ஆசை
தலைவன்
அன்பான
அமைதியான
ஆரவாரமற்ற
சந்தோஷமான
வாழ்க்கையில்
சலிப்பு ஏற்பட்டு
ஆர்பாட்டமான
கூச்சல் குழப்பம்
நிறைந்த பாதையில்
நடைபயில முயலும்
எனது அன்பு நண்பன்...
யார் சொன்னாலும்
கேட்க போவதில்லை..
ஏனென்றால் ஓ
ஆர்பாட்டங்களை
உண்மையென்று நம்பி
பாதி தூரம் சென்ற
பின்னரே புலப்பட்டும்
ஒன்றை நாற்காலியை
நோக்கி லட்சம் பேர்
பயணம் - உணர்ச்சியின்
வேகத்தை ஆதாயமாக்கும்
வியாபார உலகம்...
உணர்ந்தவன் மட்டுமே
தப்பி பிழைக்கிறான்
தலைவன்.
கதை களம்
நாளை என்ன
நடக்கும் - எப்படி
நடக்கும் எதுவுமே
தெரியாத எதிர்காலத்தை
பற்றி அடிக்கடி
கற்பனை செய்வதே
மனித மனதிற்கு
கிடைக்கும் மிகப்பெரிய
கற்பனையின்
கதை களம்
சிஸ்டம் சரியில்லை
ரஜினி என்பவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்னும் கேள்வியை மீண்டும் மீண்டும் எழுதுவதால் பத்திரிக்கைகள் விற்பனை சற்று அதிகமாகவே நடைபெறலாம். ஆனால் ஓர் முறை சிந்தியுங்கள், எதற்காக தேவையற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன.
ரஜினியின் படங்களை இன்றும் ஆவலுடன் பார்க்கும் ஓர் சராசரி மனிதரில் நானும் ஒருவன்.
எந்தவொரு விஷயத்தையும் சம்பந்தப்பட்ட நபர்கள், சொல்லாமல் உடன் இருப்பவரின் யூகங்களிலும், ஊடகங்களின் அடிப்படையில் பேசுவது நேரத்தை வீணாக்கும் செயல்.
சிஸ்டம் சரியில்லை என்னும் வசனம், பல வகை மீம்ஸ்களில் வந்து விட்டது. இந்த கட்டுரையை முழுவதும் படித்து விட்டு ஓர் முடிவுக்கு வாருங்கள்..
பிறகு சொல்லுங்கள், எந்த சிஸ்டம் சரியில்லை என்று.
நேர்மையான வழியில் இன்றும் வாழும் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். தான் வாங்கும் சம்பளத்தை தவிர லஞ்சம் பெறாத பல நல்ல அரசு அதிகாரிகள் வேலை பார்க்கிறார்கள்...
அரசு மருத்துவமனைக்கு சென்ற போது நான் கண்ட சில காட்சிகள், அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் லஞ்சம் வாங்குவார்கள் என்ற சிந்தனையை அப்படியே மாற்றித்தான் விட்டது.
மகப்பேறு பகுதியில் ஓர் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவருக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், அவர் சில ரூபாய்க்கு இனிப்பு ஸ்வீட்கள் வாங்கி, தன் மனதின் சந்தோஷத்தை அங்கே எல்லோருக்கும் பரப்பிக் கொண்டிருந்தார்....
அப்போது அவரின் அம்மா சொன்னார். டேய் ரமேசு அந்த நர்ஸ்க்கு 500 ரூபாய் கொடுடா என்றார்.
ரமேஷ் என்பவரோ செய்வதறியாது தவித்தார்.. அந்த பெண்மணியின் அருகே சென்று, எங்கிட்ட இருந்த எல்லா காசுக்கும் ஸ்வீட் வாங்கியாச்சு. மத்த செலவுக்கு அக்கா காசு கொண்டு வர்றதா சொல்லி இருக்கா என தன் பொருளாதாரத்தை சொன்னார்.
அப்போது அங்கே வந்த நர்சிடம், அம்மா தப்பா நினைச்சுக்காதே. என் பையனுக்கு வரவு செலவு சரியா பண்ண தெரியாது. நாளைக்கு நாங்க வீட்டுக்கு போகும் போது கட்டாயமா, உனக்கு பணம் கொடுத்து விட்டு தான் போவோம் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள் அந்த பாட்டி.
