கன்னியாகுமரி

 காலை நேரத்தில்

சூரியனின் கற்றைகள்

அந்த ஆரவார அலையின்

அசைவில் பட்டு எதிரொளிப்பு

சிகப்பு நிறத்தில்....

கடலின் ஓர் புறத்தில்

அந்த ஓற்றை விசைபடகில்

எதிர் எதிராக

இரண்டு பேரும்

துடுப்பு போட அசைந்து

செல்லும் சிறுபடகு....

வைத்த கண் மாறாமல்

ரசிக்கும் செல்வமகள்

கடற்கரை அழகுதான்

அமைதியும் தந்துவிட்டது

கன்னியாகுமரி கடற்கரை


குற்றாலம்

 

நேற்றைய பற்றிய

கவலைகளும்‌...

இன்றைய

மனதின் போராட்டமும்

நாளை பற்றிய

பயமும்......

மறைந்து போய்

மனம் சந்தோஷமானது

ஆர்ப்பரித்து வரும்

குற்றாலத்தின்

அருவிகரையில்



பரிமளா கேசவ்

 கதை எழுத்துருவாக்கத்தில் .. மிகவும் அருமையாக கதை படிக்க தவறாதீர்கள்..

கூடிய விரைவில் பதிப்பு...

உண்மையை சொல்லிடுங்க, இல்லாட்டி...அதிகாரமும் ஆணவமும் கலந்த குரலில் எதிரில் நின்று கொண்டிருந்த பரிமளா பயப்படும் படியாக ரவீந்திரன்... 

சார், அந்த பொண்ணு நிச்சயமாக தப்பு பண்ணியிருக்க மாட்டா...பரிமளாவுக்காக இரக்கத்துடன் பேசிய கிரிஜா....

இங்க, பாருங்க கிரிஜா நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. ஆனால் இன்று ராத்திரி எட்டு மணிக்குள் எனக்கு அஞ்சு பவுன் சங்கிலி வரணும் இல்லாட்டி... நான் சொன்ன மாதிரி நடந்துங்க சொல்லுங்க...மத்த விஷயத்தை நான் பாத்துக்கிறேன்...

வெறுப்பாக பேசிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்த ரவீந்திரன்...

என்னப்பா, காலையிலேயே பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்ட போல.... தினமும் யாரையாவது ஓருத்தரை பிடிச்சு அரைமணிநேரம் அட்வைஸ் பண்ணாம உனக்கு தூக்கம் வராதா????

இல்ல முதலாளி, அடுத்த வாரம் பொங்கல் வருது.. இந்த பொம்பள பிள்ளைக்க எல்லாம்...போனஸ் பத்தி நேத்து சாப்பாட்டு நேரத்துல பேசிக்கொண்டு இருந்தார்களாம்.... அப்போ இந்த பரிமளா, எட்டு வருஷமா உழைச்சு எந்த பிரோஜனமும் இல்லை... அப்படின்னு கூட இருக்கிற பொண்ணுகள்கிட்ட சொல்லிட்டு இருந்திருக்கா....

அதுக்கு என்னையா இப்போ, வழக்கமான அவங்க எல்லாம் பேசுற பேச்சுதானே....

ஐயா, இன்னிக்கு சாயங்காலம், அமெரிக்கா படிச்சுட்டு வர்ற சின்னவர் பாராட்டு விழா நடக்க போனதில்லை....

ஆமா, என் பொண்டாட்டி தொந்தரவு தாங்க தான்னய்யா...இந்த ஏற்பாடு எல்லாம்...அதுக்கு வேற தண்ட செலவு இரண்டு லட்சம்... பெரிய கடைக்கு முதலாளியா இருந்து என்ன பிரயோஜனம் வீட்டில் பொண்டாட்டி பிள்ளை மதிக்க மாட்டேங்குது.... விரக்தியாக பேசிய சமுத்திரகனி..

ரவீந்திரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.... இந்த மாதிரி ஆளுங்க இருக்கிற வரை நம்ம மேனேஜர் பதவிக்கு ஆபத்து இல்லை...அட, கலக்குற ரவி, அடுத்தவங்களை சரியா இடை போட்டு அவங்க வீக்னஸ் பார்த்து கேம் விளையாடுறே...நீ பெரிய ஆளுதாண்டா..... மனதிஐஅ தன்னை தானே புகழ்ந்து கொண்டான்...

உங்க அப்பனை விட, நீ பெரிய புத்திசாலி... கடைசி வரை அவர் மனசுலே இருக்கிறதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது...அப்பனுகங பிள்ளை தப்பா பிறந்திருக்கே..... பாட்டி இருளாயி சொன்னது நினைவுக்கு வந்தது...


ஏன்னையா, கல்லாய நிக்குறே.. மேலும் சொல்லு ரவீந்திரனை சுயநினைவுக்கு இழுத்து வந்த முதலாளி சமுத்திர கனி...

இந்த பரிமளா பொண்ணு.. எல்லார் முன்னாடியும் சம்பள உயர்வு பத்தி பேச போறாளாம்...

யோவ், என் மகனே நேத்து தானே வந்திருக்கான்... அவனுக்கு வியாபார நெளிவு சுழிவு தெரியாதுய்யா...

ஆனா, அவர் ரொம்பவே இளகிய மனசுகாரர்... ஏதாவது சம்பளத்தை அதிகமாக கொடுக்கிறதா.. சொல்லிட்டா...

யோவ், எதுக்கு இப்போ என் வயித்துல புளியை கரைக்கிறே... இப்படி எல்லாம் வரும்ணு தெரிஞ்சு தான்..ஏழை வீட்டில் பிள்ளைகளை வேலைக்கு சேர்த்திருக்கேன்....

தந்தையின் இழப்பு

தந்தை இறந்து விட்டார், என்பதை இன்னும் நம்ப முடியாமல் நேரமும் கடந்து கொண்டு தான் இருக்கிறது

இருந்த போதிலும் அவர் ஏற்படுத்திய நிகழ்வுகள் எத்தனை எத்தனையோ...

முதன்முறையாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து சென்ற நாள் தொடங்கி சைக்கிள் ஓட்டுவதற்காக பின்னால் ஓடி வந்து மூச்சிறைக்க நின்றதும், கல்லூரியில் சேரும் போது தன் குழந்தை பெரியவனாக வளர்ந்து விட்டதையும் மறந்து, பச்சிளம் குழந்தைக்கு அறிவுரை சொல்வது போல கல்லூரியின் மரத்தடியில் அமர்ந்து பேசிய கதைகளும்.

வேலைக்கு சேர்ந்து பெற்ற முதல் சம்பளத்தை அவர் கையில் கொடுக்க நினைத்து, அவரிடம் நீட்டிய தருணத்தில் உன் பணத்தை நான் கையால் தொட மாட்டேன்.

உன் உழைப்பில் கிடைத்த பணம், அதை நீ எப்படி வேண்டுமானாலும் செலவழித்து கொள்.ஆனால் உனக்கு ஏதாவது பணம் தேவை என்றால் யாரிடமும் கை நீட்டி கடன் வாங்கி விடாதே, தன் வாழ்நாளின் அனுபவத்தை வார்த்தைகளில் வார்த்தெடுத்த நாள்...

திருமணமான புதிதில் மனைவியின் சொல்லையும் தவிர்க்க முடியாமல், அம்மா, தங்கையின் சந்தோஷத்தையும் நினைத்து தடுமாறி நின்ற போது..

உன் மனைவி சொல்வதில் நியாயம் இருந்தால், அவள் சொற்படி நடப்பதில்லை தவறில்லையே.

மிகவும் யதார்த்தமாக கஷ்டமான தருணத்தை அது அனுபவத்தால் அனுசரித்து போக சொல்லும் அனுபவசாலி.


 *கவலைபடாதே சகோதரா*...

.

நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வாழ்வை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்..

தந்தை இருக்கும் போது அவர் சொல்லிய ஆயிரம் சொற்கள் நினைவில் பசுமரத்தாணி போல் பதிந்து தான் இருக்கும்

தன் வலிகளை மறந்து, அவற்றை புன்னகையில் மறைத்து குடும்பத்தின்  உறுப்பினர்கள் அனைவரையும் சம நோக்குடன் அன்பு செலுத்திய தந்தை என்றுமே போற்றுதலுக்குரியவர்.

