அப்பாவியான அப்பா

 பணத்தை சம்பாதிக்க தான் 

பட்ட கஷ்டங்களை எல்லாம் 

சொல்லாமல் தன்னை மிகவும் 

சிறந்த திறமைசாலியாக 

காட்டிக் கொள்ளும் அப்பாவி அப்பா.. 

ஏனென்றால் தகப்பனின் வலிகள் 

தனது செல்ல மகனுக்கோ 

பாசமான மகளுக்கோ தெரிந்து விட்டால் 

அவர்களின் மனது வலிக்குமே என்றே நினைக்கும் அப்பாவியான அப்பா 

யானையும் ரயிலும்

 யானை இரயில் 

இரண்டுக்கும் 

பல ஒற்றுமைகள் 

ஏனோ அவற்றை 

கண்டுகொள்ள நேரமின்றி 

இவற்றின் பயனை மட்டுமே 

அனுபவிக்கும் மனிதரில் 

நானும் ஒருவன்... யானையும் ரயிலும் 

தனக்கான பாதையை 

மாற்றுவதே இல்லை.. ஆனால் 

மனிதன் அவசர ஆசைக்கு 

அவற்றின் பாதையில் 

குறுக்கே செல்லும் போதே 

பெட்டி செய்திகளில் இவை...

யானையின் பிளிறல்... 

நான் வருகிறேன் வலசை பாதையை மறிக்காதே என்கிறது..

ரயிலில் பிளிறல் இயந்திரமாய் 

வருகிறேன் தள்ளி நில்லுங்கள் 

என்றே எச்சரிக்கை செய்கிறது..

யானைகளால் காடு வளம் பெறுகிறது 

ரயிலின் சேவையால் நாடு 

நலம் பெறுகிறது.. மொத்தத்தில் 

சொன்னால் யானை ரயில் 

இரண்டின் பிளிறல் சத்தமும்..

நன்மையே செய்கிறது அவர்களின் பாதையில்  

சுயநல மனிதர்களாய் நாம் குறுக்கிடாத வரை

யானையும் ரயிலும் 

அவள் ஓர் பைத்தியக்காரி

 

அவளுக்கு யாரிடம்

எப்படி பேசணும் என 

தெரியாது...அவள்

சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் 

தூக்கி வீசிவிடுவாள்.

அவள் பல நாட்களுக்கு

குளிப்பதே இல்லை.. நாம 

ஒன்று கேட்டாள்...அவளோ

ஏதோவொரு கற்பனை உலகில் 

இருந்தபடி மற்றொரு பதில் சொல்வாள் 

மொத்தத்தில் சொன்னால் 

அவள் ஓர் பைத்தியக்காரி என்றே 

ஊரும் உறவும் சொந்தமும் 

அவளை வெறுத்து ஓதுக்கியது.. 

கருப்பு சட்டையில் வந்த மக்கள் கூட்டமும் 

அவளை பெண்ணாக கூட மதிக்கவில்லை.. 

ச்சீய் தள்ளி போடீ...பிச்சைக்கார......மு..... டே...

காசு கேட்டு வந்துட்டா 

கேமராக்கள் இல்லாத காரணமாக 

தங்களின் சுய ரூபத்தில் சில உத்தமர்கள் 

ஆனால் அவளுக்கோ அற்ப ஆசை இல்லையே முகத்தில் 

போலியாக சிரித்து புறமுதுகில் குத்தும் 

கெடு புத்தி இல்லாதவள் ..

அது மட்டுமா அவளுக்கு தெரியாது.. 

இன்னும் இன்னும் எத்தனையோ 

அவளுக்கு தெரியாதே...தென்கோடி கடற்கரையில் 

பகலுக்கும் இரவுக்கும் வெயிலுக்கும் 

மழைக்கும் கூட அவளுக்கு 

வித்தியாசம் தெரியாதே ...

உறவுகளும் சொந்தமும் 

நட்பும் ஏமாற்றி பிறகு வாழ்வை 

வெறுத்து கடற்கரையில் 

சாக நினைத்து வந்தவனின் 

அருகில் சென்று வாசனையுடன் 

கேட்டாள் "ஏன் தங்கம்" உலகமே 

உன் பாட்டை கேட்க துடிக்குது..

நீ எதுக்காக சாகப்போறே...

உம் பாட்டை அந்த ஆத்தா பகவதிகிட்ட

பாடி காட்டீனீயா....நீ பெரிய 

இசையமைப்பாளர் அப்படின்னு 

நேத்தே சொன்னா...

நீ பெரிய புகழ் அடைய போறீயாமே 

அவளின் காலில் நெடுச்சாண்கிடையாக 

வீழ்ந்தான்.. அம்மா தாயே காப்பாத்து 

அடுத்த வேளை சோத்துக்கே 

வழியில்லை நீ என்னவோ சொல்லுறீயே... 

அதனால் தான் ஊர் என்னை பைத்தியக்காரின்னு 

சொல்லுது ... ... கலகலவென சிரித்தாள் 

அவனின் புத்திக்குள் பல இசைகள் 

உருவாகியது பல வண்ணங்களாக 

மனிதர்களின் எண்ணங்களை

நொடியில் மாற்றிவிடும் அழியாத 

இசை சின்னங்களாக...






