தெனாலிராமனின் 2வது படைப்பு திருவண்ணாமலை


இந்தியா ஒரு அருமையான தேசம் இங்கு தான் சாதியின் பெயரால், ஆதிக்க  சமுதாயத்தின் பெயரால் மரணம் அரங்கேற்றபடுகிறது. ஊருக்கு நல்லது செய்யாது தன்னை தலைவனாக இங்கு முன்னிறுத்த முடியும்.
உலகில் எங்கும் நிகழாத அளவில் இங்கு தான் அதர்மம் தலை விரித்தாடும். அதே சமயம் உலகம் உய்ய மகான்களும் இங்குதான் அதிகம் அவதரிக்கிறார் .

தமிழகத்தின் திருவண்ணாமலையும், ரமணர் , யோகி ராம் சூரத் குமார் அவர்களின் மற்றும் பல எண்ணற்ற மகான் அவர்களின் வரலாறுகள். நம்மை போன்ற சராசரி மனிதர்களுக்கு சற்று வித்தியாசமானது தான்.
மனைவி, மக்கள், தாய், தந்தை, உறவினர்கள், உலக இன்பமான சுகங்களை மறக்க முடியாமல் . ஒரு குடும்பத்தையே பராமரிக்க திணறும் நாம் எங்கே ?

தன்னை நாடி வந்து ஒரு முறை குருவே,என் குடும்பத்தில் இன்ன பிரச்சனை என்னும் போது, "பொறுமையா இரு". என்கிறார்கள்
இது எதுவோ நமக்கு மட்டும் என்று இல்லை அனைவருக்கும் இதைத்தான் சொல்கிறார்கள்.
சில மாதத்திலோ, நாளிலோநம் குறை தீர்த்து போகிறது .
எல்லோரும் நினைக்கலாம் இதில் என்ன நாம் பொறுமையை இருந்தால் பிரச்சனை முடிந்துவிடும் என்று, உண்மைதான் இவர்களிடம் வரும் பலர் தமது பிரச்சனைகள் முடிந்தவுடன் இவர்களிடம் நன்றி கூட சொல்வது இல்லை.
பிரச்சனை என்றபோது தெய்வமாக தெரிந்தவர்,பின்பு அவர்கள் கண்களுக்கு
சாதாரணமான மனிதர்களாக தெரிகிறார்கள். ஒரு சிலர் தான் இவர்களின் அருகில் அமர முடிகிறது. இதற்கு அவர்களின் பிராப்தம் என்ற ஒரு வரி தான் சொல்ல முடியும்.
இந்த மகான்களும் சிலரிடம் மட்டும் உன் பிரச்சனை சரியா போச்சு நீ போகலாம் என்கிறார்கள்.
ஒரு சிலரிடம் நீ என் இப்போ எல்லாம் என்ன பார்க்க வரமாட்டேன்கிற என்று உரிமையோடு கேட்கிறார்கள்
அவ்வாறு கேட்கப்படும் மனிதர்கள் சாதாரணமானார்கள் அல்ல. இவர்களும் அவர்களிடம் பணமோ பொருளோ கேட்பது இல்லை. மாறாக அவர்களை இன்னும் உயரத்தில் அமர வைக்கிறார்கள்.
வாழ்வில் அமைதியை தேட சொல்லித்தருகிறார்கள். நிலையற்ற புகழ், பணம், பட்டம், அனைத்தையும் தந்து தாமரை இலை தண்ணீர் போல வாழ கற்று தருகிறார்கள். குருவின் அருளால் கிடைத்த வெற்றியை ஏதோ தன்னால் கிடைத்தது என்னும் போதும் கோபப்படாமல். நம்மை நமக்கு உணர்த்துகிறார்கள்.

குருவின் அருளால் மலர்ந்த வாழ்வின் பெருமைகளை, குருவின் பெயரால் சொல்லி நாம் பெருமை படும் போது கூட . நமட்டு சிரிப்புடன் இந்த கிழத்திற்கு, பிச்சைக்காரனுக்கு இந்த பெருமை தேவையா என்கிறார்கள்?.
உலகில் எந்த இடத்திலும் காசு வாங்கி விட்டு, கற்று தராத இயலாத விஷயங்களை அன்பாக சொல்லிக்கொடுக்கும் போது. நம் கண்களில் வரும் ஆனந்த கண்ணீர் ..
சிவ சிவ நீ அழக்கூடாது, உன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இறை சங்கல்பம் என்னும் போது
இதனை வரையறுக்க வார்த்தைகள் இல்லை, காதலை எப்படி உணரத்தான் முடியும் என்கிறார்களா, அதைப்போல தான் இதுவும் "கண்டவர் விண்டிலர் விண்டிலர் கண்டிலர் "

