நம்பிக்கை விதை

கொரானா பயம் தவிர்ப்போம்...

 பிழைக்க
முடியுமா நெஞ்சமதில்
அவநம்பிக்கை
மனதில் ஆட்டம்
போடும் வேளையில்..
விதைக்கிறேன்
தன்னத்தனி..
ஓருவனாக... என்னை
தனிமையில்
தள்ளிய அனைவருக்கும்
நான் மீண்டு நலமுடன்
வருவேன் என்கிற
நம்பிக்கை விதை

ஏப்ரல் 1...


இன்று
புதுக்கணக்கு
பிறக்கும் நாள்
ஆனாலும்
இந்தமுறை
யாரும் எனக்கு
வாழ்த்துக்கள்
சொல்ல வேணாம்..
இயந்திரம் போல
இயங்கிய இந்திய
மக்கள் கொரோனா
பீதியில் வீட்டில்
முடங்கி கிடக்கும்
பொழுதில் எனக்கு
மட்டும் எதற்காக
கொண்டாட்டம்.....
எம் மக்கள்
ஆரோக்கியம் பெற்றுவரும்
வரை காத்திருக்கவும்
சில நாட்கள்...
முதலாளிகளே
தயவுசெய்து
பொறுத்துக் கொள்ளுங்கள்
புதுக்கணக்கை தொடங்க
அவகாசம் தாருங்கள்..
இப்படிக்கு ஏப்ரல் 1...

குட்டி யம்மா....



அவள் சின்னச்சிறு குழந்தை....ரஞ்சனி...
கோடைகாலத்தில் ஓர் நாள் தமிழகம் முழுவதும் பந்த் நடந்த போது... அம்மா அப்பா இருவருமே வீட்டில் இருந்தது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது...

மறுநாள் பெற்றவர்கள் இருவரும் வேலைக்கு சென்றனர்...

அப்பாவியாக பாட்டியிடம் வந்து கேட்டாள் ரஞ்சனி..., ஏன் பாட்டி இன்னிக்கு லீவு எடுக்க வில்லை,
அவங்க என்றாள்...
நேத்து அம்மா இனி எப்போதும் உன்கூடவே வீட்டிலேதான் இருக்க போறேன் என்று சொன்னது பொய்யா????

கேள்விக்கு பதில் சொல்ல திணறிய பரிமளா, பின் சுதாரித்துக் கொண்டு, எல்லாம் உனக்காக தான்... அவங்க அப்படி கஷ்ட பட்டு உழைத்தால் தான் நம்ம லீவுல ஹோட்டல் பீச்சு எல்லாம் போகலாம் என்றார்...

ஆமாம் யாருக்கு வேணும் இவங்க பணம், வீட்டில் இருந்து இந்த குட்டி பாப்பாவை கொஞ்சினா என்னவாக்கும்... எரிச்சலாக சொல்லி விட்டு..சற்றே நகர்ந்தாள்...

அப்போது வீட்டிற்குள் நுழைந்த வேலைகார பெண்மணியிடம், நீங்களாவது உங்க பொண்ணு விஜயாவை என்கூட விளையாட சொல்லுங்க...ப்ளீஸ்....
அவளின் கைகளை பற்றிக்கொண்டாள்...

கட்டாயம் வரச் சொல்லுறேன்...குட்டி யம்மா...

இவர் குரு யார் தெரியுமா?

சனாதன தர்மத்தின் வேர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பெயர் இப்படித்தான் அழைக்கப்படும்..

இவர் குரு யார் தெரியுமா??
எப்போது மனதில் எழும் திமிர் அதிகம். தனது தந்தையின் பெயரை உயர்வாக சொன்னால் வரும் பெருமித்தை விட இது சற்றே கூடுதல் தான்..

குரு க்ருபா.. இந்த ஓன்றை மட்டும் வாழ்வில் அடைய வேண்டி தவம் கிடப்பவர்கள்
எத்தனையோர்..

ஒவ்வொருவருக்கும் அவருக்கு ஏற்பவே குரு அமைகிறார்...

இந்திய கலாச்சாரத்தில் குரு என்பது பரம்பரை என்பதை விட மேலான ஓர் உன்னத உணர்வு சார்ந்த உளவியல்.