அதற்கு அந்த நர்சு சொன்ன பதிலில் தான் எவ்வளவு அன்பும் பொறுப்பும் அக்கறையுடம் பொதிந்து கிடந்தது..
பாட்டி, இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இங்கே பிரசவம் பார்ப்பது இலவசம். நீங்க பேசினது எல்லாம் கேட்டுகிட்டு தான் இருந்தேன். நான் பார்கிற வேலைக்கு சம்பளம் கிடைக்குது.. என் வீட்டுக்காரர் ஆட்டோ தான் ஓட்டுறாரு... அவர் என்கிட்ட தினமும் சொல்லுறதே யார்கிட்டேயும் லஞ்சம் வாங்காதே அதேசமயம் அவங்க பாசமா கொடுக்கிற பணத்தை உதாசீனம் பண்ணாதே...
ஏன்னா, நீ பிரசவ வார்டில் இருக்கே. பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி.
எப்பவுமே குழந்தை பிறந்தவுடன் பெற்றவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி வார்த்தையில் சொல்ல முடியாது. தன்னை அப்பா அப்படின்னு ஓர் உயிர் கூப்பிட போகுதுன்னு சந்தோஷத்தில் பார்க்கிற, எல்லாருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறே இல்லை.அது தான் மனித இயல்பு.
சட்டத்தின் பார்வையில் இது வேறே, ஆனா மனித உணர்வுகளை மதிக்கிறதும் முக்கியம். என்று சொல்லி விட்டு.
சரி உங்க கையில் எவ்வளவு பணமிருக்கு என்றார் அவர்...
அந்த பாட்டியோ தன் கைகளை நீட்டினாள், அதில் சில பத்து ரூபாய் நோட்டுகளும் சில்லறை காசும் இருந்தது.
புதிய ஓரு ரூபாய் நாணயத்தை எடுத்து விட்டு அவர் சிரித்தபடி சொன்னார். உங்க அன்புக்கு இதுவே போதும்...
என்ன ரமேஷ் எனக்கு சாக்லேட் கிடையாதா? உரிமையோடு கேட்டார்.
அவனோ தட்டுத்தடுமாறி சட்டை பையில் இருந்து எடுத்து கொடுத்தான்.
எனக்கு நாளைக்கு பெரிய கேக் ஃபாக்ஸ் வாங்கி தரணும் சரியா என்றாள்...
சரி சிஸ்டர், நாளைக்கு கண்டிப்பா வாங்கியாறேன்...
எல்லோருக்கும் தெரியும், அவர் சும்மா பேச்சுக்கு தான் கேட்கிறார் என்று.... பத்து நாள் கழிச்சு வேலைக்கு போனா தான் அவனுக்கு காசு கிடைக்கும்.
இங்கே உலகில் யாரும் யாருக்கும் இனாமாக காசு கொடுப்பதே இல்லை.
கொடுக்கும் பணத்திற்கு பதிலாக சக்கையாக பிழிந்து வேலை வாங்கப்படுகிறது.
அந்த புதிய ஓரு ரூபாய் நாணயத்தை வீட்டிற்கு போகும் போது ஆஸ்பத்திரி முன்னால் இருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் போட்டார்....
ஏன்ம்மா, உன் கைராசி எல்லாமே சுகப்பிரசவம் தானே என்று கேட்ட கோவில் பூசாரியிடம்.
ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள்...
இவ்வளவு நல்ல மனசை கொடுத்த சாமி, உனக்கு இன்னும்... அவர் பேச்சை சட்டென்று இடைமறித்து சொன்னாள்.
பூசாரி அய்யா, சாமிக்கு எல்லாம் தெரியும்.என்றவளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது..
அந்த நர்சுக்கு பணம் கொடுக்ககூடாது என்றோ, நான் எதுக்கு பணம் கொடுக்கணும். இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி தானே என்றோ யாருமே பேசவில்லை.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்.ஆனால் ஓட்டுகளை வாங்கும் வித்தை தெரிந்தவரே அரசியலில் வெற்றி பெறுகிறார்.
அரசியல் ஆசையில் தன் பல மதிப்பு சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம்.
இங்கே ஜனநாயக அரசியலில் அனைவருக்கும் உரிமை உள்ளது.ஆனால் அரசியலில் அதிர்ஷ்டமும் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.
இந்திய ஜனநாயக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும்.
