என் இரு காதலிகள்

 ஒருத்தி என் நிழலை கூட தொடாமல் தள்ளி நின்று ரசித்தவள்... இன்னொருத்தி கைகளை தொட்டு காதல் இம்சை செய்தவள்...


என்னது உனக்கு இரண்டு காதலியா...

உனக்கு கூட காதல் இருக்கா என்பது புரிகிறது மேற்கொண்டு படியுங்கள் நண்பர்களே உங்களின் சந்தேகம் தீரும்.

என் முதல் காதலி அவள்... தன்னை யாருமே புரிந்து கொள்ள வில்லை இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்வதற்கு பதிலாக வாழ்வை முடிச்சுகிட்டா கூட நல்லது தான் என்று சில நாட்கள் அல்ல பல நாட்களுக்கு யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டவள்.

"யாருக்குமே தெரியாது என்று நீதான் சொல்லுறே பிறகு எப்படி உனக்கு தெரியும்".. ஆமாம் எனக்கு நல்லாவே தெரியும் அது மட்டும் அல்ல அவள் பிறரிடம் சொல்லாத வலிகளை கூட அறிவேன்.ஏனென்றால் என் வருகையை எதிர்பார்த்து நான் வந்த பிறகு என்னை எப்படி யெல்லாம் கொஞ்ச வேண்டும் எனது அன்பிற்காக கெஞ்ச வேண்டும் என்று ஓவ்வொரு நாளும் தவித்தாள்.

அவளின் மனசாட்சி நானே.. என்னை மருகி மருகி உருகி காதலித்தாள்.ஆயினும் ஓர் முறை கூட I love you,  என்று உதட்டில் ஜோடனை செய்யாதவள். 

என்னை காதலிப்பதை தனது செயல்களால் உறுதி செய்வாள். எப்போதும் தண்ணீரையே வாழ்வாக கொண்டவள்.

என் கண்ணில் கண்ணீர் வந்துவிடக்கூடாது என்று எனக்காகவே வாழ்ந்தவள்...

மற்றொருத்தியோ என் வருகையை எதிர்பார்க்காமல் இருந்தவள்...

என் தலையெழுத்து இந்த வேலையை எல்லாம் செய்ய வைச்சுட்டான் அந்த ஆண்டவன்...

என் கூட படிச்சவங்க எல்லாம் நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலையில் இருக்காங்க.. என்னை பெத்தவங்க சரியா இருந்திருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்குமா..... தனக்கு கொடுத்த வேலைய வாங்கும் சம்பளத்திற்கும் அதிகமாகவே திறம்பட செய்தாலும் அடிக்கடி மனதில் உண்மையான காதலையும் அன்பையும் தேடியே ஓவ்வொரு நாளும் மனதிற்குள் புலம்பியவள்.. 

இந்த உலகத்தில் எல்லோரும் ஏதோ ஓர் விதத்தில் எதாவது ஓன்றை பிரதிபலனாக எதிர்பார்த்து தானே காதலிக்கிறாங்க....

என்னை பற்றி எந்த கேள்வியும் கேட்காம பார்த்தவுடனே என் மீது அன்பு செய்ய யாராவது என் வாழ்வில் வந்தா எப்படி இருக்கும் என்றாவது இந்த நினைவு வந்தாலும்.

ச்சே என்ன ஓர் அல்பதனமான ஆசை.இந்த உலகத்தில் உப்பு வாங்கணும் என்றால் கூட காசு கொடுத்தால் தானே கிடைக்கும்.

எதுவுமே கொடுக்காம எப்படி அன்பு செய்வாங்க. தன் முட்டாள்தனத்தை தானே கேலி செய்து சிரித்து கொண்டவள்...

தன்னை சுற்றி இருக்கும் அனைவரிடமும் தான் மட்டுமே உலகில் மிகவும் சந்தோஷமாக இருப்பது போல நன்றாகவே நடிக்க தெரிந்த நடிப்பின் தேவதையவள்..

ஆமாம் அவள் நடிக்கிறாள் என்பதை முதல் பார்வையிலேயே தெரிந்து கொண்டேன்.

அவளைப் போலவே நானும் அவளின் முகத்தில் அன்பை உருவாக்க ஓர் முறை தான் சிரித்தேன்.அதுவும் கூட முகம் மலர்ந்து சிரிக்கவில்லை.

இதழ் ஓரமாக அவளுக்கு மட்டும் புரியும் விதமாக செல்லமாக சிரித்தேன்.. பிறகு தான் புரிந்தது அவளோ அன்பு அரக்கியென்று... என்னை வாரிமுத்தமிட்டாள்... முத்தம் மட்டும் கொடுத்தால் பரவாயில்லையே.. வாரியணைக்கும் போது இதுவரையில் தன் நெஞ்சில் அடக்கி வைத்திருந்த அன்பை கண்களில் வழியாக என் உடலின் மீது செலுத்த முயன்றாள்...

