இரவும் பகலும் கலந்தது
திறமைசாலியே
யாரையும்
குறைத்து மதிப்பீடாதீர்கள்.....
கடுகு சிறிது ஆனாலும்
காரம் குறையாது..
இறைவனின் படைப்பில்
அனைவரும்
ஏதோ ஓர் விதத்தில்
திறைமைசாலியே......
அரசியல் அதிகாரம்.. .
பலரின்
அடிமனதில்
அரசியல் ஆசை
துயில் கொள்கின்றது...
அதில் சிலரே துயில் கடந்து
விழிப்பு நிலைபெற்று
விழிப்புடன் தேர்த்திருவிழாவும்
தோற்றுவிடும் தேர்தல் கூட்டத்தில்
அவர்களில் சிலரால்
மட்டுமே சரித்திரத்தில்
இடம்பெற முடிகிறது.....
பதவியில் அமரவும்...
அமர்ந்த பின்னரும்
வெளியே சொல்ல முடியா
வேதனை கதைகளை
மனதில் போட்டு
புதைத்து விட்டு
அடுத்தவருக்காக உழைத்து
சிரிக்கும் யதார்த்தமே
அடைய நினைக்கும்..
அடைந்து விட்ட...பதவியே
அரசியல் அதிகாரம்..
காதல்
அலுவலக நாகரீகம்..
அலுவலக நாகரீகம்...
.
.
.
பல வருட உழைப்பில்
ஓரு நாள் கூட
புகழாமல்
ஏசியும் பேசியும்..
வேலைவாங்கிய
மேலதிகாரிகள்..
இன்றோ அனைவரும்
புகழ்ந்து தள்ளுகிறார்கள்..
வார்த்தைக்கு வார்த்தை
திறமைசாலி..பொறுமைசாலி...
பொறுப்பானவர்.....
இவரைப்போல
ஓருவர் உண்டா....
ஏனென்றால்
வழியனுப்பும் போது
வலிக்காமல் அனுப்புவது
அனைவரும் செய்யும்
அலுவலக நாகரீகம்
என் காதல் கண்ணா.
.
.
யாதவனாக பிறக்காத என்னை கண்இமை மணி போல காப்பாற்றும் யதுகுல கிருஷ்ணா...என் இதயம் நித்தமும் நினைத்து துடிக்கிறது உன் வரவிற்காக...
வா..வா...கண்ணா...
உன் நெஞ்சில் சாய்ந்து கொஞ்சிடவே கெஞ்சலுடன்
துடிக்கிறேன் கண்ணா....
உன் வாய்மொழி கேட்க
ஆசையில் தவிக்கிறேன்...
கீதையின் போதனைகள்
எனக்கு உதவாது.... புரியவும் முடியாது..
உன்னை காணும் பேறு
எப்போது கிட்டும்...
வா..வா...கண்ணா....
கீதை சொன்ன மன்னவனே...
ஏழைகளின் காவலனே...
உனக்காக வெண்ணெய்.....
ஏறிட்டுப் பாரடா... ஏழைகள் துயர் தீர...
இன்னும் ஏன் சோதனை...
உன் தொடவில்லையா என் சாதனை...
மயிலறகு சிந்தனை தந்தவனே...
மாதவா என்றேன்..ருத்ரனும்
நான் என்றாய்...
சர்வமும் நீ என்றால்....
உன்னை கண்டு விட முடியாமல்..
ஏழை பேதையாய்....
மனமெனும் குதிரை அடங்க மறுக்கின்றது..
அங்கே உன் வரவு எப்போது....
அன்போடு அழைக்கிறேன்...
பஞ்சணையில் பெண்மையை
அடக்கி துயிலசொல்லும்....
மன்னவர் வேண்டாம்...
புல்லாங்குழல் இசை போதும்...
உன் தோளில் சாயும்
சில நொடி இன்பம் போதும்...
மாயையில் மயங்குகிறேன்...
மாதவனே...மலையரசியின்
தமையனே....
சிவனையும் மயங்கிடும்
மாயா மோகினியே வந்து விடு...
மனித காதலில் தோற்றவளுக்கு
தெய்வீக காதலை காட்டியவனே..
விரல்களும் பட வில்லை...
விரக தாபம் எனக்கில்லை...
உண்மை காதலைத் தானே நித்தமும்
தேடித் தேடி அலைந்து பின்னர்...
உன்னருகே அமர வைத்து அன்பும்
அமைதியை காட்டியவா....
கட்டியணைத்து முத்தமும் இடவில்லை...
ஆடைகளை சரித்தே சோதித்த போதும்...
கண்களில் சலனமில்லை...
பரந்தாமன் சிந்தனையை
பரமனும் பார்வதியும் கூட
அறியாமல் வைத்தவனே
தள்ளியே நின்றாய்... தவிக்க விட்டாயே...
உனது விரல்களுடன் விரல் கோர்த்து...
வீதியில் நடைபயில அனுமதி கொடுப்பாயா..
பூட்டி வைத்த இதயத்தில் எப்படித்தான்
விருப்பத்துடன் நுழைந்தாயோ..
கோட்டைகளும் சிலநொடியில்
தகர்ந்திடுமே உன் கண்இமையில்த்
எத்தனை வல்லமையா.
பணத்தை விட பெரிய அதீதமான
பாசத்தை காட்டிவிட்டாய்..
