வாழ்க்கை

 


இந்த உலகில் பிறந்த ஓவ்வொரு மனிதனும் ஏதோ ஓர் நாளில் அமைதியை தேடுகிறான்.

கஷ்டமே இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை.அந்த கஷ்டத்தை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதை ஆராய்ச்சி செய்து , அந்த மனிதனின் முகத்திற்கு பின்னால் கேலி பேசி சிரிக்கும் உலகமிது..

என் மீது அன்பு செலுத்தியவர் களையும் ஆபத்தான காலத்தில் உதவி செய்தவர்களையும். எந்தவித அடையாளமும் இன்றி, நான் வாழ்ந்த போது என்னையும் சக மனிதராக மதித்து நடத்தியவரின் கண்கள் கலங்கும் முன்னே அவர்களுக்கு உதவ முயல்கிறேன்.

நிலையற்ற உலகில் என்னால் முடிந்த உதவியை செய்யும் சிறு துரும்பு நான் 

உலகத்தின் சுபாவத்தை நம்மால் மாற்ற இயலாது.ஆனால் என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியும்.

அதனால் சுற்றி இருப்பவருக்கு ஏதாவது ஓர் நல்லது நடக்கட்டுமே 

மனிதன் தான் வாழும் நாளில் எப்படி தனது கஷ்டங்களையும் தாண்டி பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து விட்டு தனது கவலைகளை பிறருக்கு சொல்லாமல் தைரியமாக வாழ்கிறான் என்பதே வாழ்க்கை 

சஞ்சனாவும் சாமியாரும்

 வணக்கம் நண்பர்களே.

இந்த சஞ்சனாவும் சாமியாரும் என்ற கதை கரு என்னை மிகவும் பாதித்த ஓர் விஷயமே

இதையெல்லாம் ஓர் கதையா எழுதினா மக்கள் எற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன் 

கதை தலைப்பை பார்த்தவுடன் மனிதர்கள் எப்போதுமே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் கற்பனை செய்து பார்ப்பது தவறாக நினைப்பது இயல்பே.

ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறானது.

தன்னம்பிக்கையாக வாழந்த ஓர் பெண் தன் படித்த படிப்பு ஏற்ற வேலை கிடைகாத ஓருத்தி.

தனது சுயசம்பாத்தியத்தில் வியாபார தொடங்குகிறாள் . அதில் ஏற்படும் நஷ்டம், உடல் உபாதைகள், குடும்ப பிரச்சினை இவற்றின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதத்தில் ஓர் கோவிலுக்கு செல்கிறாள்..அங்கே என்ன நடந்தது 

கதையின் களம்.. காத்திருங்கள் விரைவில் முழு கதையும் பதிவேற்றம் செய்யப்படும் 

அதிர்ஷடசாலியா...கோடீஸ்வரீயா...

 

பொண்டாட்டிக்கு 

தலை வலிக்குதுன்னா.. 

தைலம் போட்டு ஆறுதல் 

சொல்லும் கணவனும்

அம்மா நான் வேணா 

உனக்கு சமையல் பண்ண 

உதவி செய்யவா 

என்று மழலை மாறாமல் 

கேட்கும் குழந்தையும் 

கிடைத்த பெண் 

அதிர்ஷ்டசாலியா...

கோடீஸ்வரீயா...

அல்சேஷனா பொமரேனியனா

என்னால அது பண்ணவே முடியாது டீ நாயே..


கல்யாணம் ஆகி சில வாரங்களுக்கே ஆன மனைவியை ஏசிக்கொண்டே கையில் இருந்த நாளேட்டை தூக்கி அவளின் முகத்தில் வீசி எறிந்தான் 

என்னால முடியாது

அதையெல்லாம் இதுவரையில் நான் செஞ்சே கிடையாது

இனியும் நான் வாழ்நாளில் பண்ணாத ஓர் விஷயத்தை நீ என் பொண்டாட்டியா வந்த ஓரே காரணத்தால் பண்ணவே முடியாதுடீ நாயே..

என்ன வாய் ரொம்ப நீளுது.....தேவைன்னா கொஞ்சுறது இல்லாட்டி கெட்ட கெட்ட வார்த்தையில பேசுறது..

ஏன்டீ நாயீ கூப்பிடுறது ஓர் குத்தமா...உங்க அப்பாவே உன்னை என் செல்ல நாய்க்குட்டின்னு தான் கூப்பிடுறாரூன்னு நீ தானே சொல்லுவே.


இப்போ எதுக்கு எங்க அப்பா பேச்சை பத்தி பேசுறீங்க..உடனே நான் அமைதியா ஆகும்ன்னு தானே 

அம்மா தாயே..நீ வேணா கோபிச்சுக்கிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போகணும்ன்னா போ...சட்டை பையில் ஐந்நூறு ருபாய் இருக்கு எடுத்துட்டு போ..


போகும் போது அந்த பஸ்ஸாப்பு கடையில் உங்க அப்பாவுக்கு பிடிச்ச ரவா லட்டு ஓர் பாக்கெட் வாங்கிட்டு போய்.. என் மாமனார்கிட்ட குடு. போன வாரம் வந்தவரு அதை ரொம்ப விரும்பி சாப்பிட்டாரூ 

அப்பாவுக்கு பிடித்ததை வாங்கி போக சொன்னது.அவளுக்கு கோபம் மிகவும் வெகுவாக குறைந்தது.