நேர்மையாக பணிபுரியும் அரசு ஊழியர்களும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். சிஸ்டம் சரியில்லை என்று பொத்தாம் போதுவாக சொல்லாமல், எந்த துறையில் எந்த இடத்தில் என்று தைரியமாக யார் தவறு செய்தார்கள் என்று பெயரிட்டு சொல்லுங்கள்.
இந்து மதம்
மத வழிபாட்டில் சில வார்த்தைகள்..
.
.
இந்து மதத்தில் சிவன் மற்றும் அம்பாள், அல்லது பெருமாளுடன் தாயார், அல்லது குலதெய்வமாக வணங்கும் சாஸ்தா அல்லது மனதுக்கு பிடித்த தெய்வத்தை இஷ்டதெய்வமாக வணங்கும் மரபு இந்து மதத்தில் உண்டு.
இவற்றில் ஏதாவது ஒன்றை வணங்கினாலும் , எல்லா தெய்வங்களை வணங்கினாலும் மனிதனின் மனோபலம் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை..
வாழ்வின் கடினமான தருணங்கள் கடக்க பல குருமார்களின் வழியில் அவர்கள் வகுத்து வைத்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் மிகவும் வலிமையானது.
ஆசை
ஆசை....
.
.
மனம் என்னும் குரங்கு தரும் ஆசை...
ஊரை கட்டி ஆண்டுவிட ஆசை..
பல கோடிகள் சேர்ந்து வைக்க ஆசை..
விலையுயர்ந்த காருக்கு ஆசை...
அதிகாரமிக்க பதவிக்கு ஆசை....
பார்ப்பதை எல்லாம் பருகிவிட ஆசை...
மிகப்பெரிய பங்களாவிற்கு ஆசை..
ஆயிரங்களில் தொடங்கிய ஆசை...
விருட்சமாக கோடிகளில் சென்று
நிறுத்தி விட்டது.... அத்தனையும்
கிடைத்த பிறகு இதில் எதிலும்
நிம்மதி இல்லையென்று ....
இறைவனின் காலடியில்
பணிந்து விட ஆசை.... அந்த
கோவில் பூசாரியோ எதுவுமேயின்றி
ஏழைமையில் நிம்மதியாய்
வாழ்வது கண்டு அவரை
போலவே மாறிவிட ஆசை... ஆனால்
மனகுரங்கு ஆரவாரம் செய்து
அடங்கி விட மறுக்கிறது...
ஆசைகள் ஆசையாய்
நிறைவேறுவது எப்போது...
யாரை நம்புவது புரிவதேயிலையே..
யாரை நம்புவது ..?..?..?
வாழ்வில் எல்லோருக்கும் ஓர் நாள் மனதில் இந்த கேள்விக்கு விடை தேடும் முயற்சி நடக்கிறது...
பலரை நம்பி நடையாய் நடந்து இப்படி ஏமாற்றி விட்டார்களே என்ற கவலை வருவது இயற்கை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், யார் உதவி செய்யவே மாட்டார்கள் என்று நினைத்தோமோ அந்த மனிதன் தான், ஆபத்தானது காலத்தில் உதவி செய்கிறான்.
அப்போது அவன் சொல்லும் வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.
இனியாவது எல்லாரையும் நம்பாதே..
எத்தனை வலிகளை உள்வாங்கிய வார்த்தை..
அப்படியெனில் இவனும் கூட நம்மை போலவே பாதிக்கப்பட்டவனா...????
ஏன் யாரிடமும் பேசாமல் இருந்தான், என்று நான் யோசித்து பார்க்க நேரமிருக்கவில்லையே....
இவனை பற்றி அனைவரும் தவறாக தானே பேசினார்கள்.
சரியான சிடுமூஞ்சி,
அன்பா பேச தெரியாதவன்...
கேட்ட கேள்விக்கு எதிரும் புதிருமா பேசுவான்...
சொந்தகாரங்களை மதிக்க தெரியாதவன்.
ஆக யாருமே சொல்லாத ஓர் விஷயத்தை, அவன் உணர்த்தி விட்டான்.
கேட்காமல் ஆபத்தான காலத்தில் வலிய சென்று உதவும் ஓர் நல்ல மனிதன்.
"நல்ல மனிதர்கள் நீ விரும்புவது போல் இருப்பதில்லை.நீ விரும்புவது போல் இருப்பவன் அரசியல்வாதி"... ஓஷோவின் வரிகளில் தான் எத்தனை உண்மையை உணர்ந்த வலிகள்.
