741 - கவிதை தலைப்பு - எங்கிருந்தோ வந்தவளே

எங்கிருந்தோ வந்தவளே....

இதயத்தில் நுழைந்தவளே...

தூணின் மறைவில் நின்று

தூரமாய் ரசித்தவளே...

தோல்வியில் துவண்டு..

காதல் ஏதுமின்றி 

கற்சிலையாய் கிடந்தவனை....

கற்கண்டாய் மாற்றியவளே...

பெற்றவர்களின்

நடுவே நடந்துவரும்

பெண் போல் அல்லாமல்...

தன்னந்தனியாக வந்த தாரகையே..

வாருங்கள் என்றவுடன்

தயங்காமல் வந்தாயே...

என் மீது உனக்குத்தான்

ஏன் இந்த நம்பிக்கை...

வலப்பக்கம் வந்து நின்று

மயில் வாகனத்து வேலவனை

வணங்கிய கண்மணியே...

மனதினுள்ளே எத்தனை 

தேடல்களோ நான் அறியேன்...

தேவை தான் புரிகிறது என்று 

சொல்லி விட்டாயே...

எதுவுமே தேவையில்லை

என்றே சுற்றியவனை....

சிந்திக்க வைத்தாயே...

தேவைகள் புரிந்த பின்னே

தேடுகிறேன் தேவதையே...

உள்ளத்தின் அன்பு

அதை தானே தேடுகிறேன்..

எத்தனை எத்தனையோ...

மனிதர்கள் கண்ணெதிரே....

ஆனாலும் உன்னை போல்

ஓருவருமே இல்லையடி..... கண்மணியே.

எதிர்பார்ப்பு ஏதுமின்றி

உடன் வந்த தேவதையே...

தேனீர் கடை போகலாமா... அல்லது

சாப்பிட போகலாமா

இருவருமே கேட்கவில்லை...

கண்மூடி இருந்தவனின்

கண்களை அன்பெனும்

நம்பிக்கை கொண்டு திறந்தாயே...

காதல் என்பதே நம்பிக்கையின்

தொடக்கம் தானே... மஞ்சள்

நிற சுடிதாரில் வந்த

மஞ்சள் நிற தேவதையே... அன்றுமுதல்

நானும் கூட காவியை

கிழத்துப் போட்டு

மஞ்சளுக்கு மாறிபோனேன்...

தேடல்களை தேடிப் போனேன்...

.

.

கவிதை என்பதே கற்பனையின் வெளிப்பாடு...

இந்த பதிவு முழுவதும் ஓர் கற்பனை பதிவே.இதை யாராவது உண்மை என்று நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல....

.

கற்பனைகளை நிஜம் போல எழுதுவதே காவியம்... மாபெரும் கவிஞன் காளிதாசன்..எழுதியதே சகுந்தலை என்னும் காவியம்...


.

பாரத நாட்டின் காவியங்களை மொழிபெயர்ப்பு செய்வது பெரிய வேலை. இராமாயண மகாபாரத கதைகளை சொல்ல நான் ஒன்றும் வித்வான் அல்ல.. படித்தேன் புரிந்ததும்...

இந்திய புராணங்களும் இதிகாசங்களும் மீண்டும் மீண்டும் சொல்லுவது ஓன்றே விதி அதன் படியே உலகம் இயங்குகிறது...

கர்மா, உயிர்,ஆன்மா, மறுபிறப்பு, இதை பற்றி சொல்லி புரிய வைப்பது கடினமான செயல்...

காதல் கதையும் கவிதையும் எழுதுங்கள்..

காதல் ஓன்றே அனைத்தும் புரிய வைக்கும் ஏனெனில் 

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது

நாதன் நாமம் நமசிவாயவே"

.


உணர்ந்து பாருங்கள்..அன்பே சிவம்..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...