குருமார்களுக்கும் சிஷ்யர்களுக்குமான உறவு, தந்தையின் பாசமும் தாயின் கண்டிப்பு கொண்ட நண்பனை போன்றது..

சிலர் தன் வாழ்நாள் முழுவதும் அவரின் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்.

குரு என்பவர் தன் சிஷயனிடம், பத்து ஏக்கர் நன்செய் இரண்டு லட்சம் பணம் என்ற கேட்பதில்லை.
மாறாக தான் அறிந்த ஆன்மீக சில விஷயங்களையும் அனுபவத்தையும் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் சொல்லிக்கொடுக்கும் கண் கண்ட தெய்வம்...

ஓர் இனிப்பின் சுவையை இனிப்பாக இருந்தது என்று சொல்ல முடியும்..
அந்த ருசியை உணர்த்த சாதாரண மனிதனால் முடியாதது..
ஆனால் இறை நிலையை குருவின் அருள் இருந்தால் உணரலாம்...

இந்த பயணம் எல்லோருக்கும் கிடைப்பது அரிது..
முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கும் குருவின் அருள் கிடைக்கலாம்...

இது பணம் சம்பாதிக்கும் வழியல்ல, மனதில் அமைதி தேடும் முயற்சி....

தனிமை

தன்னை
தானே
தண்டித்து
கொள்ளும்
உன்னதம்
தனிமை...
சின்னச்சிறு
சண்டை
பூதாகரமாக
மாறாமல்
இருக்க
அடிக்கடி
சகோதரி
சங்கடத்துடன்
கடக்கும்
பாதை இந்த
தனிமை

தலைசுற்றல்...

மகளை
போற்றி விட்டு...
மகனை அடித்து
வளர்க்கும் - தந்தை....
மகனை எப்போதும்
புகழ்பாடி வளர்த்து...
மகளின் செயல்
அனைத்திலும்
குற்றம் காணும்
அம்மா... இதில்
யார் மீது தவறு
யோசித்தால்
தலை சுற்றல்...

anmaai

எனக்கு தோன்றிய சில சிந்தனைகளை
https:://anmaai.blogspot.com
என்னும் வலை பக்கத்தில் எழுதுகிறேன்..
இவை உலக வாழ்க்கை சார்ந்தது தான் அதிகம்...

இறை பணியில் என் கருத்துக்களை சிலரிடம் தான் சொல்ல முடியும்.. எனவே நல்ல கருத்துக்களை எழுதவும் பேசவும், முயற்சிகள் செய்கிறேன்..
குடும்பம் என்ற அச்சாணியை சுற்றி தான் உலகில் நல்ல செயல்கள் நடைபெறுகின்றன..என் எழுத்துக்களும் உலகியல் சார்ந்தவையே...
இறை அனுபவம் சொல் முடியாது.
இயந்திர கதியில் ஓடும் மனிதரை சில நொடியாவது... இறைவன் படைத்த உலகை வியந்து ரசித்து வாழ பழக்கப்படுத்த உதவிடும் என் எழுத்து 
.....

பைத்தியக்காரன்

உலகின் பார்வையில் அவன் பைத்தியக்காரன். பணம் சம்பாதிக்க தெரியாத இளிச்சவாயன்.பெரிய பணக்கார குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்ததால் செல்லமாக வளர்க்கப்பட்டவன்.

என்றும் எதற்கும் பணம் பற்றிய சிந்தனை இன்றி வளர்ந்தவன்..
வீட்டில் இருந்தவர்களின் மீது அதிக பாசமாக இருந்தவன்.

அத்தனையும் அவன் பெற்றவர் இருந்தவரை....

அவன் தனக்கு பின்னால் கூட்டம் சேர்ந்தவனில்லை..

இவனுக்கு சொத்தின் பல பகுதிகளை எழுதி வைத்தார் தந்தை.ஆனால அது அவனுக்கு சிக்கல் ஏற்படுத்தும் என்பது அவருக்கு தெரியாமல் போனது..

பணத்தை விட பாசத்தை மேலாக நினைத்ததால் அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று எடுத்துக் கொடுத்தான்...

அவன் செய்த வியாபாரம் கூட அபரிமிதமான வருவாய் தந்தது..‌

விதி வேறு விதமாக விளையாடியது.

