செல்லமகள்

அப்பாவின்
கோபத்தில் உள்ள
அக்கறை நன்கு
உணர்ந்தவள்
அவனின்
செல்லமகள்

வாழ்க்கை

இருப்பதை
இல்லாதது போலவும்,
இல்லாத ஓன்றை
இருப்பது போலவும்,
கற்பனை செய்வதில்
தான் செல்கிறது
வாழ்க்கை

T20 Cricket

Blood
pressure
fluctuate,
like sharemarket
while
watching
My favorite T20
Cricket match

Rain

Mostly it
came before
and after
school time,
because
they too like
cute children
always...

தினமும்

தேடிய
செல்வமும்
தொலைத்த
பொருளும்
மனிதனின்
நிம்மதி எனும்
முதலுக்கு
தூக்கத்தை
வட்டியாக
வசூலிக்கிறது
தினமும்

அழைக்காதே

களிமண்ணில்
செய்யப்பட்ட
என்னிடத்தில் தான்
எத்தனை வேண்டுதல்கள்
விநாயகா என்று -
உன் கோரிக்கை
முடியும் வரையாவது என்னை
கடற்கரைக்கு
அழைக்காதே 

எல்லோருக்கும்

மனிதர்களின்
சுயநலம் வெறுத்து
தனிமையினை
தேடி அலைந்து
மனித சஞ்சாரமற்ற
மலையுச்சில்
அமர்ந்த போது
ஊரின் அமைப்பு
கண்களுக்கு
அழகானது - மனம்
நன்றி சொல்ல
துடித்தது
எல்லோருக்கும்

சுடிதார்


மூன்று
மணிநேரம்
துணிக்கடையினை
புரட்டிப்போட்டு
அலசி ஆராய்ந்து
வாங்கிய சுடிதார்-
உன் கலருக்கு
சரியில்லை யென்று
சாதாரணமாக
சொல்லி விட்டாள்
தோழி

அருமைப்புருஷன்



நேற்று இரவு
சண்டைக்கு  சமாதானம்
பேசாமல் சமையல்
செய்யும் போது
பூனை போல
பின்னால் நின்று
கேட்டான் ஒரு
கப் காபி
அருமைப்புருஷன்

செல்லாது


அவள்
பேசுவதெல்லாம்
பொய்யென்றே
அறிந்த பின்பும்
தலையாட்டிய படி
கேட்டுக்கொண்டேன்
மனைவியிடம்
எதிர்ப்பு
செல்லாது

தமிழ்


பொதிகையில்
பிறந்து
முச்சங்கத்தில்
தவழ்ந்து
கடல் கடந்தும்
பயணப்பட்டு
இன்றும் தன்
இளமையுடன்
உலகமெல்லாம்
பரந்து விரிந்து
இயல் இசை
நாடகத்தால்
 பறைசாற்றுகிறது
அன்பினை
அன்னை மொழி
 தமிழ்

தெனாலிராமனின் 25-வது கவிதை படைப்பு மகாகவி

உனது
எழுத்தில்
மயங்கிய
மன்மத
கூட்டம்
எண்ணிலடங்கா
தமிழகம்
செய்த
மாதவம் - நீ
மகாகவி
பாரதி

தெனாலிராமனின் 24 -வது கவிதை படைப்பு கிருஷ்ணா

நான்
கல்லூரியில்
படிக்கவில்லை,
போலியான
வார்த்தை
பகட்டு பந்தா
எனக்கில்லை,
ஆனால்
மாடுகளை
மயக்கிய உன்
காலடியில் என்
வம்சமே தஞ்சம்
கிருஷ்ணா 

தெனாலிராமனின் 23 -வது கவிதை படைப்பு சொன்னார்


4 டேபிட் கார்டு
(Debit card)
இருந்தும் என்
பணத்தை
எடுக்க முடியாத
நிலை காரணம்,
மனிதர்கள் அல்ல
கம்யூட்டர் தான்
அதிகாரி சொன்னார்

தெனாலிராமனின் 22-வது கவிதை படைப்பு புளி - கிராம பொருளாதாரம்

ஒரு சிறு விஷயம் தான், ஆனால் நம் கிராம பொருளாதாரம், குறைய  இதுவும் காரணம் தான்

200 வருடங்களுக்கு முன்னால் சாலையின் இரு பக்கம் புளிய மரக்களை
நட்டு வைத்தனர். வெயில் அதிகமான காலத்தில் புளிய மரத் த தடியில் வெயில் தாக்கம் இல்லாமல் குளுமையான காற்று வீசும். கிராமத்திற்கு தேவையான புளி எளிய வழியில் கிடைத்தது.
சுற்றுசுழல் பாது காக்கப்பட்டது.
இன்று புளி விலை என்ன.. யோசிக்க நேரம் இருந்தால்...

தெனாலிராமனின் 21-வது கவிதை படைப்பு முயற்சி

எனது
எழுத்துக்கள்
இலக்கியம் அல்ல,
கவிதையும் அல்ல,
நான் சந்தித்த
மனிதர்கள்,
பார்த்த நிகழ்வுகள்
என் எழுத்தில்
பதிவு செய்யும்
முயற்சி

தெனாலிராமனின் 20-வது கவிதை படைப்பு பாதுகாப்பு

சில நல்ல
இதயங்களுக்கு
மெதுவாகவே
புரிகிறது
கோபம்
ஒன்று தான்
நல்லவனுக்கு
பாதுகாப்பு 

தெனாலிராமனின் 19-வது கவிதை படைப்பு விரும்புவது

எத்தனை
வாழ்த்துக்கள்,
வசதிகள்,
வந்தாலும்
சுதனே  - உனது
முள் கீரிடமே
நான்
விரும்புவது

தெனாலிராமனின் 18 -வது கவிதை படைப்பு வசந்தம்

   
வசந்தம்

எத்தனை
கஷ்டத்தோடு வந்தாலும்
அப்பா என்று
ஓடிவந்த
குழந்தை
வாழ்வின்
வசந்தம்

தெனாலிராமனின் 17-வது கவிதை படைப்பு நண்பன்

 நண்பன்

பத்து வருடம்
பழகியவரை விட
சில நிமிடம்
பழகிய  புதிய
நண்பனை
நம்புகிற
ஏமாளி
மனிதன்
எனது
நண்பன் 

தெனாலிராமனின் 16 -வது கவிதை படைப்பு விடுவதில்லை

எப்பொழுது
எப்படி
எவன்  நம்
முதுகில்
குத்துவான்
தெரியாது ,
இருந்தாலும்
என்ஆசை
"அரசியல்"
 விடுவதில்லை

தெனாலிராமனின் 15-வது கவிதை படைப்பு ஞாநி

        ஞாநி

ஞானமற்றவனை
கூட யோசிக்க
சொல்லி தந்தவர்,
வரிகளை
நம்மிடம் விதைத்து,
பல மனித
மனங்களில்
உண்மையை
தேடச் செய்தவர்,
தமிழ் போற்றிய
நடு  நிலையாளர்,
எங்களின் அருமை
வழிகாட்டி
'ஞாநி'

தெனாலிராமனின் 14-வது கவிதை படைப்பு என் வரம்

உலகம் முழுவதும்
சுற்றினாலும்,
எத்தனை மனிதரை
சந்தித்தாலும்,
பூக்களை கண்டவுடன்
நினைப்பது என் தாயும்,
ஓற்றை ரோஜாவிற்காக
அடம் பிடித்த
அன்பு தங்கையும்
பணத்தை விட
பாசத்தை போதித்த
இவர்கள் என் வரம்



100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...