எப்போதும் நீயே என் காதல் கண்ணா...
கோமாளி உலகம்
நல்லவனாக,
பாசக்காரனாக,
அன்பானவனாக,
இருந்தால்
உலகம் மதிக்காது
பணக்காரனாகக்கும்
பதவிக்கும் பட்டத்திற்கும்
மாத்திரமே ஆராதனை
செய்யும் போலின
கோமாளி உலகம்
அன்பு அம்மா...
உலகத்தை
வென்று
காலடியில்
சரித்தவள்...
கடைக்கு குட்டியின்
துடுக்கு பேச்சில்
வாயடைத்து போய்
பதில் தெரியாமல்
தவிக்கும் போது அவளும்
ஓர் சாமானியனின்
அன்பு அம்மா...
காதல் முடிச்சு
காதல் முடிச்சு..
.
அவளின்
வியர்வை
அவனின் மீதும்.
அவனின் வாசனை
அவளின் மீதும்
எதிர்பாராமல்
உரசிய போது
கட்டி இழுத்து
போட்டது
அவர்களை
காதல் முடிச்சு..
பத்திரம்
பணம்
வாழ்க்கைக்கு
தேவை தான்...
அதை காட்டிலும்
பாசமும் அன்பும்
அதிகமாகவே தேவை
மனித அன்பினை...
மூலதனமாக
வருங்கால சந்ததியினர்
சொத்து பத்திரம்...
சொந்தங்களும்
பத்திரம்...
வேகத்தை
பணத்தை
தேடி ஓடும்
போட்டியில்....
மனிதன் ஓடும்
ஓட்டத்தின் வேகம்....
ஒளியின் வேகத்தை
கண்டுவிட்ட மனிதனும்
கணிக்க முடியவில்லை...
சில நேரங்களில்
சொந்தகளையும்
நண்பர்களையும்...
பிடித்து தள்ளி விட்டு
தொடருகிறான் மனிதன்...
கணிணி யுகத்தில்...
கணிக்க முடியாத
பணத்தின் மீதான ஓட்ட
வேகத்தை...
கனவு உலகம்
வென்றவன்
சொன்னால்
வேதம்....சாஸ்திரம்..
வெற்றி மொழி
இன்னும் அடைமொழி..
பலப்பல.. தோற்றவன்
வாழ்வில் தான்
சிதறிக்கிடக்கிறது
அனுபவங்கள் பல...
வென்று விட்ட ஓருவனை
பின்தொடர ஆயிரம் நபர்கள்
தோற்றவனின் அனுபவத்தை
ஏனோ கேட்க மறுக்கிறது
கனவு உலகம்....
வாழ்வில் தோற்றவனின்
புலம்பல்களே
நான் கண்ட பேட்டிகள்....
போட்டி உலகில் தனிமை
தேடும் உயர்ந்த பிறவிகள்..
கவிதையாய் கதையாய்
சிறகு விரிக்கிறது எனது
எழுத்துக்களில் ... அவர்கள்
தோல்வியடைவில்லை....
அவர்களின் உண்மையே
வென்றது..... ஏகாந்தம் தரும்
உணர்வும் உணர்ச்சியும்...
காதலின் மேன்மையும்..
வார்த்தைகளில் வடிப்பது கடினம்
பலகோடிபணத்தை விட பாசத்தை
சேர்த்து விட்ட சொந்தங்கள் இவர்கள்
எண்ணற்ற நிம்மதி இன்றும்
அவர்களின் வசத்தில்
நாரதர் வரவில்லை
பிறர் பசியை
போக்க
பிக்பாக்கெட்
அடித்தவனை
மரத்தின் கட்டி
அடித்தனர்...ஏனோ
அடுத்தவரின் பலவருட
உழைப்பை
வரதட்சணையாக
சுரண்டியவனை
வாய்நிறைய
புன்னகையுடன்
அழைக்கிறார்கள்
மாப்பிள்ளை வாங்க....
சீர்சனம் போதுமா....
வரதட்சணை வாங்க
தெரியாத அந்த நல்லவன்
வறுமையின்
கொடுமையால்
குடும்பத்தை காக்க
மாறிவிட்டான்.....
தன் பிள்ளையின்
பசியாக திருடியவன்...
அவனுக்கு ராமநாமம்
சொல்லி கொடுக்க
ஏனோ இன்னும்
நாரதர் வரவில்லை...
சாப்பாடு
நினைத்தை
மட்டுமே
சாப்பிடுபவர் - பணக்காரன்
பிடித்ததை
காத்திருந்து
சாப்பிடுபவர் - நடுத்தர வர்க்கம்
கிடைத்ததை
மட்டுமே
சாப்பிட வேண்டிய
கட்டாயத்தில் - ஏழைகள்..
அர்த்தம்
என்னடா
வாழ்க்கை என்றே
அலுப்பு தட்டினால்
சரியான பாதையில்
வாழ்க்கை பாதையில்
சராசரி மனிதனாய் நீ
நடை பழகிவிட்டாயென்றே
அர்த்தம்..
God Vs Currency Vs Politicians
God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
தூரத்தில் இருந்து பார்த்தால் பஞ்சணை ஓத்த அரியணை சிம்மாசனம் அரிமா அமர்ந்த அதில் அமர்ந்திட வேண்டித்தான் புள்ளிமான்களுக்குள் போட்டி..... காடு...