ஊழல்...கட்சி நிதி...கல்லா நிதி...

 சுயமாக சம்பாதிச்சு தொழில் நடத்தி நாற்பது பேருக்கு வேலையும் கொடுத்து, அவன் சம்பாதிக்கும் பணத்துக்கு வருமானவரி ஜி.எஸ்டி. வரி.. ஊராட்சி/ நகராட்சி/மாநகராட்சி வரி என்று ஓழுங்கா இருப்பவனிடம் அரசியல் பின்புலம் இருக்கும் என்று நீங்கள் போய் அவனிடம் மாமூல் கேட்டால்... உங்க தொந்தரவே வேண்டாம் சாமிகளா என்று கம்பெனியை இழுத்து மூடி விட்டு,எந்த மாநிலத்தில் வியாபாரம் செய்வதற்கு அரசியல் தலையீடு இல்லையோ அங்கே சென்று.

தனக்கு தெரிந்த தொழிலை செய்ய ஆரம்பித்தது விடுவார்..வேலை வாய்ப்பை இழந்தவர் என்ன செய்வார்.......படிச்ச படிப்பு எற்ற வேலை கிடைக்காமல் விரக்தியில் இருப்பவன்.. ஏதோவொரு அரசியல் கட்சியில் சேர்ந்து M.L.A M.P போஸ்ட்-க்கு போட்டி போட ஆரம்பித்து விடுவான்....

ஓர் வேளை அரசியல்வாதி தொழில் நடத்தி கொண்டு இருப்பவரிடம் சென்று கட்சி நிதி.. கொள்கை நிதி என்று கேட்டால் இப்படித்தான் நடக்கும்.

தமிழ் நாட்டில் சில ஊரில் மட்டும் அந்த மனிதர் தொடர்ந்து மீண்டும் மீண்டும் M.L.A...அல்லது.. M.P.. ஆக வருகிறார் என்று அந்த மனிதர் தனது தொகுதியில் நடைபெற்றும் பெரு நிறுவனங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து லட்சம் வாங்காதது தான்.


பெரு முதலாளிகளும் தங்கள் பிள்ளைகளை அரசியல்வாதியாக ஆக்க விரும்பவில்லை... ஓர் வேளை அரசியல்வாதிகள் அதிகமாக அழுத்தம் தந்தால் வியாபார முதலாளிகள்... எப்படியும் தொழிலை தொடர்ந்து நடத்த அரசியல்வாதிக்கு மாமூல் கொடுத்து தான் ஆகணும் போல் தெரிகிறது.

பேசாமல் இந்த தடவை நம்ம வீட்டுல இருந்து ஓருந்தரை நம்ம தொகுதியில் போட்டியிட்டு பார்க்க வைத்து விடுவோமா என்று நினைத்தால்...

இன்றைய அரசியல்வாதிகளே நன்றாக யோசித்துப் பாருங்கள் ...

சிட்டிங் எம்.எல்.ஏ என்பதற்கும் முன்னாள் எம்.எல்.ஏ என்பதற்கும்  நிறையவே வித்தியாசம் இருக்கிறது...

அரசியலில் பதவியில் இருக்கும் வரைக்கும் தான் மதிப்பு மரியாதை எல்லாம்..  ஊரில் இருக்கும் மதிப்பு மட்டும் குறையாது... வீட்டில் இருப்பவர்களே கூட.. மதிக்க மாட்டாங்க...


இந்த உண்மையை புரிந்து கொண்டு சிறு நிறுவனமோ பெரு நிறுவனமோ கட்சி நிதி கல்லா நிதி என கேட்பவர்கள் உணர்ந்து கேட்டால் நல்லது...

இல்லாட்டி நீங்க யாரிடம் கட்சி நிதி கேட்டீங்களோ அவனே புதுசா ஒரு கட்சி தொடங்கி, உங்களுக்கு எதிரா தேர்தலில் போட்டி போட வந்துடுடபோறான்.....

.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...