737 - கருணாநிதி டீ குடிச்ச கதை தெரியுமா

கருணாநிதி தன்னுடைய ஆரம்ப  காலத்தில் டீ குடிக்க கூட காசில்லாம கஷ்டப்பட்ட போது எங்க தாத்தா தான் தினமும் அவரை சைதாப்பேட்டையில் உள்ள பெரிய ஹோட்டலுக்கு அழைத்து சென்று டீயும் காப்பியும் வாங்கி கொடுப்பாரூ... இப்போ அவங்க புள்ள குட்டிகள் எல்லாம் பெரிய பணக்காரங்களா ஆயிட்ட பிறகு அவங்களுக்கு நம்மை எல்லாம் நினைச்சு பார்க்கவும் நேரம் கிடையாதே..எங்க தாத்தா மாசத்தில் குறைந்த பட்சம் இரண்டு தடவையாவது இந்த கதையை என்கிட்ட சொல்லுவாரூ... ஓரே கதையை எத்தனை தடவை சொன்னாலும் நானும் சலிக்காம கேட்டுக் கொண்டே இருப்பேன்...அட நீங்க வேற இது ராமன் ஷங்கர் எழுதிய கதை இல்லை தலைவரே....

என்னை விட ரொம்பவே நிறைய புனைவு கதை சொல்பவர்கள் இந்த உலகில் இருக்காங்க என்பதற்காக நான் கேட்டதை எழுதுகிறேன்.


இந்த கதையை படித்து பார்த்து விட்டு நீங்க கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி...1950-ல் சைதாப்பேட்டையில் எந்த ஹோட்டல் இருந்தது.. அப்படி இருந்தாலும் காலையில் வடையெல்லாம் போட மாட்டாங்களே. அந்த காலத்தில் இட்லி பொங்கல் மட்டும் தான் உண்டு.

வாகன வசதி இல்லாத போது பத்து கி.மீ தள்ளி வந்து ஒருத்தர் வீட்டுக்கு வெறும் காப்பியும் வடையும் சாப்பிடுவதற்காக ஓருவர் வருவாரா...

அப்படி அவர் வந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா.அப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றும் பொய் பேசும் மனிதர்கள் நிறைய பேர் இருக்காங்க..

தனது உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்  வாழ்க்கையில் உயர்ந்த ஓர் மனிதனை நேரில் கூட சந்திக்காத பலர்.. அந்த மனிதனை நேரில் சந்தித்தது போலவும் அவருடைய வெற்றிக்கே இவர் தான் அச்சாணியாக இருந்து செயல்பட்டது போலவும் பொய்யாக பேசுவது சாதாரண மனிதனின் இயல்பே...இது தவறு அல்ல..  

பொய்களை பேசி வாழ்பவன் முன்னேறுவதில்லை. உண்மை பேசும் மனிதனே வாழ்வில் செல்கிறான்.. ஏனெனில் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்ற பலரும் தனது ஆரம்ப காலத்தில் சிலரின் பொய்களால் தனது முதுகில் குத்து வாங்கியவர்கள் தான்.

தன்னை முதுகில் குத்திய கோழை மனிதனின் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தங்களின் வாழ்க்கை முறையை வேறு ஓர் தளத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

அவர்கள் யாரையும் ஏமாற்றியதில்லை, ஆனால் ஏமாந்த கதையை யாரிடமும் சொல்லி பச்சாதாபம் தேடியதுமில்லை.

இறைவனின் தனக்கு வைக்கும் சோதனைகள் இவை என்றே கடந்து சென்றனர்.. அவர்கள் போகும் வழியில் அவர்களை நோக்கி பூக்களும் வெற்றி மாலைகளும் சூழந்து வந்தது.ஆயினும் மாலையும் மரியாதையும் கூட திகட்டிப்போனதால்.


அமைதியான வாழ்வை வாழ்கின்றனர், தன்னை போலவே உண்மையை மாத்திரம் தேடி உண்மையாய் வாழ்ந்த மனிதர்களின் கூட்டத்தில்.

இங்கே முதுகில் குத்துபவர்கள் யாருமே கிடையாது. இவர்கள் அனைவருமே முகத்திற்கு நேராக பேசும் தைரியசாலிகள்.


எனவே தான் செல்கின்றனர் வெற்றி வாகை சூடுகின்றனர் தாங்கள் எடுத்து வைக்கும் ஓவ்வொரு செயலிலும்.


எல்லா மதமும் சொல்லும் தத்துவத்தையும் அலசி ஆராய்ந்து பாருங்கள்.உங்களுக்கே உண்மை புரியும்.

உண்மையும் தைரியமும் இருக்கும் இடத்தில் தான் இறைவன் வசிக்கிறார்.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...