எனது நெஞ்சில் அவளின் இருதுளி கண்ணீர் பட்டதால் அதன் வெப்பம் தாங்காமல் சத்தமிட்டு அழுதேன்.


வெளியில் நின்றவர்கள் பேசும் சத்தம் நன்றாகவே கேட்டது முதல் நாள் அதனால் தான் இவ்வளவு சத்தம்.போக போக அவனுக்கு எல்லாமே பழகிடும்...

இன்னிக்கு அழுபவன் நாளைக்கு சிரிப்பான்..நம்மை எல்லாம் அவன் தானே காப்பாத்தணும்...

வெளியே இருப்பவர்கள் தன்னை கவனித்து விட்டார்கள் என்பதை நினைத்தவுடன் அவளின் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. 

 ப்ளீஸ்டா ரொம்ப பண்ணாத... எனக்கு எத்தனை பேர் லவ் லெட்டர் கொடுத்து இருக்காங்க தெரியுமா... ஆனா அவங்க எல்லாமே போலிடா என் உடல் அழகை பார்த்து காதலிக்கிறாங்க.. யாரிடமும் சொல்ல விரும்பாத சொல்லாத ரகசியங்களை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற தைரியத்தில் சொன்னாள்.

அடியே அன்பு கிராதகி... எதுக்கு டீ உன் கதையெல்லாம் என் மண்டைக்குள் திணிக்கிறே... என்னை விடுடீ  சீக்கிரமா நான் போகணும்.. என் இருந்தால் என் முதல் காதலி என்னை அங்கே தேடிக்கிட்டு இருக்கிறா... என்னை காணாமல் அவள் எவ்வளவு தவிக்கிறா தெரியுமா....

சொல்ல நினைத்த விஷயத்தை எப்படித்தான் உடனே புரிந்து கொண்டாளோ..

எனக்கு முதன்முதலாக அவளை பற்றிய சந்தேகத்தை விட பயமே மேலோங்கியது..

ஓர் வேளை இவளுக்கு மந்திரம் ஏதாவது தெரியுமோ.மனதில் நினைத்த விஷயத்தை எப்படி சொல்லுறா...

ப்ளீஸ்டா கத்தி கூச்சல் போட்டாதே இன்னும் ஓரே ஓர் தடவை மட்டும் என்று அனுமதி வாங்கி முத்தமிட தொடங்கியவள் நாலைந்து முத்தங்களால் என் உடலை எச்சிலாக மாற்றினாள்.

அவளின் உதட்டில் மீறி எச்சில் வடிந்தது..

நீ ரொம்ப பெரிய ஆளுதான்டா யாரை திருப்பி கூட பார்க்காத என்னைய இப்படி ஜொள்ளு விட வைச்சுட்டே..தனது பெண்மையின் வெட்கத்துடன் பேசி சிணுங்கினாள்... எனக்கு அவளை பிரிய மனமில்லை ஆனால் என் முதல் காதலி எனக்காகவே காத்திருக்றாளே.... அவள் மிகவும் பொறுபைசாலி இவளை போல .. தன் முகத்தில் வழிந்த எச்சிலை துடைத்துக் கொண்டவள்...

டேய் உன் மனசு எனக்கு புரியது ... இதுக்கு மேல எதுவும் யோசிக்காதே என சிந்தனைக்கு கூட தடை விதித்தாள்...


சில நொடிகளில் பெரிய அளவில் பாசமும் நேசமும் காட்டியவள்...உங்க பையன் பயங்கரமான சேட்டைக்காரன் என்னை இதுவரைக்கும் இவ்வளவு தூரம் யாரும் இம்சைபண்ணலை என்றே புராணம் பாடினாள்.


நான் அவளை காட்டி கொடுக்க மாட்டேன் என்ற தைரியத்தில் என்னை பற்றி பலர் முன்னிலையில் புகார் செய்தாள்...


மன்னிச்சிடும்மா... அவன் குழந்தை தானே அவனுக்கு என்ன தெரியும்...

அவள் மனதிற்குள் நினைத்தாள் ..ச்சே இவனை பார்த்துகிட்டே இருக்கணும் போலவே இருக்குது...

உங்க வீடு எங்கே இருக்கிறது மனதின் கள்ளதனத்தை வார்த்தையில் மறைத்தாள்....

நீ எப்போ வேண்டுமானாலும் எங்க வீட்டுக்கு வாம்மா...யாரும் உன்னை தப்பா நினைக்கவே மாட்டோம்....யாரோ ஒருவர் சொல்லுவதை கேட்டவுடன் சரிங்க நான் கிளம்புறேன் 


வேகவேகமாக நடந்தவள் நேராக குனிந்த படியே ரெஸ்ட் ரூம் நோக்கி நடந்தாள்..

அவளின் காதுகளில் அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்தது

உன்னை நாங்க யாரும் தப்பாவே நினைக்க மாட்டோம்... ரெஸ்ட் ரூம்மில் அன்று யாருமே இல்லை..

