தெனாலிராமனின் 3 - வது கவிதை படைப்பு உன் காலடிகளில்

ஆறு தங்கம் வாங்கிவிட்டு
அமைதியாக செல்லும் மனிதனுக்கு
எப்படி புரியவைப்பேன்
ஒரு வெண்கலம் வாங்கினாலும்
ஊர்கூடி புகழ்பேசும் கூட்டம்
இந்தியாவில் உண்டு என்று,
பணத்தை கேட்டு ஒருநாள் தாமதத்தை
கூட சகித்து கொள்ளாத பள்ளி நிர்வாகம்,
என் தோல்விகளில் பங்குஎடுக்காத
மனிதர் கூட என் வெற்றிக்கு
தலைமை தாங்குவார்கள் இதில்
ஆச்சர்யபட  எதுவும் இல்லை,  (இந்தியாவில் )
என் வெற்றிக்கு தோள் கொடுத்தது
எனது வறுமையும் பெற்றோர்களின்
கனவுகளும் தான்
தனது சோகங்களை என் மீது
திணிக்காமல் நடை பழகிய
தந்தையும், தாயும் மட்டுமே,
இன்று கூட்டத்தின் ஓரத்தில்
இந்த வெற்றிக்கு நாங்கள் காரணமல்ல
என்பதுபோல ஒதுங்கி நிற்கிறார்கள்
அமைச்சர் வருகிறாராம்
என்னை புகழ்ந்து பேச,
எனது மனதிற்கு மட்டுமே தெரியும்
உனது வழிகளிலும்
வேதனைகளும் அதிகம் எனவே தான்
நான் பெறுகிற வெற்றிகளும்
 பெறப்போகிற பட்டாடைகளும்
கணக்கற்றது அதிகரிக்கும்
அவைகளை இன்றே சமர்ப்பணம்
செய்கிறேன் உன் காலடிகளில் 

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...