வலிகள் இல்லாமல் யாருமே இங்கு வாழ்க்கை கடந்து வரவில்லை தான் போல.
உலகில் உயர்ந்த நிலையை அடைந்தவராக சொல்லப்படும், காட்டப்படும் மனிதர்கள் அனைவரும் இந்த நிலையை கடந்து தான் சென்றார்கள் போலும்.
வாழ்க்கை சொல்லித்தரும் பாடங்கள் தான் எத்தனை மதிப்பு உடையது.
மாநில அளவில் பள்ளியில் முதலிடம் பெற்ற போது, கிடைத்த வெளிச்சத்தை விட அனுபவம் தரும் பாடம் பிரமிக்க வைத்தது..
கடவுளை யார் கண்டார்களா தெரியவில்லை, ஆனால் உடனிருக்கும் மனிதனை புரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.
பல நாட்களுக்கு பிறகே இயல்பு வாழ்க்கை வாழமுடிகிறது.
ஏனெனில் வாழ்க்கை தரும் பாடம் அப்படி
இயல்பாய் சிரிப்பவரை கூட நம்ப முடியாத மனதின் வலி, கடந்து இன்றோ மனதில் வலிமை பிறந்தது.
வாழ்க்கை கற்றுக் கொடுத்த விஷயமே, நீங்கள் நீங்களாகவே இருங்கள்..
உலகில் பசுத்தோல் போர்த்திய புலியின் குணத்திலும் மனிதன் உண்டு.
புலியை போல குணம் காட்டும் பசுவின் குணத்திலும் மனிதன் உண்டு.
இங்கே யார் உண்மை ?
யார் முகமூடி அணிந்தவர் என்பது சந்தர்ப்பங்களில் தான் வெளிப்படுகிறது..
யார் மீதும் வைக்கும் அதீதமான எதிர்பார்ப்பே கவலைகளை தருகிறது.
யாரிடமும் எதுவுமே எதிர்பாராமல் வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை சுகமாகும்
அடுத்த முதல்வர் யார்..
அடுத்த முதலவர் யார்???
ஓவ்வொரு காலகட்டத்திலும் இந்த கேள்வி விவாதிக்கப்படுகிறது
இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் இன்று வரை இந்த சச்சரவுகள் எல்லா கட்சியிலும் இருக்கிறது.அடுத்தது யார் என்று ஒருவர் இருக்கும் போதே தொடங்குகிறது.
அந்த நாற்காலியில் அமர நினைத்தது, எத்தனை எத்தனை பேருக்கு ஆசை....
முதல்வர் என்பது நாட்டிற்கு மாத்திரம் இல்லை, எல்லா வீடுகளிலும் இந்த சண்டை நடைபெற்றிருக்கிறது.
ஓவ்வொரு வீட்டிலும் கூட நாற்காலி சண்டைகள் நடைபெறுகிறது.
ஏனோ அதன் சத்தம் தான் யாருக்கும் கேட்காதது மாதிரி கடந்து செல்கிறார்கள், அருமை உறவினர்கள்.
சொத்தை பிரிப்பதில் தொடங்கி, அலுவலகத்தில் தன் இருப்பை நிலை நிறுத்துவது வரை சண்டைகள் தொடர்கிறது.
ஆசையே இல்லாத மனிதன் யார்????.
அப்படி யாரையாவது படைத்தது உண்டா.
ஆசையில் பிறந்த வாழ்க்கையில் மக்கள் பதவிக்கு ஆசைபடுவதில் தவறேதுமில்லையே.
குழந்தையாக பிறக்கும் போதே அவனுடன் ஆசையும் சேர்த்தே பிறவி எடுத்து விடுகிறது. பம்பரம் தொடங்கி சைக்கிள் தொட்டு இன்னும் பல வகை... பள்ளி பருவத்தில் ஆரம்பித்த ஆசை விதைகள், பலவற்றை ஆசிரியரே பிடுங்கி போட்டார்....
இந்த வயசுல உனக்கு கதை கேட்க ஆசையா, காதை திருகி தடை போட்டார்.
ஆனால் அவர் பக்கத்து க்ளாஸ் டீச்சரிடம் கேட்டது பேசியது எந்த வகையில் சேரும் என்று புரியாத வயது அன்று.
ஏனோ சில ஆசைகள் வருவதேயில்லை.
