பொறுப்பு துறப்பு.
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.. இதைப்போன்ற நிகழ்வு யாராவது ஒருவரின் வாழ்வில் நடந்து இருந்தால் அது தற்செயலானதே அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்.
கதை தலைப்பு....நீங்க ஏன் இன்னும் ஏன்
இந்த கேள்வியை ஓர் பத்திரிகையாளர் தமிழகத்தின் பெரிய அரசியல்வாதியிடம் கேட்டார் .ஓர் காலத்தில் அம்மா தம்பி படிப்பு இது தவிர வேற எதுவுமே தெரியாது.. இவங்க என்னிடம் எதுவும் எதிர்ப்பார்த்ததே இல்லை...லவ்ன்னா ஏதோ எதிர்த்து தான் பழகுவாங்க.. அம்மாவை போல் அன்பு காட்டுற ஒருத்தரை தான் தேடினேன்..ஆனா விதிவசம்.. எல்லோருக்கும் என் உடல்,அறிவு, பணம் மீது தான் காதல் வந்துச்சே தவிர என்னை யாரும் காதலிக்கலை மேலும் அவங்களுக்கு காதல் என்ற பெயரில் தான் சொன்னதை கேட்டு நடக்கும் அடிமை தான் தேவைபட்டாங்க.. எனக்கு யாருக்கும் அடிமையா வாழ்வதில்லை இஷ்டமில்லை. சில நாள் எனக்கு யாருமில்லையே என அழுதுஇருக்கேன்.. ஆனா இன்னிக்கு என் மீது நான் நினைச்சதை விடவும் பாசத்தை கோடிக்கணக்கான மக்கள் காட்டுறாங்க.. என்னை பார்த்தவுடனே காலில் விழும் மனிதரை தான் உங்களுக்கு தெரியும்..நிறையபேர்..என்னை பார்த்தவுடனே ஏதோ கடவுளை பார்த்த மாதிரி கண்கலங்கி தன்னோட கஷ்டத்தை சொல்லி அழுது இருக்காங்க..நான் இப்போ பெரிய பதவியில் இருந்தாலும் அவங்க எல்லோரோட கஷ்டத்தையும் போக்க முடியலை.. இருந்த போதும் அவங்க என்மேல் இன்னும் பாசமா தான் இருக்காங்க.. அப்போது செய்தியாளர் கேட்டர்..நீங்க பெரிய பதவியில் இருக்கீங்க உங்களால் எது நினைச்சாலும் நடக்குமே.. அதற்கு அவங்க ரொம்ப அருமையாகவும் அழகாகவும் பதில் சொன்னாங்க.சில நாட்கள்.தொடர்ந்நு ஓர் ஓர் மூதாட்டி வந்துட்டு இருந்தாங்க... அவங்களை பத்தி யாராலும் எந்த செய்தியும் சேகரிக்க முடியலை.. ஆனால் தன்னோட மகன் மருமகள் கைவிட்டு விட்டதாக சொல்லி இருக்காங்க.. எனக்கே ஆச்சரியமாக இருந்துச்சு
.ஓரே சேலையை கட்டிகிட்டு அந்த அம்மா தினமும் நான் காரில் போகும் போதும் வரும் போது கைகூப்பி கூப்பிட மாதிரியே இருப்பாங்க..எனது பாதுகாவலர்கள் போய் விசாரித்த போது கூட அவங்க.. என்னை பார்த்தா போதும் என்று தான் சொல்லி இருக்காங்க.
என் மனசுக்காள் ஏதோ பண்ணுச்சு அவங்களை சந்திக்க சம்மதித்தேன்... என்னை பார்த்தவுடனே ஓடி வந்து கட்டி பிடிச்சு கண்ணீர் விட்டு அழுதாங்க... எப்பவுமே என்னை விட்டு செக்யூரிட்டி பத்து அடி தள்ளி தான் நிப்பாங்க.. அவங்களுக்கு வேற விஷயம் பயமா இருந்துச்சு அவங்களை அப்புற படுத்த நினைப்பாங்க ஆனா என் மனசுக்குள்ள இவர்களால் நமக்கு எந்த பாதுகாப்பு குறையும் வராதுன்னு திடமா நம்புனேன்...