கண்ணாடியில் தன் உடலை பார்த்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

தப்பாவே நினைக்க மாட்டாங்களாமே... மீண்டும் மீண்டும் சொல்லி கோபத்தை தனக்குள் ஏற்றிக்கொண்டாள்...

போன வாரம் கூட வேலை முடிந்து வீட்டுக்கு போக நேரமானது...

மழை வேறு தன் பங்கிற்கு இடைஞ்சலாக தூவானம் தூவியது... 

வீட்டின் அருகே திண்ணையில் அமரந்திருந்த இருவர் பேசுவது காதில் கேட்டது...

அப்பன் போய் சேர்ந்துட்டான்..இனி இவளை யாரால் கேட்க முடியும் இஷ்டத்துக்கு அலையுறா...

அம்மாவுக்கு கூட கோபம் வந்தது..ஏண்டீ உன்னை தப்பா பேசுறான் நீ எதுவுமே சொல்லாம வந்துட்டு இருக்கிறே..

நீ பதில் பேசாம வந்தா இதையே பல முறை பேசி உன்னை .....ஏதோ சொல்ல தொடங்கியவளை


அம்மா நீ எதுக்காக இவ்வளவு கோபப்படுறே.... அவங்க உன்னையாவா தப்பா பேசுனாங்க... என்னை பத்தி தானே பேசுறாங்க பேசிட்டு போகட்டும்.. இந்த மாதிரி ஆளுங்களுக்கு பிறரை பற்றி புரணி பேசுறது ஓண்ணு தான் சந்தோஷமே...

அவங்க பேசுற பேச்சுக்கு பதில் பேசினா நமக்கு தான் அவமானம் அது போக இப்படியெல்லாம் பேசுறாங்களே என்று நினைச்சா நோய் தான் வரும்...

அப்பா என்கிட்ட சொன்னது உன்னை நல்லா பார்த்து சொல்லியே.... நான் எந்த தப்பும் பண்ணலை என்பது எனக்கு தெரியும்

அப்படி ஒருவேளை தப்பான தொழில் பண்ணுறவளா இருந்தா மாசம் 500 தங்க சீட்டை கட்ட முடியாம... இரண்டு மாசமா நான் தவிக்கிற தவிப்பு அவங்களுக்கு தெரியும்..

என்னை பத்தி தப்பா பேசுறாங்கன்னு சொல்லுறீயே அவங்க கிட்ட போய் பத்து ருபாய் கேட்டு பாரு தருவாங்களா பார்க்கலாம்...

காலையில் வைத்து சாதம் தண்ணீர் விட்டு வைத்திருந்தது...அதை தட்டில் எடுத்து போட்டால்.அம்மா இங்க வா நீ ஆசையா கேப்பீயே.. உருளைக்கிழங்கு போண்டா சூட சூட போட்டுகிட்டு இருந்தா..

இன்னிக்கு எதிர்பாராத விதமா இருபது ரூபாய் கிடைச்சுது.... கண்ணில் சந்தோஷம் பொங்க பேசியனாள்

ஏதுடீ உனக்கு இவ்வளவு காசு...

அவளுக்கு எரிச்சலாக வந்தது தெருவில் உள்ளவன் பேசுகிறான்..இவளோ தன் மகளை தவறா பேசவில்லையே தவிர மனதிற்குள் அடிக்கடி சந்தேகத்தை வளர்கிறான்..அம்மாவாக இருப்பதால் கொச்சையாக கேட்காமல் அதிகாரத்துடன் கேட்கிறாள்...நினைத்தது எல்லாம் பேச முடியாத உலகில் பிறந்து விட்டதால் மெளனமாக இருந்தாள்..

ஏன்டீ திருட்டு நாயே உன்னை தானே கேட்குறேன்... பதில் சொன்னா குறைச்சாடீ போவ... வயசான காலத்துல தறுதலைய என் தலைகட்டி விட்டு போய் சேர்ந்துட்டான் அந்த மகராசன்.


இப்போ எதுக்கும்மா அப்பாவை திட்டுறே..அவர் நமக்கு முடிஞ்ச வரைக்கும் நல்லது தானே செஞ்சாரூ...

அந்த பரதேசி பய அக்காவீடேன்னு தானே கிடந்தான்... சம்பாதிச்சதை எல்லாம் அவளுக்கு வாரி இறைச்சான்... உலகத்துல இல்லாத அக்கா தம்பி பாசம்

எல்லாம் என் தலையெழுத்து டீ உச்களை கட்டி மார்அடிக்கிறேன் பாரூ....

நீ பதிலுக்கு பதில் பேசி சண்டை போட போய் தானே அவர் பாதி நேரம் அக்கா வீட்டுக்கு போனாரூ.. அங்கே கூட அவரை வேலைக்காரன் மாதிரி தானே நடத்துனாங்க உனக்கு தெரியாதது உண்டா...