என்னங்க ஓரு வாரத்துலையே, எங்க வீட்டுல யார் யாருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று தெளிவா தெரிச்சு வைச்சிருக்கிற உங்களுக்கு ஏன் நான் சொல்லுற விஷயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது

ஏன்னா நீ சொல்லுற விஷயம் ரொம்ப ஆபத்தானது மேலும் அது ரொம்ப பெரிய பாவ காரியம்.


ஆமா உலகத்துல எல்லாரும் பாவபுண்ணியம் பார்த்துட்டா வாழுறாங்க 

உங்க அப்பன் ஆத்தா யார் வந்து பேசினாலும் இது தான் என்னோட முடிவு.

நான் அதை பண்ணவே மாட்டேன் 

ஏன் எல்லாமே  பழகினா தான் பண்ணீவீங்களா.

எனக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி, வேற ஓருத்தி கழுத்துல தாலி கட்டி பழகிய பிறகா தான் கட்டுனீங்களா.

அதை மாதிரியே தான் இதுவும். பொண்டாட்டி சொன்னா கேட்டு தொலைய வேண்டியது தானே.

அவன் அவன் பொண்டாட்டிக்காக கடன் வாங்கி செலவு செய்யுறான்.

நான் அப்படி என்னத்தை புதுசா சொல்லிட்டேன். ஊர் உலகத்தில் எல்லோரும் பண்ணுற விஷயம் தானே.

என்ன யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக பண்ணி நாம எதுக்கு மாட்டீகிக்க போறோம்.

ஏன்டீ காலையிலேயே சண்டையிழுக்கிறே. 


நமக்கு கல்யாணம் ஆகி ஓரு வாரம் கூட ஆகலை அதுக்குள் நான் சொல்லுறது எதுவுமே கேட்க மாட்டேன்னா என்ன அர்த்தம்.

சரியான களிமண். உங்க அப்பன் உன்னை என் தலையில் கட்டி வைச்சுட்டான்னு அர்த்தம் 

நான் சொல்லுறதை மட்டும் ஓழுங்கு மரியாதையா பண்ணுங்க

இல்லாட்டி என்னடீ பண்ணுவ

நான் எங்க அம்மா வீட்டுக்கே போறேன் 

பிறகு என்ன மயிதுக்கு டீ என்னை கட்டிகிட்டே.

அதான் நான் எது சொன்னாலும் கேட்க மாட்டேன்னே. இப்படி அடம் பிடிச்சா வேற என்ன பண்ணுறதாம்

அப்போ சரி..இதனால் நீ என்னை விட்டு ஓரேடியா போனாலும் பரவாயில்லை.

என்னால இதை செய்யவே முடியாது.


விவாதமே சண்டை போல் நடப்பதை பார்த்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் சுவற்றில் காது வைத்து கேட்காத குறையாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.


ஓர் சிலர் மனதில் ஆனந்தம்.சிலர் மனதில் கஷ்டம்.


ஏன்னா இந்த உலகத்துல சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருந்தா பிடிக்கும். சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரன் நம்மை விட இப்படி இருக்கிறானே என்று நினைக்க பிடிக்கும் 

அதுக்காக நீ நீட்டுற பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போட முடியாது

அரசு வேலைக்கு லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தப்பு. நீ இதை நல்லா புரிச்சுக்கோ

அப்போது தொலைபேசி அழைத்தது 

எதிர்முனையில் குலசாமி கோவில் பூசாரி.. தம்பி நான் பூசாரி அரவிந்த் சர்மா பேசுறேன்


எரிச்சலாக இருந்தாலும் போலியான புன்னகையில் கேட்டான் சொல்லுங்க சாமி என்ன விஷயம்.

அது வந்து தம்பி.நேத்து எனக்கு ஓர் கனவு அதுல ஓருத்தர் உன்னை கிணத்துல பிடிச்சு தள்ளுற மாதிரியும்.. மஞ்சள் பாவாடை சட்டை போட்ட ஓர் சின்ன குழந்தை பிடிச்சு காப்பாத்துற மாதிரியும் இருந்துச்சு.

சீக்கிரமா உனக்கு ஓர் நல்லது நடக்க போகுதுன்னு மட்டும் தெளிவா தெரியுது 

சூழ்நிலையை அறிந்து சொல்கிறாரா.. அல்லது புரியாம பேசுறாரா குழப்பமா இருந்தாலும்..

சரி சாமி எப்படியோ நல்லது நடந்தா சரிதானே 

அடுத்த வாரம் நவராத்திரி மறக்காம தம்பதி சமேதரா வந்திடுங்க.. அம்பாள் விஷ்ணு துர்க்கை நிச்சயமாக காப்பாத்துவா கவலை படாதே. போனை வைத்தான்..

அவர் சொல்லுவது எதுவுமே புரியாத புதிராக இருந்தாலும். மனம் ஏதோ தெளிவானது போல் இருந்தது.

அதுவரையில் அவளுடன் பேசியது எல்லாம் வீண் என்ற முடிவுக்கு வந்தவனாக அவளை கூப்பிட்டான்..

ஏன்டீ நீ சொல்லுற மாதிரியே செய்யுறேன்.. ஆனா இப்பவும் சொல்லுறேன் எனக்கு இதுல இஷ்டமே இல்லை.ஆனாலும் உன் மனசு சந்தோஷத்துக்காக மட்டும் தான்.

என் செல்லம் நீங்க இது சொன்னதே போதும். இப்பவே என்னோட சித்திக்கு இந்த விஷயத்தை சொல்லிடுறேன்.

இருங்க சூடா ஓர் கப் காபி எடுத்துட்டு வர்றேன்.. ஏன்னா நான் இவ்வளவு நேரம் பேசியது உங்களுக்கு தலை வலி வந்திருக்கும் ரொம்பவே பாசமாக பேசுவது போல் சொன்னாள்.

