தெனாலிராமனின் 13 வது கவிதை படைப்பு சொந்தவீடு


வீட்டுக்காரன்
வந்து வாசலில்
நிற்கும் போது
மட்டுமே - நினைவு
வருகிறது
சீக்கிரம்
சொந்தவீடு
வாங்க

வேண்டும்

தெனாலிராமனின் 12-வது கவிதை படைப்பு யானை

யானை

முதலாளியின்
ஏச்சுக்கள்
அப்பாவின்
அறிவுரைகள்
அம்மாவின் - பாச
மொழிகள்
மனைவியின்
சந்தேங்கக்
கேள்விகள்
கடன்காரனின்
தொல்லை
அடுத்த வருட
சம்பள உயர்வு
கோவிலுக்கு
வெளியே விட்ட
“செருப்பு” -  இவையெல்லாம்
மறந்து போனது
செல்லமகளுடன்
யானையை
பார்த்த
மகிழ்ச்சியில்

தெனாலிராமனின் 11-வது கவிதை படைப்பு ரூபாய்

ரூபாய்

மன நிம்மதி
தேடித்தான்
ஆலயம் சென்றேன் - பல
சிந்தனைகள் சிலவானது -
தீடிரென ஒரு பொறி
தட்டியது
செருப்பின் விலை

300 ரூபாய்

தெனாலிராமனின் 10-வது கவிதை படைப்பு --- நம்பிக்கையில்

நம்பிக்கையில்

எத்தனை
முறையென்னை
ஏமாற்றினால்
நான் அசருவதேயில்லை
ஜனநாயகத்தின் மீது
கொண்ட நம்பிக்கையில்

தெனாலிராமனின் 9-வது கவிதை படைப்பு செல்போன்


ஆசை ஆசையாய்
குழந்தையை
கொஞ்சம்
போகும்
போதும்
வயதான
பாட்டிக்கு
மருந்து
கொடுக்கும்
போதும்
காலைநேரத்து
அவசரத்தின்
போதும்
என்றாவது
ஓர் நாள்
மனைவியை
புகழ்ந்து
பேசும்போதும்
விபத்தில்
அடிபட்ட
நண்பனை
அவசர
வண்டியில்
ஏற்றும் போதும்
கோவிலில் சுவாமி
தரிசனம் செய்தாலும்
சத்தம்போட்டு
நிம்மதியை
குலைக்கிறது
செல்போன் 

தெனாலிராமனின் 8-வது கவிதை படைப்பு - நமக்கு துணையிருப்பார்

  