சிறுக்கி நாயே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு குந்தாணி... உனக்கு வடிச்சு போடுறது நானு எதிர்த்து பேசின.இருக்கு பார்த்துக்கோ கையில் இருந்த டம்ளரை எடுத்து அவள் மீது கோபத்தில் வீசினாள்...


கையில் இருந்த பழையதை தட்டி விட்ட படி தரையில் விழுந்து சத்தமிட்டது

இவ ரொம்ப பாவம் ஆத்தாளுக்காக கல்யாணமே வேண்டாம்ன்னு இருக்கா..அது அவங்க ஆத்தா காரிக்கு புரியலை.. ச்சே சும்மா சொல்ல கூடாது ரொம்ப ஒழுக்கமான பொண்ணு..

சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை அவளுக்கு. சில நிமிடங்களுக்கு முன் பேசிய நாக்கு பேச்சை மாற்றி பேசியது

எறிட்டு பார்த்தாள்... நீ உண்மையை மட்டும் பேசு, யாருக்கும் பயப்படாதே என்று அப்பா படத்திற்குள் இருந்து பேசுவது போல் இருந்தது...


பத்து வருஷம் கழிச்சு அவங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு.. அந்த சந்தோஷத்தில் குழந்தையோட அப்பா கொடுத்தார்... மார்கெட்-ல லோடு மேன் வேலை பார்க்கிறார்.. உனக்கு நிறைய கொடுக்க தான் தாயீ ஆசை ஆனா இருந்த பணத்தை எல்லாம் ஆஸ்பத்திரியில் கட்டியாச்சு நாளைக்கு மச்சான் ரூவா கொண்டு வருவான் உனக்கு 100ரூ தாரேன் அப்படின்னு சொல்லியிருக்காரூ.

நாளைக்கு மறக்காம அந்த ரூபாயை வாங்கிட்டு வா.. உங்க அப்பனை மாதிரி பணத்தை விட பாசம் தான் பெருசுன்னு பேசி வைக்காதே..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கல்யாணத்து பணத்தை சேர்க்க வழி பாரூ...

அம்மா எதுக்கு இதுவே போதும் ஏதோ இருபது ரூபாய் என்பதால் வாங்கினேன்...இதுவே ஆயிரம் ருபாய் கொடுத்திருந்தா... சார் மன்னிச்சுக்கோங்க இந்த ஆஸ்பத்திரியில் என் தகுதிக்கு சரியான சம்பளம் கொடுக்கிறாங்க இந்த மாதிரி பணத்தை அன்பளிப்பா வாங்குறது தெரிஞ்சா எங்க மேடம் மனசு கஷ்டப்படுவாங்க...

போடீ பைத்தியகாரி...பொழைக்க தெரியாதவ... சத்தமாவே பேசினாள் 

ஏய் ரெஸ்ட் ரூமில் என்னடீ இவ்வளவு நேரம்.. டாக்டர் உன்னை கூப்பிடுறாரு.


வார்டுக்கு அவசர கதியில் சென்றவளுக்காக காத்திருந்த டாக்டர்ம்மா...

அப்படி நீ என்ன மந்திரம் போட்டீயோ... உன்னை இவங்க எல்லோரும் புகழுறாங்க...

என் வேலை மட்டும் தான் மேடம் நான் பார்த்தேன்....


200 ரூபாய் கொடுத்ததை வேண்டாம்னு சொல்லிட்டீயாமே...

அது வந்து மேடம் நீங்க தான் கை நிறைய சம்பளம் கொடுக்குறீங்களே..

அவங்க பத்து இருபது ரூபாய் தான் வாங்குவாங்க 100..200.1,000 எல்லாம் வாங்க மாட்டாங்க...

குறைந்த ரூ கொடுக்கிறவங்க தான் அன்பானவங்க நிறைய ரூ கொடுப்பது தன்னோட பணக்கார திமிரை காட்டுறது அதனால் தான்.லட்சக்கணக்கான ஆஸ்பத்திரி பில் பற்றிய நினைவு வந்ததுடன் பேச்சை..மெளனமாக மாற்றினாள்

டாக்டர்ம்மா.. அவளின் கன்னத்தை தட்டினாள்..உன்னை மாதிரி எல்லோரும் இருந்தா பத்து ஆஸ்பத்திரி கட்டுவேன்..


மனசாட்சி தான் முதல் கடவுள்

 நீ என்ன லூசூ முன்பின் தெரியாத அந்த பொண்ணுக்கு காசு கொடுக்கிறே...அது பஸ் ஸ்டாண்டில் நாலு பேர் முன்னாடி

அவள் தான் என்கிட்ட வந்து பணம் கேட்டா.