ஆம் இந்த பைத்தியக்காரனின் சொத்தில் ஆசை கொண்ட சிலர்... இவனுக்கு இன்னல் பல தந்து பைத்தியக்கார பட்டம் கட்டி வீட்டில் போட்டு பூட்டினர்.

அன்பும் பாசமும் பெரிதாக நினைத்தவனுக்கு சொந்தங்கள் தன்னை விரும்புவதில்லை தனது பணத்தை தான்

கொரோனோ

ஒரு வார
ஊரடங்கு
அம்மாவும்
அப்பாவும்
வீட்டில் தான்
இருக்கிறார்கள்
ஆனால் வெவ்வேறு
மூலையில்
குழந்தைக்கு
அதிகம் செலவழித்தவர்
மட்டுமே அதிக
அன்பு கொண்டவராம்
அவர்களின்
பொருளாதார சண்டை
விருப்பமின்றி
வேடிக்கை பார்க்கிறேன்
பள்ளி வேறு லீவு
காரணம்
கொரோனோ

கொரோனோ


வீட்டிற்குள்
அடையும்
புறாக்கள் போல
முடங்க வைத்தது
கொரோனா..
பெற்றவர்கள்
என்பது மறந்து
பல நாள் ஆகிவிட்டது
ஏனென்றால் எப்போதும்
பணம் சம்பாதிப்பது தான்
அவரிகளின்
குறிக்கோள்...
என்றாவது ஓர் நாளில்
அப்பா அம்மா
இருவருடனும்
வீட்டில் இருக்க
நினைத்து கனவு
நிறைவேற்றி தந்தது
கொரோனோ

அண்ணன்

சைக்கிள் பழகும் போது
 தராத அண்ணன்
இப்பொழுது
அப்பாவிடம்
கேட்பதுண்டு
அவனுக்கு
ஓர் டுவீலர்
வாங்கி கொடுக்கவா...
பரிவுடன்..
ஏனோ சிறு வயதில்
பயம் வேண்டாமென்று..
சொன்னேன்.
எனக்கு அப்பாதான்
வாங்கி தரணும்
உன் காசில்
அல்ல

குடும்பஸ்தன்

கணவனை
திட்டிவிட்டு
பையனை
புகழ்வதும்..
மனைவியை
திட்டி விட்டு
மகளை செல்லம்
கொஞ்சுவர்களும் தான்....
சராசரி குடும்பஸ்தன்...

Corona

Let it go..

Let it go...
Let it go...
To somewhere from this Earth
Enough is enough.....
Let it go.. CORONO...
Without affecting anymore...
Living being in Earth..
Let it go....
I believe in you God...
Please take it back...
We are fed up with this virus.
Let it go from Earth
Let it go from Earth
Corono....

காதலின் தொடக்கம்

காதலின் தொடக்கம் ...
இனிது... இனிது...
 
சும்மா இரு சுகம் என்பான்.
சும்மா இருந்தால் தான் மனம் செய்யும் பித்தலாட்டமும்,  போலியாய் சிரிக்கும் வேதனையும் தெரியும்....


பணம்,பதவி, பட்டம், புகழ் அனைத்தும் நிலை அல்ல பயண நேரம் தான்....‌ அத்தனையும்..

மாதா,பிதா, குரு, தெய்வம்..
அழகாக அடுக்கி வைத்தார்கள் முன்னோர்கள்..

உடல் செய்யும் ஜாலம்...