மாபெரும் பள்ளியில
பத்தாவது
படித்த மாணவன்
புரிந்தும் புரியாத
வயதில் வேனில்
முன் இருக்கையில்
அமர்ந்து வந்த
சக மாணவியின்
பெயரை மட்டுமே கேட்டான்.....
வந்தது வினை.....
ஓநாயும் நரிகளும்
சேர்ந்து அழகிய புள்ளிமானை
காப்பாற்றியதாக
சிங்கத்தின் முன்னே
நாடகம் போட்டது.... வலையில் சிக்க இருந்த 
புள்ளிமானை தப்பிக்க விட்டு
மாட்டிக் கொண்ட சின்னஞ்சிறு அணில்
இரை தப்பிய வெறியில்
சிங்கம் சீறியது
டீச்சர் பாத்ரூமுக்குள்
எட்டிப் பார்த்ததாக
போலி குற்றச்சாட்டு.....
T.C கொடுத்து வீட்டுக்கு
அனுப்பிய தனியார் நிர்வாகம்...
மெதுவாக தான் புரிந்தது....
எதிர்த்தவரை எல்லாம்......
வெளியே அனுப்பி கதைகள்
ஓவ்வொரு விதம்..... ஆனால்
நெஞ்சு வலி அக்கா 
உன்னை மலை போல
நம்பினேனே கதறி அழுதாள்...
I.C.U வார்ட்டில் பாவமன்னிப்பு
கேட்ட படி
நடந்ததை எல்லாம்
சொல்லி... புலம்பினான்.....
இப்போ சொல்லு
நான் செஞ்சது தப்பா...
அந்த புள்ளைய காப்பாத்த
நினைச்சது ஓர் தப்பா
அதுக்காக உன்வாழ்க்கை.....
அவ பெயராவது தெரிஞ்சுதாடா...
விடுக்கா.... இனி நீங்க மட்டும்
தான் எனக்கு எல்லாமே.....
என் வாழ்க்கையை நாம
மலை போல் நம்புற
க........ பார்த்துப்பாருன்னு தினமும்
சொல்லுவியே.....
பெயரை தானே கேட்டேன்
நிழலை கூட தொடவில்லையே..
இப்படி பண்ணிட்டாங்க....
ஏழை குடும்பத்தின்
வருங்கால கனவில்
மீண்டும் ஏழ்மையை
விதைத்தது விதியோ...வினையோ...
அல்ல அவன் மிகவும்
நம்பிய வழிகாட்டிகள்
(கல்வி வழிமாற்றிகள்)
பழைய கஞ்சி குடித்துவிட்டு
மறுநாளில் இருந்து
தந்தைக்கு உதவியாக
டீக்கடையில் எச்சில் க்ளாஸ்
கழுவும் வேலை..
பள்ளிவாகனத்தை
ஏக்கத்துடன் பார்த்தபடியே
வேலை செய்தான்... ஓர் நாள்
பள்ளிவாகனத்தின்
கடைசி இருக்கையில்
ஏதோ பறிகொடுத்தவள்
போலவே அவனின் தேவதை....
முகத்திலும் உள்ளத்திலும்
ஆயிரம் மின்னல் மின்னியது...
அனைத்தும் கண்காணித்த
கருணையே உருவான
பாசக்கார பிதா.....
நாலுபேர் முன்னால்
காதுகளில் கேட்கமுடியாத
கெட்ட வார்த்தைகளில்
திட்டினார்.......
ஏன்ப்பா இப்படி திட்டுறே...
உன் புள்ள தானே
சும்மா இருங்க சார்...
தறுதலை பய...
படிக்க வேண்டிய வயசுல
முறுக்கி கிட்டு
அலைஞ்ச வெறி நாயீ...
என் உசுரை
வாங்குது....சூடு சொரணை
இருந்தாதானே....
நானா இருந்தா
அரளிவிதை அரைச்சிருப்பேன்
டீக்கடையில் யாருக்கும்
எதுவுமே புரியவில்லை...
அடவிடுப்பா.... லட்சக்கணக்கான
கடன் வாங்கி படிக்க வைச்ச
வேதனை அவனுக்கு
கடந்து சென்ற புரியாத கூட்டம்...
பொறுமையா இருப்பா....
எனக்கு எதனாலும்
அவருக்கு நீதான் துணை
புரிஞ்சு நடந்துக்கோ செல்லம்
காதுகளில் அடிக்கடி
ரீங்காரமிட்ட அக்காவின் சொற்கள்..
கல்லூரி செல்லும் போதும்
தலை குனிந்தபடி.
ஓரக்கண்ணால் அவனை
தேடுவாள்...அவனை
பார்த்தவுடன் கண்களால்
மன்னிப்பை கெஞ்சுவாள்
காலங்கள் கடந்தது
பல வருடங்கள் கழித்து
 பேப்பரில்
தலைப்பு செய்தி அந்த
தனியார் பள்ளி பற்றியது...
"பள்ளியில் பஞ்சு மெத்தை"....
கண்ணீருடன் பிதா...
மவனே உன்னை போய்
தப்பா நினைச்சேனே....
மார்புடன் தழுவி அன்பை
வெளிப்படுத்தினார்...
என்னை மன்னிச்சுருடா. தம்பீ.....
உங்க அக்கா எவ்வளவோ சொன்னா
மரமண்டைக்கு ஏதும் புரியலை..
போட்டோவில் மல்லிகையின்
நடுவே சிரித்தபடி அக்கா.....
அந்த பள்ளிக்கூடத்தில் ஏதோ
பெரிய தப்பு நடக்குது.....
அப்பாவுக்கு புரியும் போது
எல்லாமே முடிச்சிருக்கும்......
இழந்தது படிப்பை அல்ல.....
பாசத்தை கொண்டாடிய அக்கா....
மரண படுக்கையில் சொன்ன
வரிகள் உன் வலி உலகத்துக்கு
ஓரு நாள் நிச்சயம்
புரியும் கவலைபடாதே.....
......... நமக்கு துணையிருப்பார்..
ஆக வேண்டியதை பாரு...
மற்றொரு செய்தியில்
உடல்நலம் பாதித்த
வயதான சிங்கத்தை
தூக்கி செல்லும் காவலர்.....
குறிப்பு.....
இந்த பதிவு ஓர் கற்பனையின் வெளிப்பாடே.....
கவிதையின் வரிகள் அனைத்தும் கற்பனையே.