எத்தனை வலிகளை சுமந்து வாழ்ந்தார், என்பதை தனது பிள்ளைகளுக்கு தெரியாமல் சிரித்த படியே தேவைகளை நிறைவேற்றும் கடமையே அவரின் வாழ்வு..

இவற்றை எல்லாம் நினைத்து பார்த்தால் பிரமிப்பு ஏற்பட்டுவது இயல்பு..

அவர் மறைந்தாலும் அவர் மாபெரும் பொறுப்பை உங்களில் கைகளில் தந்துவிட்டே சென்றுள்ளார் சகோதரா...

தனது குடும்பத்தலைவன் என்னும் மிகப்பெரிய சுமையை உங்களின் முதுகில் இறங்கி வைத்து விட்டு இளையாறுகிறார்.

தன்னிடம் பழகிய போலிகளை வெறுத்து உண்மைகளை தேடிய பாசத்தில் உழன்ற சாதாரண மனிதனே அன்பான தகப்பன்...

.

.

அவர் மறைந்தாலும் அவரின் ஆன்மா உங்களுக்கு பக்கபலமாக இருந்து உங்களுக்கு உதவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை...

கவலைகளை புறந்தள்ளி விட்டு தைரியமாக வாழ்வை எதிர்நோக்குங்கள்...

.

.

என்னால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது.

ஆனால் உங்களின் நண்பனாக, உங்களை தூரத்தில் இருந்து ரசிக்கும் ஓர் ரசிகனாக   உங்களுக்கு ஆறுதல் சொல்லும் ஓர் அன்பு தம்பிகளில் நானும் ஒருவன்...

என்றும் அன்புடன்

*ராமன் ஷங்கர்*

ஆப்பிள்

 ஆப்பிள் கதை ,:):(';";""-*-"+_-₹-*("(-


தயிர் சோறு...

 டேய் நில்லுடா.... இங்கே இப்படி வாடி செல்லக்குட்டி... ஏன் தங்கம் உனக்கு என்ன கோபம்... மாம்பழகலர் பட்டுச்சேலை வெளிர் பச்சையும் மஞ்சளும் கலந்த ரவிக்கை அதில் தான் பலவகையில் ஜிகினா வேலைப்பாடு... இரண்டு வருஷமாச்சு போன வாரம் தான் உங்க அண்ணன் எடுத்து கொடுத்தாரு என்று கேசவனின் தங்கையிடம் அண்ணன் பற்றி குற்றம் சாட்டிய காயத்ரி...

பக்கத்தில் வேகமாக ஓடி வந்த மகனை பிடித்த இழுத்தாள்...

ஏம்மா... ப்ளீஸ்.. இன்னிக்கு ஓரு நாளாவது என்னையை இடைஞ்சல் பண்ணாம இரு.. அதான் உன் இஷ்டப்பட்ட மாதிரியே கோடாசூட் போட்டுகிட்டேனே.... பாரு எப்படி வேர்வை எரிச்சலா இருக்கு....

அம்மா உனக்கு ஓரு ரகசியம் வைச்சிருக்கேன்...நீ தனியா வந்தா மட்டும் தான் தருவேன்.. தங்கச்சி ரம்யாவுக்கு அது கண்டிப்பா கொடுக்கவே கூடாது...

மஞ்சள் நிறத்தில் இரண்டி உயரத்தில் நின்று கொண்டிருந்த பெரிய மனுஷனின், உதடுகளில் எச்சில் வடிந்தது... அம்மாவின் சேலை முந்தானையை பிடித்து கொண்டு, கணவன் கூட தொடபபயப்படும் அவளின் இடையில் முகத்தை அழுத்தி கேட்டான்... எனக்கு வெட்கமா இருக்கு...

அதுக்கு தானேடா செல்லம், அம்மா உன்னை தனியாக வர சொல்லுறேன்...

திருமண மண்டபத்தில் சில நிமிடங்களில் அனைவரும் அறிய தனது தாய் பாசத்தை அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, சுற்றி இருந்த அனைவரையும் வெட்கத்தில் முகம் சிவக்க வைத்தான்... ராகுல்...

ஏய் சனியனே, நல்லா பாரு.. உன் வயசு பையன் அவங்க அம்மா மேல எவ்வளவு பாசமா இருக்கான்.. நீயும் தான் இருக்கீயே...எப்ப பாரு...ஏதையாவது வாங்கி கொடுக்க சொல்லி உயிரை எடுக்கிறே...

நீ கொஞ்சம் சும்மா இருக்கீயா, நாலு பேர் முன்னாடி என் இமேஜ் கெடுக்கிறதே உன் வேலயா போச்சு.... உன் ஏச்சு பேச்சுக்கு எல்லாம் நான் அப்பா மாதிரி தலையாட்டுவேன்னு நினைக்காதே...ஏதோ கூட்டமாக இருக்கேன் பார்த்தா ...ரொம்பதான் திமிரா பேசுறே....கெளசல்யா தன் மகனின் பதிலால் நிலை குலைநது போனாள்...

என் வீட்டுக்காரர் தான் எல்லா முடிவு எடுப்பார், என்னை அவர் மதிப்பதே இல்லை என்று சற்று நேரத்திற்கு முன்பு தான் அத்தை மீனாவிடமும் தாத்தா பாட்டியிடம் சொல்லி கண்ணை கசக்கினாள்..

அவர்கள் கூட தன் பங்கிற்கு மாப்பிள்ளை சரவணனுக்கு புத்திமதி சொல்லியது நினைத்து கைக்குட்டையை முகத்தில் வைத்து மறைத்தபடி சிரிப்பை அடக்க முடியாமல், எதிர் வரிசையில் தனது மதினியிடம் கண்களால் சாடை செய்தாள் கல்லூரி படிக்கும் பார்வதி...

பக்கத்தில் இருந்த கெளசல்யாவின் கணவன் ரங்கராஜன் கூட எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார்.

இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், இந்த அரிச்சந்திரன் மகாராஜா முன்னாடி எல்லாம் உன் வேஷம் பல்லை காட்டி விடும்... என் பையன் என்னை விட ரொம்ப தைரியசாலி... சந்தர்ப்பம் பார்த்து ஊசியால் குத்தி காட்டினான் ரங்கராஜன்..

அதற்குள் ராகுல் தனது அம்மாவின் முந்தானையை பிடித்தபடி மணமகன் அறைக்குள் சென்றான்...

பார்த்தியா, உங்க மதினி தன் பிள்ளையை எவ்வளவு பாசமா பார்த்துகிறா... நம்ம வைஷ்ணவி ரொம்பவே கொடுத்து வைச்சவதான்.....

மணமகளின் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.....

ஏன் பையன் கூட அதிர்ஷ்டசாலிஷ தானே.. வைஷ்ணவி மாதிரி தங்கசிலை எங்களுக்கு கிடைச்சிருக்கே.... மணமகன் அருண் பற்றி பேசி பெருமைபட்டாள் புது மாமியார் ராகினி...

டேய் கதவை மூடிவிட்டு வா.... அறைக்குள் வந்தவுடன் குரலில் கொடூரம் தெரிந்தது..

தான் வசமாக சிக்கி கொண்டது நினைத்து வயிற்றில் புளியை கரைத்தது...

இங்கே ஏதாவது சத்தம் போட்டு ஊரை கூட்டினே, அவனின் தொடையை பிடித்து கிள்ளினாள்...

அம்மா, வலிக்குது...ப்ளீஸ்மா... நான் தான் எதுவுமே தப்பு பண்ணலையே... எதுக்கு கிள்ளுறே..... சொல்லு....கதறினான் கண்ணீர் மல்க ராகுல்...

செருப்பு பிஞ்சுரும், நாயே.....எதிர்த்தா பேசுற... வீட்டுக்கு வா.... இரண்டு நாள் பட்டினி போட்டா தான் நீ எல்லாம் அடங்குவே... கோபம் மேலும் அதிகமானது .....

கதவு தட்டப்பட்டது, வெளியே ஏதாவது சொன்ன, நீ எப்படியும் வீட்டுக்கு தான் வரணும்.மனசில வைச்சுக்கோ......

கதவை திறந்தவுடன் எதிர்ப்பட்ட செல்வி...அண்ணி சின்னவருக்கு ரிசப்ஷன் டிரஸ் பீரோவில் இருக்காம், எடுத்து தாங்க....