கண்கள் பார்க்கும்...
செவிகள் கேட்கும்....
இதயம் ஆசை படும்...
ஆனால் மனம் எங்கோ பறக்கும்....
எந்த வயதிலும் அற்ப சுகம் தேடும் மனம்..‌
நம்ம மனசுல தானே நினைக்கிறோம்...
யாரும் தெரியும் என்ற திமிர் வரும்....
கற்பனையில் ஜாலம் காட்டும்...இருப்பதை வெறுக்கும்...
இல்லாத ஓன்றை நினைத்து ஏங்கும்...
எதிரில் இருப்பவரிடம் உதட்டில் இனிக்க பேசி விட்டு, உள்ளம் குரங்கு போல் குதிக்கும்...
உலகத்தில் உள்ள ஆயிரம் பேரை சில மணி நேரம் வார்த்தை விளையாட்டில் கட்டிப்போடும் ஆளுமை வரும்...
ஆனால் தன் மனம் அடங்க மறுத்து சண்டித்தனம் செய்யும்..
ஊர் புகழும் திறமைசாலி என்று....
மனசாட்சி சொல்லும் நீ என் அடிமை என்று..
நிமிடத்திற்கு நிமிடம் புதிய எண்ணங்களை தந்து வேடிக்கை பார்த்து சிரிக்கும் மனம்.. ஆனால் அதில் செயல்படுத்தப் போவது சில மட்டுமே....
என் ஜாதி மதம் உயர்வு என்று எண்ணிக் கொண்டு சில நாள் திரியும்...
சிலரின் எதிர்பாராத மரணம்... எச்சரிக்கை மணியடிக்கும்....

இறந்தவன் வீடு கண்டால்...
ஆட்டத்தை நிறுத்தச் சொல்லி கட்டளையிடும்.. மரணத்தின் பயம் மனதை கவ்விக்கொள்ளும்..‌
பிறகு ஓர் முறை கூட தனது ஜாதி மதம் பற்றிய வீராப்பு பேச நினைக்காது....

எத்தனை சம்பாதித்தாலும் போகும் போது
கொண்டு செல்ல முடியாது உலகை விட்டு என்ற தெளிவில்லை.. இருக்கும் வரை ஏனோ சிலரிடம்...
 பிறருக்கு உதவி செய்தல் தான் வாழ்க்கை என்பது புரிதலை மனம் சிலருக்கு தான் புரிய வைக்கிறது..‌

இதற்கு மனம் தந்த பெயர்...
இறைவனின் விளையாட்டு விதியின்
பெயரால்...
உண்மையாக வாழ்பவன் எளிமையாக வாழ்வை கடக்கிறான்...
போலியாக இருப்பவன் ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்துகிறான்..
ஆனால் அவனே நினைத்து பார்க்காத திருப்பம் வந்தால்...இறைவா என்று கூறுகிறான்..
அப்போதுதான்
மனம் பீதியில் உறையும்...
உலகை இயங்கும் அறிவியல் கண்டு பிரமிக்கும் மனம்....

மனம் செய்யும் விளையாட்டு உற்றுப்பாருங்கள்.

நீங்கள் நடத்தும் நாடகத்தை தூக்கி வீசுங்கள்... உங்களுக்காக வாழுங்கள்.‌‌புகழ்ச்சி தேடும் வாழ்க்கை ஏன்???

உங்களின் உண்மையான சுகம் தனிமை....
இனிது... இனிது
ஏகாந்தம் இனிது..
ஆதியை தொழுதல்
அதனினும் இனிது..

இறைவனை தொழுதல் இனிது.... இனிது.

- வள்ளிசங்கர்....
பிடித்தால் பகிருங்கள்..
https:://anmaai.blogspot.com

Role Model

Be a Role Model.. and not be a normal runner.


God has given a particular thought process to you and not for others. It means thought which you hold in your mind today, is going to take you towards next level.

If you are willing to grow.  
Learn the process very well. Understand how successful person reach their heights. How they did it. When others where only dreaming for it.

Decision has to be taken before your actions. Are you just dreaming for time sake or really so passionate about your career.

Start believing in yourself and not others words.
Because third party didn't know, .
Who you are ? 
Whats your dream?

You might be trying your best with your own set of goals and ambitions, with your inherited limitations

For which you are willing to work. either for money or ethic or fame. or social status its up-to you.
Never and ever underestimate anyone, because everyone has their own caliber.
Someone may win the race quickly, someone may take some time to reach their destination.

People may say that , your thoughts can not be achieved./ Because you are dreaming big.
Believe in nature
Huge trees born out of tiny seed.
Stop hearing to others negative stories,  rumors and unwanted chit-chats, it may slow down your energy.
Dont waste your precious time with people, who are trying to swallow your  time, energy , goals & etc.
Make history in your own ways. Every seed has its own way of growing style.

