அவள் ஓர் பைத்தியக்காரி

 

அவளுக்கு யாரிடம்

எப்படி பேசணும் என 

தெரியாது...அவள்

சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் 

தூக்கி வீசிவிடுவாள்.

அவள் பல நாட்களுக்கு

குளிப்பதே இல்லை.. நாம 

ஒன்று கேட்டாள்...அவளோ

ஏதோவொரு கற்பனை உலகில் 

இருந்தபடி மற்றொரு பதில் சொல்வாள் 

மொத்தத்தில் சொன்னால் 

அவள் ஓர் பைத்தியக்காரி என்றே 

ஊரும் உறவும் சொந்தமும் 

அவளை வெறுத்து ஓதுக்கியது.. 

கருப்பு சட்டையில் வந்த மக்கள் கூட்டமும் 

அவளை பெண்ணாக கூட மதிக்கவில்லை.. 

ச்சீய் தள்ளி போடீ...பிச்சைக்கார......மு..... டே...

காசு கேட்டு வந்துட்டா 

கேமராக்கள் இல்லாத காரணமாக 

தங்களின் சுய ரூபத்தில் சில உத்தமர்கள் 

ஆனால் அவளுக்கோ அற்ப ஆசை இல்லையே முகத்தில் 

போலியாக சிரித்து புறமுதுகில் குத்தும் 

கெடு புத்தி இல்லாதவள் ..

அது மட்டுமா அவளுக்கு தெரியாது.. 

இன்னும் இன்னும் எத்தனையோ 

அவளுக்கு தெரியாதே...தென்கோடி கடற்கரையில் 

பகலுக்கும் இரவுக்கும் வெயிலுக்கும் 

மழைக்கும் கூட அவளுக்கு 

வித்தியாசம் தெரியாதே ...

உறவுகளும் சொந்தமும் 

நட்பும் ஏமாற்றி பிறகு வாழ்வை 

வெறுத்து கடற்கரையில் 

சாக நினைத்து வந்தவனின் 

அருகில் சென்று வாசனையுடன் 

கேட்டாள் "ஏன் தங்கம்" உலகமே 

உன் பாட்டை கேட்க துடிக்குது..

நீ எதுக்காக சாகப்போறே...

உம் பாட்டை அந்த ஆத்தா பகவதிகிட்ட

பாடி காட்டீனீயா....நீ பெரிய 

இசையமைப்பாளர் அப்படின்னு 

நேத்தே சொன்னா...

நீ பெரிய புகழ் அடைய போறீயாமே 

அவளின் காலில் நெடுச்சாண்கிடையாக 

வீழ்ந்தான்.. அம்மா தாயே காப்பாத்து 

அடுத்த வேளை சோத்துக்கே 

வழியில்லை நீ என்னவோ சொல்லுறீயே... 

அதனால் தான் ஊர் என்னை பைத்தியக்காரின்னு 

சொல்லுது ... ... கலகலவென சிரித்தாள் 

அவனின் புத்திக்குள் பல இசைகள் 

உருவாகியது பல வண்ணங்களாக 

மனிதர்களின் எண்ணங்களை

நொடியில் மாற்றிவிடும் அழியாத 

இசை சின்னங்களாக...






No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...