டேய் ராகுல், இங்க என்னடா பண்ற.. எங்க என் புள்ளை உன்னை கேட்டு தேடிக்கிட்டு இருக்கான்... சீக்கிரம் கீழே போ....



will continue


பட்ஜெட் 2021

எதிர்பார்ப்பா???

ஏமாற்றமா??

ஏற்றமா????

மாற்றமா????

இனிய அறிவிப்பா????

இதயத்தின் துடிப்பா????

சாமானிய இந்திய

பிரஜையாக காத்திருக்கிறேன்...

எதிர்பார்ப்புடன் இந்திய

பட்ஜெட் 2021..



நேதாஜி....

 சுபாஷ்..... டெல்லி சலோ...

.

.

.

இவரை பற்றி எழுதக்கூட தகுதியற்றவன் நான்... சாதாரண மனிதனின் வாழ்வு அல்ல, இவரின் வாழ்வு....

தன்னலமற்ற தலைவர் இவர்...

இவரின் சரித்திரத்தை படித்து பார்த்தால் அது ஓர் அலாதி அனுபவம்...

ஏனென்றால் தியாகத்தையே வாழ்வாக கொண்டு வாழ்ந்த பலரில் இவர் குறிப்பிடத்தக்கவர்...


அமைதி வழியில் அனைவரும் போராடும் போது.. இன்னும் எதற்காக அகிம்சை எத்தனை காலம் என்று வினவியவர்...

முள்ளை முள்ளால் எடுக்க சொன்னது மட்டுமன்றி, செயல்படுத்தி காட்டியவர்...

.

.

தந்தை ஆசைப்பட்ட காரணத்தால் I.C.S , தேர்வில் கலந்து கொண்டு வென்றவர்... ஆயினும் உங்களின் ஆசைக்காக பரீட்சை எழுதினேன்..எனது ஆசை இந்திய விடுதலை என்று அந்த பதவியை துறந்து தேச சேவை ஆற்றிவர்....

கட்சியின் பதவியை கூட ஆறு மாதங்களில் தள்ளி வைத்த மாமனிதர்....

உடன் இருப்பவரின் தேவையை நிறைவேற்ற தலைவர் பதவி அல்ல...தேச நலனை காப்பதே தலைமை பதவி என்று வாழ்ந்த தலைவர்....

நேதாஜி...

அவர் சொன்ன வார்த்தைகள் தான் அனைவருக்கும் கனவு.... டெல்லி சலோ....

ரேஷன் கடை

 வாழ்க்கை பற்றிய

கனவு காண 

சொல்பவர்கள் 

ரேஷன் கடை

பக்கமாக சற்றே

வாருங்கள்....

உங்களின்

கனவு கால்கடுக்க

வரிசையில் நின்றால்...

தொடர்கிறதா பார்க்கலாம்...









திருடன்

 நடுநிசி நேரம் மணி ஒரு மணியை நெருங்கி கொண்டு இருந்தது....

இயற்கையின் உபாதை செய்த விளைவு... வீட்டின் உள்ளே அட்டாச் பாத்ரூம் கட்டி வைத்தோம்.. இரண்டு பெட்ரூம்....இன்றோ அது மருமகன், மருமகள் வந்த பின்னர் அவர்களின் அறையாக மாறிப்போனது....

வயசான நீங்க ஹால்ல படுத்தா  என்ன குறைஞ்சா போவீங்க....செல்ல மகன் கேட்ட கேள்வி கூட நியாயமாகவேபட்டது..

ஏண்டி, விஜயா... நீ போகும் போது என்னை கூட அழைச்சிட்டு போயிருக்கலாம்...... போட்டோவை பார்த்து சில நேரம் புலம்புவார்....

ஏதோ காயத்திரி, ஆசை பட்டதால் வாங்கி போட்ட மூங்கில் சாய்வு நாற்காலி, இன்று கேசவனுக்கே படுக்கையாக இருந்தது...... உனக்குத் தான் என்மேல எவ்வளவு பிரியம் மனதில் சில நேரங்களில் நினைத்து கொள்வார்.

காலை எழுந்தவுடன தாத்தா என்று ஓடி வந்து கன்னத்தை முத்தமிடும் பேரன் ஆதித்யா பேத்தி சங்கவி..... இந்த இருவரும் காட்டும் பாசத்தால் எங்கும் போக முடியாமல் தவித்தார்....


ஆண்டவா, நான் செத்து போய் விட்டால் இந்த குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படும்.... நினைத்து பார்த்தால் அவரின் கண்களில் மழை பெய்யும்.....

எப்போ பாருங்க.... உங்க அப்பா வாசல்ல உக்காந்து அழுகிட்டு இருக்காரு....யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க....

மருமகள் கொடுமைபடுத்துறா... அப்படின்னு சொல்லுவாங்க.... மனைவியின் புடவையில் சுகம் கண்ட பிறகு பெற்றவர்கள், ஏனோ அந்நியமாகவே தெரிகிறார்கள்....

ஓரு வேளை நம்ம அப்பா, அம்மாவும் இப்படி தான் நினைச்சு இருப்பாங்களோ.... திருமணமான புதிதில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நினைத்து அதில் மனம் சஞ்சலப்பட்டது....


கிழத்துக்கு அறிவே இல்லை.... அதான் அம்மா போன பிறகு இவருக்கு இங்கே என்ன வேலை பேசமா....காசி ... ராமேஸ்வரம்ன்னு ஊர் சுத்த வேண்டியது தானே....

அருமை மகன் புருஷோத்தமன் தன் ஆசை மனைவி சரஸ்வதியிடம் சொல்லுவது அவரின் காதில் கேட்டது.... இருந்தாலும் காது கேட்காத மாதிரி இருந்தார்....


சரிடி, இன்னிக்கு ஏதாவது ஸ்வீட் கிடைக்குமா? ஏக்கமாகவே கேட்ட புருஷோத்தமன் கெஞ்சினான்....

உங்க அப்பனை வீட்டை விட்டு விரட்டுங்க.... அவர் கொடுக்கிற பென்ஷன் பணத்தை விட நமக்கு அதிகமாகவே இருக்கு....

முதல்ல அதை செய்யுங்க.... அன்னிக்கு பிள்ளைகளை எங்க அம்மாவுக்கு அனுப்பிட்டு, நீ எதிர்பார்க்கிற மாதிரி நாள் முழுக்கவே இந்த ஸ்வீட் ஸ்டால் உங்களுக்கு தான்....

இருவரும் கொஞ்சுவது கூட காதில் விழுந்தது.....

ஆண்டவா, வயசான காலத்துல ஏன் காதில் மெல்லியதான சத்தம் கூட கேட்டு விடுகிறது..... சாய்வு நாற்காலியில் இரவு நேரத்தில் மனம் புண்பட்டு வேதனையில் துவண்டது....

பேரன் பேத்தியை பார்த்து ஓரு மாதம் ஆச்சு, தினமும் வந்து கட்டிபிடித்து முத்தம் கொடுத்து சொல்லுவாளே.....சங்கவி..."தாத்தா", நீ இல்லாம என்னால வாழவே முடியாது.... அத்தை வீட்டுக்கு போனவுடன் இந்த தாத்தாவை மறந்துவிட்டாளா? இத்தனை நாளில் ஓரு தடவை கூட போன் பேசவே இல்லையே......

என்னடா இந்த வாழ்க்கை, எந்த விஷயத்தை நினைக்க கூடாது என்று நினைத்தாரோ... அதைப்பற்றிய நினைவே மீண்டும் மீண்டும் வந்து சோகத்தை கூட்டியது.....

மேஜை மீது இருந்த போட்டோவை எடுத்தார்... அதில் தன் மனைவியுடன் பேரன் பேத்தி சகிதமாக எடுத்த கடற்கரை திருச்செந்தூர் முருகன் கோயில் புகைப்படம்.. நெஞ்சில் வைத்து அணைத்து கொண்டார்.....


சீக்கிரம் வந்து கூட்டிகிட்டு போடி..... விரக்தியாக இருந்தார்.....

பல நாட்கள், பள்ளி விட்டு வந்த குழந்தைகள் அவரிடம் அன்றுநடந்த கதைகளை அவரின் மடியில் அமர்ந்து கொண்டு சொன்னார்கள்....

தாத்தா, இன்னிக்கு ஸ்கூல்ல ராகவ் என்னா சேட்டை பண்ணினான் தெரியுமா என்றாள் கவிதா..... மூன்றாவதாக பிறந்த இரண்டாவது செல்லப்பெண்....