Today which seems very hard, will be so easier by your regular practice.
Remember laying new roads are not easy. Its really somewhat difficult.
But your next generation and followers will have their cakewalk.
They will remember your as great leaders and you will be an extraordinary role model for them..

Yesterday was already gone, so do not worry about past. Concentrate on your future. 
Prepare your checklist and stick to it. Because you have to do periodic review about yourself.
Its very important for achieving your goals.
Start working for your future dreams.
Always keep your thoughts, energy ambitions high. Be positive on all your actions.
Live like today is only remaining in your hands and do your best, results will happen.
Yours negative thoughts will automatically disappear and wonder.
World will always give its positive vibration and success to optimistic people.

Be positive think big and outcome will also will make your name placed in history

Jaihindh. 


Note - If you feel any mistake feel free to tell us. If you think the writings are good, then share this with your loved ones

கொரோனா

விரைவில்
மறைந்து
போகட்டும்
உலகை
உலுக்கும்
வைரஸ்.
கொரோனா

work in progress

soon will be updated

anbazhagan

***இரங்கற்பா**"

அண்ணாவின்
தம்பி என்பதா...
கலைஞரின்
பாசமிகு தோழரா.....
அல்லது கழகத்தின்
சிற்பிகளில்
ஒருவரா..
அண்ணாவின்
தம்பிகளுக்கு...
அண்ணனா...
கழகத்திற்கு
இடர் வந்த
போதும்..
உடன் நின்ற...
பாதுகாவலரா...
கலைஞரின்
அருகே அமர்ந்தும்
அதிகாரம்
தோரணை காட்டாத
அன்பின் உருவமா...
ஆயிரம் புகழ்
சொன்னாலும்
பொருந்தும்...
அன்புடன்
அழைத்து
உவகை கொண்டோம்...
அனைவரும்
பேராசிரியர்...
இனி யாரை
அப்படி அழைப்பது...
இதயங்கள்
வலிக்கிறது...

அன்பழகன்

பேராசிரியர் மறைவு இரங்கல்.....

கழகத்தின்
உடன்பிறப்புகள்
அறிவர்..இவர்
அதிர்ந்து பேசியது
பார்த்தில்லை..
எந்த ஓர் கருத்தையும்
நயப்பட சொல்லும்
எமது பேராசிரியர்..
அண்ணாவின் தம்பிகளுள் சிறந்த
பலரில் இவரும்
ஓருவர்... கலைஞரின்
நம்பிக்கை நட்சத்திரம்...
மறைவு என்பது செய்தி
ஊடகத்திற்கு...
ஈடு செய்ய முடியா...
இழப்பு......
வருந்துகிறேன் என்பது
வார்த்தை மாத்திரமல்ல
மனதின் வலிகள்...
இந்த தருணத்தில்...
கழகத்தின் பொன் வரிகளை நினைவு கொள்வோம்...
எதை தாங்கும் இதயம்
வேண்டும்....
இந்த தருணத்தை நாம்
கடந்து செல்ல...
.
.
.

இப்படிக்கு பேராசிரியரை பெரிதும்
மதித்து வணக்கம் செலுத்திய தம்பிமார்களில்
ஓருவன்.

விநாயகா...

ஏனோ
பிழைக்க தெரியாதவன்.
இளிச்சவாயன்...
வேலை தொடங்கும் முன்
மட்டுமே சிறப்பு கவனிப்பு
மற்ற நேரம் அவனை
கவனிப்பார்கள்
மத்தநேரம்
தனிமை தான்...
யாருமில்லை..
அதனால் தினமும்
அந்த மரத்தடி
சென்று சில நேரம்
அவனிடம்
பேசுகிறேன்.
 வெறும் அருகம்புல்
கொடுத்து காரியம்
சாதிக்கிறாங்க.
புத்திசாலியா
பிழைக்க
வழிபாடு
விநாயகா.......

எழுத்துக்கள் மறைவதில்லை...