அது சரி இவ்வளவு நேரம் கழிச்சாவது உன் பேச்சால எனக்கு தலை வலின்னு சொன்னீயே

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு என்று தன் சேலை முந்தானையை அவனின் முகத்தில் செல்லமாக தட்டி விட்டு சிரித்தாள்..

கனவுலகில் மிதந்தாள்.. இரண்டு நாளைக்கு முன்னர் வீட்டுக்கு வந்த சித்தி சொன்ன வார்த்தைகள் காதுகளில் ரீங்காரமிட்டது.


இந்த விஷயத்தை மட்டும் நீ பக்குவமா பேசி மாப்பிள்ளையை சம்மதிக்க வைச்சுட்டா... உங்க சித்தப்பாவுக்கு இந்த பிராஜெக்ட் லாபம் மட்டும் 10 கோடி.அவர் கூட அடிக்கடி சொல்கிட்டே இருப்பாரூ.

நீ பிறந்ததுல இருந்து உனக்கு எதுவுமே செய்யலை.. இந்த வேலை முடிச்சா செல்லநாயீக்கு..

நம்மளோட அந்த தென்னந்தோப்பு மாப்பிள்ளை பேரில் எழுதி வைக்கணும் . அப்படின்னு உங்க அண்ணன் கூட சரின்னு சொல்லிட்டான்.

நாங்க அமெரிக்காவில் செட்டில் ஆயிட்டோம்..அதை விட முப்பது மடங்கு பெரிசா இங்கே தோட்டமும் வாங்கியாச்சு..

என்ன நம்ம ஊர் மாதிரி வேலைக்கு ஆள் கிடைச்சா கூலி அதிகமா கொடுக்கணும் அதனால் ஏதோ விமானத்துலையே எல்லாம் விவசாய வேலையும் செய்யுறானாம்...

நம்ம தாத்தா வாரிசுல நமக்கும் அவ தானே ஓர் பெண் வாரிசு அதனால் அவளுக்கே கொடுத்து என்று வேற சொன்னதாக சொன்ன சித்தி.

சித்தப்பாவோ திருதிருவென்று விழித்தார். இவளால் எப்படி ஓர் இடத்திற்கு தகுந்தவாறு பேச முடிகிறது.

நேத்து மகனிடம் பேசும் போது நமக்கு இங்கே இருக்கிற சொத்து பத்தாது. இன்னும் இரண்டு தோப்பு பக்கத்துலையே வருது.

வாங்கி போட்டால் தான் அடுத்த வருஷம் நீங்க அந்த வேலை முடிஞ்சு வந்தால் நாம் அந்த தோப்புல பங்களா கட்டி இருக்கலாம் என்றாளே


ஏன் சித்தி சித்தப்பா இப்படி முழிக்கிறார் என்றவளிடம், அது வேற ஓண்ணும் இல்லை.இந்த விஷயத்தை ஓர் ரகசிய பரிசா கொடுக்க நினைச்சதை நான் இப்படி சொல்லுறதை என்று மழுப்பினாள்

அவரும் ஆமாம் என்பது போல் மண்டையை ஆட்டினார்

தொலைபேசியை எடுத்து. சித்தி அந்த இடத்தை நீங்க சொன்ன மாதிரி பண்ண மனுஷன் சம்மதிச்சுட்டாரூ..அரசு புறம்போக்கு தானே அதை அப்படியே குத்தகைக்கு விடுவது போல் உங்க கம்பெனி பெயருக்கு எழுதி தருவது போல் பண்ணுவாராம்..

மத்த விஷயத்தை சித்தப்பாவிடம் சொல்லுவதா சொன்னாரூ சந்தோஷ பெருமூச்சுடன் பேசி முடித்தாள்..

அந்த இடத்தை பத்தி எல்லாம் இப்போ பேசவே பேசாதே.. நாங்க அப்படி கேட்டோம் என்பதை கூட யாரிடம் ஊறி வைக்காதே.இங்கே பெரிய பிரச்சினை போய்கிட்டு இருக்கு. நான் அப்புறமா பேசுறேன். வேகமாக ரிசீவர் வைக்கபட்டது.

எதுவுமே புரியாமல் சமையலறை சென்று காபி கலந்து வந்த அவனுக்கு தந்த படி சோஃபாவில் அமர்ந்தாள்.

உனக்கு என்னடீ ஆச்சு திரும்பவும் டல்லா இருக்கே..


அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து கொட்டியது.

அவனோ ஓர் தகப்பனைப் போல் அருகில் வந்து தான் கட்டியிருந்த வேட்டியில் அவளின் முக வியர்வை துடைத்து விட்டான்.

அது வந்து காலையில் சாப்பிடாமல் இருக்கேனா அதான் சமாளித்தாள்

அப்போது பரதநாட்டிய வகுப்பு போயிட்டு வேகமாக வேகமாக வீட்டுக்கு வந்த அவனின் தங்கை 

டேய் கேசவா நீ முதல்ல டி.விய போடு.எவ்வளவு பெரிய பிரச்சினை நடந்துட்டு இருக்கு நீங்க இரண்டு பேரும் விஷயமே தெரியாத மாதிரி அமைதியா இருக்கீங்க


நான் தான் அப்பவே சொன்னேனே மதினி உங்க சித்தப்பாவ நம்பாதீங்க.அவரை நம்பினா நம்ம எல்லாரையும் கைலாசத்துக்கே கூட்டிட்டு போயிடுவாரூ பெரிய அயோக்கியன்னு..