ஏண்டி உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே கிடையாதா.....வேர்வை நாத்தம்... போய் டிரஸ் மாத்தி விட்டு வாங்க..... என்றாள் சரஸ்வதி....

தாத்தா, என் வேர்வை அப்படியா நாறுது...என்ற கவிதாவை கட்டி பிடித்து சொன்னார்...

என் செல்லக்குட்டி, உன் உடம்புல எப்பவுமே உங்க பாட்டி வாசம் தாண்டி வீசுது என்று கொஞ்சினார்...

மருமகளோ..... எரிச்சலாக அதிகார பார்வை செலுத்தினாள்....சாகுற வயசுல பேசுற பேச்சை பாரு.....

மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்தார்..... பின் வாசல் கதவை திறந்து கொண்டு பாத்ரூமுக்கு போக நினைத்தவரின் கழுத்தில் ஓர் கத்தியை வைத்து அழுத்தினான் ஒருவன்....

ஏய் கிழம் , சத்தம் போடாதே மரியாதையா நீ நடந்து கிட்டா, நானும் மரியாதையா நடப்பேன்.நீ ஏதாவது சத்தம் போட்டே, இப்பவே உன் கழுத்தை அறுத்து விடுவேன்.....

35 வருட சி.பி.சி.ஜ.டி அதிகாரி என்பத தெரியாது, தெரிந்தால் இப்படி பேசவே மாட்டான்... சிரித்தார்....

யோவ், கிழட்டு பயலே, உனக்கு உயிர் மேல பயமா இல்லையா... மிரட்டும் தோணியில் கேட்டான்....

கொஞ்சம் தள்ளு, நான் பாத்ரூம் போகணும்.... ஆத்திரத்தை அடக்கலாம்.....

அவனுக்கு அவரை கண்டு பயம் வந்தது, ஓர் நிமிடம் யோசித்தான்.....

டேய், திருட போற வீட்டில் யாருக்காவது உன் இரக்க சுபாவம் தெரிஞ்சுது... பிறகு நம்ககு களிச்சோறு தான்.... எப்பவுமே விரப்பா இருக்கணும்.....

முதல் திருட்டுக்கு போன நாளில், மச்சான் மணி சொன்ன வசனம் நினைவு வந்தது....

யோவ், என்னையே எதிர்த்து பேசுற,  குத்திடுவேன்......

அப்படி நீ குத்தினாலும் நான் கத்தி, உன்னை காட்டி கொடுக்க மாட்டேன்....நீ திருட தானே வந்தே...கொலை செஞ்சு ஏன் பாவத்தை சேர்க்கணும்....

அவரின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தது......

மனதில் ஆயிரம் சந்தேகம், அவரோ பாத்ரூம் நோக்கி நடந்தார்......

இப்படியே ஓடிப்போய் விடலாமா???

ஓரு வேளை இவர் நாளைக்கு போலீசில் புகார் கொடுத்தால்..... இல்லாத கேஸ் எல்லாம் நம்ம தலையில் வைச்சு கட்டிருவாங்க.....ஓரே குழப்பமாக இருந்தது......

ஓர் நிமிட நினைத்து பார்த்தான், அப்பா நேத்து பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஓர் கேக் கொடுத்தாங்க...எவ்வளவு ருசியாக இருந்துச்சு தெரியுமா.... உனக்காக நான் பாதி மிச்சம் வைச்சிருந்தேன்....

அப்புறம், அதை என்ன பண்ணின குட்டியா....

ஆமா, நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தியே, என்னை பெத்த அந்த லூசு அவ.. தான் காரணம்.. என் ஆசையை கெடுத்துட்டா.....

அம்மாவை அப்படியே எல்லாம் சொல்லகூடாது.அவ, என்ன செஞ்சா சொல்லு.....

அவளா, அவ வந்து மாமா சாயங்காலம் வீட்டுக்கு வந்த போது, நான் உனக்கு கொண்டு வந்த கேக் எடுத்து அவனுக்கு கொடுத்துட்டா......தம்பி மேல அவ்வளவு பாசமாம்....குண்டம்மா..பேச்சி...

பேரை பாரு...பேச்சி...பூச்சின்னு....

அவளின் கன்னத்தை முத்தமிட்டான்.... என் ராசாத்தி... உனக்கு என்ன வேணும் கேளு தங்ககுட்டி... அப்பா உனக்கு வாங்கியாந்து தாரேன்....

எனக்கு நீ எப்பவும் என் கூடவே இருக்கணும், நீ ஏன் ஆந்திரா போய் வேலை பார்குற... இங்கேயே வேலை பாரு....

அவளின் பேச்சில் தனது அன்னையின் வார்த்தைகள் வெளிப்பட்டது.....

உங்க தாத்தா படிக்க சொன்னபோது மண்டையில் ஏறலை.. அதான் இப்படி நீயாவது நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும்.... அதுக்கு தான் அப்பா இவ்வளவு கஷ்டப்படுறேன்....

சரி, உனக்கு என்ன வேணும் சொல்லு.....

அப்பா, எனக்கு எதுவும் வேண்டாம்... ஆனால் என் பிரண்ட் பிச்சம்மா,அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க... அவருக்கு மூளையில் ஏதோ கட்டியாம்... ஆப்ரேஷன் பண்ண நாற்பதாயிரம் வேணும்...


என்கிட்ட கேட்டா, நான் எங்க அப்பா ஆந்திராவுல வேலை பார்க்கிறாரு... அவர் வந்தா வாங்கி தாரேன் சொன்னேன்.... இப்போ, சாமியே அனுப்பிச்ச மாதிரி நீ இன்னிக்கு வந்துட்டே......


நீ சொன்ன மாதிரி, அடுத்தவங்களுக்காக வேண்டுனா, அது கடவுளுக்கு கேட்கும் போல.......

குழந்தைகளுக்கு எப்படி பொருளாதார கஷ்டம் தெரியும்..‌‌வாங்கி ஓரு லட்சம் கடன் அடைக்கவே கப்பல் வேலைக்கு போவது...‌....

ப்ளீஸ்ப்பா, அடுத்த வாரம் அவங்களுக்கு ஆபரேஷன் அதுக்குள்ள நீ எப்படியாவது பணம் ரெடி பண்ணு... அவளின் கண்ணில் அப்பாவிடம் சொல்லியாச்சு.. அவர் செய்து விடுவார் என்ற நம்பிக்கை ஒளி.....

எங்க, அதுதான் லூசு மாதிரி ஊளறுது, நீங்களும் அவளுக்கு சரியா பேசிக்கிட்டு....உண்டான கடனையே அடைக்க வழியை காணும்....

அவ்வளவு பணம் வேண்ணும்னா கொள்ளை தான் அடிக்கணும்.... மறுபடியும் ஏதோ சொல்ல வந்தவளின் கன்னங்களில் அவர் விரல் பதித்தது..









கோபம்

 தனக்கு எதுவுமே கிடைக்காது என்று நினைத்தால் கோபம் வரும்.... இந்த உலகத்தை ஆளும் தகுதி சிலருக்கே உள்ளது.... கோபம் தான் அன்பாக இரக்கமாக.... மாறுகிறது.... அடுத்தவரின் கஷ்டத்தை நினைத்து ஓர் முறை கண்ணீர் சிந்தி இருந்தாலும் போதும்...உன்னை இறைவன் ஓர் உன்னத வேலைக்காக தேர்வு செய்து விட்டார் என்றே அர்த்தம்


ஆயிரம் ரூபாய் தேவை என்றாய், ஆனால் தெருவில் கிடந்த பத்து ரூபாய் எடுக்க மனமில்லையே... ஏன் அது என் பணமில்லை...

நான் உழைச்ச காசு எனக்கு போதும்....என்பவரே சராசரி மனிதன்...

ஏனென்றால் உன்னை ஓவ்வொரு நொடியும் சோதிப்பது இறைவன்... அவன் உன்னை தலைவனாக மாற்றவே இத்தனை இடைஞ்சல் தருகிறான்.....




அபிராமி அந்தாதி.....

இன்று அமாவாசை நிலவு வருமா?  கேட்டது மன்னவன்....

எல்லோரும் பைத்தியக்காரன் என்று புறம் பேசி அவனை இகழ்ந்து உரைத்த போதிலும் ஏதாவது ஓர் எண்ணத்தில் அவன் அருகே போய் விசாரித்தார்...