அவ வந்து கேட்டா உனக்கு எங்க புத்தி போச்சு 

அவ ஓர் வேளை கெட்ட தொழில் பண்ணுறவளா இருந்தா.. உன்னையும் தானே தப்பா நினைப்பாங்க 

அவ நிச்சயமாக நல்ல பொண்ணு தான்.. அவளை பத்தி நீங்க தப்பா பேசாதீங்க


கதை தொடரும்

அதோ அந்த கல்லூரி

அடேய் மகனே....அதோ தெரிகிறதே பெரிய காலேஜ் நல்லா பார்த்துக்கோ..

ஏன்ப்பா அந்த காலேஜ் என்ன...அதை நீங்க இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு சொல்லுறீங்க

அட நீ வேற உங்க அப்பாவுக்கு வேற வேலையே கிடையாது.. எங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச மறுநாள் முதல்ல முதலா வெளியூர் போகலாம் என்று பஸ்ஸில் போகும் போது கூட இந்த வழியா தான் போனோம்... அன்னிக்கும் இப்படி தான் இந்த காலேஜ்-ஐ காட்டி உணர்ச்சி வசப்பட்டு பேசுனாரூ...


என்கிட்ட கூட இதை காட்டி இருக்கீங்க நினைவு இருக்கா அப்பா...


அப்பாவின் கண்களில் ஏதோ கனவு விரிந்தது... நான்+2 முடிச்ச பிறகு படிச்சா இந்த காலேஜ்-ல தான் படிக்கணும் என்று எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா..

அதனால் தான் மகனே சொல்லுறேன்..நீ எப்படியும் இந்த காலேஜில் படிக்கணும்...சரியா டா..

கொத்த வேலை பார்த்து கஷ்டப்பட்டு காலத்தில் கூட சிறுக சிறுக பணம் சேர்த்து படிக்க வைத்த அப்பா...

இன்றும் கூட அந்த கல்லூரியை கடந்து போகும் போது உணர்ச்சி வசப்படுகிறார்...

அந்த கல்லூரியின் அருகில் வயதான காலத்தில் தானாகவே . வந்து சேர்ந்த.. முதியோர் இல்லத்தில்.

 மாடியில் மாலை நேரத்தில்  நடையிலும் போது தனக்கு தானே சொல்லிக்கொள்வார்..


இந்த கல்லூரியில் நானும் படிச்சிருந்தா.. எனக்கும் வெளிநாட்டில் வேலை கிடைச்சு போயிருப்பேன்...

 சிலருக்கு நினைச்ச கல்லூரி கிடைக்கலை என்று கவலை

சிலருக்கு படித்த கல்லூரியை விட படிக்க சீட் கிடைக்காமல் போன கல்லூரி மீது தான் ஆசை அதிகமா இருக்கிறது...


வேலை கிடைக்குமா

 வீட்டுக்கு போனா அப்பா திட்டுவார்..சென்ற வாரம் வீட்டில் நடந்த நிகழ்வை ஏனோ மனம் நினைத்து பார்த்தது 


நீ என்னைக்கு தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கே... பிறகு எப்படி நாயே உனக்கு வேலை கிடைக்கும்

நீங்க சும்மா இருங்க, எப்போ பார்த்தாலும் என் பிள்ளைய கரிச்சு கொட்டாதீங்க.... அவன் மனசை கஷ்டபடுத்தாம ஓர் நாளாவது இருக்கீங்களா 


தன்னை நினைத்து தனக்கே கேவலமா இருந்தது... ஆனாலும் அதையும் மீறிய ஓர் சிந்தனை அவனின் மனதில் எட்டிப்பார்த்தது

நின்று கொண்டிருந்த பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ஹோட்டலில் எச்சில் இலை எடுத்து விட்டு மேஜை துடைத்து கொண்டு இருந்தது ஓர் சிறுவன்..

ஏனோ அவனை நினைக்கும் போது பொறாமை வந்தது. இந்த சின்ன வயசுலயே இவனுக்கு வேலை கிடைச்சிருச்சு...நாம படிச்சு டிகிரி வாங்கி என்ன பிரயோஜனம் ஓவ்வொரு வாரமும் இன்டர்வியூ போக அப்பாவிடம் காசு வாங்குவதை நினைச்சா...பொங்கி வந்த  அழுகை.... சுற்றிலும் நிற்கும் மனிதர்களை நினைத்த காரணத்தால் காவேரி ஆறு போல் ஆனது

தம்பி இன்னிக்கு தானே ஊருக்கு போறதா சொன்னே...போகும் போது இந்த வார போனஸ் மறக்காம வாங்கிட்டு போ... உன்னை பெத்தவங்க கையில் முதல் மாச சம்பளத்தை அப்படியே பிரிக்காம கொடுடா........அதை விட பெரிய சந்தோஷம் உலகித்திலேய இலைச்.. அவங்க முகத்தில் எவ்வளவு சந்தோஷம் வரும் தெரியுமா...

எச்சில் இலை துடைத்தவனின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி விவரிக்க முடியாதது....