இருவருமே குழம்பி போயினர்.


அவளோ சமாளித்து கொண்டு பேசினாள் இங்க மாதிரி கலா எங்க வீட்டுக்கு சொந்தகாரங்களை பத்தி மரியாதை குறைவா பேசாதே அது உனக்கு நல்லதில்லை.

நான் எது சொன்னாலும் உங்க களிமண் மண்டையில் ஏறாது.நான் டிவிய போடுறேன்.

அவளோ வெறுப்பாக தன் கணவனை பார்த்தாள்.அந்த பார்வையில் உங்க கண்ணு முன்னாடி என்னை அசிங்கபடுத்துறா. நீங்க பேசாம இருக்கீங்களே என்ற கோபம் தெரிந்தது 

திரையில் மிகவும் சத்தமாகவே ஓலித்தது.காண்டிடாக்டர் சிவஞானம் வீட்டில் அதிகாரிகள் சோதனை.

அரசு நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக சில அதிகாரங்களை போலீஸ் பிடித்து விசாரிப்பதாகவும் செய்தி.


அவளோ பிரமை பிடித்தது போல் இருந்தாள்.

இப்போ புரியுதாடீ நான் ஏன் மாட்டேன் சொன்னேன் என்பது

அண்ணே நீ என்ன சொல்லுற எனக்கு எதுவுமே புரியலை என்றாள் கலா..

அது நீ வேற, இன்னிக்கு அவங்க சித்தப்பா வீட்டுக்கு கூப்பிட்டா.

நானும் நீ சொன்ன மாதிரியே அவர் நல்லவரா தெரியலை அதனால் நான் அவர் வீட்டுக்கு வர மாட்டேன்.நீ வேணா போயிட்டு வான்னு சொன்னே அதானடீ.

மனைவியை சாட்சி சொல்ல சொன்னான்

அவளும் அசடு வழிந்தாள்.


மாறாக கலாவோ அண்ணி எங்க அண்ணன் சின்ன தப்பு பண்ணிணா கூட காட்டு கத்து கத்துவான்...இப்போ நீங்க வந்த பிறகு நிறைய விஷயத்தை சமாளிச்சு பேச கத்துகிட்டான்.

ஆனாலும் உனக்கு பொண்டாட்டி மேல இவ்வளவு கரிசனம் கூடாது கேலியாக சிரித்த படி சொல்லி விட்டு போனாள்

அவனோ அவளை திட்டாமல் அமைதியாக இருந்தான்.

என்னங்க, காலைக்கு என்ன டிபன் பண்ணட்டும்ன்னு.. ஆர்டர் கொடுங்க.

நீ தானே இந்த வீட்டுக்கு எஜமானி, திருப்பதி எங்க அம்மா அப்பா ஊரில் இருந்து வருகிறது வரை உன் ஆட்சி தான் உன் இஷ்டப்படியே பண்ணு பிறகு அதுக்கும் எதாவது குறை சொல்லுவே 

அப்படியெல்லாம் இல்லை..  எப்பவுமே நான் உங்க செல்ல நாயீ தான்.

மாடியில் இருந்து கலா சத்தமாகவே கேட்டாள் அண்ணி.. நீங்க அல்சேஷனா பொமரேனியனா...

உனக்கு என்னை கேலி பேசாம தூக்கமே வராதா...

அப்போது அவன் சொன்னான்..இது சில நேரம் அல்சேஷன் பல நேரத்தில் பொமரேனியன்..

அனைவருமே ஓரு சேர சிரித்தனர்...


வேலைக்கு போறா உங்க தங்கச்சி

 என்னோட சம்பளம் செலவுக்கு போதலை.அதனால என் பொண்டாட்டியும் வேலைக்கு போறா இது என்ன தப்பு என்று சொல்லும் அவளின் கணவன்.அவளின்  அண்ணன் மற்றும் அப்பாவிற்கு தானே அதிகமாக மனசு வலிக்கும். நல்லா சம்பாதிக்க தெரியாதவனுக்கு பொண்ணை கொடுத்து நம்ம புள்ளைய நாமே கஷ்டத்துல தள்ளி விட்டு விட்டோமோ..

இரவு நேரத்தில் தன் தங்கையின் வலியை நினைத்து மனைவியிடம் புலம்பும் பாசக்கார அண்ணன்..

உங்களுக்கு இன்னும் அவ நினைப்பு விடலையா....

இல்லடீ..அவ எந்த வேலையும் செய்ய தெரியாதவ என்று நீ அடிக்கடி சண்டை போடுவீயே..

இன்னிக்கு எல்லா வலியையும் வெளியே சொல்லாம சிரித்த படி வேலைக்கு போறாளே..


அம்மா..அப்பா.. தயவுசெய்து..

வார்த்தை

விளையாட்டில்

தொடங்கி

அமைதியாக


அப்பாவின் வலி

 எங்க அப்பா நிறையவே குடிச்சாரூ அதுக்காக மதம் மாறினோம் என்ற பரிமளா..

கணவன் குடிப்பதை வக்காலத்து வாங்குகிறாள்.. இந்த காலத்தில் யார் தான் குடிக்கலை..

குடிக்கிறதை எல்லாம் ஓர் தப்பாவே  நினைக்க கூடாது..

ஏனோ தள்ளி நின்று அமைதியாக பார்க்கிறார்.தன் மகளின் காதலுக்காக .பத்து லட்சம் கடன் வாங்கி நடுத்தெருவில் நிற்கும் அந்த ஏழை தகப்பன்.. 