தள்ளுபடி வாழ்க்கை.


எந்த கடையில் எந்த ஊரில் 

எந்த பொருள் மலிவான 

தள்ளுபடி விலையில் என்று 

தேடித்தேடி வாங்கும் நானே தான் 

கடவுளிடம் கேட்டேன்..

ஆண்டவா நான் நூறு வயசுக்கு வாழுணும்... 

அதுக்கு நீ தான் அருள் செய்யணும் என்றே....

தள்ளுபடி வாழ்க்கை.

குட்டி தேவதை

எத்தனையோ இடைஞ்சல்களையும் தாண்டித்தான் அவனின் அம்மா அவனுக்கு அனுமதி கொடுத்தால்..நீ போய் பாருங்க பக்கத்து ஊரில் வேலை தந்தா மட்டும் தான் நீ அந்த கம்பெனியில் சேரணும்..இல்வாட்டி எங்க கூடவே இருந்துகிட்டே கிடைக்கிற வேலையை பாரு போதும்..


நீ சம்பாதிச்சு வந்து கொட்டணும் என்று ஓண்ணுமீ தலையெழுத்து இல்லை புரியுதா.சரிம்மா என்றே ஊருக்கு கிளம்பினான் காலை நேரத்து முதல் பேருந்தில் ஏறி அமர்ந்தவனுக்கு மனதிலும் சிந்தனையிலும் ஆயிரம் ஆயிரம் சஞ்சலமும் சந்தேகமும்.

நமக்கு வேலை கிடைக்குமா.. ஓர் வேளை நம்மை விடவு திறமையானவங்க வந்திருந்தா என்ன செய்வது..

முதல் வேலைக்கான நேர்காணலுக்கு குடும்பத்தின் சுமை கவலை  என்றே சோகம் தோய்ந்த முகத்துடன் பேருந்தில் ஜன்னலோரமாக இருந்தவனுக்கு தனது ராசியாக புன்னகையை பரிசாக தந்த கைகளை அசைத்த..நீ எடுத்து வைக்கும் முயற்சியில் எல்லாம் உனக்கு சுக்கிர திசை தான் என்பது போல் கைகளை அசைத்து அம்மாவின் ராட்சத பிடியில் இருந்தாலும் உலகிற்கு இருக்கும் அனைவரிடமும் சிரித்த முகமாக டாடா காட்டும்  சிறு தேவதை... ஏய் பிசாசு என்னடீ பண்ணுவோம் என்றது முகத்தில் சோகமாக வைத்து கொண்டு தவறே செய்யாதவள் போல் தரையை பார்க்கிறாள். அந்த குட்டி தேவதை..

இந்த கழுதை எத்தனை சொன்னாலும் மண்டையில் ஏறாது எப்போ பாரு யாரையாவது பார்த்து டாடா காட்டிக்கொண்டு இருக்குது..


 சற்று தொலைவில் யாரோ கவலை தோய்ந்த முகத்துடன், இருக்கிற பண்டம் பாத்திரம் எல்லாமும் அடமானம் வைச்சாவது இவளுக்கு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டா அதுக்கு பிறகு எனக்கு இல்லையே இல்லை 

தாத்தா போன பிறகு இவளுக்கு தாத்தா நினைப்புலயே ஆஸ்பத்திரி போனது தான் மிச்சம்.

கடன்கார மாமன் இரண்டு பேர் இருந்தும் தண்டம் தான் அவனுங்க..பொண்டாட்டி முந்தானைமை பிடிச்சுகிட்டு... எங்க அப்பா கல்யாணத்து தருவதாக சொல்லி இருக்கலாம் அதெல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும்.


சாகும் போது என் மகளுக்கு பேத்தி இதையெல்லாம் கொடுங்கன்னு எங்க கிட்ட எதையும் சொல்லை போதும்..சொன்ன வலிமிக்க வரிகள்...

அவர்களின் வீட்டின் வராண்டாவில் கூட கடவுள் இருந்து தினமும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்..நீ ஆசிர்வாதமாய் இருப்பாய் என்றே 


தாத்தா இல்லாத குறை தெரியாம வளரத்துட்டேன்.. இனிமே எப்படி சமாளிக்க போறேனா தெரியலை.கல்யாணத்துக்கு தாய் மாமன் சீர் செய்ய அந்த மூதேவிக தானே வரவேண்டி இருக்கு அதான் அமைதியா இருக்கேன்...எல்ல்ஆம அந்த மருதமலை முருகன் தான் இவளுக்கு நல்ல வழி காட்டணும் 

மும்மரமாக பேசிக்கொண்டு இருந்தனர் . அவர்களின் வார்த்தைகளை கேட்டவள் மறுபுறமாக திரும்பி நின்றபடி தனது துப்பட்டாவில் கலங்கிய கண்களை துடைத்து கொண்டவளையும் மீறித்தான் தாத்தாவின் பாசமும் நேசமும்..

தாத்தா உயிரோடு இருந்தஆட்அவர்களை பார்த்து கண்களை சிமிட்டும் புன்னகையை செய்யும் குட்டி குழந்தை...எங்கோ த

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...