யாதவரின் செல்லப்பிள்ளை



அவனின் வரவிற்கு காத்திருந்தாள் ராதை...
சில பொழுது கழிந்த பிறகு.... 
புல்லாங்குழல் இசைத்தபடி.....
தனக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பது போல.. 
தனது மாடுகளை மேய்த்தவாறு வந்தான் அந்த மாயவன்.....
காட்சியை கண்டு கோபத்தில் அவளுக்கு
தோன்றியது ஓர் எண்ணம்....
ஏய் கபடதாரி... 
உனது ராதையிடமே நாடகமா.. 
உள்ளம் கவர்ந்த மாதவனே.........
என்னையா தவிக்க விட்டாயே.....
உன் தவிப்பை பார்க்க எனக்கும் ஆசைதான்...
ராதை மறைந்து நின்று வேடிக்கை பார்த்தாள்..
எதுவுமே தெரியாத அப்பாவி போல...
வந்தமர்ந்து புல்லாங்குழல் ஊதினான்......
யாதவரின் செல்லப்பிள்ளை...
சில நிமிடங்களில் தவித்துப் போய்...
அவன் அருகில் வந்து தோள்களில் 
சாயந்தவளின் கன்னங்களை விரல்களால்
வருடி விட்டபடி ......
"உன்னை காணாமல் என் கண்கள் 
எப்படி தவித்து போயின தெரியுமா". கேலி செய்தான்...
செல்லமாக சிணுங்கினாள்....
கோபத்துடன் கேட்டாள் அந்த கோதை பெண்...
கண்ணா என்னிடம் கூட ஏன் இத்தனை பொய்கள்.......
எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல்...
சிரித்தான்.... .
பகவத்கீதை சொன்ன குசேலனின் நண்பன்...

நீர் குமிழி

நீர் குமிழி
வாழ்க்கை.
இதற்குள் தான்
எத்தனை
அதிகார போட்டி

யானை மரிக்கவில்லை

யானை எப்படி செத்துச்சு.
ஏதனால் தண்ணீரில் போய் 
ரொம்ப நேரம் நிக்குது என்றே
கேட்கும் கள்ளமில்லாத 
குட்டி குழந்தைகளுக்கு 
எப்படி சொல்வது
அவர்களின் முகத்தில் 
யானையின் பிரிவு
நினைத்து மெளனம் - அந்த யானை
தன்னை தானே
தனிமைப்படுத்தப்படுத்தி
கொண்டு யாரையும்
தொந்தரவு செய்யாமல்
தன் உயிர் விட்டது யானை
வயிற்றில் இருந்த குட்டியோடு
தன் வேதனை தன்னுள்
அடக்கி ஜலத்தில்
அடக்கமானது...இனியோரு
விதி செய்வோம்...
இயற்கை போற்றுவோம்
யானை மரிக்கவில்லை.
ஒற்றை கொம்பனும்..
இன்னும் பல யானைகளும்
உயிர் வாழ்கின்றன
எம் வீட்டின் குழந்தையின்
மனதில். பெரியவனாகி
யானைகளை காப்பாற்றுவேன்
என்று கண்கலங்கிய
சிறுவனின் மனதை
வென்று விட்டாயே
கர்ப்பிணித் தாயே... அல்ல
கர்ப்பிணி யானையே..

தமிழ்

இதுவரையில்
படித்ததை விட
இன்னும் இருக்கிறது
படிப்பதற்கு 
அதிகமாக 
சொற்கஞ்சியம்
தமிழ்

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...