ஏழைகள் படிப்பது தவறா....

ஏழை வீட்டில் பிறந்த குழந்தைகளால் மூணு மொழிகளை படிக்க முடியாது கஷ்டபடுவாங்க என்று சொல்வது  எதனால்... ஏன் இத்தனை வலியை ஏழைகள் குழந்தைகளுக்கு தருவது ஏன்.

பாமர மக்களுக்கு தரமான கல்வியை அரசு வழங்குவதில் ஏன் இத்தனை முரண்பாடுகள்.

தனியார் பள்ளிகளின் வருமானம் குறைந்தது போகும் என்ற அச்சத்தால் ஏற்பட்ட பதட்டமா.. அல்லது இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததால் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையா.

கல்வியின் தரம் நாடு முழுவதும் ஓரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பல கல்வியாளர்களால் குழு அமைக்கப்பட்டு, கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளனர்.

அதாவது எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஓரே மாதிரியான கல்வியும் கிடைக்க செய்யணும் என்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.

1970 -ம் ஆண்டுக்கு முன்னர் எத்தனை தனியார் பள்ளிகள் இருந்தன, இப்போது எத்தனை இருக்கின்றது என்று கணக்கெடுத்து பாருங்கள்.

இங்கே இருக்கும் எல்லா தனியார் பள்ளியிலும் தேசிய மொழியான ஹிந்தி மட்டுமல்ல உலகநாடுகளின் பல மொழிகள் சொல்லி கொடுக்கப்படுகின்றது

ஆங்கிலம் தவிர பிரெஞ்சு லத்தின் போன்ற மொழிகளும் சொல்லி தரப்படுகின்றது.

அப்படி இருக்கையில் மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழி கொள்கையில் மட்டும் முரண்பாடு இருப்பதாக முரண்டு பிடிப்பது ஏன்..

ஆம் ஹிந்தி மொழி அந்த பாட திட்டத்தில் ஓர் சிறு பகுதி தான்.அதை மட்டும் வைத்து கொண்டு நீங்கள் எதிர்ப்பது ஏன். 

காமராஜர் ஆட்சியில் கூட தனியார் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டன ஆனால் அவையனைத்தும் தமிழ் வழி பள்ளிகள்.

ஆனால் ஹிந்தியை எதிர்ப்பதாக சொல்லி இருமொழி கொள்கை அடிப்படையில், நீங்கள் தொடங்கிய எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் ஹிந்தி சொல்லி தரப்படுகிறது என்பதை நீங்கள் மறந்து வீட்டீர்களா அல்லது மறைத்து விடுவீர்களா.


இன்னும் சேரியில் வாழும் பல குழந்தைகள் ஹிந்தி மொழியை படிக்க இயலாமல் இருக்கிறது. ஆனால் பணமிருப்பவரின் குழந்தைகள் ஹிந்தி மொழி படித்து மத்திய அரசு வேலையில் அமர்கிறது.


ஏன் இந்த பாரபட்சம், எங்களின் ஏழை குழந்தைகளுக்கு மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை கிடைத்தால் நல்லது தானே.

எங்களால் மாதம் தோறும் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வைக்க இயலுமா.. அதனால் புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுத்து அதை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்ககள்


அப்படி செய்தால் அதில் ஓர் பாதகமும் இருக்கிறது, ஆனால் அந்த பாதகம் மக்களுக்கு அல்ல..செலவே இல்லாமல் நல்ல தரமான கல்வி கிடைக்கும் போது நாம் ஏன் நம்ம பிள்ளைக்கு பல ஆயிரம் செலவு செய்யணும்.. நாமும் நம்ம குழந்தைகளை மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை உள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று முன்வருவர்.

இதனால் தனியார் பள்ளிகளுக்கு தான் நஷ்டமே தவிர மக்களுக்கு அல்லவே.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே, உங்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்கள் தான்.

எனவே சிறப்பாக தான் பாடம் சொல்லி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


அதை போலவே புதிய கல்வி கொள்கை நடைமுறை செய்யப்பட்டால்,‌நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால் மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.


தயவுசெய்து ஏழை மக்களுக்கும் புதிய கல்வி கொள்கை கிடைக்க வழி செய்யுங்கள் அல்லது எல்லா தனியார் பள்ளியிலும் 50 ஏழை மக்களின் குழந்தைகளை காசு வாங்காமல் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள்.


ஏனெனில் அதுவே சமூக நீதியாக அமையும் 


அரசு பள்ளியில் மட்டும் தான் இருமொழி கொள்கை உள்ளது.. ஆனால் மற்ற மேட்ரிகுலேஷன் CBSE.. எல்லாம் மும்மொழி சொல்லி தருகிறார்கள் பல ஆயிரம் பீஸ் வாங்கிட்டு நிறைய ஆட்டோ ஓடுவதற்கு காரணமும் ஆங்கில பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வருவதால் ஆட்டோக்காரர்களுக்கு வருமானம் கிடைக்கிறது .அத்தையை ஆட்டோ ஓட்டுனர்களின் பிள்ளைகளுக்கு மும்மொழி கிடைத்தால் என்ன தவறு இருக்கிறது.. ஏழைகள் மட்டும் மூணு மொழி படிக்க கூடாதா.....அவ்வளவு ஏன் முதல் பாடமா அயல்நாட்டு மொழி.ஆங்கிலம்..ஹிந்தி படிக்கிறாங்க.. ஆனால் அரசு பள்ளியில் ஏழை குழந்தைகளுக்கு ஹிந்தி படிக்க சொன்னா மட்டும் மொழி போர் என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்.. நாம் இந்திய நாட்டின் ஓர் அங்கம்..

லாட்டரி சீட்டு பத்து கோடி

 ஏன் அந்த குடிசை வீட்டின் முன்னாடி இவ்வளவு கூட்டம்..ஏதாவது சாவு வீடா..அட நீங்க வேற நேற்று வரை பிச்சைக்காரனாக இருந்தவனுக்கு  லாட்டரி பத்து கோடி ரூபாய் பரிசு விழந்து இருக்கு.அது அவனுக்கு தெரியுமா..அட அவன்கிட்ட செல்போன் வாங்கவே காசில்லாத ஏழை...இன்னும் தெரியாதை.. அதை அவங்க கிட்ட சொல்லுவதற்கு தான் அவனோட சொந்தமும் நண்பர் என்று பலர் வந்திருக்காங்க..அட நேத்து வரை அனாதை மாதிரி இருந்தானே..அட நீ வேற பணம் வந்தா பலபேர் பறந்து வருவான் இந்த விஷயம் கூட உனக்கு தெரியாதா. அது சரி இரண்டு பெரிய காரில் ஏதாவது அரசு அதிகாரி மாதிரி இருக்காங்களே அவங்க யாரூ..அட அவங்க தான்ப்பா இந்த ஊரில் இருக்கும் பெரிய வங்கியின் தமிழகஸவிற்பரை பிரிவு பிரதிநிதிகள்..அவங்க எதுக்கு இவனை பார்க்க வந்திருக்காங்க..அது வேற ஓட்ணுமில்லை..சார் எங்க பேங்கில் நிறைய வட்டி தருகிறோம்.அதை எங்க கிட்ட இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க ஏன்னா பணம் தண்ணி மாதிரி நிறையவே வந்த மாதிரி இருக்கும் அதை சேர்த்து வைக்காவிட்டால் அது காணாமல் போய்விடும் மேலும் நிறைய காசு இருப்பதால் உங்களை தேடி பலரும் வருவாங்க இந்த காசு எல்லாம் காலியா போனால் பிறகு யாரும் உங்களை தேடி வர மாட்டாங்க..அதனால் பணத்தை பத்திரமா பார்த்துக்கோங்க என்று சொல்லிட்டு போக வந்திருக்காங்க...

