தேர்தல் என்பது

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் விளையாட்டு மைதானம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் வாழ்வாதாரம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் வியாபாரக் கணக்கு 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் புரியாத புதிர் 

சிலருக்கு தேர்தல் என்பது 

அலுப்பு தரும் வேலை 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் இடத்தில் இருப்பவனை 

சம்பந்தமே இல்லாத இன்னொரு 

இடத்திற்கு வலுக்கட்டாயமாக 

கால்பந்தாட்ட பந்து போல 

சில நாட்கள் தேர்தல் வேலையென்ற பெயரில் ஏற்படுத்தும் வேலைப்பளூ

சிலருக்கு தேர்தல் என்பது 

காசு புழங்கும் திருவிழா நாட்கள் 

சிலருக்கு தேர்தல் என்பது 

படிப்புக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் 

ஸ்பீக்கர் சத்தங்கள் 

சிலருக்கு தேர்தல் என்பது 

அரசியல் கெளரவம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

கூட்டணிக்கணக்கு 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் போராட்ட களம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

 தனது பலத்தை தலைமைக்கு 

காட்டும் விஷப்பரீட்சை... 


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...