சுவாமி இன்று என்ன திதி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....

மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லி பொற்காசுகள் பெற துடிக்கும் கூட்டம் கைகளை பிசைந்து நின்று கொண்டு இருந்தது...

இந்த கேள்விக்கான பதிலை நம்மிடம் கேட்டு இருந்தால் பதில் சொன்ன காரணத்திற்காக பொற்காசு கிடைத்திருக்கும்...

ஒருவேளை மன்னர் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்தால் ஓரு கிராமத்தை நம் பெயருக்கு தானமாக தந்தும் இருக்கலாம்.... சுற்றி நின்ற அடிபொடிகளில் மனதில் எண்ணற்ற ஆசை பொங்கி எழுந்தது....

ஒருவேளை இவன் பதில் சொல்லாவிட்டால் நாமே முன்னே சென்று பதில் சொல்லி பரிசு பெறலாம் என்ற நம்பிக்கை.......

ஆனாலும் எல்லோர் மனதிலும் சந்தேகம் இருந்தது, ஓரு வேளை இந்த சுப்பிரமணியன் விடை சொன்னால், இவனை போய் பைத்தியக்காரன் என்று சொன்னீர்களே  என நம்து சிரத்தை கொய்து விடுவாரே மன்னர்.....

அம்மா, தாயே அபிராமி அவனை ஏதாவது தப்பான பதிலை சொல்லவைத்து விடு உனக்கு ஆயிரம் குடத்தில் பால் அபிஷேகம் பண்ணுறேன்.... யாருக்கும் தெரியாமல் மனதில் வேண்டுதல் வைத்த சிலர்...

.

.

.

.

.

.

கதை தொடரும்....


குடும்பத்தின் ஓற்றுமை

 ஓரு தோசையை

பத்து பேருடன்

பகிர்ந்து தின்னும்

ஏழைகளின் வேதனை....

யாருக்கு புரியும்....

பத்து தோசையும்

பரோட்டா குருமாவும்

சிக்கன் கறியும் தட்டில் 

எத்தனையோ  வசதிகள்

செய்துதந்த பின்னரும்...

வெறுமையாக உணரும் சிலர்

பாசத்திற்கு ஏங்கி நிற்கும்

ஆசை பெற்றவர்களின்

வலியை உணர நேரமின்றி

எங்கோ விரைந்து 

செல்கிறார் எதையோ தேடி

ஆண்டவன் படைப்பில்

தான் எத்தனை அதிசயம்

ஏழையின் வீட்டில் 

பணமில்லை ஆயினும்

கோடிகளை தாண்டிய

பாசத்தின் நேசம்....

ஓர் தோசை குறைந்த

விட்டதாக சொன்னவனுக்கு.

பகிர்ந்து அளித்து உண்ணும்

அம்மாவும் அப்பாவும்

ஆசை அக்கா...

தோசைக்குள்ளே 

குடும்பத்தின் ஓற்றுமை





வித்யா கர்வம்

 

வணக்கம் நண்பரே,
இது வரையில் நான்  கவி சோலை என்று  சென்று என் கவிதைகளை  படித்ததில்லை..


ஏனென்றால் என் நாவில் குடியிருக்கும் சரஸ்வதியை விற்க எனக்கு இஷ்டமில்லை...


கிரகங்களின் பிடியில் வேதனையில் தவித்து வேண்டி அழுத போது,....

நானிருக்க அழுவதேன்??? 

ஆசையாய் வந்து எனது நாவில் அமர்ந்தவள்.... 

இன்று எனக்கு வெள்ளை பட்டுடை.. திரைச்சீலை விலகும் முன்பே தரிசனம் தந்தவள்....

சொன்னால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவான்....

கற்சிலை மனதை கரைத்து தமிழென்று கனிவுடன் அமுதம் தந்தவள்....

அன்புடன் கேட்டால் கவிதைகள்  அள்ளித்தருவதில் அவளுக்கு தான் எத்தனையோ இன்பம்..... என் தேவியின் குணம்...

எழுதுவது நானல்ல என்னுள் இருந்து என்னை இயக்கும் கலைவாணி....

அவளின் பாதத்தை விட பெரிய சுகம் ஏதும் உண்டோ இப்பாரில்.......
எனக்கு *வித்யா கர்வம்* அதிகம் தான்...
எனக்கு நிகர் நான் மட்டுமே....



எது காதல்


இருபதின் காதல்

உடலை ரசிக்கிறது....

முப்பதின் காதல்

இல்லாத இடத்தில்

ஓர் இடம் நில்லாமல்...

அன்பை தேடுகிறது

நாற்பதின் காதல்

அணில் போல சேர்த்த

காசை காப்பாற்ற 

துடிக்கின்றது........

ஜம்பதின் காதல்

பிள்ளைக்காவே

பரிதவித்து அலைகிறது....

அறுபதின் காதலோ

ஆசையை கடந்து

உடன் இருப்பருக்காகவே

வாழ வைக்கிறது....

கடல் கடந்து சென்ற

குழந்தைகளை தெருவில்

போகும் அனைவரிடமும்

தேடிப் பார்த்து 

வெறுமையாக சிரிக்கிறது

விட்டுக் கொடுப்பதும்

தட்டிக் கொடுப்பதும்

என்றே வயதான பருவத்தில்

உயிரின் உணர்வாய்

மாறிவிட்ட பொய்மை

தவிர்த்து கோபம் 

கடந்து அன்பில்

செழித்த காதல் -

எழுத வரிகள் இல்லை....

கிழவனுக்கு கிழவியும்....

கிழவிக்கு கிழவனும்....

அன்பு வழிந்தோடும்....

முதிர்ந்த காதல்....

பித்தா பிறை சூடி பெருமாளே

கடந்த காலத்து

கவலையும் இல்லை...

எதிர்காலத்தை கண்டு

பயமும் இல்லை....

கடந்த நூற்றாண்டின்

ஏடுகளை தேடி எடுத்து

நிகழ்காலத்துடன் 

ஒப்பிட்டு வாழ ஆசையில்லை

நான் ஒன்றும் இலக்கணம்

கற்று தலைகனத்தில் 

சுற்றும் போலி கவிஞன் அல்லவே....

கிடைத்த பேனாவை 

கொண்டு கிழிந்த

காகிதத்தில் பார்த்த

விஷயங்களை பொதிந்து

வைக்கும் பைத்தியக்கார

ஜோல்னா பையனின்

ஓர் சாதாரண ரசிகன்.....

ஆணவமும் வேண்டாம்....

அதிகாரமும் வேண்டாம்....

போலியாய் புகழும் 

மேடைகளும் வேண்டாம்....

காகித பூக்கள் கசந்து விடும்...

சில நாட்கள் மலர்ந்து மணம்

பரப்பும் மலர்களே போதும்

போலியான பொய்யுரைகளும்

ஜிகினா போன்றவைகளும்

சராசரி மனிதனையும்

சந்திர மண்டலத்துக்கு

இழத்து சென்று விடும்....

மக்களுடன் மக்களாய்

வாழ்ந்து அவர்களின்

வாழ்க்கையை எழுத்தில்

பிதற்றும் நான் சாமானிய

பித்தன்....... ஏனென்றால்

நான் வணங்கும் கடவுளையும்

சுந்தர தமிழில் அழைத்தான் 

அன்புடன் அந்த சடாமுனிக்கு

மிகவும் பிடித்தமான பெயரில்

பித்தன்... அன்புடன் கோபத்தில்

அழைத்த பெயரை ஆசையாய் 

சூட்டிக் கொண்டார்...

தமிழ் எடுத்து பாடச்செய்தார்....

உலகத்தை நாட்டமுடன் நாடச்செய்தான்

பித்தா...பிறை சூடி ..

பெருமானே.... அருளாளா...


வாடிவாசலில் இளம்காளைகள்

 சீறிப்பாயும்

காளைகளை

அடக்கிவிட

ஆசையுடன்

ஆக்ரோஷமாய் 

வாடிவாசலில்

தைரியமான 

இளம்காளைகள்



ஆசை... தோசை.. அப்பளம்.. வடை...

     அலுவலகத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஊதா நிறமாருதி கார்.அந்த கார் நகரும் வரை வெறித்த படி ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தான் கேசவன்...

"ஹலோ சார், என்ன பயங்கரமா யோசனை" பரிகசித்தாள் பரிமளா.