ஏழை வீட்டின் கதவு திறந்தது.. மன்னிக்கவும் மன்னிக்கவும்...கோடீஸ்வரரின் வீட்டு வாசல் திறந்தது... தனது மகனுக்கு கோடி ரூபாய் விழுந்தது தெரியாத கிழவி வாசலை திறந்தாள்...

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது ஏன் இத்தனை கூட்டம்.. நீங்களெல்லாம் எதுக்கு வந்திருக்கீங்க.

அந்த பாட்டியின் குணத்தை நன்கு அறிந்த சொந்தமும் அவனின் நண்பர்களும் மெளனமாக இருந்த போது பேங்க் மேனேஜர் வாயை திறந்து பேசினார்.. நான் இந்த ஏரியாவுல இருக்கிற HUSGK Bank மேனேஜர், உங்க பையனை பார்க்கத்தான் வந்தேன்.

பதிலுக்கு பாட்டி கேட்ட கேள்வியை கேட்டு அந்த மனிதர் ஆடித்தான் போனார்... இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பேங்க் உண்டா..

சுற்றி நின்ற அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.. இப்போ தெரியுதா நாங்க ஏன் இந்த கிழவிகிட்ட பேசலை என்று..இவ எமகாதகி ஓரு பயலும், இவகிட்ட வாயை கொடுத்து மீள முடியாது. கேள்வி மேலே கேள்வி கேட்டே கொன்னுடுவா 

இந்த பையன் எப்படி தான் சமாளிக்கிறானோ.. கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்.


சுற்றி மாபெரும் கூட்டம் இருக்கிற என்ற பிரமை கூட இல்லாமல், அதை பற்றி சிந்திக்க கூட நினைக்காமல்..ஏலே எருமை மாடு உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..எந்த நாயீ கடன் கொடுத்தாலும் வாங்காதே என்று.. நான் தான் உனக்கு மூக்கு முட்ட மூணு வேளை சாப்பாடு போறேனே இதை விட உனக்கு என்னதான் வேணும்ன்னு போயி கடன் வாங்கி இருக்கே..

மேனேஜர் பதறினார்... கோடீஸ்வரர் மனசு கஷ்டபட்டு நமக்கு பத்து கோடி கிடைக்காம போச்சுன்னா... அம்மா உங்க பையன் யாரிடமும் கடன் வாங்கவே இல்லை.உண்மையை சொன்னா அவருக்கு இதுவரை எந்த வங்கியிலும் அக்கவுண்ட் கூட கிடையாது. தான் பெரிய விஷயத்தை பேசி விட்டது போல், சற்று முன் நமட்டு சிரிப்பு சிரித்த கூட்டத்தை தான் அந்த அம்மாவை எப்படி சமாளித்தேன் பார்த்தீர்களா என்று பெருமையாக ஓர் பார்வை பார்த்தார்.

அந்த பெருமை சில நொடிகள் கூட நிலைக்கவில்லை..யோவ் நான் உங்கிட்டயா கேள்வி கேட்டேன் என் புள்ளகிட்ட நான் கேள்வி கேட்டா அதுக்கு அவன் தானே பதில் சொல்லணும்..நீ எதுக்கு அவனுக்கு பதிலா பேசுறே...

இல்லம்மா அது வந்து... அது வந்து.

.. உங்க ஆபிஸ்லையும் நீ இப்படி தான் இருப்பீயா உன் வேலையை செய்யாம அடுத்தவனுக்காக பேசிக்கிட்டு இருப்பீயா.. ஓர் வேளை நீ பையனோட நண்பனா ஏன்னா அவனும் இப்படித்தான் முந்திகொட்டை மாதிரியே பேசுவான்.

டேய் எருமை மாடு , சீக்கிரமா வாடா..

செந்தில் வேலவன்

தலையில் கங்கை 

உடலில் மங்கை 

துளியும் காமத்தின் சிந்தனை இன்றி

எல்லையற்ற அளவில்லாத 

அன்பான காதலை 

மனதில் சுமந்தபடி 

தியானத்தில் அமர்ந்தான். தான் 

படைத்த உன்னதமான உயிர்கள் ஒருவருக்கு 

ஓருவர் சிறு விஷயங்களுக்காக 

பதவிக்காக 

சண்டையிட்டு 

சச்சரவு செய்த போதும் அமைதியாக 

அன்பாய் இருந்தான்..

இன்றோ பல நாள் போராடத்திற்கு 

பிறகு தரணியாள வருகிறான் தந்தையின் வழியில் 

மக்களின் அரியணையில் அமர வருகிறான்....

நானே துரையென்ற துணிச்சலுடன் முருகன் எங்களின் பாசத்திற்குரிய செந்தில் வேலவன் 

பத்து ரூபாய் கிடைக்குமா

 அண்ணே சாப்பிட்டு நாலு நாளாச்சு... நீங்க ஏதாவது கொடுத்தா நல்லா இருக்கும்...

உங்க தங்கச்சி மாதிரி நினைச்சு ஓர் வேளை சாப்பாட்டுக்கு என்று ஓருத்தி சிக்னலில் கைக்குழந்தையுடன் கண்ணீர் விடும் போது ஏனோ ஜாதிஎன்ற பெயரில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சண்டை இழுத்து விடும் சில சுயநல அரசியல்வாதிகளின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது... அந்த பெண் சார்ந்த ஜாதியோ அல்லது மேடையில் வீர முழக்கம் செய்து விட்டு தனது மகனுக்கும் மகளுக்கும் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைக்க பிரயத்தனபட்டு..எந்த அரசு பதவியிலும் இல்லாமலே.. அந்த கட்சியின் பல கோடி ரூபாய் சொத்துக்களை தனது உடனிருப்பவருக்கே தெரியாமல் களிபரம் செய்து தனது சொந்த மகனுக்கு சொத்துகளை மகன் பெயரில் பட்டாபிஷேகம் செய்து வைத்த,  அந்த சமூகநீதி மனிதர்..