டேய் அவ சரிபட்டு வரமாட்டா அவளை ஓரேடியா அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வை என்ற மாமியார்..

தன் கணவனுக்காக பரிந்து பேசியதை விட, அவனுக்கு பிஸினஸ் பண்ண மாமனார் பணம் தரா விட்டால்...ச்சே என்ன மனுஷங்க இவங்க..

ஏனோ நினைவு வந்தது நேத்து கூட காலேஜ் தோழி தொலைப்பேசியில் பேசிய பேச்சு.. உன் வீட்டுக்காரர் இன்னும் உன்னை சந்திக்க காத்திருந்த அதே அடிக்கடி நிக்கிறாரூ.. கொஞ்சம் கவனமா இரு...


பைத்தியகாரியா...நல்ல காதலியா....


கல்வியில் வென்றவன்

கைநிறைய சம்பளத்திற்காக

வெளிநாடு பறக்கிறான் 

கல்வியில் தோற்றவனோ

தன்னை விட அதிகம்

படித்தவளை காதலிக்க

தொடங்குகிறான்

கல்யாண சந்தையில்

படித்தவளை விட பெரிய

பணக்காரி கிடைத்தால்

என் காதல் பொய்யல்ல

ஆனால் எங்க பெத்தவங்க

சம்மதிக்கலை மென்றே

சால்ஜாப்பு சொல்கிறான்

காதலியோ தன் ஏழை

அப்பனிடம் பணத்தை வாங்கி

அவனுடன் வாழ வரதட்சணை

தருகிறாள்... எதிர்பார்த்த 

பணம் கிடைத்த மகிழ்ச்சியில்

மணமேடை ஏறுகிறான்..

வரவேற்பு நிகழ்ச்சி..

எங்க காதலுக்கு பத்தாவது

வருஷமிது.. ஏனோ பத்தொடு

பதினொன்றாக வந்தவளை

அறிமுகம் செய்தான்.. இவங்க

என்னோட பெஸ்ட் பிரண்ட் என்றே

அவளோ பாலைவனத்து

பறவை போல் சிரித்த படி சொன்னாள் 

நீங்க ரொம்பவே அதிர்ஷ்டசாலி..

அவளின் காதுகளுக்கு

மட்டும் கேட்கும் படி

சொன்னான்.. இனி என்னை

தொந்தரவு பண்ணாதே

காதல் சுத்த பைத்தியக்காரத்தனம்

வரதட்சணை இல்லாம

கல்யாணம் பண்ண

எனக்கென்ன பைத்தியமா

அவளோ வெறுமையாக

சிரித்தாள் பணத்தை விட

பெரிய பாசத்தை தேடும் 

இவ பைத்தியகாரியா....

நல்ல காதலியா....

ஷேக்ஸ்பியர் வரிகள் - காதல்

 முதல் காதலில் 

தோற்று வெறுமையாக

தன்னந்தனியாக 

அலையடிக்கும் மெரீனா 

கடற்கரையில் 

நின்ற போது 

தெரிந்து கொண்டேன்

காதலுக்கு மூதலீடு 

பொய்களே..ஏனோ 

நினைத்து பார்த்தேன்

சென்னைக்கு வந்து

ஐந்து வருடங்களுக்கு

பிறகு காதலில்

விழுந்ததாக சொன்ன 

நண்பனின் வரிகளை

நானே நாலைஞ்சு

பேரிடம் சிரித்து சிரித்து

பேசினா தான் ஏதாவது

ஓர் பொண்ணாவது

கிடைக்கும் என்ற

அவனின் பேச்சை..

உலகமே நாடகமேடை

ஷேக்ஸ்பியர் வரிகள்

மனதில் அலையடித்தது


ரஞ்சித்.

 தயவுசெய்து எனக்காக நீ நூல்டுல்ஸ் கூட செஞ்சு தர வேண்டாம்..

ஓரே ஒரு நாள் எனக்காக நாம அன்னிக்கு ஊருக்கு போகும் போது சாப்பிட்டோமே வட்டமா பெருசு இருந்துச்சே அதே மாதிரி செஞ்சு தாயேன்..

நீ அதே மாதிரி செஞ்சு தந்தாலே போதும்..

நீ தினமும் மூணு வேளையும் கூட அதையும் தா..

நான் அடம் பிடிக்காம சமத்தா சாப்பிடுவேன்..காலை வேளையில்

சமையலறையில் நின்று கொண்டிருந்வளிடம் வந்து கேட்டான் ரஞ்சித்

 

பாரூடா இந்த பொடுசு கூட தான் நினைச்ச மாதிரி சாப்பிட ஆசைபடுது நீயும் தான் இருக்கீயே.

பேசாம இந்த சனியனை தலைமுழுகு. போன வாரம் வந்துட்டு போனானே உன் வக்கீல் பிரென்ட் அவன் கிட்ட பேசி சுமூகமாக இவளை அவங்க அப்பன் வீட்டுக்கே அனுப்பி வைச்சுடு.மாசத்துல பத்து நாள் இல்ல பொழுதெல்லாம் அவ அங்கேயே இருக்கட்டும்.

அம்மா நீ வேற பேசி பிரச்சினையை இழுக்காதே என்ற கோபால்

நான் சொல்லுறதுல என்னடா தப்பு இருக்கு..

இவ வீட்டுக்கு வந்த நாளில் இருந்தே ஓரே கண்றாவி தான்.

உன்னை விட அதிகம் படிச்சு இருக்கோம்கிற திமிரூ..

உனக்கு தான் அறிவே இல்லையே.