பல ஆயிரத்தில் சம்பளம் வேண்டாம், அந்த சம்பளத்திற்கு உள்ளே ஒளித்து வைத்த பதட்டமும், தன் மானத்தை உரசும் விளையாட்டும் வேண்டாம்.
அரசியலில் மட்டுமா பதவிச் சண்டை நிகழ்கிறது.
சின்னஞ்சிறு ச அலுவலகத்தில் ஓர் சிறு பதவிக்கு வந்தவருக்கு கூட, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
ஆசை யாரை விட்டது, சுவாசிக்க வேண்டும் என்று.
.
.
.
ஆசைப்படுவது தவறே இல்லை.
மனிதனுக்கு மனிதன் ஆசையின் அளவுகள் மாறுபடும்.
முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால் மட்டும் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பது போன்ற பிம்பம் எதற்காக ஏற்படுத்தப்படுகிறது...
சுனாமியால்..
கஜா புயலால்..
நோய் வாய்பட்ட...
எத்தனையோ பேருக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்த மக்கள் பலர்...
300 நூறு சம்பாதிக்கும் ஏழை மக்கள் கூட தன் சேமிப்பின் சிறு பகுதியை கொடுத்து உதவியது பற்றியும் பேசுங்கள்..
பக்கத்து வீட்டு மனிதருக்கு உடல்நலம் சரியில்லை என்றால், வேதனைபடும் மனிதர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள்...
...
பதவி என்னும் முள்கிரீடம் தரித்து, சுதந்திர வாழ்வை அடகு வைத்து, வேளைக்கு குறித்த நேரத்தில் சாப்பிட கூட முடியாத பரபரப்பு வாழ்வை தவிர்த்து.
நிம்மதியாய் நமக்கு பிடித்த படி, நாம் நாமாக வாழும் நிம்மதி வாழ்வு.
பணத்திற்கு அதிகாரமும் ஆணவமும் தான் கட்டுப்படும்..
அன்பின் வழியில் யார் மீதும் யாருக்கும் கட்டு போட வேண்டிய அவசியமில்லை...
சாப்பிட்டு முடித்து உடனே, குழந்தை தெருவில் சென்று தான் விளையாடும்..
ஏனென்றால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட அடக்கு முறை பிடிப்பதில்லை.
ஆனால் அரசியலில் நீங்கள் சுதந்திரமா செயல்படவே முடியாது.
பல கோடிகள் பல தலைமுறை சேர்த்து வைக்கலாம், ஆனால் அடுத்த வேளைக்கு உணவை சேர்த்து சாப்பிட முடியாது.
இயற்கை மனிதனை இப்படித்தான் படைத்து இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் எதற்கும் ஆசைப்படலாம் தவறே இல்லை.
ஆனால் ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்பதை புரிந்து கொண்டால் தலைவர் பதவிக்கு சச்சரவுகளும் குறையும்
சுதந்திரமாக அன்பாக வாழ்வதே தவம்..
ஓவ்வொரு நொடியும், மூச்சு விடுங்கள். சுதந்திரமாக படபடப்பின்றி, யாருக்கும் பயப்படாமல், பதவி சுகங்களில் மயங்கி, உங்களின் தனித்துவம் இழந்து விடாதீர்கள். தொண்டராக இருப்பவருக்கு இருக்கும் சுதந்திரம் தலைவருக்கு கிடையாது என்பதை தலைவர் பதவிக்கு செல்லும் வரையில் பலரும் அறிவதில்லை
நன்றாக யோசித்து பாருங்கள், சுதந்திர உங்கள் மூச்சாக மாறட்டும்..தொண்டனா தலைவனா..முடிவு உங்களின் கைகளில்
நீங்கள் அடுத்த முதல்வரா.. அல்லது சிறந்த தொண்டரா....
குப்பைக்காரி
பசிக்குது
என்ற வார்த்தைக்கு
மதிய வேளையில்
பதில் சொல்ல முடியாமல்
தவித்த தாய்மையின் வேதனை
தன் பெண்மையை
விற்க விரும்பாத
தன்மானகாரி...
சாலையின் ஓரத்தில்
கிடக்கும் பிளாஸ்டிக்
பாட்டில்களை பொறுப்புடன்
எடுத்து முதுகில்
சுமக்கிறாள்...
பாரதியின் சிலையருகே
அவர்களின் வாழ்வு...