தெருமுனை கூட்டத்தில் பேசினார்... தசரதன் தனது மகன் ராமனுக்கு தானே பட்டாபிஷேகம் செய்து வைத்தார்..

ஊரில் எங்கோ வாழும் ஓர் சிறந்தவரை தேர்ந்தெடுத்து அவரை மன்னராக அமர வைத்தால என்ன குறைந்தா போய்விடுவார்..


சுற்றி இருப்பவர்களோ கைதட்டி ஆரவாரம் செய்து போகின்றனர்.



மேடையை விட்டு இறங்கி வந்தவரிடம் கேட்டார். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் எந்த கட்சியிலும் இணைந்து விடாமல்..தனது விவசாய வேலைகளை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி வேலை பார்த்து விட்டு வரும் போது, 

ஆற்றில் இறங்கி குளித்து விட்டு கூரை கூட இல்லாமலே கரையில் இருந்து வந்து போகும் அனைவருக்கும் அருள் செய்யும் அந்த விநாயகர்.

இதை தவிர அவர் யாரிடமும் கடவுளை பற்றி பேசியதே இல்லை.ஏனென்றால் கடவுளை அறியவோ அறிய முற்படவோ இஷ்டமில்லாத ஓர் மனிதர் அவர்.

அவர் யதார்த்தமாக ஊரில் கேட்டும் கேள்விகளை சமாளிக்க முடியாமல், அவரை கண்டு விலகிப் போகும் பலர்.

டேய் அவர் தான்டா நம்ம இயக்கத்துக்கு சரியான ஆளூ அவரை மட்டும் பிடிச்சு போட்டா இந்த ஊரில் நம்மை ஓர் பயலும் எதிர்த்து பேசாத மாதிரி பண்ணிடலாம் 

எமனாவே இருந்தாலும்...

 


அந்த மாபெரும் 

தலைவரை பார்க்க 

போன ஆசையும் 

அன்புடனும் போனி

ஒவ்வொருவரையும் 

மனிதரையும் 

வரிசையில் நின்றே 

பேசினார்..நீ யாராவேணா 

இரு...தலைவரை 

பார்க்கணும் என்றால் 

முதலில் என்னை 

பார்த்த பிறகு தான் 

பார்க்க முடியுமென்றே

கட்சி தொண்டர்கள் 

பலரை உதாசீனமாக 

பேசியவரின் எதிர்பாராத 

விதமாக மாரடைப்பால் 

மரணமடைந்தார்.. கூட்டத்தில் 

இருவர் சன்னமாக 

பேசிக்கொண்டனர்..

யமன் தலைவரை 

பார்க்கத்தான் போயிருப்பான் 

ஆனா இந்த மூதேவி தான் 

என்னை பார்த்துவிட்டு 

தான் தலைவரை 

பார்க்கணும் என்பானே...

மாலை போட்டுவிட்டு 

சோகமாக நடந்து செல்லும் 

தலைவரை பின்தொடர்ந்தது 

செல்லும் புதியவன் 

ஹலோ இனிமே நீங்க 

தலைவரை பார்க்கணும் 

என்றால் என்னை பார்த்துட்டு 

தான் எல்லாமே புரியதா..

கூட்டத்தில் இருந்து 

அந்த இருவரும் 

மீண்டும் தங்களுக்குள் 

முணுமுணத்துக் கொண்டனர் 

இப்போ தானே புரியது 

பல கட்சித்தலைவர்கள் 

அதிக வயசு வாழுறாங்க 

இது தான் சுட்சுமம் போலே.

எங்கோ உபன்யாசம் 

கேட்ட நியாயம் 

எமன் எதற்கும் பழி ஏற்பதில்லை 

முட்டாள் Vs புத்திசாலி

 

முட்டாளைப் போலவே 

நடிக்கும் புத்திசாலி...

புத்திசாலி போன்ற

நடிக்கும் முட்டாள் ..தனது 

முட்டாள்தனத்தை 

வெளிப்படுத்திய 

புத்திசாலியை 

கட்டம் கட்ட மீண்டும் 

தேவைபடுகிறது..

இன்னும் தன்னை 

முட்டாளாகவே 

காட்டிக் கொண்டிருக்கும் 

புத்திசாலியின் உதவி...

புத்திசாலியோ தன்னை 

முட்டாளாகவே காட்டி 

வாழ்ந்து விட துடிக்கிறான் 

ஆனால் முட்டாள் 

தன்னை புத்திசாலியாக 

காட்டிக் கொண்டதோடு..

மட்டுமல்லாமல் யாரும் 

புத்திசாலி மாதிரி 

நடிக்கவும் கூடாதென்றே 

காய்களை நகர்த்துகிறான்..

முட்டாள் புத்திசாலி 

சண்டை யுகங்கள் 

தோறும் நடப்பது தான் 

முட்டாளாக நடிப்பது 

மிகவும் சுலபமானது 

ஆனால் புத்திசாலியாக 

நடிக்க தொடங்கிய பிறகு 

ஓவ்வொரு நொடியும் 

நிம்மதியின்றியே 

கழிகிறது புத்திசாலி

வேஷத்தை கலைக்கவும் முடியாமல் 

தொடர்ந்து புத்திசாலியாக 

தன்னை நிலைநிறுத்த 

முட்டாளாக நடிப்பவனின் 

ஆலோசனையே 

தேவையாகிறது

முதியோரின் வலிகள்

 அய்யோ அப்பா நீ இப்படி பண்ணுவே என்று நாங்க நினைச்சு கூட பார்க்கலையே..


அடிவயிற்றில் இருந்து வரும் அந்த குரலில் தான் எத்தனை நம்பிக்கை.

ஆறு பிள்ளைகள் இருந்தும் நாங்க உன்னை சரியா கவனிக்கவில்லை தானோ என்று ஏழைகளின் ஏக்கத்தின் வலிகள்.


ஆறு பிள்ளைகளின் வீடுகளில் இருந்தும் சுழற்சி முறையில் சாப்பாடு கொடுத்த போதிலும், வெளியே சொல்ல இயலாமல் தவித்த பாட்டி தாத்தாவின் வலிகள். இன்று செய்தியாக வரும் போது எல்லோரின் மனதையும் கரைக்கிறது 


தனது சொந்த மனைவியை கொலை செய்து விட்டார் என்று சட்டத்தின் முன்னால் அவர் தண்டிக்கபடலாம்..


ஆனால் மகாத்மா காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தில் வலியாய் துடித்த கன்று குட்டியை கொல்ல சொன்னதாக படித்த கதை தான் நினைவு வருகிறது.


ஆம் ஒருவரின் மீது நாம் வைக்கும் அதீதமான காதல் முட்டாள்தனமாக பிறருக்கு தெரியலாம்.ஆனால் தான் காதலித்த, தன்னிடம் அன்பு செலுத்திய மனைவியின் வலியை பார்ப்பது எவ்வளவு பெரிய கொடிதான வலி..