 எல்லோரிடமும் அதிகார தோரணையில் பேசுபவள், அவனிடம் ஏனோ அதிகாரத்தில் பேசுவதை தவிர்த்தாள்.

சில நேரங்களில் அவளையும் மீறி சில வார்த்தைகள் அதிகார தோரணையில் வந்து விழும் அவளின் பேச்சில்..

அந்த நாள் முழுவதும் ஏதோ குற்றம் செய்து விட்டு பாவனையில் அவனை சமாதானம் செய்ய முயற்சி செய்வாள்..

நமக்கு எதுக்கு வம்பு, அதுவும் ஓர் பொண்ணு கிட்ட. ஓரு நாள் தெரியாதனமா கோபத்தில் பேசியதற்கே அழுது விட்டாள்.

நான் ரொம்பவே தைரியமான பொண்ணு. தன்னை பற்றி பெருமை பேசியது பொய்தானா... குழப்பமாக இருந்தது.... அவனின் மனதில்....

"வேலை பார்க்க வந்த இடத்தில் எதுக்கு இந்த கேலி கிண்டல் எல்லாம்..பேசாம வந்தோமா, வேலை பார்த்தாமோ என்று இல்லாமல் எதற்காக எல்லோரிடமும் சிரித்து பேசணும், சாரி என்னை மன்னிச்சிடுங்க... நீங்க அழுவீங்கண்ணு எனக்கு தெரியாது, கோபத்தில் கத்தி விட்டேன் நான் ஒரு சரியான சிடுமூஞ்சி, ஓரு தண்டச்சோறு வேற.. .. எனக்கு யார் கிட்டேயும் சிரித்து பேசவே தெரியாது... அதுவும் பொண்ணு கிட்ட சுத்தமா பேசவே தெரியாது....விரக்தியா சொன்னான்"....

அவனின் வார்த்தை பகவத் கீதை போல இருந்தது.... நாம் தான் இவனை சீண்டி விட்டோம்.. அவளின் பெண்மையை அவனுக்கு உணர தெரியவில்லையா?அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறாரா?!!! குழப்பித்தான் போனாள்...

சின்ன பொண்ணு போல அழுதுகொண்டு இருந்தவளின், முகத்தில் சற்றே சிரிப்பு எட்டிப் பார்த்தது....

"சரியான லூசு தான் போல", எல்லோருமே ஓர் பொண்ணு எப்படா தனியா இருப்பா... ஏதாவது பேசி சிரிக்க வைக்கலாம், அவளுடைய குடும்ப  விஷயத்தை பேசலாம்ன்னு நினைப்பானுங்க.. இவன் என்னடா இப்படி இருக்கான்...

தன்னையே "சிடுமூஞ்சி" " தண்டச்சோறு" என்று விமர்சனம் வேற சென்றான்.... நினைத்து சிரித்தாள்.... இன்னும் குழந்தையாவே இருக்கான் போல... நினைத்து ரசித்தாள்... அவளுக்குள் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் துப்பாட்டாவை எடுத்து முகத்தை மூடி அழுவது போல பாசாங்கு செய்தாள்.....

அவனோ அதை கவனிக்கவில்லை....

அவனுக்கோ வேறு ஏதோ கவலை....

வாய்க்குள்ளே முணுமுணுத்தான், "அவ சரியா தான் சொன்னா, எனக்கு ஓரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும் தெரியலை",... வீட்டிலேயும் பேச தெரியலை வெளியேவும் பேச தெரியலை... இந்த உலகத்திலே நடிக்கவும் தெரியலை... நான் பேசாம செத்து போனா கூட எனக்காக யாருமே அழமாட்டாங்க.... ச்சே.... என்னடா வாழ்க்கை இது..

யாருக்குமே கேட்காத வகையில் சொன்ன வார்த்தைகள், அவளின் பாம்பு செவிகள் உள்வாங்கின....

கலங்கிய கண்களை சாமி கும்பிட்டு வந்து போல செய்து கண்ணீரை மறைந்தான்....

வெள்ளை நிற கண்கள், நொடியில் சற்றே சிவந்து போனது....

அவனின் மனதிற்குள் இருக்கும் ரணங்களை மறைத்து வாழ்கிறான் என்பது மாத்திரமே அவளுக்கு புரிந்தது...

நம்ம கம்யூட்டரா, அது சரியான விளக்கெண்ணெய்... அடுத்தவங்க உணர்ச்சியை புரிந்து கொள்ள தெரியாத மரமண்டு....கேசவனை பற்றி உடன் இருப்பவர்களின் கூற்று பொய் என்பதற்கு அவனின் கண்ணீரே சாட்சி...

இருவரின் நெஞ்சிலும் ஓரே மாதிரியான எண்ண ஓட்டம்....பழைய நாளை நினைத்து இருவருக்கும் உள்ளே பயமிருந்தாலும், அதை மீறி அவள் கேலி பேசினாள்.... மறுபடியும் ஓர் முறை கோபப்படுவாரா எதிர்பார்ப்பு அவளுக்குள்...

இன்னும் எத்தனை நாட்களோ இருக்கிற வரை தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி விட்டு போகணும் மனதில் அவன் எடுத்த சபதம்...

எதுக்காக மத்தவங்க மனசை கஷ்டப்படுத்தணும்.....அமைதியாக இருந்தான்

 ஏதோ உங்க கார் மாதிரி இப்படி வெறிச்சு பார்க்குறீங்க, மீண்டும் கேலியாக சிரித்தாள் உடன் பணிபுரியும் பரிமளா...

இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் எரிச்சலாக சொன்னான்.. ஆபிஸ் விஷயம் தவிர தயவுசெய்து வேற எதுவும் பேசாதீங்க....

பிறகு நான் எதாவது கோபத்தில் சொல்லுவேன்...அதை நீங்க எல்லார்கிட்டயும் சொல்லி, என்னை பலபேர் முன்னாடி கேலி பேசி நக்கல் பண்ணுவீங்க...

நீங்க உங்க வேலை பாருங்க.. நான் என் வேலை பார்க்குறேன்...

தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று அப்போது தான் அவளுக்கு புரிந்தது.. 

ஓர் பெண் தனக்கு பிடித்த ஆடவனை மற்றவர்களுடன் முன் கேலி பேசி ரசிப்பதை கூட உணர தெரியவில்லையே...

அப்படி கேலி பேசுவதன் மூலம் அடுத்தவர்கள் அவனை பற்றி சொல்லும் விமர்சனங்களால் அவனை அறிந்து கொள்ள முயல்கிறாள்....

சரியான மரமண்டை உதட்டின் உள்ளே சிறை பட்டது வார்த்தைகள்...

அவள் ஏதோ சொல்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது, ஆனால் என்ன சொன்னாள் கவனிக்கவில்லை....

இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை அதை சொல்லுங்க எரிச்சல்பட்டான்...

தனியாக இருக்கும் பெண்ணிடம் எரிச்சல்படும் முதல் ஆள் சிரிப்பை அடக்க முடியவில்லை.....

எதுக்கு சிரிப்பு.....

தன்னை உணர்வுகளை அவன் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதை நினைத்து அவளுக்கு ஆசை அதிகரித்தது... இதுவே மற்றவர்களாக இருந்தால் கதையே வேறு....

அருகே வந்து கைகளை பிடித்து பேசி இருப்பான்... வெட்கத்தில் அவளின் மாநிற கன்னங்கள் சிவந்தன.... கால்கள் தரையில் வட்டமிட்டது... விரல்களால் தனது துப்பட்டாவை சுற்றி சுற்றி விளையாடினாள்....

சீக்கிரம் சொல்லுங்க......‌எனக்குநேரமாகுது....

ஏன் அடுத்த கார் வருதா... மீண்டும் சீண்டினாள்.....

ஓர் முறையாவது அவனையும் மனிதனாக மாற்ற முயற்சி செய்து அவனின் முகத்தில் புன்னகை மலர விரும்பினாள்...ஆண்டவா, இவனை போல் நல்லனா... இல்லை இல்லை இவனையே..... மனதிலோ பிராத்தனை


எங்க அம்மாகிட்ட கூட நான் இவ்வளவு பொறுமையா பேசினது கிடையாது... எதுக்காக என்கிட்டயே வந்து பேசுறீங்க....அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க...

சிவா வந்திடுவாரு... அவர்கிட்ட பேசுங்க.... பேசிக்கொண்டே இருப்பாரு.....

