தெனாலிராமனின் 2வது படைப்பு திருவண்ணாமலை


இந்தியா ஒரு அருமையான தேசம் இங்கு தான் சாதியின் பெயரால், ஆதிக்க  சமுதாயத்தின் பெயரால் மரணம் அரங்கேற்றபடுகிறது. ஊருக்கு நல்லது செய்யாது தன்னை தலைவனாக இங்கு முன்னிறுத்த முடியும்.
உலகில் எங்கும் நிகழாத அளவில் இங்கு தான் அதர்மம் தலை விரித்தாடும். அதே சமயம் உலகம் உய்ய மகான்களும் இங்குதான் அதிகம் அவதரிக்கிறார் .

தமிழகத்தின் திருவண்ணாமலையும், ரமணர் , யோகி ராம் சூரத் குமார் அவர்களின் மற்றும் பல எண்ணற்ற மகான் அவர்களின் வரலாறுகள். நம்மை போன்ற சராசரி மனிதர்களுக்கு சற்று வித்தியாசமானது தான்.
மனைவி, மக்கள், தாய், தந்தை, உறவினர்கள், உலக இன்பமான சுகங்களை மறக்க முடியாமல் . ஒரு குடும்பத்தையே பராமரிக்க திணறும் நாம் எங்கே ?

தன்னை நாடி வந்து ஒரு முறை குருவே,என் குடும்பத்தில் இன்ன பிரச்சனை என்னும் போது, "பொறுமையா இரு". என்கிறார்கள்
இது எதுவோ நமக்கு மட்டும் என்று இல்லை அனைவருக்கும் இதைத்தான் சொல்கிறார்கள்.
சில மாதத்திலோ, நாளிலோநம் குறை தீர்த்து போகிறது .
எல்லோரும் நினைக்கலாம் இதில் என்ன நாம் பொறுமையை இருந்தால் பிரச்சனை முடிந்துவிடும் என்று, உண்மைதான் இவர்களிடம் வரும் பலர் தமது பிரச்சனைகள் முடிந்தவுடன் இவர்களிடம் நன்றி கூட சொல்வது இல்லை.
பிரச்சனை என்றபோது தெய்வமாக தெரிந்தவர்,பின்பு அவர்கள் கண்களுக்கு
சாதாரணமான மனிதர்களாக தெரிகிறார்கள். ஒரு சிலர் தான் இவர்களின் அருகில் அமர முடிகிறது. இதற்கு அவர்களின் பிராப்தம் என்ற ஒரு வரி தான் சொல்ல முடியும்.
இந்த மகான்களும் சிலரிடம் மட்டும் உன் பிரச்சனை சரியா போச்சு நீ போகலாம் என்கிறார்கள்.
ஒரு சிலரிடம் நீ என் இப்போ எல்லாம் என்ன பார்க்க வரமாட்டேன்கிற என்று உரிமையோடு கேட்கிறார்கள்
அவ்வாறு கேட்கப்படும் மனிதர்கள் சாதாரணமானார்கள் அல்ல. இவர்களும் அவர்களிடம் பணமோ பொருளோ கேட்பது இல்லை. மாறாக அவர்களை இன்னும் உயரத்தில் அமர வைக்கிறார்கள்.
வாழ்வில் அமைதியை தேட சொல்லித்தருகிறார்கள். நிலையற்ற புகழ், பணம், பட்டம், அனைத்தையும் தந்து தாமரை இலை தண்ணீர் போல வாழ கற்று தருகிறார்கள். குருவின் அருளால் கிடைத்த வெற்றியை ஏதோ தன்னால் கிடைத்தது என்னும் போதும் கோபப்படாமல். நம்மை நமக்கு உணர்த்துகிறார்கள்.

குருவின் அருளால் மலர்ந்த வாழ்வின் பெருமைகளை, குருவின் பெயரால் சொல்லி நாம் பெருமை படும் போது கூட . நமட்டு சிரிப்புடன் இந்த கிழத்திற்கு, பிச்சைக்காரனுக்கு இந்த பெருமை தேவையா என்கிறார்கள்?.
உலகில் எந்த இடத்திலும் காசு வாங்கி விட்டு, கற்று தராத இயலாத விஷயங்களை அன்பாக சொல்லிக்கொடுக்கும் போது. நம் கண்களில் வரும் ஆனந்த கண்ணீர் ..
சிவ சிவ நீ அழக்கூடாது, உன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இறை சங்கல்பம் என்னும் போது
இதனை வரையறுக்க வார்த்தைகள் இல்லை, காதலை எப்படி உணரத்தான் முடியும் என்கிறார்களா, அதைப்போல தான் இதுவும் "கண்டவர் விண்டிலர் விண்டிலர் கண்டிலர் "

குருவே சரணம்
குருவின் திருவடிகளே சரணம்


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...