ஓவ்வொரு நாளும் அவள் படும் வேதனை, அய்யா நாம பிள்ளைகளை நல்லாதானே வளர்த்தோம் என்று அவள் கேட்டு இருப்பாள் தானே.. அந்த முதியவரும் தனது பிள்ளைகளுக்காக எவ்வளவு தூரம் மனதில் ரணத்தை சுமந்து உழைத்து இருப்பார்.


நாம் அன்பாக வளர்க்கும் நாய்க்குட்டி இறந்தாலே தாங்க முடியாது.


இந்த செய்தியை ஓர் செய்தியாகவே கடந்து சென்று விடலாம்.  இதை  ஓர் தகவலாக கூட அறியவிரும்பாமல் வேகமாக கடந்து செல்லும் இயந்திர உலகில் தான் நாம் இருக்கிறோம் 


பகவத் கீதை பைபிள் குரான் இன்னும் எத்தனையோ மதநூல்கள் தாய் தந்தையரே தெய்வம் என்கிறது.


இங்கே கடவுளே இல்லை என்று ஆர்பாட்டம் செய்வதால் சிலருக்கு மத நூல்களின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது இயல்பு தான்.



மீண்டும் ஓர் விதி செய்வோம் கடவுள் இருக்கிறார். 

தாய் தந்தை என்று இருவரும் தான் முதல் கடவுள் என்றே நமது அடுத்த தலைமுறைக்கு போதித்து வளர்ப்போம்.


இங்கே ராமாயணம் பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் ராமன் அவதரிக்க காரணமாக இருந்ததே சிரவணணன் என்ற ஓர் பால்கன் 


தனக்கு என்று எந்த தனிப்பட்ட ஆசையும் இன்றி வயதான கண் பார்வையற்ற தாய் தகப்பனை தோளில் சுமந்து சென்றான்.


அது ஓன்றே இது போன்ற நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க ஓரே வழி

இப்போ யாராலும் அப்படி செய்ய இயலாது தான்.பணம் பணம் என்று பேய் போல் அலையும் நிலையை சில நொடிகள் மறந்து நம்மை சுமந்த பெற்றவரிடம் குறைந்த பட்சம் சிலமணிநேரமாவது.சிரித்து பேசுவோம்



சாதாரண மனிதன்

கட்சிகள் மாறிவிட்டது ஆனால் காட்சிகள் மாறவில்லை....

ஐயா உங்களை தோற்கடிக்க பெரிய சதி வேலையே நடக்குது என்ற போது.. யோவ் ஏன்ய்யா என்னோட மக்களை பத்தி என்கிட்டையே தவறா சொல்லுறே.. இன்னொரு தடவை இப்படி சொன்னே பிறகு நான் இதுவரைக்கும் இல்லாத மாதிரி உன்னை திட்டி போடுவேன்..நாம நல்லபடியா மக்கள் பணி செய்யுறோம் அதனால் மக்களுக்கு நம்மை பத்தி புரிஞ்சுப்பாங்க என்ற அந்த ஓர் நல்ல அரசியல்வாதி...

அவர் அரசியலில் தோற்ற போதும்..ஐயா எதிர்கட்சிகாரனுங்க கள்ள ஓட்டு போட்டு தான் இப்படி ஆச்சு என்று அவரிடம் சொன்ன போதும்..யோவ் ஓட்டு ஓண்ணு தான் அதை நல்ல ஓட்டு கள்ள ஓட்டு என்று சொல்லி கொச்சைபடுத்தாதீங்க..மக்களுக்கு ஏதோ மாற்றம் தேவைபடுது போலே...ஓருத்தனே தொடர்ந்து ஆட்சியில் இருக்க இது என்ன மன்னராட்சியா..நாம ஆசைப்பட்டு போராடி வாங்கிய ஜனநாயகம் நல்லா வளர்ந்து இருக்கு என்று சந்தோஷபடுங்கய்யா என்று யதார்த்தமான உண்மையை ஏற்றுக் கொண்ட ஓர் நல்ல தலைவர்.. இப்போதும் சில நல்லவர்கள் இருக்கின்றனர்.. அவர்களைப் போலவே..இது தான் அரசியல் போல.. இன்றும் கூட அரசியல் மேடைகளில் அதிர்வுகள் நடக்கிறது.

 மேடையில் இருக்கும் பலருக்கு புரியாத மாற்றங்கள் கட்சியின் மீது அபரிமிதமான அன்பும் பாசமும் விசுவாசமும் கொண்ட கட்சி தொண்டர்கள் சிலர்..ஏனோ கட்சிகள் தான் மாறியதே தவிர காட்சிகள் மாறவில்லை... அரசியல் என்பதே மாற்றங்களுக்கு உட்பட்டது தான் போல்... இப்படிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஓர் முறை வாக்கு சாவடியில் வரிசையில் நின்று ஜனநாயக கடமை நிறைவேற்றும் ஓர் சாதாரண மனிதன் 

வலிமை வளம் தரும்

 

உனக்கு இறைவன் வலிகளை தந்ததே உனது வலிமையை சோதிக்கத்தான்...

பலருக்கு உடனிருப்பவர்களால் பிரச்சினை வரும்.. உன்னை தனக்கு நிகராக இறைவன் நினைத்த காரணமாகவே இத்தனை வலியை தந்தான் போலும்.


தன்னை நம்பும் பக்தனை இறைவன் சோதிப்பதே...நீ சாதிப்பாய் என்பாய் என்ற நம்பிக்கையில் தான்..


துணிந்து நில் வலியே வலிமையாக்கும் நாள் விரைவில் வரும் 


ஊரும் நாடும் நேரத்திற்கு தகுந்தாற் போல் நாக்குகளை சழற்றி பேசுவது இயல்பான விஷயம் தான்.


நீ யார் என்பதை பிறர் சொல்ல கேளூ.. ஆனால் நீ யார் என்பதை நீ முதலில் உணர்ந்து கொள்...


இது உலகில் எதுவுமே நிரந்தரமில்லை..


விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை நீ அணிந்து செல்லும் போது இந்த உலகம் உன்னை மிகவும் மரியாதையாக பார்க்கும், அந்த மரியாதை என்னும் சகதியில் மாட்டி விடாதே..

அந்த மரியாதை எல்லாமும் உனது பணக்கார தோரணைக்கு தானே தவிர உனக்கானது அல்ல.நீ சென்ற இடத்தில் உன்னை விட சற்று பகட்டுடன் இன்னொருவர் வந்தால் உன்னை மறு நொடியே உதாசீனம் செய்து விட்டு சென்ற விடும் மக்கள் கூட்டம்..


