ஊழல்...கட்சி நிதி...கல்லா நிதி...

 சுயமாக சம்பாதிச்சு தொழில் நடத்தி நாற்பது பேருக்கு வேலையும் கொடுத்து, அவன் சம்பாதிக்கும் பணத்துக்கு வருமானவரி ஜி.எஸ்டி. வரி.. ஊராட்சி/ நகராட்சி/மாநகராட்சி வரி என்று ஓழுங்கா இருப்பவனிடம் அரசியல் பின்புலம் இருக்கும் என்று நீங்கள் போய் அவனிடம் மாமூல் கேட்டால்... உங்க தொந்தரவே வேண்டாம் சாமிகளா என்று கம்பெனியை இழுத்து மூடி விட்டு,எந்த மாநிலத்தில் வியாபாரம் செய்வதற்கு அரசியல் தலையீடு இல்லையோ அங்கே சென்று.

தனக்கு தெரிந்த தொழிலை செய்ய ஆரம்பித்தது விடுவார்..வேலை வாய்ப்பை இழந்தவர் என்ன செய்வார்.......படிச்ச படிப்பு எற்ற வேலை கிடைக்காமல் விரக்தியில் இருப்பவன்.. ஏதோவொரு அரசியல் கட்சியில் சேர்ந்து M.L.A M.P போஸ்ட்-க்கு போட்டி போட ஆரம்பித்து விடுவான்....

ஓர் வேளை அரசியல்வாதி தொழில் நடத்தி கொண்டு இருப்பவரிடம் சென்று கட்சி நிதி.. கொள்கை நிதி என்று கேட்டால் இப்படித்தான் நடக்கும்.

தமிழ் நாட்டில் சில ஊரில் மட்டும் அந்த மனிதர் தொடர்ந்து மீண்டும் மீண்டும் M.L.A...அல்லது.. M.P.. ஆக வருகிறார் என்று அந்த மனிதர் தனது தொகுதியில் நடைபெற்றும் பெரு நிறுவனங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து லட்சம் வாங்காதது தான்.


பெரு முதலாளிகளும் தங்கள் பிள்ளைகளை அரசியல்வாதியாக ஆக்க விரும்பவில்லை... ஓர் வேளை அரசியல்வாதிகள் அதிகமாக அழுத்தம் தந்தால் வியாபார முதலாளிகள்... எப்படியும் தொழிலை தொடர்ந்து நடத்த அரசியல்வாதிக்கு மாமூல் கொடுத்து தான் ஆகணும் போல் தெரிகிறது.

பேசாமல் இந்த தடவை நம்ம வீட்டுல இருந்து ஓருந்தரை நம்ம தொகுதியில் போட்டியிட்டு பார்க்க வைத்து விடுவோமா என்று நினைத்தால்...

இன்றைய அரசியல்வாதிகளே நன்றாக யோசித்துப் பாருங்கள் ...

சிட்டிங் எம்.எல்.ஏ என்பதற்கும் முன்னாள் எம்.எல்.ஏ என்பதற்கும்  நிறையவே வித்தியாசம் இருக்கிறது...

அரசியலில் பதவியில் இருக்கும் வரைக்கும் தான் மதிப்பு மரியாதை எல்லாம்..  ஊரில் இருக்கும் மதிப்பு மட்டும் குறையாது... வீட்டில் இருப்பவர்களே கூட.. மதிக்க மாட்டாங்க...


இந்த உண்மையை புரிந்து கொண்டு சிறு நிறுவனமோ பெரு நிறுவனமோ கட்சி நிதி கல்லா நிதி என கேட்பவர்கள் உணர்ந்து கேட்டால் நல்லது...

இல்லாட்டி நீங்க யாரிடம் கட்சி நிதி கேட்டீங்களோ அவனே புதுசா ஒரு கட்சி தொடங்கி, உங்களுக்கு எதிரா தேர்தலில் போட்டி போட வந்துடுடபோறான்.....

.

பைத்தியக்காரத்தனம்

 கோடி கோடியாக 

ஊழல் செய்த மந்திரி 

தனது பணத்தின் 

வரவு செலவு கணக்கை 

எழுதும் கணக்கன் மட்டும் 

உத்தமனாக ஊழல் செய்யாத

நேர்மறையானவனாக இருக்க 

வேண்டுமென்றே  நினைப்பதற்கு

பெயர் தான் பைத்தியக்காரத்தனம் 

நரேந்திரன் என்னும் தன்னிகரற்ற இந்தியத் தலைவன்

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எனக்கு உங்களை மாதிரியே ஓர் பையன் வேண்டும் என்ற வாலிப வயது பெண் கேட்ட மறு விநாடியே....இதோ அப்படியே ஆகட்டும் தாயே என்றே சாஷ்டாங்கமாக அந்த பெண்ணின் காலில் விழுந்து.. தாயே இன்று முதல் நான் உங்களுக்கும் ஓர் மகனே என்று வணங்கிய நரேன் என்ற விவேகானந்தர்....வணங்கப்பெற்றவர் நிவேதிதா....பல மாதங்கள் குருநாதர் ராமகிருஷ்ணன் யோக நிஷ்டையில் இருந்த போது அவருக்கு மலம் ஜலம் உடல் சுத்தம் செய்தவர் விவேகானந்தர்.. அவரின் மேடை பேச்சை மட்டும் ரசிக்கும் நபர்கள் பலருக்கு அவரின் தியாகமும் நேர்மை பற்றி அறிமுகம் இருக்கிறதா....


