தெனாலிராமனின் 8-வது கவிதை படைப்பு - நமக்கு துணையிருப்பார்

  

மாபெரும் பள்ளியில
பத்தாவது
படித்த மாணவன்
புரிந்தும் புரியாத
வயதில் வேனில்
முன் இருக்கையில்
அமர்ந்து வந்த
சக மாணவியின்
பெயரை மட்டுமே கேட்டான்.....
வந்தது வினை.....
ஓநாயும் நரிகளும்
சேர்ந்து அழகிய புள்ளிமானை
காப்பாற்றியதாக
சிங்கத்தின் முன்னே
நாடகம் போட்டது.... வலையில் சிக்க இருந்த 
புள்ளிமானை தப்பிக்க விட்டு
மாட்டிக் கொண்ட சின்னஞ்சிறு அணில்
இரை தப்பிய வெறியில்
சிங்கம் சீறியது
டீச்சர் பாத்ரூமுக்குள்
எட்டிப் பார்த்ததாக
போலி குற்றச்சாட்டு.....
T.C கொடுத்து வீட்டுக்கு
அனுப்பிய தனியார் நிர்வாகம்...
மெதுவாக தான் புரிந்தது....
எதிர்த்தவரை எல்லாம்......
வெளியே அனுப்பி கதைகள்
ஓவ்வொரு விதம்..... ஆனால்
நெஞ்சு வலி அக்கா 
உன்னை மலை போல
நம்பினேனே கதறி அழுதாள்...
I.C.U வார்ட்டில் பாவமன்னிப்பு
கேட்ட படி
நடந்ததை எல்லாம்
சொல்லி... புலம்பினான்.....
இப்போ சொல்லு
நான் செஞ்சது தப்பா...
அந்த புள்ளைய காப்பாத்த
நினைச்சது ஓர் தப்பா
அதுக்காக உன்வாழ்க்கை.....
அவ பெயராவது தெரிஞ்சுதாடா...
விடுக்கா.... இனி நீங்க மட்டும்
தான் எனக்கு எல்லாமே.....
என் வாழ்க்கையை நாம
மலை போல் நம்புற
க........ பார்த்துப்பாருன்னு தினமும்
சொல்லுவியே.....
பெயரை தானே கேட்டேன்
நிழலை கூட தொடவில்லையே..
இப்படி பண்ணிட்டாங்க....
ஏழை குடும்பத்தின்
வருங்கால கனவில்
மீண்டும் ஏழ்மையை
விதைத்தது விதியோ...வினையோ...
அல்ல அவன் மிகவும்
நம்பிய வழிகாட்டிகள்
(கல்வி வழிமாற்றிகள்)
பழைய கஞ்சி குடித்துவிட்டு
மறுநாளில் இருந்து
தந்தைக்கு உதவியாக
டீக்கடையில் எச்சில் க்ளாஸ்
கழுவும் வேலை..
பள்ளிவாகனத்தை
ஏக்கத்துடன் பார்த்தபடியே
வேலை செய்தான்... ஓர் நாள்
பள்ளிவாகனத்தின்
கடைசி இருக்கையில்
ஏதோ பறிகொடுத்தவள்
போலவே அவனின் தேவதை....
முகத்திலும் உள்ளத்திலும்
ஆயிரம் மின்னல் மின்னியது...
அனைத்தும் கண்காணித்த
கருணையே உருவான
பாசக்கார பிதா.....
நாலுபேர் முன்னால்
காதுகளில் கேட்கமுடியாத
கெட்ட வார்த்தைகளில்
திட்டினார்.......
ஏன்ப்பா இப்படி திட்டுறே...
உன் புள்ள தானே
சும்மா இருங்க சார்...
தறுதலை பய...
படிக்க வேண்டிய வயசுல
முறுக்கி கிட்டு
அலைஞ்ச வெறி நாயீ...
என் உசுரை
வாங்குது....சூடு சொரணை
இருந்தாதானே....
நானா இருந்தா
அரளிவிதை அரைச்சிருப்பேன்
டீக்கடையில் யாருக்கும்
எதுவுமே புரியவில்லை...
அடவிடுப்பா.... லட்சக்கணக்கான
கடன் வாங்கி படிக்க வைச்ச
வேதனை அவனுக்கு
கடந்து சென்ற புரியாத கூட்டம்...
பொறுமையா இருப்பா....
எனக்கு எதனாலும்
அவருக்கு நீதான் துணை
புரிஞ்சு நடந்துக்கோ செல்லம்
காதுகளில் அடிக்கடி
ரீங்காரமிட்ட அக்காவின் சொற்கள்..
கல்லூரி செல்லும் போதும்
தலை குனிந்தபடி.
ஓரக்கண்ணால் அவனை
தேடுவாள்...அவனை
பார்த்தவுடன் கண்களால்
மன்னிப்பை கெஞ்சுவாள்
காலங்கள் கடந்தது
பல வருடங்கள் கழித்து
 பேப்பரில்
தலைப்பு செய்தி அந்த
தனியார் பள்ளி பற்றியது...
"பள்ளியில் பஞ்சு மெத்தை"....
கண்ணீருடன் பிதா...
மவனே உன்னை போய்
தப்பா நினைச்சேனே....
மார்புடன் தழுவி அன்பை
வெளிப்படுத்தினார்...
என்னை மன்னிச்சுருடா. தம்பீ.....
உங்க அக்கா எவ்வளவோ சொன்னா
மரமண்டைக்கு ஏதும் புரியலை..
போட்டோவில் மல்லிகையின்
நடுவே சிரித்தபடி அக்கா.....
அந்த பள்ளிக்கூடத்தில் ஏதோ
பெரிய தப்பு நடக்குது.....
அப்பாவுக்கு புரியும் போது
எல்லாமே முடிச்சிருக்கும்......
இழந்தது படிப்பை அல்ல.....
பாசத்தை கொண்டாடிய அக்கா....
மரண படுக்கையில் சொன்ன
வரிகள் உன் வலி உலகத்துக்கு
ஓரு நாள் நிச்சயம்
புரியும் கவலைபடாதே.....
......... நமக்கு துணையிருப்பார்..
ஆக வேண்டியதை பாரு...
மற்றொரு செய்தியில்
உடல்நலம் பாதித்த
வயதான சிங்கத்தை
தூக்கி செல்லும் காவலர்.....
குறிப்பு.....
இந்த பதிவு ஓர் கற்பனையின் வெளிப்பாடே.....
கவிதையின் வரிகள் அனைத்தும் கற்பனையே.


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...