கந்த சஷ்டி கவசம் பாடல்


 

 காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் 

நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக்

கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும்

நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை

அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

 

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக், கிண்கிணி யாட மையல்

நடஞ்செய்யும் மயில் வாகனனார்

கையில்வேலால் எனைக் காக்க வென்று

வந்து வரவர, வேலாயுதனார் வருக வருக

வருக மயிலோன் வருக இந்திரன் முதலா

எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் 

நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த

ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக 

சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச

ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிறநிறென வசர

ஹணபவ வருக வருக அசுரர் குடிகெடுத்த

ஐயா வருக என்னை யாளும் இளையோன்

கையில் பன்னிரண்டாயுதம் பாசங் குசமும்

பரந்தவிழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன்

வருக ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரை யுங்கிலியும்

கிலியும்சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன்நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி யாறும்

நீறிடுநெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு

கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி

நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு

செவியில் இலகு குண்டலமும் ஆறிரு

திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும்

பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன

மாலையும் முப்புரி நூலும் முத்தணி

மார்பும் செப்பழகுடைய திருவயிறு

உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்

பட்டும் நவரத்னம் பதித்த நற்சீராவும்

இருதொடையழகும் இணை முழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகு டிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து

உதவும் லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோத னென்று

உன்திருவடியை உறுதியென் றெண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல்

காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக்

காக்க விதிசெவி இரண்டும் வேலவர்

காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய

நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும்

கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை

இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல்

காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல்,

வயிற்றை விளங்குவேல் காக்க சிற்றிடைய

அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை

நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல்

காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக்

குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை

இரண்டும் பருவேல் காக்க கணைக்கால்

முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை

அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல்

காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க

பின் கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில்

சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம்

நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல்

காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே

வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில்

வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில்

அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில்

எதிர்வேல் காக்க தாமதம் நீக்கி சதுர்வேல்

காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க

நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க

தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம்

பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை

அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப்

பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம

ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்

கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக்

காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும்

இடி விழுந்து ஓடிட ஆனை அடியினில் அரும்

பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகள்

என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன் மனையிற்

புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும்

ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன்

சோறும் ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள்

எனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட

அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடனங்கம்

கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள்

பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு

சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி

தணலதுவாக விடுவிடு வேலை வெருண்டது

ஓட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும்

இனித் தொடர்ந்தோட தேளும் பாம்பும் செய்யான்

பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய

விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்பும் சுளுக்கும்

ஒரு தலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்பு

பித்தம் சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப்

பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன்

கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பரு அரை

யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீயெனக் கருள்வாய் ஈரேழுலகமும்

எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும்

எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே

சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா

அமராவதியைக் காத்துத், தேவர்கள் கடுஞ்சிறைவிடுத்தாய்

கந்தா குகனே கதிர் வேலவனே கார்த்திகை மைந்தா

கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனிய வேல்

முருகா தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை

கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன்

குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும்

செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார்

குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க

யானுனைப்பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை

முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன்

நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன்யான்

நெற்றியில் அணியப் பாசவினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி

அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக

வேலா யுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன்

வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க

வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு

வாழ்க வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன் வாழ்க

வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள்

நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

 எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியம்

அளித்து மைந்தன் என் மீதுன்

மனமகிழ்ந்தருளித் தஞ்சமென்றடியார்

தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி

கவசம் விரும்பிய பாலன்

தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடன்,

ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவசம்

இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு ஓதியே

செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக்குள்ளோர்

அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர்

சேர்ந்தங்கருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து

வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை

அளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில்

பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்

கந்தர் கை வேலாம் கவசத் தடியை வழியாய்க்

காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண

வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப்

பொடிபொடியாக்கும் நல்லோர் நினைவில்

நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலெக்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் சூரபத்மாவைத்

துணித்த கையதனால் இருபத் தேழ்வர்க்

குவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினில்

இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத்தாட்கொள் என்றனதுள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள்

மனமகிழ் கோவே போற்றி திறமிகு

திவ்விய தேகா போற்றி இடும்பாயுதனே

இடும்பா போற்றி கடம்பா போற்றி

கந்தா போற்றி வெட்சி புனையும்

வேளே போற்றி உயர்கிரி கனக

சபைக் கோரரசே மயில் நடமிடுவோய்

மலரடி சரணம் சரணம் சரணம்

சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...