கணவனின் வாழ்வோ
மாதுவின் அணைப்பை தேடி
மதுகோப்பையுடன் அலைந்த
சாலையில் முடிந்தது..
ஏழையாக இருந்ததால்
ஜாதியும் மதமும் கூட ஏனோ
உதவிக்கு வரவில்லை...
கூடாரத்தின் சற்று தொலைவில்
மணிக்கு ஓர் முறை
நம்பிக்கை பரப்பும் ஆலயத்தின்
தயவில் பகட்டான காரில்
வலம் மதகுரு ஏனோ...
இவர்களுக்கு மட்டும்...
உதவி செய்யவில்லையா..... அல்லது
உதவுவதற்கு மனமில்லையா...
பணத்தை கொடுத்தவருக்கு
கிடைக்கும் நம்பிக்கை
வாக்கும்... ஆசீர்வாதமும்
இவர்களுக்கு கிடையாது போல...
இறைவனுக்கு மாத்திரமே
உண்மைகள் தெரியும்...
பத்து ரூபாய் ரொட்டியை
வாங்கி மகனுக்கும் மகளுக்கும்
தனது அன்றைய தினத்தின்
சொத்தை பாசத்தின் மிகுதியில்
பிரித்து கொடுத்தாள்...
அவளின் கிழிந்த சேலையில்
திமிறிய இளமையை
பருகிட துடிக்கும் கழுகுகள்
முன்னால் கற்புடன் வாழவே
குப்பைகள் பொறுக்கும்
ரோஷமான கோபக்காரி அந்த
குப்பைக்காரி....
நவராத்திரி
கருணை வடிவானவளே ?
கருணையே உருவானவளே ?
உணர்ந்த பின்னரே பித்தனை
போலவே சித்தமுடன்
சத்தமாய் புலம்புகிறேன் தாயே
வர வேண்டும் தேவியே
வர வேண்டும் தேவியே
அமைதியும் தூய்மையும்
எனதுள்ளத்தில் வர வேண்டும்
வர வேண்டும் தேவி...
உள்ளத்தில் இருக்கும்
கசடுகளை நீக்கிடவே
வர வேண்டும் வர வேண்டும்
தேவி நீ வர வேண்டும்
செயல்களில்
ஆணவம் நீக்கி
அன்புடன் வாழ வழிசெய்ய
என் இதயத்தில் நீயும் வாழ
வரம் கொடு தாயே..
உன்னையன்றி
உலகில் நிதர்சனம் ஏது...
வர வேண்டும் வரவேண்டும்
நவராத்திரி தாயே...
இல்லத்தின் நடுவே
வீற்றிருக்க வாயேன்
வரமேதும் வேண்டாம்..
வரமேதும் வேண்டாம்
வரத்தின் தந்து நீ என்னை
புரம் தள்ள வேண்டாம்...
மாயையில் வீழ்ந்து
சகதியில் புரள
மனமில்லை தாயே
என் இதயத்தில் உன்
வரவை தந்து விடு தாயே
உன்னையன்றி
உலகில் உகப்பேதும்
உண்டோ...
சாரதி தொடங்கி
பாரதி வழியில்
தொழுகின்றேன் தாயே..
மாயா விளையாட்டின்.
வேதனை வேண்டாம்...
மனிதரில் மானுடம்
காணும் வல்லமை வந்தவளே
வர வேண்டும் வர வேண்டும்
நவராத்திரி தாயே...
முதியோர் இல்லம்..
.
.
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றனர்.உங்களின் சிந்தனையை மிகவும் மதிக்கிறேன்.ஆனால் இந்த நாடு வல்லரசாக மாற நீங்கள் ஏதாவது செய்தது உண்டா?..
உங்களையும் உங்களுக்கு மிகவும் பிடித்தவரையும் அழைத்து சுற்றுலா செல்லும் மனிதர்களே..
நம்புங்கள் இது தான் நிதர்சனமான உண்மை. இன்னும் பல நகரங்களிலும் கிராமங்களிலும் தனது சொந்த பிள்ளைகளால் அனாதையாக தெருவில் விடப்படும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
வரதட்சணை கேட்டு நடந்த கொடுமை மற்றும் பெண்ணுரிமை பேசும் பெரிய மனிதர்களே. சற்றே நிதானமாக சிந்தனை செய்து பாருங்கள். தயவுசெய்து சொத்துக்களை பிள்ளைகளுக்கு பெயர் மாற்றி கொடுத்த பிறகு, அவர்களை வீட்டில் அனாதையாகவும் சம்பளம் இல்லா வேலைக்காரர் போலவும் நடத்தும் நிலைமை பற்றியும் பேசுங்கள்.