ஆசையின்
வெளிப்பாடு
மட்டுமல்ல
கவிதை- அவை
எப்படி வாழந்திட
தனிமனித
பிரயத்தனம் என்பதே
கவிதை மற்றும்
கதையின் தொடக்கம்..
வாழ்க்கை தேடி
அவர் அவர்களின்
பயணங்கள்- செல்லும்
திசைகள்
மாறுபடும்
எல்லா நேரமும்...
ஆயிரம் விமர்சனம்
ஆயினும் அவர்தம்
இலக்கு ஓன்றே
இலக்கிய வாஞ்சை...
பிழைக்க தெரியாதவன்..
என்று கேலி செய்தாலும்..
எழுத்துக்கள் மட்டும் தான்
எங்கோ வலியில்
துடிக்கும் மனிதனின்
மனதிற்குள்
மருந்திடும் என்பதாக
பேனா பிடிக்கிறார்கள்
இளம் எழுத்தாளர்கள்..
ஆனால் அவர்களை
புரிந்து கொள்ள
மறுக்கும் உலகு..
துஞ்சம் என்று தூக்கி
எறிந்து விட்டு..
உலகை வெறுத்து
சென்றாலும் -- அவரின்
எழுத்துக்களை
படித்தால் தான்
விளங்கும்...
வேதனைகளின்
குவியலை
மனதினுள்
உள்ளடக்கி
முன்பின் தெரியா..
மனிதருக்கு
வாழ வழி காட்டும்
கவிதை களஞ்சியங்கள்..
கவிஞர்கள் மறைந்தாலும்..
அவர்களின்..
எழுத்துக்கள் மறைவதில்லை.

India

India word itself has its own, Magical music inside.

Everyone who live outside India like to visit once in his lifetime. Because in India you can travel very safely and explore different tropical and historical places.

India has diversity also in places, like from Snowfall region,desert, paddy fields, mountain ranges,heavy rainfall region,seashore etc.


If you are fond of travel, you will realise that. Your time has been utilize very interestingly.
Every states has its own culture and historical values along with industrial growth.
You you have an change to travel across india, you will explore and understand the fact. Every 100 Kilometre has its different views opinions, culture weather, But still everyone hearts are filled with one unity word " We are Indians".



The rituals may differ place to place,but people find themselves always feel  happy and prosperous during festival time. Here everyone strongly believe that, god exist everywher. So teaching preaching and understanding others can spreading love and affection. Only way of service we can reach GOD.

You can find uncountable Gurus in india, who form their own principle from the main religion.


Happiness  is known as festival in india. 
We have different names as
Deepawali, Pongal, Holy, New Year, Mahara sankarathi. In the name of festival people, visit their loved ones convey their affection careness and unity alongwith their spiritual practices


Whomever enter India to conquer this land and bring under one control.Have realized this country cannt be merely controlled by laws. 



Because our nation is not only controlled by laws. Everyone in indian follow their in build cultural laws and adhere to it.

Eventhough there are many diversity , We believe that Unity is our Strength

That's the main reason India known for its cultural values. 
Please visit india and explore our values to the world


Jai Hindh

வெள்ளியங்கிரி



கிராமத்தில்
பாம்பு பிடித்து
விளையாடிய அந்த
சிறுவனின் அருகே வந்து
செல்லமாக கேட்டார் கிழவர்
தம்பி பெரிய பாம்பு
காட்டுறேன் என் கூட
மலைக்கு வர்றீயா....
நிஜமாவே பெரிசா.....
ஆமாம்.... ஆனா...
சாதாரண கண்ணுக்கு
தெரியாது.....
சிறுவனுக்கு. பேராசை
அதிகம்.... வீட்டில்
சொல்லி விட்டு வாடா
தம்பி.‌......
அப்படி இருந்தால்...
நான் ஏன் பாம்பு
பிடிக்கிறேன்....
பள்ளி கூடம்
போக கூட காசில்லை
தழுப்பிய கண்ணீரை
துடைத்து விட்டார்..
நீ ஆளப்பிறந்தவன்
அழக்கூடாது...
வெள்ளை தாடியை
தடவியபடி அவனை
அழைத்து ஆவிசேர்த்து
கட்டிக்கொண்டு......
எதுக்கும் கலங்காதே...
நான்  இனி
உனக்கு எல்லாம்
செய்து தாறேன்...
சரியா... தலையாட்டினான்....
கிழவனின்
பச்சை நிற கண்கள்
பளீரிட்டன.......
பாசக்காரன்டா நீ...
இனி உனக்கு
பெரிய குடும்பபொறுப்பு
காத்திருக்கு....
உன்னை நினைச்சு தான்
உன் பொண்டாட்டி
உருகுறா...
ஏதும் புரியாமல்
சின்னஞ்சிறு பாலகன்....
அவருக்கு பின்னே
நடந்து சென்றான்
இருவரும்
சென்ற இடம்
வெள்ளியங்கிரி...
பிடித்த கொடுத்த
பாம்பின்
பெயர்
குண்டலினி...