விவேகானந்தர் என்று பலராலும் அறியப்படும், இந்து சமய துறவியே. இந்து மத கருத்துகளை மேற்கத்திய நாட்டிற்கு எடுத்துச் சென்றார்.

இந்து மதத்தில் இருக்கும் உருவ வழிபாடு பற்றி, ஓர் மன்னர் பேசிய போது அந்த மன்னரின் கண்முன்னரே அவரின் புகைபடத்தை எடுத்து தரையில் வீசி விட்டு அமைச்சரே. உங்கள் மன்னரின் புகைபடத்தை உதாசீனம் செய்வது போன்ற செயலை செய்யுங்கள் என்றார்.

அதை கேட்டு அந்த அரசவை பதறிப்போன, யாரும் அந்த மன்னரின் புகைப்படத்தை உதாசீனம் செய்ய முன்வரவில்லை .

இந்த செயலை செய்து, அந்த மன்னனுக்கு இந்து மதத்தின் இருக்கும் உருவ வழிபாடு என்ற கொள்கை மூட நம்பிக்கை அல்ல, உருவமற்ற இறைவனை அறிய உருவ வழிபாடு மிகவும் முக்கியம் என்பதை புரிய வைத்தார் 

சமூக நீதி சமத்துவம் என்று மேடையில் மட்டும் முழங்கிவிட்டு எடைக்கு எடை பணம் வாங்காதீர்கள்.


தனது வாழ்நாளில் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.

இந்தியாவின் பல சமஸ்தானத்தின் மரியாதைக்குரிய மாபெரும் இந்து மத துறவி. இவரை போன்ற தன்னலமற்ற துறவிகளால் தான் இன்றும் இந்து மத கலாச்சாரமும் பண்பாடும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது 

இந்து என்பது வெறும் மதம் அல்ல. மக்களின் வாழ்வியலோடும் இயற்கையோடும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் யோகாசனம் என்ற பல விஷயங்களை தன்னுள் அடக்கிய மதம் . இந்திய மக்களின் உணர்வுகளில் இரண்டற கலந்த விஷயங்களை உலகறியச் செய்த இந்தியாவின் ஓப்பற்ற தன்னலமற்ற துறவியே நரேன் என்ற விவேகானந்தர் 



அப்பாவ போலவே

ஆயிரம் சொந்தங்கள் 

சூழ்ந்து நின்றாலும்...

அப்பாவின் அன்பும் 

பரிவும் கனிவும் 

கோபமான வார்த்தையும் 

அதில் இருக்கும் அர்த்தமும் 

அனர்த்தமும் உணர்ந்தவள் 

அவரின் அன்பு மகள் மட்டுமே..

சில நேரங்களில் அவளும் கூட 

அவரைப் போலவே கடினமான 

நேரங்களை மெளனம் என்ற 

படகில் கடக்கிறாள்... சுற்றி இருக்கும் 

அனைவரும் நலமாக இருக்க வேண்டியே

அனைவரும் சொல்கின்றனர்..

அப்பாவ போலவே அவரோட 

செல்லப் பொண்ணும் 

விகடன் 100-வது ஆண்டு வாழ்த்துரை

 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விகடனின் எழுத்துத்துலக பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

விகடன் ரூ 3.50 என்ற விலையில் வாங்கிப் படிக்க தொடங்கிய 90 காலகட்டத்தில் இருந்து இந்த 2026 - வருடத்தில் கூட விகடனை படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே இருக்கிறது.சிறு துணுக்காக வரும் ஜோக்ஸ் படிப்பதில் தொடங்கிய எனது பழக்கம் பிறகு ஓர் பக்க கதை. மதன் கேள்வி பதில்.பிறகு புத்தகப் பையில் துப்பாக்கி என்ற சிறு தொடர்கதை, பிறகு தொடர் வந்தார்கள் வென்றார்கள்.. இன்றும் பிரமிப்பாக இருக்கிறது.காலங்களை கடந்தும் தனக்காக வாசகர்களை தலைமுறைக்கும் தக்கவைத்து கொள்வதில் உம்மை கண்டு சற்றே பொறாமை கொள்கிறேன் விகடன் தாத்தா அவர்களே.

என்றும் உங்களின் வாசகர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே 

வாசகரின் வயது மாறினாலும் அவர்களின் விரும்பி படிக்கும் பக்கங்கள் மட்டும் தான் மாறுகிறதே தவிர.

விகடன் தனது முத்திரை மற்றும் தரத்தை அதே நிலையில் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு இருப்பதை பாராட்டுகிறேன்.

தமிழை தமிழாக தமிழில் படிக்க தமிழில் இருக்கும் சிறந்த பத்திரிகையில் விகடனுக்கு என்றுமே ஓர் தனி இடம் தான்.

வளரட்டும் எழுத்துலக பணி. அதிகரிக்கட்டும் இன்னும் இன்னும் அதிகமாக வாசகர் எண்ணிக்கை 

ராமன் ஷங்கர்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...