சில நிமிடங்கள் அழுதவங்க தன்னோட மகன் மகள் மருமகள் சொந்தம் எதுவுமே தனக்கு உதவலை என்று சொன்னாங்க..சரிம்மா அவங்க பெயரை சொல்லுங்க நான் உங்களை உங்கள் குடும்பத்தோட சேர்த்து வைக்கிறேன் என்று சொன்னேன்.அவங்க சொல்ல மறுத்தாங்க... என் பையன் பெயரை உங்களால் அவனுக்கு ஏதாவது கெடுதல் வந்துட கூடாது என்று சொன்னாங்க.. இங்க பாருங்கம்மா நான் உங்க பையனுக்கு கெடுதல் செய்ய மாட்டேன் என்ற போது அவங்க தயங்கி தயங்கி அந்த பெயரை சொன்னாங்க.... எனக்கு கீழே முக்கிய பொறுப்பில் இருந்தவர் அவர்.. எனக்கே ஆச்சரியமாக போச்சு.. நான் உடனே சொல்லுறேன் என்றவுடன் இல்லம்மா.. நீங்க சொன் தான் என் மகன் என்கிட்ட பாசமா இருக்கிற மாதிரி நடிப்பானே தவிர அது உண்மையான பாசமா இருக்காது... ஓர் வேளை நானும் உங்களை மாதிரியே வாழ்ந்து இருந்தா என்னை தேடியும் ஏதாவது ஓர் பாட்டி இப்படி வந்து பேசி இருக்கும் தானே.. என்னோட பதவி பட்டம் அந்தஸ்து என்கிற எந்த பயமும் இல்லாம ரொம்ப யதார்த்தமான பேசிய அந்த கிராமத்து பெண்மணி... ஏதாவது வேணுமா என்ற போதும் உங்களை பார்த்தே போதும் இனிமே நான் சாகுற வரைக்கும் இந்த நினைப்பே போதும் என்றாங்க... பிறகு வற்புறுத்தி சொன்னதாலே கொஞ்சம் பழம் மற்றும் ஸ்வீட் மட்டும் வாச்கிட்டாங்க.. நீங்க இந்த வயசான காலத்துல கஷ்டப்பட வேண்டாம். நான் கார் ஏற்பாடு பண்ணுறேன் என்றது.. நீங்க கார் ஏற்பாடு பண்ணி வீட்டுக்கு அனுப்பினா எனக்கு பெருமையா தான் இருக்கும் ஆனா இப்போ கிடைக்கிற மரியாதை கூட பிறகு நான் பெத்த மகன் தரமாட்டேனே என்ன செய்யுறதுன்னாங்க.. நீங்க யார் கூட வந்தீங்க.. வீட்டுல குலதெய்வம் கோவிலுக்கு போற தான் சொல்லிட்டு வந்திருக்கேன்.. இந்த வயசான காலத்துல பொய் சொல்லாமா அது தப்பில்லையா...
நம்ம குறையை கேட்குறது தானே குலதெய்வம் பதிலுக்கு அது பேசினாலோ பேசாமலே இருந்தா கூட நாம அவங்களை மனசுல கூம்பிட தானே செய்வோம்.நம்ம மனக்குறையை இறக்கி வைக்கிற இடம் தானே கோவில்..சாமி பேசவே பேசாது நம்ம குறையை கேட்டு வைச்சுக்கும்.. அதுக்கு நம்மை விட ரொம்ப அறிவு ஜாஸ்தி.. நான் பஸ்ல போறேன் என்று கிளம்பி போனாங்க.. ஓர் வாரம் கழிச்சு நான் அவரை கூப்பிட்டேன்.. நான் உங்க வீட்டுக்கு வரணும் என்ற நாலைஞ்சு வருஷமா என்னோட P.A கிட்ட நேரம் கேட்டதா சொன்னாரே உண்மைதானா கேட்டேன்.. அவர் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து.. நீங்க என்னை வயிற்றில் சுமக்காத தாய்... நீங்க வந்தா எங்க வீடே சுபிட்சம் ஆகும் என்று கண்ணீர் விட்டு அழுதார்.. எனக்கு அவங்க அம்மா சொன்ன ஓவ்வொரு சொல்லும் நினைவு வந்துச்சு.. தயாராக இருங்க.. நான் ஓர் நாள் உங்கள் வீட்டுக்கு வருவேன்.. உங்க அம்மா அப்பா மற்றும் குடும்பத்தில் உள்ள எல்லோருடனும் சேர்ந்து ஓர் நாள் மதிய உணவு பண்ணுற மாதிரி ஏற்பாடுகள் பண்ணுங்க என்றேன்.பதிலுக்கு எப்போ எந்த நாள் என்று கூட கேட்காம சரிங்க உங்க உத்தரவுன்னு கிளம்பி போனார்.. எனக்கு சிரிப்பா வந்துச்சு ஓர் வேளை இதே மாதிரி இவங்க அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தா நீங்க எப்போ வருவீங்க உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று பல கேள்விகள் கேட்டு இருப்பாங்க ஏன்னா அது உண்மையான அன்பு...இவர் ஏதோ பதவிக்காக கூழை கூம்பிடு போடுறாரே தவிர உண்மையான அன்பு கிடையாது..