ஆப்பிள் போன்


கடற்கரையில்
கைகோர்த்த படி
காதலுக்கும்
காமத்துக்கும்
இடையே 
சண்டை வருவதற்கு
முன்னர் காதலியிடம்
கேட்டான் உன்
ஆப்பிள்
கன்னத்தை
கடிக்கவா???
செல்ல சிணுங்கலுடன்
முகம் சிவந்தது அவளுக்கு..
யாருக்கும் தெரியாமல்
மனதில் ஒளித்து
வைத்த ஓவ்வொரு
ஆசைகளையும்
கண்டுபிடித்து 
இன்பத்தை காட்டினான்..
மலரைவிட மெல்லிய
கன்னங்களில்
பனிக்கட்டியின்
சிலிர்ப்பை கொட்டினான்..
தன்னை மறந்த நிலையில்
இருவருமே..
அவளுக்கும்
அவனுக்கும்
தெரியாமல்
அவர்களின்
50,000 மதிப்புடைய
ஆப்பிள் போனை
கடித்து விளையாடின
அவர்கள் கூட்டி வந்த
பாசக்கார
செல்லநாய்க்குட்டிகள்...

கரண்ட் போச்சு...



கீழ் நிலை
ஊழியர்களை
கசக்கி பிழிந்து
வேலை வாங்கி விட்டு
வீடு வந்து
படுக்கையில் சாயும்
போதில் போட்ட
காத்தாடி மெதுவாக
சூழல் தொடங்கி
நின்று போனது..
சமையலறையில்
இருந்து அம்மா
சொன்னாள்
கரண்ட் போச்சு...

பிச்சைகாரர்



கோவில்
வாசலில்
பிச்சை எடுக்கும்
பலர் - அதிலும் கூட
வித்தியாசம் ஓருவர்
சாப்பாடுக்கு பணம்
கிடைத்தால் போதும்
எழுந்து போய் விடுவார்....
அதுவும் கூட
நாளொன்றுக்கு
ஓரே வேளை
சாப்பாடு தான்....
பத்து ரூபாய்
அதிகம் வந்தால்
பக்கத்தில் இருப்பவரிடம்
கொடுப்பார் -- இல்லையென்றால்
அதிலும் கூட
வித்தியாசம் காட்டுவார்.....
அந்த பணத்தை
கோவில்
உண்டியிலில்
போட்டுவிடுவார்....
தினமும் பணம்
தேடி அலையும்
எனக்குள் மாற்றம்
தந்தவன் அந்த
பிச்சைகாரன் - அல்ல
பிச்சையெடுக்கும்
பிச்சைக்காரர்

மிகவும் சந்தோஷமாக

மஞ்சள் தோல்
எனக்கில்லை...
பணக்கார
மகளாக
பிறக்கவில்லை...
படிப்பும் பெரிதாக
மண்டையில்
ஏறவில்லை ஏதோ
வாங்கிய பட்டம்
மாதச்சம்பளமாய்
வட்டி தருகிறது...
சிரித்துபேசி...
நாட்கள் பல
ஆயினும்
தெருவோர
சாக்கடையில்
பிளாஸ்டிக்
பேப்பர் எடுக்கும்
பையன் மத்தியில்
இருக்கும்
சந்தோஷம் அடுத்த
வேளை உணவு
உத்திரவாதமில்லை...
ஆயினும்
எத்தனை புன்னகை
இவர்கள் வாழ்வது
பணத்திற்கும்
பாசத்திற்கும்
நடக்கும் யுத்தத்தில்
சில நாட்கள்
பட்டினி
கிடந்தாலும்
வெற்றி பெறுவது
பாசம் தான்....
இந்த ரசிக்கும்
போது உணர்கிறேன்
மிகவும் சந்தோஷமாக

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...