உணர்ச்சிவசப்பட்டு பக்கத்தில் இருந்த பாழடைந்த கோபுரத்தை கையெடுத்து கூப்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டான்..... அப்போது அவனின் கன்னத்தில் சாம்பாரும் சட்னியும் இட்லியும் போட்டி போட்டு முத்தமிட்டது.. நெற்றியில் சந்தனமும் குங்குமம் கன்னத்திலோ எச்சில் பருக்கைகள்....

என்னங்க இதை பாருங்க.. இதன் சரியான சாமி பைத்தியம் போல... கழுத்தில் பல பவுன் அணிந்திருந்த பெண் தன் கணவனிடம் காட்டி கேலியும் காதலும் செய்தாள்

ஏன்டீ நீ எப்போவுமே கண்ட கண்ட நாயை எல்லாம் தான் பார்க்குறே... யாரையும் பார்த்து இரக்கபடாதே அவன் தலையெழுத்து அனுபவிக்கிறான்.... அப்பன் ஆத்தா சொல்லை கேட்டு இருந்து இவனுக்கு இந்த நிலை வந்திருக்குமா..... அவனின் பேச்சு சத்தம் ஹோட்டலில் இருந்த அனைவரின் காதுகளிலும் ரீங்காரமிட்டது..... அந்த சிறுவனை சுற்றி இருந்தவர்கள் ஏதோ குற்றவாளி போல பார்த்து முனைந்தனர்...


ஆனால் அவனோ சாமி காப்பாத்திருச்சு.. இனி எந்த கவலையும் இல்லை என்ற மனநிலையில் அடுத்த மேஜையில் புதுமண தம்பதிகள் விட்டு சென்ற எச்சில் இலை எடுத்தான்... அவளின் முகத்தில் எந்த ஓர் சலனமும் இல்லை... நமக்கு படிப்பு மண்டையில் ஏறி இருந்தா நமக்கும் நல்ல வேலை கிடைச்சுக்கும்...என்ற வலியே இருந்தது 

சாப்பாடு மண்ணு மாதிரி இருக்கு இந்த சாப்பாடு எப்படி தான் நீயெல்லாம் ரசிச்சு சாப்பிடுறீயோ.

இது கூட இல்லாம எத்தனை பேர் கஷ்டபடுறாங்க தெரியுமா.. கடவுள் நமக்கு இதையாவது தந்திருக்கிறாரே என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்க என்றவளிள் இலையும். மாமனார் காசை தானே என்று தூக்கி வீசிய ஏகாதாளமும் அதில் இருந்தது

அவனின் சொற்களை கேட்டவளுக்கு தர்மசங்கடமாக உணர்ந்தாள் அவளின் கண்கள் பனித்தது...

சில நிமிடங்களுக்கு முன் கேலியில் சிரித்தவளின் கண்களில் அவன் மீதான இரக்கம் கசிந்தது....

கொஞ்சம் இரு இந்தா வந்திடுறேன்..என்றவன் எதிர் புறம் இருந்த பெட்டி கடையில் சென்று சிக்ரெட் பாக்கெட் வாங்கினான்...


ஓர் நிமிட அவளுக்கு அந்த சிறுவனை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது...அவனை வெறித்து பார்த்த படியே நின்றாள்...

ஏன்டீ உங்க அம்மா சொன்ன மாதிரியே நீ வார்த்தைகளில் உண்மை வர மறுத்தது

என்னங்க ஓர் நிமிஷம் கைக்குட்டையை மறந்து வைச்சுட்டேன்... அவர்கள் சாப்பிட்ட மேஜையில் அருகில் சென்றவளை கூட சட்டை செய்யாமல் மேஜையை துடைத்த படி இருந்த சிறுவன்...

உனக்கு அக்கா தங்கச்சி யாராவது இருக்காங்களா.....

எனக்கு உடன் பிறந்த அக்கா தங்கச்சி கிடையாது சித்தப்பா வீட்டில்ல தான் தங்கச்சி பாப்பா இருக்கா..

அவர்களின் சம்பாவனை இருவரை தாண்டி பிறர் காதுகளுக்கு கேட்கவில்லை....

தயவுசெய்து அவங்களை நல்ல படிக்க வை... அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்க சொல்லு தயவுசெய்து காதல் திருமணம் பண்ணிடாதே....

அக்கா அவளுக்கு வயசே நாலு தான் ஆகுது...

அதனால் என்ன சின்ன வயசுலையே சொல்லி வளருங்க.... காதல் ஓர் ஏமாத்து வேலை படிக்காதவனுக்கு நல்ல படிச்ச பொண்ணு மேல தான் காதல் வருது.. ஆனா அது உண்மை கிடையாது...

படிச்ச பொண்ணா இருந்தா நம்ம சொல்லுறதை எல்லாம் கேட்டு அடங்கி நடப்பாள் எதிர்த்து பேச மாட்டா என்ற நினைப்பு...

