குட்டி யம்மா....



அவள் சின்னச்சிறு குழந்தை....ரஞ்சனி...
கோடைகாலத்தில் ஓர் நாள் தமிழகம் முழுவதும் பந்த் நடந்த போது... அம்மா அப்பா இருவருமே வீட்டில் இருந்தது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது...

மறுநாள் பெற்றவர்கள் இருவரும் வேலைக்கு சென்றனர்...

அப்பாவியாக பாட்டியிடம் வந்து கேட்டாள் ரஞ்சனி..., ஏன் பாட்டி இன்னிக்கு லீவு எடுக்க வில்லை,
அவங்க என்றாள்...
நேத்து அம்மா இனி எப்போதும் உன்கூடவே வீட்டிலேதான் இருக்க போறேன் என்று சொன்னது பொய்யா????

கேள்விக்கு பதில் சொல்ல திணறிய பரிமளா, பின் சுதாரித்துக் கொண்டு, எல்லாம் உனக்காக தான்... அவங்க அப்படி கஷ்ட பட்டு உழைத்தால் தான் நம்ம லீவுல ஹோட்டல் பீச்சு எல்லாம் போகலாம் என்றார்...

ஆமாம் யாருக்கு வேணும் இவங்க பணம், வீட்டில் இருந்து இந்த குட்டி பாப்பாவை கொஞ்சினா என்னவாக்கும்... எரிச்சலாக சொல்லி விட்டு..சற்றே நகர்ந்தாள்...

அப்போது வீட்டிற்குள் நுழைந்த வேலைகார பெண்மணியிடம், நீங்களாவது உங்க பொண்ணு விஜயாவை என்கூட விளையாட சொல்லுங்க...ப்ளீஸ்....
அவளின் கைகளை பற்றிக்கொண்டாள்...

கட்டாயம் வரச் சொல்லுறேன்...குட்டி யம்மா...

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...