சேல்ஸ் வேலை தெரியாது, ஆனால் வெட்டி கதை பேச சொன்னா போதும்....

முதலாளி என்ன வெட்டி கதை பேசவா... சம்பளம் தருகிறார்........

இப்போது அவளுக்கு எரிச்சலாக இருந்தது... சரியான மரமண்டு தான்‌ நினைத்து கொண்டாள்...

நாளைக்கு நீங்க வருவீங்களா...

லீவு போட்டா ஓரு நாள் சம்பளம் போயிரும்..... ஆமா எதுக்கு கேட்குறீங்க.....

எங்க வீட்டில் நாளைக்கு கோவிலுக்கு போக போறாம் அதான்....

அப்போ நீங்க லீவுன்னு சொல்லுங்க...

அட, நீங்க வேற  11.00 மணி போல வந்திருவேன்....என்னால ஆபீஸ்க்கு லீவு எல்லாம் போட முடியாது....

சரி, எதுக்கும் முதலாளிகிட்ட சொல்லிருங்க.....

அதான் சொல்லிட்டேனே....

எப்போ சொன்னீங்க......

உங்கிட்ட சொல்லியாச்சு அவ்வளவுதான்...

கேசவன் பதட்டமடைந்தான்.... ஏங்க நான் ஓனர் இல்லை.... நானும் உங்களைப் போல சாதாரண வேலைக்காரன் தான்....

சரி... சரி. பதட்டமாகாதீங்க...மதியமே ஓனர்கிட்ட சொல்லியாச்சு.....அவரு தான் உங்ககிட்டேயும் சொல் சொன்னாரு..... நீங்க தானே மேனேஜர்.......

"....."அமைதியாக இருந்தான்.. அவனின் மனதில் இவள் நல்லவள் தான்.... மத்தவங்க சொன்ன மாதிரி இல்லை என்று நினைத்து நிம்மதியடைந்தான்

நாளைக்கு நான் வரும் போது ஓர் சர்ப்ரைஸ் இருக்கு...

அவளின் கண்கள் மின்னியது....

தன்னையறியாமல் உடனடியாக உணர்ச்சி வசப்பட்டு கேட்டான், எதாவது விஷேசமா.....

ஆமாம், எனக்கு நிச்சயதார்த்தம்.... கோவிலில் வைத்து

அவனின் முகத்தில் முதன் முறையாக வாட்டத்தை பார்த்தவள், சுதாரித்து கொண்டு சொன்னாள்.... சும்மா சொன்னேன்.... அண்ணன் பையனுக்கு பெயர் சூட்டு விழா..

அப்படியா ரொம்ப சந்தோஷம் சுவீட் கொண்டு வாங்க........ முகத்தில் சந்தோஷம் குடிகொண்டது.....

முதன்முறையாக அவளிடம் இயல்பாக பேசியது கண்டு அவளின் மனம் பூரித்துப் போனது

திருட்டு பயலே இவ்வளவு நாளா, இது தெரியாம போச்சே... மனதில் பட்டாம்பூச்சி பறந்தது அவளுக்கு....

நாளைக்கு நான் எப்படி வருவேன் தெரியுமா... அவனின் முகத்தில் சந்தோஷத்தை கூட்டினாள்.....

எப்படி வருவீங்க..... அண்ணன் கொண்டு வந்து விடுவாரா.....யதார்த்தமாக கேட்டான்....

ஊதா நிற பட்டுப்புடவையில், கழுத்தில் தங்க அட்டிகை போட்டு, கைக்கு நெளிவு வளையல் தலை கவிழ்ந்து சிரித்தபடி  ஓரக்கண்களால் பார்த்தாள்......

எதுக்கு வேற கலர் புடவை இல்லையா.....

இருக்கு, ஆனா அந்த கலர் தானே உங்களுக்கு பிடிக்கும்....

நீங்க என்னை கேலி பண்ணலேயே... மீண்டும் குழந்தையாக  கேட்டான்....

அவள் தனக்கே உரிய பாணியில் கேலி அவனின் விரல்களை மெதுவாக தொட்டு விட்டு சொன்னாள்...

ஆசை.. தோசை.... அப்பளம்....வடை...... 

அவனும் மெதுவாக அவளுக்கு கேட்கும் படி சொன்னான்....நீ பயங்கரமா ரன் புத்திசாலி தான்..... என்னால் உன் முன்னால் நடிக்க முடியலை......

என்னாச்சு இப்படி சொல்லுறீங்க......பிரமிளா கேட்டாள்....

அவன் சிரித்துக் கொண்டே உதிர்த்தான் முத்துக்களை....

ஆசை.... தோசை..... அப்பளம்....வடை.......

இருவரின் கண்களும் ஓன்று சேர்த்தன.....




தந்தை

சில நிமிட காத்திருப்பு

பொறுக்க முடியாமல்

பத்து பேர் முன்னால் - அவனை

அவமரியாதை செய்த

கடன் கொடுத்தவர்....

"மகனை யாரோ

ஏசிவிட்டது" தெரிந்து

தனது பலவருட 

கனவு வீட்டை கூட

விற்க தயாராகும்

அவனின் பாசக்கார தந்தை....

ஏனோ இன்னும் எனது

நண்பருக்கு புரியவில்லை

நடுத்தர வர்க்க தந்தையின்

நிலைமை அணுபவித்தால்

மட்டுமே புரியும் --- கண்கண்ட

தெய்வம் தந்தை...

அன்பா? அதிகாரமா?

அன்பு அதிகாரம் செலுத்தாது, அதிகாரம் செலுத்தும் இடத்தில் அன்பு இருக்காது..

அன்பும் அதிகாரமும் எதிர் எதிர் துருவங்கள்.அதை புரிந்து கொண்டு வாழ்வதில் இருக்கின்றது மகிழ்ச்சி.

வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியை இரண்டு முறை விளையாட்டாக அடித்தாலும் அது தன் கோபத்தை காட்டிவிடும்...

ஆனால் சற்று நேரம் கழித்து வாலை குழைத்து வந்து நிற்கும் அதுவே இயற்கை இயல்பு...

மிருகங்களுக்கு தன் கோபத்தை காட்டுவதிலும், பின்னர் தனது இயல்பான சுபாவத்திற்கு மாறுவதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் மனிதன் தான், தனது கோபத்தையும் அன்பையும் எரிச்சலையும் இன்ன பிற குணாதிசயங்களையும் மறைத்து போலியாக சிரித்து, மனதில் தன்  விஷமத்தை விதைத்து வைக்கிறான்.

பிரச்சினைகள் அப்போது முளைக்கிறது. அறிவியல் கூற்றின் படி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.

பல நோய்களுக்கு காரணம் மன அழுத்தம். மனதில் ஆசைகளை வைத்து கொண்டு, அடுத்தவரை மகிழ்ச்சி படுத்த வேண்டி நடிக்கும் போது.

உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டு வாழும் போலி வாழ்க்கையில் சிறைப்பட்டு அவஸ்தைப்படும் நிலை.

நீங்கள் யாருக்காகவும் வாழுங்கள், அதில் பிரச்சினை இல்லை. ஆனால் உண்மையாக வாழுங்கள்.

பொய்களை மனதில் வைத்து கொண்டு உண்மையை, உடன் இருப்பவரிடம் தேடாதீர்கள். நீங்களே உங்களுக்கு உண்மையாக இல்லாத போது எப்படி அடுத்தவர்கள் உங்களின் எதிர்பார்ப்பின் படி வாழ முடியும்.

ஏனென்றால் அவர் உங்களின் நண்பர், உங்களை போலதான் இருப்பார்.


என்றோ நடந்த ஓர் சிறு செயலுக்காக பேசாமல் போவது அல்ல அன்பு...

இருபத்தி நான்கு மணி நேரமும் பேசிக் கொண்டே பழகுவது இருப்பதும் அல்ல அன்பு/ நட்பு /  உறவு.

ஆபத்து காலத்தில் உதவுவதே அன்பு நட்பு எல்லாம்.

அன்பு என்பது சில நொடி பூத்து விடும் மலர்... அதற்கு எந்த சேதமும் தெரியாது.

அது என்றுமே வாடாது, நாளொரு மேனியும் அந்த அன்பு மலர் மலரவே செய்யும்...

போலியான காகித அன்பு, மிகவும் பளபளப்பாக தெரிந்தாலும் சில நாளில் அதன் நிறம் வெளிரிவிடும்....