.
.
பெண்ணுரிமை, பலாத்காரம் பெண் சமத்துவம் என்று மேடையில் முழக்கம் இட்டது மட்டுமே போதாது.
வயதான காலத்தில் தன் பல வருட உழைப்பை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தன்மானம் இழந்து வாழும் இவர்களின் கஷ்டத்தையும் உணர்ந்து பேசுங்கள் எழுதுங்கள்..
.
நான் சில நாட்கள் மிகவும் புனிதமாக கருதப்படும் கோவில்களில் வேலை பார்த்ததுண்டு, அந்த சமயத்தில் அங்கே வரும் முதியவர்கள் சொல்லும் கதைகள் இறைவனின் காதுகளில் கேட்டதா தெரியவில்லை. ஆனால் அதை கேட்டு விட்டு அழுத நாட்கள் உண்டு.
.
அவர்களில் சிலர் மிகப்பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், இசை மேதைகள் இன்னும் பல அரசு பதவியில் உயர்ந்த நிலையில் பணிபுரிந்த மனிதரும் ஏழை விவசாயிகளும் உண்டு.
தன் குழந்தையை அவர்கள் வளர்த்த விதம் சொல்லும் அழகில், இவ்வளவு செல்லமாக தன் பொருளாதார கஷ்டத்தின் நிழலை கூட குழந்தைக்கு காட்டாமல் வளர்க்க முடியுமா, என்று அதிசயித்த நிமிடங்கள் உண்டு.
.
எனக்கு ஓரே மகன் அவனை நான் கொஞ்சம் நெஞ்சம் இல்லை, ரொம்பவே செல்லமா வளர்த்து விட்டேன். என் மனைவி கூட சொல்லுவா, தம்பி.
இது எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ ? என கோபமாக என்னை திட்டியதுண்டு.
இன்று அது என்னை இப்படி கோவில் கோவிலாக மனநிம்மதி தேடி, மேற்கொண்டு பேச இயலாமல் அவரின் நாக்கு மிகவும் குழறியது.
.
நீங்க இப்போ பேசாம இருக்க மாட்டீங்க, இந்த பையன் யாருன்னே தெரியவில்லை.
இவன்கிட்ட எல்லாம் நம்ம கதையை சொல்லிக்கிட்டு. வர வர உங்களுக்கு விவஸ்தையே இல்லை.
ஏதோ கோவில் வேலை பார்ப்பவரிடம் எல்லாம் நம்ம கஷ்டத்தை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். அந்த தாய்மையின் பக்குவம், தன் மகன் தன்னை கஷ்டப்படுத்திவிட்ட விஷயங்களை கூட அடுத்தவருக்கு தெரியாமல் வாழ முயலும் வாழ்வு தான் எத்தனை ஆச்சரியம்.
.
சில சுயநலத்திற்கார மனிதர்கள்.
தன் மகளை (முறை பெண்ணை) அவன் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தால் தன் அக்கா மகன் என்று கூட பாராமல்.
தனது உடன்பிறந்தவளிடன் மிகவும் பாசமாக இருப்பது போல் நடித்து, தாய் தந்தையை தெய்வம் போன்று பார்த்த மகனின் மனதை , தனது அரசியல் காய் நகர்த்தல் மூலம் அவனின் வாழ்வை நோகடித்து விடுகின்றனர்.
.
இரண்டு பக்கமும் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒற்றுமையாக இருந்த குடும்பங்களை பிரித்து விடுகின்றனர்.
.
.
"செய்த வினை செய்தாரை சாரும்",
தன்னை வினை தன்னை சூடும் என்பது பழமொழி.
.
யாருக்கும் தீமை செய்யாத அந்த அப்பாவிகளை துன்புறுத்தும், அவர்களை மறந்து மன்னித்து விட்டு,
தன் சொந்தங்களை யாரும் காட்டிக் கொடுக்காமல், வீட்டிற்கு வெளியே நிம்மதி தேடும் அந்த தாய் தந்தை.
ஏனோ தனக்கும் மகன் மகள் இருப்பதை மறந்து விடுகிறார்கள்.
