யாரை நம்புவது புரிவதேயிலையே..

 யாரை நம்புவது ..?..?..?

வாழ்வில் எல்லோருக்கும் ஓர் நாள் மனதில் இந்த கேள்விக்கு விடை தேடும் முயற்சி நடக்கிறது...

பலரை நம்பி நடையாய் நடந்து இப்படி ஏமாற்றி விட்டார்களே என்ற கவலை வருவது இயற்கை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், யார் உதவி செய்யவே மாட்டார்கள் என்று நினைத்தோமோ அந்த மனிதன் தான், ஆபத்தானது காலத்தில் உதவி செய்கிறான்.

அப்போது அவன் சொல்லும் வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

இனியாவது எல்லாரையும் நம்பாதே..

எத்தனை வலிகளை உள்வாங்கிய வார்த்தை..

அப்படியெனில் இவனும் கூட நம்மை போலவே பாதிக்கப்பட்டவனா...????

ஏன் யாரிடமும் பேசாமல் இருந்தான், என்று நான் யோசித்து பார்க்க நேரமிருக்கவில்லையே....

இவனை பற்றி அனைவரும் தவறாக தானே பேசினார்கள்.

சரியான சிடுமூஞ்சி,

அன்பா பேச தெரியாதவன்...

கேட்ட கேள்விக்கு எதிரும் புதிருமா பேசுவான்...

சொந்தகாரங்களை மதிக்க தெரியாதவன்.

ஆக யாருமே சொல்லாத ஓர் விஷயத்தை, அவன் உணர்த்தி விட்டான்.

கேட்காமல் ஆபத்தான காலத்தில் வலிய சென்று உதவும் ஓர் நல்ல மனிதன்.

"நல்ல மனிதர்கள் நீ விரும்புவது போல் இருப்பதில்லை.நீ விரும்புவது போல் இருப்பவன் அரசியல்வாதி"... ஓஷோவின் வரிகளில் தான் எத்தனை உண்மையை உணர்ந்த வலிகள்.

வலிகள் இல்லாமல் யாருமே இங்கு வாழ்க்கை கடந்து வரவில்லை தான் போல.

உலகில் உயர்ந்த நிலையை அடைந்தவராக சொல்லப்படும், காட்டப்படும் மனிதர்கள் அனைவரும் இந்த நிலையை கடந்து தான் சென்றார்கள் போலும்.

வாழ்க்கை சொல்லித்தரும் பாடங்கள் தான் எத்தனை மதிப்பு உடையது.

மாநில அளவில் பள்ளியில் முதலிடம் பெற்ற போது, கிடைத்த வெளிச்சத்தை விட அனுபவம் தரும் பாடம் பிரமிக்க வைத்தது..

கடவுளை யார் கண்டார்களா தெரியவில்லை, ஆனால் உடனிருக்கும் மனிதனை புரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.

பல நாட்களுக்கு பிறகே இயல்பு வாழ்க்கை வாழமுடிகிறது.

ஏனெனில் வாழ்க்கை தரும் பாடம் அப்படி

இயல்பாய் சிரிப்பவரை கூட நம்ப முடியாத மனதின் வலி, கடந்து இன்றோ மனதில் வலிமை பிறந்தது.

வாழ்க்கை கற்றுக் கொடுத்த விஷயமே, நீங்கள் நீங்களாகவே இருங்கள்..

உலகில் பசுத்தோல் போர்த்திய புலியின் குணத்திலும் மனிதன் உண்டு.

புலியை போல குணம் காட்டும்  பசுவின் குணத்திலும் மனிதன் உண்டு.

இங்கே யார் உண்மை ?

யார் முகமூடி அணிந்தவர் என்பது சந்தர்ப்பங்களில் தான் வெளிப்படுகிறது..

யார் மீதும் வைக்கும் அதீதமான எதிர்பார்ப்பே கவலைகளை தருகிறது.

யாரிடமும் எதுவுமே எதிர்பாராமல் வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை சுகமாகும்

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...