ஊடக நண்பர்களே


.
கொரோனா பாதிக்கப்பட்ட மனிதர்களின் அனுபவங்களை பகிருங்கள்...
வீதியில் குடும்ப உறவுகளால் விரட்டப்பட்ட முதியவர், மற்றும் நோய்வாய்ப்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு.... சென்று சேவை செய்யும்....ஏழை நடுத்தர மக்களின் சேவையை பற்றி பதிவு செய்யுங்கள்....
மாபெரும் நடிகர் கொடுக்கும் கோடிகள்... இந்த ஏழைகளின் மறைமுக பணமே....
பல கோடி வைத்திருப்பவர்கள் செய்வது தர்மம் தான்...
ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் பிறருக்கு உதவ வீதியில் வேலையை செய்யும் தன்னலமற்ற மனிதரை பேட்டி காணுங்கள்....
இதில் ஓர் நடைமுறை சிக்கல் இருக்கிறது, அதை நான் நன்கு உணர்வேன்....
தன்னலமற்ற சேவை செய்யும் பலர் தன் முகத்தை ஊடகத்தில் காட்ட விரும்புவதில்லை...
எனவே தான் எழுதுகிறேன், தன் முகத்தை மறைத்து, பலருக்கு உதவி செய்யும் மனிதரை படம் பிடிக்க முயலுங்கள்....
அல்லது முன் களப் பணியாற்றி சிறந்த சேவை வழங்கும் ஊடக நண்பரையாவது பேட்டி கண்டு அவரின் தினசரி நிகழ்வை பதிவு செய்யுங்கள்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...