அந்த விஜயா உன்னை எப்படி எல்லாம் சுத்தி சுத்தி வந்தா அவளை கட்டி இருந்தா வரதட்சணை இன்னும் அதிகமாவே கிடைச்சு இருக்கும் நம்ம பட்ட கடனை எல்லாம் அடைச்சுட்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்..

 

என்னம்மா இப்படி பேசுற.அவளை கட்டிகிட்டா பணக்கார வீட்டில்ல நாய் மாதிரி தான் இருக்க வேண்டி வரும்..

உனக்கு இந்த பொண்ணு தான் சரியா இருப்பா..நீ ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் நம்ம வீட்டு சத்தம் வெளியே தெரியாம போட்டதை தின்னுகிட்டு வீட்டுக்குள்ளேயே கிடப்பா.

அதையும் மீறி ஏதாவது உன்கிட்ட பிரச்சினை பண்ணிணா.. இரண்டு வார்த்தை அன்பா பேசி அவளை அவங்க ஆத்தா வீட்டுக்கு போகாம நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு எல்லாம் சொன்னே..

ஆமா சொன்னே அதுக்கு இப்போ என்னவாம்.. இந்த பிச்சைக்கார நாயீ என்னையவே எதிர்த்து பேசுது..

என்னை எதிர்த்து பேசுற உனக்கு எதுக்குடி என்னோட இருந்து பவுன் செயின் அதை என்கிட்டயே கொடுன்னு சொன்னதுக்கு.. அதையெல்லாம் தர முடியாது..

நான் உங்க வீட்டுக்கு வந்தபோது ஆசையா நீங்க போட்டதுன்னு எதிர்த்து பேசுறா...

நீ தானேம்மா அந்த செயினை அவகிட்ட கொடுத்தே..

இவன் எவன்டா விபரம் தெரியாதவனா இருக்கான்..

அவ அப்பன் நம்மள விட பணக்காரன் ஆனா தன் புள்ளைகளை ஏழை மனநிலையில் வளர்த்து இருந்தான்..நீ கூட அடிக்கடி சொல்லுவீயே அவளுக்கு கழுத்துல பத்து பவுன் நகை போடும் என்பது தான் லட்சியம்.. அந்த ஓரே ஒரு விஷயத்தை வைச்சு தான் அவ என்னை நாய்க்குட்டி மாதிரி சுத்தி வர வைச்சேன்னு..

மெதுவா பேசு அவ காதுல ஏதாவது விழுந்திட போகுது..

நல்லா விழட்டுமே..

இதை கேட்ட அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா..

அது கூட நமக்கு நல்லது தானேடா..அதையே காரணமாக சொல்லி டைவர்ஸ் வாங்கிடு.. அந்த புள்ளையும் ஆத்தா போலவே தான் இருக்கும்

பெத்த கடனுக்கு கடைசி வரை இவ அவங்க அப்பன் ஆத்தாவுக்கு வடிச்சு கொட்டுகிட்டு பிள்ளையார் கோயில்லை தூத்து பெருக்கிட்டு வாழ்க்கையை முடிச்சுட்டு போகட்டும்..

நீ அந்த விஜயாவ இரண்டாம்தாரமா கட்டிக்க.. அவங்க அப்ப

ஓரு வருஷமா இந்த கதை நடந்துக்கிட்டு இருக்கு.. நானும் உனக்காக ஓவ்வொரு வாரமும் அவ வீட்டுக்கு கதையெல்லாம் தெரிஞ்சு கிட்ட இருந்தேன்.

அவனின் முகத்தில் ஆசை வெளிபட்டது.

எப்படியோ பெரிய பணக்கார பெண் அது நிறைய சொத்தோடு...

வேலைக்கே போகாதவனுக்கு இரண்டாவது முறையாகவும் அதிர்ஷ்டம் கதவை தட்டுவது போல் இருந்தது..

 

வாசலில் நன்கு படித்த பெண் பெற்ற அந்த முதியவர் வந்து நின்றார்.

அப்போது இருந்த நாற்காலியை விட்டு எழுவும் மனமின்றி சத்தமாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கேட்க வேண்டும் என்றே ராக்காயி

என்ன விடிஞ்சு விடியாம வாசல்ல கடன்காரன் மாதிரி வந்து நின்னுகிட்டு எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்கும் அறிவில்ல நீங்க பெத்து போட்ட இந்த.. வார்த்தை மிகவும் கேவலமாக வந்து விழுந்தது..

 

அது வந்து சம்பந்தி அம்மா நேத்து என் பொண்டாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா..

நான் மதியம் கடையில் இருந்து

அடுத்த வீட்டில் சண்டை நடந்தால் தனது வேலையை கூட விட்டு விட்டு வந்து வேடிக்கை பார்த்து ரசிக்கும் கூட்டம் வீட்டு வாசலில் கூடி நின்றது..

அதில் சிலர் வழக்கம் போல் நல்லவிதமாக பேசுவது போல இருவரும் இடையே கொம்பு சீவி விட்ட ஆயத்தமாயினர்..

மற்ற நாளில் அமைதியாக இருக்கும் அவள்.. காலையில் விஜயா கதையை கேட்டதில் இருந்து ஓர் முடிவு எடுத்திருந்தாள்..

இடையே சமரசம் பேச வந்தவளை.இங்க பாருங்க எங்க வீட்டு விஷயத்துல தலையிட நீங்க யாரூ தன் கோபத்தை அவர்களிடம் காட்டினாள்..

அப்போ நீ உங்க அப்பா வீட்டுக்கு போகத்தான் போறீயா மாமியார் கரிசனத்துடன் கேட்பது போல் இருந்தது.