நீ நீயாக வாழு... எந்தவிதமான கனத்தையும் கவனத்தையும் தலைக்குள் ஏற்றிவிடாதே...பதவி புகழ் அழகு அதிகாரம் இவை அனைத்தும் மாறக்கூடியது 

மாறாத ஓன்று உலகில் உண்டு என்றால் அது இறைவனின் அன்பு மாத்திரமே 

எனவே அனைவரும் சொல்கின்றனர் 


தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி.அன்பே சிவம் 


நானே ருத்ரன் நானே கணபதி நானே கார்த்திகேயன் நானே எல்லா ஜீவராசியிலும் வியாபித்து இருக்கும் பரந்தாமன் என போதித்த பகவத் கீதையில் மொழியை உலகறியச் செய்வோம் 


நீ தினமும் அலங்காரம் செய்து கொள்ளும் உடல் கூட உயிர் இருக்கும் வரை தான் மரியாதை..

முதல்வர் நாற்காலி ஓர் மியூசிக்கல் சேர்

நேற்று வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர்.. விதியின் வசத்தில் சில உட்கட்சி பூசலால் பதவியை பறிகொடுத்து விட்டார்... இப்போது முன்னாள் முதல்வர் என்ற அடைமொழி மட்டும் அவருக்கு சொந்தமாக இருக்கிறது... அவரின் அருகில் இருந்த பலர் இன்று அவரோடு இல்லை என்பதை விட அவர் போன் போட்டால் கூட எடுப்பதில்லை... ஆம் அந்த மனிதரின் பெயரை சொல்லி சம்பாதித்த பலர் இன்று மீண்டும் தற்போதையமுதல்வர் அருகில் போய் நின்று கொண்டனர்...

அப்படி நிற்பவர்களுக்கு ஏனோ புரியவில்லை..இந்த முதல்வர் கூட முன்னாள் முதல்வர் ஆகும் போது தான் உண்மையின் வலிமையும்..அது ஏற்படுத்தும் வலியும் தெரியும் என்பது...

அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை..

முதல்வர் நாற்காலி கூட உடனிருப்பவனால் எப்போது வேண்டுமானாலும் பிடுங்கப்படும் ஓர் மியூசிக்கல் சேர் தான் 

அவருக்கு அருகில் நிற்பவர் எப்போதும் நாற்காலியில் அமர தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்கிறார். ஏனெனில் அரசியல் முழுக்க முழுக்க அதிகார விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஏற்கனவே திருவள்ளுவர் இந்த அரசியல் அதிகார விளையாட்டைப் பற்றி உட்பகை என்ற பெயரில் எழுதியுள்ளார்.


காலப்போக்கில் ஒவ்வொரு அமைச்சரும் அடுத்த முதல்வராக முயற்சிப்பார்கள். பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக இதுதான் நடக்கிறது.

மேடையில் அமர்ந்து அதிகார விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார்.

ஆனால் கட்சியை உண்மையிலேயே நேசிப்பவர் எப்போதும் தனது அரசாங்கத்தைப் பற்றி சிந்தித்து கவலைப்படுவார்.



ஆட்டோக்காரன்

 ஏன்ப்பா பத்து ருபாய்க்கு இப்படி பேசுறீயே உனக்கு மனசாட்சியே இல்லையா என்ற போதும்.. சார் எனக்கு இந்த கூலி கிடைச்சா தான் வண்டி வாடகை மற்றும் எல்லா செலவு போக காசு நிக்கும் என்றே காறாராக பேசினான்...மாலை நேரத்தில் அவர்களின் வீடு தேடி அலைந்து போய் வீட்டு வாசலின் கதவை தட்டினான்.. ஏன்ப்பா தெரியாதனமா உன் ஆட்டோவில் ஏறிட்டேன்...அது தப்பு தான் இப்போ எதுக்கு வந்தே இன்னும் வேற காசு வேணும்னா என்றே சலிப்புடன் கேட்டார் பரந்தாமன்.


அவனோ காலையில் காசு கேட்டத்தை மாத்திரமே இன்னும் மறக்காமல் இருக்கும் அந்த மனிதரை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாமல்..என்னை மன்னிச்சிடுங்க சார்.. நான் கொஞ்சம் கோபக்காரன் ஆனா நல்லவன் தான்.


உன்னோட சர்டிபிகேட் எல்லாம் எங்களுக்கு வேண்டாம், வீட்டிற்குள் இருந்து எரிச்சலுடன் வெளிப்பட்ட பரிமளா.


அம்மா, இத்தாங்க அவனின் கையில் இருபது பவுன் தங்க சங்கிலி மின்னியது.. ஏய் இது எப்படி உன் கையில் வந்துச்சு... இன்னிக்கு சாய்ந்திரம் ஆட்டோ கழுவும் போது பின்னாடி பெட்டி வைக்கும் இடத்தில் ஓர் ஓரமாக கிடந்தது, அவனின் வார்த்தையில் உண்மையும் உங்களோட நகை எனக்கு எதுக்கு என்ற திமிரும் வார்த்தைகளில் இருந்தது.


நேற்று கல்யாண வீட்டில் தன் மகளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், அவள் முதன்முதலாக அமெரிக்கா போய் சம்பாதித்த பணத்தில் வாங்கி கொடுத்து அதே இருபது பவுன் சங்கிலி.


நீ பணத்தாசை பிடிச்சவ தானே, அதனால் தான் உன்னோட மகனுக்கு பெரிய பணக்கார இடத்தில் சம்பந்தம் பண்ணினே..என்னை மட்டும் ஏதோ ஓர் நடுத்தர குடும்பத்தில் வாழ்க்கைபட வைச்சே..


தனது பளபளஙஅமெரிக்கா வாழ்க்கை அலுத்து விட்டது என்பதை சொல்ல வந்தவளின் வார்த்தைகள் நாலு வழிச்சாலையில் முக்கிய ஊர் கடந்து செல்வது போல் சென்றனர்.


அன்பான அம்மா மகள் இருவரிடமும் வார்த்தை விளையாட்டில் சண்டை இழுத்து விட்ட வேடிக்கை பார்த்த சொந்தங்கள்.


தள்ளி நின்று மர்ம புன்னகை செய்த அவளின் சித்தியும் அத்தையும்.. அம்மா நீ இப்போ பேச்சை நிறுத்து என்ற போது வார்தைகள் எரிமலையாக வெடித்து அந்த கல்யாண மண்டபத்தில் இவர்களின் வீட்டு சண்டை திருஷ்டி பொட்டாக அமைந்தது.


அந்த வெறுப்பில் இனிமே நீ வாங்கி கொடுத்து சங்கிலியை போட மாட்டேன் என்று சபதம் செய்து அதை பையில் எடுத்து வைத்த நினைவு. ஆட்டோவில் ஏறும் போது, அந்த பையில் ஜிப் திறந்த போதிலும் நகை அதில் இருப்பதை மறந்தே இருந்தாள்.


இப்போ இதை பார்த்த பிறகு எல்லாம் நினைவு வந்தது, நேற்று இரவெல்லாம் மகளுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினை தீர விடிய விடிய அவர்கள் போனில் பேசிய போதும் அவர்களின் ஆணவம் குறைந்து அன்பு பெருகியது.


