கீதையின் நாயகனே

எனக்கு எதன் மீதும்

ஆசையே இல்லை 

அடிக்கடி அப்பாவும் 

அம்மாவும் சொல்லிக் 

கொண்டே இருக்கும் சொற்கள் ...

ஏனோ எதிர்த்து கேட்க 

தைரியமில்லை அப்போ 

 வீடு கார் பங்களா எல்லாமும் 

எதற்காக ...... யாருக்காக 

வாங்கியது.... படித்து முடித்து 

சேர்ந்த வேலையில் வாங்கிய 

சில ஆயிரம் சம்பளத்தில்

அம்மாவுக்கு பட்டு புடவையும் 

அப்பாவும் கைகடிகாரமும் 

வாங்கிக் கொடுத்தேன்....உனக்காக 

நீ எதுவும் வாங்கலையா என்றபோது 

எனக்கு எதன் மீதும் ஆசையே இல்லையே

என்றே சொல்ல ஆரம்பித்த போதே 

ஆயிரமாயிரம் ஆசைகளை 

மனதில் சுனாமியாக அலையடித்தது

கண்களை தழும்பியது. ... 

முகத்தை திரும்பிக் கொண்டே 

மீண்டும் ஒர்முறை அழுத்தம் 

திருத்தமாக சொன்னேன் 

"எனக்கு எதன் மீதும் ஆசையே இல்லை"

உதட்டில் உதிர்த்த வார்த்தைகள் 

மனதிலும் விடை அறியமுடியாத 

கேள்விகள் தொடங்கியது ஆழ்மனதில்...

இது என்னோட பையன் வாங்குன 

சேலை கலர் துணி எல்லாமே 

அருமை அருமை... அம்மாவின் சொற்கள்... 

இது அவன் வாங்கிட்டு 

வந்த வாட்ச் அதான் கழட்டவே 

மனசில்லை... தூங்கும் போதும் 

கைகளில் இருந்தது கை கடிகாரம்...

ஆசையே இல்லாதவர்களின் 

ஆசையை நிறைவேற்றிய 

நிமிடத்தில் இருந்து நானும் 

அடிக்கடி சொல்ல ஆரம்பித்த 

வார்த்தைகள் எனக்கு எதன் மீதும் 

ஆசையே இல்லையே.... தூரத்தில் 

எங்கோ பாடல் சத்தம் கேட்டது 

கேட்டதும் கொடுப்பவனே 

கிருஷ்ணா கிருஷ்ணா 

கீதையின் நாயகனே 

கிருஷ்ணா கிருஷ்ணா 




No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...