மனம் மிகவும் வலிக்கத்தான் செய்கின்றது.
பாரத பண்பாடு, கலாசாரம் என மார் தட்டுகிறோம்.
எத்தனையோ அவசர சட்டத்தை இயற்றும் அரசியல்வாதிகளே, ஓரே ஓர் சட்டத்தை இயற்றுங்கள்.
இந்தியாவில் இனி முதியோர் இல்லங்கள் கூடாது என்று, ஏனென்றால் இந்தியா என்பது கலாச்சாரத்தின் அடையாளம்.
வயதான காலத்தில் தன் ஆசை மகனையும் மகளையும் நினைத்து மனதில் அழுது விட்டு, வெளியே சிரிக்கும்.
ஏழை , பணக்கார மற்றும் நடுத்தர வீடுகள் அனைத்திலும் அரங்கேறுகிறது.
இந்த கொடுமைகள் இனியாவது மாற வேண்டும். அவர்கள் படும் வேதனைகளை வயதான போது உணரும் நிலை வேண்டாம்.
பல வீடுகளிலும், இந்த கதைகள் இருக்கின்றன. ஆனால் காட்சிகள் தான் வேறு.
.
வாருங்கள் அனைவரும் இணைந்து உருவாக்குவோம், பாசமான நேசமான உறவுகளை, சாதியும் மதமும் பேசி பிரிவினை வேண்டாம்.
அன்பை விதைப்போம்..
உருவாகட்டும் புதிய பாரதம். "பாசமான பாரதம், ஓளிரட்டும்".
காதல் கவிதை
பெண்ணின்
கண் நோக்கி
நேராக சொல்லும்
காதலுக்கு என்றுமே
வலிமை அதிகம்..
காதல் என்பது உணர்வு..
அதனை அடுத்துவரும்
சரியாக புரிந்து கொண்டால்
தான் காதல் இனிமையாகும்...
காதலெனும் அன்பு
புரிந்து கொண்டவர்கள்
மிகவும் அதிர்ஷ்டசாலி
கவலை
உனக்காக உண்மையாக கவலைபடும் நண்பரிடம் மட்டுமே உன் கவலைகளை கூற, அவர்களால் அறிவுரை கூற முடியாவிட்டாலும், உதவ முடியாவிட்டாலும் கூட உனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள்.. மற்றவர்கள் உன் முகத்திற்கு நேரே அக்கறையாக பேசி விட்டு, நீ இல்லாத சமயத்தில் உன் வாழ்க்கையில் நீ படும் கஷ்டங்களை சொல்லி சிரிக்கவே செய்வார்கள்
Farmers
I Love You
Words are silver, thoughts are gold, imaginations are diamond.
Diamonds are more valuable, diamonds has it's different dimensions with greater values.
It requires more hard work and patience to taken out from earth.
Love is also the same at sometime. Understanding between two people cannot be taken at few seconds.
Everyone is more willing to hear the treasury word, "I Love You" from their loved ones.
Because love generate creativity, trust bounding among people's.
Pure hearts are brought together in the name of love, as per God's wish.
Entire world like this mesmerizingword a lot. Everyone like to share these diamonds with their liked and loved ones and also with their kids.
When words are louder, these words were used to break the iceberg of ego between two.
Love is not a sin.
Love is a feel, it can't be understood by everybody at the same level of commitment.
There are somany untold love stories exist,f different parts of the entire world.
When one express his love, it's not just a word.
Because he/ she may have been had a great level of expectations from other person.
Somewhere in the world, love continue in some other ways, between human and nature.
Love is also type of communication language between great higher souls, to create a lovable family in this world.
Speak the language of love with great enthusiasm. Because love is also a creature of nature.
நான் யார்
ஆயிரம் பேரிடம் திரைமறைவில்
விசாரித்து அறிந்து கொள்ளும்
அளவிற்கு நான் ஒன்றும் பெரியவன் இல்லை..
என்னை பற்றி என்னிடமே கேட்டு இருக்கலாம்.....
என்னை பற்றி அறிந்து கொண்ட நீங்கள்..
உங்களுக்கு ஏது தேவை என்பதை பற்றி
சிறு நிமிடங்கள் சிந்தித்து இருந்தால் கூட போதும்..
விதியை பழி சொல்லும் நிலை வராது...
பல வருடங்களுக்கு முன்பே நல்ல நிலைக்கு
முன்னேறி இருக்கலாம்
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...