அதை வாங்கியவள், தம்பி ஓர் நிமிஷம் உள்ளே வா.ஓர் கப் காபி சாப்பிட்டு போகலாம்.உங்க போன் நம்பர் இருந்திருந்தா ஆட்டோ ஸ்டாண்டில் வந்து வாங்கிட்டு போக சொல்லி இருப்பேன்... அதான் வந்தேன்.


தம்பி என் வீட்டுக்காரர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா, நீ நினைக்கிற மாதியெல்லாம் அவரால் உடனே வரமுடியாது.


எனக்கு அதெல்லாம் தெரியாது பர்மா, நீங்க எப்போ வந்தாலும், எனக்கு கவலையில்லை ஏன்னா உங்க நகையை நான் திருடலை தெரியாம என் வண்டியில் விழுந்துவிட்டது..


என்னோட ஆட்டோவில் ஏறும் ஓவ்வொரு மனுஷனோட உயிர் உடமை இரண்டையும் பத்திரமா பார்த்து கொள்வது தான் என்னோட எண்ணம்.


இப்பவே நாலு சவாரி போயிடுச்சு..


தம்பி இவ்வளவு நல்லவனா இருக்கீயே நீ என்ன படிச்சிருக்கே.


M.B.A...படிச்சேன் சரியான வேலையில் கிடைக்கலை.யாரடமும் கை கட்டி நிற்க மனசில்லை..ஏன்னா நேர்மையா வாழும் யாரும் யாருக்கும் கைகட்டி போலியா நடிக்க தெரியாது..எங்க ஸ்டாண்டில் நிறைய பேர் அப்படித்தான்..கோபக்காரங்க தான் ஆனா யாரோட பொருளுக்கும் ஆசைபட்டதில்லை..எதையும் சொந்த காசில் உழைச்சு வாங்கணும் என்று திமிர் எங்க உடம்புல ஓடுது..


அந்த வீட்டில் இருந்த வயதான இருவரும் வாயடைத்து போய் நின்றார்..


போன் சிணுங்கியது, எதிர் முனையில் மாவட்ட S.P பேசினார்.


அங்கிள் உங்களோட நகை காணும் என்று ஓர் கம்ளெண்ட் எழுதி கொடுங்க மத்த விஷயத்தை நாங்க பார்த்துகிளோம்..


அதுக்கு அவசியமே இல்லைப்பா... ரொம்ப தேங்க்ஸ்..மத்த விஷயத்தை நீ நேரில் வா பேசலாம்.


அவனுக்கு ஓர் நிமிஷத்துல வியர்வை கொட்டியது ஓர் வேளை,  போலீஸ் வந்து விசாரிச்சா எவ்வளவு அசிங்கமா போயிருக்கும்.. இதுக்கு மேல இங்கே நிற்க கூடாது என்ற நினைப்பில் கிளம்ப இருந்தான்.


அப்போது அந்த மனிதர் பேசினார்.என்னை மன்னிசிட்டுப்பா, நேற்றிலிருந்து அவளோட கழுத்தில் அந்த சங்கிலி இல்லாத கண்டு நான் தான் அந்த பையன் கிட்ட யாருக்கும் தெரியாம யதார்த்தமா விசாரிக்க சொன்னேன்.. 


காலையிலேயே எனக்கு கிடைச்ச தகவல் படி உன்னை மாதிரி நல்ல பொறுப்பான பையனை பார்ப்பதே கஷ்டமாம்.. கோடி கோடியாக கொள்ளையடிச்சு வாழ மக்கள் மத்தியில் ஓர் புத்தர் மாதிரி இருப்பவன் என்று உன்னோட ஸ்டாண்ட் மற்றும் தெருகமக்கள் பல சொன்னார்களாம்.


கவலைப்படாதே தம்பி உன்னை மாப்பிள்ளை பார்ப்பதா சொல்லி தான் அவங்க விசாரிச்சு இருக்காங்க..

இரண்டு தங்கச்சி அம்மாவுடன் நீ வாழும் அன்பான எளிமையான வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துச்சு.

.

உன்னோட தங்கச்சி இரண்டு பேரும் கூட எங்க அண்ணா தான் எங்க உலகமே என்று சொல்லுவாங்களாமே..நீ நேர்மையா வாழ்வதை நினைச்சு அவங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க தெரியுமா..


சில நொடிகளில் காலுக்கு கீழே பூமி சுழல்வதை உணர்ந்தார்..


சார்.. சார்.. அப்போ நீங்க என்னை தப்பாவே நினைக்கலையா...


ஏன்னா இந்த வயசான காலத்துல எங்களுக்குள் மகன் மற்றும் மகள் என்ற வசதியான வாழ்வு வாழும் குழந்தைகள் காரணமாக புருஷன் பொண்டாட்டி இடையே சண்டை என்பதை யாரிடமும் சொல்ல முடியாம தவிக்கிற நிலைமை யாருக்கும் வரக்கூடாது..


அவரின் கண்கள் குளமாக பெருகியது.. சார் நீங்க என்ற போது.. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஓர் சாதாரண மாவட்ட நீதிபதியாக வேலைக்கு சேர்ந்து ஹைகோர்ட் நீதிபதியாக ஓய்வு பெற்றவன்.

 பல கேஸ் பார்த்தவன் அதனால் யாரையும் உடனே கைநீட்டி தவறு சொல்ல மாட்டேன்...ஏன்னா போலியான குற்றச்சாட்டு அவங்க மனதை எப்படி பாதிக்கும் என்பதை அறிவேன்.


அவனுக்கு அவரை பற்றிய மதிப்பு கூடியது..


Sorry sir, நீங்க யாருன்னு தெரியாம நேத்து...

அடவிடுப்பா நீ பேசியதில் எந்த தவறுமே இல்லை.நீ கோபமா பேசும் போதே நீ ரொம்ப நல்லனா தான் இருப்பே என்று நினைச்சேன் ஆனாலும் பாழாபோன புத்தி நாலு விதத்தில் யோசிக்க தானே செய்யுது..


தம்பி உங்க வீடு எங்கே இருக்கு அப்பா என்ன பண்ணுறார் 


அந்த வார்த்தையை கேட்டவுடன் அவன் தலைகுனிந்து நின்றான்..


ஏன்ப்பா நான் ஏதாவது தவறா கேட்டு விட்டேனா..இல்ல சார் எங்க அப்பா நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துடார்.. ஏதாவது புது விதமான நோய் அப்படித்தான் அம்மா சொல்லுவாங்க..பத்து வயசு வரைக்கும் அவர் காட்டிய பாசத்தை இன்னும் என்னால் மறக்கவே முடியலை சார்..


ஓர் வேளை எங்க அப்பா உயிரோட இருந்தா அவரும் உங்களை மாதிரி இருந்திருப்பார்..


என்னப்பா சொல்லுறே.. ஆமாம் சார் அவர் கூட சட்டம் படிச்சு லாயர் வேலை பார்த்தார்... நீதிபதி தேர்வு கூட எழுதியதா அம்மா சொல்லுவாங்க...