குருவே சரணம்
குருவின் திருவடிகளே சரணம்


தெனாலிராமனின் 1- வது படைப்பு தியானம்


            தியானம் செய்தால் பணம் வரும் நல்ல மனைவி கணவன் கிடைப்பார்கள் .. வேலை கிடைக்கும்.  என பலர் சொல்கிறார்கள் .. சரி ஒப்பு கொள்கிறேன்.
              உங்களுக்கு தியானம் சொல்லிக்கொடுக்கும் உங்கள் ஆசிரியர் பணம் வாங்குகிறாரா ...
             அப்படி என்றால் அவர் தியானம் சொல்லிக்கொடுக்க வில்லை உங்களின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி உங்களின் பணத்தின் ஒரு பகுதியை அவர் வாங்குகிறார் ..
.
.
தியானம் என்பது சொல்லி கொடுப்பதில்லை.அது இயல்பாகவே ஒருவரின் தேடலில் பயனாக அமைகிறது.
.
இது ஒன்றும் வியாபாரம் அல்ல.பத்து லட்சம் ரூபாய் மூதலீடு செய்து பயன் பெறலாம் என்பத
 போல..
            தியானம் என்பது நம் மனதினை கட்டுப்படுத்தும் ஒரு எளிய முயற்சி அவ்வளவுதான் .. அதனை மீறி உங்களுடன் வானத்து தூதுவர் பேசுவார் என்பது போல எல்லாம் உங்களை ஏமாற்றி உங்களை நம்ப வைக்கும் செயல்பாடுகளே ... இங்கு அதிகமாக நடக்கிறது...
.
.
தன்னை அறிந்து கொள்ளவும், இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற ஆவலுடன் தான் ஆன்மீகம் தொடங்குகிறது..
.
வாழ்வின் நிலையாமை தான் நிலையானது எது என்ற கேள்விக்கு பதில் தேட வைக்கிறது..
                      உங்களின் பூர்வ ஜென்ம கர்மத்தின் படி நீங்கள் இந்த பிறவியில் பிறந்து உள்ளீர்கள் .உங்கள் தகப்பனார் , தாய் , சகோதரர் , சகோதரி கணவன் மனைவி குழந்தைகள்,உங்களுக்கு வந்த நோய் , எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் , மரணம் உங்களை ஏமாற்றியவர்கள் , எதிரிகள், நண்பர்கள் அனைத்தும் உங்களின் பூர்வ ஜென்ம வாசனை படி அமைத்தது..
        இந்த விதியை எழுதியது பூர்வ ஜென்மத்தில் நாம் தான் என்பதை மறந்து விட்டோம் அவ்வளவுதான் .
இந்த உலகில் உண்மையினை விட பொய்க்குத்தான் மதிப்பு அதிகம்.
உங்களை ஒருவர் புகழ்ந்து பேசினால் பலன் கிடைக்கும் என்றுதான் பேசுகிறார்கள்.
.
இந்த உலகத்தில் இலவசம் என்று ஒன்றும் இல்லை. பிறப்பையும் இறப்பையும் தவிர
இன்றைய நாள்களில் காதல் தோல்விகள் , திருமண முறிவுகள் அதிகம் நிகழ்வதற்கு முக்கிய காரணம். ஆதித  ஆசைகள், ஆசைகள் துன்பங்களை தருகிறது .
எளிமையாக் சொல்வதானால்....
.
இன்று குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் அன்பாக பேசும் என நினைக்கிறோம். அக்குழந்தை பள்ளியில் யாரிடமாவது கொண்ட கோபத்தை நம்மீது காட்டுகிறது . அது நம் மனதை பாதிப்பு அடைய செய்கிறது. அந்த நேரத்தில் நாமும் பதிலுக்கு நமது கோபத்தை காட்டினால், குழந்தை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகும் .
அந்த மாதிரி நேரங்களில் நாம் காட்டும் பொறுமை .. அக்குழந்தைகளை நம் மீது அதிக நம்பிக்கையினை உண்டாகி பொறுமை காட்டும் மனிதரிடம் தனது உண்மைகளை சொல்கிறது ...
.
.
அந்த குழந்தைக்கு இப்போது நீங்கள் தான் தியான மாஸ்டர் .. அவர்களிடம் நீங்கள் காசு வாங்குவீர்களா ...
இங்கே எழுதிய அனைத்தும் பகத் கீதையில் கண்ணன் போலி குருமார்கள் பற்றி சொன்னது அவ்வளவுதான் .......

ஒருமுறை நான் திருவண்ணாமலை சென்ற போது ஒரு கிழிந்த காவி உடை மனிதர் பின்வருமாறு சில நபர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் ..
இந்த மலையை சுத்துற எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் இறை தொண்டு செய்தவர்கள் தான் . அதனால்தான் தவறான வழிகளில் போகாமல் இறைவன் அவர்களுக்கு அவர்களால் தாங்கக்கூடிய அளவில் துன்பங்களை தந்து இன்பத்தினை (அமைதியினை) தேடச் செய்கிறான்
ஒரு சிலர் இறைநாட்டம் அதிகமாகி இந்த பிறவிலோ அல்லது பின்வரும் பிறவிகளில் இறைவனை அடைகிறார்கள்.
.
.
                அருணகிரி நாதரும், பட்டினத்தாரும் ரமணரும் , விசிறி சாமியாரும் இன்னும் எத்தனையோ 
மனிதரும்  பணம் கட்டி தியானம் கற்று சாமியார் ஆனவர்களில்லை. தம் வாழ்வில் நட்ந்த நிகழ்வுகளால் வாழ்வின் நிலையாமை உணர்ந்து தன்னை தானே சுய பரிசோதனை செய்து கொண்டனர்.
.
.
சிவம் என்பது தன்னை அறிந்த நிலை, உலகத்தின் சர்வமும் இறைவனின் சொரூபங்களை இவைகளுக்கு செய்கிற இன்பமும் துன்பமும் அவனுக்கு செய்வதுவே ..
எனவே செயல்களை குறைத்து மூச்சினை அடக்கி தியானம் செய்து இறைவனுடன் இரண்டற கலக்கிறார்கள் ... உண்மை இப்படி இருக்க, "நீ தியானம் செய்தால் நல்ல வேலை கிடைக்கா என்று கேக்கலாமா தம்பி"...
நீ உன்னுள் கொண்டுவரும் மனஅமைதி உன்னை தேடிவரும் அனைைைையும்  காக்கும் இந்த அளவு நீ தெரிஞ்சு கிட்டால் கூட போதும் என்று விட்டு, கொடுத்த டீயை  கூட என் பசி நீ ஆற்றக்கூடியதா ? ? ? என்று விட்டு போனார்

 சர்வம் சிவமயம் 

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...