ஆமா அவங்களுக்கு ஆம்பள புள்ள இல்லை.. காதலிக்கும் போது அவங்களையும் நல்லா பார்த்துப்பேன்னு தான் உங்க மகன் சொன்னாரூ ஆனா..

ஏன்டீ பழைய கதையை பேசி என்னை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுறே..

அவளோ விக்கித்து போனாள் காதலித்தது குற்ற உணர்வா.. அல்லது கல்யாணம் செய்து கொண்டது குற்ற உணர்வா...

 

முடிவு எடுக்க முடியாமல் அவள் தவித்து கொண்டிருந்த போது ஓர் பத்திரத்தை பீரோவில் இருந்து எடுத்து வந்த பேப்பரை டீப்பாய் மீது வைத்தாள் அந்த வீட்டின் பெரிய மனுஷி..

நீ போறதை பத்தி எங்களு

என்னம்மா நடக்குது இங்கே படிப்பறிவு அதிகமில்லாத அந்த ஏழை முதியவர் படபடப்புடன் பயம் கலந்த தொனியில் கேட்டார்.

விடுதலை பத்திரம் இனி நானும் என் பையனும் இந்த வீட்டுக்கு வர வேண்டியதே இல்லை.

வாசலில் கூட்டம் கூடி இருக்கிறது நம்ம கெளரவம் என்னவாகும் என்பதையெல்லாம் சிந்திக்க கூட நேமில்லாம நெடுச்சாண்கிடையாக அந்த பெரிய மனுஷி காலையில் விழுந்தார்..

சம்பந்தியம்மா நான் ஏதாவது தப்பா பண்ணி இருந்தா என்னை வேணாலும் நடுவீதியில் வைச்சு செருப்பை கழட்டி அடிங்க வாங்கிக்கிறேன்..

என் பொண்ணோட வாழ்க்கை இது..

 

ச்சீ தூரப் போ அசிங்கம் பிடிச்ச குடும்பம்..அவ எப்படி போனா எனக்கென்ன என் பையனுக்கு இன்னொரு கல்யாணம் கூட பண்ணி வைப்பேன் தெரியுமா ஏகதாளமாக பேசினாள்

 

நீங்க பெரிய மனுஷங்க என்னவெனாலும் பண்ணுங்க..

என் பொண்ணு கடைசி வரை உங்க வீட்டுல பத்து பாத்திரம் கழுவுற ஓர் வேலைகாரியா கூட இருந்திட்டு போகட்டும

பரிமளா அப்பாவின் கையை

பிடித்தாள்..அப்பா இனிமே நான் தான் உங்களுக்கு மகன் வாங்க போகலாம் என்றாள்.

 

அம்மா எனக்கு நீ அந்த சாப்பாடு செஞ்சு தருவீயா ஏக்கத்தோடு கேட்டான் ரஞ்சித்..

ம்ம் செஞ்சு தாரேன்..

நீ உன்னோட பொருளை எல்லாம் எடுத்து வைச்சுக்கோ பரிமளா சொன்னவுடன்

அப்பாவியான முகத்துடன் கேட்டான்.இந்த வீட்டில எனக்கு நீ தானே எல்லாமும்.

ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்ச ஓரே ஒரு பொருள் இருக்கு அதை எடுத்துகிட்டு வரலாமா..  அம்மாவின் முன்னால் குழந்தை குழந்தையாகவே இருந்தது..

சரிடா எடுத்துகிட்டு வா..அவள் சொன்ன மறுநிமிடம் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றவன்... ஓர் வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் ஓர் நாய்க்குட்டியை தூக்கி கொண்டு வந்தான்..

ரஞ்சித் இது என்னடா புதுசா இருக்கு தாத்தா அப்போது தான் வாயை திறந்தார்..

தாத்தா இது ரொம்ப பாவம் தெரியுமா.நேத்து ஓர் லாரி மாதிரி வேன்ல வந்தவங்க இதோ

ரஞ்சித் பேசிய வார்த்தைகள்  தனக்காகவே பேசியதை போல் பரிமளா உணர்ந்தாள்..

அந்த மூவரும் கிளம்பி செல்வதை கூட பார்க்க நினையாமல் திரும்பிக் கொண்டனர்..

 

காலங்கள் உருண்டோடியது..

 

பிறரின் வாழ்வில் பிரச்சினையை உண்டு  பண்ணி  தன்னை

நல்லவள் போல் காட்டிக்கொள்ளும்

பார்வதி வீடு தேடி வந்து பழைய கதைகளை பேசி அவளை உணர்ச்சிவசப்பபட வைக்க நினைத்தாள்..

Contd...

ஆறுதல் மொழி

பக்கத்தில் இருந்த கைகளை பிடித்து அவனின் கண்களை நோக்கி நான் உன் கவலைகளை அறிவேன்.

என்னால் இயன்றவரை உனக்கு முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று பேச வேண்டிய அவசியமில்லை.

அவனின் தோள்களில் சாய்ந்து மனதின் கவலைகளை சொல்லணும் அப்படி சொன்னாலாவது  அவனுக்கு நான் படும் கஷ்டமும் வேதனையும் புரியும் என்பதும் கூட அவசியமில்லை 

ஓர் வேளை நாம் கஷ்டப்படுவது தெரிந்தால்  அவன் எப்படியெல்லாம் ஆறுதல் சொல்வான் என்று நினைத்தாலே போதும்.. அன்று ஓர் நாள் அப்படித்தான் தனியாக இருந்த போது எல்லோரும் பாடாய் படுத்தி வேலை வாங்கினர்.