பரீட்சை ரிசல்ட் அவர் பாஸீ என்றது, ஆனா நோய் அவரை பெயில் ஆக்கிடுச்சு...

உன்னோட பெயர் என்னப்பா... எங்க ஊர் சாமி பேரூ சங்கர்..


என்னோட பெயர் தெரியுமா.. உதட்டை பிதுங்கினான்.. 


இசக்கிவேலு...


அவரின் கைகளை பற்றி உணர்ச்சி வசப்பட்டான்... அவருக்கும் ஏதோவொரு உணர்வு தாக்கியது 


எனக்கு எல்லாமே எங்க அப்பாதான் ஆனா சின்னவயசுலையே அவர் இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டேன்... லைசன்ஸ் எடுத்து காட்டினான்.


அதில் சங்கர் இசக்கிவேலு  என எழுதி இருந்தது..


சார் எங்க அப்பா பெயர் அது ஆனால் பலர் அதை ஜாதின்னனு நினைச்சிடுவாங்க.. மத்தபடி நான் யார் வம்புக்கும் போகவே மாட்டேன்..வாங்கின கடனை முழுசா கட்டணும் தங்கச்சி அம்மாவை நல்லா ழார்த்துகிடணும் இதைவிட பெரிய ஆசை எனக்கு எதுவும் கிடையாது சார்..


புரியது நீயும் எனக்கு ஓர் மகன் மாதிரி தான்.


தம்பி உனக்கு கார் நல்லா ஓட்ட தெரியுமா.. 


அவனின் போன் ஓலித்தது டேய் சங்கரூ ஏன்டா இன்னும் ஸ்டாண்டுக்கு வரலை.. உனக்கு ஏதும் உடம்புக்கு மறுமுனையில் பேசியதும் அவனின் அன்பு நண்பன் பேராட்சி... உன்னை தேடி விஜய் வந்திருக்கான்...நீ எப்போ வருவே 


.

.இல்ல அண்ணே.. நேத்து ஆட்டோவில் வந்த ஆளுங்க ஓர் தங்க சங்கிலியை விட்டு விட்டு போயிட்டாங்க அதை கொடுக்கிறதுக்காக வந்தேன்..


சரி சரி அப்போ நீ அதை முடிச்சுட்டு வா 

. இவன் உனக்காக காத்திருப்பானாம்.


அருகில் இருந்த விஜய் சொன்னது போனில் கேட்டது பிரெண்ட்ஸுக்காக காத்திருந்தா தப்பில்லை

.பொறுமையா வரச்சொல்லுங்க..



சரி சார் நான் கிளம்புறேன் என்ற போது ஓர் நிமிஷம் தம்பி எனக்கு ரிடையர் ஆயிட்டேன் ஆனாலும் எப்போதாவது வெளியே போகும் போது வண்டி ஓட்ட ஆள்தேவைபடும்.. நான் கூப்பிட்டா நீ என்னோட கார் ஓட்டுறதுக்கு ஆக்டிங் டிரைவர் வேலைக்கு வருவீயா..நாலு நாள் முன்னாடியே தகவல் சொல்லிடுவேன் நீ ஓண்ணும் கவலைபடாதே ..


என்ன வண்டி சார்...வா நானே காட்டுறேன்..கார்ஷெட்டில் போய் பார்த்தவனுக்கு மகிழ்ச்சியா இருந்தது..


தான் பல நாட்களாக ஓட்ட ஆசைப்பட்ட அதிவிலையுர்ந்த Fortuner... 



தூரத்தில் பாடல் எங்கோ ஒலித்தது இருவரின் காதுகளிலும் கேட்டது..


சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடையுடுத்தி சிவகங்கை குளத்தருகே சீர் துர்க்கை சிரித்திருப்பாள்.


அனைவரையும் காக்கும் விஷ்ணு துர்க்கை சுவர் ஓரத்தில் மல்லிகை மலர் மாலையில் சிரித்தபடி ..

திருப்பதி லட்டு எங்களின் மதநம்பிக்கை உணர்வு

 பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஓவ்வொரு மனிதரும் மிகவும் பயபக்தியுடன் இறைவனை காண செல்கின்றனர்.



அப்படி செல்லும் இந்து மக்களில் பலரும் சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் அதில் பிரச்சினை இல்லை.



ஆனால் அசைவம் சாப்பிடும் மக்கள் கூட திருப்பதி ஏழுமலையானை வணங்க செல்கிறோம் அதனால் மாமிசம் மற்றும் அதன் தொடர்ச்சியான உணவுகளை உண்ண கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் சைவ உணவுகளை உண்டு நேர்த்தியான விரதமிருந்து செல்வது இந்து மத நம்பிக்கை.




இங்கே இந்து மத உணர்வுகளை மட்டும் கேள்வி கேட்டு விமர்சனம் செய்து விட்டு,பிற மதங்களை பற்றிய கேள்விகள் வரும் போது அமைதியாகும் சில அதிபுத்திசாலிகள் இருக்கின்றனர்.



கடவுளே இல்லை என்பவர்களுக்கு கடவுளை பற்றிய விமர்சனமும் கோவில் சார்ந்த விஷயங்களில் கருத்து சொல்வதும் ஏன் என்று தான் எங்களுக்கு புரியவில்லை.



சமூகநீதியை மேடைக்கு மேடை பேசும் நீங்கள் உங்களின் தலைவர் பதவியை சமூக நீதி அடிப்படையில் கொடுங்கள் என்று நாங்களும் சொல்கிறோம்..

ஏன் அதற்கு மட்டும் உங்களால் பதில் சொல்ல இயலவில்லை.



இத்தனை ஆண்டுகளாக கட்சி தலைவராக இருந்து வீட்டீர்கள்... அந்த பதவியை, கட்சியில் புதிதாக நேற்று வந்து சேர்ந்த இன்னொருவருக்கு கொடுத்தால் தான் என்ன 



உதாரணமாக உங்களுக்கு ஓர் குறிப்பிட்ட விஷயத்தை பிடிக்காது என்றால் அதை விட்டு தள்ளி நில்லுங்கள் அதுவே சிறந்தது.

அதைவிடுத்து எங்களின் இந்து மத கோவிலில் நடக்கும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே.



ஓர் வேளை நீங்கள் கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டு இந்து மத கடவுளை கேலியும் நய்யாண்டியும் செய்து விட்டு இது ஜனநாயக நாடு யாரும் யாரை விமர்சனம் செய்யலாம் என்று சொன்னால் அதையும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்..



அதே போல் நாங்களும் ஜனநாயக ரீதியில் பேசலாம் எழுதலாம் அல்லவா.. அதையே இப்போது செய்கிறோம்.