ஏழையாக இருந்த போதிலும் வீடு தேடி வந்த உறவுகளே உண்மையான உறவுகள்.

இன்று கிடைத்து விட்ட பதவியும், பணமும் தேடி ஆயிரம் சொந்தங்கள் வரலாம்.

ஓன்றை மறந்து வீடாதீர்கள், போலியாக வாழ்ந்து பழகிவிட்டால், எதிராளி உண்மையாக இருந்தாலும் சந்தேகம் மனதில் அலையடிக்கும்.

அதற்காகவாவது உண்மையாக வாழந்து பழகுங்கள்.

கோபம், எரிச்சல் என்ற மனிதனின் உண்மை உணர்ச்சிகளை திரையிட்டு வாழும் வாழ்க்கை எதற்காக...

போலியாய் வாழ்பவர்களே அதிகாரம் செய்யாதீர்கள்.. அன்பு செய்யுங்கள்...

அன்பே உலகை ஆளும்... அதிகாரம் என்பது பதவி இருக்கும் வரை மாத்திரமே..


சிந்தியுங்கள்...

சமர்ப்பணம்

 சமர்ப்பணம்.

.

.

மரணம் என்பது மனித வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட ஓன்று, ஆனால் அது என்று நிகழும் என்பது தெரியாத காரணத்தால் மனிதன் ஆணவத்தில் அலைகிறான்.


மனிதனின் ஆயுள் தெரிந்து விட்டால், வாழ்வின் சுவாரசியமானது, மிகவும் குறைந்து போகும். 


இறைவன் இருக்கிறாரா? இல்லையா என்ற விவாதம் தாண்டி யோசித்தால் புரியும்.


கடவுளை விழுந்து விழுந்து கூப்பிட்டவரும், இறைவனே இல்லை என்று வாதிட்டவரும் மரணத்திற்கு பின் என்ன நிகழும். அதிகமாக பேசவில்லை.

விடை இல்லா கேள்வி இது.

ராமானுஜர், மத்துவர், நம்பியாண்டார் நம்பி, 69 நாயன்மார்கள் மனித வாழ்விலும் இறைவழிபாட்டிலும் ஏற்படுத்திய தாக்கம்.இன்று வரை தொடர்கிறது.

என் மனைவி, மக்கள், சொந்தம் என்று வாழாமல் உலக மக்களின் நலனுக்காக அவர்கள் செய்த பணி அளப்பரியது.. 



பூமியின் மடியில் வாழும் சில வருட வாழ்வில், முடிந்தால் நன்மை செய்யுங்கள். முடியாவிட்டால் அடுத்தவரை சாதி மத இனத்தின் பெயரால் உதாசீனம் செய்யாதே என்பதே பலரின் உணர்வுகள்.


நிலையற்ற உலகில் நிலையான இடம் ஓரு சிலருக்கு மாத்திரமே கிடைக்கிறது.


ஏனென்றால் அவர்கள் தனக்காக வாழவில்லை, தன்னை சார்ந்த மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.


அவர்கள் இறைவனை பார்த்தார்களா? பேசினார்களா? 


அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.


ஆயினும் ஏழைகளின் முகத்தில் இறைவனை காண வேண்டி, அவர்கள் செய்த தவம். இன்று மனிதனை மனிதனாக மதிக்கும் நிலை உருவானது.


தனக்காக எதுவுமே பணம் சேர்க்காமல் வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்.


நிச்சயமாக இப்படி பொது நலனுக்காக வாழ்க்கை வாழ்ந்த காரணம்.


இயற்கை வழி வரும் மரணம்.


உலகில் பிறந்து விட்டோம், என்பதற்காக வாழாமல். குறுகிய காலத்தில் மனித உயிரை உலகுக்கு தந்து விட்டு சென்ற அவர்கள். இன்றும் அவர்கள் மரணத்தை தாண்டியும் வாழ அவர்கள் செய்த அளப்பரிய பணியே காரணம்..


மரணத்தை பற்றிய சிந்தனை தான், மனிதனை சாதிக்க வைக்கின்றது.


ஓட்டம் என்று நிற்கும் என தெரியாத நிலையில், ஓவ்வொரு நாளும் நன்மை செய்ய தூண்டுகோலாக அமைந்தது.


நீர்க்குமிழி வாழ்வு, வாழும் நாளில் பிறருக்காக வாழும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்

திருச்செந்தூர் முருகன்

 திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்பவர்கள் எல்லாம் மறுமுறை சென்றால், கவனித்து பாருங்கள்.

எல்லா கோவிலில் உள்ள முருகனின் சிலைக்கும், இங்கு கோவில் கொண்ட முருகனின் சிலைக்கும் ஓர் வித்தியாசமான அம்சம் உண்டு.

அது என்னவென்றால்  திருச்செந்தூர் முருகனின் கையில் குறிஞ்சி மலர் இருக்கும்.

அதன் பொருள், இறைவன் முருகன் தன் தந்தை சிவனை வழிபட்ட தலம் இது...

உண்மையை சொன்னால் இது ஓர் சிவ ஸ்தலம்.

ஆயினும் சிவனை வணங்கியதால் சிவன் தன்னையே உள்ளடக்கி தன் மகனை முன்னிலைபடுத்திய அற்புதமான தலம்...

தந்தை தான் முதல் தெய்வம் என்பதை சூட்சமமாக அனைவருக்கும் சொல்லுவதே இதன் தத்துவம்...

குரு ஸ்தலம் என்பதன் அர்த்தமும் தந்தையை பூஜை செய் என்று முருகன் தன் பக்தருக்கு உணர்த்தும் வகை இது...

"மெய்யை குன்றாத மொழிக்கு துணை முருகா என்னும் நாமங்கள்"

    

ஆடல் நாயகனே

ஆடல் நாயகனே...

விநாயகனை தொழச் செய்து

ஆட்டத்தை தொடங்கி வைத்த

எந்தன் தலைவனே...

எங்களின் மன்னவனே...

நடனமிட பயிற்றுவித்தாய்

நடராஜா என்றழைத்தேன்...

பாடலின் வரிகளுக்கு

அர்த்தம் புரியும் முன்னே

சலங்கையை காலில் கட்டி...

சின்னஞ்சிறு வயதினிலே

உனதடியில் பணிய வைத்தாய்... 

என்மீது உனக்குத்தான்

எத்தனையோ நம்பிக்கை...

மன்னவரும் என் நடனம் கண்டு

உவப்புடனே சந்தோஷமாய்

பெருமையுடன் பேச வைத்தாய்

குருவின் புகழை 

பாரெல்லாம் பரவச் செய்தாய்...

காண வைத்தாய் 

நாட்டியம் ஆடும் போது

ரசித்திடும் மக்கள் கூட்டம் 

அத்தனையும் தந்தவனே...

மயங்கிட வைத்தவனே...

மாதவனின் மறுவடிவே...

மாயக்கூத்தனே...

மயில்களும் முனிவரும்

தேடுகின்ற மலையரசே...

வாழ்க்கையென்னும்

மாயையில் மயங்கிடாமல்...

நாட்டியத்தில் பரிமளிக்க

வரமளிக்க வேண்டுகிறேன்...

வர வேண்டும் வரவேண்டும்

உன்னை உள்ளத்தில் நித்தமும்

துதிக்கின்றேன்.. விரைவில்

வந்திடுவாய் வந்திடுவாய்

நடராஜபெருமானே...

சிவகாமியின் மணாளனே...

கைலாச நாதனே...

பேரின்பம் கொடுப்பதாய்

சொன்னாயே சிற்றின்பத்தில்..

திளைக்க விடுவதென்ன...

சீக்கிரமே வந்திடப்பா

நாட்டிய பேரொளி என்று

பட்டம் கிடைக்கும் முன்னே...

நர்த்தகியாய் ஆடுகிறேன்...

உனதடியில் பணிந்திட 

ஆசையாய் தொழுகின்றேன்...

நடராஜா உனதடியே சரணம்




Happy New Year

 Thanks to all, who supported me & commented about ME. On 2020... I except the same level on upcoming at 2021 also.. HAPPY NEW YEAR WISHES🙏🤝

கோபம்

 கோபம் கூட அன்பின் வெளிப்பாடு தான், அதை சரியாக புரிந்து கொள்பவரிடம் மாத்திரம் காட்டுங்கள்... ஏனென்றால் கோபம் கடந்த அன்பு சிலருக்கே புரியும்..


100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...