அப்பா அம்மாவை நம்ம கிட்ட பழகும்  அனைவருமே எதிர்பார்போட தான் பழகுவாங்க....


புத்தம் புதிதாக மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக வாங்கி கொடுத்த பைக்

ஏறிக்கோடீ 

நமக்கு தான் படிப்பு சுத்தமான வரலையே..பிறகு எதுக்கு எப்போ பார்த்தாலும் படி படின்னு படுத்தினார்.. ஓர் வேளை பத்தாவது பெயிலா போயிருந்தா.. ஏதாவது 

ஜன்னலோரம்

 ஏன் அந்த மரத்தையே வெறிச்சுகிட்டு இருக்கீங்க என்ற பரிமளா...

காதலில் தோற்று நம்மை யாருக்குமே புரிந்து கொள்ளவில்லையே என்றே சிந்தித்த படி இருந்த கேசவனின் அருகே வந்து அவனின் அமைதிக்கு இடைஞ்சல் தரும் விதமாக கேள்விகளை கொடுத்தாள் பரிமளா.

 உனக்கு இப்போ என்ன வேணும் அதை மட்டும் கேளூ என்றவனிடம்.

எப்போ பார்த்தாலும் எதுக்கு எரிச்சு விழுறீங்க அப்படியே நான் கேட்டாலும் நீங்க குடுத்திட போறீங்களா என்ன சலித்து கொண்டாள் 

எதாவது வேணும்மா கேளு.. என்னால முடிஞ்சா செய்யுறேன்

உதடுகளில் ஏதோ முணுமுணுத்தாள்

கேட்கிறத கொஞ்சம் சத்தமா தான் கேளு பரிமளா

அவளின் உதட்டில் புன்னகை மலர்ந்தது..ஓர் அழகான பொண்ணு கூட தனியா இருந்து எப்படி தான் உங்களால பேசாம இருக்க முடியுதோ...

இன்னிக்கு வீட்டுக்கு போன உடனே நேரா  கண்ணாடியில் போய் பாரூ உன் மூஞ்சிய.அப்போ தெரியும் நீ அழகா இல்லையான்னு...

சரி நான் அழகில்லை தான்.ஆனாலும் ஓர் வயசு பொண்ணு அதாவது நம்புறீங்களா...

அதுக்கு நான் உன் கால்ல விழுணுமா அல்லது தலையில் தூக்கி மேல வைச்சு புகழ்ந்து பேசணுமா... 

ஆமா நீங்க சரக்கு அடிப்பீங்களா...

நானா பீடி சிகரெட் கூட குடிக்க மாட்டேன்..அது எல்லாம் காசை கரியா ஆக்கிற வேலை அதுபோக எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. கோபம் என்னோட ஓர் கெட்ட குணம் போதுமா

நான் உங்கள மாப்பிள்ளை பார்க்கவா வந்திருக்கேன் இவ்வளவு தூரம் சொல்லுறீங்க

நீ இல்ல அந்த ரோடுல போற கிழவி கேட்டாலும் இந்த பதிலை தான் சொல்லுவேன் போதுமா...

நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்களா கேசவ்

ப்ளீஸ் நான் உன்கிட்ட ஏதாவது கேள்வி கேக்குறேனா..நீ மட்டும் ஏன் எப்போ பார்த்தாலும் கேள்வி கேட்டகிட்டே இருக்கிற எனக்கு எரிச்சலா இருக்கு

நான் நான் பேசலை நீ அந்த மரத்தை நல்லா வெறிச்சு பாருங்க..ஏன்னா யாராவது தூக்கிட்டு போயிட கூடாது என்றே கேலியுடன் சிரித்தாள்

ஜன்னல் அருகே சேர் போட்டு அமர்ந்திருந்தேன் மேலே தனது துப்பட்டா படும் படியாக சாய்ந்த படி நின்றாள்

ஏய் பரிமளா கொஞ்சம் தள்ளி நில்லு உன் துணி என் மேல படுது.

இது ஓண்ணும் ஜமுக்காளம் இல்ல ரொம்பவே லேசான துப்பட்டா தான்.இது உங்க மேல பட்டது வலிக்குதோ...

கேசவனுக்கு அவளின் செயல் எரிச்சலாக இருந்தாலும் நாம ஏதாவது பேச அவள் மீண்டும் கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ணுவா என்று மெளனமானான்.

அவளோ வேண்டுமென்றே துப்பட்டாவை அடிக்கடி சரி செய்வது போல் அவனின் மீது படும் படி செய்தாள்...


