை நடந்தால் தனது வேலையை கூட விட்டு விட்டு வந்து வேடிக்கை பார்த்து ரசிக்கும் கூட்டம் வீட்டு வாசலில் கூடி நின்றது..

அதில் சிலர் வழக்கம் போல் நல்லவிதமாக பேசுவது போல இருவரும் இடையே கொம்பு சீவி விட்ட ஆயத்தமாயினர்..

மற்ற நாளில் அமைதியாக இருக்கும் அவள்.. காலையில் விஜயா கதையை கேட்டதில் இருந்து ஓர் முடிவு எடுத்திருந்தாள்..

இடையே சமரசம் பேச வந்தவளை.இங்க பாருங்க எங்க வீட்டு விஷயத்துல தலையிட நீங்க யாரூ தன் கோபத்தை அவர்களிடம் காட்டினாள்..

அப்போ நீ உங்க அப்பா வீட்டுக்கு போகத்தான் போறீயா மாமியார் கரிசனத்துடன் கேட்பது போல் இருந்தது.

ஆமா அவங்களுக்கு ஆம்பள புள்ள இல்லை.. காதலிக்கும் போது அவங்களையும் நல்லா பார்த்துப்பேன்னு தான் உங்க மகன் சொன்னாரூ ஆனா..

ஏன்டீ பழைய கதையை பேசி என்னை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுறே..

அவளோ விக்கித்து போனாள் காதலித்தது குற்ற உணர்வா.. அல்லது கல்யாணம் செய்து கொண்டது குற்ற உணர்வா...

 

முடிவு எடுக்க முடியாமல் அவள் தவித்து கொண்டிருந்த போது ஓர் பத்திரத்தை பீரோவில் இருந்து எடுத்து வந்த பேப்பரை டீப்பாய் மீது வைத்தாள் அந்த வீட்டின் பெரிய மனுஷி..

நீ போறதை பத்தி எங்களு

என்னம்மா நடக்குது இங்கே படிப்பறிவு அதிகமில்லாத அந்த ஏழை முதியவர் படபடப்புடன் பயம் கலந்த தொனியில் கேட்டார்.

விடுதலை பத்திரம் இனி நானும் என் பையனும் இந்த வீட்டுக்கு வர வேண்டியதே இல்லை.

வாசலில் கூட்டம் கூடி இருக்கிறது நம்ம கெளரவம் என்னவாகும் என்பதையெல்லாம் சிந்திக்க கூட நேமில்லாம நெடுச்சாண்கிடையாக அந்த பெரிய மனுஷி காலையில் விழுந்தார்..

சம்பந்தியம்மா நான் ஏதாவது தப்பா பண்ணி இருந்தா என்னை வேணாலும் நடுவீதியில் வைச்சு செருப்பை கழட்டி அடிங்க வாங்கிக்கிறேன்..

என் பொண்ணோட வாழ்க்கை இது..

 

ச்சீ தூரப் போ அசிங்கம் பிடிச்ச குடும்பம்..அவ எப்படி போனா எனக்கென்ன என் பையனுக்கு இன்னொரு கல்யாணம் கூட பண்ணி வைப்பேன் தெரியுமா ஏகதாளமாக பேசினாள்

 

நீங்க பெரிய மனுஷங்க என்னவெனாலும் பண்ணுங்க..

என் பொண்ணு கடைசி வரை உங்க வீட்டுல பத்து பாத்திரம் கழுவுற ஓர் வேலைகாரியா கூட இருந்திட்டு போகட்டும

பரிமளா அப்பாவின் கையை

பிடித்தாள்..அப்பா இனிமே நான் தான் உங்களுக்கு மகன் வாங்க போகலாம் என்றாள்.

 

அம்மா எனக்கு நீ அந்த சாப்பாடு செஞ்சு தருவீயா ஏக்கத்தோடு கேட்டான் ரஞ்சித்..

ம்ம் செஞ்சு தாரேன்..

நீ உன்னோட பொருளை எல்லாம் எடுத்து வைச்சுக்கோ பரிமளா சொன்னவுடன்

அப்பாவியான முகத்துடன் கேட்டான்.இந்த வீட்டில எனக்கு நீ தானே எல்லாமும்.

ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்ச ஓரே ஒரு பொருள் இருக்கு அதை எடுத்துகிட்டு வரலாமா..  அம்மாவின் முன்னால் குழந்தை குழந்தையாகவே இருந்தது..

சரிடா எடுத்துகிட்டு வா..அவள் சொன்ன மறுநிமிடம் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றவன்... ஓர் வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் ஓர் நாய்க்குட்டியை தூக்கி கொண்டு வந்தான்..

ரஞ்சித் இது என்னடா புதுசா இருக்கு தாத்தா அப்போது தான் வாயை திறந்தார்..

தாத்தா இது ரொம்ப பாவம் தெரியுமா.நேத்து ஓர் லாரி மாதிரி வேன்ல வந்தவங்க இதோ

ரஞ்சித் பேசிய வார்த்தைகள்  தனக்காகவே பேசியதை போல் பரிமளா உணர்ந்தாள்..

அந்த மூவரும் கிளம்பி செல்வதை கூட பார்க்க நினையாமல் திரும்பிக் கொண்டனர்..

 

காலங்கள் உருண்டோடியது..

 

பிறரின் வாழ்வில் பிரச்சினையை உண்டு  பண்ணி  தன்னை

நல்லவள் போல் காட்டிக்கொள்ளும்

பார்வதி வீடு தேடி வந்து பழைய கதைகளை பேசி அவளை உணர்ச்சிவசப்பபட வைக்க நினைத்தாள்..

Contd...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...