மன்னித்து விடு...


.
.
உன்னை
முழுமுதற் கடவுளாக
வணங்கிக் கொண்டு
இருந்த போது..
சிணுங்கியது
செல்போன் அலாரம்...
எடுத்துப் பார்த்தேன்....
அலறுகிறது யானை...
ஏனோ கடவுளே
மனதில் வெறுமை
புகுந்து கொண்டது...
அரசமரத்தின் ஓரமாக
அமர்ந்து கொண்டு
அந்த யானைக்காக
மனம் சஞ்சலப்படுகிறேன்....
நான் யானையாக
பிறக்கவில்லை ஆனால்
யானை முகத்தின்
தும்பிக்கையை
நம்பிக்கையுடன்
கைதொழுத நாட்களை
அசைபோடுகிறேன்....
ஏனோ நெஞ்சினுள்ளே
யானையின் பிளிறல்
மீண்டும் மீண்டும்
ஒலிக்கிறது... என்னை
காப்பாற்றவே ....விநாயகா
மன்னித்து விடு.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...