அவனோ எதுவுமே பேசாமல் அந்த மரத்தை பார்த்தபடியே இருந்தான்

 சில நிமிடங்களுக்கு கூட அமைதியாக இருக்க முடியாத அவள் மீண்டும் பேச தொடங்கினாள் நான் அவனை காதலிக்கவே இல்லை ஆனா அவன் தான் என் பின்னாடியே அலைஞ்சான்.. அப்படி என்கிட்ட என்ன இருக்குன்னு தெரியலை... சீக்கிரமா  கல்யாணம் பண்ணணும் என்று வாரா வாரம் வந்து பேசிட்டு போறாங்க... தான் பேசுவது எதையுமே அவன் சிறிது சட்டை செய்யவில்லை என்று அவளுக்குள் ஆத்திரம் வந்தது ஆயினும் இவருக்கு நம்ம கஷ்டத்தை புரிஞ்சுகணும் என்று தலையெழுத்தா என்ற விரக்தியில் 

அவன் ஏதும் பேசாமல் இருப்பதை நினைத்தும் அவளின் கண்ணில் நீர் கசிந்தது.

எதிர்பாராத சம்பவம் ஓன்று அப்போது தான் நடந்தது 

எதையுமே கவனிக்காதவன் போல் அமர்ந்திருந்தவன்... ஏய் நீ எதுக்கு இப்போ கண்கலங்குற... உனக்கு ஏதாவது பிரச்சனையா என்றே பதறினான்

தன்னை அவன் கவனிக்கிறான் என்று நினைத்த மாத்திரத்தில் அவளின் கண்ணீரையும் மீறி சிரிப்பு தான் வந்தது...

என் கண்ணில் கண்ணீர் வந்தா உங்களுக்கு என்னவாம் என்று மீண்டும் கேலியுடன் பேச தொடங்கினாள்

எனக்கு யாராவது அழுதாங்கன்னா. எங்க அம்மா நினைவு வந்திடும் அவங்களால் ஓர் சிறு அதிர்வை கூட தாங்க முடியாது, அவங்களுக்கு குழந்தை மனசு தெரியுமா???

உங்களுக்கு மட்டும் என்னவாம்????

ப்ளீஸ் , நீ எதுக்கெடுத்தாலும் இப்படி தான் கேள்வி கேப்பீயா..உன்னை எல்லாம் எப்படி தான் வீட்டுல சமாளிக்கிறாங்களோ தெரியலை...

உங்களுக்கு என்னை நல்லாவே புரியுது.பிறகு ஏன் புரியாத மாதிரியே நடிக்கணும்

ஏன்னா நீ என்று பேச ஆரப்பித்தவன் சுதாரித்து கொண்டு மீண்டும் அமைதியா ஜன்னலோரமாக வெறித்து பார்த்த படி திரும்பினான் 

அவளோ கண்ணீரை துடைத்து கொண்டு மீண்டும் அவனருகில் நின்றாள் ஜன்னலோரம் 


நண்பேன்டா

 நண்பன் -1- மச்சான் நேத்து ஹேப்பி இயர் என்று முதல் ஆளா நீ தான்டா எனக்கு வாழ்த்து சொன்னே...

நண்பன் -2- அதுக்கு இப்போ என்ன..

நண்பன் -2- மச்சான், நேத்து சந்தோஷமா பேசுன நீ இப்போ திரும்பவும் ரொம்ப கவலையா பேசுவதை பார்த்தா மனசுக்கு சங்கடமா இருக்குடா..

நண்பன் -1- நேத்து என் பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தா...

நண்பன் -2- ஏன் மச்சான் அவங்க வீட்டில்ல அந்த வயசான தாத்தா,பாட்டி நல்லா இர்க்காங்களா...

நண்பன் -1- அவங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுக்கும் போது அந்த வார்த்தை சொன்ன அந்த மனுஷன் நல்லா தான்டா இருக்கான்...

நண்பன் -2- அப்படி என்னதான்டா அவரு சொன்னாரூ....

நண்பன் -1- என் பையனுக்கு 52 வயசுக்கு பிறகு நல்ல நேரம் ஆரம்ப ஆகும் என்று ஜோசியர் சொன்ன போது நம்பல ஆனா இப்போ நீங்க எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்து நினைச்சு பெருமையா இருக்கு என்றாரூ...

நண்பன் -2- இதுல என்னடா தப்பு இருக்கு...

நண்பன் -1- அடேய் என் பொண்டாட்டி அப்பாவுக்கு 52-வது பிறந்தநாள் அன்னிக்கு தான்டா நாங்க குடும்பத்தோட அவளை பொண்ணு பார்க்க போனோம்...

அந்த தாத்தாவும் பாட்டியும் எங்க வீட்டுக்கு விருந்தாளியா கூட்டிக்கிட்டு வந்திருக்கா..அது கூட பிரச்சினை இல்லைடா.. அவன் கேட்டான் பாரூ ஓர் கேள்வி...

நண்பன் -2- அப்படி என்னதான்டா கேட்டான்...

நண்பன் -1-  நீங்க பொண்ணு பார்க்க வந்த போது நான் சொன்னது நினைவு இருக்கா அப்படின்னு கேட்டு விட்டு சிரிக்கிறான் மச்சான்...

நண்பன் -2-  🙄🙄🙄🙄

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...