இரண்டு வருஷம் கழிச்சு அவங்க மாவட்டத்தில் ஓர் நிகழ்ச்சிக்கு போகும் போது அவங்க வீட்டுக்கு போறதா ஏற்பாடுகள் செய்யப்பட்டது..
அவங்க அன்று காலையில் இருந்தே அவங்க அம்மா எனக்காக காத்து இருந்திருக்காங்க.. ஏதும் சாப்பிட இல்லை என்று வீட்டில் உள்ளவங்க எல்லாம் சொன்னாங்க... நீங்க ஏன்ம்மா சாப்பிடலை என்று கேட்துக்கு..வயசாயிடுச்சுல்ல அதனால் ஓர் வேளை சாப்பிட்டாலே பிறகு சாப்பிட கஷ்டமாகுது.. நீங்க வருவதா பையன் சொன்னான் அதான் உங்களோட சாப்பிடணும் என்று காத்து கிடந்தேன்... நான் சாப்பிடும் போது கூட உட்கார்ந்து கவனிச்சாங்க.. அவங்க கூட தனியி பேசணும் என்று சொன்னவுடனே அவங்க வீட்டில் உள்ள எல்லோருமே பயந்தாங்க.. எங்க அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சு அவங்களுக்கு சரியி பேச தெரியாது உங்க மனசு கஷ்டபடுற மாதிரி ஏதும் பேசிட கூடாதுன்னு
ஓர் பார்வை நான் பார்த்தவுடனே எல்லோரும் எங்களை தனியா விட்டுட்டு தள்ளி போனாங்க..
என்னம்மா இப்போ உங்க பையன் உங்களை நல்லா பார்த்துக்கொள்ளுறாரா...
உன்னை பார்த்துட்டு வந்து ஓர் மாசத்துக்கு பிறகு தான் என் பையன் என்கிட்ட வந்தான் அப்போது இருந்து என்னை பழைய மாதிரியே பார்த்துக் கொள்கிறான்... ஆனாலும் மனசுல ஓர் சின்ன வருத்தம்..
என்னம்மா சொல்லுங்க... உன்னை வந்து பார்த்துட்டு வந்து நான் செஞ்ச தப்பு போலே..
ஏன்ம்மா இப்படி சொல்லுறீங்க.
நீங்க வீட்டுக்கு வருவதா சொன்ன பிறகு தானே என் பையன் என்கிட்ட பாசமா இருக்க ஆரம்பிச்சான் இன்னிக்கு நீங்க வந்துட்டீங்க.. நாளையில் இருந்து என் மகன் திரும்பவும் பழையபடி ஆயிட்டா.
அந்த அம்மா சொல்லவும் எனக்கு பயம் தூக்கி வாரிபோட்டுச்சு..ச்சே இந்த விஷயத்தை நான் யோசிக்கவே இல்லையே.
அப்போ அந்த அம்மா சொன்னாங்க.. ஓர் வேளை என்னோட பையன் பழையபடி மாறினாலும் நான் கஷ்டப்பட மாட்டேன்.. ஏன்னா அன்னிக்கு பிச்சைகாரி மாதிரி ஓரே சேலையை கட்டி கிட்டு உங்க வீட்டு வாசலில் வந்து நின்ன போது.. எத்தனையோ பணக்காரங்க உங்களை பார்க்க காத்து கிடந்த போதும் நீங்க என்னை கூப்பிட்டு பாசமா பேசுனீங்களே அந்த அன்பு ஓண்ணு போதும் தாயே...அப்படன்னு சொல்லிகிட்டே என்னோட கன்னத்தில் முத்தம் கொடுத்தாங்க அந்த நிமிஷத்துல என்னை பெத்த தாய் முத்தம் கொடுத்தது போல் இருந்துச்சு...
தெரிஞ்சோ தெரியாமலோ என்னை பார்க்க வந்தவங்க குலதெய்வம் கோவிலுக்கு போறதா பொய் சொல்லிட்டு வந்தாங்களே....
அடுத்த நாள் அவரை என்னோட அலுவலகத்தில் கூப்பிட பேசினேன்.. உங்களின் அம்மா ஓவ்வொரு நாளும் நீங்க நல்லா இருக்கணும் என்று பிராத்தனை பண்ணுறாங்க அவங்க எனக்கு கூட சில ஆன்மீக விஷயங்களை சொல்லி தந்தாங்க..அவங்களை நல்லா பார்த்துக்கோங்க என்று அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்துட்டு சொன்னேன்...உங்க அம்மா ஆசிர்வாதம் இருந்தா நீங்க இன்னும் பெரிய இடத்துக்கு வருவீங்க என்று..
..
ஓர் வகையில் பார்த்தால் இது தான் அன்பு... இதே மாதிரி நிறைய நிகழ்வு என் வாழ்வில் நடந்து இருக்கு.. சிரித்தபடியே சொன்னவரின் வசனங்கள்...