மறுநாள் அவனிடம் மன்னிப்பு கேட்ட போது சிரித்த படி சொன்னான். 

அவன் சொன்ன வார்த்தைகளில் தான் எத்தனை வலிகளை தாங்கிய தத்துவங்கள்

அவனை போன்ற ஓர் வெள்ளந்தியான மனிதனை காண்பது அரிது 

கவலைபடும் நேரத்தில் கூட தன்னம்பிக்கையாக பேசி மனதின் கவலையை மாற்றும் அவன் ஓர் சிறந்த நண்பன் மட்டுமல்ல.

பிறரை விமர்சனம் கூட செய்ய விரும்பாமல் தன் வேலையை மட்டுமே செய்ய விரும்பும் ஓர் நல்லவன்

அவனின் ஆறுதல் வார்த்தைகளை நினைத்து பார்ப்பது உண்டு. 


ஆறுதல் சொல்வதற்கு கூட ஓர் நல்ல மனம் இருந்தால் தான் சொல்லுவாங்க.

இன்றைய கஷ்டமான தருணத்தில் அவன் என்னருகில் இருந்தால் எந்த விதமாக ஆறுதல் வார்த்தைகளை பேசி இருப்பான் என்று நினைத்தாலே பாதி கவலைகள் பறந்து விடும்.


ஏன்னா அவனை போல் தன்னம்பிக்கையாக பேசும் இன்னொரு மனிதனை நான் பார்த்ததில்லை 

என்றோ அவன்  பேசிய ஓவ்வொரு வார்த்தையும் இன்றும் கூட தன்னம்பிக்கை தரும் ஆறுதல் மொழியே

உயர்ந்த மனிதர்களின் உயரிய சிந்தனை

கட்டுரை உருவாக்க நிலையில் தான் உள்ளது..


ஏன் அவர்களால் மட்டும் பிறருக்கு மிகவும் எளிதாகவும் உடனடியாகவும் உதவ முடிகிறது. இறைவன் தான் அனைவரையும் படைத்தான் என்றால் நமக்கு மட்டும் ஏன் யாருக்கும் உதவ மனமே வருவதில்லை.


வாழ்வில் நமக்கு நடந்த துன்பம் மற்றும் துயரங்களை மறந்து நாம் சந்தித்த நல்ல நபர்களை சந்திக்க நினைப்பதும் அவர்களின் நட்பை தொடர்ந்து பெற நினைப்பதும் மனிதர்களின் இயல்பே.

நல்லவர்களின் இயல்பு என்றுமே தன்னால் இயன்ற உதவியை பிறருக்கு செய்வதே.

தன் வாழ்வில் பட்ட கஷ்டம், வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதே அவர்களின் உயரிய சிந்தனை 

விவசாயி

நேற்று வரை

தேவைபட்ட 

பொருள் - தேவை

முடிந்த காரணமாகவோ..

அல்லது தேவைகள்

சலித்து போனதாலோ.

இன்று அதற்கு அவர்கள்

தந்த பெயர் உதவாத குப்பை 

வேண்டாத குப்பை 

தூக்கி வீசிய அந்த 

குப்பை கழிவுகளை பதப்படுத்தினான்.. 

அந்த நல்ல மனிதன் 

ஏனென்றால் அவனுக்கு

நன்றாகவே தெரியும்

நல்லவர்களை தேவை 

முடிந்த பிறகு தூக்கி

வீசுவது உலகியல் 

இயல்பு தானே. எனவேதான்

இன்று அதை பயனுள்ள 

உரமாக மாறி 

விவசாயத்தை 

செழிக்க வைக்கின்றான்

பலருக்கு உதவி செய்யும்

இந்த விவசாயி



Mind..


"Mind your words" might be heard in many times, in different situations.
.
The impression created by these words contained sentence are so heavy.
Knowingly or unknowingly so many people's use this word to control other's.
They communicate their frustrated mood over the situations. But the impact created once, cannot be forgotten from other side.
Even years and years later the opponent remember the situation and harsh words used towards him.
Everyone show their anger only towards third person. Because they feel that third person cannot influence him at any situations.
Whereas as if you had an opportunity to read the story of Ram and Sita.
We may think that both are good in nature, but why they undergone hardtime through their lifetime.
Answer is very simple and clear. Eventhough they are god ( as per Hindu belief). They accept their ancestors sins.
Person called "Seravanan" who's one and only aim and agenda in his life was to serve his old aged parents.
Great Maharaj Dasaradha, who went to jungle for hunting by mistake his arrow hit towards "Seravanan".
Servanan is so wise, he said to king. I am not afraid of my death, but my parents don't have any other relatives or caretaker.
I am worried only about them.
King promised him, he will take care of them and treat as his own parents for rest of their life.
He died at the lap of Dasaradha.
His parents aren't aware of his son's death, due to their old age illness
They depend only on him, so they are so emotionally bounded with him.
When they heard his son was killed by the king in misrepresentation as deer. ( That's reason Ravana asked Maarisan to go like deer, because sin created by ancestors will be placed towards their legal heirs not only as per law. Also as per law of karma theory.)
They crused Dasaradha as, the emotional turmoil which created Ramayana.
Dasaradha is great king, but loved his son RAM, more than his prana.
Hindu philosophy says if someone has been cheated in the name of friendship, relatives or business partners etc.
Tamil literature "Silapathikaram" speak about the same theory,who punished at wrong trail. But the impact was faced by their heirs.
.
So please use some pleasing words before using the sentence on "Mind your words" third person

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...