கட்சி தலைவர் பதவி என்பது உங்கள் கட்சி இருப்பவருக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம். நேற்றைய தினம் உங்களின் கட்சியில் உறுப்பினர் அட்டை வாங்கியவரை தலைவராக அமர வையுங்கள். ஆறு மாதங்களுக்கு ஓர் முறை புதிதாக சேரும் ஆயிரம் உறுப்பினர்களின் பெயர்களை துண்டு சீட்டில் எழுதிப்போட்டு அதில் யாரின் பெயர் வருகிறதோ அவரை தலைவராக நியமனம் செய்யுங்கள்.



இது ஜனநாயக நாடு யாரும் தனது தனிப்பட்ட கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது என்று  மேடையில் முழங்கியது நீங்கள் தானே..



ஓர் வேளை இது தவறு என்று எண்ணினால் இன்னொரு விஷயத்தை செய்து தலைவரை உருவாக்குங்கள் 



குறைந்த பட்சம் மேடையில் நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக முதல் வரிசையில் இருக்கும் எல்லா நபர்களின் பெயரையும் துண்டு சீட்டில் எழுதி..குடவோலை முறையில் தலைவரை தேர்வு செய்யுங்கள்..



இத்தனை நாள் கடவுளை மறுத்து தலைவர் பதவியில் இருந்த நீங்கள் உங்களின் நண்பருக்கே அந்த பதவியை விட்டு கொடுத்தால் என்ன குறைந்தா போவீர்கள்.



நீங்கள் எல்லாம் சமத்துவம் சமூக நீதி என்று மேடையில் மட்டும் தான் பேச முடியும்.. ஆனால் அந்த தேசிய கட்சியில் நேற்று வரை யார் என்றே வெளியுலகிற்கு தெரியாதவர்களை கூட கட்சியின் அதிகார மையத்திற்கு வர முடிகிறது.



ஏனெனில் அவர்கள் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கொள்கை நம்புகின்றனர்.. ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நீங்களோ முதல்வர் நாற்காலியில் அமர நினைத்தே அரசியல் பேசுகின்றனர்..



முதல்வர் பதவியில் அமர்ந்தால் மட்டும் தான் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று பேசியவர் கூட இன்றைய முதல்வருக்கு பக்கத்தில் அமர வைத்து அவர் வாயால் புகழ வைக்கிறது விதி..



ஆம் நாங்கள் விதி கர்மா மறுபிறவி என்பதையும் இந்துமதம் சொல்லும் எல்லா கதைகளையும் நம்பும் சாதாரண இந்துக்கள் தான்.



நம்பிக்கை என்பதை முழுமையாக நம்புவது அதை எங்களுக்கு எங்களின் புராணங்கள் சரியாகவே சொல்லி இருக்கிறது.



அரசர்களும்அரசும்  நிச்சயமாக  மாறும், அவ்வளவு ஏன்ஒரு காலத்தில்அமைச்சர்களாக இருந்து பதவியை இழந்த பிறகுகட்சித் தொண்டர்கள் கூட அவரை மதிக்க மாட்டார்கள்.  அமைச்சர்கள்  கூட தங்கள் தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்துதலைவரா மாறிது வரலாறு. இது உலகெங்கிலும் உள்ள பல கட்சிகளின் வரலாறு. ஆனால் சாதாரண மக்களுக்கு வீழ்ந்த தலைவர்களைப் பற்றிஅனுதாபம் இருக்கும் மக்கள் ஆண்ட பலகட்சிகள் தங்கள் தலைவர்களின்  தவறான முடிவுகளால்,  கட்சி கரையான் புற்று போல் கரைவதை காப்பாறற முடியாமல் கதறுவதை நாங்கள் சரித்திரமாக படித்து இருக்கிறோம்..பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.



அரசியல் நண்பர்களே உங்களுக்கு ஓன்றை அன்புடன் சொல்லிக் கொள்கிறேன்..உங்களுடன் இருப்பவர்களை எல்லாம் உங்களுக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பினால் அதை விட பெரிய அரசியல் பிழை துவுமில்லை.



எங்களின் இந்து மதம் சார்ந்த விஷயங்களில் கடவுளை நம்பாதவர்களும்  முதல்வர் நாற்காலி கனவில் மிதக்கும் சில அரசியல்வாதிகளும் எங்களுக்கு அறிவரை சொல்ல வேண்டாம்.



ஓர் வேளை அப்படி கருத்து சொன்னால் நாங்களும் பதிலுக்கு சொல்வோம் உங்களின் கட்சியில் நீங்கள் மட்டும் தான் தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது சர்வாதிகாரம்.



கட்சி தலைவர் பதவியில் ஓவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு நபர் அமர்ந்தால் நல்லது தானே.

அரசு அதிகாரத்தில் அமர நினைத்து அரசியல் பேசும் நீங்கள். அரசு உத்தியோகத்தில் இருப்பது போல் ஆண்டுக்கு ஓர் முறை சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யுங்கள் 


இதுவே சமூக நீதி, சமத்துவம் 

கட்சி உறுப்பினராக இருக்கும் அனைவருக்கும் தலைவர் பதவியில் அமரும் தகுதியும் திறமையும் இருக்கிறது. 



தேர்வு செய்யப்படும் ஓருவர் ஓர் ஆண்டு மட்டுமே அந்த பதவியில் இருக்கலாம் அடுத்த ஆண்டு புதிதாக இன்னொரு நபரை பதவியில் அமர வையுங்கள்.



அதை போலவே வரவு செலவு கணக்குகளை பார்க்கும் கட்சி பொருளாளர் பதவி வகிப்பவரும் ஓவ்வொரு ஆண்டும் அந்த பதவியை இன்னொரு புதிய நபருக்கு கொடுக்க வேண்டும் இதை செய்ய உங்களால் முடியுமா... உங்களின் கட்சி பதவியில் உங்களின் தொண்டன் அமர்வதை கூட கற்பனை செய்ய இயலாத நீங்கள்.. எங்களின் கடவுளையும் கடவுள் சார்ந்த விஷயத்தையும் விமர்சனம் செய்வது சரியல்ல 



அடிமட்ட தொண்டராக இருக்கும் ஓருவரை உங்களின் கட்சி இயக்கதில்  தலைவர் பதவியில் அமர செய்யுங்கள். ஓவ்வொரு தொண்டனும் தலைவர் பதவியில் அமர கனவு காண்பதில் தவறு கிடையாதே 



 நீங்கள் திருப்பதி லட்டு பற்றிய எங்களின் இந்து மத நம்பிக்கை பற்றி பேசுவதாக இருந்தால் எங்களுக்கு ஆதரவாக பேசுங்கள் அல்லது அமைதியாக இருக்கவும் ஏன் என்றால் இது எங்களின் மத உணர்வு சார்ந்த விஷயம். 

அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட மேதை அம்பேத்கர் எங்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை.




இறைவனையும் இந்திய இறையாண்மையும் உளப்பூர்வமாக நம்பும் இந்தியர் நாங்கள் இந்தியர்கள்



ஜெய் ஹிந்த் 

 

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...